கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எல்லலமுல்ல பைரஹா கழிவுக் குழியில் வாலிபர் ஒருவரின் சடலம்.

பஸ்யால, எல்லலமுல்ல பைரஹா கோழித் தொழிற்சாலையின் கழிவுகளை வீசும் குழியில் இருந்து நேற்று (29.04.2013) ஒரு வாலிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் முபாரக் என்ற வாலிபரின் சடலம் என அடையாளம் காணப்பட்டது. இவர் பௌத்த மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவிய ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் ஜனாஸா  இன்று 30.04.2013 எல்லலமுல்ல முஸ்லிம் மையவாடியில் நடைபெற்றது.  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ரனர்.

முஸ்லிம் வானொலி நிகழ்ச்சி குறித்து சமூக மட்டத்தில் பலத்த அதிருப்தி


As KPMG exposes SLBC’s unhealthy financial management – civil society calls for neutrality thumbnail



இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் இரவு ஒரு மணி நேர நிகழ்ச்சிகள் அரசியல் நோக்கத்திலான நிகழ்ச்சிகளாக மாற்றப்பட்டிருப்பது குறித்த முஸ்லிம் சமூக மட்டத்தில் பலத்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் சேவை ஆரம்பிக்கப்பட்டு 60 வருட காலத்துக்குள் முஸ்லிம் கலாசார நிகழ்ச்சிகளே இந்த நேரத்தில் ஒலிபரப்பப்பட்டு வந்தது.

அண்மைக் காலமாக ஒலிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டு தொலைபேசியூடாக நேர்காணல்களும் விமர்சனங்களுமே ஒலிபரப்பப்பட்டு வரப்படுகின்றன. தர்ஜமதுல் குர்ஆனில் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டு ஸலவாத்துடன் நிகழ்ச்சி முடிகின்றபோது அதற்குட்பட்ட நேரத்தில் அரசியலை மையமாகக் கொண்ட நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதாக நேயர்கள் தெரிவிக்கின்றனர்.
 
வானொலி முஸ்லிம் சேவை தடம்புரண்டு செல்வது பற்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் போன்ற அமைப்புக்களுக்கும் முஸ்லிம் அரசியல் தலைமைத்துவத்துக்கு பலர் முறைப்பாடு செய்துள்ளனர்.-
 
நவமணி

தவிர்க்கப்படவேண்டிய சம்பவங்கள் - தொடருமா இன்னும்..?

நேற்று (29.04.2013) ஆம் திகதி எமது கஹட்டோவிடாவின் அன்மை ஊரில் ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைக்கப்பெற்றுள்ளது. பக்கத்து ஊரைச் சோ்ந்த இரு பெண்பிள்ளைகளும்,  வெளி ஊரைச் சோ்ந்த இரு இளைஞா்களும் ஒரு முச்சக்கரவண்டியில் ஏறி நிட்டம்புவப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனா். இவா்களிடையே ஏடா கூடமான தொடர்பு இருந்து வந்துள்ளமை முச்சக்கர வண்டி ஓட்டுனருக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. எனினும் அவா்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஓட்டுனர் சமயோசிதமாக ஊரவா்கள் சிலருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவ்விடத்திற்கு வரவழைத்து அவா்களிடம் விசாரித்ததில் இவா்களிடையே தவறான தொடர்பு ஊா்ஜிதப்படுத்தப்பட்டதன் பின்னர் அவா்களை பக்கத்து ஊரிற்கு அழைத்துவந்து ஒரு ஜோடியினரிற்கு திருமணம் நடாத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியக் கிடைக்கப்பெற்றுள்ளன.

நான் எப்படி முஸ்லிமானேன்? : டச் (Dutch) நாடாளுமன்ற உறுப்பினர் "அர்னோட் வேன் டோர்ன்" மனம் திறந்த பேட்டி!



"இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கக் கூடிய நான், முஸ்லிம் ஆக...ிவிட்டேன் என்பதை எங்கள் கட்சியினர் நம்ப மறுப்பர் என்பது எனக்கும் தெரியும்.

நான், கடந்த ஒரு வருடமாக பல முஸ்லிம் அறிஞர்களுடன் பல்வேறு சந்திப்புகளை நடத்தி, மனதிலுள்ள சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக குர்ஆன், ஹதீஸ்களை ஆராய்ந்த பின்னரே, இஸ்லாத்தை ஏற்றேன் என்கிறார், நெதர்லாந்தின் "Party for Freedom" எனும் வலதுசாரி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் 46 வயதான "அர்னோட் வேன் டோர்ன்"

"இஸ்லாத்தைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்களை அதிகமதிகம் கேட்டவன் நான். இன்னமும் இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கும் என் கட்சியினர், என்னைத் துரோகி என்கின்றனர்.

எந்த ஆராய்ச்சியும் செய்யாமல் மற்றவர்கள் சொல்வதை கண்மூடிக் கொண்டு நம்புபவன் நான் அல்ல.

சிலர் பிறந்த மதத்துக்கு நான் துரோகம் செய்து விட்டதாக கூறுகின்றனர். பலர் நான் எடுத்த இந்த முடிவு மிகச் சரியானது என்கின்றனர். டிவிட்டரிலும் பலர் எனக்கு ஆதரவு தந்துள்ளனர்.'

மனதை விசாலமாக்கி, ஆராய்ந்து இம்முடிவை நான் தேர்ந்தெடுத்ததை அறிந்த பலரோ எனக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மற்றவர்களைப் போலவே நானும் வாழ்க்கையில் இதுவரை மாபெரும் தவறுகளை இழைத்திருக்கிறேன்.

நான் செய்து வந்த தவறுகளிலிருந்து இப்போது நிறைய கற்றுக் கொண்டுள்ளேன்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் என் பாதை தெளிவாகி விட்டதையும் இதில் நான் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதையும் உணர்கிறேன்!" என்று தமது பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

அவதூறு மற்றும் பொய்களை மட்டுமே முதலீடாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஃபித்னா" திரைப்படம் பற்றி நினைத்தால் வெட்கித் தலைகுனிவதாகக் கூறும் டோர்ன், நபியவர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற மேற்கத்தியப் பொய்ப் பிரச்சாரங்கள் பற்றி உலகமெங்கும் சென்று எடுத்துரைக்கத் திட்டமிட்டுள்ளேன்.

இப்போது நினைத்தால் கூட, என்னால் வேதனையைத் தாங்க முடியவில்லை.

நாங்கள் எவ்வளவு மோசமாக இறைத்தூதர் மீது இல்லாததையும் பொல்லாததையும் இட்டுக் கட்டி ஒரு திரைப்படம் எடுத்து வெளியிட்டிருக்கிறோம்? என் மனம் இன்று புண்படுவது மாதிரி தானே அன்று உலக முஸ்லிம்களும் வேதனை அடைந்திருப்பர்?" என்கிறார்.

இட்டுக் கட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபித்னா திரைப்படம் ஏற்படுத்திய அவநம்பிக்கையை போக்க, டொராண்ட்டோ (Toronto) நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய அழைப்பு மையமான Canadian Dawah Association – CDA வுடன் இணைந்து சர்வதேசத் திரைப்படம் ஒன்றினைத் தயாரிக்கப் போவதாகக் கூறுகிறார்.

"இம்முறை என் திரைப்படம் அப்பட்டமான உண்மையைப் பேசும். இஸ்லாத்தைப் பற்றியும் நபிகளாரின் சிறப்புப் பண்புகளையும் இது எடுத்துரைத்து, மேற்கத்திய நாடுகளிடையே பரப்பப் படும் இஸ்லாமோஃபோபியாவை அகற்றும்!" என்கிறார் உறுதியாக.

"உங்களது புனிதப் பயணம் எவ்வாறு இருந்தது?" என்ற கேள்விக்கு,

"இதே இடத்திற்கு உம்ரா மற்றும் ஹஜ் செய்யச் செல்பவர்களை கிறுக்குப் பிடித்தவர்கள் (Lunatic) என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளேன்.

இப்படி கீழ்த்தரமாக பிறர் மனம் புண்படும்படி நடந்து கொண்ட நான், நபி (ஸல்) அவர்களின் கல்லறைக்கு அருகிலும் ரவ்தா ஷரீஃப்க்கு முன்பு நிற்கும் போதும் என்னுள் பொங்கிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியவில்லை.

இவ்விடங்களில் நான் தொழும் போது, சுவர்க்கத்தின் அருகே நெருங்கி விட்டது போன்ற தூய்மையானதொரு உணர்வு ஏற்பட்டிருந்தது. என் கண்கள் குளமாயின"

"இறைத்தூதர் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் உலக முஸ்லிம்களைப் போன்றே நானும் என்னை உணர ஆரம்பித்திருக்கிறேன்.

அதே நேரத்தில், இறைத்தூதர் பற்றி திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல்களை நம்பி இஸ்லாத்தைக் கடுமையாக வெறுக்கும் சில மேற்கத்தியவர்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.

எங்களிடையே தான் எவ்வளவு அறியாமை? எத்தனை பாரபட்சம்? இவற்றை எல்லாம் நான் எப்படி களையப் போகிறேன்?" என்று கவலைப்படுகிறார் டோர்ன்.

"உலக அளவில் முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்குமுள்ள இடைவெளியைக் குறைத்து அவர்களிடையே அமைதியும் நல்லிணக்கமும் ஏற்படச் செய்வேன்.

இஸ்லாம் பற்றிய தெளிவை எனக்கு உணர்த்திய இஸ்லாமிய அழைப்பு மையமான CDA வுடன் இணைந்து, அழைப்புப் பணியினை முழு மூச்சுடன் மேற்கொள்வேன்.

இஸ்லாத்தைப் பற்றியும், முஹம்மத் நபி (ஸல்) அவர்களைப் பற்றியும் உண்மைச் செய்திகளை உலகிற்கு எடுத்துச் சொல்ல, என்னுடைய வாழ்க்கையை இனி அர்ப்பணிப்பேன்!" என்றார், வேன் டோர்ன்.

-நன்றி மறுப்பு

பாலிகா வரலாற்றில் தடம் பதிக்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு – (O/L 2012 மாணவிகளுக்கு)


இதோ உங்கள்  பெண் பிள்ளைகளுக்கு உயர் தரம் கற்பதற்கான ஓர் அரிய சந்தர்ப்பம்!
 
NEW ADVANCED LEVEL 2013
  • ஆண் கலப்பு இல்லாத பாதுகாப்பான இஸ்லாமிய சூழல்!
  • தரமான  ஆசிரியர் குழாம்!
  • மாணவிகள் வெளிவாரி வகுப்புக்களுக்கு செல்வதைத் தவிர்ப்பதற்கு வளாகத்துக்குள்ளேயே தரமான ஆசிரியர்களைக் கொண்டமைந்த ஆசிரியர் குழாம்!
  • இந்தப் பாடசாலையின் வரலாற்றில் இடம் பிடிப்பதற்கான ஒரே சந்தர்ப்பம்!
  • தேசிய மாகாண ரீதியில் வரலாறு படைத்து வரும் சிறந்ததொரு பாடசாலையில் உங்கள் பிள்ளையும் பங்கு கொள்வதற்கான சிறந்ததொரு வாய்ப்பு!
  • உயர் தரத்தின் முதலாவது குழுவை சிறந்த முறையில் கரைசேர்க்க தியாகத்துடன் செயற்படும் பாடசாலை சமூகத்தின் பல்வேறு திட்டங்கள்!
  • எமது கிராமத்து மறுமலர்ச்சியில் மற்றுமொரு மைற்கல்லாக விளங்கப்போகும் உயர்தர மாணவிகளின் தனித்துவமான கல்வி முயற்சியில் நீங்களும் கைகோருங்கள்!
  • வீட்டுச் சூழலிலேயே தரமான கல்வியை உங்கள் பிள்ளைக்கு வழங்க இப்போதே இணைந்திடுங்கள்!
  • கம்பஹா மாவட்டத்திலுள்ள ஒரேயொரு முஸ்லிம் பெண்கள் பாடசாலை!
விண்ணப்பங்களுக்கு,
அதிபர்,
பாலிகா முஸ்லிம் மகா வித்தியாலயம், கஹடோவிட்ட.

இலவச கண் சிசிச்சை முகாம் - ஜாமிஉத் தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜித்



தொடர்ந்தும் 6 ஆவது முறையா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்களில் வெள்ளை படர்தல் நோய் உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இலவச சிகிச்சை முகாம் இன்சாஅல்லாஹ் எதிர்வரும் 28.04.2013 ஞாயிறு பி.ப. 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

சிகிச்சைக்காக வருபவர்களுக்கான இலக்கங்கள் பி.ப 1.30 மணி முதல் வழங்கப்படும்.

வருகின்ற அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதோடு தெரிவு செய்யப்படுகின்ற நொயளர்களுக்கான சத்திர சிகிச்சை மற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என்பதையும் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
இப்படிக்கு நிருவாகம்.

இலவச கத்னா வைபவம் - முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிள்.




 
கஹடோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி சேர்கிள் தொடர்ந்தும் 6 ஆவது வருடமாக நடாத்தும் ஏழைச் சிரார்களுக்கான இலவசக் கத்னா வைபவம் இன்சாஅல்லாஹ் மே மாதம் இறுதியில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த நிகழ்வில் பங்கு கொள்ள விரும்பும் சிரார்களின் பெயர்களை மேமாதம் 10ம் திகதிக்கு முன்னர் எமது நிலையத்தில் பதிவு செய்துகொள்ளவும். இத்திகதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதையும் அறியத் தருகிறொம்.
இப்வண்ணம்.
நிருவாகம்
தொடர்புகளுக்கு
033 5673912, 0715311310

இப்படியும் சில நல்ல உள்ளங்கள்



கடந்த 24.04.2013 ஆம் திகதியன்று அதிகாலை 5.15 மணியளவில் நடந்த ஒரு சிறு விபத்து சிங்கள சகோதரர்களிலும் சில நல்ல உள்ளங்கள் உள்ளனர் என்பதைப் படம் பிடித்துக்காட்டியது.

ருக்கஹவிலப்பகுதியில் இருந்து கஹடோவிடாவை நோக்கி வந்து கொண்டிருந்து பாடசாலை சேவை வேனை அதற்குப்பின்னால் வந்த ஒரு லொறி தவறான பக்கத்தால் முந்த எத்தனித்த போது வேனின் வலது பக்கக்கண்ணாடியில் மோதி கண்ணாடி உடைந்து விட்டது. லொறியை ஓட்டிக்கொண்டு வந்தவர் புத்தளப் பகுதியைச்  சேர்ந்த ஒரு முஸ்லிமே, விபத்துக்குப் பின்னர் கண்ணாடிக்கு ஏற்பட்ட சேதத்திற்காக 1000 ரூபா ஐ முஸ்லிம் சகோதரர் அந்த மாற்றுமத சகோதரரிடம் கொடுத்தார், அந்த 1000 ரூபா ஐ ஏற்க மறுத்த அந்தப் பெரும்பாண்மை இன சகோதரர் தனது வேணின் உடைந்த கண்ணாடிக்க புதிய ஒரு கண்ணாடியை மாத்திரம் வாங்கித்தந்தால் போதும் என்று பெருமனதுடன் கூறினார். கண்ணாடியின் விலை 650 ரூபா மாத்திரமே என்றும் தனக்கு மேலதிக பணம் தேவையில்லையென்றும் கூறினார். மேலும், முஸ்லிம் சாரதியின் மீது தவறிருந்தும் அதற்காக சற்றும் கோபப்படாமல் சிறந்த முறையில் கதைத்த அந்தப் பெரும்பாண்மை இன சாரதியின் முன்மாதிரி பாராட்டத்தக்கதாகும். பொதுபல சேனாபோன்று இயக்கங்கள் எமது ஊர் பாலம், சந்திவரை வந்திருந்தாலும், இப்படியும் நல்ல உள்ளங்கள் அவர்களுக்கு மத்தியல் உள்ளதை நாம் ஓரளவு சந்ததோசத்துடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இந்த சம்பவம் எமது கஹடோவிடாச் சந்தியில் நடைபெற்றது.
உங்களது இனணயம் மூலம் பகிர்ந்துகொள்விர்கள் என்று என்னுகிறேன்.

போதையில் தள்ளாடும் சிறுமக்கம்...தடுத்து நிறுத்த முன்வராத கோழைத்தலைமைகள்...


எமது ஊர் கஹட்டோவிட்டா காலத்துக்குக் காலம் சில விடயங்களில் பிரபல்யமடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிகழ்காலத்தில் போதைப்பொருட்களின் பிடியில் தள்ளாடி வருவது எமது ஊரின் நிலைமையை படம்போட்டுக் காட்டுகிறது..

... சித்திரைப் புத்தாண்டு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பெருநாளாக இருந்தாலும் அவர்கள் மதுசாரம் என்ற போதையில் அவர்களது பெருநாளை கொண்டாடி மகிழ்வது நாம் அறிந்து வருகின்ற ஒன்றே. அந்த வகையில் இந்த வருடத்துக்கான சித்திரைபெருநாள் கடந்த 14,15 - 04 - 2013 ஆகிய தினங்களில் வந்து சென்றது. இதில் விசேடமென்னவென்றால் எமது ஊரைச்சேர்ந்த முஸ்லிம் பெயர்தாங்கி இளைஞர்களும் அன்னியர்கள் போன்றே போதைவஸ்துக்களோடு எமதூருக்குள்ளேயே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

எமது ஊரில் இரவு நேர ஹோட்டல்கள் இப்போது அதிகமாகி உள்ளன. இளைஞர்களை நீண்ட நேரம் இரவில் பாதை ஓரமாக கூத்தடிப்பதற்கு இந்த ஹோட்டல்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. இவர்களின் இந்த மதுசாரப்பாவனை ஊருக்குள் நடமாடுவதற்கு இந்த இரவு நேர ஹோட்டல்களும் ஒரு காரணம். ஹோட்டல் முதலாளிமார் நினைத்தால் நிச்சயம் இந்த இளைஞர்களை இது போன்ற பாவனைகளிலிருந்து தடுத்திருக்கலாம். ஆனால், இலாபத்தை நோக்கமாகக் கொண்ட இவர்கள் தடுத்தால் தமது வியாபாரம் குறையும் என்ற நோக்கத்திற்காக இந்த இளைஞர்களைப் பற்றி பாராமுகமாக இருக்கிறார்கள்.

எமது ஊரில் பிரபல்யமான ஹாஜியார் வீட்டுக்கு செல்லும் பாதையருகே இருக்கும் ஹோட்டல் பக்கத்தில் இருந்து எடுத்த போட்டோவையே இங்கே பிரசுரித்திருக்கிறேன். அந்த ஹோட்டல் அருகே இரவு நேரங்களில் தூள் (கஞ்சா) பரிமாற்றம் நடப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்திருக்கின்றன.

சித்திரைப்புத்தாண்டு இந்த போதைப் பிரியர்களுக்கு சொந்த ஊரிலேயே களம் அமைத்ததென்றால் இன்னும் சில காலங்களில் இதன் பாதிப்பு எங்கு கொண்டுபோகும் என்பதனை இப்போதே சிந்தித்து இதைக் களைய வேண்டியது கடமை அல்லவா?
இஸ்லாமிய இயக்கங்கள், பள்ளிகள், சமூக இயக்கங்கள், அரசியல் சாணக்கியம் மிக்கவர்கள், அரசியல் துறை சார்ந்தவர்கள் நிறைந்து இருக்கும் இந்த ஊர் இன்னும் ஏன் இது போன்ற போதைகளை களைவதில் தாமதம் காட்டுகிறது?
என் உயிரிலும் மேலான இளைஞர்களே உங்கள் பங்கு என்ன?
வெட்கம் கெட்ட சிகரெட்டையே தடுத்து நிறுத்தமுடியாத எமது ஊரின் தலைவர்களால் எப்படி இந்த போதைப்பாவனையை நிறுத்த முடியும்?

இது சிந்தைக்காக அல்ல களம் இறங்குவதற்காக..


Muhammadh

வேன் முச்சக்கரவண்டியுடன் விபத்து நால்வர் பலி (கலகெடிஹென திகாரிய)



கலகெடிஹேன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நான்குபேர் பலியானதுடன் ஏழுபோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திஹாரி, கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் ஒன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இச் சம்பவத்தில் மாலிகாவத்தையைச் சேர்ந்த 2 முஸ்லிம் சகோதரிகளும் ஒரு கைக்குழந்தையும், கத்தோலிக்க பாதரியார் ஓருவரும் பலியாகியுள்ளனர். உயிரிழந்த இருபெண்களும் விடுமுறையில் இருந்த தாங்களது பிள்ளைகளை கல்ளெளிய பெண்கள் அரபுக் கல்லூரியில் சேர்த்துவிட்டு வீடு திரும்புகின்ற வழியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.
இவ்விபத்தில் உயிரிழந்த பெற்றோர்களின் சடலங்கள் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களுகும் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பர்மிய ரானுவத்தின் அட்டகாசம் (வீடியொ)

அன்பின் இஸ்லாமிய சகோதர சகோதரிகளே, எமது நாட்டில் கடந்த சில மாதங்களாக நடந்த நிகழ்சி நிரல்களைப் பார்க்கும் போது நாங்களும் இதுபோன்ற நிலமைகளக்கு முகம் கொடுக்கவேண்டி சந்தர்ப்பங்கள் ஏற்படலாம் அல்லஹ் காப்பபாற்றவேண்டும். ஏன் இவ்வாறு தாக்கப்படுகிறார்கள்? லா இலாஹ் ஹ இல்லல்லாஹ் என்று கூறி அவனது இறைத்தூதறை நபியாக ஏற்றுக்கொண்டதன் விளைவுதான். நிச்சயம் இந்த ரானுவத்துக்கு எதிரான அல்லாஹ்வின் தன்டனை வெகுதுாரத்தில் இல்லை.  இந்த இன்னல்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கும் எமது பர்மிய சகோதரர்களுக்காக நாங்களும் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்போம்.



http://www.facebook.com/WirLiebenALLAH?ref=ts&fref=ts#!/photo.php?v=498389520214535&set=vb.404898316225004&type=2&theater 
 

உங்கள் கணனியை வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான வழி ..



எதுவித மென்பொருட்களையும் நிறுவாமல் உங்கள் கணினியை முன்னிருந்ததை விட வேகமாக செயற்படுத்த ஒரு இலகுவான முறை

மு...தலில்

'Start' பொத்தானை கிளிக் செய்து 'Run' என்பதை தெரிவு செய்யுங்கள்.

பின் அதில் regedit என டைப் செய்து 'Enter' பொத்தானை அழுத்துங்கள்.

பிறகு தோன்றும் Registry Editor வின்டோவில் HKEY_CURRENT_USER இன் கீழ்
உள்ள control panel யை தெரிவுசெய்து அதில் desktop என்பதை கிளிக்
செய்யுங்கள்.

அதன் வலது பக்கத்தில் காட்டப்பட்டுள்ள registry
setting இல் 'MenuShowDdelay' என்பதன் மேல் right click செய்து modify
என்பதை தெரிவு செய்யுங்கள்.

அதில் default value data வாக காட்டப்பட்டுள்ள '400' ஐ '000' வாக மாற்றிய பின் OK பொத்தானை அழுத்துங்கள்.

பின்னர் உங்கள் கணனியை Restart செய்யுங்கள்.

உமது கணனி முன் இருந்ததை விட வேகமாக செயற்படுவதை உங்களால் உணர கூடியதாக இருக்கும்.

இம்முறையின் மூலம் கணனியை வேகமாக தொடக்கவும் (start) முடியும்.

தகவல் : abdul razeethu faiz.

எப்படி எல்லாம் பேசுறான் இந்த தலைவர் ........



ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன் - முஸ்லிம் நாடுகளிடம் மஹிந்த உறுதி

இனவாதத்தை தூண்டும் அல்லது மத விரோத நடவடிக்கைகளை ...மேற்கொள்ளும் எவருக்கும் எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என 15 முஸ்லிம் நாடுகளின் ராஜதந்திரிகளிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று உறுதியளித்தார்.

இலங்கையில் கடமை புரியும் 15 இஸ்லாமிய நாடுகளின் ராஜதந்திரிகளை ஜனாதிபதி இன்று அலரி மாளிகையில் சந்தித்து உள்நாடு மற்றும் சர்வதேச விவகாரங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறினார்.

இனவாதத்தைத் தூண்டுவது அல்லது மத விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பில் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் தன்னிடம் சமர்ப்பிக்குமாறும் அவ்வாறான நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த தான் உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பங்களாதேஷ்- ஈரான்- ஈராக்- எகிப்து- இந்தோனேஷியா- குவைத்- மலேஷியா- மாலத்தீவு- நைஜீரியா- பாக்கிஸ்தான்- பாலஸ்தீனம்- துருக்கி- ஐக்கிய அரபு எமிரேட்ஸ்- சவூதி அரேபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகள் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்- ரவுப் ஹக்கீம்- அநுர பிரியதர்ஸன யாப்பா- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர்- மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் உட்பட பல முக்கியஸ்தர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.



(எம்.ஜே.எம். தாஜுதீன்)

மின்சார கட்டணம் அதிகரிப்பு///



கடந்த 12ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரப் பாவனைக்கான கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்கட்டண அதிகரிப்புக்கான அனுமதி பொதுப் பாவனை நிர்ணைய ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணப்பட்டியல் விபரம் வருமாறு

பாவனை அலகு   அதிகரிக்கப்பட்டுள்ள கட்டணம் (ரூபா)  பானைக்கான வரி (ரூபா)
0 - 30     5.00     25
31 - 60    6.00     35
61 - 90     8.50     40
91 - 120     15.00     40
121 -180     20.00     40
181- 210     24.00     40
211- 300     26.00     40
301- 900     32.00     40

900ஐ விட அதிகம்  34.00     40   

மதவழிபாட்டுத்தளங்களுக்கு
0-30       1.90     00
31-90      2.50    00
91-120      3.50    00
121-180      5.00     00
180ஐ விட அதிகம்    7.00  00
இதை விட அரச அலுவலகங்கள், கம்பனிகள் மற்றும் ஹோட்டல்களின் மின்சாரப் பானை அலகுகளுக்கான அதிகரிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
எம்.எம்.ஏ.ஸமட்
 
 

ஈரான்- பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பயங்கர நிலநடுக்கம். நூற்றுக்கணக்கானோர் பலி?

People evacuate buildings bringing traffic to a halt in Karachi, Pakistan, the city nearest the border with Iran where a 7.8 magnitude earthquake struck

இரானின் தென்கிழக்குப் பகுதியில்,பாகிஸ்தானுடனான எல்லைப் பகுதியில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஈரானை கடுமையாகத் தாக்கியது. அரபு நாடுகள் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளும் தப்பவில்லை.
 
ஈரானில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவு கோலில் 8 மற்றும் 7.8 ஆக பதிவாகியிருந்தது. வீடுகள், அலுவலகங்கள் பயங்கரமாக குலுங்கியதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கட்டிடங்கள் இடிந்து விழுந்து, 40 பேர் வரை இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தொலை தூரத்திலுள்ள சிஸ்டான் பலூச்சிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 7.8 அளவுக்கு இருந்ததை தாங்கள் பதிவு செய்துள்ளதாக, அமெரிக்க நிலவியல் ஆய்வு மையத் தெரிவித்துள்ளது.
 
துபாயில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதேபோல் பக்ரைன், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் குவெட்டா, பெஷாவர், ஐதராபாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பலுசிஸ்தான் பகுதியில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் இந்தியாவில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.



 

அமெரிக்கா, பாஸ்டனில் தொடர் குண்டு வெடிப்பு!


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் அங்குள்ளவர்களை அதிர வைத்துள்ளன. பாஸ்ட்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்து, போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 3 பேர் பலியானார்கள் மேலும் 140 பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குண்டுவெடிப்புகள், தீவிரவாதிகளின் கைவரிசை என அமெரிக்க உள்ளக உளவுத்துறை எஃப்.பி.ஐ. கூறியுள்ளது.
பாஸ்ட்டன் நகரில் மாரத்தான் போட்டி முடியும் நேரத்தில் முதலாவது குண்டு வெடித்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்தது.
இதனை‌யடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.


பாஸ்டனில் நடைபெற்ற மாரத்தான் மிகவும் தொண்மை வாய்ந்தது மற்றும் புகழ்‌பெற்றது. இந்த ஆண்டு சுமார் 27,000 பேர் கலந்துகொண்ட போதே ‌குண்டு வெடிப்பு நடந்தது. மாரத்தான் போட்டி முடியும் இடம் அருகேயுள்ள குபிளாசா நட்சத்திர ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு நடந்தது.
வெ‌டிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டுகள், நடுத்தர அளவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என பாஸ்டன் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 25லிருந்து 30 பேர் வரை ஒரு கால் மற்றும் இரு கால்களை இழந்திருப்பதாக டாக்டர்கள் த‌கவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, பாஸ்டன் நகருக்கு வரும் விமானங்கள், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பாஸ்டனில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பாஸ்டன் தொடர் குண்டு தாக்குதலால் நியூயார்க், மற்றும் வாஷிங்டனில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்றைய நகரங்களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த வெடிகுண்டு தொடர்பான 50 க்கும் மேற்பட்ட போட்டோக்களை கிழகண்ட லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்
http://abcnews.go.com/US/slideshow/boston-marathon-explosions-finish-line-18960444
 

கஹடோவிடாவைச் சேர்ந்த அஸீஸா உம்மா அவர்கள் காலமானார்.


கஹடோவிடவைச் சேர்ந்த அஸீஸா உம்மா அவர்கள் தனது 93வது வயதில் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார்  காலம் சென்ற கே.பீ. ரௌப் அவர்களின் சகோதரியும் சாபிஹஸன், உவைஸ், உஸ்மான் ஆகியோரின் தாயாரும். இஜாஸ், சபாஸ் ஆகியோரன் உம்மும்மாவும், ரம்ஸான் அவர்களின் வாப்பும்மாவம் ஆவார்.

ஜனாஸா நல்லடக்கம் இன்று (16.04.2013) கஹடோவிட மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் இச்சகோதரியன் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

பொது பல சேனாவுக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு !



puu
 
அமெரிக்கா சென்றிருக்கும் பொதுபல சேனா உறுப்பினர்கள் கலிபோர்னியாவில் அமைந்திருக்கும் பெளத்த விகாரையில் தங்கியிருப்பதில் அதிருப்தியடைந்திருக்கும் விஹாரை நிர்வாகம் தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதனடிப்படையில் குறிப்பிட்ட விஹாரையில் அவர்களுக்கு தங்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும், குறிப்பிட்ட தேரர் ஒருவரே இந்த ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார் என்றும், விஹாரையில் பொதுபல சேனா உறுப்பினர்கள் தங்குவதை நிர்வாகம் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களை உடனடியாக வெளியேற்றும்படியும், அவர்களை வைத்து பூஜைகள் எதையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் எனவும் அறிவித்துள்ளதாக பொதுபல சேனாவுக்கு எதிரான பெளத்தர்கள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கை முழுவடிவம்:
The Management Committee of the Anaheim Buddhist temple in California had this to say to one of its priests for hosting the BBS: The Management Committee of the Anaheim temple would like to issue the following statement regarding the visit of the Bodu Bala Sena: We are deeply disturbed and disappointed by the actions taken by Ven. Sumana in allowing the ‘Bodu Bala Sena’ representatives to stay at the Anaheim temple, organizing a ‘Buddhanussathi Pooja’ and a get-together (please see attached flyer).
This was organized with the consent of the Ven. Sumana by two individuals without consulting the Management Committee of the temple and we had no prior knowledge of this visit until last Thursday. Since then, the Management Committee has met and spoken to Ven. Sumana requesting not to provide accommodation to the representatives of this group and not to organize a bodhi pooja or a meeting with them.
It is our position that Sri Ratana Viharaya should not support ‘Bodu Bala Sena’ which advocates against the rights of minorities in Sri Lanka and resorts to violence, mob action and intimidation to advance their cause. The temple premises should not be used as a platform to promote hatred and/or to promote an extremist group like ‘Bodu Bala Sena’.
Therefore, the Management Committee requests our devotees not to participate in any of these activities and not to support this extremist group now or in the future.
The Management Committee of the temple

பாவத்துக்கும் நன்மைக்கும் வட்டிக்கு மேல் குட்டி போடும் FACEBOOK

 

FACEBOOK கில் தங்களுக்கு வருகின்ற இஸ்லாம் சம்மந்தமான பல நல்ல விடயங்களை நாங்கள் Like • Comment •... Share • Tag செய்வது கிடையாது.ஏன் என்றால்அதை நண்பர்கள் பார்ப்பது கிடையாது.
சரி அவர்கள் பார்க்கவில்லை என்றாலும் நம் கடமை ஏன் என்றால்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "என்னை தொட்டும் ஒரு செய்தி கிடைத்தால் அதை அடுத்தவர்க்கு கூறி விடுங்கள்" எனும் கருத்து பட கூறினார்கள்.

ஆக நமக்கு கிடைக்கின்ற நல்ல விடயங்களை அடுத்தவர்க்கு அனுப்புவது நம் கடமை.

ஆனால் அசிங்கமான சினிமா
பாடல்கள் அருவருப்பான படங்களை எல்லாம் Like • Comment • Share • Tag பண்ணுகிறார்கள் இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள்
அறிவதில்லை.

FACEBOOK என்பது ஒரு அருமையான சமூக இணையதளம் .
இதன் மூலம் நல்லவற்றையும் தீயவற்றையும் செய்ய முடியும்
. ஆனால் இதில் செய்யப்படுகின்ற பாவத்துக்கும் நன்மைக்கும்
வட்டிக்கு மேல் குட்டி போடு்ம்.

எப்படி என்றால் உதாரணம் நீங்கள் மாத்திரம் ஒரு சினிமா பாடலை/ பெண்ணின் உருவத்தை பார்க்கின்றீர்கள் என்றால் அதை ஒரு முறை பார்த்ததுக்கான பாவம் உங்களுக்கு கிடைக்கும். ஆனால் அந்த பாவமான சினிமா பாடலை/பெண்ணின் உருவத்தை
Like • Comment • Share • Tag செய்யும் போது அதை உங்களது அனைத்து நண்பர்களும் பார்ப்பார்கள். அப்படி அனைவரும் பார்க்கும் போது அந்த பாவத்தை அவர்களும் சுமக்க வேண்டும். பாவத்தை ஆரம்பித்து வைத்தமைக்காக அவர்கள் அனைவரது பாவத்தையும் நீங்களும் சுமக்க வேண்டும். உங்களிடம் 1000 நண்பர்கள் இருந்தால் அவர்கள் 1000 பேரின் பாவத்தையும் நீஙகள் சுமக்க வேண்டும். அந்த நண்பர்களில் ஒருவர் Like • Comment • Share • Tag செய்யும் போது அந்த நண்பர்களின் பாவத்தையும் நீங்கள் சுமக்க வேண்டும் இப்படி 1000 ரம் 2000 மாக மாறலாம் ஏன் ஆயிரம் லச்சங்களாகவும் 1000000 மாறலாம்.

பெண்களின் உருவங்களை Profile Picture ஆக வைத்திருக்கும் பெண்களும் தான் ,ஏனென்றால் ஆண்களுக்கு அதை பார்க்க மேடையமைத்து கொடுக்கின்றார்கள்.

'இரு கண்களும் விபசாரம் செய்கின்றன. அவை செய்யும் விபசாரம் பார்வையாகும்.' (புகாரி)

ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)

எவர்கள் (இதற்குப்பின்னரும்) விசுவாசிகளுக்கிடையில் இத்தகைய மானக்கேடான வார்த்தைகளைப் பரப்ப விரும்புகின்றார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அல்குர்ஆன் 24:19)

யார் சமூகத்தில் மானக்கேடான விஷயங்களைப் பரப்புவதில் ஈடுபடுகிறாரோ அவரும் அந்தச் செயலை செய்தவரைப் போன்ற பாவியாவார். அலீ (ரழி) அவர்கள் கூறினார்கள் ''மானக்கேடானதைப் பேசுபவனும் அதைப் பரப்புபவனும் பாவத்தில் சமமாவார்கள்.'' (அல் அதபுல் முஃப்ரத்)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அநியாயமாக கொலை செய்யப்படக்கூடிய ஒவ்வொரு மனிதனின் கொலையின் பாவத்திலும் ஆதம்(அலை)அவர்களின் முதல் மகன்(காபில்)க்குப் பங்குண்டு ஏனென்றால் அவன் தான் கொலையை
முதலில் ஆரம்பித்து வைத்தான்.
இப்னு மஸ்வூத் (ரலி) - புகாரி,முஸ்லிம்)

அதை போன்றே நன்மையும்
நீங்கள் ஒரு நன்மையான விடயத்தை Like • Comment • Share • Tag செய்யும் போது அதை இவ்வாரு பார்க்கும் அனைவரது நன்மையும்
உங்களுக்கும் கிடைத்து விடும்.

“நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
யார் இஸ்லாத்தில் நல்ல ஒரு காரியத்தை ஆரம்பிக்கின்றாரோ அவருக்கு அதற்குரிய நன்மையும், (அவருக்குப் பின்) செய்பவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் ஒரு பங்கும் இவருக்கு உண்டு. ஆனால் அவர்களின் நன்மையில் ஏதும் குறைக்கப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

எனவே FACEBOOK மூலம் நல்லவற்றை மட்டும் செய்யுங்கள்.

பொதுவான் செய்திகளை பகிரும் நண்பர்களும் கவனமாக இருங்கள்.

Like • Comment • Share • Tag


கஹட்டோவிட ஜம்இய்யதுல் உலமாவின் விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு -


சமகால முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்வது, பிற சமூகங்களோடு எவ்வாறு நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவது, அசாதாரண சூழ்நிலையில் எமது பெண்கள் எவ்வாறு நடந்து கொள்வது போன்ற விடயங்களை உள்ளடக்கிய பல்லூடக ஒளிக்காட்சியினுடனான (Muilti media presentation) ஒரு கருத்தரங்கை கஹட்டோவிட ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்துள்ளது.

நாளை மாலை 4 மணிமுதல் 6 மணிவரை கஹட்டோவிட அல்பத்ரியா மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கை அஷ்ஷைக் எஸ்.எச்.எம் பழீல் நளீமி அவா்கள் நடாத்தவுள்ளார்.  ஊா் மக்கள் அணைவரும் கலந்து பயன்பெறுமாறு கஹட்டோவிட ஜம்இய்யா அன்புடன் வேண்டிக் கொள்கின்றது. பெண்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சாதாரண தரத்திற்கு முதன் முறை முகம்கொடுத்த கஹடோவிட பாலிகா! ஈன்றது சாதனை 8A 1B.

 
2012 டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் கஹடோவிட முஸ்லிம் பாலிகா பெறுமதியான பெறுபேற்றினை பெற்றிருப்பதாக அக்கல்லூரியின் அதிபா் திருமதி சானாஸ் நவாஸ் தெரிவித்துள்ளார். அவா் மேலும் கூறுகையில் தமது பாடசாலையில் முதல் முறையாக 14 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் இதில் 10போ் உயர்தரத்திற்கு சித்திபெற்றிருப்பதாகவும் ஏனைய நான்கு மாணவிகள் மூன்று நான்கு பாடங்களில் சித்திபெற்றிருப்பதாகவும் தெரிவித்ததுடன் இப்பெறுபேறானது முதற் தடவையாக பாடசாலைக்கு பெருமை சோ்த்ததுடன் எமது கிராமத்தின் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு எனவும் குறிப்பிட்டார். இப்பெறுபேற்றினை பெற்றுத் தந்தமைக்காக முதலில் அல்லாஹ்விற்கும் அடுத்தபடியாக இம்மாணவா்களின் கல்வி நடவடிக்கைகளில் ஆா்வமுடன் செயற்பட்ட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றார்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆா்வமுடன் கற்ற மாணவிகளிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இப்பாடசாலையானது கம்பஹா மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிப்பிரிவில் உள்ள ஒரேயொரு முஸ்லிம் பெண்பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் வரலாறு மிக நீண்டு சென்றாலும் சுருக்கமாக சில விடயங்களை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட அக்கால கட்டத்தில் ஆரம்ப வகுப்புப்படித்த மாணவிகள் S.S.C என்ற (தற்போது O/L) பரீட்சையை எழுதியிருந்தாலும் கூட காலப்போக்கில் அல்பத்ரியா மகாவித்தியாலயம் என்ற கலவன் பாடசாலை ஆரம்பமானபோது தனியாகப் பயின்றுவந்த பெண்கள் தரம் 6வரை கற்றதன்பின்னர் தரம் 7இலிருந்து கலவன் பாடசாலையில் சோ்ந்து படிக்கவேண்டிய ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களினால் கடந்த 6 வருடங்களிற்கு முன்னா் சில பெற்றோர்கள் பெண்கள் ஆண்களின் கலப்பின்றித் தனியாகக் கல்வியைத் தொடரவேண்டும் என்று உணர்ந்து அதற்காக மேற்கொண்ட முயற்சிகளின் பலனே இந்த மாணவிகள் சாதாரண தரம்வரை இதே மகளிர் கல்லூரியில் கற்று சிறந்த பெறுபேற்றினையும் பெற்றுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய வரையரைகளைப் பேணி பெண்களின் ஒழுக்கத்தை மையமாக வைத்து காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்ட ஒருசில பெற்றார்கள் அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு பெரும் சக்தியாக இருந்தது என்றால் அது மிகையாகாது. பாடசாலைக்கு எவ்விதப் பௌதீக வளங்களும் இல்லாத சந்தா்ப்பத்தில் அல்லாஹ்வின் உதவியை மாத்திரம் நம்பிய 14 பெற்றார்கள் 6 ஆம் தரத்தில் தமது பிள்ளைகளை இதேபாடசாலையில் கல்வியைத் தொடரத் துணிந்துவிட்டமை இத்தருணத்தில் ஈன்று குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். மனிதா்கள் என்ற வகையில் போட்டி, பொறாமையுடன் பல எதிர்ப்புக்களையும் சம்பாதித்துக்கொண்டு துணிவுடன் செயல்பட ஆரம்பித்த பாலிகாவுக்கு உருதுணையாய் நின்ற அன்றைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தையும் நலன்விரும்பிகளையும் இத்தருணத்தில் மறந்திடவே முடியாது. அந்தவகையில் கட்டிட வசதிகளுடன் ஆசிரியர்களையும் பெற்றுத்தருவதற்காக ஓடி உழைத்தவா்களான மெளலவி சாஹுல் ஹமீட், மௌலவி அப்துல் முஜீப், மௌலவி பைரூஸ், அல்ஹாஜ் பயாஸ் ஆகியோரை இவ்விடத்தில் நினைவு கூர்வது பிழையாகாது. இவா்களின் செயல்களுடன் அல்லஹ்விடம் ஏந்திய கரங்களும் இவா்களிற்கு இவ்வெற்றியைக் கொண்டு தந்தது. சுமார் 6 வருடங்களிற்கு முன் அதிகமான வளப்பற்றாக்குறைகளுடன் காணப்பட்ட பாலிகாவில் 6 வருட முடிவில் சிறந்த க.பொ.த சாதாரண தரப்பெறுபேற்றுடன் தனியான ஒரு மகளிர் பாடசாலையாக முன்னரைவிட வளங்கள் காணப்படும் ஒரு நிலைமையை உருவாக்கிய அல்லாஹ்வுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும் பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக உழைக்கும் அதிபா் சானாஸ் நவாஸ் அவா்களையும் நாம் இத்தருணத்தில் பாராட்டுகின்றோம்.
மேலும் பாடசாலைக்கு தொழுகை அறையையும் அதேவளவுக்குள் பிரத்தியேகமாக அமைத்துத் தர முழு மூச்சாக ஈடுபட்ட மௌலவி அப்துல் முஜீப் அவா்களை நாம் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். 2012ஆம் ஆண்டுப் பரீட்சை எழுதும்வரை மாணவிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு கருத்தரங்கு மற்றும் பயிற்சிப்பட்டரைகளை ஏற்பாடு செய்த அதிபா், ஆசிரியா்கள், பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரினதும் முயற்சிக்குக் கிடைத்த சிறந்த பெறுபேறே இன்றைய பாலிகாவின் இப்பெறுபேறாகும். எதிர்வரும் காலங்களில் க.பொ.த உயா்தர வகுப்புக்களையும் ஆரம்பித்து சிறந்த ஆளுமைகளைக் கொண்ட மாணவியர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக இவா்கள் இன்னும் பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கையை இப்பெறுபேறுகள் நம்மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் நமது செயல்களைப் பொருந்திக் கொள்வானாக!
ஈமைல் மூலம் எம்மைத் தொடர்புகொண்டு இவ்வாக்த்தை எமக்கு அனுப்பிய சகோதரிக்கு ஜஸாகுமுல்லாஹு கைர்.

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராட்சத சிலந்தி!

மாங்குளம் பகுதியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித முகமொன்றின் அளவை ஒத்த சிலந்தியானது முழு உலகினது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
இச்சிலந்தியானது குறுக்காக சுமார் 8 அங்குளம் நீளமானதென கணிப்பிடப்பட்டுள்ளதுடன் கால்களில் மஞ்சள் நிற கோடுகளையும் கொண்டுள்ளது.
டரான்டூலாஸ் ‘tarantulas’ எனப்படும் இராட்ச சிலந்தி குடும்பத்தைச் சேர்ந்த இச் சிலந்தியானது பொயிசிலோதேரியா ‘Poecilotheria’ இனத்தைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை மற்றும் இந்தியாவில் மட்டும் காணப்படும் இச் சிலந்திகள் மரங்களிலேயே பெரும்பாலும் வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவை வேகமான அசைவுகளைக் கொண்டதுடன் விஷத்தன்மை வாய்ந்தது. இவற்றின் விஷமானது பூச்சிகள், எலி, பாம்பு மற்றும் சிறிய பறவைகளைக் கொல்லக்கூடியது.
இதுமட்டுமன்றி இச்சிலந்தியானது ‘கோலியாத் பேர்ட் ஈட்டர்’ எனப்படும் தென் அமெரிக்காவில் வாழும் உலகின் மிகப் பெரிய சிலந்திகளை ஒத்ததென ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் இச்சிலந்தி 2009 ஆம் ஆண்டு முதல் முறையாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது உயிரிழந்த சிலந்தியொன்றை கிராமவாசிகள் உயிரினப் பல்வகைமை தொடர்பான கல்வி மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் ரணில் நாணயக்காரவுக்கு அளித்துள்ளனர்.
அதை அவர்கள் அடித்துக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அச்சிலந்தியை ஆராய்ந்த ரணில் குறித்த சிலந்தியானது இதற்கு முன்னர் இலங்கையில் இணங்காணப்பட்டதொன்றல்லவென அறிந்து கொண்டுள்ளார்.
பின்னர் ரணில் தலைமையிலான குழுவினர் குறித்த சிலந்தியை தேடும் பணியை தொடங்கியுள்ளனர்.
நீண்ட நாள் தேடலின் பின்னர் பெண் சிலந்தி மற்றும் அதன் குஞ்சுகளை மாங்குளம் வைத்தியசாலையின் வைத்தியரொருவரின் தங்குமிடத்தின் வளாகத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
இதை கண்டுபிடிக்க உதவிய பொலிஸ் உத்தியோகத்தரான மைக்கல் ராஜ்குமார் புராஜா என்பவருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு இச்சிலந்தி இனமானது Poecilotheria rajaei எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதேபோல் பல சிலந்திகள் எதிர்வரும் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம் என ஆராய்ச்சியாளர் ரணில் நாணயக்கார தெரிவித்துள்ளார். எனினும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தியானது இந்தியாவில் காணப்படும் Poecilotheria regalis என்றழைக்கப்படும் சிலந்திகளை ஒத்ததென ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை Poecilotheria rajaei இனை தனிப் பிரிவாக அங்கீகரிக்க மேலும் உறுதிப்படுத்தல்கள் அவசியமென அவுஸ்திரேலிய குயின்ஸ்லாந்து நூதனசாலையைச் சேர்ந்தவரும் சிலந்தி ஆராய்ச்சித் துறையில் நிபுணருமான ரொபர்ட் ரவேன் தெரிவித்துள்ளார்.
selanthi_1 selanthi_2 selanthi_3 selanthi_4 selanthi_5 selanthi_6

முஸ்லிம் பெண்களின் ஆடையை நாமும் பின்பற்ற வேண்டும் -வஜிர தேரர்

முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கமிக்கது முஸ்லிம் மாணவிகள் அணியும் ஆடை சிறந்தது. இதனை நாமும் பின்பற்ற வேண்டும் என சிறுவர் நிலையப் பணிப்பாளர் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

சகல சமய ஆய்வு வட்டம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடத்திய செய்தியாளர் மகாநாட்டில்லே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார் .
அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் முஸ்லிம் நாடொன்றுக்கு நான் விஜயம் செய்திருந்தேன். அங்கு முஸ்லிம் பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை வெகுவாகக் கவர்ந்தது. இந்த ஆடை முறையை நாமும் பின்பற்ற வேண்டும். முஸ்லிம் பெண்கள் அணியும் ஆடை முறை அழகானது. இந்த நல்ல விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.
 
சிங்களவர்கள் இந்த நாட்டில் ஒரு காலத்தில் 90 வீதம் வாழ்ந்தார்கள். இன்று அது 70 வீதமாகவுள்ளது. சனத்தொகை குறைய முஸ்லிம்களோ, தமிழர்களோ காரணமல்ல. பல்வேறு காரணங்களினால் எமது சமூகத்தவர்களது சனத்தொகை குறைந்துள்ளது. எமது மக்கள் மத்தியில் நிகாய பேதம், குலபேதம் போன்ற வேறுபாடுகள் இருக்கின்றன. நாம் சனத்தொகை பெருக்கத்தில் கட்டுப்பாடுகளைச் செய்கின்றோம்.
 
முஸ்லிம்கள் என்பவர் யார்? முஸ்லிம்கள் ஆண்கள் மட்டுமே இங்கு வந்தார்கள். அவர்கள் எமது பெண்களையே மணமுடித்தார்கள். அவர்களுக்கு எமக்குப் போன்றே இந்த நாட்டின் சகல உரிமைகளும் இருக்கின்றன. ஜெனிவாப் பிரச்சினையின் போது முஸ்லிம் நாடுகளே எமக்கு உதவின். அமெரிக்க எமக்கு உதவவில்லை.
 
இஸ்லாத்தில் நல்ல பண்புகள் உள்ளன. மற்றப் பெண்களைப் பார்ப்பது ஹராம், வட்டி எடுப்பது ஹராம் இவை நல்ல விடயங்கள். ஹராம், ஹலால் என்று பேசிப்பேசி இருக்காது நல்லவற்றை நாம் பின்பற்ற வேண்டும் என்றார்.

க.பொ.த சாதாரணதரம் - முதற்தடவையிலே சாதனை நிலைநாட்டிய பாலிகா

கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றய தினம் வெளியிடப்படது. முதற்தடவையாக பரீட்சைக்குத் தோற்றிய கஹட்டோவிட பாலிகா வித்தியாலய மாணவிகள் அதிசிறந்த பெறுபேற்றைப் பெற்றுள்ளமை பாலிகா வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு நிகழ்வு என்றால் அது மிகையாகாது.  அதிசிறந்த பெறுபேறாக  8A, 1B உம் அதற்கு அடுத்தபடியாக 7A, 2B உம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் வழமைபோல் கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயப் பெறுபேறும் மிகச்சிறந்ததாகவே உள்ளது. கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் 9A சித்தி பெறப்பட்டுள்ளமை பாடசாலையின் முன்னேற்றத்தில் வீழ்ச்சிகள் ஏற்படவில்லை என்பதையே குறிக்கினறது. எமதூரின் இரண்டு பாடசாலைகளையும் முன்னேற்றி சிறந்த மாணவா் சமூகத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவோம்.


நாகல்லையைச் சகோதரி செர்ந்த உம்மு மஸுதா அவர்கள் காலமானார்.

நாகல்லையைச் சேர்ந்த சகோதரி உம்மு மஸுதா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் கஹடோவிடாவைச் செர்ந்த இஸ்மாயில் ஹஜி, பிர்தௌஸ் நானா ஆகியோரின் மாமியாரும் பௌஸியா, பர்வீன் ஆகியொரின் தாயாரும் ஆவா்.   ஜனாஸா நல்லடக்கம் நாளை (06.04.2013) காலை கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத்  ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் இச்சகோதரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!