போதையில் தள்ளாடும் சிறுமக்கம்...தடுத்து நிறுத்த முன்வராத கோழைத்தலைமைகள்...
எமது ஊர் கஹட்டோவிட்டா காலத்துக்குக் காலம் சில விடயங்களில் பிரபல்யமடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய நிகழ்காலத்தில் போதைப்பொருட்களின் பிடியில் தள்ளாடி வருவது எமது ஊரின் நிலைமையை படம்போட்டுக் காட்டுகிறது..
... சித்திரைப் புத்தாண்டு சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் பெருநாளாக இருந்தாலும் அவர்கள் மதுசாரம் என்ற போதையில் அவர்களது பெருநாளை கொண்டாடி மகிழ்வது நாம் அறிந்து வருகின்ற ஒன்றே. அந்த வகையில் இந்த வருடத்துக்கான சித்திரைபெருநாள் கடந்த 14,15 - 04 - 2013 ஆகிய தினங்களில் வந்து சென்றது. இதில் விசேடமென்னவென்றால் எமது ஊரைச்சேர்ந்த முஸ்லிம் பெயர்தாங்கி இளைஞர்களும் அன்னியர்கள் போன்றே போதைவஸ்துக்களோடு எமதூருக்குள்ளேயே கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.
எமது ஊரில் இரவு நேர ஹோட்டல்கள் இப்போது அதிகமாகி உள்ளன. இளைஞர்களை நீண்ட நேரம் இரவில் பாதை ஓரமாக கூத்தடிப்பதற்கு இந்த ஹோட்டல்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. இவர்களின் இந்த மதுசாரப்பாவனை ஊருக்குள் நடமாடுவதற்கு இந்த இரவு நேர ஹோட்டல்களும் ஒரு காரணம். ஹோட்டல் முதலாளிமார் நினைத்தால் நிச்சயம் இந்த இளைஞர்களை இது போன்ற பாவனைகளிலிருந்து தடுத்திருக்கலாம். ஆனால், இலாபத்தை நோக்கமாகக் கொண்ட இவர்கள் தடுத்தால் தமது வியாபாரம் குறையும் என்ற நோக்கத்திற்காக இந்த இளைஞர்களைப் பற்றி பாராமுகமாக இருக்கிறார்கள்.
எமது ஊரில் பிரபல்யமான ஹாஜியார் வீட்டுக்கு செல்லும் பாதையருகே இருக்கும் ஹோட்டல் பக்கத்தில் இருந்து எடுத்த போட்டோவையே இங்கே பிரசுரித்திருக்கிறேன். அந்த ஹோட்டல் அருகே இரவு நேரங்களில் தூள் (கஞ்சா) பரிமாற்றம் நடப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்திருக்கின்றன.
சித்திரைப்புத்தாண்டு இந்த போதைப் பிரியர்களுக்கு சொந்த ஊரிலேயே களம் அமைத்ததென்றால் இன்னும் சில காலங்களில் இதன் பாதிப்பு எங்கு கொண்டுபோகும் என்பதனை இப்போதே சிந்தித்து இதைக் களைய வேண்டியது கடமை அல்லவா?
இஸ்லாமிய இயக்கங்கள், பள்ளிகள், சமூக இயக்கங்கள், அரசியல் சாணக்கியம் மிக்கவர்கள், அரசியல் துறை சார்ந்தவர்கள் நிறைந்து இருக்கும் இந்த ஊர் இன்னும் ஏன் இது போன்ற போதைகளை களைவதில் தாமதம் காட்டுகிறது?
என் உயிரிலும் மேலான இளைஞர்களே உங்கள் பங்கு என்ன?
வெட்கம் கெட்ட சிகரெட்டையே தடுத்து நிறுத்தமுடியாத எமது ஊரின் தலைவர்களால் எப்படி இந்த போதைப்பாவனையை நிறுத்த முடியும்?
இது சிந்தைக்காக அல்ல களம் இறங்குவதற்காக..
Muhammadh
0 comments:
Post a Comment