கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அம்பேபுஸ்ஸ ஊடான கொழும்பு – கண்டி வீதிக்கு புதிய பாதை

முன்னர் திட்டமிட்டதுபோன்று அம்பேபுஸ்ஸ ஊடான கொழும்பு – கண்டி கடுகதிப் பாதைக்கு பதிலாக குருநாகல் வழியான பாதையை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் நிர்மல கொத்தாலவல தெரிவித்துள்ளார்.


திருகோணமலை மற்றும் அநுராதபுரம் போன்ற பிரதான நகரங்களை இலகுவாக இணைப்பதற்கு குருநாகல் கடுகதிப் பாதை பொருத்தமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

'இந்த புதிய தீர்மானத்தின் காரணமாக நாம் முன்வைத்த சாத்தியக்கூற்று அறிக்கையை மாற்ற வேண்டியிருந்தது. புதிய திட்டத்தின்படி கடவத்தை, மீரிகம ஊடாக குருநாகல்வரை அமைக்கப்படும் பாதை பின்னர் கண்டிவரை நீடிக்கப்படும். திருகோணமலை, அநுராதபுரம் ஆகிய நகரங்களை குருநாகல் ஊடாக நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைப்பது இதன் மூலம் சுலபம் ஆகும்' என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

'நிர்மாணம், இயக்குவது, மாற்றுதல்' என்ற திட்டத்தின் கீழ் இந்த வீதியை அமைப்பதற்கான முன்மொழிவை மலேசியா, சீனா, கொரியா, இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில கம்பனிகள் முன்வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

'இக்கம்பனிகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகின்றோம். இது சம்பந்தமாக எந்தக் கம்பனியை தெரிவு செய்வது என்பது தொடர்பில் நாங்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை' என பிரதி அமைச்சர் நிர்மல கொத்தாலவல தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment