கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

இஸ்ரேலில் பெண் நீதிபதி மீது 'ஷூ' வீச்சு


இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேம் நகரில் சுப்ரீம் கோர்ட்டு உள்ளது. இங்கு பெண் தலைமை நீதிபதியாக இருப்பவர் டோரிட் பெனிஸ்க். நேற்று காலை 11.30 மணி அளவில் இவர் கோர்ட்டில் ஒரு பெண்ணிடம் விசாரணை நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு உட்கார்ந்து இருந்த ஒரு நபர் திடீரென தான் அணிந்திருந்த 2 'ஷூ' க்களை நீதிபதி பெனிஸ்க் மீது வீசினார்.
அதில் ஒன்று அவரது முகத்தில்பட்டது. எனவே, அவரது மூக்குகண்ணாடி கீழே விழுந்து உடைந்தது. 'ஷூ' பட்டதில், நீதிபதியின் முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. உடனே, அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நீதிபதி பெனிஸ்க் மீது 'ஷூ' வீசிய நபர் மடக்கி பிடிக்கப்பட்டார். போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரது பெயர் பினிகொஹன் (52) என்று தெரிய வந்தது. “ஷூ” வீசும்போது கொஹன் ஆவேசத்துடன் கூச்சலிட்டார்.
அப்போது, நீங்களும், குடும்ப கோர்ட்டு நீதிபதி பிலிப் மார்கசும் ஊழல் பேர்வழிகள் நீங்கள் இருவரும் சேர்ந்து என் வாழ்வை நாசமாக்கி விட்டீர்கள் என்று கூறினார்.
குடும்பநல கோர்ட்டில் கொஹனின் மனைவி ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில் அக்கோர்ட்டு நீதிபதி பிலிப்மார்கஸ் கொஹனுக்கு எதிராக தீர்ப்பளித்ததாக தெரிகிறது. அதற்கு பழிவாங்கவே தலைமை நீதிபதி பெனிஸ்க் மீது “ஷூ” வீசியதாக போலீசாரிடம் கொஹன் கூறினார்.

0 comments:

Post a Comment