கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கிளின் கருத்துக் கணிப்பீடு

எமதூரிலுள்ள பெண்களின் கல்வி, மற்றும் திறன் விருத்தி என்பவற்றை நோக்காகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கஹட்டோவிட முஸ்லிம் லேடிஸ் ஸ்டடி ஸேக்கில் என்ற அமைப்பு தனது ஐந்தாவது வயதில் பல முன்னேற்ற ப்படிகளைக் கடந்து கொண்டுள்ளது. தான் கடந்த வந்த பாதையை திரும்பிப் பார்த்து மீளாய்வு செய்து தனது எதிர்கால பயணத்தைத் திட்டமிடும் நோக்கில் ஒரு கலந்துரையாடலை நடாத்தப் போவதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிகழ்வில் இந்நிலையத்தில் பயிற்சி பெற்ற பலரையும் ஒன்று கூட்டி எதிர்கால நடவடிக்கைகள் சம்பந்தமாக ஆலோசனைகளையும் பெறவிருப்பதாக அறியக் கிடைத்துள்ளது.

பெண்கள் முன்னேற்றத்தில் அக்கறையுள்ள இந்நிலையம் இன்னும் சிறந்த வழிகாட்டல்களை வழங்கி சிறப்பாக மிளிர வேண்டும் என நாம் பிராhத்திக்கின்றோம்!

பிரீமியர் லீக் இறுதிப்போட்டிக்கு திஹாரிய யூத் தகுதி.

திஹாரிய யூத் கலந்துகொண்ட பிரீமியர் லீக் உதைபந்தாட்ட அரையிறுதிப் போட்டி இன்று மன்னார் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இப்போட்டியில் திஹாரிய யூத் விளையாட்டுக்கழகம் 4 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் மன்னார் St.Luicios விளையட்டுக்கழகத்தை வெற்றிகொண்டது.
இன்றைய போட்டி ஆரம்பித்ததிலிருந்து மிகவும் விறு விறுப்பாக நடைபெற்றது. குறித்த கால எல்லை முடிவடையும் தருவாயில் இரு அணிகளும் 1 கோல்கள் வீதம் பெற்றிருந்ததால் . வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சுற்று இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட திஹாரிய யூத் தனக்கு வழங்கப்பட்ட பெனால்டி சுற்றில் 3 கோல்களை பெற்றுக்கொண்டது. மன்னார் St.Luicios அணிக்கு ஒரு கோல் மாத்திரமே பெறமுடிந்தது.

இன்றைய போட்டியில் வெற்றியீற்றியதையடுத்து திஹாரிய யூத் பிரீமியர் லீக் உதைபந்தாட்ட இறுதிப்போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெற்றுக்கொண்டது.

இஸ்லாத்தை தழுவிய ஒரு பெண் வைத்தியரின் வாக்குமூலம்.




ஒரு ஹிந்து பிராமணப் பெண்ணாக, ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் மதுமிதா மிஷ்ரா, இன்று தனது முழுக் குடும்பத்தையும் – இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரே ஒரு காரணத்திற்காக – பகைத்துக் கொண்டுள்ளார். அந்த ஒரு காரணத்திற்காகவே உறவுகளை விடுத்து ஒதுங்கி, தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கிறார்.


ஆம், நியூ டெல்லியின் லோக் நாயக் ஜெய் ப்ரகாஷ் மருத்துமனையில் சீனியர் டாக்டராகப் பணி புரிந்து வரும் டாக்டர் மதுமிதா, தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து இஸ்லாத்தைத் தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளார், அல்ஹம்து லில்லாஹ்!

நேரம் கிடைக்கும் போதெல்லாம் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்கள் வாசிப்பதும் இணையத்தில் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதும் டாக்டர் மதுமிதாவின் வழக்கம். பணியின் காரணமாக, தன்னுடைய சகோதரருடன் நொய்டா நகரில் இவரும் மருத்துவரான கணவர் கொல்கத்தாவிலும் சிறிது காலம் பிரிந்து வசிக்க வேண்டிய சூழலில் ஒரு நாள் மிக யதார்த்தமாக இணையத் தளங்களை உலா வந்து கொண்டிருந்த டாக்டர் மதுமிதாவின் கண்ணில் ஆங்கில மொழியாக்கக் குர்ஆன் பிரதியொன்று எதேச்சையாகப்பட்டது.

இதைப் பற்றி மதுமிதா கூறுகையில் “அதிக மதக் கட்டுப்பாடுகளைக் கொண்ட சூழலில் நான் வளரவில்லை. ஆனாலும் எதேச்சையாகக் குர்ஆன் ஆங்கில மொழியாக்கத்தை வாசித்த எனக்கு புதியதொரு விஷயமான இஸ்லாத்தைப் பற்றி இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. என்னுடைய MD பட்டப்படிப்பினை முடித்த பிறகு எனக்குக் கிடைத்த நேரத்திலெல்லாம் இணைய தளத்தில் இஸ்லாத்தைப் பற்றி தேட ஆரம்பித்தேன்” என்றார்.

ஆர்வமிகுதியில் இஸ்லாம் தொடர்பான நிறைய புத்தகங்களையும் இணைய தளங்களையும் தொடர்ந்து வாசித்து வந்த மதுமிதா, தன் மனதில் இஸ்லாம் பற்றிய ஓர் ஐயத்தை ஆர்குட் இணைய தளத்தில் “இஸ்லாம் & முஸ்லிம்” என்ற தலைப்புள்ள கலந்துரையாடலில் சில கேள்விகளை முன் வைத்தார். அதற்கு ஃபெரோஸ் ஹுசைன் என்பவர் தொடர்ந்து பதில்கள் அளித்து வந்தாலும் அவற்றில் மதுமிதாவுக்கு முழு திருப்தி ஏற்படவில்லை.

திருப்தி அடையாத சூழலிலேயே அடுத்த கேள்வியான “என்னை நாடி வரும் நோயாளிகளுக்கு திருப்தியளிக்கும்படி நான் மருத்துவம் செய்வது அல்லாஹ்விற்கு சேவகம் செய்வதாகுமா?” என்பதை முன் வைத்தார்.

இக்கேள்விக்கு பெங்களூருவில் IBM நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரியும் முகம் தெரியாத முஹம்மத் யாஸீன் என்பவர் முழுமையான விளக்கங்களை எழுதினார்.

மிகவும் திருப்தியைப் பெற்றுத் தந்த அந்த பதிலைத் தொடர்ந்து, தன் மனதில் இஸ்லாம் பற்றி எஞ்சியிருந்த கேள்விகள் அடுக்கடுக்காய் எழ, அவற்றைத் தொடர்ந்து எழுப்பினார் மதுமிதா. இறைமறை/ நபிமொழியின் வெளிச்சத்தில் அவற்றிற்குத் துல்லியமான விடைகள் கிடைத்து விட்ட திருப்தியில் மதுமிதா மனதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. மத ரீதியிலான தடைகள், பல தயக்கங்கள் ஆகியற்றை உதறித் தள்ளி விட்டு, பதில் அளித்த முஹம்மத் யாஸீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி தமது மகிழ்ச்சியையும் நன்றிகளையும் வெளிப் படுத்திக் கொண்டார் மதுமிதா.

“மரணம் என்பது எப்போது வேண்டுமானாலும் நேர்ந்து விடும். இறப்பது எப்போது என்று தெரியாத சூழலில் உடனடியாகச் சத்திய மார்க்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்” என்ற முஹம்மத் யாஸீனின் வார்த்தைகள் சத்தியத்தைத் தேடி அலைந்த டாக்டர். மதுமிதாவின் மனதை அலைகழித்தது.

குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது… சத்தியமே வென்றது” என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

குழப்பங்கள் தெளிய சிறிது தனிமையை விரும்பிய மதுமிதா சில மாதங்களில் தமது வீட்டிலிருந்து வெளியேறி கரோல்பாக் பகுதியில் உள்ள ராமானுஜன் விருந்தினர் மாளிகைக்குக் குடியேறினார். விருந்தினர் மாளிகையில் இருந்து ஆந்திரப் பிரதேசத்திலுள்ள ஒரு மருத்துவக் கல்லூரிக்கு பணி நிமித்தமாக அடிக்கடி வெகு தூரம் பயணிக்க நேர்ந்தது. பயணங்களில் நிறைய வாசிப்புகளும் சத்தியத்தைத் தேடிய சிந்தனைகளுமாகக் கழிந்தன.

மனம் ஓர் உண்மையைச் சுட்டெரித்ததன் காரணமாக, கடந்த செப்டம்பர் 3, 2007 அன்று திடீரென்று ராமானுஜன் விருந்தினர் மாளிகையை விட்டு வெளியேறினார். பெங்களூருவிற்கு விமானம் ஏறினார். ஷிஃபா ஹெல்த் ஃபவுண்டேஷன் எனும் அமைப்பின் கீழ் இயங்கும் ‘ஜம்மியத்துல் முஹ்ஸினாத்’ பெண்கள் கல்விக்கூடத்தின் படியேறி, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் (ஆனாலும் பெயரில் மாற்றம் உள்ளிட்ட பதிவுகளைச் செய்யவில்லை).

நான்கு நாட்களுக்கு பின்னர் இதனையறிந்த மதுமிதாவின் கணவரும் கண் மருத்துவருமான டாக்டர் சுபிஜே ஸின்ஹா, அருகிலுள்ள காவல் நிலையத்தில், “தன் மனைவியை பெங்களூருவைச் சேர்ந்த சில இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கடத்திச் சென்று விட்டதாக”ப் புகார் செய்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு உடனடியாக பெங்களூருவைச் சேர்ந்த 32 வயதான முஹம்மத் யாஸீன் மற்றும் அவர் நண்பரான 31 வயதுடைய ஷாஜி யூஸுப் ஆகிய இரு மென்பொருள் பொறியாளர்களைக் கைது செய்தது. இவர்கள் இருவரும் டாக்டர் மதுமிதாவைக் கடத்தியதாகவும் பணயத் தொகை கேட்டு டாக்டர் மதுமிதா குடும்பத்தினரைத் தொடர்பு கொண்டதாகவும் அவ்விருவர் மீதும் குற்றம் சுமத்தப் பட்டது.

பெங்களூருவில் இருந்த டாக்டர் மதுமிதாவை மீட்க, பெண்கள் கல்விக்கூடத்துக்குள் திடீர் சோதனை என்ற பெயரில் புகுந்த காவல் துறையினர், மதுமிதாவின் கூக்குரலுக்குச் செவி சாய்க்காமல் பலவந்தமாக அவரை டெல்லிக்கு அழைத்து வந்தனர்.

மேற்கு பெனகலில் உள்ள துர்காபூர் வீட்டில் பல மாதங்கள் மதுமிதா சிறை வைக்கப்பட்டிருந்தார். ஆனாலும் அவரது இஸ்லாத்தைப் பற்றிய தேடல்களுக்கும் சிந்தனைகளுக்கும் சிறையிட யாராலும் முடியவில்லை. கடந்த வருடம் 2008 மார்ச் மாதம், தயக்கத் தளைகளை அறுத்தெறிந்து விட்டு, முழுமையாக இஸ்லாத்தைத் தழுவினார். மதுமிதா மிஷ்ரா என்ற தமது பெயரை மாற்றி சந்தோஷமாக ஜைனப் எனத் தேர்வு செய்து, இயற்கை மார்க்கத்திற்குத் திரும்பினார்.

“வெயிலில் இருந்து பாதுகாக்க சன் ஸ்க்ரீன் அணிந்து சருமத்தைப் பாதுகாப்பது போன்று ஹிஜாபில் எனது பெண்மைக்கு முழுப் பாதுகாப்பு உள்ளதென்று கருதுகிறேன். இஸ்லாத்தை ஏற்றதன் மூலம் என் குடும்பத்தினரை இழந்து விட்டேன். ஆனால் நான் நிர்க்கதியாய் இல்லை. நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளன. இஸ்லாத்தை அறியும் முயற்சியில் என்னுடைய முழு நேரத்தைச் செலவு செய்து வருகிறேன்” என்று உறுதியுடன் பேசுகிறார் டாக்டர் மதுமிதா என்ற ஜைனப்.

ஜம்மியத்துல் முஹ்ஸினாத் பெண்கள் கல்விக்கூடத்திலிருந்து தன்னைப் பலவந்தமாக அழைத்து வந்த பின்னர், “முஹம்மது யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் குற்றவாளிகள்” என்ற தொனியில் ஒரு புகார் எழுதித் தருமாறு டெல்லி காவல்துறையினர் தம்மைத் தொடர்ந்து வற்புறுத்தியதாகக் கூறுகிறார். தன்னை அவ்விருவரும் கடத்தியதாகவும் பிணைத் தொகையாகப் பத்து இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் வளைகுடா நாட்டில் பெரிய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டியதாகவும் காவல்துறை போலியாகத் தயாரித்திருந்த அந்தப் புகாரில் அபாண்டமாக எழுதப் பட்டிருந்தது என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது முழுக்க முழுக்க தமது விருப்பத்தின் பெயரிலேயே என்றும் தம்மை எவரும் கட்டாயப் படுத்திடவில்லை என்றும் தெள்ளத் தெளிவாகவும் உறுதியாகவும் CrPC செக்க்ஷன் 164 இன்படி எழுதிக் கையொப்பமிட்டுள்ளார் டாக்டர் ஜைனப். விசாரணையில் வெட்ட வெளிச்சமான பொய்களுக்குப் பின்பு, நீதிமன்ற உத்தரவின்படி வேறு வழியின்றி அப்பாவிகளான பொறியாளர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளனர் டெல்லி காவல் துறையினர்.

“முஹம்மத் யாஸீனும் ஷாஜி யூஸுஃபும் கடந்த வாரம் விடுதலை செய்யப் பட்டது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! குர்ஆனின் வரிகளான சத்தியம் வெல்லும் என்பது மீண்டும் நிருபணமாகியுள்ளது. அதிக காலம் எடுத்துவிட்ட போதிலும் இறுதியில் அசத்தியம் தோற்றது… சத்தியமே வென்றது” என்கிறார் டாக்டர் ஜைனப் (மதுமிதா மிஷ்ரா).

இஸ்லாத்தைத் தாம் விருப்பப்பட்டு ஏற்ற ஒரே காரணத்துக்காக டெல்லி காவல்துறையின் பிரத்யேக சிறைச்சாலைக்கும் விசாரணை அறைகளுக்கும் நீதி மன்றங்களுக்கும், தான் அலைக்கழிக்கப் பட்டதை நினைவு கூர்கிறார் மதுமிதா.

கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்திய கடந்த இரு வருடங்களைத் தாம் மறக்க விரும்புவதாகக் கூறுகிறார் டாக்டர் ஜைனப். “மன்னிப்பதை இஸ்லாம் போதிக்கிறது. அபாண்ட பழிகளைச் சுமத்தி இரு அப்பாவிகளின் குடும்பத்தினரை அவதிக்குள்ளாக்கிய என்னுடைய மாஜி கணவரையும் அவரோடு கைகோத்துக் கொண்டு தவறிழைத்த காவல் துறையினரையும் நான் ஏற்கனவே மன்னித்து விட்டேன்” என்றார் டாக்டர் ஜைனப்.

யாழ் முஸ்லிம் இணையம்.

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரர் அப்துல் பாரி அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் கொச்சிவத்தையைச் சேர்ந்த பாதிமா நிலூபா அவர்களின் கணவரும் மற்றும் முஹம்மட் இன்ஸாப், பாதிமா நாதியா, பாதிமா இல்மா ஆகியோரின் தந்தையும் ஆவார்.  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் 09-12- 2011 மாலை 05.30 மணியளவில் முஹியத்தீன் முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசல்  மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.


அல்லாஹ் இவரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!

சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயர் மாற்றப்படுவதற்கு எதிராக ஆர்ப்பாட்டம்


மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்திலுள்ள சதாம் ஹூஸைன் கிராமத்தை ஈராக் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகளுக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து சதாம் ஹூஸைன் கிராம மக்கள் வீதியிலிறங்கி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
சதாம் ஹூஸைன் கிராமத்திலுள்ள அல் மஜ்ஜிதுல் பக்தாத் ஜூம்மா பள்ளிவாயலில் வெள்ளிக்கிழமை நண்பகல் ஜூம்மா தொழுகையின் பின்பு பள்ளி வாயல் முன்பு கூடிய நூற்றுக் கணக்கான முஸ்லிம்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
'மாற்றாதே மாற்றாதே எமது கிரமத்தின் பெயரை மாற்றாதே','எங்கள்கிராமம் சதாம் ஹூஸைன் கிராமம்' 'சதாம் ஹூஸைன் கிராமத்தின் பெயரைமாற்றாதே' உட்பட பல்வேறு வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிய வண்ணம் பள்ளிவாயல் முன்றலிலிருந்து பிரதான சந்திவரை கவன ஈர்ப்புப் பேரணியொன்றையும் நடத்தினர்.

இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் 'அல்லாஹூ அஹ்பர்'கோசத்துடன் மர்ஹூம் சதாம் ஹூஸைனை நினைவு கூர்ந்தும் கோசங்களை எழுப்பினர். சதாம் ஹூஸைன் கிராம இஸ்லாமியசமூக நல அபிவிருத்திச் சங்கத்தினரால் இந்த ஆர்ப்பாட்டமும் பேரணியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
பேரணி முடிவில் தமது கிராமத்தின் பெயரை சதாம் ஹூஸைன் கிராமம் என பதிவு செய்யவேண்டுமென்றும் எக்காரணம் கொண்டும் வேறு பெயரைத் தமது கிராமத்திற்குச் சூட்டக்கூடாது என்று கோரியும் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைப்பதற்கான மகஜரில் கிராம மக்களின் கையொப்பங்களும் திரட்டப்பட்டன.




தூய இஸ்லாத்தை சுமக்கவந்த எமது மௌலவிமார்களின் நிலை?


சாயிபாபாவின் ஜனன தினம் சாயி பக்தர்களால் வெகு சிறப்பாகக் கொழும்பு சத்ய சாயிபாபா மத்திய நிலையத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியை நமது இஸ்லாமிய அறிஞர் மௌலவி மொஹமட் அரபாத் எவ்வாறு சிறப்பித்தார் என்பதை நி்ங்களும் பார்க்கலாமே!!!!!!!!!!!

தூய இஸ்லாத்தை படித்த இந்த மௌலவிமார்களின் நிலைமை இவ்வாரென்றால் இவர்களிடம் மார்க்கத்தை படிக்கச்செல்கின்றவர்களின நிலைமை எவ்வாறு இருக்கும். (நஊதுபில்லாஹ்).

2012 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் சாரம்சம்


* நடமாடும் மொழி ஆய்வுக்கூடங்களை உருவாக்க 100 மில்லியன் ரூபா மேலதிக ஒதுக்கீடு

* பாதுகாப்புப் படையினரின் ஒவ்வொரு பெற்றோருக்கும் 750 ரூபா கொடுப்பனவு

* 70 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கான மாதாந்த கொடுப்பனவு 700 ரூபாவால் அதிகரிப்பு

* சமுர்தி கொடுப்பனவு 210 ரூபா முதல் 615 ரூபா வரை பெறுவோருக்கு 750 ஆக அதிகரிப்பு – 900 ரூபா பெறுவோருக்கு 1200 ஆக அதிகரிப்பு

* ஆரம்ப பாடசாலைகள், தர்ம பாடசாலைகளுக்கு உதவுவதற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* புராதன சமய தலங்களைச் சூழ்ந்து காணப்படும் பாடசாலைகள், மகப்பேற்று நிலையங்கள், குடிநீர் பாதைகளுக்கு 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* 25 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியான பங்களிப்பினை வழங்கும் சிரேஷ்ட கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் மோட்டார் கார் கொள்வனவுக்கு வட்டியில்லாக் கடன்

* குறைந்த வருமானம் பெறுவோருக்கு சட்ட ரீதியில் உதவ 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* புதிய கலை கேந்திர நிலையத்தை உருவாக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* ஆராய்ச்சி, விதை அபிவிருத்தி மற்றும் விரிவாக்கலை உருவாக்க 200 மில்லியன் ரூபா மூலதனம்

* மரக்கன்று மற்றும் சமயல் எண்ணெய் மீதான செஸ் வரி அதிகரிப்பு

* தெங்கு,பனை மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் மீதான வரி நீக்கம்

* கால் நடை உற்பத்திக்கு தேவையான உபகரணங்கள் மீதான செஸ் வரி விலக்களிப்பு

* திவி நெகும ஊக்குவிக்கக் கடன் திட்டம்

* கரையோரப் பாதுகாப்புக்கு 500 மில்லியன் ஒதுக்கீடு

* கிராம நகரங்களை இணைக்கும் பாதை வலையமைப்பினை நிர்மாணிப்பதற்கு 170 மில்லியன் ரூபா 5 வருடங்களில் செலவிட எதிர்பார்ப்பு

* 48 சதவீத குடிநீரைச் சேமிப்பதோடு 680 மில்லியன் ரூபா முதலீடு

* 5 மில்லியன் குடும்பங்கள் மின்சாரத்தை நுகர்வதற்கு 34 ஆயிரத்து 187 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

* பஸ்,லொறி டயர்கள் மீதான இறக்குமதித் தீர்வை 50 சதவீதம் குறைப்பு _

நழுவிச் செல்லும் அரசாங்க உதவிகள்.



எமது பிரதேசத்தில் உள்ள அதிகமான பாடசாலைகள் அரசாங்க உதவிகளையும், பொது நிறுவனங்களின் உதவிகளையும் எதிர்பார்த்து இருக்கின்ற இந்த வேலையில். அல்பத்ரியா ம.வி மற்றும் பாலிகா மகளிர் பாடசாலைக்கு மலசலகூ கட்டமைப்பை கட்டுவதற்காக அரசாங்கத்தினால் பண உதவி வழங்கப்பட்டிருந்தது.

இவ்வாறுகிடைக்கப் பெற்ற உதவியின் மூலமாக அல் பத்ரியாவில் கட்டுமாணப் பணிகள் தொடர்வதாகவும், பாலிக்காவுக்காக அனுப்பிவைக்கப்பட்ட ரூபா 3 இலட்சம் பெறுமதியான பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் கதைப்பதை அவதானிக்க முடிகிறது.

ஏன் எதற்காக இந்த அரசாங்க உதவிகள் பாலிகாவினால் நிராகரிக்கப்பட்டன என்பதுதான் இவர்களது கேள்வி?!

இதன் உண்மை நிலவரம் என்ன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் பெற்றோர்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய கடமை பாடசாலை அதிபர், நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்டவா்களின் கடமை என்பதை யாரும் மறுக்க முடியாது.

கஹட்டோவிடாவும் இவ்வாறு மாறுமா...?

இறுதி ஹஜ்ஜில் நபியவர்கள் மூலம் அல்லாஹுத்தஆலா புனித தீனுள் இஸ்லாத்தை நிறைவு செய்து அதனை ஒரு வாழ்க்கைத் திட்டமாக ஆக்கினான். நபியவர்களின் மறைவிற்குப் பிறகு இந்த மார்க்கத்தில் பல்வேறு பித்அத்துக்கள் புகுந்து இஸ்லாத்தின் தூய தண்மையை மாற்றி விட்டது என்பதை நாம் வரலாறுகள் மூலம் அறிகிறோம். அந்த வகையில் புகுந்த ஒரு பித்அத்துதான் தரீகாக்களின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கப்று வணக்கமாகும். மரணித்த நல்லவர்களின் கப்றுகளை கட்டி அதனைப் புனிதமாகக் கருதி வணக்க வழிபாடுகளை செய்யும் ஒரு சமூகம் எமதூரிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த கப்று வணக்கங்கள் இறுதியில் எந்த இடத்தை அடையும் என்பதை கீழுள்ள விடியோவைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம். இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் இந்த இநத் பித்அத்தை எதிர்ப்பது ஒவ்வொரு மார்க்க உணர்வுள்ள மனிதனினதும் கடமையாகும். வருமுன் காப்போம் என்ற வகையில் நாம் இதனைப் பப்ளிஷ் பண்ணியுள்ளோம். எனவே எமதூரின் தரீக்கா சகோதரர்களே சிந்தியுங்கள்.

EID MUBARAK

THAKABBALALLAHU MINNA WA MINKUM

கஹட்டோவிட மஸ்ஜித் ஜாமிஉத் தௌஹீதினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை காலை 7.25மணியளவில் கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப்பெருநாள் தொழுகையில்  இமாம் அஷ்ஷெக் முஜாஹித்  அவர்கள் பெருநாள் குத்பாவை நிகழ்த்தினார். பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.














மர்வானையும் தட்டிக் கேட்ட ஸஈத் அல் குதிரிகள் எமது ஊரிலும் தேவை

ஆட்சியாளர் மர்வான் ஒரு முறை பெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகைக்கு முன்னதாக பெருநாள் குத்பாவை ஒத முற்பட்டார். அவ்வேளை அச்சபையில் இருந்த ஸஈத் அல் குத்ரி (ரழி) அவர்கள் மர்வானின் ஆடையைப் பிடித்திழுத்து நீ ஸுன்னாவை மாற்ற முற்படுகிறீரா என்று கேட்டு மர்வானின் இச்செய்கையைக் கண்டித்தார். மார்க்கத்தில் பித்அத் ஒன்று அரங்கேறுவதை உடனே தட்டிக் கேட்டார். பெருநாள் குத்பாவும் தொகையும் நபியவர்கள் எவ்வாறு காட்டித் தந்தார்களோ அவ்வாறே அமைதல் வேண்டும்.

மர்வான் இந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்த முயன்றது போல் கடந்த ஞாயிறன்று(06.11.2011) எமது ஊரில் பெருநாள் தொழுத ஒரு குழுவினர் ரஸுலுல்லாவின் நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு புதிய பித்அத்தை அறிமுகப்படுத்தினர். பெருநாள் தொழுகையும் அதன்பின்னரான உரையையும் நபியவர்கள் மைதானத்திலேயே நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள் என்பது சிறுபிள்ளையும் அறிந்துள்ள விடயமாகும். எனினும் இக்குழுவினரோ பெருநாள் தொழுகையை ஒரு ஊரில் தொழுதுவிட்டு அடுத்த ஊரிலுள்ள அக்குழுவினரின் பள்ளி வாசலில் ஜும்ஆவை நடாத்தினர். இந்த நடைமுறைக்கு நபியவர்களின் முன்மாதிரியும் அங்கீகாரமும் உள்ளதா? நபியவர்கள் எந்த இடத்தில் பெருநாள் தொழுதார்களோ அதே இடத்திலேயே குதபா உரையையும் நிகழ்த்தினார்கள்.  நபியவர்கள் காட்டித் தராத இந்நடைமுறை மார்க்கமாகுமா?  மனதுக்கு வந்தவிதமாக மார்க்க விடயங்களை நிறைவேற்றுவதால் இன்று நபியவாகள் காட்டித்தந்நத நடைமுறைக்கும் நமது நடைமுறைக்கும் பாரிய வித்தியாசங்கள் உள்ளன.  தீனென்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியவர்களின் வழிகாட்டலுமேயாகும். எனவே எமது எந்த அமலாயினும் அது நபியவர்களின் வழிகாட்டலின் பிரகாரமே அமைத்துக் கொள்ளல் வேண்டும். எமது எதிர்கால  சந்ததிகள் மார்க்கத்தை அறிந்து பின்பற்றுபவர்களாக மிளிர அல்லாஹ் அருள் புரிவானாக!

கஹட்டோவிட அல் பத்ரியாவில் மௌலவி நவ்பர்; கபூரியின் உரை




கடந்த வாரம் கஹட்டோவிட அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தில் மௌலவி எஸ்.எச்.எம் நவ்பர் கபூரி அவர்களின் ஒரு விசேட உரை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வுரையில் மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியத்தையும் அதன் மாhக்க ரீதியான நிலைப்பாட்டையும் குறிப்பிட்டுக் காட்டியதுடன் ஆசிரியர்கள் எவ்வாறு கற்றல் செயற்பாட்டில் ஈடுபடல் வேண்டும் என்பதையும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் விளக்கிக் கூறினார். மேலும் மாணவர்களின் கல்வியில் பெற்றர்களிற்கு இருக்க வேண்டிய பங்களிப்பு என்ன என்பதையும் சுட்டிக் காட்டினார். இஸ்லாமிய நெறிமுறைகளில் இருந்து தூரமாகிச் செல்லும் எமது இன்றைய இளைஞர்களிற்கு இவ்வாறான வழிகாட்டல்களை வழங்குவது பாடசாலையின் கடமையாகும். வெறுமனே சடவாதக் கல்வியை மற்றும் போதிக்கும் இன்றைய காலகட்டத்தில் மார்க்க ரீதியான வழிகாட்டல்களை மாணவர்களிற்கு வழங்க மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சி மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றென பலரும் கருத்துத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகள் மற்றுமின்றி எமதூரின் தலைமைகளும் இதுபோன்ற சிறந்த ; உரைகளை சமூக நலன் கருதி ஏற்பாடு செய்வது காலத்தின் தேவையாகும். இதைவிடுத்து அனாகரீகமான உரைகளிற்கு பள்ளி வாசல்கள் பயன்படுத்தப்படுவது வேதனைக்குறிய விடயமாகும். அண்மையில் எமதூரில் நிகத்தப்பட்ட கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை உள்ளடக்கிய ஒரு உரை புத்தி ஜீவிகள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்தாக அறிய முடிகிறது. எனவே எமதூரின் பொறுப்பு வாய்ந்த தலைமைகள் இவ்வாறானவர்கள் எவ்வாறு மேடைகளைப் பயன்படுத்தல் வேண்டும் என்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

மேலும் அண்மையில் நிகழ்ந்த விபச்சார நிகழ்வுகள் எமது ஊரின் இளைஞர்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது? எனவே ஊரின் நலன் கருதி ஒரு சிறந்த திட்டமிடலுடன் செயற்பட அனைவரும் முன்வருவது காலத்தின் தேவையாகும்.

கத்தாஃபி:வீர நாயகனிலிருந்து வெறுக்கப்பட்ட மனிதனாக…


உலகை ஆச்சரியமடைய வைத்த புரட்சியாளராக மாறி கடைசியில் மக்கள் கோபத்தால் மரணத்தை சந்தித்த தலைவர்தாம் மக்ரிப் தேசமான லிபியாவை 42 ஆண்டுகளாக ஆட்சிபுரிந்த கடாஃபி.


வெளிநாட்டு ஆக்கிரமிப்பிலிருந்து 1951-ஆம் ஆண்டு சுதந்திர நாடாக மாறிய லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நாடுகள்
கொள்ளையடித்த போது நிம்மதியிழந்த லிபியாவின் மக்கள் கண்டெடுத்த தீர்வுதான் முஅம்மர் கத்தாஃபி. ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல அதிகாரத்தின் வெறி தலைக்கேறி சொந்த மக்களின் உள்ளங்களிலிருந்து அகன்ற கத்தாஃபியின் சிம்மாசனம் அரபு நாடுகளில் உருவான முல்லைப்பூ புரட்சியில் எடுத்தெறியப்பட்டுள்ளது.

1942 ஜூன் 7-ஆம் தேதி கடலோர நகரமான ஸிர்த்தில் சாதாரண குடும்பத்தில் கத்தாஃபி பிறந்தார். ஆக்கிரமிப்பு சக்திகளிடம் அடிபணியாத குணம் கத்தாஃபிக்கு இயற்கையிலேயே உண்டு. பெங்காசி பல்கலைக்கழகத்தில் புவியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்ட போதிலும் 1961-ஆம் ஆண்டு ராணுவ அகடாமியில் சேர்ந்தபொழுது 19 வயதான கத்தாஃபியின் வரலாறு திரும்பியது.

எண்ணெய் வளத்தை கண்டறிந்த பிறகு ஆப்பிரிக்காவில் மிகப்பெரிய எண்ணெய் வளமிக்க நாடாக மாறிய லிபியாவில் மன்னர் இத்ரீஸின் பலகீனத்தை மேற்கத்திய நாடுகள் தங்களுக்கு சாதகமாக மாற்றிய வேளையில், கத்தாஃபி தனது கீழ் செயல்படும் அதிகாரிகளின் துணையுடன் 1969-ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் ராணுவ புரட்சியின் மூலம் தனது 27-வது வயதில் லிபியாவின் அதிபரானார்.

எகிப்தின் கமால் அப்துல் நாஸரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட கத்தாஃபி அரபு தேசியத்தின் அதிகாரப்பூர்வ பிரதிநிதியாக மாறினார். அரபு நாடுகளில் போராளிக் குழுக்களுக்கும், உலகின் புரட்சிக் குரல்களுக்கும் ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் உள்ளங்களில் கத்தாஃபி இடம் பிடித்தார். இதேக்காரணத்தால்தான் அமெரிக்காவும், அதன் கூட்டணி நாடுகளும் கத்தாஃபியின் லிபியாவை தீவிரவாதிகளின் புகலிடம் என அழைத்தன.

வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்ட கத்தாஃபியின் பின்னால் நாட்டு மக்கள் அணி திரண்டனர். ஏகாதிபத்தியத்திற்கும், கம்யூனிசத்திற்கும் எதிராக அரபு தேசியவாதம் என்ற திட்டத்திற்காக முயன்று பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினார். சிறிய நிறுவனங்களுக்கு மட்டும் தனியார் கட்டுப்பாட்டை வழங்கிவிட்டு பெரிய நிறுவனங்களை அரசுடமையாக்கினார்.

பனிப்போர் காலக்கட்டத்தில் அணிசேரா நாடுகளின் குரலாக விளங்கினார். நாட்டின் அரசியல் சட்டதை முற்றிலும் மாற்றி அமைத்தார். எகிப்தும், இஸ்ரேலும் 1978-ஆம் ஆண்டு உருவாக்கிய கேம்ப் டேவிஸ் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பிரபலமானவர் கத்தாஃபி ஆவார். ஆனால், வெளிநாட்டு கொள்கைகளில் பின்னர் மாற்றத்தை ஏற்படுத்திய அவர் அரபு உலகிலிருந்து மாறி ஆப்பிரிக்க ஐக்கியத்தில் கவனத்தை செலுத்தினார். அத்துடன் சோவியத் யூனியனுடனான உறவை வலுப்படுத்தினார்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கத்தாஃபி அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் சில சமரசங்களுக்கு தயாரானார். 1986-ஆம் ஆண்டு பெர்லினில் இரவு கிளப்பில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் லிபியாவிற்கு பங்கிருப்பதாக குற்றம் சாட்டி அமெரிக்கா திரிபோலியிலும், பெங்காசியிலும் நடத்திய தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட லிபியா மக்கள் கொல்லப்பட்டனர். ஸ்காட்லாந்தில் லாக்கர்பியில் விமானத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 270 பேர் கொல்லப்பட்டனர். அதில் பெரும்பாலோர் அமெரிக்கர்களாவர். முதலில் இத்தாக்குதலுக்கான பொறுப்பை லிபியா மறுத்தாலும் பின்னர் தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி டாலருக்கும் அதிகமான தொகையை இழப்பீடாக வழங்கியது. அதன் பின்னர் பெரும் ஆயுதங்களை அழிப்பதாக கத்தாஃபி அறிவித்தார்.

மீண்டுமொரு ராணுவ புரட்சி நடந்துவிடுவதற்கான வாய்ப்பைஉணர்ந்த அவர் ராணுவத்தின் மீதான தனது கட்டுப்பாட்டைவலுப்படுத்தினார். மக்கள் எழுச்சிப் போராட்டங்களை அடக்கி ஒடுக்கினார். ஊடகங்களுக்கு தடை ஏற்படுத்தினார். அரசியல் கட்சிகளுக்கு தடை விதித்தார்.

1996-ஆம் ஆண்டு நடந்த சிறைக் கலவரத்தில் கத்தாஃபியின் ராணுவம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை கொலை செய்தது. மனம் வெறுத்துப்போன லிபியாவின் மக்கள் துனீசியா, எகிப்து கண்டறிந்த முல்லைப்பூ புரட்சியை நெஞ்சில் சுமந்து கத்தாஃபிக்கு எதிராக போராட களமிறங்கினர். ஆனால், அதனை கடுமையாக எதிர்கொண்ட கத்தாஃபி ராணுவ அடக்குமுறையை கையாண்டார்.

எதிர்ப்பாளர்களுக்கு உதவுகிறோம் எனக்கூறி லிபியாவின்எண்ணெய் வளத்தின் மீது குறிவைத்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் நேட்டோ படை லிபியாவின் மீது தாக்குதலை தொடர்ந்தது. எதிர்ப்பாளர்கள் நேட்டோ படையின் உதவியுடன் கத்தாஃபி ராணுவத்தை எதிர்கொண்டனர். இரு படையினருக்கும் பின்னடைவும், வெற்றியும் மாறி மாறி வந்த பொழுதிலும் பின்னர் பெரும்பாலான நகரங்களை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றினர். அவ்வேளையிலும் கூட சரணடையமாட்டேன் இறுதிவரை போராடுவேன் என முழக்கமிட்டார் கத்தாஃபி.

பல மாதங்கள் நீடித்த போராட்டத்தின் முடிவில் பிறந்த நகரமான ஸிர்த்தில் வைத்து மரணம் வரை போராடுவேன் என்ற தனது வாக்குறுதியை நிறைவேற்றி மரணத்தை தழுவியுள்ளார் கத்தாஃபி.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடிய வீரர் என துவங்கி கடைசியில் மக்களின் வெறுப்பிற்குரிய தலைவராக மாறிய கத்தாஃபியின் பிற்கால வாழ்க்கை நம் உள்ளங்களில் கசப்புணர்வுகளை ஏற்படுத்தும் வேளையில் துவக்க கால வாழ்க்கையில் ஏகாதிபத்தியத்தை தீரமுடன் எதிர்த்த கத்தாஃபியின் வீரமும் பசுமையாக பதிந்துள்ளதையும் மறுக்க முடியாது.

தோ்தல் ஆணையாளருக்கு அனுப்ப முன் அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்ட ஐனாதிபதி தேர்தல் முடிவுகள் : வீக்கிலீக்ஸ்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்ப முன்னதாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டிருந்ததாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்துள்ள கேபிள் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அம்பாறை, அனுராதபுரம், பொலனறுவை உட்பட முக்கியமான எட்டு மாவட்டங்களின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளையே இவ்வாறு தோ்தல் ஆணையாளருக்கு அனுப்பமுன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றினிஸ், யுஎஸ்எய்ட் பணிப்பாளர் ஆகியோர் சேம்பர் ஒவ் கொமேர்ஸைச் சேர்ந்த பத்து வர்த்தகப் பிரதிநிதிகளுடனும், அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவுடனும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள குறிப்பிலேயே மேற்சொன்ன விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு கருணாவின் இரண்டாம் நிலைத் தளபதியும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரான இனியபாரதி 600 அல்லது 700 ஆயுதந்தாங்கிய ஆதரவாளர்களுடன் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வர்த்தகப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறியுள்ளனர் எனவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் சில தினங்களில் எல்மோ பெரேரா என்ற சட்டத்தரணி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கா 2010 ஜனவரி 26ஆம் திகதி 3.30 மணியிலிருந்து 2010 ஜனவரி 27ஆம் திகதி மாலை 4.45மணிக்கிடையில் எங்கிருந்தார் என்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

கஹட்டோவிடாவின் பாதுகாப்பு சம்பந்தான விசேட கூட்டம்

எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான ஒரு விசேட கூட்டம் 25.09.2011ஆம் திகதி காலை 9.30மணிக்கு கஹட்டோவிட அல்பந்ரியா மகாவித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது. நிட்டம்புவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் எமதூரின் பாதுகாப்பு சம்பந்தமான கல்நதுரையாடல் நடைபெறவுள்ளதால் ஊரின் நலன் விரும்பிகள் அனைவரும் இதில் தவறாது கலந்துகொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர். எமதூரின் இரு கிராமசேவகர்களின் ஆலோசனையின் பேரிலேயே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு கஹட்டோவிட பாடசாலைகளின் புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள்









2011 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து விட்டன.எமது ஊரைப் பொருத்தவரை, அல் பத்ரியா பாடசாலையைச் சேர்ந்த 03 மாணவர்களும், பாலிகா பாடசாலையைச் சேர்ந்த 05 மாணவிகளுமாக மொத்தம் 08 மாணவ மணிகள் இம்முறையும் எமது ஊருக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இந்த மண்ணின் மைந்தர்கள்  அனைவருக்கும் எமது பாராட்டுக்கள்!


அதி கூடிய புள்ளியாக அல் பத்ரியாவில் ஒரு மாணவன் 166 உம், பாலிகாவில் இரு மாணவிகள் 180 உம் பெற்றுள்ளனர். அகில இலங்கை மட்டத்தில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளி 195. இதில் அனுராதபுரத்தைச் சோ்ந்த செல்வன் நளீம் என்ற மாணவன் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் - பளிச் இணையம்.

தனது அண்ணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண்ணுக்கு பகிரங்க பிரம்படித் தண்டனை!


கணவன் வெளிநாடு சென்றுள்ள நிலையில் தனது அண்ணன் முறையான நபருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த பெண் ஒருவர் பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் ஒன்று திருகோணமலையில் நடைபெற்றுள்ளது.

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவௌ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு தனது தாயின் ஒன்று அக்காவின் மகனுடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார்.

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் தொழில்புரிந்து வருபவர். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர், தனது அண்ணன் முறையானவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததனால், கருவுற்றுள்ளாள்.

பின்னர் கருக் கலைப்பிற்காக தனியார் வைத்தியர் ஒருவரிடம் சென்று கருவை கலைத்துள்ளார். கருக்கலைப்பு காலத்தின் போது சிசு உருவாகியிருந்ததனால் அடுத்த நாள் குறித்த சிசு இறந்து பிறந்துள்ளது.

அதனை யாருக்கும் தெரியாமல், பானை ஒன்றினுள் போட்டு கள்ளத் தொடர்பு வைத்திருந்த தனது அண்ணனிடம் கொடுத்து கிராம மையவாடியில் புதைத்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த விடயம் குடும்ப உறுப்பினர்களால் அம்பலமாகியது. பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதி மன்றம் அப்பெண்ணை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.

இதேவேளை, இது சம்பந்தமாக கிராமத்தின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, புத்திஜீவிகள் குழு கிராம சட்ட விதிகளுக்கமைவாக பள்ளிவாயல் பரிபாலன சபையினரால் குறித்த பெண் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த பெண், தனக்குத் தெரியாமல் அண்ணன் கொத்து ரொட்டியில் மயக்கமருந்து கலந்து தந்து தன்னை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக தனது அண்ணன் மீது பழியைச் சுமத்தியுள்ளார்.

ஆனால், அதன் பின் நடைபெற்ற விடயங்களை கருத்தில் எடுத்து ஆராய்ந்து பார்த்த பள்ளிவாயல் பரிபாலன சபையினர், குறித்த பெண் கணவர் வெளிநாட்டில் இருக்கும் போது அவருக்கு துரோகம் செய்து, வேறு நபருடன் கள்ளத் தொடர்பு வைத்துள்ளார் எனக் கருதியது.

இதனால் குறித்த பெண்ணுக்கு பள்ளிவாயல் சட்டவிதிகளுக்கு உட்பட்டு ரூபா 25 ஆயிரம் ரொக்கம் தண்டப்பணமாக அறிவிடுவது எனவும் வெள்ளிக் கிழமை கிராம மக்கள் முன்னிலையில் பிரம்படி வழங்குவது எனவும் தீர்ப்பளித்துள்ளது.

கஹட்டோவிட சந்தியில் வீதி விபத்து.



கஹட்டோவிட பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் நேற்று 07.09.2011 அன்று ஒரு காருடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் வந்தவரின் கால் முறிந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன. காரினை செலுத்தியவர் எமது ஊரில் பிரபல்யமான வைத்தியரான டொக்டர் சஞ்சீவ ஆவர். விபத்தில் உயிர் சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லையாயினும் காரிற்கு சேதங்கள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. விபத்து நடைபெற்ற இடத்தில் எமதூர் மக்கள் வைத்தியரிற்கு உதவிய முறையை அவர் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.

தீமைகளிற்குப் பன்னீர் தெளிக்கும் பெருநாள் கொண்டாட்டம்




30 நாட்கள் நோன்பு நோற்ற நாம் அதன் பயனை அடைந்து விட்டோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டியவிதமாக பல நிகழ்வுகள் நடந்து வருவதை காணக் கூடியதாக உள்ளது. நோன்பின் நோக்கமே இறையச்சம்தான் என்று அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகிறான். இவ்விறையச்சம் பெருநாள் தினத்துடன் செல்லுபடியற்றியதாக மாறிய துரதிஷ்ட நிகழ்வொன்றை நாம் கண்டும் காணாத்துபோல் இருக்க முடியாது. வளர்ந்து வரும் வாலிபர்கள்தான் எமது அடுத்த தலைமுறையின் தலைவர்கள். இவர்கள் மார்க்க உணர்வுடன் வழிநடாத்தப்பட்டால்தான் எதிர்காலம் இஸ்லாம் வாழும் ஒரு இடமாக இருக்கும்.

பெருநாள் விளையாட்டுப் போட்டி எனும் பெயரில் முழு நாளும் ஊரை அதிரவைக்கும் சினிமாப் பாடல்கள். இடைக்கிடையில் குர்ஆனை அவமதிக்கும் வித்த்தில் கிராத் ஒலிபரப்பும் அடுத்து மீன்டும் சினிமாப் பாடல்....... இப்படி நடைபெற்று முடிந்த்து ஒரு விளையாட்டுப் போட்டி.

இவ்விளையாட்டுப் போட்டியை வெறுமனே விமர்சிப்பது எமது நோக்கமல்ல.இன்றைய இளைஞர்கள் மார்க்க விதிகளிலிருந்து நெறிதவறிச்செல்வதை யாரிடம் சொல்ல்லாம் என்ற ஆதங்கத்தில் எழுதுகிறோம். ஊரையும் இளைஞர்களையும் வழி நடாத்த வேண்டிய தலைமைகள் அமைதியாக இருப்பது எந்த வகையில் நியாயம்?

எல்லாம் நடந்து முடிந்தபின்னர் ஒரு செற்பொழிவில் அல்லது குத்பாவில் இரண்டு வார்த்தை ஏசுவதனால் தமது கடமை முடிந்துவிட்டதாக தவராக புரிந்து வைத்துள்ளனர் சிலர். இரண்டுநாள் அரங்கேற்றிய தீமையை பொறுமையாக பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு இரண்டுவார்த்தையைக் கூறித் தப்பித்துக்கொள்ளும் இவர்களை என்னவென்று கூறுவது.

வரட்டு கௌரவங்களை விட்டுவிட்டு சமூகத்தின் நலனுக்காக மாத்திரம் இது போன்ற விடயங்களில் ஒன்று படுங்கள். பள்ளி வாசல்களின் சம்மேளனம், அண்மையில் அணி திரண்ட இளைஞர் அமைப்புக்கள் மற்றும் பள்ளி வாசல்களின் நிர்வாகங்கள் அனைத்தும் இதுபோன்ற விடயத்தில் கவனம் செலுத்துங்கள். இல்லையேல் பக்கத்துக் கிராமங்களில் நடைபெறும் சங்கீத நிகழ்ச்சி கூட எமது ஊரில் நடைபெறும் என்பது ஆச்சிரியமில்லை!

أسلام عليكم ورحمة الله وبركاته

أسلام عليكم ورحمة الله وبركاته
أهنئكم بأطيب التهاني والتبريكات بمناسبة عيد الفطر السعيد. تقبل الله منا ومنكم صالح الأعمال. وكل عام وأنتم بخير...
EID MUBARAK
THAKABBALALLAHU MINNA WA MINKUM
............................................................................................................
கஹட்டோவிட மஸ்ஜித் ஜாமிஉத் தௌஹீதினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெருநாள் தொழுகை காலை 7.25மணியளவில் கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இப்பெருநாள் தொழுகையில் பள்ளி வாயில் இமாம் அஷ்ஷெக் மஸ்ஊத் ஸலபி அவர்கள் பெருநாள் குத்பாவை நிகழ்த்தினார். பெருநாள் தொழுகையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.








யாருக்குப் பெருநாள்?

- உண்ண வசதியிருந்தும் உண்ணவில்லை.

- பருக பலவித பானங்களிருந்தும் பருகவில்லை.

- காலையில் எழுந்து டீ / காஃபி குடித்தால் தான் அன்றைய வேலையே ஓடும் என்ற

பழக்கமிருந்தும் குடிக்கவில்லை.

- புகை பிடித்தால்தான் சிந்தனை செயலாற்றும் என்ற நிலையிருந்தும் புகை

பிடிக்கவில்லை.
இவருக்குத்தான் இனிய பெருநாள்...!
- தன் ஆணவத்தை அடக்கி

- அலட்சியப் போக்கை அழித்து

- பகலில் பட்டினி கிடந்து

- இரவில் இறை வழிபாட்டில் ஈடுபட்டு

- பசி, தாகத்தால் இச்சையை வென்று

- இறை கடமைகளை நிறைவேற்றி

- தானத்தால் ஏழைகளின் கண்களை திறந்த
உண்மை முஸ்லிமுக்குத்தான் பெருநாள்...!
- வறியவர்களின் தேவைகளை கவனித்து

- பட்டினியையும், பசியையும் அடக்கி,

- நோன்பினால் ஈமானை பலப்படுத்தி

- ஆன்மிக பலத்தை நிலை நாட்டி

- ஒரு மாத கடுஞ்சோதனையை வென்று

- இறைவனுக்காக நோன்பிருந்த

- இறைமறையை ஓதி உணர்ந்த

- இறைகடமைகளை நிறைவு செய்த
உண்மை முஃமினுக்குத்தான் உன்னத பெருநாள்...
- ஏழைவரி(ஜகாத்)யை முறையாக அளித்து

- கருமித்தனத்தை அடியோடு ஒழித்து

- சிறியவர்களை போற்றி - பாராட்டி

- பெரியவர்களை மதித்து நடந்து

- அறிஞர்களுடன் பண்புடன் நடந்து

- செய்த பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு

- இனி பாவமே செய்யமாட்டேன்

- என்ற உறுதி கொண்ட
உண்மை விசுவாசிக்குத்தான் உரிய பெருநாள்!
- எனது தொழுகை அல்லாஹ்வுக்கே!

- எனது தியாகச் செயல் அல்லாஹ்வுக்கே!

- எனது பொதுப்பணி அல்லாஹ்வுக்கே!

- எனது வாழ்வு அல்லாஹ்வுக்கே!

- எனது மரணம் அல்லாஹ்வுக்கே!

- என்று சத்தியப் பிரமாணம் எடுத்த
உண்மையளர்களுக்குத்தான் உண்மைப் பெருநாள்...!
உலக இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த ஈகைப் பெருநாள் இனிய நல்

வாழ்த்துக்கள்!

பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா


அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A (அரபிக்)., M.A (தத்துவமும் சமயமும்).,




கஹடோவிட பாலிகாவில் சிங்கள சகோதார்களுடனான இப்தார் நிகழ்வும் கலந்துரையாடலும்

கஹட்டோவிட கல்வி வட்டத்தினால் 3வது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிங்கள சகோதார்களுடனான இப்தார் நிகழ்வு இன்று 22.08.2011 ஆம் திகதி கஹட்டோவிட பாலிகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாமும் நோன்பும் என்ற தலைப்பில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட வறக்காப்பொளையைச் சேர்ந்த சகோதரர் முனாஸ் அவர்கள் மாற்றுமத சகோதரர்களால் கேட்கப்பட்ட கேள்விகளிற்கு விளக்கமளித்துப் பேசினார். மாலை 5.30மணியளவில் ஆரம்பித்த இந்நிகழ்வில் 20பேர்கள் கலந்து சிறப்பித்தனர். அல்லாஹ் இவர்களது கூலிகளைப் பொருந்திக் கொள்வானாக!

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடவைச் சேர்ந்த சகோதரர் ஸைனுல் ஆப்தீன் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் பரீதா அவர்களின் கணவரும் மற்றும் பருஜ், பராஸ், ஜவ்ஸான், ஜவாத் ஜஸீம் ஆகியோரின் தகப்பனும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (22. 08 . 2011) காலை   11.00 மணியளவில் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் இவர்களின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக!

இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட 17வயது தமிழ்யுவதி

இறைவன் கூறுகிறான்: ‘என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள், நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்குப் பதிலளிக்கிறேன் - அல்குர்ஆன்

நாம் அல்லாஹ்விடம் கேட்கின்ற துஆக்களில் இந்தசகோதரியின்வேண்டுகொளையும் சேர்த்துக்கொள்வோம்.


You all! please make du'a for my mother and my brother that they should embrace islaam. If you have any friends give Da'wah to them. Be firm with what you believe. Please ask du'a for me. Assalaamu alaykkum wa rahmatullahi wa barakaatuh

ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி




ஈராக்கின் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.


பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ தொலைவில் உள்ள குத் நகரில் நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.

இதையடுத்து நஜாப், பக்குவுபா, பாக்தாத், கர்பாலா, கிர்குக், திக்ரித், ரமாடி ஆகிய நகரங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. ஒட்டு மொத்தத் தாக்குதல்களில் 75 பேர் பலியாகினர்.
இத்தாக்குதல்களில் கார் வெடிகுண்டுகள், சாலையோர குண்டுகள், தற்கொலைத் தாக்குதல்கள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. தியாலா மாகாணத்தில் மட்டும் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.
மிக அதிகபட்சமாக குத் நகரில் பலி நிகழ்ந்துள்ளது. ஈராக்கில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தங்கியுள்ள அமெரிக்கப் படையினர் இந்தாண்டின் இறுதிக்குள் முழுமையாக வெளியேறுவர் என முன்பே அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருந்தார்.

ஆனால் ஈராக்கின் பாதுகாப்பு குறித்து சந்தேகித்த அந்நாட்டு தலைவர்கள் 2012ம் ஆண்டு வரை அங்கு ஒரு சிறுபடைப் பிரிவாவது தங்கியிருக்க வேண்டும் என சமீபத்தில் தான் முடிவெடுத்தனர்.
ஈராக்கில் தொடரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்புப் பணியில் மேலும் திறன் பெறவும் இந்த அமெரிக்கப் படை ஈராக் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும். இதையடுத்து நிகழ்ந்துள்ள திட்டமிட்ட மிகப் பெரிய தாக்குதல்கள் இவை. இத்தாக்குதல்களுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

றிஸானாவின் விடுதலைக்காகப் பிரார்த்திப்போம்!

சவூதியில் குற்றவாளியாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள றிஸானா நபீக் விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக றிஸானா நபீக்கின் தாயார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இவரது விடுதலை தொடர்பாகப் பேச அரச உயர் மட்ட தூதுக்குழு சவூதி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

றிஸானா நபீக்கின் விடுதலைக்காக செயற்பட்டு வரும் திருகோணமலைமாவட்ட மக்கள் மன்ற பிரதிநிதி ஜிஹாஜ் றிஸானாவின் விடுதலைக்காக இப்புனித ரமழான் மாதத்தில் அனைவரும் பிராத்திக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரமலான் மாதம் தொடர்பான ஆதாரமற்ற செய்திகள்

ரமலான் மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதும் அம்மாதத்தில் செய்யப்படும் அமல்கள் சிறப்புக்குரியவை என்பதற்கும் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

அதே வேளையில் நபிகளாரின் பெயரில் இம்மாத சிறப்பு பற்றியும் இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் சிறப்பு பற்றியும் இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான செய்திகளும் கணிசமாக இடம் பெற்றுள்ளது. இதை பல ஆலிம்கள் பயான்களிலும் கூறிவருகிறார்கள். எனவே இதன் உண்மை நிலையை தெளிவுபடுத்த, இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்களில் முக்கியமானவை இக்கட்டுரையில் இனம் காட்டப்படுகிறது.

ரமலான் என்று கூறாதீர்?
ரமலான் என்று கூறாதீர்கள்!ஏனெனில் அது அல்லாஹ்வுடைய திருமாங்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் ஸஹ்ரு ரமலான் (ரமலான் மாதம்) என்று கூறுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : பைஹகீ (7293)

இச்செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அபீ மிஃஷர் என்பவர் பலவீனமானவர் என்பதை இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இந்த ஹதீஸில் கீழே குறிப்பிட்டள்ளார்கள்.



ரமலான் மாதத்தை அடைந்தவர் பாவம் மன்னிக்கப்படுகின்றன?
ரமலான் மாதத்தின் முதல் நாள் காலையை அடைந்த எந்த முஸ்லிம்களின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக், நூல்கள் : தாரிக் பக்தாத் பாகம் : 5, பக்கம் : 90, அல்இலலுல் முதநாஹிய்யா

இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் இரண்டாவது அறிவிப்பாளர் ஸியாத் பின் மைமூன் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஸல்லாம் அத்தவீல் என்வரும் பெரும் பொய்யர், இவர்களை இமாம் புகாரீ, நஸயீ, மற்றும் தாரகுத்னீ ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்ததை இதை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் இப்னுல் ஜவ்ஸீ தனது அல்இலலுல் முதநாஹிய்யா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.



ரமலான் சீராகிவிட்டால்...
''ரமலான் (மாதம் நற்காரியங்கள் செய்வதன் மூலம்) சீராகிவிட்டால் அந்தவருடம் (முழுவதும்) சீராகிவிடும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : ஷ‎ýஅபுல் ஈமான் (பைஹகீ) பாகம் : 3, பக்கம் 340)

இச்செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் அபூமுதீஃ என்ற அல்ஹகம் பின் அப்துல்லாஹ் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றுள்ளார் இவர் பலவீனமானவர். எனினும் அப்துல் அஸீஸ் பின் அபான் அல்பல்கீ என்பவர் இடம் பெற்றிருப்பதே சரியானதாகும் என்று கூறும் இமாம் பைஹகீ அவர்கள் இவரும் பலவீனமானவர் என்று அதே நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ரமலானின் முதல் பகுதி அருளாகவும் நடுப்பகுதி மன்னிப்பு வழங்கப்படக்கூடியதாகவும் இறுதிப்பகுதி நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கப்பெறக்கூடியதாகவும் இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : இப்னு குஸைமா (பாகம் : 3 பக்கம் : 191),ஷுஅபுல் ஈமான் (பைஹகீ), பாகம் : 3,306)

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் அலி பின் ஸைத் பின் ஜ‎ýத்ஆன் என்பவர் இடம் பெருகிறார் இவரை அஹமத் பின் ஹன்பல் போன்றோர் விமர்சித்துள்ளனர். (நூல் மீஸானுல் இஃதிதால் பாகம் 5 பக் 156) மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரிலே யூஸ‏þப் பின் ஸியாத் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரைப்பற்றி புகாரீ அவர்கள், ''ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர்'' என்றும் தாரகுத்னி அவர்கள், ''பொய்யான செய்தியை அறிவிப்பதில் பிரபல்யமானவர்'' என்றும் இன்னும் பல்வேறு அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர். (நூல் லிஸானுல் மீஸான் பாகம் 6 பக் 321.)

ஈடு இணையற்ற நோன்பு
நோயோ தக்க காரணமோ இன்றி ரமலானில் ஒரு நாள் நோன்பை விட்டுவிட்டால் காலமெல்லாம் நோன்பு நோற்றாலும் அதற்கு ஈடாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),நூல் திர்மிதி (655)

இந்த செய்தியை பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் புகாரியின் விரிவுரை

நூலான பத்ஹுல் பாரியில் குறிப்பிடும் போது இந்த செய்தியில் மூன்று குறைபாடுகள் உள்ளன.1. அறிவிப்பாளரில் குளறுபடிகள்2. இதில் இடம் பெறும் அபுல் முதவ்விஸ் என்பவரின் விவரம் தெரிவில்லை. 3. இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அபூஹ‎ýரைரா (ரலி) அவர்களிடம் செவியுற்றாரா? என்பதில் ஐயம் உள்ளது என்று கூறி இந்த செய்தி பலவீனமானது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்.


பரிந்துரை செய்யும் நோன்பு?
அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அறிவிக்கிறார்கள் நோன்பும் குர்ஆனும் கியாம நாளில் அடியானுக்கு பரிந்துரை செய்யும் நோன்பு இறைவனிடத்தில் முறையிடும் : என் இறைவனே! இந்த அடியானை நான் பகலில் உணவை விட்டும் ஆசைகளை விட்டும் தடுத்துவிட்டேன். இவருடைய விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக! என்று கோரும். குர்ஆன் கூறும் : (யா அல்லாஹ்!) இரவு நேரங்களில் அவனுடைய தூக்கத்தை தடுத்துவிட்டேன் ஆகவே இவர் விஷயத்தில் என்னுடைய பரிந்துரையை ஏற்றுக்கொள்வாயாக என்று கோரும். அவை இரண்டின் பரிந்துரையும் ஏற்றுக்கொள்ளப்படும் என நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் அஹ்மத் (6337)

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறம் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)


ரமலான் மாதத்தில் வாழச்செய்வாயாக!
அனஸ் (ரலி) அவர்கள் அறிக்கிறார்கள் : நபி‏ (ஸல்) அவர்கள் ரஜப் மாதம் வந்து விட்டால் ''யா அல்லாஹ் ரஜப் மாதத்திலும் ஷஃபான் மாதத்திலும் எங்களுக்கு பரகத் செய்வாயாக!' எங்களுக்கு ரமலான் மாதத்தையும் அடையச்செய்வாயாக!'' என்று பிரார்த்தனை செய்வார்கள்.
அறிவிப்பவர் அனஸ் (ரலி)
நூல் அஹ்மத்(2228) பஸ்ஸார், தப்ரானி

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஸாயிதா பின் அபீர்ருகாத் என்பவர் இடம் பெருகிறார் இவரைப்பற்றி இமாம் புகாரீ அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று விமர்சனம் செய்துள்ளார். (மீஸானுல் இஃதிதால் பாகம் : 3 பக்கம் : 95)


மாதத்தின் தலைவர்?
அபீ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள் : மாதங்களில் தலைவர் ரமலான் மாதமாகும் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் (தப்ரானி கபீர் பாகம் 9 பக் 205 ஷுஅபுல் ஈமான் பாகம் : 3 பக்கம் :314.)

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் யஸீத் பின் அப்துல் மலீக் என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவராவார்.மேலும் இதை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் அறிவிப்பாளர் தொடரில் பலவீனம் இருக்கிறது என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்த கூற்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் இது அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும் என்று இமாம் ஹைஸமீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.



மதீனாவில் நோன்பு நோற்பது
மதீனாவில் நோன்பு வைப்பது மதீனா அல்லாத மற்ற ஊர்களில் ஆயிரம் நோன்பு வைப்பது விட சிறப்பானதாகும். மேலும் மதீனாவில் ஜும்ஆவை நிறைவேற்றுவது மற்ற ஊர்களில் நிறைவேற்றும் ஆயிரம் ஜும்ஆவை விட சிறப்பானதாகும் என் நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்று பிலால் பின் ஹாரிஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் தப்ரானீ - கபீர் பாகம் : 1, பக்கம் : 372

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெரும் அப்துல்லாஹ் பின் கஸீர் என்பவர் இடம் பெற்றுள்ளார் இவரும் பலவீனமானவர்.(லிஸானுல் மீஸான் பாகம் : 3, பக்கம் : 329)


நோன்பு ஏற்றுக் கொள்ளப்படாது
அபூஹ‎ýரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் : யார் ரமலான் மாதத்தை அடைந்து அவர் சென்ற ரமலானின் நோன்பை களாச் செய்யவில்லையானால் அவரின் நோன்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல் : தப்ரானீ அவ்ஸத், பாகம் : 3, பக்கம் : 321)

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறம் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)


அரஃபா மலையளவு பாவம்
அபூ துஃமா என்பவர் அறிவிக்கிறார் : நான் இப்னு உமரிடம் இருக்கும் போது ஒரு மனிதர் வந்து அப்துர் ரஹ்மானே! நான் பயணத்திலும் நோன்பு வைப்பதற்கு சக்தி பெற்றுள்ளேன் (நான் நோன்பு நோற்கலாமா?) என கேள்வி கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள் யார் அல்லாஹ்வுடைய அனுமதியை ஏற்றுக்கோள்வில்லையோ அவன் மீது அரபா மலை அளவு பாவம் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் கூற செவியுற்றுள்ளேன்.
நூல் அஹ்மத் (5135), தப்ரானீ கபீர்

இந்த ஹதிஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ''இப்னு லஹிஆ'' என்பவர் மனன சக்தியில் குறைவுடையவர் என்றும் பலவீனமானவர் என்றும் பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.(தஹ்தீபுத் தஹ்தீப்)


மாலையில் பல் துலக்குதல்
அலி ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள் நீங்கள் நோன்பு வைத்தால் காலையில் பல் துலக்கிவிடுங்கள் மாலையில் துலக்காதீர்கள்! ஏனெனில் மாலைநேரத்தில் உதடுகள் காய்ந்த நிலையில் நோன்பாளி இருந்தால் கியாம நாளில் அவருடைய இரண்டு கண்களுக்கு மத்தியில் ஒளி உன்டாகும் என நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல் : தப்ரானி கபீர் பாகம் : 4, பக்கம் : 78)

இதில் அபுஅம்ரு என்ற கைஸான் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஏராளமான அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள். (மீஸான் அல் இஃதிதால் பாகம் 5 பக் 205)


இரண்டு ஹஜ்ஜின் நன்மைகள்
யார் ரமலான் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாப் இருக்கிறாரோ அவர் இரண்டு ஹ‎‎ஜ், மற்றும் இரண்டு உம்ரா செய்தவர் போன்றவராவார் என நபி (‏ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் ஹஸன் (ரலி), நூல் : ஷ‎ýஅபுல் ஈமான், பாகம் : 3, பக்கம் : 425

இதில் முஹம்மத் பின் ஸாதான் என்பவர் இடம் பெறுகிறார். இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று புகாரீ அவர்கள் உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். மேலும் இச்செய்தியில் இடம் பெறும் மற்றொரு அறிவிபப்பாளர் அன்பஸா பின் அப்துர் ரஹ்மான் என்பவரையும் இமாம் புகாரீ அவர்கள் போன்றோர் இவருடைய ஹதீஸ்கள் நிராகரிக்கப்படவேண்டியவை என்று கூறியுள்ளனர்.. (தஹ்தீப் தஹ்தீப் பாகம் 8 : பக்கம் : 143, பாகம் : 9, பக்கம் : 145)

''யார் ரமலானை மக்காவில் அடைந்து, (அ‏ங்கே) நோன்‹ வைத்து இயன்ற அளவு இரவு தொழுகை தொழுகிறாரோ மக்கா அல்லாத மற்ற ஊர்களில் நோன்‹ வைத்த நன்மையை விட ஆய‎Šரம் மாதங்கள் நோன்‹ வைத்து தொழுத நன்மைகள் கŠடைக்கின்றன'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : இப்னுமாஜா 3108

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹீம் பின் ஸைத் அல் அம்மீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் துறையில் ஏராளமான அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்பதை பலவித வார்த்தைகளில் தெளிவுபடுத்தியுள்ளார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 6, பக்கம் : 273)

ஒவ்வொரு பொருளுக்கும் ஸகாத் (கடமை) இருக்கிறது. உடலுடைய ஸகாத் நோன்பாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர் : அபூஹ‏‎ýரைரா (ரலி), நூல் : இப்னு மாஜா (1735)

இந்த ஹதீ‏ஸின் அறிவிப்பாளர் தொடரில் 'மூஸா பின் உபைதுல்லாஹ்' என்பவர் இடம் பெறுகிறார். இமாம் அஹ்மத், நஸயீ, இப்னு அதீ, இப்னு மயீன் ஆகியோர் பலவீனமானவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (மீஸாலுல் இஃதிதால் பாகம் 6, பக்கம் : 551)


நோன்பு துஆ
அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் நபி ஸல் அவர்கள் நோன்பு திறக்கும் போது ''அல்லாஹும்ம லக்க ஸும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து'' (யா அல்லாஹ் உனக்காக நோன்பு நோற்றேன் உன்னுடைய உனவை கொண்டு நோன்பு திறந்துவிட்டேன்)

இது அபூதாவூத் என்ற கிதாபில் இடம் பெற்றுள்ளது அது பலவீனமான முர்ஸல் வகையைச் சார்ந்தாகும்.

இதே செய்தி தப்ரானியின் அவ்ஸத் மற்றும் சகீர் ஆகிய நூல்களிலும் இடம் பெறுகிறது. இதில் தாவூத் பின் சிப்ரிகான் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர்.

இதே கருத்தில் தப்ரானி கபீர் என்ற நூலிலும் சில மாற்றங்களோடு இடம் பெற்றுள்ளது. அதில் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் இடம் பெறுகிறார் இவரும் பலவீனமானவரே.


பித்ரா இல்லாமல் நோன்பு கூடாது?
ரமலான் மாதம் (அதாதவது அம்மாதத்தின் நோன்பு) வானத்திற்கும் பூமிற்கும் மத்தியில் தொங்கவிடப்பட்டிருக்கும். பித்ரா தர்மம் கொடுக்கும் வரை அது (அல்லாஹ்விடம்) உயர்த்தப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்கள் : அல்இலலுல் முதநாஹிய்யா, கன்ஸ‎ýல் உம்மால், அல்ஜாமிவுஸ் ஸகீர்.)

இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் உபைத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்று இச்செய்தி பதிவு செய்த இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தனது ஸிஸானுல் மீஸான் என்ற நூலிலும் உறுதி செய்துள்ளார்கள்.

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிடாவைச் சேர்ந்த உம்மு நயீமா அவர்கள் காலமானார். அன்னார் ஓகடபொளையைச் சேர்ந்த தாஹா நாநா அவர்களின் மனைவியும் கஹட்டோவிடாவைச் சேர்ந்த நயீம் நாநா அவர்களின் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்றிரவு (29.07.2011) 10.00மணியளவு முஹியத்தீன் ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெறும். எல்லாம் வல்ல அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்த நிம்மதியான கப்றுடைய வாழ்வை வாழ அருள் புரிவானாக!

பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நஜீம் (ஜே.பி) அவர்கள் அமோக வெற்றி!



நேற்று நடைபெற்ற 65 தொகுதிகளில் உள்ள பிரதேச சபைகளுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தோ்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி சார்பாக போட்டியிட்ட எமதூரைச் சேர்ந்த சமாதான நீதிவான் சகோதரர் நஜீம் அவர்கள் சுமார் 4050விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் காட்சி சார்பாகப் போட்டியிட்டவர்களுல் இரண்டாம் இடத்தை இவர் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட திஹாரியைச் சேர்ந்த சகோதரர் அஷ்ரப் அவர்களும் 4ஆம் இடத்தைப் பெற்று வெற்றிபெற்றுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கி்டைத்தள்ள 5ஆசனங்களில் இரண்டு ஆசனங்கள் முஸ்லிம்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
அதேநேரம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக போட்டியிட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் கமால் அப்துல் நாசா அவர்கள் இம்முறை குறைவான விருப்பு வாக்குகள் பெற்றமையினால் தோல்வியடைந்துள்ளார். எமது இணையத்தள கருத்துக் கணிப்பீட்டிலும் சகோதரர் நஜீம் அவர்கள் முன்னணியில் இருந்து வந்தமை குறிப்பிடத் தக்கது. 
சகோதரர் நஜீம் அவர்கள் எவ்வகையான சேவைகளை செய்தல் வேண்டும் என எமது வாசகர்களின் சிறந்த ஆலோசனைகளை எமது தளத்தினூடாக நாம் கருத்தக்களை பெற தீர்மாணித்துள்ளோம். எனவே வாசகர்களாகிய உ ங்களின் சிறந்த ஆலோசனைகளை எமக்கு அனுப்பி எமது ஊரின் முன்னேற்றத்தில் பக்களிப்பு செய்யுமாறு உங்களிடம் வேண்டுவதுடன் அமோக வெற்றியுடன் அரசியல் வாழ்வில் முதற்படி எடுத்து வைத்துள்ள நஜீம் நாநாவின் சேவைகள் மேலும் தொடர  எமது தளம் சார்பாக வாழ்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.!