தவிர்க்கப்படவேண்டிய சம்பவங்கள் - தொடருமா இன்னும்..?
நேற்று (29.04.2013) ஆம் திகதி எமது கஹட்டோவிடாவின் அன்மை ஊரில் ஒரு துர்ப்பாக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளதாக அறியக் கிடைக்கப்பெற்றுள்ளது. பக்கத்து ஊரைச் சோ்ந்த இரு பெண்பிள்ளைகளும், வெளி ஊரைச் சோ்ந்த இரு இளைஞா்களும் ஒரு முச்சக்கரவண்டியில் ஏறி நிட்டம்புவப்பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தனா். இவா்களிடையே ஏடா கூடமான தொடர்பு இருந்து வந்துள்ளமை முச்சக்கர வண்டி ஓட்டுனருக்கு ஆரம்பத்தில் தெரியவில்லை. எனினும் அவா்களின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட ஓட்டுனர் சமயோசிதமாக ஊரவா்கள் சிலருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவ்விடத்திற்கு வரவழைத்து அவா்களிடம் விசாரித்ததில் இவா்களிடையே தவறான தொடர்பு ஊா்ஜிதப்படுத்தப்பட்டதன் பின்னர் அவா்களை பக்கத்து ஊரிற்கு அழைத்துவந்து ஒரு ஜோடியினரிற்கு திருமணம் நடாத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியக் கிடைக்கப்பெற்றுள்ளன.
0 comments:
Post a Comment