கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சகோதர சகோதரிகளின் கவனத்திற்கு! Pizza Hut உணவுகள் ஹலால் இல்லை

இலங்கையில் இயங்கும் அனைத்து Pizza Hut உணவகங்களின் ஹலால் சான்றிதழ் 2012ம் ஆண்டுக்காக புதுப்பிக்கப்படவில்லை, அகவே Pizza Hut உணவகங்களிலுள்ள உணவுப்பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் இல்லை என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உத்தியோகபூர்வகம அறிவித்துள்ளது.


அகவே எமது சகோதர சகோதரிகள் Pizza Hut உணவகங்களில் உணவு உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளும் படி வேண்டப்படுகின்றீர்கள்.
இதுதொடர்பான மேலதிக விபரங்களுக்கு : http://halaal.acju.net/content/pizza-hut-no-longer-halaal-certified 

சிங்களத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை


சிங்கள மொழி மூல அல்குர்ஆன் விளக்கவுரை நூல் (தப்ஹீமுல் குர்ஆன்) வெளியீட்டு விழா இன்று வியாழக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


பிரதமர் டி.எம்.ஜயரத்ன பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக களனி பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் ஜயந்;த செனவிரத்னவும் சிறப்பு பேச்சாளராக பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம.;சுக்ரியும் உரை நிகழ்த்தினர்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் பொது உறவு பகுதியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.அஸ்வர் மற்றும் ஹுனைஸ் பாரூக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





via tamil mirror

அம்பேபுஸ்ஸ ஊடான கொழும்பு – கண்டி வீதிக்கு புதிய பாதை

முன்னர் திட்டமிட்டதுபோன்று அம்பேபுஸ்ஸ ஊடான கொழும்பு – கண்டி கடுகதிப் பாதைக்கு பதிலாக குருநாகல் வழியான பாதையை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தாலவல தெரிவித்துள்ளார்.


திருகோணமலை மற்றும் அநுராதபுரம் போன்ற பிரதான நகரங்களை இலகுவாக இணைப்பதற்கு குருநாகல் கடுகதிப் பாதை பொருத்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

'இந்த புதிய தீர்மானத்தின் காரணமாக நாம் முன்வைத்த சாத்தியக்கூற்று அறிக்கையை மாற்ற வேண்டியிருந்தது. புதிய திட்டத்தின்படி கடவத்தை, மீரிகம ஊடாக குருநாகல்வரை அமைக்கப்படும் பாதை பின்னர் கண்டிவரை நீடிக்கப்படும். திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய நகரங்களை குருநாகல் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைப்பது இதன் மூலம் சுலபம் ஆகும்' என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

'நிர்மாணம், இயக்குவது, மாற்றுதல்' என்ற திட்டத்தின் கீழ் இந்த வீதியை அமைப்பதற்கான முன்மொழிவை மலேசியா, சீனா, கொரியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில கம்பனிகள் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

'இக்கம்பனிகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். இது சம்பந்தமாக எந்தக் கம்பனியை தெரிவு செய்வது என்பது தொடர்பில் நாங்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை' என பிரதி அமைச்சர் நிர்மல கொத்தாலவல தெரிவித்துள்ளார்.

கஹடோவிட வாணையினூடாக செல்லும் பாதை புனரமைப்பு.


வானை ஆசனி மரம் தொடக்கம் ஜிப்ரி ஆசிரியர் அவர்களின் வீடு வரைக்குமான பாதை கொன்கிரீட் இடப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.


ஸ்ரீலங்க முஸ்லீம் காங்ரஸின் கஹடோவிட கிளையின் வேண்டுகொளுக்கு இணங்க இந்தப் பாதைப் புனரமைப்புக்கப்பட்டதாகவும். இதற்காக ஸ்ரீலங்க முஸ்லீம் காங்ரஸின் மேல் மாகாண சபை உறுப்பினர் சகோதரர் ஷாபி ரஹீம் அவர்களினால் சுமார் 185000 ரூபா பணம் ஒதுக்பட்ட்டிருந்த்தாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

thanks for your message (Jazakumullah).

சிங்கள மொழியில் வெளிவரும் தப்ஹீமுல் குர்ஆன் - அதி உன்னத வரலாற்றுப் பணியாகும்.

அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அறிஞர் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்களின் தப்ஹீமுல் குர் ஆன் தப்ஸீர் ஐ சிங்கள மொழியில் 12 பாகங்களில் மொழி பெயர்த்து இஸ்லாமிக் புக் ஹவுஸ் நிறுவனமூடாக வெளியிட்டுள்ளது. அதன் உத்தியோக பூர்வ வெளியீட்டு வைபவம் எதிர் வரும் வியாழக் கிழமை 16 பெப்ருவரி 2012 அன்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. பிரதம அதிதியாக பிரதமர் டி மு ஜயரத்ன கலந்து சிறப்பிக்கவுள்ளார்.


இலங்கை இஸ்லாமிய வரலாற்றில் அல்குரானுக்கான விரிவுரையோன்று முழுவதுமாக சிங்கள மொழியில் வெளிவருவது இதுவே முதற் தடவையாகும், முன்னாள் பேராதனை பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளரும் இலங்கை ஜாமாத்தே இஸ்லாமியின் முன்னாள் அமீரும், செரண்டிப் ஆய்வு நிறுவனம் ,ஆயிஷா சித்தீகா , தன்வீர் அகாடெமி ஆகியவற்றின் ஸ்தாபக தவிசாளருமான அறிஞர் மௌலவி எ எல் எம் இப்ராஹீம் அவர்களின் தலைமயிலான ஒரு குழுவினர் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் மொழிபெய்யர்ப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 1989 ஆம் ஆண்டில் அதன் முதற்பாகம் வெளிவந்த போதும் சுமார் ஒரு தசாப்த காலம் அந்த புனித பணி இடை நின்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மௌலவி மாஹிர், ஷரீபுத்தீன் ஆசிரியர்,சகோதரர் இஸ்மாயில் யூசுப் , (பிரபோதய) நஜிமுதீன் ஆசிரியர் உற்பட பல்வேறு அறிஞர் குழாம் இந்த உயரிய பணியில் ஈடுபட்டதாக அறியக் கிடைத்தது. அல்லாஹ் அவர்கள் அனைவரினதும் பணியை அங்கீகரித்து இனமையிலும் மறுமையிலும் சிறந்த கூலியைக் கொடுப்பானாக.

அல்லாஹ்வின் கலாமை இந்த மண்ணின் மொழியில் கொண்டுவருவது என்பது நிகரில்லாத ஒரு உயரிய பணியாகும், அந்த வகையில் இலங்கை அறிஞர் எ.எல்.எம் இப்ராஹீம் அவர்கள் அன்று 1989 ல் ஜமாத்தின் அமீராக இருந்த தொடங்கி வைத்து இன்றுவரை தனது சகாக்களுடன் முழுமூச்சுடன் உழைத்து அந்த மகத்தான பணியை கூட்டாக நிறைவு செய்துள்ளார்கள். 1937 ஆம் ஆண்டு ஹெம்மாத கமையில் பிறந்து 1948 ல் மகரகம கப்பூரிய்யாஹ் அரபுக் கல்லூரியில் நுழைந்த முஹம்மது இப்ராஹீம் இத்தகையா மகத்தான சேவைகளை அமைதியாக ஆர வாரமின்றி முன் நின்று செய்து முடிப்பார் என அன்று அவரது ஆசான் உமர் ஹசரத் அவர்கள் கூட நினைத்திருக்க மாட்டார்கள்.

ஜாமியாஹ் நலீமியாஹ் எனும் இஸ்லாமிய பல்கலைக் கழகத்தை மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்கள் ஸ்தாபிக்க எண்ணம் கொண்ட பொழுது அறிஞர் எ.எம் எ அசீஸ் அவர்களின் தலைய்மையில் அமைக்கப் பட்ட 10 பேர் கொண்ட தூதுக் குழுவில் நீதிபதி அமீன், மர்ஹூம் தாசீம் அல்-அஸ்-ஹரி , மர்ஹூம் மஸ்-ஊத் ஆலிம், கலாநிதி ஷுக்ரி, ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றோருடன் மொலவி எ.எல் .எம் இப்ராஹீம் அவர்கள் இருந்தது மாத்திரமல்லாது நலீமிய்யாவின் முதலாவது பாடத்திட்டத்தை வரைந்தவரும் கூட என்பதனை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

இஸ்லாஹிய்யாஹ் ஆண்கள்/பெண்கள் கல்லூரிகள், ஆயிஷா சித்தீகா பெண்கள் கலாபீடம், சிங்கள மொழி மூல இஸ்லாமிய கற்கைகள் நிறுவனம் தன்வீர், செரண்டிப் இஸ்லாமிய ஆராய்ச்சி நிறுவனம் என்பவற்றின் ஸ்தாபக தவிசாளராக /உறுப்பினராக, மாத்திரமன்றி அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் மற்றும் இன்னோரன்ன இஸ்லாமிய நிறுவனங்கள் கலையகங்கள் என மொலவி இப்ராஹீம் அவர்களது பணி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் www.tanzil.info தன்சில் இன்போ போன்ற இணையத்தளங்களில் இந்த சிங்கள மொழிமூல அல்-குரான் மொழி பெயர்ப்பு இடம் பெற வேண்டும்.

இலங்கை முஸ்லிம் புத்திஜீவிகள் சிவில் தலைவர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் வரிசையில் மொலவி இப்ராஹீம் அவர்கள் முன்னணி வகிக்கின்ற உதாரண புருஷராகும். அல்லாஹ் அவரது உயரிய தூய எண்ணங்களை அங்கீகரித்து அவருக்கு நீண்ட ஆயுளையும் தேக ஆரோக்கியத்தையும் வழங்க வேண்டும்.

தப்ஹீமுல் குர் ஆனை சிங்கள மொழிக்கு கொண்டு வந்த சகல அறிஞர்கள் ஜமாஅத் மற்றும் இஸ்லாமிக் புக் ஹவுஸ் பணியாளர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அல்லாஹ்வின் கலாம் இஸ்லாமிய தஹ்வாப் பணி இந்த மண்ணில் வாழும் சகல பிரஜைகளையும் சென்றடைய்யவும் மொழி பெயர்ப்பின் நோக்கம் நிறைவேறவும் நல்ல மனம் படைத்த சகலரும் முயல வேண்டும் அதற்கான தூய எண்ணங்களையும், வளங்களையும் எல்லாம் வல்ல அல்லாஹ் எமக்கு அருள் வானாக.

திஹாரிய SIRF இன் பிரமாண்டமான படைப்பு "நீ அவன் அல்ல"

திஹாரிய மண்ணின் மைந்தனும் இளம் இயக்குனருமான M.H.I அஹமட் இன் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ள "நீ அவன் அல்ல" குறுந்திரைப்படம் கடந்த  பெப்ரவரி மாதம் 4 ஆம், 5 ஆம் திகதிகளில் திஹாரிய நாப்பிரித்தையில் அமைந்துள்ள அஹதிய்யா கட்டிடத்தில் திரையிடப்பட்டது. சினிமாவினால் மக்கள் மனங்களில் ஏற்படும் தாக்கங்களைப் படம் பிடித்துக் காட்டும் ஒரு படமாகவே இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்ககது. 20நிமிடங்கள் கொண்ட  இக்குறுந்திரைப்படம் திஹாரியில் படம் பிடிக்கப்பட்ட 4ஆவது குறுந்திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கஹடோவிட பிரதான பாதை புனரமைப்பு



கஹடோவிட சந்தியினுாடாக செல்லும் பாதை மழை காரணமாகவும்,வெள்ளத்தினாலும் சேதமடைந்திருந்தது. இவ்வளவு காலமும் கல்லும் குழியுமாக இருந்த இப் பாதையினால் மக்கள் போக்குவரத்துக்கு மிகவும் சிரமப்பட்டனர். சகோதரர் நாஸர் அவர்களின் முயற்சியின் பலனாக பாராளுமன்ற உறுப்பினர் சரன குனவர்தன அவர்களின் உதவியோடு இந்தப் பாதை தற்போது புனர்நிர்மானம் (கொன்கிறீட்) செய்யப்பட்டுள்ளது. இந்தப்பாதை புனர்நிர்மானம் மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதோடு ,நீண்ட நாளாக இருந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் ஆங்காங்கே ஊர் மக்கள் கதைத்துக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.