கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஜனாஸா அறிவித்தல்

கொச்சிவத்தையைச் சேர்ந்த அல்ஹாஜ் H.L.M. றியாழ் அவர்கள் காலமானார். அன்னார் காலஞ்சென்ற நூர் நழீரா அவர்களின் அன்புக் கணவரும் ஜிப்ரி ,பாருக் ,உவைஸ், ரிஸ்வி, பாத்திமா பீவி, ஆசிரியைகளான சித்தி பௌஸியா, அஸ்மா ஆகியோரின் தந்தையும் நிஸ்தார் ,அஜ்வாத், மாஹிர் ஆசிரியர் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

 அன்னாரின் ஜனாஸா இன்று (2010.10.30) சனிக்கிழமை இரவு 10.00 மணியளவில் முஹியித்தீன் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை :தொல்.திருமாவளவன்

சென்னை : காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் எந்தக் குற்றமும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஷ்மீர் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை தெரிவித்த உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராயின் குரலை நெறிக்க முயற்சி செய்யும் மத்திய அரசின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்.பாஜகவை திருப்திப்படுத்துவதற்காக காங்கிரஸ் அரசு இப்படி செயல்படுவது வெட்கக் கேடு. காஷ்மீர் மக்கள் விடுதலையை விரும்புகின்றனர் என்பது எல்லாரும் அறிந்த உண்மை.அங்கு 2 இஸ்லாமிய பெண்கள் கற்பழிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பிறகுதான் அவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் அருந்ததி ராய் பேசியதில் குற்றம் எதுவுமில்லை. யாரையும் தூண்டுவது போலவும் அவர் பேசவில்லை. காஷ்மீர் மக்கள் மற்றும் ஜனநாயக நாட்டமுள்ளவர்களின் எண்ணத்தின் எதிரொலிதான் அவரது கருத்தில் பிரதிபலிக்கிறது.காஷ்மீர் விவகாரத்தில் இருந்த மெளனத்தை உடைத்த அருந்ததி ராயை நான் பாராட்டுகிறேன். அவருக்கு இந்த விவகாரத்தில் முழு ஆதரவு அளிக்கிறோம்.ஜனநாயக அமைப்புகள், தலைவர்கள், அவருக்கு உறுதுணையாக இருந்து பேச்சுரிமையை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

உலகக்கிண்ணப் புகழ் ஒக்டோபஸ் உயிரிழந்தது


உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடரின்போது சரியான எதிர்வுகூறல்கள் பலவற்றினால் புகழ்பெற்ற, போல் எனும் ஒக்டோபஸ் விலங்கு உயிரிழந்துள்ளதாக ஜேர்மன் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியின் ஒபர்ஹெஸன் கடல் உயிரினப்பூங்காவில் இந்த ஒக்டோபஸ் விலங்கு வசித்து வந்தது. இன்று காலை அவ்விலங்கு உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக மேற்படி நீரியில் பூங்கா விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒக்டோபஸுக்காக நினைவுச் சின்னமொன்றையும் நிர்மாணிக்கவுள்ளதாகவும் அப்பூங்கா அறிவித்துள்ளது.
உலகக்கிண்ண இறுதிப்போட்டி, அரையிறுதிப் போட்டிகள் உட்பட 8 முக்கிய போட்டிகளில் வெற்றிபெறும் அணி எது என்பதை போட்டிகளுக்கு முன்பாகவே மேற்படி ஒக்டோபஸ் சரியாக எதிர்வுகூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த போட்டிகளில் பங்குபற்றும் நாடுகளின் தேசியக்கொடிகள் பொறிக்கப்பட்ட இரு கண்ணாடிப் பெட்டிகளில் வெற்றி பெறப்போகும் அணியின் கொடிபொறித்த பெட்டியை தனது தொட்டிக்குள் இறக்குவதன் மூலம் மேற்படி ஒக்டோபஸ் எதிர்வு கூறியது. இந்த எதிர்வுகூறல் செயற்பாடுகளை உலகெங்குமுள்ள பல தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பியமை குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் முன்னணி வகிக்கும் 'கர்காரேயைக் கொன்றது யார்?' புத்தகம்.


புதுடெல்லி:ரகசிய உடன்படிக்கையின் காரணமாகவோ அல்லது காழ்ப்புணர்வினாலோ தேசிய ஊடகங்களால் புறக்கணிக்கப்பட்ட 'Who Killed Karkare' (கர்காரேயைக் கொன்றது யார்?) புத்தகம் விற்பனையில் முன்னணி வகிக்கிறது. புத்தகம் வெளியிட்டு 7 மாதத்திற்குள் 4-ஆம் பதிப்பிற்கு தயாராகி வருகிறது அப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். மும்பைத் தாக்குதல் நடைபெற்று ஓராண்டு நிறைவுற சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது 2009 அக்டோபர் மாதத்தில் தான் மஹாராஷ்ட்ரா மாநில காவல்துறை ஐ.ஜியாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற எஸ்.எம்.முஷ்ரிஃப் எழுதிய 'கர்காரேயைக் கொன்றது யார்?' என்ற ஆங்கில புத்தகம் வெளியிடப்பட்டது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபரோஸ் மீடியாதான் இப்புத்தகத்தின் வெளியீட்டு நிறுவனம். இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளைக் குறித்த புலனாய்வுகள், புலனாய்வுத் துறைகளின் பங்கு, மும்பைத் தாக்குதலின் பின்னணிகள், அதைக் குறித்த புலனாய்வு உள்ளிட்ட விஷயங்களை இப்புத்தகத்தில் காணலாம். இந்தியாவில் நடைபெற்ற எல்லாக் குண்டுவெடிப்புகளுக்கும் காரணம் 'இஸ்லாமிய தீவிரவாதம்' என்று தீவிரமாக நடைபெற்று வரும் பிரச்சாரத்திலிருந்து வித்தியாசமாக இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு பின்னணியில் பிராமண லாபி செயல்படுவதாக அப்புத்தகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் எஸ்.எம்.முஷ்ரிஃப். ஐ.பி மற்றும் ஊடகங்களின் மீதான தங்களின் ஆதிக்கத்தை பயன்படுத்தி அவர்கள் இதனை சாத்தியமாக்குவதாகவும் அப்புத்தகம் கூறுகிறது.

போலீஸ் வாழ்க்கையின் அனுபவங்கள், பத்திரிகை குறிப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் இப்புத்தகத்தை எழுதியுள்ளார் எஸ்.எம்.முஷ்ரிஃப்.இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் 'உண்மையான' முகத்தை வெளிப்படுத்துவதால் தான் தேசிய ஊடகங்கள் இப்புத்தகத்தை புறக்கணிக்க காரணமாகயிருக்கலாம் என சுதந்திர பத்திரிகையாளரான சுபாஷ் கடாடே தெரிவிக்கிறார்.மேலும் தேசிய முக்கிய ஊடகங்களுக்கும் ஐ.பிக்கும் இடையிலான ரகசிய தொடர்பை இப்புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக கூறுகிறார் சுபாஷ் கடாடே.

இப்புத்தகத்தின் 3-வது பதிப்பு தற்பொழுது விற்பனையில் உள்ளது. நான்காவது பதிப்பை வெளியிடுவதற்கு தயாராகி வருகிறார்கள் பதிப்பகத்தார். உருது, தமிழ் (விடியல் வெள்ளி மாத இதழில் தொடராகவும் வெளிவருகிறது), கன்னடம், மலையாளம்(தேஜஸ் பப்ளிகேஷன்) ஆகிய மொழிகளில் வெளிவந்துள்ளது.
மராத்தி, குஜராத்தி,ஹிந்தி,பெங்காளி ஆகிய மொழிகளில் விரைவில் வெளிவர இருக்கிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தினமும் 10 to 20 புத்தகங்களுக்கு ஆர்டர் வருவதாக தெரிவிக்கிறார் பதிப்பகத்தின் மாஸின் கான். மாஸின் கானின் சக பத்திரிகையாளரான கவுசர் கூறுகையில், "ஹைதராபாத்தில் சமீபத்தில் நடந்த NCPUL புத்தக கண்காட்சியில் அதிக விற்பனையான புத்தகம் who killed karkare ஆகும். புத்தக கண்காட்சியைப் பற்றிச் செய்தி வெளியிட்ட எந்தவொரு பத்திரிகையும் அதிகம் விற்பனையான இப்புத்தகத்தைப் பற்றி எவ்வித விமர்சனத்தையும் வெளியிடவில்லை" என ஆதங்கப்படுகிறார்.
கவுசர் மேலும் கூறுகையில், தேசிய அளவிலான முக்கிய ஊடகங்களுக்கு மாற்றீடாக கருதப்படும் தெஹல்கா மற்றும் எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி கூட இப்புத்தகத்தைக் குறித்து ஒரு செய்தியையும் வெளியிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக தெரிவிக்கிறார்.

ஆனால் மும்பைத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஏ.சி.பி.அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே எழுதிய 'To the last Bullet' என்ற புத்தகத்தை தேசிய முக்கிய ஊடகங்கள் கொண்டாடுகின்றன.
பயங்கரவாதத்தின் அரசியலையும், புலனாய்வில் ஏற்பட்டுள்ள பழுதுகளையும் சுட்டிக்காட்டும் 'who killed karkare' யை புறக்கணிக்கும் தேசிய பத்திரிகைகளுக்கு காம்தேவின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும், மும்பை போலீசுடனான கசப்பான அனுபவங்களையும் கூறும் 'To the last Bullet' புத்தகம் விருப்பமானதாக மாறியது எவ்வாறு என்பது தனக்கு புரியவில்லை என்கிறார் வெளியீட்டாளரான மாஸின்.

சமீபத்தில் 'தி ஹிந்து' பத்திரிகையின் விஜயவாடா பதிப்பில் மக்கள் அதிகம் விரும்பும் புத்தகங்களின் பட்டியலில் 'who killed karkare' புத்தகத்தையும் உட்படுத்தியிருந்தனர்.

கர்காரே படுகொலை: பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!!


கர்காரே படுகொலை:பதில் அளிக்க போலீசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!!!
மும்பை,அக்.21:மும்பை தாக்குதலின்போது மர்மமான முறையில் கொல்லப்பட்ட மஹாராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படைத் தலைவர் ஹேமந்த் கர்காரேயின் கொலையின் பின்னணியில் ஹிந்துத்துவா சக்திகள் செயல்பட்டுள்ளன என்பதனை சுட்டிக்காட்டி
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் பதில் அளிக்க மும்பை போலீஸ் கமிஷனருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பீகார் மாநில எம்.எல்.ஏக்களான ராதாகாந்த் யாதவும், ஜோதி பெடேக்கரும் சமர்ப்பித்த மனுக்களை பரிசீலித்த உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மும்பை தாக்குதலின்போது காமா மருத்துவமனையில் நடந்த தாக்குதலுக்கு காரணம், அஜ்மல் கஸாபோ அல்லது அபூ இஸ்மாயிலோ காரணமல்ல எனவும், அத்தாக்குதலின் பின்னணியில் அபினவ் பாரத் என்ற ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் செயல்பட்டுள்ளது எனவும் ராதாகாந்த் யாதவ் தான் அளித்த மனுவில் கூறியுள்ளார்.

2008 ஆம் ஆண்டு மலேகானில் நடந்த குண்டுவெடிப்பில் அதற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளான அபினவ் பாரத் பயங்கரவாதிகளை கர்காரே கைதுச் செய்திருந்தார். இதற்கு பழிவாங்க அபினவ் பாரத் கர்காரேக்கு குறிவைத்தது.

முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலான எஸ்.எம்.முஷ்ரிஃப் தனது கர்காரேயைக் கொன்றது யார்? என்ற நூலிலும் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக யாதவ் குற்றஞ்சாட்டுகிறார். இதனைக் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தவேண்டும் என ராதாகாந்த் யாத் கோரிக்கை விடுத்துள்ளார்.

முஷ்ரிஃப் எழுதிய புத்தகங்களில் உண்மைகளல்ல, அபிப்ராயங்கள்தான் உள்ளன என அரசு தரப்பில் வாதாடிய துணை சோலிசிட்டர் ஜெனரல் டாரியஸ் கம்பாட்டா வாதிட்ட பிறகும் நீதிமன்றம் அதனை அங்கீகரிக்கவில்லை.

கர்காரேயின் மரணத்தைக் குறித்து வேறு சிலரும் சந்தேகத்தை முன்வைத்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், பொறுப்பான போலீஸ் அதிகாரி இதற்கு பதிலளிக்கவேண்டுமென உத்தரவிட்டது.
இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவம்பர் 29 ஆம் தேதி இதற்கு பதில் அளிக்கப்படும் என அரசுதரப்பு வழக்கறிஞர் பி.எ.பால் அறிவித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆஸ்பத்திரிகளில் 24 மணிநேரமும் ஓ.பி.டி திறப்பு

நாட்டின் சகல அரசாங்க ஆஸ்பத்திரிக ளிலும் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளை 24 மணி நேரமும் திறந்து சேவை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

சுகாதார அமைச்சின் செயலாளருக்கு இந்தப் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.

வாரத்தின் ஏழு நாட்களும் வெளிநோயா ளர் பிரிவுகளில் 24 மணி நேர சேவை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

வெளிநோயாளர் பிரிவுகளுக்கு தினந்தோறும் பெருமளவு மக்கள் சிகிச்சைக்காக வருகை தருகின்ற நிலையில் ஆஸ்பத்திரிகளில் நிலவும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கு மேற்படி நடவடிக்கை உதவுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி; இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்தி விரைவாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளு க்குத் தேவையான சிகிச்சைகள், பரிசோத னைகள் அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்குவதில் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, தொற்றுநோய் உட்பட சகல நோய்களுக்கும் உடனடி சிகிச்சைகளை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டு ள்ளார். இது தொடர்பில் சகல ஆஸ்பத்திரிகளின் அதிகாரிகளுக்கும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் பணித்துள்ளார்.

நாட்டின் சுகாதாரத்துறை மேம்பாட்டிற் கான முக்கிய நடவடிக்கையாக இத்திட்டம் அமைவதுடன் பல்வேறு நோய்களினால் அவஸ்தைப்படும் நோயாளிகளுக்கு இது பெரும் வரப்பிரசாதமாகவும் அமையும்.

அத்துடன் நாட்டு மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கையை இதன் மூலம் உறுதிப்படுத்தவும் முடியும்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சுகாதார, அமைச்சின் செயலாளர் 24 மணித்தியாலமும் வெளி நோயாளர் பிரிவை திறந்து வைத்து சேவைகளை வழங்கும் யோசனை ஏற்கனவே இருந்ததாக குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பணிப்புரை மற்றும் வழிகாட்டல்களுக்கமைய இத்திட்டத்தை செயற்படுத்துவதுடன் ஆரம்பத்தில் முக்கிய பெரியாஸ்பத்திரிகளில் இதனை நடைமுறைப்படுத்தவும் அடுத்த கட்டமாக அதனை சகல ஆஸ்பத்திரிகளுக்கும் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் டொக்டர்கள், மருந்தக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி விரைவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதால் அவர் நாடு திரும்பியதும் இந்நடவடிக்கைகள் முனைப்புப் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ஸ)


ஆர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மீண்டும் மாரடோனா .

ஆர்ஜென்டினா காற்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக, மீண்டும் மரோடோனா நியமிக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது. இந் நியமனத்துக்கு அவர் விருப்பம் தெரிவித்திருப்பதாகவும், அந்நாட்டின் அரசியற் பிரமுகர்கள் பலரும் இந்தக் கோரிக்கையைத் தனக்கு விடுத்திருப்பதனால், அப் பொறுப்பினைத் தான் மீண்டும் நிச்சயம் ஏற்றுக் கொளவதாகவும் தெரிவித்தார்.

தென்னாபிரிக்காவில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக் காற்பந்தாட்டப் போட்டிகளில், ஆர்ஜென்டினா அணி தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, எழுந்த சர்ச்சசைகளினால், அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் காற்பந்தாட்டச் சாம்பியன் மாராடோனா நீக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு அவர் நீக்கபட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியும் எதிர்ப்பும் கிளம்பியிருந்ததது குறிப்பிடத்தக்கது.

டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாத்தை நோக்கி!

ஈரானுக்கு சில நாட்கள் சென்றிருந்த டோனி பிளேயர் மனைவியின் தங்கை இஸ்லாம் மாதத்தில் கொண்ட ஈடுபாடுகளின் காரணமாக மதம் மாறி விட்டார் எனத் தெரிய வந்துள்ளது. ஊடகவியலாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பணியாற்றி வரும் 43 வயதான லாரன பூத் செர்ரி பிளேயரின் தங்கை.

 இவர் தற்போது வெளியில் செல்லும் போது பர்தா அணியாமல் செலவதில்லையாம். தினமும் 5 முறை மறக்காமல் இறை வழிபாடும் செய்து வருகிறாராம்.

 தற்போது ஈரானில் இருக்கும் அவர் 6 வாரங்களுக்கு முன்னர் கோம் நகரில் உள்ள பாத்திமா அல்-மாஸுமெஹ் என்ற புண்ணிய தலத்திற்கு சென்றிருந்த போது அங்கு சிறிது நேரம் உட்கார்ந்திருக்கையில் ஏதோ ஒரு தெய்வீக ஒளி தன் மீது பரவியதை உணர்ந்தாராம்.

 அதன் பின்னரே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக பிரிட்டன் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். தற்போது இவர் பன்றிக்கறி சாப்பிடுவதில்லையாம். 45 நாட்களாக மது பானங்கள் ஏதும் அருந்தவில்லையாம்.

 வாழ்க்கையிலேயே இதுவரை அப்படி இருந்ததில்லை என்றும் கூறுகிறார். தினமும் குரான் படிக்கிறாராம். பிரிட்டன் வந்த உடன் முதல் வேலை மதம் மாறுவது தான் என்கிறார் லாரன பூத்.

மீண்டும் விக்கிலீக்ஸில் ரகசியக் கசிவுகள்


விக்கிலீக்ஸ் குற்றச்சாட்டுக்கள்

விக்கிலீக்ஸ் இணையதளம் கிட்டதட்ட 4 லட்சம் அமெரிக்க இராணுவ ரகசிய பதிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த பதிவுகள் மூலம் இராக்கிய அதிகாரிகளின் சித்ரவதைகள் பற்றி தெரிந்து இருந்தும் அமெரிக்க இராணுவத்தினர் அதனை கண்டுகொள்ளவில்லை என அறிய வருகிறது. அத்தோடு அமெரிக்க இராணுவத்தின் சோதனை சாவடிகளில் பல நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பதிவுகள் கூறுகின்றன.

மேலும் பொதுமக்கள் கொல்லப்பட்டது குறித்த ஆவணங்கள் கைவசம் இருந்தும், அவ்வாறு எவ்வித ஆவணமும் இல்லை என அமெரிக்கா முன்னர் மறுத்து வந்ததும் தெரிய வருகிறது. இராக் மீது போர் தொடுத்த பின்னர் பலியானவர்களின் எண்ணிக்கையானது 1,09,000 என்றும், அவற்றில் 66,081 பேர் பொதுமக்கள் என்றும் இப்போது அறிய வருகிறது.

ஆனால் இந்த தகவலை எல்லாம் நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம், இதெல்லாம் மேலோட்டமான தகவல்கள் என கூறியுள்ளது. மேலும் சித்ரவதை மற்றும் முறைகேடான நடவடிக்கை இருந்தால், அவை குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுப்பதை தாங்கள் கோட்பாடாகவே வைத்திருப்பதாகவும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லண்டனில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனரான ஜூலியன் அஸாங்கே, ஒவ்வொரு நாளும் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான இந்த பதிவுகள், இந்த போரால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிப்பாக கூறினார். மேலும் தினம் தினம் ஒன்று அல்லது இரண்டு பேர் கொல்லப்படும் சின்ன சின்ன சம்பவங்களின் ஒட்டு மொத்தமான எண்ணிக்கை தான் இது என்றும் கூறினார்.

இந்த பதிவுகள், தினந்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும், சின்ன தாக்குதல்கள் என்று வர்ணிக்கப்படும் சம்பவங்களால் ஏற்படும் பாதிப்புகளை காட்டுவதாக விக்கிலீக்ஸுடன் இணைந்து பணி புரியும் ‘இராக் பாடி கவுண்ட்’ அமைப்பின் ஜான் ஸ்லபோடா கூறினார்.



அமெரிக்கா விசனம்

ஹிலரி கிளிண்டன்

முன்னதாக விக்கிலீக்ஸ் பதிவுகளை வெளியிடுவது தவறு என்று கூறியிருந்த அமெரிக்க ராஜாங்கத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன், இந்த தகவலால் பலருக்கு உயிராபத்து ஏற்படும் என கூறியிருந்தார்.

ஆனால் மிகவும் தணிக்கை செய்து வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தால் எந்த ஒரு ஆபத்தும் வரப்போவதில்லை என தெரிவித்துள்ள விக்கிலீக்ஸ், இந்த ஆவணங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவலை கொண்டு சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்க போவதாகவும் கூறியுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள பதிவுகளில் ஒன்றில், டலஃபார் நகரத்தில் இராக்கிய இராணுவத்தினர் நபர் ஒருவரை கொன்றது தொடர்பான காட்சிநாடா அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த கொடூர செயலில் ஈடுப்பட்டவர்களில் ஒருவரின் பெயர் கூட அமெரிக்க இராணுவத்தினரிடம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மற்றுமொரு சம்பவத்தில் நபர் ஒருவரின் விரல்களை வெட்டி எடுத்த இராணுவத்தினர், அந்த நபரை பின்னர் அமிலத்தில் வீசி கொன்றுள்ளனர்.
இது போல இன்னும் ஏராளமான சித்ரவதை தொடர்பான பதிவுகள் வெளியாகியுள்ளன.
அதேபோன்று, அமெரிக்க படைகளால் வெளியில் இதற்கு முன்னர் சொல்லப்படாத ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களும் இந்த பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

அமைச்சர் பசில் ராஜபக்சாவின் நிதி ஒதுக்கீட்டில் கஹட்டோவிட பிரதேச வீதிகள் புனரமைப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனை வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட தலைவரும் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ அவர்களின் நிதி ஒதக்கீட்டினால் கஹட்டோவிட பிரதேசத்தின் பின்வரும் வீதிகள் கொன்கறீட் இட்டு புனரமைக்கப்பட்டன.

01. கஹட்டோவிட முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் முன்னாள் செல்கின்ற
      ஓகடபொல கஹட்டோவிட வீதி ஏழரை இலட்சம் ரூபா செலவிலும்

02. கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய வீதி ( முன்னாள் உப
      அதிபர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம் ஸாலி ஆசிரியர் அவர்களின் வீட்டுக்கு
       முன்னாள் தொடங்கி ஸிபாரா குர்ஆன் மத்ரஸா வரையில்) ரூபா ஐந்து
      இலட்சம் செலவிலும் புனரமைக்கப்பட்டுள்ளன.

மேற்படி வீதி புனரமைப்புக்காக நிதி ஒதுக்கியமைக்காக அமைச்சர் பசில் ராஜபக்ச அவா்களிற்கும் அத்தனகல்ல சுதந்திரக் கட்சி தொகுதியமைப்பாளரும் அமைச்சருமான சரண குணவர்தன அவர்களுக்கும் அத்தனகல்ல பிரதேச சபைத்தலைவர் உபுல் மகேந்திர ராஜபக்ச அவர்களுக்கும் அத்தனகல் பிரதேச சபை உறுப்பினர்களான கமால் அப்துல் நாஸர் மற்றும் பீ.கே.எஸ் புளத்சிங்கள அவர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சுதந்திரக் கட்சியின் கஹட்டோவிட மேற்குக் கிளைத் தலைவர் எம்.எச்.எம் நஸீர் அவர்கள் தெரிவித்தார்.

காதலர் தினத்தன்று கடற்கரையில் பாலியல் உறவுக்குப் பின்னரே சவூதி இளவரசர் பணியாளரை அடித்துக் கொன்றுள்ளது அம்பலம்

லண்டனில் இருக்கும் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஒன்று " தி லேண்ட்மார்க் ". இந்த ஹோட்டலில் தனது பணியாளர் ஒருவருடன் கடந்த பெப்ரவரி மாதம் வந்து தங்கினார் சவுதி இளவரசர் சவுத் அப்துல்ஆசிஸ் பின் நசிர் அல் சவுத். சவூதி மன்னரின் கொள்ளுப் பேரன் இவர்.

 சில நாட்களுக்கு முன்னர் இளவரசர் ஹோட்டல் லிப்ட்டில் தன்னுடன் வந்த பணியாளரை அடித்த காட்சிகள் சி.சி.டி.வி கேமராவில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் வெளியிடப்பட்டு இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையில் உடன் வந்த பணியாளரும் இவரும் ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பதும் பாலியல் ரீதியான விடயங்களுக்காகவே அவரை அடித்துக் கொன்றுள்ளர்ர் எனபதும் தெரிய வந்தது.

 கடந்த வாரம் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டது. அடித்துக் கொல்லப்பட்ட பணியாளரின் கனனத்தில் கடித்த தடங்கள் இருப்பதாகவும் , இது வரையிலும் அது சரியாக கவனிக்கப்படவில்லை என்பதும் இன்று நீதிமன்றத்தில் கூறப்பட்டது. இதையடுத்து மருத்துவ நிபுணர்களின் உதவியை நீதிமன்றம் நாடிய போது மூர்க்கத்தனமான பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தால் இது போன்று நடந்திருக்கலாம் என Dr.மார்ட்டின் நீதிமன்றத்தில் கூறினார்.

 ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை இளவரசர் மறுத்து வந்தார். இன்று மீண்டும் வழக்கு விசாரிக்கப்பட்ட போது காதலர் தினத்தன்று இளவரசர் பணியாளருடன் கடற்கரையில் உறவில் இருந்தது அம்பலமானது. இன்று அண்ணளவாக ஒன்றரை மணி நேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு இளவரசர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் உண்மையே என்பதை நீதிபதி அறிவித்தார்.

 இந்த வழக்கில் சவுதி இளவரசருக்கு நீண்ட காலத்திற்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் இதன் மூலம் இளவரசரின் சொகுசு வாழக்கை முடிவுக்கு வருமென்றும் நம்பப்படுகிறது. சவுதி இளவரசர் மீண்டும் சொந்த நாட்டிற்கு திரும்பும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை செய்த குற்றத்திற்காக அல்ல.

 ஓரினச் சேர்க்கை இஸ்லாமிய விதிமுறைகளின் படி தவறாகக் கருதப்படுவதால் நாடு திரும்பினால் மரண தண்டனை கிடைப்பது அநேகமாக நிச்சயமாகி விட்டது. சட்டத்தின் பிடியில் இருந்து எவ்வளவு பெரிய ஆளானாலும் தப்ப முடியாது என்பதையே சவுதி இளவரசர் வழக்கு காட்டுவதாக நிபுணர்கள் கருத்துக் கூறுகின்றனர்.

புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக சரத் பொன்சேகாவின் பரம எதிரியான பராக்கிரம பன்னிப்பிட்டிய…?

மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவை சிறைச்சாலைகள் ஆணையாளராக நியமிப்பது குறித்து ஜனாதிபதி ஆலோசி;த்து வருவதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கிழக்கு மாகாணத்தை விடுவிக்கும் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவின் பரம வைரியுமாவார்.

அதன் காரணமாக கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு குறுகிய காலத்துக்குள்ளாகவே பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் பொன்சேக்கா அவரை இராணுவ நீதிமன்றில் நிறுத்தி தண்டித்திருந்தார். இராணுவ தர வரிசையில் அப்போதைய நிலையில் பொன்சேக்காவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்தவர் பராக்கிரம பன்னிப்பிட்டிய என்பது குறிப்பிடத்தக்கது.

பராக்கிரமவை சிறையிலடைத்தன் மூலம் தனக்குப் பின் தனக்கு மிகவும் நம்பிக்கையான முன்னாள் வட மாகாண கட்டளைத் தளபதியும், தற்போதைய வட மாகாண ஆளுனருமான ஜீ.ஏ. சந்திரசிறியை அடுத்த இராணுவத் தளபதியாக்கும் திட்டத்துடன் பொன்சேக்கா செயல்பட்டிருந்தார்.

அதன் காரணமாக புலிகளுடன் தொடர்பு, சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தமை, சட்ட விரோதமாக புதையல் தோண்டியமை என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளின் பேரில் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தொடர்ச்சியாக தண்டனைக்குள்ளாக்கப்பட்டிருந்தார்.

அதன் காரணமாக சரத் பொன்சேக்காவுக்கு அடுத்ததாக இராணுவத் தளபதியை நியமிக்கும் போது மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு ஆளுனர் பதவி வழங்கப்பட்டு, தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

பொன்சேக்காவினால் அநியாயமாகத் தண்டிக்கப்படாதிருந்தால் ஒரு வேளை பராக்கிரம பன்னிப்பிட்டிய இன்றைய இராணுவத் தளபதியாகக் கூட நியமிக்கப்பட்டிருக்கலாம். ஏனெனில் பொன்சேக்கா இராணுவத் தளபதி பதவியிலிருந்து அகற்றப்பட்ட காலகட்டத்துக்குச் சமாந்தரமாக மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளிலும் அவரை விடுவித்த நீதிமன்றம், அவர் நிரபராதி எனத் தீர்ப்பளித்திருந்தது.

அதே வேளை பொன்சேக்கா இராணுவ சிறையிலடைக்கப்பட்ட வேளை அதற்கு ஆதரவாக முதன் முதலாக குரல் கொடுத்தவர் பராக்கிரம பன்னிப்பிட்டியவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்புலத்தில் மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டியவை புதிய சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்க ஜனாதிபதி உத்தேசித்திருப்பதானது, சரத் பொன்சேக்காவை மன உளைச்சலுக்குள்ளாக்கி மரணத்தை நோக்கித் தள்ளும் ஒரு உத்தியாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.

ஏனெனில் தான் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டவன் என்ற வகையில் சரத் பொன்சேக்கா விடயத்தில் பராக்கிரம பன்னிப்பிட்டிய கடுமையாக நடந்து கொள்வதுடன், தன்னால் தண்டிக்கப்பட்ட ஒருவரின் கண்காணிப்பின் கீழ் அவரது உத்தரவுகளுக்கு அடிபணிந்து செயற்பட நேருகின்றமையானது சரத் பொன்சேக்காவைப் பொறுத்தவரை பெரும் மன உளைச்சலாகவே அமையும்.

அந்த வகையில் சரத் பொன்சேக்காவை மன உளைச்சலுக்குள்ளாக்கி மரணமடையச் செய்து அதன் மூலம் அந்த மரணத்தை இயற்கை மரணமாகக் காட்டும் முயற்சியில் அரசாங்கம் இறங்கக் கூடும் என்பதாக கடந்த வாரத்தில் அனோமா பொன்சேக்கா அச்சம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் இம்முறையும் கூட்டுக் குர்பானி

எதிர்வரும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில், கடந்த வருடம் போல் இம்முறையும் கூட்டாகக் குர்பான் கொடுப்பதற்கான ஏற்பாடுகளை முஹியத்தீன் ஜும்ஆ மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாசல்கள் செய்துள்ளன. கூட்டாகக் குர்பானியைக் கொடுக்க விரும்பும் நபர்கள் எதிர்வரும் 01.11.2010ஆம் திகதிக்கு முன்பு தமது பெயர்களைப் பதிவு செய்யுமாறு வேண்டப்படுகின்றனர். இக்கூட்டுக் குர்பானித் திட்டத்திற்கான வேலைகளை கொண்டு செல்வதற்கு இரு பள்ளி வாசல்களினதும் நிர்வாகிகளை உள்ளடக்கிய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களை அறிய விரும்புவோர் இக்கமிட்டியைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

பாபரி பள்ளிவாசலை அதே இடத்தில் கட்டுவது மட்டும் தான் ஒரே தீர்வு!-டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி

அயோத்தியில் பாபரி பள்ளிவாசலை தகர்க்கப்பட்ட  இடத்திலேயே மஸ்ஜித் கட்டித்தருவதைத் தவிர வேறு எந்த சமரசத் தீர்வையும் ஏற்க மாட்டோம் என்று டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் சையத் அஹமத் புஹாரி தெரிவித்திருக்கிறார். டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் டெல்லியில்  கூடி அலகாபாத் உயர்நீதிமன் றத் தீர்ப்பு குறித்து விரிவாக விவாதித்தனர்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை முழுதாக நிராகரிப்பதாகவும் மஸ்ஜித் கட்டுவது தொடர்பாக எந்தவித சமரசத் தீர்வையும் ஏற்பதற்கு தாங்கள்  தயாராக இல்லை என்றும் அவர்கள் தீர்மானம் நிறைவேற்றினர்.

"அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பை நாங்கள் நிராகரிக் கிறோம்; இந்தத் தீர்ப்பு தொடர் பாகத் தன்னுடைய நிலை என்ன என்பதை மத்திய அரசும், காங்கிரஸ் கட்சியும் தெளிவாக விளக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதி அவரைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருக்கிறோம்.

மஸ்ஜிதிற்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ் கட்சிதான் நேரடியான காரணம் என்று நாங்கள் கருதுகிறோம். பாபரி பள்ளிவாசல் பிரச்னை தொடங்கியது முதல் அலகாபாத் உயர் நீதிமன்றம் இப்போது அளித்துள்ள தீர்ப்புவரை அனைத் துமே காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளால் அமைந்தவை தான்" என்றும் அவர் கடுமையாக சாடினார்.

முஸ்லிம்களுக்கு உற்ற நண்பனைப் போல பேசியே ஏமாற்றிக் கொண்டு, வகுப்புவாத சக்திகளுக் குத்தான் காங்கிரஸ் துணைபோய்க் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்களில் சிலர் சமரசத் தீர்வு காண்பதாகக் கூறிக்கொண்டு கொல்லைப்புற  வழியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை நாங்கள் விரும்பவும் இல்லை, ஆதரிக்கவும் இல்லை. எந்த மாதிரி யான சமரசத் தீர்வை அவர் கள் காணப் போகிறார்கள்? இடிக்கப் பட்ட இடத்திலேயே மஸ்ஜிதை அமைப்பதைத் தவிர வேறு எதையும் முஸ்லிம்களால் ஏற்க முடியாது. இந்த விஷயத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆதரிக்கும் எவருடைய ஆதரவையும் நாங்கள் வரவேற்கிறோம். வழக்கு தொடர் பாக உச்சநீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்வோம் என்றார்.

வாசகா் சிந்தனைக்கு!

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.
'நிச்சயமாக அனுமதிக்கப்பட்டது, தெளிவாக உள்ளது. நிச்சயமாக தடுக்கப்பட்டவையும் தெளிவாக உள்ளது. இவ்விரண்டுக்குமிடையே சந்தேகமானவைகளும் உள்ளன. இவற்றை மக்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள். சந்தேகமானவற்றை விட்டு ஒருவன் தவிர்ந்து கொண்டால், அவன் தன் மார்க்கத்தையும், கண்ணியத்தையும் காப்பாற்றிக் கொண்டவராவார். சந்கேமானவற்றில் ஒருவன் மூழ்கிவிட்டால், அவன் தடுக்கப்பட்டவற்றிலும் மூழ்கி விடுவான்.
அவன்; வேலியைச் சுற்றி (ஆடுகளை) மேய்க்கும் மேய்ப்பாளன் போலாவான். அந்த வேலியையே அவை மேய்ந்து விடவும் கூடும். அறிந்து கொள்ளுங்கள்! ஒவ்வொரு அரசனுக்கும் ஒரு வேலி உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வேலி என்பது, அவனது தடை செய்யப்பட்டவைகளாகும்.

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உடலில் ஒரு சதைத் துண்டு உள்ளது. அது சரியாகிவிட்டால், உடல் முழுதும் சரியாகி விடும். அது கெட்டுவிட்டால், உடல் முழுதும் கெட்டுவிடும். அறிந்து கொள்ளுங்கள்! அதுதான் 'இதயம்'

 (புகாரி, முஸ்லிம்)

இணையத்தளம் மூலம் பொலிஸில் முறைப்பாடுகள் செய்யும் வாய்ப்பு

 இணையத்தளம் மூலம் பொலிஸ் முறைப்பாடுகள் பொலிஸில் முறைப்பாடு செய்ய விரும்பும் பொதுமக்கள் இணையத்தளம் மூலம் முறைப்பாடுகளை செய்வதற்கான திட்டமொன்றை பொலிஸ்  திணைக்களம் அறிமுகப்படுத்தவுள்ளது.

www.police.lk என்ற இணையத்தளம் மூலம் ஒக்டோபர் 18 ஆம் திகதியிலிருந்து இம்முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தில்  telligp@police.lk என்ற மின்னஞ்சலை தெரிவுசெய்து பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.

பொதுமக்கள் தமது பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் பொலிஸ் நிலையங்களில்  விசாரணைகளில் ஏற்படும் தாமதம் குறித்தும் அறிவிக்கலாம் என பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடுகள் தொடர்பாக இரு வாரங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கூறியுள்ளார்.

அல்பத்ரியாவிற்கு கணினிகள் அன்பளிப்பு

கஹட்டோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயத்திற்கு 10கணினிகள் கொழும்பைச் சோ்ந்த ஒரு தனவந்தரால் அன்பளிப்புச் செய்யப்பட்டது. ஆசிரியர்கள் சிலரின் அயராத முயற்சியின் விளைவாக இக்கணினிகளி் பாடசாலைக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. தகவல் தொழிநுட்பம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் ஒரு பாடமாக அங்கீகரி்க்கப்பட்டதை அடுத்து பல பாடசாலைகளில் இப்பாடம் போதிக்கப்படுகிறது. எமது பாடசாலையிலும் தற்போது தகவல் தொழிநுட்பத்தைப் போதிக்கப்  பற்றாக் குறையாக இருந்த கணினிப் பிரச்சினை  ஓரளவு தீர்ந்துள்ளது எனலாம். பாலிகாவித்தியாலயத்திற்கும் கணினிகளைப் பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட தனவந்தருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. எது எப்படியிருப்பினும் மாணவர்கள் தமக்குக் கிடைக்கின்ற இவ்வாறான வசதிகளை உரிய முறையில் பயன்படுத்தி தமது கற்றல் நடவடிக்கைகளைச் சிறப்பாக செய்வது கட்டாயமானது.
அல்லாஹ் இந்த நலன் விருமபியின் இச்சேவையை அங்கீகரித்து அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்பாக்கியங்களை நல்குவானாக!

வாசித்ததில் பிடித்தது - நன்றி - முஸ்லிம் வொட்சினூடாக சகோதரர் மரிக்கார்

முன்னொரு காலத்தில் அங்கிரசர் என்றொரு ரிஷி, வனத்தில் வசித்து வந்தார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். அவரிடம் மாணாக்கர்கள் பலர் இருந்தனர். அவருடைய ஞானத்தில் இருந்து கணிசமான அனுகூலத்தை அவர்கள் பெற்றிருந்தனர் எனலாம்.

அந்த மாணவர்களில் சிலர், பக்தியும், கடமையுணர்வும் கொண்டவர்கள். மற்றவர்களைவிட எளிதில் எதையும் கிரகித்துக் கொள்ளக் கூடியவர்களாக அவர்கள் இருந்தனர். அவர்களுடைய நற்பண்புகள் காரணமாக மற்ற மாணவர்களால் அவர்கள் மதிக்கப்பட்டனர். ஆனால், அறிவுக் கூர்மையற்ற சிலர் மட்டும், அந்த நல்ல மாணவர்களிடம் பொறாமை கொண்டிருந்தனர். குருவின் உபதேசங்களைக் கிரகித்துக் கொள்ளும் திறன் தங்களிடம் குறைவாயிருப்பதை அவர்கள் மறந்துவிட்டனர்.

ஏனோ குருவின் பாரபட்சமற்ற தன்மையில் அவர்களுக்குச் சந்தேகம். அவர் பக்தியுணர்வுடைய மாணவர்களுக்கு மட்டும் ரகசியமாக விசேஷ அறிவைப் புகட்டுவதாக எண்ணிக் கொண்டனர்.

ஒருநாள் குருதேவர் தனித்திருந்த போது அவரிடம் சென்று, ""ஐயனே! தாங்கள் பாடம் கற்பிப்பதில் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகப்படுகிறோம். தேர்ந்தெடுத்த சிலருக்கு மட்டும் உங்கள் ஞானத்தின் முழுப்பலனையும் நீங்கள் வழங்குவதாய் கருதுகிறோம். ஏன் எங்களுக்கும் அந்தச் சலுகையை விரிவுபடுத்தக் கூடாது?''என்று கேட்டனர்.

குருதேவர் அந்த வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தார். ஆனாலும், அமைதியாகப் பதிலளித்தார்.

""நான் உங்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் மதித்து நடத்துகிறேன். யாருக்கும் தனிப்பட்ட முறையில் சலுகை காட்டவில்லை. உங்களில் சிலர் விரைவாக முன்னேறியிருந்தால், நான் சொல்கிறவற்றை அவர்கள் ஊன்றிக் கவனித்திருக்க வேண்டும். நீங்களும் அவ்வாறு முயன்று கற்பதை யார் தடுத்தது?'' என்று கேட்டார் அவர்.

ஆனால், மாணவர்கள் அவருடைய பதிலில் திருப்தியடையவில்லை. ஏதோ யோசனையில் ஆழ்ந்த குரு, ""ரொம்ப சரி! குறைப்பட்டுக் கொள்கிறவர்கள் மீது நான் விசேஷ கவனம் செலுத்துகிறேன். ஆனால், ஒரு நிபந்தனையின் பேரில்தான். ஒரு சின்ன பரீட்சை வைப்பேன். அதில் நீங்கள் தேறியாக வேண்டும்.

""பரீட்சை இதுதான். நீங்கள் அடிக்கடி போய்வருகிற பக்கத்து கிராமத்துக்குப் போக வேண்டும். அங்கிருந்து மிகவும் தகுதியான, எல்லாவிதத்திலும் நிறைவான ஒருவரை நீங்கள் அழைத்து வர வேண்டும் அவ்வளவுதான்,'' என்றார்.

பரீட்சை ரொம்பவும் எளிதாக இருப்பதாக அவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். அதில் தேறிவிட்டால், குருவின் விசேஷ கவனம் தங்கள் பக்கம் திரும்பி விடுமே. அவர்கள், தங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து, பக்கத்து ஊருக்கு அனுப்பினர், தகுதியான ஒரு நபரைக் கண்டுபிடித்து அழைத்து வருவதற்கு. ஆனால், அவனுடைய துரதிர்ஷ்டம், நல்லதன்மை உள்ள ஒருவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு குற்றம் குறை இருக்கவே செய்தது.

அவன் நீண்ட நாட்கள் முயன்றும் பலனில்லாமல் போயிற்று. குருவிடம் வந்து, ""ஐயனே! நான் தங்களிடம் இப்படிச் சொல்வதற்காக வருந்துகிறேன். அந்த ஊர் முழுக்க தேடிப் பார்த்துவிட்டேன். ஒரு நல்ல மனிதன் கூட கிடைக்கவில்லை. ஒவ்வொருவரும் ஏதாவதொரு தவறைச் செய்தவர்களாகவே இருக்கின்றனர். எல்லாரும் கெட்டவர்கள்!'' என்றான் அவன்.

""அட! அப்படியா? இங்கே யார் மீது நீங்கள் குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களுடைய அணியில் இருந்து யாரேனும் ஒருவரை அங்கே அனுப்புவோம்,'' என்றார் குருதேவர்.

பிறகு, அந்த பக்தியும், கடமையுணர்வும் கொண்ட மாணவர்களில் ஒருவனை அழைத்து, ""நீ பக்கத்து ஊருக்குச் சென்று ரொம்பவும் கெட்டவரான ஒருவரை அழைத்து வா!'' என்றார் அவர்.

குருவின் கட்டளையை ஏற்று, அந்த அணியில் இருந்து ஒருவன் அடுத்த ஊருக்குச் சென்றான். சில நாளில் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான். ""ஐயனே! என் பதில் உங்களை ஏமாற்றத்துக்கு உள்ளாக்கலாம். நான் அந்த ஊர் முழுக்க ஆராய்ந்து விட்டேன்; ஒரேயொரு கெட்டவனைக் கூட என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை!'' என்றான் அவன்.

அவனுடைய கருத்துரை கேட்டு, குறை கூறும் அணியைச் சேர்ந்தவர், உரத்த குரலில் சிரித்து ஆரவாரம் செய்தனர். ஆனால், அந்த மாணவன் தொடர்ந்து பேசினான், ""எல்லாரும் ஏதாவதொரு நற்காரியம் செய்தவர்களாகவே இருக்கின்றனர். ஒரு நற்செயலும் செய்யாத ஒருவனை என்னால் காண முடியவில்லை,'' என்றான்.

""நல்லது, கெட்டது; சரி, தவறு என்பதெல்லாம் இதில் இருந்து தான் தொடங்குகிறது. எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு நல்லதைக் காண்கிறபோது உங்களுடைய ஞானம் மலர்கிறது. எல்லாவற்றிலும் குற்றம் காண்கிறபோது அந்த ஞானம் உதிர்த்து விடுகிறது.

""உலகம் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்த கலவையாக இருக்கிறது. அதில் இருந்து நீங்கள் எதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்ததே ஞானம். நேர்மறை மனோபாவம் உள்ளவர்கள் விரைந்து முன்னேறுகின்றனர். ஆனால், எதிர்மறை மனோபாவம் உள்ளவர்களால் மெதுவாகத்தான் வளர்ச்சிக் காண முடியும்.

""குருவைப் பொறுத்தவரை, எல்லாருமே அவருக்குப் பிரியமானவர்கள் தான். ஒரு மாணவன் விலகியிருப்பதாய் உணர்ந்தால் அது அவனுடைய தவறு. நீங்கள் எந்த அளவு என்னோடு ஒன்றாயிருப்பதாக உணர்கிறீர்களோ, அந்த அளவு உங்கள் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

""குருவிடமாகட்டும், கடவுளிடமாகட்டும், முழுமையாய் சரணடைந்து விட வேண்டும். அரைகுறையாய் சரணடைவது என்ற பேச்சுக்கே இடமில்லை!'' என்றார் குரு.

180 சிங்களக் குடும்பங்கள் மீள்குடியமர யாழ்.வந்தன. காணிகள் தருமாறு அரச அதிபருக்கு மனு: திரும்பப் போவதில்லை எனவும் தெரிவிப்பு

முப்பது வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்வதற்கென 180 சிங்களக் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் வருகை தந்துள்ளனர். நகரில் உள்ள  ரயில் நிலையத்திலும் வேறுபல இடங்களிலும் தற்காலிக மாகத் தங்கி உள்ள இவர்கள் தம்மை நிரந்தர இடம் ஒன்றில் குடியமர்த்துமாறு அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நிரந்தரமாகக் குடியேறாமல் திரும்பப் போவதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

1980ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தக் குடும்பத்தினர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போதும், அவர்களுக்கான நிரந்தர இருப்பிடங்கள் எவையும் இருக்கவில்லை. வாடகை வீடுகளிலேயே தங்கி இருந்துள்ளனர். இவர்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தம்மிடம் உடனடித் திட்டங்கள் எவையும் இல்லை என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இவர்களது வருகை குறித்துத் தமக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுநரும் தெரிவித்துள்ளார்.

இந்தக் குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களில் பலருக்கு தமிழர்களுடன் திருமண பந்தம் இருக்கின்றது. அத்துடன் அவர்களில் பலருக்கு நன்றாகத் தமிழும் பேசத் தெரிந்திருக்கிறது. அனுராத புரம், மிகிந்தலை, மாத்தளை, குருநாகல் ஆகிய இடங்களில் வாழ்ந்து வந்த இவர்கள், போர் முடிந்து நிலைமை ஓரளவு சீராகி உள்ளதால் மீளக்குடியமரும் நோக்கத்தோடு யாழ்ப்பாணம் வந்துள்ளனர்.

இவர்களில் 54 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் யாழ். ரயில் நிலையத்திலும் ஏனையவர்கள் உறவினர்களின் வீடுகள் மற்றும் விடுதிகளில் தங்கியிருக்கின்றனர்.யாழ். ரயில் நிலையத்தில் தங்கியிருக்கும் சிங்களக் குடும்பங்களுக்கு பொலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று யாழ். அரச அதிபரைச் சந்தித்த இவர்கள், தம்மை யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு ஒரு மனுவைக் கொடுத்தனர். தாம் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு வசதியாகத் தமக்கு அரச காணிகளைத் தந்துதவுமாறும் அவர்கள் தமது மனுவில் கோரியுள்ளனர்.

""1980ஆம் ஆண்டுக்கு முன்பு யாழ்ப்பாணத்தில் தமிழ்  சிங்கள் மக்கள் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்தனர். இப்போதும் அவ்வாறே வாழ முடியும் என நாங்கள் நினைக்கிறோம். சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் எமக்கு திருநகர், திருநெல்வேலி, நாவற்குழி ஆகிய இடங்களில் அரச காணிகள் ஒதுக்கப்பட்டன. ஆனால், அவற்றில் நாங்கள் குடியமர்ந்திருக்கவில்லை. காணிகள் எமக்குத் தரப்பட்டதற்கான கடிதங்கள் எம்மிடம் உள்ளன. இப்போது அந்தக் காணிகளை நாம் கேட்கவில்ல்ல. எனினும் வேறு அரச காணிகளை எமக்கு ஒதுக்கித் தரவேண்டும்.''  என அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்மை மீளக்குடியமர்த்துவது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் வரைக்கும் யாழ். ரயில் நிலையத்தைவிட்டு வெளியேறப்போவதில்லை என அவர்கள் உதயனுக்குத் தெரிவித்தனர்.இவர்கள் யாழ்ப்பாணம் வந்திருப்பது குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, சிங்கள மக்கள் வடக்கில் மீளக்குடியமர்வது பற்றித் தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

உதயன்

ஊடகங்களின் பார்வையில் டிசம்பர் 6 (இவை 1992 டிசம்பர் 6, மற்றும் 7 ஆம் தேதிகளில் வெளிவந்தவை.

பாபரி மசூதி இடிக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக பத்திரிகைகள் நெருப்புச் சொல்லெடுத்து ஆவேசமான தலையங்கங்களை எழுதின. 'அவற்றை இப்போது நினைவூட்டுகின்றொம். இவை 1992 டிசம்பர் 6, மற்றும் 7 ஆம் தேதிகளில் வெளிவந்தவை.




இந்து - தலையங்கம்

அயோத்தியில் மதவெறி தலைவிரித்தாடி, 450 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான வெறிபிடித்த கரசேவைக்காரர்கள் மஸ்ஜிதை இடித்து விட்டார்கள்.

பாபரி மஸ்ஜித் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட செயல் காட்டுமிராண்டித்தனமானது; கொடூரமானது.

இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், நாட்டின் ஜனநாயகத்திற்கும் இதன்மூலம் மரண அடி கிடைத்துள்ளது.

கரசேவை வேலையை எந்த ரூபத்தில் அனுமதித்தாலும் அதனால் விபரீதமான விளைவுகள்தான் ஏற்படும் என்பதை இந்தக் கோரச் சம்பவம் நிரூபித்துவிட்டது.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட டிசம்பர் 6ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள்.

வேதனை மிக்க இந்த நேரத்தில் இந்திய நாடு அடைந்துள்ள துக்கத்தை இந்துப் பத்திரிகையும் பகிர்ந்து கொள்கிறது.

உத்திரப்பிரதேச பி.ஜே.பி. அரசு, கரசேவகர்களின் கொடூரத்தன்மையோடு, கெட்ட எண்ணத்துடன் கூட்டு வைத்துக் கொண்டு செயல்பட்டதன் மூலம் நீதிமன்றத்திற்கும், மத்திய அரசுக்கும் ஏற்கனவே அளித்த வாக்குறுதியை மீறிவிட்டது. அரசியல் சட்ட விதிமுறைகளை பி.ஜே.பி. அரசு மீறியது வெட்கக்கேடானது. இதன்மூலம் மாநிலத்தில் ஆட்சி நடத்துகிற உரிமையை பி.ஜே.பி. இழந்துவிட்டது.

கரசேவைக் கும்பல் திரிசூல ஆயுதங்களோடு மஸ்ஜிதை முற்றுகையிட்டபோது, உ.பி. மாநில போலீசார் அந்தப் பகுதியி­ருந்தே ஓடிவிட்டார்கள்.

உ.பி. மாநிலப் போலீசார் செயல்படாம­ருந்ததும், மத்திய அரசுப் படைகளை நடவடிக்கை எடுக்க விடாமல் மாவட்ட ஆட்சியாளர் தடுத்ததும், மஸ்ஜித் இடிக்கப்பட வேண்டும் என்ற பி.ஜே.பி. அரசின் திட்டத்தை தெளிவாகப் படம்பிடித்துக் காட்டிவிட்டன.

கல்யாண்சிங் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது அவரையோ, பி.ஜே.பி.யையோ இந்த இழிவான குற்றத்தி­ருந்து எந்த வகையிலும் விடுவிக்கப் போவதில்லை; மன்னிக்கப் போவதுமில்லை.

மஸ்ஜித் இடிப்பு என்ற பயங்கரக் கொடுமையின் மூலம் பி.ஜே.பி.யும் அதன் பயங்கரவாதக் கூட்டாளிகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகிய இயக்கங்களும் முகமூடி கிழிக்கப்பட்டு தங்களின் விகாரமான சுயரூபத்தோடு மக்கள் மன்றத்தில் குற்றவாளிகளாக நிற்கின்றன.

இந்த இயக்கங்களின் பாசிசக் கொள்கையும், தீமையான அழிப்புக் கொள்கையும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் தெளிவாக நிரூபிக்கப்பட்டு விட்டன.

நாட்டின் நன்மைக்குப் பாடுபடுவதாக பி.ஜே.பி. சொல்­க் கொண்டிருந்தது கபடம் நிறைந்தது. பி.ஜே.பி.யின் வேடம் கலைக்கப்பட்டு சுக்குநூறாக சிதறுண்டு விட்டது.

இந்து ராஜ்ஜியம் என்ற பிரச்சாரக் கூச்சல், போ­த்தனமான கொள்கைகள், சிறுபான்மை மக்கள் மீதான காழ்ப்புணர்வு போக்கு லி இந்தத் தன்மைகளோடு செயல்பட்டு வந்தவர்கள் இந்திய சமூகக் கட்டமைப்பு பற்றி ஒரு பயங்கரமான பொய்த் தோற்றத்தை மக்களிடம் காட்ட முயன்றார்கள் என்பது நாட்டு மக்களுக்குப் புரிந்துவிட்டது.

பாபரி மஸ்ஜிதைப் பாதுகாக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காத காரணத்திற்காக பிரதமர் நரசிம்மராவ் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவார். 'நாட்டின் சட்டதிட்டத்தையும், நீதிமன்ற உத்தரவுகளையும் மீறமாட்டோம்' என்று பி.ஜே.பி. அரசு சொன்னதை மத்திய அரசு நம்பியது மிகப்பெரிய தவறு. இதன்மூலம் மத்திய அரசு, பாபரி மஸ்ஜித்தின் பாதுகாப்புக்கு பேராபத்தை ஏற்படுத்தி விட்டது.
'பாபரி மஸ்ஜிதைக் காப்பாற்ற நரசிம்மராவ் எடுக்கும் எல்லா நடவடிக்கைக்கும் முழு ஆதரவு தருவதாக அனைத்துக் கட்சிகளும் ஒருமனதான தீர்மானத்தின் மூலம் உறுதியளித்திருந்தன. ஆனாலும் மஸ்ஜிதை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க நரசிம்மராவ் அரசு தயங்கியதும், தவறியதும் துரதிருஷ்டவசமானது. மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியி­ருந்தும், வெளியி­ருந்தும் நரசிம்மராவ் அரசு மீது கடுமையான கண்டனக் கணைகள் வீசப்படும்.

பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக கட்டிக்காக்கப்பட்ட மதச்சார்பற்ற லி ஜனநாயகக் கொள்கை, அழிக்கப்பட்டு விடுமோ? என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்திய வரலாற்றில் இது ஒரு சோதனை மிக்க காலக்கட்டம் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

வேதனையும், சோதனையும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் அனைத்து மதச்சார்பற்ற அரசியல் சக்திகளும் ஓரணியில் அணிவகுத்து ஒற்றுமையாக நின்று, போராடி, பேராபத்தி­ருந்து தேசத்தை மீட்டுக் காப்பாற்ற வேண்டும்.

இந்த மகத்தான பணியின் முதற்கட்டமாக, பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட வேண்டும்.

இதன்மூலம் தான் இந்திய நாடு மதவெறிச் செயலைக் கண்டிக்கின்ற நாடு; ஜனநாயக - மதச்சார்பற்ற கொள்கையில் தடுமாற்றம் இல்லாமல் உறுதிப்பாட்டுடன் நிற்கின்ற நாடு என்பதை நிரூபிக்க முடியும். ஆகவே, இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜித் மீண்டும் கட்டப்பட்டே ஆகவேண்டும்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

தேசத்துக்கே அவமானம் என்ற தலைப்பில் (தலைநகரி­ருந்து வரும் புகழ்பெற்ற பத்திரிகை) ஹிந்துஸ்தான் டைம்ஸ் எழுதியுள்ள தலையங்கம் வருமாறு:

அயோத்தியில் நடந்த சம்பவத்துக்காக நாடே வெட்கித் தலைகுனிகிறது. கரசேவகர்கள் மஸ்ஜிதை இடித்தது. நாட்டின் மதவாதக் கொள்கைக்கும், இந்து மதத்தின் சகிப்புத்தன்மைக்கும் மாறானதாகும்.

இந்த சம்பவத்துக்காக கல்யாண்சிங் அரசைக் கலைத்தால் மட்டுமே இந்தியாவுக்கு பிரபலமான இடம் கிடைத்துவிடுமா?

வீழ்த்தப்பட்டது மஸ்ஜித் அல்ல, நாட்டின் கொள்கை. இதனால் ஏற்பட்ட பிளவு எவ்வளவு காலம் நீடிக்குமோ?

நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை கரசேவை நடத்தாவிட்டால் வானம் இடிந்துவிடாது.

இந்திய நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதற்காக அத்வானியும், பி.ஜே.பி. தலைவராக நீடிக்க வேண்டும் என்பதற்காக முரளி மனோகர் ஜோஷியும் செய்த சாகசங்களே இதற்குக் காரணம். அவர்களே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இந்தச் செயல் தவறானது என்று கூறும் வாஜ்பாயி, அதை எதிர்க்கும் திராணியற்று இருக்கிறார். நாட்டின் நலனுக்கு முன்னால் கட்சிக் கட்டுப்பாடு முக்கியமல்ல.

நாட்டின் சரித்திரத்தில் ஒரு கறையை ஏற்படுத்தி விட்டார்கள். இந்தக் கறையை அவர்கள் வாழ்நாள் முழுவதுமே போக்க முடியாது. தேச ஒற்றுமையைச் சிதைத்து ஒரு கோவில் தேவைதானா என்று அவர்கள் கூறவேண்டும்.

காங்கிரஸ் கட்சிதான் 3 ஆண்டுகளுக்கு முன் அடிக்கல் விழாவுக்கு அனுமதித்து அயோத்தியின் வாசலைத் திறந்து விட்டது. அதன் விளைவுகள் என்ன ஆகும் என்று அப்போது அதற்குத் தெரியாமல் போய்விட்டது. நாட்டின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாமல் பி.ஜே.பி. தலைவர்களும் ரதயாத்திரை நடத்தினார்கள்.

தி-பயனீர் (புதுடெல்­லி)


'இருள் சூழ்ந்த நாள்' என்ற தலைப்பில் திலிபயனீர் என்ற ஏடு எழுதிய தலையங்கம் வருமாறு:

டிசம்பர் 6ம் தேதி; ஞாயிற்றுக்கிழமை; இந்திய வரலாற்றில் இருள் சூழ்ந்த நாள். அரசியல் அமைப்பும் சட்டத்தின் ஆட்சியும் யுத்த வெறிகொண்ட ஆயிரக்கணக்கான கரசேவைக்காரர்கள் அயோத்தியில் பட்டப்பக­ல் மீறப்பட்டிருக்கிறது. பாபரி மஸ்ஜிதை இடித்ததன் மூலம் அந்த கரசேவைக்காரர்கள் ஒவ்வொரு இந்தியக் குடிமகன் மீதும் அசிங்க சேற்றை அள்ளி வீசியிருக்கிறார்கள்.

இந்த அசிங்கம் எல்லாவற்றையும் விட மிகப்பெரியது; காரணம், அயோத்தியில் நிகழ்ந்த சம்பவம் பேடித்தனமானது மட்டுமல்ல, நம்பிக்கை துரோகமானதும் கூட. தேசத்தின் ஒருமைப்பாட்டின் மீது விழுந்த மிகப்பெரிய தாக்குதல் இது. பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத்  இவை மூன்றுமே இந்த பேரவமானத்திற்கு பொறுப்பு.

இந்த அநியாயமான கொடுமை ஏதோ தற்செயலாக நடந்த நாசவேலை அல்ல; திட்டமிட்டு செய்யப்பட்ட ஒரு கிரிமினல் குற்றம் என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.

தி. அப்சர்வர் (புதுடெல்­லி)

கறுப்புப் புள்ளி என்ற தலைப்பில் தி. அப்சர்வர் என்ற ஏடு எழுதிய தலையங்கம் வருமாறு:

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 6)  இந்திய மக்கள் அனைவருக்கும் ஒரு அவமானகரமான நாள். அயோத்தியில் நிகழ்த்தப்பட்ட நாசவேலை இந்த தேசத்தையே அவமதிக்கும் ஒரு மோசமான செயல். மத சகிப்புத்தன்மையின் மாசு மருவற்ற சான்றாகத் திகழ்ந்த இந்திய வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளி விழுந்து விட்டது.

அனைத்து மத நம்பிக்கைகளையும் மதிக்கும் இந்தியாவின் மிகச்சிறந்த கொள்கையை அந்த மதவெறியர்கள் இழைஇழையாகக் கிழித்துவிட்டனர்.

ஏராளமான புராதன தேவாலயங்களையும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மஸ்ஜிதுகளையும் தன்னகத்தே கொண்டு தலைநிமிர்ந்து பெருமையுடன் விளங்கும் இந்தியாவின் நற்பெயருக்கு அந்த மதவெறியர்களின் வருந்தத்தக்க செயல் மோசமான களங்கத்தை ஏற்படுத்திவிட்டது.

வரலாற்றுப் பொக்கிஷமாக விளங்கிய பாபரி மஸ்ஜிதை இடித்து நாசப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம். இந்த அக்கிரமமான செயலால் பி.ஜே.பி.யும் அதன் தலைவர்களும் தங்கள் முகத்தை தொலைத்து விட்டார்கள்.

நியூயார்க் டைம்ஸ்

அமெரிக்காவி­ருந்து வெளிவரும் சர்வதேச புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை ''மதச்சார்பின்மைக்கு சோதனை'' என்ற தலைப்பில் எழுதிய தலையங்கம் வருமாறு:

ஐந்து மணி நேரம் நடந்த இந்த அட்டூழியத்தின் பின்விளைவுகளில் இருந்து இந்தியா மீள்வதற்குப் பல ஆண்டுகள் பிடிக்கும். சவடால் அரசியல்வாதிகளும், கோழைத்தனமான மத்திய அரசுமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம்.

பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியா, கடந்த 45 ஆண்டுகாலமாக மதச்சார்பற்ற கொள்கையைப் பின்பற்றியது. ஆனால் இன்று அந்த கொள்கைக்கு சோதனை ஏற்பட்டுள்ளது. சில தீவிரவாதிகள் மஸ்ஜிதை இடித்தவர்களாக இருக்கலாம்; ஆனால் அவர்களைத் தூண்டிவிட்டவர்கள் இந்துமத வெறியர்களே.

1990லிம் ஆண்டே இதுபோன்ற முயற்சி நடந்தது. இப்போது மஸ்ஜிதே இடிக்கப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களுக்கும் காரணம் பி.ஜே.பி. தான்.

ஒரு விஷம் கக்கப்படும்போது அதை அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாமல் போகும்போதுதான் மதவெறி வளர்கிறது என்றும் நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளார்.

வாஷிங்டன் போஸ்ட்

அமெரிக்காவி­ருந்து வெளிவரும் ''வாஷிங்டன் போஸ்ட்'' என்ற பத்திரிகை தனது தலையங்கத்தில் கூறியிருந்ததாவது:

''இந்தியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலைக்கு பிரதமர் நரசிம்மராவும் பாரதீய ஜனதா கட்சியும்தான் குற்றப் பொறுப்பை ஏற்க வேண்டும். இந்தப் பிரச்சினை வெடித்துக் கிளம்ப அனுமதித்ததன் மூலம் இந்தச் சம்பவத்தில் தனக்குரிய பங்கை நரசிம்மராவ் அரசு ஒத்துக் கொள்ள வேண்டும்.

அயோத்தியில் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கியதன் மூலம் இதில் பெரும் பங்கு வலதுசாரியான பாரதீய ஜனதா கட்சியையே சாரும். தன்னுடைய அரசியல் லாபங்களுக்காக கொஞ்சமும் வெட்கமின்றி, குரோதத்துடன் சமயப் பதற்றத்தை பயன்படுத்திக் கொண்ட பாரதீய ஜனதா கட்சியின் நடவடிக்கைதான் இந்தியாவின் சமீபத்திய திருப்பத்துக்கு முக்கிய மூலதனம் ஆகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையி­ருந்து நிலைமையை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பிரதமர் நரசிம்மராவ் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் இதில் பெருமளவில் செயல்பட வேண்டியது இந்தியாவின் ஜனநாயகம்தான். அது தானாக சமுக வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளும் வழியைக் கண்டுபிடித்து சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்.

பொருளாதார வளர்ச்சி என்பது பதற்றத்தைத் தணிக்க உதவலாம்; ஆனால், பல வழிகளிலும் சகிப்புத்தன்மைதான் வற்புறத்தப்பட வேண்டும்.

பெரும்பான்மையான இந்துக்கள் வாழும் இந்தியா சுதந்திரமடைந்தவுடன் ஒரு ஜனநாயகத்தை உருவாக்கியது. அதற்கு மதச்சார்பின்மைதான் அடித்தளமாக அமைந்தது. அந்த மதச்சார்பின்மை இப்போதைய நிலைக்கு அவசியமானது. அதைவிட மதச்சார்பின்மை அவசியமாகக் கூடிய வேறொரு சந்தர்ப்பம் இதுவரை ஏற்பட்டதில்லை.

இவ்வாறு உலகப் பத்திரிகைகளும், இந்தியப் பத்திரிகைகளும் கண்டனம் தெரிவித்தன.
thanks TMMK website

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும்: ஜெர்மனி அதிபர் மெர்கல்!




Date: 2010/10/6
Subject: Pls publish this message in our village web
To: kahatow ita kahatow@gmail.com

பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும் இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பத்து வருடங்களிற்கு மேலாக சேவையாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம்



அல்பத்ரியா மகா வித்தியாலயத்தில் பத்து ஆண்டுகளாக பணிபுரிந்த பத்திற்குட்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கணிதம் உள்ளிட்ட ஏனைய பாடங்களில் அனுபவம் வாய்ந்தவர்களே இவ்வாறு இடமாற்றம் செய்யப்படவிருப்பதாகாத் தெரிவிக்கப்படுகின்றது. பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவும் இத்தருணத்தில் திடீரென்ற இவ்வாசிரிய இடமாற்றமானது எத்தகைய பாதிப்புக்களை ஏற்படுத்துமென்பதைப் பொருத்திருந்தே பார்க்க வேண்டும். என்றாலும் வரப்போகும் புதிய ஆசிரியர்கள் இக் குறைபாடுகளை நிவர்த்திசெய்வார்கள் என்றும் நம்பப்படுகின்றது.எவ்வாறாயினும் பாடசாலை நிர்வாகம் சமயோசிதமாகச் செயற்படும் போது மாற்றங்கள் நல்லதாக அமையலாம் என்பது கவனிக்கத்தக்கது. அவசியமற்ற வாதப்பிரதிவாதங்களையும் பரப்புரைகளையும் ஒருபுறமாய் வைத்துவிட்டு அனைவரும் ஒன்றினைந்து பாடசாலையின் கல்விமுன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டு கருமமாற்றுவதே காலத்தின் தேவையாகும்.


இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல் - கடந்த றமழானில் பல இடங்களில் ஷீயா நிகழ்ச்சிகள்.

இலங்கையில் ஷீயாக்களின் ஊடுறுவல் மிக அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. சமூக சேவைகள், அறிவு வழிப்பபுணர்வு போனற் போர்வைகளிலேயே இவர்கள் எமது சமூகத்திற்குள் தலைகாட்டியுள்ளனர்; இவர்களின் இத் தந்திரமான நடவடிக்கைகளினால் பல முஸ்லிம்கள் ஈமனை இழந்து குப்ரின் பக்கம் சென்றுகொண்டிருக்கின்றனர். மூளைச் சலவைக்குட்பட்ட பலர் எமது உயிரிலும் மேலான நபி ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களையும், அவர்களின் தோழர்களைப் பற்றியும் தப்பான எண்ணங்களை கொண்டுள்ளனர். இவர்களின் மூளைச்சலவை பாமரர்களை மட்டுமின்றி பல புத்திஜீவிகளையும் தவறான கொள்கையின்பால் இட்டுச்சென்றுள்ளது. கடந்த றழானில் ஷீயாக்களால் இலங்கையில் மேற்கொண்ட நிகழ்ச்சிகளின் அறிக்கையொன்று அவர்களின் இணையத்தளமொன்றில் வெளியிடப்பட்டிருந்தன. அவ்வறிக்கையின் ஒரு பகுதியின் தமிழாக்கத்தை எமது வாசகர்களிற்காகத் தருகின்றோம்.
சர்வதேச ஷீயா அமைப்பினால் கடந்த றமழானில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சமூக சேவைகள்.
01.    இலங்கையிலுள்ள எமது ஷீயாக் குடும்பத்தனர் றமழானில் அர்களிற்கு வழங்கிய நிதியுதிவ்ககாக நன்றி தெரிவித்துள்ளனர். அவர்கள் எமக்காக துஆச்செய்கின்றனர். சர்வதேச ஷீயாக்களின் சம்மேளனம் அவர்களிற்கு எதிர்காலத்திலும் பல உதவிகளை நல்கும்.
02.    இவ்வருடம் இலங்கையின் வத்தளை, மாபோலை, றாகமை, அக்பர் டவ்ன், வனவாசலை, ஹ{னுபடிய, பேரலன்த, கிரிஉல்ல, குருணாகலை, சீதுவை, நீர்கொழும்பு, சிலாபம், கற்பிட்டி, புத்தளம், வாளைச்சேனை, நுவரெலிய ஆகிய இடங்களில் நிகழ்ச்சிகளை நடாத்தியுள்ளது. வாழைச்சேனையில் 35 குடும்பங்களிற்கு றமழான் கால உணவுப்பொதிகளையும் வினியோகித்துள்ளது.
03.    சிலாபம், கற்பிட்டி, கிரிஉல்ல, குருணாகல, சீதுவ, நீர்கொழும்பு மற்றும் புத்தளம் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு உணவுப் பொதிகள் வினியோகிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து சகோதரர் ஹாரிஸ் ஜலீல் என்பவரால் றமழானின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் ஒரு உரையும் இடம்பெற்றது.
04.    நுவரெலியப் பகுதியில் மூன்று குடும்பத்திற்கு 03 தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. வறுமையில் வாழும் இவர்களிற்கு தமது வாழ்வாதாரத்திற்கு தேவையான பொருளாதாரத்தைத் தேடிக்கொள்வதற்கு இத்தையல் இயந்திரங்கள் பெருதும் உதவும் என அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இத்தையல் இயந்திரம் வழங்கப்பட்ட குடும்பத்தில் ஒரு குடும்பத்தின் வீடு தீப்பிடித்து எறிந்து முற்;றாக சேதமடைந்துள்ளது. தையல் இயந்;திரம் கையளிப்பு வைபவத்தினைத் தொடர்ந்து சகோதரர் ஹாரிஸ் ஜலீல் அவர்களாலும் சகோதரி ஸவீன் ஜலீல் என்பவராலும் இரு உரைகள் நிகழ்த்தப்பட்டன.
இவ்வாறு ஷீயாக்களின் ஊடுறுவல் மிக வேகமாக எமது சமூகத்திற்குள் கால்பதித்துள்ளது. இவ்வாறான விடயங்களை அலட்டிக்கொள்ளாமல் பெரிய தலைமைகள் மௌனம் சாதிப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மேலும் அண்மையில் வஹ்ஹாபிகள் இலங்கையில் பயங்கரவாதத்தைப் பரப்புவதாக பரபரப்பாக மீடியாக்களில் பேசப்பட்டது. எமது முஸ்லிம்களாலே இப்பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறான விடயங்களை மீடியாக்களின் பேசுபொருளாக்கிய இவர்களின் கண்களிற்கு எமது அகீதாவிற்கே வேட்டுவைக்கும் இச்சீயாக்கிளின் ஊடுறுல் காணாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இலங்கையின் போர் வீரன் சரத் பொன்சேகாவின் சிறை வாழ்க்கை : தற்போதைய நிலவரம்

கடந்த புதன்கிழமையன்று நள்ளிரவு முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா பலத்த பாதுகாப்புடன் கொழும்பு கடற்படை முகாமில் இருந்து வெலிக்கடையில் தனியாக அமைக்கப்பட்டுள்ள “எஸ்” அறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்
இதன்படி சரத் பொன்சேகா, வெலிக்கடை சிறைச்சாலையின் 0-22032 இலக்க கைதியாக பதிவு செய்யப்பட்டார்.

தாம் அணிந்திருந்த தேசிய உடையை கழற்றிய அவர் சிறை கைதிகளின் ஆடையை அணிந்துக் கொண்டார்.

அத்துடன் சீமெந்து தரையில் ஒரு தலையணையில் படுத்து அவர் நித்திரை கொண்டார்.

அடுத்த நாள் அதிகாலை 5 மணியளவில் அவர் ஏனைய கைதிகளை போல எழுந்து பார்த்த போது அவருக்கான மலசல கூடத்தில் நீர் இருக்கவில்லை.

இதன் காரணமாக நடந்து சென்று தண்ணீரை எடுத்து வந்து தமது காலை கடன்களை அவர் கழித்தார்.

இதன் பின்னர் தமக்குரிய பீங்கானுடன் ஏனைய கைதிகளை போல நீண்ட வரிசையில் நின்று காலை உணவை பெற்றுக் கொண்டார்.

காலை உணவாக அவருக்கு சோறும் தேங்காய் சம்பலும் தரப்பட்டது.

சிறை அதிகாரிகள் வந்து அவரின் இருப்பை உறுதிசெய்து கொண்டனர்.

வைத்தியர் ஒருவர் அவரை பரிசோதித்தார்.

தையல்காரர் ஒருவர் வந்து அவருக்கான ஆடைகளுக்கான உரிய அளவீடுகளை எடுத்துச் சென்றார்.

பகல் வேளையில் மீண்டும் உணவுக்காக பீங்கானுடன் வரிசையில் நின்று சரத் பொன்சேகா தமது உணவை பெற்றுக்கொண்டார்.

அதில் சோறும் சிறிய மீனும், கீரையும் இருந்தன.

இதன் பின்னர், பிற்பகல் 2 மணிக்கு சரத் பொன்சேகா அவரின் அறைக்கு சென்றார்.

இதனையடுத்து இரவு 7 மணிக்கு இரவு சாப்பாட்டை முடித்து விட்டு சரத் பொன்சேகா தமது வழமையான நித்திரைக்காக அறைக்கு திரும்பினார்.

போரில் தமிழீழ விடுதலைப்புலிகளை வெற்றிக் கொண்டமைக்காக நாடாளாவிய ரீதியில் சிறப்பிக்கப்பட்ட வீரர் இன்று சிறையில் கைதியாகியுள்ளதாக ஆங்கில செய்திதாள் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று பிற்பகலில் தமது கணவரை பார்க்க சென்ற அனோமா பொன்சேகா, வெளியில் வந்த பின்னர் தமது கணவரின் தேசிய உடையை செய்தியாளர்களுக்கு காண்பித்தார்.

30 வருட போரை தோற்கடித்தமைக்காக தமது கணவருக்கு தரப்பட்ட பரிசு இதுவென அவர் குறிப்பிட்டார்.

அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் தகவல் ஒன்றின்படி, இராணுவ நீதிமன்றத்தின் மூலம் 4500 வீரர்கள் தண்டனை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று, பொலநறுவைக்கு சென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஹபரன ரத்தன தம்ம தேரர் கேட்ட கேள்வி ராஜபக்சவை அதிர்ச்சிக்குள்ளாகியது.

சரத் பொன்சேகாவினால், ராஜபக்சவினருக்கு நடந்தது என்னவென்பதை நாடு அறிந்திருக்குமாக இருந்தால் அவருக்கு வழங்கிய தண்டனை சரியானதாக இருந்திருக்கும் என அவர் குறிப்பிட்டார்.

அதாவது சரத் பொன்சேகாவினால் ராஜபக்சவினருக்கு என்ன நடந்தது என்பதை நாடு அறியவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ச தாம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என தெரிவித்தார்.

இந்தநிலையில் இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் சரத் பொன்சேகாவுக்கு தண்டனை வழங்கும் போது நீதிபதி சட்டத்தரணியான பெர்ணாண்டோ, சரத் பொன்சேகாவிடம், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? எனக் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா தமக்கு எதிரான தீர்ப்பை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிரான தீர்ப்பு இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்படவில்லை எனக்குறிப்பிட்ட அவர் இது ஒரிடத்தில் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு எனக்குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தை ஆங்கிலத்தில் தெரிவித்த அவர் சிங்களத்தில் நான்காம் ஈழப்போரின் நிலைமையை விபரித்தார்.

இதன் போது போரில் 5200 படைவீரர்கள் கொல்லப்பட்டதுடன் 27 ஆயிரம் பேர் காயமடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளில் ஆயிரக்கணக்கானோரை கொன்று பலரை சிறைப்பிடித்து அதிலும் பிரபாகரனை கொன்று பயங்கவாரத்தை முறியடித்த நிலையில் தாம் சிறை வாசம் அனுபவிக்க செல்வதாக அவர் தெரிவித்தார்.

தாம் அநீதிக்கு எதிராக போராடப்போவதாக குறிப்பிட்ட அவர் அதில் வெற்றிப்பெறப்போவதாகவும் தெரிவித்தார்.

கஹடோவிடாவின் நுழைவாயில் நீரில் மூழ்கியது.

நேற்றிரவு பெய்த கடும் மழையின் காரணமாக கஹட்டோவிடாவின் பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இவ்வாறான ஒரு வெள்ளப் பெருக்கு கடந்த மே மாதத்திலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளத்தைப் போன்று பாரிய சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தின் பாதிப்புக்களை நிழற் படமாக இங்கு காணலாம்.