கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பேஸ்புக் போன்று இலங்கையில் பிரபல சமூக வலைத்தளம் அறிமுகம்.

இன்றைய உலகத்தை சமூக வலைத்தளங்களே ஆட்சி செய்கின்றன என்றால் மிகையாகாது. அதிலும் குறிப்பாக Facebook, Twitter போன்றன உலகளவில் முன்னுரிமை வகிக்கின்றன.
face
இது இவ்வாறு இருக்கையில் தற்பொழுது இலங்கைக்கான தனியானதும், முதன்மையானதுமான சமூக வலைத்தளமாக “லிங்லங்.கொம்” (www.linklank.com) எனும் இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது தற்பொழுது வாடிக்கையாளர்கள் கணக்குகளை திறக்கக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ள போதிலும் 2016.01.01 புதுவருடத்திலிருந்து உத்தியோகபூர்வமாக இயங்கும் என்பதும் இது இலங்கைக்கான சமூக வலைத்தளம் என்பதனால் வாடிக்கையாளர்கள் கணக்குகள் திறப்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதிலும் குறிப்பாக Facebook போன்று இலங்கையிலுள்ள அனைவரும் கணக்குகளினை இலவசமாக திறந்துகொள்ள முடியும். இதில் Newsfeed, Like, Share, Comments, Events, Groups, Chat போன்று இன்னும் பல சேவைகளும் உள்ளடக்கப்பட்டு வாசகர்களை கவரும் வகையில் அழகிய தோற்றத்தில் அமைந்துள்ளது.
இவை தவிர விசேடமாக Free jobs, User profile counting options, Point batch system, News feed filtering option போன்ற பல சேவைகளையும் LinkLank (லிங்லங்) தன்னகத்தே கொண்டுள்ளது.
இனி எதிர்வரும் காலத்தில் Facebook போன்று இலங்கைக்கான தனித்துவ மற்றும் முதல்தரமான சமூக வலைத்தளமாக LinkLank அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.

TSUNAMI 2004 -DEC - 26

கடந்த 2004 டிசம்பர் 26ம் நாள் ஞாயிறு காலையில் கிருஸ்தவ மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்த மகிழ்ச்சிகரமான வேலையில் இந்தோனேஷியா சுமத்ரா தீவில் ஏற்பட்ட கடலுக்கடியிலான நிலநடுக்கம் சுனாமி ஆழி பேரலையாக இலங்கை உட்பட பல நாடுகளையும் அதிரச் செய்த நிகழ்வு பல இலட்ச மனித உயிர்களை பறித்தும் பல்லாயிரம் கோடிகளுக்கு பொருளாதார பேரிழப்பு ஏற்பட்டதையும் நாம் கண்ணீர் சிந்தியதையும் மறந்திட முடியாது
ஒரு சில நிமிடங்களில் ஆசியா கண்டத்தின் 10 நாடுகளில் அவற்றை ஒட்டியுள்ள தீவுகளில் மூன்று லட்சம் வரையான மக்கள் அழிந்தனர் ! ஆசியா தன் வரைபடத்தில் சில கிராமங்களை இழந்து விட்டிருந்தது . அவற்றில் பல மனிதர்களால் நிரந்தரமாக கைவிடப்பட்ட கிராமங்களாக போய்விட்டது
சுனாமி சுட்டு 11 வருடங்கள்
சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. கடற்பரப்பில் ஏற்பட்ட இதேவேக நிலநடுக்கம் தரைப் பகுதியில் ஏற்பட்டிருந்தால் ஆசியாசின் பல நாடுகள் தரை மட்டமாகியிருக்கும். இதன் பாதிப்பு பல ஆயிரம் அணுகுண்டுகள் வெடித்ததற்குச் சமமாக இருக்கும் என்று புவியமைப்பியல் வல்லுநர்கள் தெரிவித்தனர்.
ما اصابك من حسنة فمن الله وما اصابك من سيئة فمن نفسك
(மனிதனே!) உனக்கு ஏதேனும் ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் கிடைத்ததாகும். உன்னை ஏதும் தீங்கு பிடித்தால் (அது) உன்னிலிருந்தே ஏற்பட்டதாகும். 4:79.
واتبعوا احسن ما انزل اليكم من ربكم من قبل ان يأتيكم العذاب بغتة وانتم لا تشعرون 39:55
நீங்கள் அறிந்துக் கொள்ளாத நிலையில் திடீரென வேதனை உங்களை வந்தடைவதற்கு முன்னர் உங்கள் ரப்பிடமிருந்து உங்களுக்கு இறக்கி வைக்கப்பட்ட மிக அழகானவற்றை பின்பற்றுங்கள்.39:55
உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் மனிதனை அல்லாஹ் ஏவியுள்ள கட்டளைகள் அனைத்திலிருந்தும் வேறான ஒரு பாதையில் இட்டுசெல்கின்றது இபாதத்துகள் வெறும் சம்பிரதாயங்களாக மட்டும் எம்மில் எஞ்சியுள்ளது இஸ்லாம் போதிக்கும் தனிநபர் நடத்தை, சமூக நடத்தை எதுவும் எமது சமுகத்தில் பெரிய அளவிலான தாகங்களை பெற்று எம்மை வழிநடத்த நாம் எம்மை தயார் படுத்துவதில்லை இறைவன் எமக்கு தொடர்ந்தும் அவகாசம் தருகின்றார் அவன் எமக்கு வழங்கியுள்ள அவகாசத்தை சரியாக பயன்படுத்துவதில் இருந்து தொடர்ந்தும் நாம் தவரிவருகின்றோம்.
அதற்கு பிரதான காரணமாக உலகத்தின் மீதுள்ள பற்றும் மரணத்தை பற்றிய பயமும் எம்மை ஆட்கொண்டுள்ளது என்பதுதான், சுனாமி போன்ற தாக்கங்களை நாம் எதிர்கொண்ட போது உலகத்தின் மீதுள்ள பற்று காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக ஆயுள் முழுவதையும் செலவு செய்து சேகரித்து கொண்ட பொருட்கள் சில நொடிகளில் அழிந்தி போய்யின அதேபோன்று மரணத்திலிருந்தும் எம்மால் தப்ப முடியாது போனது என்பது எமக்கு முன்னுள்ள படிப்பினையாகும்
மனிதன் இவ்வுலகில் வாழப் பிறந்தவன். இவ்வுலக வாழ்வின் மூலம் அவன் மறுமைக்கு தயாராகிறான். இவ்வுலகில் மனிதன் தன் வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்பதை மனிதனை படைத்த இறைவன் ஏற்றுக்கொள்ளவில்லை. மனித வாழ்க்கை வரையறுக்கப்பட்டது. இறை கட்டளைகளுக்குட்பட்டது.
எனவே இவ்வுலக வாழ்வில் பூமியில் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். வரம்பு மீறாதீர்கள் இடப்பட்ட கட்டளைகளை வாழ்வின் இலக்குகளாக கொண்டு செயல்படுங்கள் என இறைவன் எச்சரித்துள்ளான். அவற்றை உணர்ந்துக் கொண்டே மனித இனம் மீறும் போது சில நேரம் இயற்கை நிகழ்வுகள் மூலம் மனித இனத்தை எச்சரித்து படிப்பினைக் கற்பிக்கின்றான் இறைவன்.
உலகில் சுனாமி, பூகம்பம், ,புயல், மழை, வெள்ளம், எரிமலை வெடிப்புக்கள் என பல நடந்து கொண்டேயிருக்கின்றது. கடந்த 100 வருடங்களில் மிகவும் மனித இனத்தை பாதித்த சம்பவங்களாக
1923-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தில் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்தனர்.
1935ல் இந்தியாவின் குவெட்டாவில் 50,000 பேரும்,
1939ல் சிலியில் 28,000 பேரும், அதே ஆண்டு துருக்கியில் 33,000 பேரும்,
1960ல் மொரோக்காவில் 12,000 பேரும்,
1976ல் சீனாவில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேரும், அதே ஆண்டு கவுதமாலாவில் 23,000 பேரும்,
1978ல் ஈரானில் 25,000 பேரும்,
1985ல் மெக்ஸிகோவில் 9,500 பேரும்,
1988ல் ஆர்மீனியாவில் 25,000 பேரும்,
1990ல் ஈரானில் 50,000 பேரும்,
1993ல் இந்தியாவின் லட்டூரில் 10,000 பேரும்,
1995ல் ஜப்பானில் 6,000 பேரும்,
1998ல் ஆப்கானிஸ்தான் மற்றும் தாஜிஸ்தானில் 5,000 பேரும்,
1999ல் துருக்கில் 17,000 பேரும்,
2001ல் குஜராத்தில் 13,000 பேரும்,
2003ல் ஈரானில் 41,000 பேரும்
பூகம்பத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இவை பேரழிவு ஏற்படுத்திய பூகம்பங்களின் பட்டியல். இவை தவிர சில ஆயிரக்கணக்கில் பலி கொண்ட பூகம்பங்களும் உண்டு. இவை மனித இனத்தை பெரிதும் பாதித்தாலும் மிருக இனங்கள் பெரிதும் தப்பிகொள்வதாக ஆய்வுகள் சுட்டிகாட்டுகின்றது
فلما رأوه عارضا مستقبل اوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب اليم تدمر كل شيئ بامر ربها فاصبحوا لا يرى الا مسكنهم كذلك نجزى القوم المجرمين 46:24.25
ஆகவே (தண்டனையாகிய) அதனை தங்களது பள்ளத்தாக்குகளை முன்னோக்கிவரும் மேகக் (கூட்டமாக) கண்ட போது இது நமக்கு மழையை பொழிய வைக்கும் மேகமாகும், என்று அவர்கள் கூறிக் கொண்டனர். அல்ல. எதனை நீங்கள் விரைவாக தேடினீர்களோ அந்த ஒன்றாகும். (அது) ஒரு புயற்காற்று,அதில் நோவினை தரும் வேதனை இருக்கிறது (என்று கூறப்பட்டது).46:24.25

மீலாது நபி விழா - சில கேள்விகள்

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...

மீலாது நபி விழா இன்னும் சில நாட்களில் அனுசரிக்கப்பட போவதாக அறிய முடிகின்றது. ஒவ்வொரு முறை இந்நாள் வரும் போதும், ஒரு இனம்புரியாத வருத்தம் இருக்கத்தான் செய்கின்றது. காரணம் எளிமையானது தான். இஸ்லாம் என்னும் வாழ்க்கை முறை சொல்லாததை சிலர் செய்து கொண்டிருக்கின்றனரே என்ற ஆதங்கம் தான். 

ஒவ்வொரு வருடமும் இதுக்குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு, தங்கள் மூதாதையரின் அறியாமைக்கால பழக்கங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியே. இருப்பினும் இதுக்குறித்து நம்மை நாமே பிரதிபலித்து கொள்ளவும், முஸ்லிமல்லாதவர்கள் இந்த விழா குறித்து அறிந்துக்கொள்ளவுமே இந்த பதிவு. 

முதலில், இந்த தேதியில் தான் நபியவர்கள் பிறந்தார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை என்பதை பதிவு செய்துவிட்டு மேற்கொண்டு தொடர்கின்றேன். 

மவ்லிது (Mawlid) என்ற வார்த்தைக்கு பிறப்பு அல்லது பிறந்தநாள் என்ற அர்த்தம் வரும். இது தான் மீலாது என்றும் ஆகி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. 

நபியவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது அல்லது அனுசரிப்பது போன்றவை இஸ்லாத்தில் இல்லை. நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி நிலவுவதாக) அவர்களது காலத்திலோ அல்லது அவர்கள் இறந்து சில நூற்றாண்டுகள் வரையோ இப்படியான பழக்கம் இருந்ததில்லை. 

இறுதித்தூதர் இறந்து சில நூற்றண்டுகளுக்கு பிறகே ஒரு பகுதியினரிடையே இந்த பழக்கம் துவங்குகின்றது. பனிரெண்டாம் நூற்றாண்டுக்கு பிறகே உலகின் பல பகுதிகளிலும் இந்த விழாவிற்கு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின்றனர் முஸ்லிம்கள். 

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்த காலத்திலேயே இந்த விழாவை எதிர்த்து குரல் எழுப்பி இருந்திருக்கின்றனர் சில மார்க்க அறிஞர்கள். தற்காலிகமாக இதனை தடை செய்தும் இருந்திருக்கின்றனர் சில ஆட்சியாளர்கள். 

தேவையா இந்த விழா?

"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக - குர்ஆன் 2:136.

தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள் - குர்ஆன் 2:185

குர்ஆன் மிகத்தெளிவாகவே கூறிவிட்டது, இறைத்தூதர்களிடயே வேறுபாடு காட்ட கூடாதென்று. ஆனால் இன்றோ, மீலாது நபி விழா என்ற பெயரில் நேரடியாக அதனை தான் நாம் செய்துக்கொண்டிருகின்றோம். 

நபிகள் நாயகம் (இவர்கள் மீது அமைதி உண்டாவதாக) அவர்களின் பிறந்த நாளை இன்று அனுசரிக்க முயலும் சிலர், மற்ற நபிமார்களுக்கு ஏன் பிறந்த நாள் விழா கொண்டாடாமல் விட்டார்கள்? ஏன் நபிமார்களிடையே வேறுபாடு காட்டுகின்றார்கள்? சிந்திக்க மாட்டோமா? 

நபியவர்கள் காட்டித்தந்த அழகிய வாழ்க்கைமுறையை சரியான முறையில் பின்பற்ற வக்கற்ற நிலையில் இருக்கும் நமக்கு, மீலாது நபி விழா ஒரு கேடா? இது நியாயம் இல்லை என்பது நமக்கு புரியவில்லையா? 

இறுதி நபியவர்கள் காட்டித்தந்த வழிப்படி வாழ்வது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகச் சரியான மரியாதையே தவிர இம்மாதிரியான விழாக்கள் கொண்டாடுவதில் அல்ல என்பது நம் நினைவுக்கு வரவில்லையா? 

இஸ்லாம் கூறும் பண்டிகைகள் இரண்டு தான். இன்றோ, இந்த மீலாது நபி விழாவையும் மூன்றாவது பண்டிகை போல ஒரு தோற்றத்தை உருவாக்கிவிட்டோமே, இதற்கு மறுமையில் பதில் சொல்லியாக வேண்டும் என்ற அச்சம் நம்மிடையே இல்லாமல் போய்விட்டதா?

தர்க்காக்கள் என்னும் மூடநம்பிக்கை, இஸ்லாமின் பெயரால் நம் சமூகத்தில் ஏற்படுத்திய சீரழிவை நாம் நன்கு அறிந்தே இருக்கின்றோம். இப்போது இந்த மீலாது நபி விழா என்னும் அறியாமை பழக்கமும் அந்த திசையில் பயணிக்க நாம் அனுமதிக்க வேண்டுமா? 

இதுப்போன்ற விழாக்களால், இஸ்லாமும் இப்படித்தான் போல என்று பலரையும் விலகிச்செல்ல வைத்திருக்கின்றோமே, இதனையாவது உணர்ந்தோமா?

இதையெல்லாம் தாண்டி, மீலாது நபி விழா கொண்டாடவேண்டிய அவசியம் என்ன வந்தது? முஸ்லிம்களாகிய நாம் தினந்தோறும் நம் வாழ்வில் நபியவர்களை நினைவுக்கூர்ந்து கொண்டு தானே இருக்கின்றோம், அப்படியிருக்க இந்த விழாவிற்கு தேவை என்ன வந்தது? 

சிந்திப்போம்..மீலாது விழாவிற்கு ஆதரவளிக்கும் முஸ்லிம்கள் நிச்சயம் சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றார்கள். மார்க்கத்தில் புதுமைகளை புகுத்தாதீர்கள் என்ற நபிமொழியை நினைவுக்கூறவும் இந்நேரத்தில் நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். 

இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு:

இன்று, ஒரு கிளிக்கில் இஸ்லாம் குறித்து நாம் அறிந்துக்கொள்கின்றோம். பலருக்கு எடுத்தும் சொல்கின்றோம். இஸ்லாமின் பெயரால் நம் மூதாதையர் நடத்திக்கொண்டிருந்த பல தவறான பழக்கங்களை தகர்த்தெறிந்து இருக்கின்றோம். அதே முயற்சியை இந்த விசயத்திலும் காட்டுவோம். கூடிய விரைவில் இறைவனின் துணைக்கொண்டு இந்த அறியாமைக்கால விழாவை ஒழித்துக்கட்டுவோம், இஸ்லாமை இன்னும் வேகமாக பலருக்கும் கொண்டு சேர்ப்போம். இன்ஷா அல்லாஹ் 

முஸ்லிமல்லாதவர்களுக்கு: 

தயவுக்கூர்ந்து, மீலாது நபி விழாவிற்கு வாழ்த்து தெரிவித்து எங்களை சங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம். புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகின்றோம். 

இறைவா, இம்மாதிரியான பழக்கவழக்கங்களில் இருந்து எங்களை காத்தருள்வாயாக..ஆமீன்..

இறைவனே எல்லாம் அறிந்தவன்..

வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
http://www.ethirkkural.com/2012/02/blog-post.html 

பைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT

நீங்கள் பென்டிரைவ், எக்ஸ்டெர்னல் ஹர்ட்டிஸ்க் போன்றவற்றைப் பயன்படுத்தும் போது அடிக்கடி கேள்விப் பட்டிருக்கும் விடயம், பைல் சிஸ்டம்! அண்ட்ராய்டு போன்களில் SD கார்ட்களைப் பயன்படுத்தும் போதும் இவற்றைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். சில வேலைகளில் பெரிய பைல்களை கணனியில் இருந்து USB பிளாஷ் டிரைவ்களுக்கு இடம்மாற்றும் போது, சில சிக்கல்களை நீங்கள் எதிர்நோக்கியிருக்கலாம்.
முக்கியமாக போர்மட் செய்யும் போது, பைல் சிஸ்டம் என்கிற இடத்தில் இருக்கும் தெரிவில் எதனைத் தெரிவு செய்யவேண்டும் என்றும் குழப்பம் வரலாம். அதற்காகவேதான் இந்தப் பதிவு.
பல்வேறுபட்ட வித்தியாசமான பைல் சிஸ்டங்கள் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்.
பொதுவாக விண்டோஸ் இயங்கு முறையில் மூன்றுவிதமான பைல் சிஸ்டங்கள் உண்டு.
  1. FAT32
  2. exFAT
  3. NTFS
லினக்ஸ் இயங்கு முறைமை தனக்கென்று வேறுபட்ட பைல் சிஸ்டங்களைக் கொண்டுள்ளது. பெருவாரியாக கணனிகள், மற்றும் USB கருவிகளில் பயன்படுத்தும் பைல் சிஸ்டங்கள் விண்டோஸ் இயங்கு முறைமை சார்ந்ததால், அவற்றைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

FAT32 பைல் சிஸ்டம்

அதிகளவான கணனிகள் மற்றும் இலத்திரனியல் கருவிகள், அண்ட்ராய்டு, லினக்ஸ் என்று பெருமளவான முறைமைகளால் ஆதரிக்கப்படும் ஒரு பைல் சிஸ்டம். இதனால் இது மிகவும் பிரபல்யமான ஒரு பைல் சிஸ்டம்.
மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 95 இயங்கு முறைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட பைல் சிஸ்டம் இதுவாகும், ஆகவே இது மிகவும் பழைய பைல் சிஸ்டம். இதனால் இது அதிகளவான கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக நீங்கள் புதிதாக வாங்கும் USB பிளாஷ் டிரைவ்களில் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. மேலும் SD கார்டுகள், மைக்ரோ SD கார்டுகள் என்பனவற்றிலும் இந்த பைல் சிஸ்டமே வருகிறது. (தேவையென்றால் நீங்கள் போர்மட் செய்து மாற்றிக்கொள்ள முடியும்).
இப்படி வருவதற்குக் காரணம், விண்டோஸ், லினக்ஸ், மக்ஒஸ், அண்ட்ராய்டு மற்றும் புகைப்படக் கருவிகள், ஸ்மார்ட் TV, விளையாட்டுக் கருவிகள் என்று எல்லாமே இந்த FAT32 ஐ ஆதரிக்கின்றன.
பைல் சிஸ்டம் என்கிற பரப்பில் இதுவொரு நியமமாக ஆகிவிட்டது என்றே கூறலாம்.
எப்படியிருப்பினும், தற்போதைய விண்டோஸ் இயங்கு முறைமை FAT32 பைல் சிஸ்டத்தை பயன்படுத்துவதில்லை. காரணம் பின்வருவன.
  1. FAT32 இல் ஒரு தனி பைல் 4GB அளவைவிட அதிகமாக இருக்க முடியாது. பெரும்பாலும் இது பல பைல்களுக்குப் பிரச்சினை இல்லை என்றாலும், தற்போதைய திரைப்படங்கள், கணணி விளையாட்டுக்கள், மற்றும் சில மென்பொருட்களின் பைல் அளவுகள், பல GBக்களை தாண்டுகின்றன, இதனால் இந்த பைல்களை FAT32 முறையில் இருக்கும் ஒரு சேமிப்பகத்தில் சேமிக்க முடியாது.
  2. தபோதைய விண்டோஸ் இயங்கு முறைமைகள் பயன்படுத்தும் பைல் சிஸ்டமாகிய NTFS பல்வேறுபட்ட பாதுகாப்பு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் மூலம், பல்வேறுபட்ட தாக்குதல்களில் இருந்து NTFS பைல் சிஸ்டம் பைல்களை பாதுகாப்பதுடன், பைல்கள் பாதிப்படைவதையும் குறைக்கின்றது.
  3. மேலும் FAT23 முறையில் இருக்கும் ஒரு ஹார்ட்டிஸ்க் பார்டிசன் 8TB ஐ விட அதிகமாக இருக்க முடியாது.
இப்படியான குறைபாடுகளால் FAT32 புதிய விண்டோஸ் இயங்கு முறைமைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் போர்டபல் கருவிகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

NTFS பைல் சிஸ்டம்

விண்டோஸ் இயங்கு முறைமை தற்போது பயன்படுத்தும் பைல் சிஸ்டம் இதுவாகும். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால், நீங்கள் விண்டோஸ் இயங்கு முறைமையை நிறுவினால், அந்த சேமிப்பகத்தை விண்டோஸ் NTFS பைல் சிஸ்டமாக போர்மட் செய்துவிடும்.
முதன் முதலாக விண்டோஸ் NT 3.1 இல் (1993) அறிமுகப்படுத்தப்பட்டாலும், விண்டோஸ் xp இல் இது பொதுவான பயன்பாட்டிற்கு வந்தது எனலாம்.
FAT32 இல் உள்ள உச்சக்கட்ட வரம்பு போன்றவை NTFS இற்கு இருப்பினும், அது மிகப்பெரியது என்பதால் அதனைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உதாரணமாக NTFS இல் சேமிக்கக்கூடிய ஒரு பைலின் அளவு 16EB ஆகும். EB என்பது Exabyte ஆகும்.
1000GB ஒரு TB, 1000TB ஒரு PB, 1000PB ஒரு EB. தற்போது உங்களுக்கு EB எவ்வளவு பெரியது என்று புரிந்திருக்கும்.
FAT32 உடன் ஒப்பிடும் போது NTFS பைல் சிஸ்டத்தில் பல நல்ல அம்சங்கள் உண்டு. இது பாதுகாப்பு அனுமதி முறையைத் தன்னகத்தே கொண்டுள்ளது, மேலும் பைல்களில் ஏற்படும் மாற்றங்களை குறித்து வைப்பதன் மூலம், திடீர் என்று ஏற்படும் பிழைகளைத் திருத்த உதவுகிறது.
மேலும் Shadow Copy மூலம் backup செய்யும் வசதி, என்கிரிப்சன் மேலும் பல வசதிகளை NTFS கொண்டுள்ளது. விண்டோஸ் இயங்குமுறை பாதுகாப்பாக இயங்க NTFS இன் பல்வேறு அம்சங்கள் உதவுகின்றன.
NTFS இல் இருக்கும் சிக்கல் என்னவென்று பார்த்தால், அது மற்றைய இயங்குமுறைமைகளால் ஆதரிக்கப்படாமையே ஆகும். அப்பிள் நிறுவனத்தின் மக்ஒஸ் இயங்கு முறைமையால் NTFS இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்க மட்டுமே முடியும், அதனால், NTFS இல் சேமிக்க முடியாது. பல்வேறு லினக்ஸ் இயங்கு முறைமைகள், மக்ஒஸ் போலவே NTFS பைல்களை வசிக்க மட்டும் செய்கிறது, சில லினக்ஸ் இயங்கு முறைமைகள் மட்டும் வாசிக்கவும், சேமிக்கவும் வசதியை வழங்குகின்றன.
அதேபோல சோனி நிறுவனத்தின் PlayStation மற்றும் Xbox360 ஆகிய விளையாட்டுக்கருவிகள் NTFS ஐ ஆதரிப்பது இல்லை. மைக்ரோசாப்ட்டின் புதிய விளையாட்டுக்கருவியான XBoxOne தற்போது NTFS ஐ ஆதரிக்கிறது. காரணம் இது விண்டோஸ் 10 ஐயே தனது இயங்கு முறைமையாகக் கொண்டுள்ளது.
ஆகவே NTFS இல் இருக்கும் பெரிய குறைபாடு என்றால், அது பல்வேறு தளங்களில் ஆதரிக்கப்படாமையே ஆகும்.
ஆகவே நீங்கள் பல்வேறு வகையான கருவிகளையும் இயங்கு முறைமைகளையும் பயன்படுத்துவீர்கள் என்றால் உதாரணமாக மக்ஒஸ், லினக்ஸ், ஸ்மார்ட்டிவி; இவற்றுக்கிடையில் பைல்களை பரிமாற்ற நீங்கள் NTFS பைல் சிஸ்டத்தில் இருக்கும் சேமிப்பகத்தைப் பயன்படுத்த முடியாது.

exFAT பைல் சிஸ்டம்

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பைல் சிஸ்டம், பிளாஷ் சேமிப்பகங்களுக்காகவே உருவாக்கப்பட்டது எனலாம். ஆகவே இது எளிமையான ஒரு பைல் சிஸ்டம், FAT32 பைல் சிஸ்டத்தில் இருந்த குறைபாடுகள் இதில் இல்லை.
அதாவது, ஒரு பைலின் ஆகப்பெரிய அளவு 4 GB என்கிற கட்டுப்பாடு எல்லாம் இதில் இல்லை. ஆகவே பெரிய பைல்களையும் இந்த exFAT ஐப் பயன்படுத்தி சேமிக்கலாம். ஆகவே SD கார்டு, பிளாஷ் டிஸ்க் போன்றவற்றிக்கு இது உகந்தது.
மேலும் NTFS போல் அல்லாமல், மற்றைய பலவேறு இயங்கு முறைமைகள் இந்த exFAT ஐ ஆதரிக்கின்றன. உதாரணமாக மக்ஒஸ், exFAT இல் இருக்கும் சேமிப்பகத்தில் இருக்கும் பைல்களை வாசிக்கவும், அதே நேரத்தில்புதிய பைல்களை சேமிக்கவும் வசதியளிக்கிறது. NTFS இல் வாசிக்கமட்டுமே முடியும்.
ஆனாலும் பல்வேறு பழைய FAT32 ஐ மட்டுமே ஆதரிக்கும் கருவிகள் அல்லது இயங்கு முறைமைகள், exFAT ஐ ஆதரிப்பது இல்லை. ஆனாலும் NTFS அயல் ஆதரிக்கும் முறைமைகளைவிட இதனை ஆதரிக்கும் முறைமைகள் அதிகம் என்றே கூறலாம்.
பொதுவாக exFAT உங்கள் பிளாஷ் டிஸ்க்களில் பயன்படுத்த உகந்தது. எப்படியிருப்பினும் நீங்கள் பாவிக்கபோகும் கருவிகள் exFAT ஐ ஆதரிக்கின்றனவா என்று சரிபார்த்துக்கொல்வது அவசியம்.

https://parimaanam.wordpress.com

இலங்கை வரலாற்றில் இப்படியொரு ஜனாதிபதியா?

யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால, யாழ் திறப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள இடம்பெயர்ந்தோர் முகாமுக்குச் சென்று அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதி, மக்களின் குடிசைகளுக்குள் சென்று உட்கார்ந்து நலம் விசாரித்ததுடன், அவர்கள் சமைத்து உண்ணும் உணவினையும் பார்வையிட்டமை அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறுவர்கள் உட்பட அனைத்து தரப்பினரிடமும் ஜனாதிபதி இங்கு மிகவும் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

நாம்புளுவையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார்.

நாம்புளுவையைச் சேர்ந்த  அல்ஹாஜ் எம்.வை. எம். நிஸாம் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அந்நார் கஹடோவிடாவைச் சேர்ந்த மர்ஹும் பிந்தி நிஹாரா அவர்களின் அன்புக் கணவரும், ஸப்வான், சிஹான், ரிஸ்னா, ரம்ஸான் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை சனிக்கிழமை (19.12.2015) காலை 9.00 மணியளவில் நாம்புளுவ ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) அவர்களின் தாயார் காலமானார்.

சகோதரா் சில்மி ஹாஜி (மெடி லப்) மற்றும் இல்ஹாம் ஆகியோரின் தாயாரும், மர்ஹும் அன்ஸார் (கிராம சேவகர்) அவர்களின் மனைவியுமான சகோதரி உம்மு ஜிபிரியா அவர்கள் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை (14.12.2015) 9.00 மணியலவில் முகியத்தீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار    

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

இலங்கையில் இடம்பெற்ற மோசமான விமான விபத்து: இன்றுடன் 41 வருடங்கள்

இலங்கையின் மோசமான விமான விபத்து இடம்பெற்று இன்றுடன் 41 வருடம் பூர்த்தியாகின்றது.

1974.12.04ம் திகதி மக்காவுக்கு சென்று கொண்டிருந்த ஒல்லாந்தைச் சேர்ந்த மார்டின் எயார் டி.சி 8 என்ற விமானம் இந்தோனேசியாவின் சுரவெயார் விமான நிலையத்தில் இருந்து யாத்ரீகர்கள் 182 மற்றும் விமான ஊழியர்கள் ஒன்பது பேருடன் பயணித்துக்கொண்டிருந்துள்ளது.

இந்நாட்டு நேரப்படி இரவு 10.10 க்கு அக்கரபத்தனை , நோவுட் காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு மேலாக பறக்கும் போது சுவப்தகண்ய மலையில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அதில் பயணித்த 191 பேரும்  உயிரிழந்திருந்தனர். இதில் ஒரு பெண்ணின் சடலத்தை தவிர அனைத்தும் அந்த மலைக்கு கீழேயே புதைக்கப்பட்டுள்ளன.

மேலும் பணிப்பெண்ணாக இருந்த பெண்ணொருவரின் சடலத்தை அவரது காதலர் , இந்தோனேசியாவில் இருந்து ஹெலிகொப்டரில் வந்து அவரது சொந்த நாட்டுக்கு எடுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இதன்போது விமானத்தில் இருந்த பயணிகளின் பெருந்தொகையான பணத்தை மக்கள் எடுத்துச் சென்றுள்ளனர். 

நெதர்லாந்து நாட்டு விமானியொருவரே விமானத்தை செலுத்தியுள்ளார். தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணமென பின்னர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.