கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தோ்தல் ஆணையாளருக்கு அனுப்ப முன் அலரி மாளிகைக்கு அனுப்பப்பட்ட ஐனாதிபதி தேர்தல் முடிவுகள் : வீக்கிலீக்ஸ்

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்ப முன்னதாக ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டிருந்ததாக அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் வாஷிங்டனுக்கு அனுப்பி வைத்துள்ள கேபிள் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அம்பாறை, அனுராதபுரம், பொலனறுவை உட்பட முக்கியமான எட்டு மாவட்டங்களின் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளையே இவ்வாறு தோ்தல் ஆணையாளருக்கு அனுப்பமுன் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றினிஸ், யுஎஸ்எய்ட் பணிப்பாளர் ஆகியோர் சேம்பர் ஒவ் கொமேர்ஸைச் சேர்ந்த பத்து வர்த்தகப் பிரதிநிதிகளுடனும், அம்பாறை அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவுடனும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இது தொடர்பாக அவர் அனுப்பி வைத்துள்ள குறிப்பிலேயே மேற்சொன்ன விடயத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்.

அத்தோடு கருணாவின் இரண்டாம் நிலைத் தளபதியும் ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரான இனியபாரதி 600 அல்லது 700 ஆயுதந்தாங்கிய ஆதரவாளர்களுடன் எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தி இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக வர்த்தகப் பிரதிநிதிகள் எடுத்துக் கூறியுள்ளனர் எனவும் அமெரிக்கத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலின் சில தினங்களில் எல்மோ பெரேரா என்ற சட்டத்தரணி தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கா 2010 ஜனவரி 26ஆம் திகதி 3.30 மணியிலிருந்து 2010 ஜனவரி 27ஆம் திகதி மாலை 4.45மணிக்கிடையில் எங்கிருந்தார் என்பதை நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டிருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments:

Post a Comment