கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

எல்லையில் I.S. பேய் வருமா என எதிர்பார்த்த சவுதி அரசிற்கு ஷியா பூதம் வந்து நிற்பது எதிர்பாராத திருப்பமே..!!

தை படிப்பதற்கு முன் ஒரு அரசியல் சமன்பாடு பற்றி பார்ப்பது உசிதமாகும். அமெரிக்கா சவுதி அரேபியாவின் நேசநாடு. அது போலவே இஸ்ரேலிற்கும் நேசநாடு. ஈரானிற்கு எதிரான நாடு. சரி ஏன் அமெரிக்கா ஈரானை எதிர்க்கிறது? அழிக்க நினைக்கிறது?. ஈரானின் அதீத இராணுவ வளற்ச்சி, ஏவுகனை தொழில்நுட்பம், அனு ஆயுத உற்பத்தி என சில விடைகளை முன்வைக்கலாம். உண்மைதான். அப்படியானால் பிரான்ஸ், பிரிட்டன் போன்ற தேசங்களிலும் இவை உள்ளனவே. அவர்களை ஏன் அமெரிக்க அழிக்க முற்படவில்லை?. இந்த கேள்விக்கான பதிலை இப்படி சொல்லலாம். ஈரான் ஜெரூஸலத்தை கைப்பற்றி முஸ்லிம் உலகை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்பும் நாடு. அவ்வகையில் அது இஸ்ரேலின் எதிரி தேசம். இஸ்ரேலை எதிர்ப்பதனால் அமெரிக்கா ஈரானை எதிர்க்கிறது. மற்றப்படி ஒன்றும் இல்லை. நானை ஈரானுடன் சேர்ந்து சவுதிக்கு எதிராகவும் அது இயங்கும். 

மன்னர் ஷா காலத்தில் அமெரிக்க முதலாளித்துவ கொள்கையிலேயே ஈரானிய அரசு பயணித்தது. இமாம் அயாத்துல்லாஹ் ரூஹுல்லாஹ் கொமெய்னியின் புரட்ச்சி வெற்றி பெற்ற பின் ஈரானிய குடியரசு கும்மில் உள்ள முல்லாக்களின் கட்டுப்பாட்டில் வந்தது. அவர்கள் ஸியோனிஸத்தை எதிர்த்தார்கள். லெபனானிலும், சிரியாவிலும் இஸ்ரேலிய எதிர்ப்பு இராணுவ குழுக்களை உருவாக்கினார்கள். பலஸ்தீனத்தின் காஸா வரை அவர்களது அரசியல் விரிந்தது. இதனால் இஸ்ரேலை அழிக்கும் அவர்களது சிந்தனைகளிற்கு எதிராக அமெரிக்கா செயற்பட ஆரம்பித்தது. அயாத்துல்லாஹ் கொமெய்னியின் சீடர்கள் ஈரானின் ஆட்சியாளர்களாக மாறிய போது அவர்கள் சர்வதேச இராஜதந்திரரீதியிலும் அமெரிக்காவை எதிர்த்தார்கள். அமெரிக்கா ஈரானையல்ல அதன் ஆட்சியாளர்களின் கொள்கைகளையே எதிர்க்கிறது. இஸ்ரேலிய நலன்களிற்காக. 

நாளை இஸ்ரேல் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்து விலகி நிற்குமானால் ஈரான், அமெரி்க்கா அதன் உற்ற நண்பனாக மாறி விடும். சவுதி அரேபியாவை கூட ஈரானிய நலன்களிற்காக எதிர்த்து செயற்படும். இந்த சுயநல அரசியல் பொறிமுறையை உணர்ந்தவர்களாக நாம் கீழே செல்வோம்...

1962 செப்டம்பரில் யெமனில் நடந்த புரட்சியில் ஷியாக்களின் ஆட்சி வீழ்த்தப்பட்டு குடியரசு ஆட்சி உருவாக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து ஸெய்தி ஷியாக்கள் யெமனிய அரசியலில் இருந்தும் நிர்வாகத்தில் இருந்தும் பெரிதும் ஓரம்கட்டப்பட்டு வந்தனர்.  1990-களில் ஸெய்தி ஷியாக்கள் ஹுதி இராணுவ அமைப்பை நிறுவி அதனை கவனமாக வளர்த்து வந்தனர். யெமனில் ஷியாக்கள் தலையெடுக்காத வகையில் அந்நாட்டு பொருளாதாரத்திற்கு உதவுவதன் ஊடாக சுவுதி அரேபியா அந்நாட்டு அரசு மீது நெருக்கடிளையும், அழுத்தங்களையும் பிரயோகித்து வந்தது. முன்னால் யெமனிய ஜனாதிபதி சாலேஹ் ஸெய்தி ஷியாக்களின் இராணவ அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு அதன் தலைவர்கள் சிலரை கொன்றொழித்திருந்தார். இதற்கு பின்புலத்தில் சவுதி அரேபிய இராஜ தந்திரம் வேலை செய்திருந்தது. 

யெமனினுள் ஸலபி, இஹ்வானிய தஃவா நடைபெற சவுதி அரேபிய அரசு நிதயுதவியளித்திரு்நதது. ஆனால் சமகாலத்தில் இன்னொரு தஃவாவும் வேலை செய்தது. அது ஷியா தஃவா. கும்மில் இருந்து அயாத்துல்லாக்கள் பலர் யெமன் சென்று தரித்திருந்து அங்குள்ள இளைஞர்களை புரட்ச்சி மனோபாவத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். ஒரு இராணுவ புரட்சிக்கான அனைத்து தயாரிப்புக்களையும் அவர்கள் செய்திருந்தனர். லெபனானில் ஹிஸ்புல்லாக்களை உருவாக்கி அவர்களிற்கு ஆதரவான மக்கள் தளத்தை உருவாக்கிய அதே புரஜக்ட் அது. 

சவுதி அரேபியாவின் ஜீஸான் என்பது யெமனிற்கான நெடிய எல்லை. சவுதியின் கிழக்கு மாகாணமான ஹிஜாஸில் ஏற்கனவே ஷியாக்களின் இராணுவ இயந்திரம் மெல்ல மெல்ல அசம்பிளாகி வரும் வேளையில் இப்போது யெமனின் ஆட்சியை ஈரானின் அன் ஓபிசியல் மிலிட்டரியான ஹுதி இராணுவம் தன் வசப்படுத்தியுள்ளது. ஸன்னாவை கைப்பற்றிய ஷியாக்களின் தாக்குதல்களில் ஹிஸ்புல்லாஹ் தளபதிகள் இணைந்திருந்தமை இப்போது வெளியாகியுள்ள செய்தி. அவர்களின் வழிநடத்தல், கட்டுப்பாட்டிலேயே அந்த இராணுவ ஆக்கிரமிப்பு ஸன்னா மீது நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்வை அமெரிக்கா எதிர்க்கவில்லை. மெல்ல மௌனம் காத்து பார்த்து வருகிறது. 

I.S.I.S. தன் தேசத்தினுள் நுழையுமா? என்ற அச்சத்தில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வைத்துள்ள சவுதி அரேபியா எல்லையில் ஷியாக்களின் இராணுவம் வந்த நிற்பதை கண்டு மிரண்டு போயுள்ளது. யெமனிய ஹுதி ஷியாக்கள் தம்மாஜை துவம்சம் செய்த போது வாளாவிருந்த தேசம் சவுதி அரேபியா. தாருல் ஹதீஸ் கலைக்கூடத்தை அழிக்க கும்மின் முல்லாக்கள் ஏவிவிட்ட இராணுவ பூதமே இந்த ஹுதிகள். இப்போதும் அபூஜாவில் உள்ள அல்-காயிதா ஆதரவு போராளிகளை இவர்களை வைத்தே அழித்து விடலாம். பின்னர் ஷியாக்களிற்கு முடிவு கட்டலாம் என ரியாத்தின் அரண்மனை கணக்கு போடுமானால் விளைவு விபரீதகரமானதாக அமையும். ஏனென்றால் ஹிஜாஸில் ஷியாக்களின் இராணுவ சக்கரம் மெல்ல மெல்ல சுழல ஆரம்பித்துள்ள காலத்தில் தான் இவை நிகழ்கின்றன.

Khaibar Thalam

''மலையகத்தில் பயங்கரம்'' 50 வீடுகள் புதையுண்டு, பலர் காணாமல் போயிருப்பதாக தகவல்..? தற்பொழுதுவரை 6 சடலங்கள் மீட்பு

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவுக் காரணமாக 6 லயின் குடியிருப்புகள் மண்ணுக்குள்  புதையுண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த ஆறு லயன்களிலும் 50 வீடுகள் இருந்ததாகவும் அதிலிருந்த சுமார் 400 பேர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

உடுகொடையைச் சோ்ந்த சகோதரர் மதனி அவா்கள் காலமானார்.

உடுகொடையைச் சோ்ந்த சகோதரர் மதனி அவா்கள்  இன்று (26.10.2014) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  

அன்னார் மர்ஹும்களான ஹிபதுல்லா, ஹைறு பாதிமா ஆகியோரின் அன்பு மகனும், நிகாரா, நிலூபா, ரிலாயா, அன்ஸார் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார். 

அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் சம்பந்தமான தகவல்களை பின்னர் அறியத்தருகின்றோம்.
..............................
அனனாரின் ஜனாஸா  நாளை  ( 27.12.2013) பி.ப 3.00 மணியளவில் கஹடோவிட மஸ்ஹித் ஜாமிஉ ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

"தன்னை கற்பழிக்க முயன்றவனை கொலை செய்த பெண்ணுக்கு ஈரானில் மரண தண்டனை" அதிர்ச்சி, சந்தேகம், குழப்பம்...உண்மை சில தகவல்கள்.

ஈரான் அரசு, நேற்று... ஒரு கொலைக்குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்ட அந்நாட்டின் ஒரு பெண்ணை (வயது 26) தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றியது.
ஆனால்...
மேற்கத்திய (மற்றும் அதன் நம்மூர் ஆதரவு) மீடியாவில் எல்லாம் செய்தியின் தலைப்பு என்னவென்றால்... "தன்னை கற்பழிக்க முயன்றவனை கொலை செய்த பெண்ணுக்கு ஈரானில் மரண தண்டனை" என்றுதான்...!
எனக்கோ... அதிர்ச்சி, சந்தேகம், குழப்பம்...உண்மை ஆறியும் ஆவல்.
பின்னர் பல்வேறு அரபிய - ஈரானிய ஊடங்களை படித்த பின்னர்தான் முழுச்செய்தியை அறிந்தேன்.
அதாவது...
ஈரானிய அரசின் இரகசிய உளவாளி Morteza Abdolali Sarbandi (வயது 47) என்பவர். இவரின் வீடுதான் இவருக்கு அலுவலகம். 2007 ம் ஆண்டு, தன் அலுவலகத்துக்கு இன்டீரியர் டெகொறேஷன் செய்ய ஒரு நிறுவனத்தை நாடியுள்ளார். அங்கிருந்து Reyhaneh Jabbari என்ற ஒரு பெண்மணி (அப்போது வயது 19) அவ்வேலைக்கு வந்துள்ளார்.
அங்கே அந்த ஈரானிய இரகசிய உளவாளியை இப்பெண் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார். பின்னர், கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்ட போது... 'தன்னிடம் அந்த ஹவுஸ் ஓனர் பாலியல் வல்லுறவு செய்ய முயன்றதால்தான் கொலை செய்தேன்' என்றார்.
கொல்லப்பட்டவரின் மூத்த மகன் சொன்னது என்ன என்றால், "அக்கத்தி தங்கள் வீட்டில் உள்ளதல்ல". விசாரணையில் அது அப்பெண்ணால் இரண்டு நாட்களுக்கு முன்னர் வாங்கப்பட்டுள்ளது என்று சாட்சிகள் மூலம் தெரியவந்தது. பின்னர், அப்பெண் கத்தி கொண்டு வந்ததை ஒப்புக்கொண்டார். காரணம், இன்டீரியர் டேகொறேஷனுக்கு வெட்ட கிழிக்க என்று கத்திக்கு தேவை உள்ளது என்றார். ஏற்கத்தக்கதுதான். ஆனால்... முதலில் அதை சொல்லாமல் மறைத்தது ஏன் என்ற கேள்வி பிறந்தது.
பின்னர் புதிய திருப்பமாக, கொலைக்கு சற்று முன்னர், அவரது மொபைல் மூலம் வேறொரு ஆணுக்கு SMS சென்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதில் அப்பெண், "நான் அந்தாளை கொலை செய்யப்போகிறேன்" என்று மெசேஜ் அனுப்பியுள்ளார். ஆக, திட்டமிட்டு கொலை செய்யும் நோக்கத்துடனேயே அங்கே சென்றுள்ளார் என்று ஊர்ஜிதம் ஆகியது. SMS அனுப்பியது தான் தான் என்றும் அப்பெண் கோர்ட்டில் ஒப்புக்கொண்டார்.
ஆனால், அந்த சிம்முக்குரிய நபரை கண்டு பிடிக்கமுடியவில்லை. சிம்கார்ட் தவறான முகவரி என கண்டுபிடிக்கப்பட்டது. போலிஸ், எவ்வளவோ கேட்டும், அந்த நபரின் அடையாளத்தை அப்பெண் கடைசி வரை சொல்ல மறுத்து விட்டார்.
கொல்லப்பட்டவர் ஈரானிய உளவாளி என்பதால் இப்போது பெரிய அளவில் சந்தேகம் வலுக்கிறது. ஒரு கட்டத்தில், யாரோ இன்னொருவர் கொன்றார், என்று அப்பெண் பல்டியும் அடித்தார். அவரையும் யாரென்று அப்பெண் சொல்லவில்லை.
ஆறு மாதம் முன்னர் உலக நாடுகளின் விமர்சனத்துக்கு இடையே... அப்பெண்ணுக்கு "மரண தண்டனை தீர்ப்பும், மேலும், கொல்லப்பட்டவரின் குடும்பம் அப்பெண்ணை (நஷ்ட ஈடு வாங்கிக்கொண்டோ / வாங்காமலோ) மன்னித்தால், குற்றத்தில் இருந்து விடுதலை" என்றும் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
"எங்கள் அப்பா உங்களிடம் தகாத முறையில் நடக்க வில்லை... 'நான்தான், அப்படி பொய் சொன்னேன்...' என்று மட்டுமாவது சொல்லி விடுங்கள், (இதுதான் நஷ்ட ஈடு) உங்களை நாங்கள் மன்னித்து விடுகிறோம்..." என்று கூட கொல்லப்பட்டவரின் மகன்கள் கூறினர்.
ம்ஹூம்....அப்பெண் இப்படி சொல்லக்கூட மறுத்து விட்டார். சொல்லி இருந்தால்... இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார். ஆனால்... என்னாகி இருக்கும்..? புதிய வழக்கு ஒன்று போடப்பட்டு... "அப்புறம் ஏன் திட்டமிட்டு கொன்றாய்... உங்களுக்குள் என்ன பகை... அந்த SMS பார்ட்டி யார்... எந்த நாட்டுக்காவது ரகசிய ஏஜென்டா... உனக்கும் அவனுக்கும் எப்படி தொடர்பு......" போன்ற பல்வேறு விடைதெரியாத கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டி இருந்திருக்கும்..!
ஏழு வருஷமாக, இவ்வழக்கில் இப்படியான விடை அவிழா மர்மங்கள் நிறைந்து இருக்கையில்தான்... நேற்று அப்பெண் தூக்கிலிடப்பட்டுள்ளார். அதை எல்லாம் ஏன் விசாரிக்கவில்லை..? எனவே, ஈரான் அரசு மீதும் கொஞ்சம் டவுட்டாக உள்ளது..!

மொஹமட் ஆசிக் (முகநூல்)

வரவு செலவு திட்டத்தில் உள்ள முக்கிய விடயங்கள்


பசும்பால் விலை அதிகரிப்பு, யோகட் விலை குறைப்பு
பசும்பால் லீற்றருக்கான உத்தரவாத விலை 60 ரூபாவால் அதிகரிப்பு மற்றும் யோகட் ஆகியவற்றின் விலை குறைப்பு

சிறுநீரக நோயாளர்களுக்கு கொடுப்பனவு
சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதாந்தம் 3,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு
முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 2,500 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

புலமைப்பரிசில்கள் அதிகரிப்பு
மஹாபொல, 5ஆம் ஆண்டு  புலமைப்பரிசில்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் 4000 ரூபாவினாலும் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் 1500 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

உயர்மட்ட உத்தியோகஸ்தர்களின் விசேட கொடுப்பனவு அதிகரிப்பு
பல்கலைக்கழக கல்விசார் உத்தியோகஸ்தர்கள், வைத்தியர்கள் மற்றும் நீதிச்சேவை ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவு அதிகரிக்கப்படவுள்ளது.

வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு ஓய்வூதியத்திட்டம்
வெளிநாடுகளுக்குச் சென்று  வேலை செய்வோருக்கு விசேட ஓய்வூதியத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் ஓய்வூதியம்
முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு ஓய்வூதியம் மற்றும் காப்புறுதித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மின்சாரக்கட்டணம் 25%ஆல் குறைப்பு
ஹோட்டல் மற்றும் சிறு, நடுத்தர கைத்தொழில்களுக்கான மின்சாரக்கட்டணம் 25 சதவீதத்தால் குறைப்பு.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு  
அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த அடிப்படை சம்பளம் 15000, 10000  ரூபாவாக  அதிகரிக்கப்பட்டுள்ளத. அதன்படி அடுத்த வருடத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளமாக 15000 ரூபாவும்,

தனியார் ஊழியர்களின் அடிப்படை சம்பளமாக 10000 ரூபாவும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வேலை வழங்குவோரினால் வழங்கப்படும் ஊழியர் சேமலாப நிதி 14 சதவீதமாக அதிகரிப்பு

கொழும்பை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்க 1500 மில்லியன் ஒதுக்கீட்டுக்கு முன்மொழிவு.

துண்டுவிழும் தொகை ரூ.512 பில்லியன்

2015 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் 512 பில்லியன் ரூபாய் துண்டுவிழுந்துள்ளது. அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான மானியங்கள் அடங்கலாக மொத்த வருமானம் 1689 பில்லியன் ரூபாவாகும். மொத்த செலவு 2210 பில்லியன் ரூபாவாகும்.

jaffnamuslim 

ஹிஜ்ரி ஆண்டு - ஒரு பார்வை

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அடையாளமாக நாட்காட்டிகள் உள்ளன. அச்சமுதாயங்கள் பெருமைப் படக்கூடிய பல அர்த்தங்கள் அந்த நாட்காட்டிகளில் அடங்கியுள்ளன. மூஸா (அலை) அவர்களின் காலத்தை மதித்து அவர்களின் நபித்துவக் காலத்தில் இருந்து தமது நிகழ்வுகளுக்கு தேதியிட யூதர்கள் ஆரம்பித்ததும், ஈஸா (அலை) அவர்களின் பிறப்பைக் கண்ணியப்படுத்தி அதிலிருந்து தேதியிட கிருத்தவர்கள் ஆரம்பித்ததும் இதனால்தான். இவ்வாறு ஒவ்வொரு சமூகமும் தனது கொள்கை கோட்பாடுகளுடனும் நாகரீகத்துடனும் தொடர்புபடக் கூடிய அம்சங்களை கொண்டு, தமது நாட்காட்டிகளை நிர்ணயித்தனர்.
ஒரு சமூகம் பிற சமூகத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் தாக்கத்தில் உள்ளாகும் போது ஆக்கிரமித்த சமூகங்களின் நாட்காட்டிகளை பின்பற்றியது வரலாறு கூறும் உண்மை. நாட்காட்டிகளின் இவ்வாறான முக்கியத்துவத்தை உணர்ந்து முஸ்லிம்கள் ஹிஜ்ரீ காலண்டரைப் பின்பற்றுவது அவசியமாகின்றது. ஹிஜ்ரி நாட்காட்டியை பின்பற்றுவது இஸ்லாமிய ஆளுமையின் சிறப்பு அடையாளமாகும்.
இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்ட இஸ்லாத்தின் எதிரிகள் ஹிஜ்ரா நாட்காட்டியை விட்டும் முஸ்லிம்களை திசை திருப்பி கிருத்துவ நாட்காட்டியைப் திணிப்பதற்கு முயற்சி செய்தனர். அவர்களின் தொடர் முயற்சியால் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இதில் வெற்றி கண்டனர். மேற்குலகின் மீதுள்ள கண்மூடித்தனமான மோகத்தால் சவூதி அரேபியா தவிர அனைத்து இஸ்லாமிய நாடுகளும் தங்களின் ஹிஜ்ரா காலண்டர் நடைமுறையை இழந்தன. கிருத்துவக் காலண்டரையே தங்கள் அரசின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியாக அறிவித்தன.
சவூதி அரேபியா மட்டும் ஹிஜ்ரீ நாட்காட்டியை பயன்படுத்திக் கொண்டிருப்பதுடன், அவ்வாறு செயல்படவேண்டும் என்பதை அந்நாட்டின் அரசியல் சாசனச் சட்டத்தின் இரண்டாவது பகுதியில் சட்டமியற்றியுள்ளது.
ஹிஜ்ரா காலண்டர் என்பது பெரும்பாலான முஸ்லிம்களிடம் அன்னியமாகி விட்டது. ஹிஜ்ரா காலண்டரை பின்பற்றுமாறும் கிருத்துவக் காலண்டரை புறக்கணிக்குமாறும் முஸ்லிம்களுக் கிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது முஸ்லிம் அறிஞர்களின் கடமையாகும். மார்க்க அறிஞர்களும் முஸ்லிம் சமுதாயத் தலைவர்களும் ஹிஜ்ரா காலண்டர் தொடர்பாக பொடுபோக்காக இருப்பது வேதனைக்குரிய விஷயம்தான்.

facebook

மனித உடல்: ஆச்சரியப்படத்தக்க செய்திகள்

நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளர்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும். நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன.
> மனித உடலில் பல்வேறு ஆச்சரியப்படத் தக்க செய்திகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை காணலாம்:-
> மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639.
> மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
> மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடு கின்றது.
> மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400. மனிதனின் முதுகுத்தண்டின் எலும் புகள் 33.
> மனித மூளையின் எடை 1.4 கிலோ. ர் உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4
> மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லிட்டர்.
> உடலின் மெல்லிய சருமம் கண் இமை.
> மனித உடலில் உள்ள குரோமோசோம் களின் எண்ணிக்கை 23 இணை
> ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
> மனிதனின் கண் நிமிடத்திற்கு25 முறை மூடித்திறக்கிறது.
> நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
> மனித நாக்கின் நீளம் 10 செ. மீ.
> ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லிட்டர்.
> மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
> நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
> நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
> நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
> நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 விநாடிகள் ஆகின்றன.
> நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.

முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினருக்கு ஜனாதிபதியை சந்திக்க அனுமதியில்லை..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்திப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸின் ஒரு தரப்பினர் மேற்கொண்ட முயற்சிக்கு இதுவரை வெற்றி கிடைக்கவில்லையென ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறிய வருகிறது.
தலைவர் ரவூப் ஹக்கீமுடன் முரண்பட்டுள்ள ஒரு தரப்பினர் (எம்.பி.க்கள்) இலங்கை முஸ்லிம்களின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் கலந்துரையாட விரும்பி அதற்காக அனுமதி கோரியுள்ளனர்.

எனினும் இதுவரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமிருந்து அதற்கான அனுமதி எதுவும் முஸ்லிம் காங்கிரஸினருக்கு (ஒரு தரப்பினர்  -எம்.பி.க்கள்) கிடைக்கவில்லை எனவும், இதனால் அவர்கள் விசனமடைந்திருப்பதாகவும் மேலும் அறியக்கிடைக்கிறது

jaffnamuslim

சவூதி மன்னர் வழங்கியதாக பரப்பப்பட்ட தங்க கழிவறை தொடர்பான செய்தி பொய்யானது!

சவூதி அரேபிய மன்னரான அப்துல்லா, தன்னுடைய மகளின் திருமண நாளன்று மேற்கத்திய பாணியில் தங்கத்தாலான டாய்லெட்டை பரிசாக வழங்கியதாக வெளியான செய்தி தவறென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோன்று, மன்னரின் மகள் என பிரசுரிக்கப்பட்ட படமும் தவறானது. அது மொரோக்கோவின் பாரம்பரிய திருமண முறை என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த செய்தியில் வெளியிடப்பட்ட டாய்லெட் படமானது, 2011ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற 11ஆவது டாய்லெட் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதாகும்
ஜாகிர் உசேன் நெல்லை

கேட்டும் கிடைக்காத பாவ மன்னிப்பு !

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன்அலி துணிச்சலுடன் தயக்கமின்றி உண்மைகளை வெளிப்படுத்தும் வழக்கம் கொண்டவர். அது மட்டுமன்றி தமிழ் மக்களுடன்  நல்லுறவைப் பேண வேண்டும் என்பதில் கூடிய அக்கறை காட்டி வருபவர்.
சில மாதங்களுக்கு முன்பு ஈழ மக்கள் புரட்சிகர  விடுதலை முன்னணியின் மாநாட்டில் கலந்து  கொண்டு உரையாற்றிய போது “தமிழ் மக்கள் ஒரே தலைமையின்  கீழ்  ஐக்கியப்பட்டு நின்று  உரிமைகளுக்காக  தளராத  இலட்சிய உறுதியுடன்  குரல் கொடுத்து  வருவதைப்  பாராட்டிய அவர் முஸ்லிம்கள் மத்தியில்  அப்படி  ஒரு ஐக்கியம்  உருவாகவில்லை  எனத் தனது கவலையையும் தெரிவித்துக் கொண்டார்.  அது மட்டுமன்றி தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும்  ஒடுக்கப்படும்  சிறுபான்மையினர்  என்ற  வகையில்  ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தேவையின் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.
இப்போது  ஊவா மாகாணச் சபைத் தேர்தல் முடிவு வெளிவந்த பின்பும் அவர் ஒரு துணிச்சலான  கருத்தை வெளியிட்டுள்ளார். ஊவா மாகாணசபைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட  முஸ்லிம்  கட்சிகளின் கூட்டமைப்பு ஒரு அங்கத்தவரைக் கூட  பெற  முடியாத நிலையில்  தோல்வியடைந்திருந்தது.  அந்தக் கூட்டமைப்பில் இடம்பெற்றிருந்த கட்சிகள்  அரசாங்கத்திலும் அங்கம்  வகிக்கின்றமையே தோல்விக்கு காரணம் என்று தெளிவாகவே விளக்கியிருந்தார்.
இந்தக் கட்சிகள் ஊவா மாகாணத்துக்கு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டபோது  தொடர்ந்து  பள்ளிவாசல்கள்  தாக்கப்படுவது  தொடர்பாகவும்இ பேருவளை  அளுத்கம  வன்முறைகள் தொடர்பாகவும்  தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக  மேற்கொள்ளப்படும் வி­மக் கருத்துகள் தொடர்பாகவும் மக்கள் கேள்வி எழுப்பினார்களாம். அது மட்டுமன்றி முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத்  தடுக்கத் தவறியதுடன்   மறைமுக   ஆதரவும்  வழங்கி  அரசாங்கத்துடன்  இணைந்திருக்கும்  முஸ்லிம் கட்சிகளுக்கு  முஸ்லிம்கள் எப்படி  வாக்களிக்க முடியும்? என்றும் வாக்காளர்கள் கேட்டார்களாம்.
அதற்குப் பதிலாக ஊவாவில் போட்டியிட்ட  முஸ்லிம் வேட்பாளர்கள் அனைவரும்   நாம் வெற்றி பெற்றால்  அரச தரப்பை  ஆதரிக்கப்  போவதில்லை  என  ஊவா மக்கள்  முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்திருந்தார்கள். ஏறக்குறைய அவர்கள் பாவ மன்னிப்புக் கேட்டனர். ஆனால் மக்கள்  அவர்களை மன்னிக்கவில்லை.    ஒருவன்  தன் பாவங்களை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்புக்  கேட்கும் போது  அவனின்  பாவங்கள்  மன்னிக்கப்படுகின்ற என வேதாகமம் கூறுகிறது.
இங்கு இவர்கள் தங்கள் பாவங்களுக்காக  மனம் வருந்துவதாக மக்கள் உணர்ந்திருந்தால்  நிச்சயம் மன்னித்திருப்பார்கள். ஆனால் மக்களால் அப்படி  உணர முடியவில்லை என்றே தோன்றுகிறது.
ஊவாவில்  தேர்தல் பரப்புரைகள் சூடு பிடித்து நடந்து கொண்டிருந்த வேளையில்  தம்புள்ள பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. குறித்த பள்ளிவாசல் மீது  இடம்பெறும்  ஐந்தாவது  தாக்குதல் இது. இந்தத் தாக்குதலும் கூட பலத்த பொலிஸ் காவலுக்கு மத்தியிலேயே இடம்பெற்றது.
அன்று இரவு இருவர் மோட்டார் சைக்கிளில்  வந்தனர் எனவும்இ ஒருவர் அங்கு காவலுக்கு நின்ற பொலிஸார்  ஒருவருடன்  ஏதோ கதைத்துக்  கொண்டிருக்க மற்றைய நபர் உள்ளே சென்று விட்டுத் திரும்பி வந்துள்ளார்.  சில நிமிடங்களில்  இருவரும்  சென்று விட்டனர். அவர்கள் சென்றவுடனேயே குண்டு வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும் பள்ளிவாசல் நிர்வாகி   ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கியிருந்தார். ஆனால் இந்தச்சம்பவம் தொடர்பாக  எவரும் கைது செய்யப்படவுமில்லை. அங்கு கடயைமில்  ஈடுபட்ட  பொலிஸார்  சம்பவத்துக்காக  விளக்கத்தைக்  கொடுக்கவுமில்லை.
ஏற்கனவே இந்தப் பள்ளிவாசல் இருக்குமிடம் பெளத்தர்களின் புனிதப் பிரதேசம் எனவும் அது அகற்றப்பட  வேண்டும்  எனவும் வலியுறுத்தும் தம்புல விகாரபதி  தலைமையில்  பெரும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டு பள்ளி வாசல்  தாக்கப்பட்டு  சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பின்பும் பள்ளிவாசல் மீதும் பலமுறை தாக்குதல்கள் தொடர்ந்தன.
ஆயினும் அவை தொடர்பாக  எந்த வித நடவடிக்கையும்  எடுக்கப்படவிலலை. எவரும் கைது செய்யப்படவில்லை.  அமைச்சர் ரிசாட் பதியுதீதின்   முஸ்லிம் கவுன்சில் பிரமுகர்கள்  பாதுகாப்புச் செயலரிடம் பேச்சுக்கள்  நடத்தியும்  எந்தவிதப்  பலனும் கிட்டவில்லை.   இந்த நிலையில் நகர அபிவிருத்தி அமைச்சு வேறு இடத்தில் காணி தருவதாகக் கூறி  எப்படியும்  அந்த பள்ளிவாசலை  அந்த இடத்திலிருந்து அகற்றி விடப் போவதாக பகீரதப் பிரயத்தனங்களை  மேற்கொண்டு வருகின்றது.
இப்படியான  ஒரு பள்ளிவாசலில் தான்  ஐந்தாவது தாக்குதல் குண்டுத் தாக்குதலாகப்  பரிணாமம் பெற்றுள்ளது. அதே வேளையில்  சிரேஷ்ட  அமைச்சர் பெளசி “”அங்கு வெடித்தது  குண்டு அல்ல  வெறும் சீன வெடிகளே” எனக்  திருவாய் மலர்ந்தார்.  நடு இரவுப்  பொழுதில்  பள்ளி வாசலுக்குள்  சீன வெடி  கொளுத்த வேண்டிய  அவசியம் என்ன என்பதையோஇ சீன வெடி   கொளுத்த பொலிஸாரா  தீப்பெட்டி  வழங்கினார்கள்? என்பது பற்றியோ அவர் எதுவுமே சொல்லவில்லை.
ஆனால் வாய் திறந்து  சொல்லாமலே அவர் சொன்ன வி­யம்  என்னெவன்றால்  “”நான்  அரசாங்கத்தை காப்பாற்ற  எப்படியான பொய்யை  சொன்னாலும் முஸ்லிம் மக்கள் நம்ப வேண்டும்” என்பது தான்.
முஸ்லிம் மக்களை இழிவு  படுத்தும் வகையிலான  மனிதகுல விரோத மதவெறி  மனப்பான்மை கொண்ட அந்தச்  சம்பவம்  தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம்  தலைமையிலான  முஸ்லிம் காங்கிரஸோ அல்லது ரிஷாட் பதியுதீன் தலைமையிலான மக்கள்  காங்கிரஸோ ஊவா மக்கள் சபையோ கண்டனம் வெளியிடவில்லை.
ஏதேனு நடவடிக்கை  எடுக்கும்படி கூட அவர்கள்  அரசாங்கத்தைக் கோரவுமில்லை. குறைந்த பட்சம் அமைச்சர் பெளசியிள் நகைப்புக்கிடமான   கருத்துத் தொடர்பாக ஒரு சிறு விமர்சனம் கூட முன்வைக்கவில்லை. இப்படியான நிலையில்  இந்த முஸ்லிம் தலைமைகள் முஸ்லிம் மக்களின்  நலன்களுக்கு குரல் கொடுப்பார்கள் என எப்படி நம்ப முடியும்? அரசாங்கத்தின் நடவடிக்கைகள்  மீது வெறுப்புள்ள முஸ்லிம்  மக்களின் வாக்குகளை  முஸ்லிம்கள் என்ற  நாமத்தில் பெற்று  அதே அரசைப் பலப்படுத்தமாட்டார்கள் என மக்கள் நினைப்பதில் என்ன தவறு உண்டு.ஊவாவில் போட்டியிட்ட  முஸ்லிம் வேட்பாளர்கள்  “”நாம் வெற்றி பெற்றால் அரசாங்கத்தை ஆதரிக்கப் போவதில்லை”என  ஊவா மக்கள்  முன்பு செய்த  சத்தியப் பிரமாணத்தையும் மக்கள் நம்பவில்லை.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில்  முஸ்லிம் காங்கிரஸ்  தனித்துப் போட்டியிட்டது. அரசாங்கத்துக்கு  எதிராகப் பரப்புரை செய்து  பல ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தது.  அரசை  எதிர்க்கும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்  முஸ்லிம் காங்கிரசுக்கு  முதலமைச்சர்  பதவி தருவதாகக்  கூறி கிழக்கில் தமிழ்  பேசும்  மக்களின்  ஆட்சியை அமைக்க ஆதரவு கோரினர்.ஆனால் அதை நிராகரித்து விட்டு ஐக்கிய மக்கள்  சுதந்திரக் கூட்டமைப்புக்கு  ஆதரவு  வழங்கி அரச கட்சிக்கே முதலமைச்சர் பதவியையும்  தாரை வார்த்தது முஸ்லிம் காங்கிரஸ் .
அப்படி முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் அமைக்கப்பட்ட  கிழக்கு  மாகாண சபையில்  பேருவளைஇ அளுத்கம பகுதிகளின் முஸ்லிம்கள்  மீது மேற்கொள்ளப்பட்ட  உயிரழிப்பு கொந்தளிப்பு  கொடுமைகளுக்கு எதிராக  கொண்டு வரப்பட்ட தீர்மானம்  கூட  அதன்   தவிசாளரால் நிராகரிக்கப்பட்டது.
இப்படியான நிலையில்  ஊவா மாகாண சபை வேட்பாளர்களின் சத்தியப் பிராமாணத்தை எப்படி  முஸ்லிம் மக்கள் நம்ப  முடியும்?  முஸ்லிம் மக்களிடம்  பாவ மன்னிப்புக் கோரியும்  ஊவா மாகாண சபைத் தேர்தலில்   முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற ஒரு  ஆசனமும்  இப்போது பறிபோய்விட்டது.
முஸ்லிம் தலைமைகள் தாங்கள் ஒடுக்கப்படும் சிறுபான்மையினர் என்பதையும்இ தமது   நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பதையும் புரிந்து கொண்டு தங்கள் தவறுகளை உண்மையாக உணர்ந்து மனம் வருந்தி  முஸ்லிம் மக்களிடம் பாவ மன்னிப்புக் கோரினால்  மட்டுமே முஸ்லிம் வாக்களர்களின்  மன்னிப்பு கிடைக்கும்.-
lankamuslim

ரவூப் ஹக்கீமின் கணக்கு சரியா..?

மகாராஜாவோ, மக்களோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் உரிமைக்கு உத்தரவாதம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சமூகத்துக்கு தொழில் வாய்ப்புகள் செய்து கொடுக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும் முஸ்லிம்களின் வாழிடங்களில் அபிவிருத்தி ஏற்பட்டாலும் ஏற்படாவிட்டாலும் நாட்டின் நீதி அமைச்சர் என்ற உயர் கௌரவமும் மதிப்புமிக்கதுமான உயர் பதவியை அலங்கரித்துக் கொண்டிருப்பதில் அலாதி பிரியம் கொண்டவராகி விட்டார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்!
நேரத்துக்கொரு கதை, இடத்துக்கொரு கதை, ஜனாதிபதி முன் ஒரு கதை, மக்கள் முன் ஒரு கதை, சரியோ பிழையோ எல்லாக் கதைகளுமே சரியானது என வாதிடக்கூடிய திறமையும் மொழியாற்றலும் சட்டப் பின்னணியும் கொண்ட நவீன காலப் புலவராகி விட்டார் போலும்.

சரியான நேரத்தில் எடுக்கின்ற பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கின்ற சரியான முடிவும் எப்போதும் பிழையானதே என மர்ஹம் எம்.எச்.எம். அஷ்ரபின் பேச்சைக் கோடிட்டுக் காட்டும் ரவூப் ஹக்கீம் சரியான நேரத்தில் பிழையானதும் பிழையான நேரத்தில் சரியானதுமான முடிவுகளை எடுப்பதினூடாக எப்போதும் பிழையான முடிவுகளையா எடுக்கிறார் என கேட்கத் தோன்றுகிறது.

ஒருபுறம் அரசுக்குள்ளிருந்து கொண்டு அரசை விமர்சிப்பார். மறுபுறம் அரசுக்குத் தேவையான போதெல்லாம் அரசை ஆதரித்துப் பேசுவார். நீதியே இல்லாத நாட்டில் நீதியமைச்சராக இருப்பதாகவும் சமாதான நீதவான் பதவியைத் தவிர வேறெந்தப் பதவியையும் தன்னால் வழங்க முடியாது என்றும் மேடைகளில் தன் நிலையை முழங்கியவர் தொடர்ந்தும் அப்பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதன் மூலம் இனியும் என்ன செய்யப் போகிறார் என அவருக்கே தெரியாது. 

வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் சந்திப்புகளின் போது முஸ்லிம்களுடைய பிரச்சினைகளையும் தேவைகளையும் சரிவர எடுத்துக் கூறக்கூடிய சந்தர்ப்பங்களை நழுவ விடுவதும் தமிழர் நலன் சார்ந்த விடயங்களில் அரசுக்கெதிராக வரக்கூடிய ஆபத்துகளை தணித்து விடுவதில் பங்காற்றுவதுமான அவரது போக்குகள் நாட்டின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எவ்விதத்தில் உதவக் கூடும்?

தேர்தல் காலங்களில் அரசுக்கெதிராக முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளைப் பெற்றுக் கொண்டு பின்னர் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக அரசுடன் இணைந்து கொள்வதாகக்கூறி சமூகத்தை எப்போதும் பரிதாபகரமாக வைத்துக் கொண்டு தான் மாத்திரம் சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டிருப்பது சரியானதுதானா?

இவர் அரசுடன் ஒட்டிக் கொண்டிருப்பதன் மூலம் நாட்டில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது என்றால் கூட பரவாயில்லை. ஆனால் பள்ளிவாசல்கள், மத்ரசாக்கள் உடைக்கப்படுவது, கல்லெறியப்படுவது, நிந்தனை செய்யப்படுவது, ஹலால் எதிர்க்கப்படுவது, பர்தா அணிதல் தடுக்கப்படுவது என இந்த அரசாங்க காலத்தில் தாராளமாகவே முஸ்லிம்களுக்கெதிரான செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

அப்படியிருக்க ரவூப் ஹக்கீம் தான் அரசுடன் இணைந்திருக்காவிட்டால் நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்டுவிடும் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வைத்துள்ளார்.

அரசு பலமாக இருக்கும் போது சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களை நசுக்குவதும் பலவீனமாக இருக்கும் போது அவர்களின் ஆதரவை நாடுவதும் வழமை. கிழக்கு மாகாணத்தில் ஆட்சியமைப்பதற்கும் 18 ஆம்  திருத்தப்படி ஜனாதிபதி மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் கேட்பதற்கும் ரவூப் ஹக்கீம் ஆதரவளித்து அரசை பலமாக்கி சிறுபான்மை மக்கள் அடிவாங்கிக் கட்ட காரணமாகி விட்டார்.

கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சியில் அமர்ந்திருந்து கொண்டு எதிரணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து அரசுக்கெதிராகப் பிரேரணை நிறைவேற்றினார். பின்னர் வடக்கு மற்றும் வடமேற்கு மாகாண சபைத் தேர்தல்களின் தோல்வியை மறைக்க கிழக்கு மாகாண சபையில் அரசுக்கெதிராக பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றினார்.

அரசியலமைப்புக்கு 17 ஆம் திருத்தத்தைக்கொண்டு வந்து சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி நாட்டில் ஜனநாயகத்தை அதிகரிக்க வேண்டுமென்ற ஒரு தேசிய ரீதியான தேவைக்காக 100 நாள் காலக்கெடுவை முன்வைத்ததன் மூலம் ரவூப் ஹக்கீம் அரசிலிருந்து தூக்கி எறியப்பட்டார். பின்னர் 17 ஆவது  திருத்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை ஒழித்துக் கட்டும் 18 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டதன் மூலம் முன்னுக்குப் பின் முரணாக செயற்பட்டுள்ளார்.

தேர்தல் காலங்களில் அரசுக்கெதிரான கடும் பேச்சுப் பேசுவார். தேர்தல் முடிந்ததும் வீண் பேச்சுப் பேசுவார். தேர்தலில் தோற்றுப் போவார். ஆனால் வெற்றிப் பேச்சுப் பேசுவார். அரசுக்கு அவர் எதிர்ப்பு. ஆனால் அவர் ஆதரவு. ஒன்றுமே புரியவில்லை. அவரும் குழம்பி மக்களையும் குழப்புகிறாரா? அல்லது மக்களை மாத்திரம் குழப்பி அவர் தெளிவாக இருக்கிறாரா?

ஊவாத் மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டு தோல்வியடைந்தது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள ரவூப் ஹக்கீம் நாட்டில் எதிர்க்கட்சி பலமடைவது ஜனநாயகத்திற்கு சாதகமானதென சம்பந்தமில்லாத இடத்தில் ஜனநாயகம் குறித்து பேசுகிறார். ஆனால் 18 ஆவது திருத்தத்தில் ஜனநாயகத்தை காப்பாற்றத் தவறி விட்டார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவரையும் பொதுவாக இந்த நாட்டு முஸ்லிம்களுடைய குரலாகவே சகல தரப்பினரும் பார்க்கின்றனர். முஸ்லிம்களின் பிரச்சினை, தேவை, அபிலாஷை என வருகின்ற போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடே முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக வெளிநாட்டுப் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகின்ற போது இந்த நாட்டு முஸ்லிம்களின் நிலைப்பாட்டை அறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை சந்திப்பதே வழக்கம், மாறாக அரசின் நிலைப்பாட்டை எவரும் நீதி அமைச்சரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில்லை.

எப்போதும் அரசாங்கத்துடன் கலந்திருக்கும் முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் அரசு சார்பானவர்கள். தமது சமூகத்துக்கு ஏதேனும் பிரச்சினை எழுகின்ற போதிலும் கூட அவர்கள் அரசைப் பகைத்துக் கொள்வதில்லை. மாறாக எய்தவனிருக்க அவர்கள் அம்பை ஏசிக் கொண்டிருப்பர்.

ஆனால் ஒரு சமூகம் சார்பாக உருவாகி அந்த சமூகத்தைக் காட்டி அரசியல் நடத்தும், அந்த சமூகத்துக்குத் தலைமைத்துவம் வழங்கும் கட்சியோ நபரோ தமது சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுங் கட்சிக்குள் நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் போன்ற புதுமையான கதைகளைக் கதைத்துக்கொண்டு ஒட்டு மொத்த சமூகத்தையும் முட்டாள்களாகக் கருதக் கூடாது.

அரசின் முஸ்லிம் விரோதப் போக்குக் காரணமாக அரசுடன் ஒட்டிக் கொண்டு தேர்தலை சந்தித்தால் ஆளுங்கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கருதி அரசாங்கத்தின் அனுசரணையோடு ஊவா மாகாண சபைத் தேர்தலில் இரு முஸ்லிம் கட்சிகளும் கூட்டுச் சேர்ந்து தனித்துப் போட்டியிட்டன. இதன்மூலம் முஸ்லிம்களுடைய வாக்குகளில் ஆசனமொன்றைப் பெற்று அதனை ஆளுங்கட்சிக்குத் தாரை வார்க்கும் இத்திட்டத்திற்கு ஊவா முஸ்லிம்கள் இடம் கொடுக்கவில்லை.

பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை பலத்துக்குக் காரணமாக இருந்து மந்திரி சபை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புகளைக் கொண்டிருந்தும், கிழக்கு மாகாண சபையில் ஆளுங்கட்சி ஆட்சியமைக்க காரணமாக இருந்தும் பேரம்பேசும் சக்தியை பலமிக்கதாகத் தக்க வைத்துக் கொள்ள முடியாதவர்கள், ஊவா மாகாண சபையொன்றில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்று சாதிக்கப்போவது எதுவுமில்லை என்று மக்கள் நினைத்திருக்கிறார்கள். இதனை முஸ்லிம் தலைமைகள் உணர்ந்திருக்கவில்லை.

இப்போது ஐக்கிய தேசியக் கட்சி பலமடைந்து வருவதையறிந்து எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்க்கமான முடிவெடுக்க வேண்டிய தருணத்திற்கு வந்திருப்பதாக வழமைபோல் ஹக்கீம் கூறி வருவதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் பாயக்கூடிய நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். இதனை அறிந்தே ஊவா தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்ற ஹரீன் பெர்ணான்டோ எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதாக இருந்தால் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துத் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீமினதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் இப்போக்குகள் இந்த நாட்டின் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பிறர் விமர்சிக்கக் காரணமாக இருக்கின்றன.

ஒரு தலைவனுக்கு பொறுமை, சகிப்புத் தன்மை அவசியம். அதேவேளை ஒரு தலைவன் பலமானவனாகவும் தைரியமானவனாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்புத் தருவதும் உணவளிப்பதும் இறைவனே! எனவே சமூகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது,  சமூகத்தின் தேவை பாரியளவில் இருக்கும் போது அச்சமூகத்தின் பிரதிநிதிகள் தூங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா?

சமூகம் அரசினால் பாதிக்கப்படும் போது அச்சமூகத் தலைமை சாணக்கியம் என்ற போர்வையில் எப்போதும் அரசுக்கு கூஜா தூக்கக் கூடாது. அதனை மக்கள் விரும்புவதுமில்லை.

வித்தியாசமான புதிய முடிவுகளையும் உபாயங்களையும் பரீட்சித்துப் பார்க்க வேண்டும். மாற்றுக் கருத்துகளும் மாற்றுத் தீர்வுகளும் பல புதிய ஆரோக்கியமான மாற்றங்களைக் கொண்டு வரலாம். அனுகூலமான புதிய பரிமாணங்களை எடுக்கலாம். 

தற்பொழுது கஹடோவிடாவில் நடந்துகொண்டிருக்கும் “எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்“

கஹடோவிட ஹிஜிரா மாவத்தை மற்றும் மாலிகாவத்தை மாவத்தை ஆகிய பிரதேசங்களை அன்மித்த பகுதியில் அத்தனகல்லைப் பிரதேச சபையால் போடப்படுகின்ற குப்பை, கூலங்களால் மிகப்பாரியலவிளான நீர் மாசடைதல், நுளம்புப் பெருக்கம் போன்ற  சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டுள்ளதால் இதற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமமொன்று இன்று காலை 8.00 மணியளவில் கஹடோவிட பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை நாம் எளவே உங்களுடன் பகிா்ந்திகொண்டிருந்தோம்.  

அந்தத்தகவல் சரியாக ஊர்மக்களை சென்றடையவில்லை என்றகாரணத்தினால் அந்த ஆர்ப்பாட்டம் இன்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் எமது சந்தியில் இப்போது  ஊர்மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. 









ஹைதராபாத்: 10 வயது சிறுவன் ஒரு நாள் போலீஸ் கமிஷனராக நியமனம் (Video)

ஹைதராபாத்: ஒருநாள் முதல்வர்தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் ஹைதராபாத்தில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த 10 வயது சிறுவன் சாதிக் ஒருநாள் காவல்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார். மரணத்தில் வாசலில் உள்ள அந்த சிறுவனின் கனவை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஹைதராபாத்: 10 வயது சிறுவன் ஒரு நாள் போலீஸ் கமிஷனராக நியமனம்
ஹைத்ராபாத்தில் சாதிக் என்ற சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வாழ்நாளை எண்ணிக்கொண்டு வருகிறான். இந்த சிறுவனுக்கு காவல்துறை ஆணையராக வரவேண்டும் என்பது கனவாகும்..

சாதிக்கின் ஆசையை நிறைவேற்ற "ஆசையை நிறைவேற்றும் அறக்கட்டளை" முன் வந்தது. இதையடுத்து சிறுவனின் நிலை குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

 இந்த கனவை மாநகர காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி நிறைவேற்றி வைத்தார். இதனையடுத்து நேற்று ஒரு நாள் மட்டும் சாதிக் காவல்துறை ஆணையராக காவல்துறை உடை அணிந்து கொண்டு, அதற்கான தொப்பியையும் அணிந்து கொண்டு காவல்துறை ஆணையர் நாற்காலியில் அமரச் செய்தார். அப்போது சிறுவனை ஏராளமானோர் புகைப்படம் எடுத்தனர்.

அப்போது, சிறுவனுக்கு காவல்துறை ஆணையர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர். சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறினார்.

காவல்துறை ஆணையராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரவுடிகளைப் பிடிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு பதிலளித்தான்.

நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனின் விருப்பம் நிறைவேறியிருப்பதன் மூலம், அவனது வாழ்நாட்கள் சற்று அதிகரிக்கும் என்று அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார்.



“எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்“ ஊா்மக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

கஹடோவிட ஹிஜிரா மாவத்தை மற்றும் மாலிகாவத்தை மாவத்தை ஆகிய பிரதேசங்களை அன்மித்த பகுதியில் அத்தனகல்லைப் பிரதேச சபையால் போடப்படுகின்ற குப்பை, கூலங்களால் மிகப்பாரியலவிளான நீர் மாசடைதல், நுளம்புப் பெருக்கம் போன்ற  சுகாதாரக் கேடுகள் ஏற்பட்டுள்ளதால் இதற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டமமொன்று இன்று காலை 8.00 மணியளவில் கஹடோவிட பிரதான வீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இதில் ஊர்மக்கள் அனைவரும் தவராது கலந்துகொள்ளுமாறு வேண்டுகொள் விடுக்கப்படுகிறது.