கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சாதாரண தரத்திற்கு முதன் முறை முகம்கொடுத்த கஹடோவிட பாலிகா! ஈன்றது சாதனை 8A 1B.

 
2012 டிசம்பரில் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் கஹடோவிட முஸ்லிம் பாலிகா பெறுமதியான பெறுபேற்றினை பெற்றிருப்பதாக அக்கல்லூரியின் அதிபா் திருமதி சானாஸ் நவாஸ் தெரிவித்துள்ளார். அவா் மேலும் கூறுகையில் தமது பாடசாலையில் முதல் முறையாக 14 மாணவிகள் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் இதில் 10போ் உயர்தரத்திற்கு சித்திபெற்றிருப்பதாகவும் ஏனைய நான்கு மாணவிகள் மூன்று நான்கு பாடங்களில் சித்திபெற்றிருப்பதாகவும் தெரிவித்ததுடன் இப்பெறுபேறானது முதற் தடவையாக பாடசாலைக்கு பெருமை சோ்த்ததுடன் எமது கிராமத்தின் பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு எனவும் குறிப்பிட்டார். இப்பெறுபேற்றினை பெற்றுத் தந்தமைக்காக முதலில் அல்லாஹ்விற்கும் அடுத்தபடியாக இம்மாணவா்களின் கல்வி நடவடிக்கைகளில் ஆா்வமுடன் செயற்பட்ட ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றார்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆா்வமுடன் கற்ற மாணவிகளிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
இப்பாடசாலையானது கம்பஹா மாவட்டத்திலுள்ள தமிழ் மொழிப்பிரிவில் உள்ள ஒரேயொரு முஸ்லிம் பெண்பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதன் வரலாறு மிக நீண்டு சென்றாலும் சுருக்கமாக சில விடயங்களை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தம் என நினைக்கின்றேன். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட அக்கால கட்டத்தில் ஆரம்ப வகுப்புப்படித்த மாணவிகள் S.S.C என்ற (தற்போது O/L) பரீட்சையை எழுதியிருந்தாலும் கூட காலப்போக்கில் அல்பத்ரியா மகாவித்தியாலயம் என்ற கலவன் பாடசாலை ஆரம்பமானபோது தனியாகப் பயின்றுவந்த பெண்கள் தரம் 6வரை கற்றதன்பின்னர் தரம் 7இலிருந்து கலவன் பாடசாலையில் சோ்ந்து படிக்கவேண்டிய ஒரு நிலைமைக்குத் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களினால் கடந்த 6 வருடங்களிற்கு முன்னா் சில பெற்றோர்கள் பெண்கள் ஆண்களின் கலப்பின்றித் தனியாகக் கல்வியைத் தொடரவேண்டும் என்று உணர்ந்து அதற்காக மேற்கொண்ட முயற்சிகளின் பலனே இந்த மாணவிகள் சாதாரண தரம்வரை இதே மகளிர் கல்லூரியில் கற்று சிறந்த பெறுபேற்றினையும் பெற்றுள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.
இஸ்லாமிய வரையரைகளைப் பேணி பெண்களின் ஒழுக்கத்தை மையமாக வைத்து காலத்தின் தேவையை உணர்ந்து செயற்பட்ட ஒருசில பெற்றார்கள் அப்போதைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திற்கு பெரும் சக்தியாக இருந்தது என்றால் அது மிகையாகாது. பாடசாலைக்கு எவ்விதப் பௌதீக வளங்களும் இல்லாத சந்தா்ப்பத்தில் அல்லாஹ்வின் உதவியை மாத்திரம் நம்பிய 14 பெற்றார்கள் 6 ஆம் தரத்தில் தமது பிள்ளைகளை இதேபாடசாலையில் கல்வியைத் தொடரத் துணிந்துவிட்டமை இத்தருணத்தில் ஈன்று குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். மனிதா்கள் என்ற வகையில் போட்டி, பொறாமையுடன் பல எதிர்ப்புக்களையும் சம்பாதித்துக்கொண்டு துணிவுடன் செயல்பட ஆரம்பித்த பாலிகாவுக்கு உருதுணையாய் நின்ற அன்றைய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தையும் நலன்விரும்பிகளையும் இத்தருணத்தில் மறந்திடவே முடியாது. அந்தவகையில் கட்டிட வசதிகளுடன் ஆசிரியர்களையும் பெற்றுத்தருவதற்காக ஓடி உழைத்தவா்களான மெளலவி சாஹுல் ஹமீட், மௌலவி அப்துல் முஜீப், மௌலவி பைரூஸ், அல்ஹாஜ் பயாஸ் ஆகியோரை இவ்விடத்தில் நினைவு கூர்வது பிழையாகாது. இவா்களின் செயல்களுடன் அல்லஹ்விடம் ஏந்திய கரங்களும் இவா்களிற்கு இவ்வெற்றியைக் கொண்டு தந்தது. சுமார் 6 வருடங்களிற்கு முன் அதிகமான வளப்பற்றாக்குறைகளுடன் காணப்பட்ட பாலிகாவில் 6 வருட முடிவில் சிறந்த க.பொ.த சாதாரண தரப்பெறுபேற்றுடன் தனியான ஒரு மகளிர் பாடசாலையாக முன்னரைவிட வளங்கள் காணப்படும் ஒரு நிலைமையை உருவாக்கிய அல்லாஹ்வுக்கு நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். மேலும் பாடசாலையின் எதிர்கால முன்னேற்றத்திற்காக உழைக்கும் அதிபா் சானாஸ் நவாஸ் அவா்களையும் நாம் இத்தருணத்தில் பாராட்டுகின்றோம்.
மேலும் பாடசாலைக்கு தொழுகை அறையையும் அதேவளவுக்குள் பிரத்தியேகமாக அமைத்துத் தர முழு மூச்சாக ஈடுபட்ட மௌலவி அப்துல் முஜீப் அவா்களை நாம் இத்தருணத்தில் நன்றியுடன் நினைவு கூறுகின்றோம். 2012ஆம் ஆண்டுப் பரீட்சை எழுதும்வரை மாணவிகளின் தேவைகளைக் கருத்திற்கொண்டு கருத்தரங்கு மற்றும் பயிற்சிப்பட்டரைகளை ஏற்பாடு செய்த அதிபா், ஆசிரியா்கள், பெற்றார்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரினதும் முயற்சிக்குக் கிடைத்த சிறந்த பெறுபேறே இன்றைய பாலிகாவின் இப்பெறுபேறாகும். எதிர்வரும் காலங்களில் க.பொ.த உயா்தர வகுப்புக்களையும் ஆரம்பித்து சிறந்த ஆளுமைகளைக் கொண்ட மாணவியர் சமுதாயத்தை உருவாக்குவதற்காக இவா்கள் இன்னும் பாடுபடுவார்கள் என்ற நம்பிக்கையை இப்பெறுபேறுகள் நம்மத்தியில் ஏற்படுத்தியுள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் நமது செயல்களைப் பொருந்திக் கொள்வானாக!
ஈமைல் மூலம் எம்மைத் தொடர்புகொண்டு இவ்வாக்த்தை எமக்கு அனுப்பிய சகோதரிக்கு ஜஸாகுமுல்லாஹு கைர்.

4 comments:

அப்துல் said...

மாஷா அல்லாஹ் இந்த முயற்சிக்கு உரிதுனையாக இருந்து உழைத்த அனைவருக்கும் அல்லாஹ் ரஹ்மத்செய்வானாக. இந்த பெறுபேருகளைவிட இருபாலாரையும் தனித்தனியாக பிரித்தது மிகமுக்கியமான ஒரு செயற்பாடே, இதன்மூலம் ஒரலவாவது இன்றைய சீரழிவுகளில் இருந்து எமது பிள்ளைகளைக் காப்பாற்றலாம்.

Anonymous said...

இந்த பாடசாலையின் வரலாறை எழுதும் போது ஒருசிலவிடயங்களை சகோதரி தெரிந்தும் தெரியாதமாதிரி மரைத்திருக்கிறார். ஏனோ இரண்டுவரியாவது எழுதியிருக்கலாமே உங்களுடைய பாடசாலை பெண்கள் மாத்திரம்தான் இருக்கவேண்டும் என்பதற்காக பலபெற்றோர்கள் முயற்சிக்கும் போது அதற்கு எதிராக எப்படியெல்லாம் முட்டுக்கட்டைபோட நினைத்தார்கள். பணத்தாலும், அரசியலினாலும், இன்னும் பல .........

Anonymous said...

பாக்குறதுக்கு இது நல்ல பாடசாலைதான். ஆனா இந்த ஊட்டுக்குள்ள உள்ள பிரச்சினை பெரிய பிரச்சினை! எப்போ வெடித்துச் சிதறும் என்று யாருக்கும் சொல்ல முடியாது. எப்படியும் இஸ்லாம் சொன்னது பிழையாகாது. பெண்களுக்குத் ............... கொடுக்க வேண்டாம் என்று சும்மாவா இஸ்லாத்தில் சொல்லப்பட்டுள்ளது!

BlogEditor said...

நாகரீகமான முறையில் விமர்சனங்களை பகிர்ந்துகொள்ளவும். அத்தோடு அனாவசிய விடயங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவேண்டாம் அவற்றை நாம் பிரசுரிக்கமாட்டோம் என்பதை அறியத்தருகின்றோம்.

Post a Comment