கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அமெரிக்கா, பாஸ்டனில் தொடர் குண்டு வெடிப்பு!


அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்புகள் அங்குள்ளவர்களை அதிர வைத்துள்ளன. பாஸ்ட்டன் நகரில் மாரத்தான் போட்டி நடந்து, போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டுகள் வெடித்தன. இதில், 3 பேர் பலியானார்கள் மேலும் 140 பேர்வரை காயமாடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

குண்டுவெடிப்புகள், தீவிரவாதிகளின் கைவரிசை என அமெரிக்க உள்ளக உளவுத்துறை எஃப்.பி.ஐ. கூறியுள்ளது.
பாஸ்ட்டன் நகரில் மாரத்தான் போட்டி முடியும் நேரத்தில் முதலாவது குண்டு வெடித்தது. மக்கள் அதிர்ச்சி அடைந்து சிதறி ஒடினர். அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. தொடர்ந்து 3வது குண்டுவெடிப்பு ஜே.எப்.கென்னடி நூலகம் அருகே வெடித்தது.
இதனை‌யடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளார்.


பாஸ்டனில் நடைபெற்ற மாரத்தான் மிகவும் தொண்மை வாய்ந்தது மற்றும் புகழ்‌பெற்றது. இந்த ஆண்டு சுமார் 27,000 பேர் கலந்துகொண்ட போதே ‌குண்டு வெடிப்பு நடந்தது. மாரத்தான் போட்டி முடியும் இடம் அருகேயுள்ள குபிளாசா நட்சத்திர ஹோட்டல் அருகே குண்டு வெடிப்பு நடந்தது.
வெ‌டிக்க வைக்கப்பட்ட வெடிகுண்டுகள், நடுத்தர அளவிலான, உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை என பாஸ்டன் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 25லிருந்து 30 பேர் வரை ஒரு கால் மற்றும் இரு கால்களை இழந்திருப்பதாக டாக்டர்கள் த‌கவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பை அடுத்து, பாஸ்டன் நகருக்கு வரும் விமானங்கள், வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. பாஸ்டனில் இருந்து கிளம்ப வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
பாஸ்டன் தொடர் குண்டு தாக்குதலால் நியூயார்க், மற்றும் வாஷிங்டனில் பாதுகாப்பு கடுமையாக பலப்படுத்தப்பட்டுள்ளது. மற்றைய நகரங்களிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அமெரிக்க ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.


இந்த வெடிகுண்டு தொடர்பான 50 க்கும் மேற்பட்ட போட்டோக்களை கிழகண்ட லிங்கை க்ளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்
http://abcnews.go.com/US/slideshow/boston-marathon-explosions-finish-line-18960444
 

0 comments:

Post a Comment