கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

முஸ்லிம் உம்மாவின் 2013 !!


2013-ம் ஆண்டு எம்மை கடந்து செல்கிறது. மத்தியகிழக்கின் பாலைவனங்களிலும், கவ்கஸ்ஸின் பனிப்படுக்கைகளிலும், ஆப்கானின் பள்ளத்தாக்குகளிலும், ஆபிரிக்க சதுக்கங்களிலும் இருந்து கிளம்பும் நெடியில் முஸ்லிம்களின் மரண வாசனை மட்டுமே வீசுகிறது. உலகின் ஏனைய இனங்கள் இயற்கை அனர்த்தங்களினாலும், விபத்துக்களினாலும் மரணித்த அதே காலப்பகுதியில் முஸ்லிம்கள் மட்டும் பித்தளை தோட்டாக்களாலும் கந்தக குண்டுகளாலும் மட்டுமே மரணித்து போயுள்ளனர். 2014 நல்ல வருடமாக பிறக்க வேண்டும் என எம்மால் பிரார்த்திக்க முடியாமல் உள்ளது. இனி வரும் வருடங்கள் இதை விடவும் மோசமானவையாகவே இருக்க போகின்றன. ஏன் அப்படி என்ற கேள்விக்கான விடை தான் என்ன?

2013-ல் முஸ்லிம்களின் இரத்தம் வெடிகுண்டு தாக்குதல்களினாலும், ட்ரோன் விமான தாக்குதல்களினாலுமே அதிகம் சிந்தப்பட்டுள்ளது. ஈராக்கிலும், பாகிஸ்தானிலும் மேற்குலக இஸ்லாமிய விரோத சக்திகள் ஷியா சுன்னி பிரச்சனைக்கு பின்னணியில் நின்று செயற்பட்டன. தற்கொலை தாக்குதல் என்ற பெயரில் முஸ்லிம்களை பரஸ்பரம் மோத விடுவதன் ஊடாக அவர்களின் அழிவையும், காட்டிக்கொடுப்புக்களையும் விரும்பி நின்றனர் அவர்கள். 

ட்ரோன் ஆளில்லா விமானங்கள் எமனிலும், வசிரிஸ்தானிலும் கொலை வேட்டையாடின. ஒரு போராளியை கொல்வதற்கு அந்த குறித்த பகுதியையே ஏவுகணைகள் மூலம் அழிப்பதன் மூலம் பல பொதுமக்களையும் சேர்த்து கொலை செய்தன இந்த அமெரிக்க விமானங்கள். 
பெண்கள், வயோதிபர்கள், குழந்தைகள் என்று வகை தொகையில்லாமல் கொன்று குவித்தன இந்த விமானங்கள். கடந்த காலங்களை விட 2013-ல் மிக மோசமான பல தாக்குதல்களை முஸ்லிம்கள் எதிர்கொண்டனர். 

எதிர் வரும் காலங்களில் உலகலாவிய முஸ்லிம் உம்மாவிற்கு எதிரான அநியாயங்களும், அழித்தொழிப்பு நடவடிக்கைகளும் மேலும் தீவிரமடையவிருக்கின்றன். இதற்கான தீர்வை முஸ்லிம் உம்மா எதன் ஊடாக தேடப்போகிறது?. நிச்சயமாக முஸ்லிம்களிற்கான தலைமைத்துவ அரசியல் சக்தியின் அவசியம் இவற்றிற்கான விடையாக அமையும். இஸ்லாமிய அரசியல் கொள்கையின் மையக்கருவான “அதிகாரம் அல்லாஹ்விற்கு மட்டுமே” என்ற சங்க நாதம் ஒவ்வொரு முஸ்லிமின் செவிப்பறையையும் அதிர வைக்க வேண்டும். ஒவ்வொரு முஸ்லிமின் உதடுகளும் இதனை, இந்த வார்த்தைகளை  அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் உச்சரிக்க வேண்டும். அவன் நாடிகளின் துடிப்பில் இவை வெளிப்படல் வேண்டும். 

“ஆட்சி அதிகாரம் அல்லாஹ் ஒருவனிற்கே” என்ற கொள்கை முஸ்லிமின் குடும்பங்களில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அது இறுதியில் இஸ்லாமிய அரசியல் தலைமை எனும் கிலாபாவை உலகில் உருவாக்குவதற்கான முஸ்லிம் உம்மாவின் இலட்சிய அலையாக எழ வேண்டும். முஸ்லிம் கிலாபா என்பது குறிப்பிட்ட ஒரு அமைப்பின் கொள்கையல்ல. அதனை அவர்கள் மட்டும் உரிமை கோரவும் முடியாது. எந்த ஒரு முஸ்லிம் ஆணோ பெண்ணோ அஷ்-ஷஹாதத் கலிமாவை வாயினால் உரைத்து உள்ளத்தினால் அதனை நம்புவாரோ, அவர்கள் அனைவரினதும் பொதுக்கடமையே “இஸ்லாமிய கிலாபாவை உருவாக்குவதம் அதனை பாதுகாப்பதும்”. 

இஸ்லாமிய கிலாபா இல்லாத 2014-ல் நாம் காலடி எடுத்து இன்று வைக்கவுள்ளோம். இமாம் மஹதியும், ஈஸாவும் வந்து அதனை பார்த்துக்கொள்ளட்டும் அது வரை நாம் இணையத்தில் ஜிஹாத் செய்வோம் என்ற முனாபிக்தனமான முழங்கள்களுடன்..

YMMA புலமைப்பரிசில் - 2014 (ஸகாத் நிதி)



அகில இலங்கை YMMA யினால் வசதி குறைந்த திறமையுள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் இவ்வருடமும் வழங்கப்படவுள்ளது. விண்ணப்பதாரர் 2012 டிசம்பரில் G.C.E (O/L) இல் ஏதாவதொரு பாடத்தில் 1A யுடன் கணிதம், இஸ்லாம் உட்பட 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

குறிப்பு- இப்புலமைப்பரிசில் ஸகாத் பெறத்தகுதியான வறிய மாணவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும்.

விண்ணப்பப்படிவங்கள் உங்கள் பிரதேச YMMA கிளைகளில் பெற்றுக்கொள்ளலாம். ஜனவரி 20ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் அனுப்பிவைக்கப்படவேண்டும்.

தவவல்
YMMA Kahatowita Branch
செயலாளர் ஷியம் ஹமீட்
0725636003

தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள ஷபீ பள்ளிவாசலை முடிவிடுமாறு உத்தரவு


தெஹிவளை கடவத்த வீதியில் உள்ள ஷபீ பள்ளிவாசலை இன்று 30-12-2013 பிற்பகல் 1 மணியுடன் முற்றாக மூடி விடுமாறு புத்த சாசன அமைச்சின் செயலாளரினால் குறித்த பள்ளி வாசலுக்கு எழுத்து மூலம் அறிவிக்க பட்டுள்ளது.

Jaffna Muslim

ரயிலில் தீ: தப்பிக்க முயன்றவர்களில் மூவர் பலி; மரணமடைந்த முஸ்லிம் தம்பதியரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை வரகாபொலையில் இடம்பெறும்.



மாத்தறையிலிருந்து கண்டியை நோக்கிய பயணித்த ரயிலின் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வியாங்கொடையில் வைத்தே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட வேளையில் அந்த ரயிலிருந்து பாய்ந்து தப்பிக்க முயன்றவர்களில்,  கொழும்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டு மூவர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இவ்விபத்தில் பலியானவர்கள் வரக்காபொலை, மெதவிய பகுதியைச் சேர்ந்த தம்பதியரும் இலங்கை வான்படையைச் சேர்ந்த ஒருவர் எனவும் தற்சமயம் அறியப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

.. இவ்விபத்தில் மரணமடைந்த முஸ்லிம் தம்பதியினர் எமது ஊரைச் சேர்ந்த சகோதரி Bபிஷிர் (ஆசிரியை- திகாரிய அங்கவீணர் நிலையம்), கொவுஸ் நானா அவர்களுடைய சகோதரரும் மற்றும் யுனுஸ் ஆகியோரின் நெருங்கிய உறவிணரும் ஆவர்.

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

 

புதிய அடையாள அட்டை விவகாரம்: இஸ்லாமா? சட்டமா?




அடுத்த வருடம் ஜூன் மாதம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணியமுடியாதெனவும், பெண்கள் பர்தா அணியமுடியாதெனவும் ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான குரோதச் செயல்கள் அரங்கேறிவரும் சூழ்நிலையில் அரசாங்கம் இவ்வாறானதொரு அறிவித்தலை வெளியிட்டுள்ளமையானது பல சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

புதிய இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையின் புகைப்படத்தில் எந்தவொரு மதத்தையோ அல்லது சமூகத்தின் கலாசாரத்தையோ பிரதிபலிக்கும் வகையிலான எந்தவொரு அடையாளமும் இருக்கமுடியாதென அரச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தினுடைய பொது ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார அறிவித்துள்ளார்.
 
முஸ்லிம் ஆண்கள் தொப்பி அணியாமல் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதில் பெரியளவிலான சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிம் பெண்கள் கட்டாயம் தங்களது தலையை மறைக்கவேண்டும். இதற்காகவே அவர்கள் பர்தா அணிந்துகொள்கிறார்கள். ஆனால், அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டத்தின் பிரகாரம் எந்தவொரு முஸ்லிம் பெண்களும் பர்தாவைக் கழற்றிவிட்டு புதிய அடையாள அட்டையைப் பெற்றக்கொள்ள மாட்டார்கள்.
 
ஒரு முஸ்லிம் பெண்மணி பர்தா இல்லாமல் அடையாள அட்டைக்கு புகைப்படம் எடுக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். சோதனைச் சாவடியில் அவள் பர்தா அணிந்து தலையை மறைத்துக்கொண்டு சென்றால், பொலிஸார் நடுவீதியில் வைத்து அவளது பர்தாவை கழற்றச் சொல்வார்கள். இதை அவர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமா அல்லது நாட்டுச் சட்டமா என்று வரும்போது முஸ்லிம்கள் எக்காரணம் கொண்டும் இஸ்லாத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.
 
இந்த புதிய நடைமுறை அமுலுக்கு வந்தால், எந்தவொரு முஸ்லிம் பெண்ணும் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள மாட்டார். அடையாள அட்டை இல்லாமல் அவர்கள் பல நெருக்கடிக்கு உள்ளாவார்கள். நாட்டின் பிரஜைகள் அந்நாட்டு அடையாள அட்டையை பகிஷ்கரிக்கும்போது விவகாரம் விஸ்வரூபமெடுத்து சர்வதேச மட்டம்வரை பேசப்படும். இறுதியில் சொந்தச் செலவில் சூனியம் வைத்த கதையாக மாறும்.
 
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கருவறுக்கத் துடித்துக் கொண்டிருக்கும் பேரினவாத இயக்கங்கள் முஸ்லிம் பெண்களின் ஆடைகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், இஸ்லாமிய கலாசார ஆடைகளை அணிந்த பெண்கள் பல இடங்களில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். ஒருசில பாடசாலைகளில் கூட பர்தா அணியமுடியாதென தடைகள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடுவதைத்தான் (நிகாப்) எதிர்க்கிறோம். தலையை மூடுவதை (பர்தா) அல்ல என்று பொதுபல சேனா பிரசாரம் கூறிவந்தது. இந்த நிலையிலேயே பர்தா அணிவது தற்போது தேசியப் பிரச்சினையாக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுசரணை வழங்குவதுபோல அரசாங்கம் வெளியிட்டுள்ள இந்தி புதிய அறிவிப்பானது முஸ்லிம்களிடையே பலத்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
 
ஒருநாட்டின் கலாசார ஆடைகளுக்கும் தேசிய அடையாள அட்டைக்கும் எவ்விதத் தொடர்புகளும் இல்லை. அடையாள அட்டையில் முஸ்லிம்கள் தலையை மறைத்திருப்பதால் அடையாளம் காண்பதில் பல சிரமங்கள் உள்ளன. சோதனையின்போதே இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதாகவும், எதிர்வரும் காலங்களில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டத்தை மாற்றவோ அல்லது திருத்தங்களை மேற்கொள்ளவோ தனக்கு எவ்விதமான அதிகாரங்களையும் இல்லையென ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொது ஆணையாளர் அடித்துக் கூறியுள்ளார். அப்படியானால் முஸ்லிம்களின் கலாசார ஆடையை அரசாங்கம் நேரடியாகவே எதிர்க்கிறதா என்ற கேள்விதான் எழத்தான் செய்கிறது.
 
கலாசார அடையாளங்கள் என்று வரும்போது, கிறிஸ்தவ மதத் தலைவர்கள் மற்றும் இந்து மதத் தலைவர்களுக்கும் இந்தப் பிரச்சினைகள் வரத்தான் போகின்றது. கத்தோலிக்க மத சகோதரிகள் தலை மறைப்பை கழற்றுவார்களா? ஐயர்கள் குடுமிகளை கத்திப்பார்களா? அப்படியாயின் பெளத்த பிக்குகள் தங்களது காவி உடைகளைத் துறந்துவிட்டு புகைப்படம் எடுப்பார்களா? மொட்டை அடித்தவர்களுக்கு என்ன கட்டுப்பாடு? இவ்வாறான குழப்பம் வந்தால் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் சட்டத்தை மாற்றத் தேவையில்லை. பாராளுமன்றமே சட்டத்தை மாற்றும்.
 
புதிதாக வரப்போகும் அடையாள அட்டைகளில் கோட், சூட், டை அணிந்து புகைப்படம் எடுத்தால் நாம் ஆங்கிலேயரின் கலாசாரத்தைப் பின்பற்றியோர்களாக மாறிவிடுவோம் அல்லவா? எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினை எழும்போது “தலையை மறைப்பதைப் பற்றி மட்டுமே பேசினோம். கலாசார உடைகள் குறித்து நாங்கள் பேசவில்லை” என்று அரசாங்கம் பல்டி அடித்துக்கொள்ளும். மதத் தலைவர்களுக்கு கட்டுப்பாடுகள் இல்லையென அரசாங்கம் சலுகைகளை வழங்கும்.
 
இஸ்லாமியர்களின் கலாசார ஆடைகளுக்கு அங்கீகாரமற்ற தேசியரீதியான ஒரு சவாலாகவே இதனைப் பார்க்கவேண்டியுள்ளது. நாட்டில் வாழும் ஒவ்வொரு சமயத்தினருக்கும் அவரவரது மதத்தைப் பின்பற்றவும், மார்க்க அனுஷ்டானங்களை நிறைவேற்றவும், கலாசார ஆடைகளை அணியவும் உரிமை இருக்கின்றது. இந்நிலையில் இலங்கையில் கொண்டுவரப்பட்டுள்ள இப்புதிய சட்டமானது மக்களின் மதச் சுதந்திரம் மீது விதிக்கப்பட்ட ஒரு சவாலாகவே எடைபோட வேண்டியுள்ளது.
 
நாட்டின் பிரஜைகள் குறித்து சரியான பதிவுகள் இல்லை. பழைய அடையாள அட்டைகளின் நம்பகத்தன்மை குறைவு. இதை நிவர்த்தி செய்வதற்காகவே நவீன கணனி மயப்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைகளை வெளியிடப்போவதாக ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிலும் பிரச்சினைகள் வரும் என்று பர்தா, தொப்பி அணிவதற்கு தடை விதித்துள்ளமையானது, அவர்களது தொழில்நுட்பம் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நவீன தொழில்நுட்பம் என்று மார்தட்டிக்கொண்டாலும், அதன் மீதான நம்பகத்தன்மையைக் குறைக்கவே கலாசார உடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு தவறு இருப்பது கலாசார உடையில் அல்ல, அவர்களது தொழில்நுட்பத்தில்தான்.
அடையாள அட்டையில் முகம் தெளிவாகத் தெரியவேண்டும் என்பதற்காக மேற்குலக நாடுகளில் இந்தச் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இலங்கையில் இதனைப் பின்பற்றுவதற்கு வேறுபல காரணங்கள் உள்ளன. இலங்கையில் முஸ்லிம்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான புதிய பல சட்டங்கள் அமுல்படுத்துகின்றனர். முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளைப் பிரயோகித்து பரீட்சித்துப் பார்த்த பின்னர் தற்பொழுது அது சட்டரீதியில் வந்துள்ளது.
 
ஒவ்வொரு சமயத்தவரும் தங்களது கலாசார ஆடைகளை அணிவது அவரது உரிமை. பயங்கரவாதமே இல்லாத நாட்டில் இவ்வாறானதொரு புதிய சட்டத்தை கொண்டுவர அரசுக்கு என்ன தேவையுள்ளது? எனவே, அரசாங்கம் இதை உணர்ந்து உடனடியாக இச்சட்டத்தை மீள்பரிசீலனை செய்து சமயங்களை மதிக்கும் வகையில் திருத்தங்களை மேற்கொள்ள முன்வரவேண்டும்.
 
பிறவ்ஸ் முஹம்மட்
லங்காமுஸ்லிம் வெப்

எட்டாவது வருட இலவச கத்னா வைபவம் - Kahatowita Muslim Ladies Study circle

 
கஹட்டோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேக்களின் அணுசரனையில் வருடாந்தம் நடைபெறும் இலவச கத்னா நிகழ்வு கடந்த 25.12.2013ஆம் திகதி நடைபெற்றது. எட்டாவது வருடமாக நடைபெற்ற இந்நிகழ்வில் 68 சிறார்களுக்கு இலவசமாக கத்னா செய்து வைக்கப்பட்டது.கத்னா செய்யப்பட்ட ஒவ்வொரு பிள்ளைக்கும் அண்பளிப்பாக ரூபா 1500வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 
வருடா வருடம் நடைபெறும் இந்நிகழ்வால் நடுத்தரமற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள ஏழைச்சிறார்களுக்கு ஒருவரப்பிரசாதமாக இருப்பதாக பல பெற்றோர்கள் குறிப்பிட்டனா். இவா்களின் இச்சேவை தொடர்ந்து எமது ஊருக்குக் கிடைக்க வேண்டும் என நாம் பிரார்த்திக்கின்றோம்.

எகிப்தில் முபாறக்குக்கு எதிரான ஆர்ப்பாட்டம் போன்று தற்போதைய இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு..


எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாறக் அரசை கவிழ்க்க முன்னணியில் நின்று போராடிய ஏப்ரல் 6 இளைஞர் முன்னணி, தற்போதைய இராணுவ ஆதரவு இடைக்கால அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

முபாறக் எதிர்ப்பு முன்னணி செயற்பாட்டாளர்கள் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“இந்த அரசு தனது திட்டத்திலிருந்து மாற அல்லது அதனை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து” எதிர்வரும் 2014 ஜனவரி 25 ஆம் திகதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மேற்படி முன்னணி கெய்ரோவில் நடத்திய ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளது.

முபாறக் அரசுக்கு எதிராகப் போராடிய ஜனவரி 25 செயற்பாட்டாளர்களிடம் இராணுவ ஆதரவு அரசு பழி தீர்க்கிறது என்றும் அந்த முன்னணி குற்றம் சுமத்தியது.

ஜூன் 30 இராணுவ சதிப் புரட்சிக்குப்பின் புதிய அரசும் தமக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக அது குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஜுலையில் ஜனாதிபதி முஹம்மத் முர்சி இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் இஸ்லாமியவாதி அல்லாத ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய முதல் தீர்ப்பாக முபாரக் எதிர்ப்பாளர்கள் மீதான சிறை தண்டனை அமைந்தது.

ஏப்ரல் 6 இளைஞர் முன்னணி 2012 ஜனாதிபதித் தேர்தலில் முபாரக் அரசின் பிரதமர் அஹமத் ஷபீக் போட்டியிட்டதால் எதிர்த்து போட்டியிட்ட முஹம்மத் முர்சிக்கு ஆதரவளித்தது.

பின்னர் அது முர்சி வெளியேற கோரும் ஆர்ப்பாட்டத்திலும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ceylonmuslim web

சிங்கள ராவயவின் தெவனகலையை நோக்கிய வாகனப் பேரணி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

சிங்கள ராவய  கொழும்பிலிருந்து தெவனகல பகுதிக்கு வாகனப் பேரணியாக தெவனகல பகுதிக்கு இன்று செல்லத்திட்டம் இட்டிருந்தனர் .பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொலிசார் நிறுத்தப் பட்டுள்ளனர. அதேவேளை  நாட்டின் முதலாவது தற்கொலைப் படை தெவனகலைக்கு என்ற தலைப்பில் போஸ்டர் வெளியிடப்பட்டிருந்தது.  சிங்கள ராவய அமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்ட இந்த போஸ்டர்களின் இவை குறிப்பிடப் பட்டுள்ளதாக தகவலகள் குறிப்பிடுகிறது .
“கொடுத்த வாக்குறுதியை அப்படியே நிறைவேற்றும் வகையில் சிங்கள தேசத்தின் முதலாவது தற்கொலைப் படை தெவனகலைக்கு ” என்னும் தலைப்பில் சிங்கள ராவய அமைப்பின் இலட்சினை பொறிக்கப்பட்ட FBபோஸ்டரை இங்கே காணலாம்.
Sinhala-Rawaya-01

 
பெரும் எடுப்பில்  பெளத்த தீவிரவாத அமைப்பான சிங்கள ராவய அமைப்பினால் பெரும் எதிர்பார்ப்புடனும் பல  நாள் பிரசாரத்தின் பின்னர் முன்னெடுக்கப் பட்ட வாகன பேரணி தேல்வியில் முடிவடைந்துள்ளது என்று தெவனகல பிரதேச முஸ்லிகள் தெரிவிகின்றனர் .

இது உள்ளூர் கடும்போக்கு வாதிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை கொடுதுள்ளதாகவும் அவர்கள் தெரிவிகின்றனர் . சிங்கள ராவய கொழும்பில் இருந்து புறப்பட்ட பேரணிக்கு ஆயிரக் கணக்கில் ஆக்களை கொண்டு வர  திட்டமிட்மிட்டிருந்த போதும் நூற்று கணக்கில் கூட ஆதரவாளர்கள் கிடைக்கவில்லை என்று அறிய முடிகிறது . இறுதியில் தனது உறுப்பினர்களுடன் சில வாகனத்தில் எறிவந்துள்ளனர் .

மாவனலை, தெவனகல பிரதேசத்தை ஒரு உலுக்கு உலுக்கும் நோக்குடன் திட்டமிடப் பட்ட பேரணி , பேரணி என்ற வகையில் தோல்வியில் முடித்துள்ளது என தெவனகல பிரதேச முஸ்லிகள் தெரிவிகின்றனர் . எனினும் வேறுவழிகளில் தமது இலக்கை அடைய கடும்போக்கு சக்திகள் முயற்சிக்கலாம் என்றும்  நோக்கர்கள் கருதுகிறார்கள்.
 
குறித்த சர்ச்சை தொடர்பில் பிரதேச முஸ்லிம்களுக்கும் , பெளத்த சிங்கள மக்களுக்கும் இடையில் சினேக பூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
தீவிரவாத சக்திகள் தெவனகல பகுதியில் பல நூறு ஆண்டுகளாக வாழந்து வரும் நூற்றுகனாக முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு ஆர்பட்டங்க்களை நடாத்தி வருகின்றன.
 
அஸ்லம் அலி
lakamuslim web

இஸ்லாமிய சட்டம்’ குறித்த கேள்வி தொடர்பில் விசாரணை: பரீட்சை திணைக்களம்



நடைபெற்று முடிந்த 2013 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்  பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்து வெளியான கேள்வி தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

க.பொ.த. (சா/த) பரீட்சையின் இறுதி நாளான நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை விருப்பத்திற்குரிய பாடமாக குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் பாடத்திற்கான பரீட்சை நடைபெற்றது.  இந்த பரீட்சையில் பகுதி-II லேயே ‘இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?’ என்ற வினா கேட்கப்பட்டுள்ளது.
இந்த வினா தொடர்பில் பரீட்சை திணைக்களம் முஸ்லிம் சமூகத்திடம் கவலையினை வெளியிடுவதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் ஏஸ்.முஹமட் தெரிவித்தார்.
 
இந்த கேள்வி ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் சரியாக இருப்பதாகவுமு; அந்த கேள்வியை தமிழ்மொழிக்கு மொழி மாற்றம் செய்யும் போது அல்லது தட்டச்சு செய்யும் போது போது தவறு இடம்பெற்றிக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்
எனினும், இது தொடர்பில் பரீட்சை திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.
 
எவ்வாறாயினும் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழி மூலமான குடியுரிமை கல்வி மற்றும் சமூக நிர்வாகம் வினாத்தாளில் இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு முக்கியத்துவங்களை குறிப்பிடுக?’ என்ற வினா கேட்கப்பட்டுள்ளது என பிரதி பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.
 
இந்த தவறிக்காக பரீட்சை திணைக்களம் முஸ்லிம் சமூகத்திடம் கவலையினை தெரிவித்துக் கொள்வதுடன் விசாரணைகளை மேற்கொள்ளும் என அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை, குறித்த கேள்விக்கு விடை எழுதிய மாணவர்களுக்கு சரியான புள்ளி வழங்கப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.
 
-தமிழ் மிரர்

A/L: கலை பிரிவில் கம்பஹா மாவட்டத்தில் 5ஆம் இடத்தைப் பெற்றுக்கொடுத்த எமது ஊர் மாணவி (2nd updates).


இலங்கை கல்வி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தற்போது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, கலை பிரிவில் 3A சித்திகளைப் பெற்ற கஹடோவிட அல்பத்ரியா ம.வி மாணவி, கம்பஹா மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார். மற்றும் பல சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொண்டுள்ள அல்பத்ரியா ம.வி இல் இருந்து சுமார் 8 மாணவர்களாவது பல்கழைக்கலகம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில்  ஐந்தாவது  இடத்தைப் பெற்ற மாணவி சகோதரர் பாயிஸ் (மீன் விற்பனை) அவர்களின் மகளாவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

...............
மெலும் ஒரு மாணவி 3A சித்திகளைப் பெற்று கம்பஹா வாட்டத்தில் 25 இடத்தைப் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

கம்பஹா மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனத்தின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயும் கூட்டம்


கம்பஹா மாவட்ட அஹதியா பாடசாலை சம்மேளனத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான எதிர்கால திட்டங்கள் குறித்து ஆராயும் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி புதன்கிழமை காலை 9 மணி முதல் அல்லலமுல்ல சாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெறும்.

இம்மாவட்டத்திலுள்ள அஹதியா பாடசாலைகளின் செயற்பாடுகள் அவற்றின் முன்னேற்றம் மற்றும் புதிதாக அஹதியா பாடசாலைகளை ஆரம்பிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இக்கூட்டத்தின் போது ஆராயப்படவுள்ளது. இம்மாவட்டத்திலுள்ள அஹதியா பாடசாலைகளின் தலைவர், செயலாளர் மற்றும் அதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பிதழ்கள் கிடைக்காத அஹதியா பாடசாலைகளின் தலைவர், செயலாளர், அதிபர்கள் இதில் கலந்துக் கொள்ள முடியும். 077- 16 72 571 அல்லது 077 – 65 20 307 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தமது வரவை உறுதிப்படுத்துமாறு கம்பஹா மாவட்ட அஹதியா பாடசாலைகள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் அஷ்ஷேய்க் எம்.எம்.பஸ்லுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

(எம்.ஸித்தீக் ஹனீபா)

யாழ் முஸ்லிம் இணைய ஆசிரியர் நலம் பெற பிரார்த்திப்போம்



 கடந்த மூன்று வருடங்களாக யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை தனியொரு மனிதனாக நடாத்திவந்த ஊடகவியலாளர் ஜனாப் முஹம்மத் அன்சீர் அவர்கள் தொடர்ச்சியான உடல், மன உளைச்சல் காரணமாக பாதிக்கப் பட்டு, மருத்துவமனைக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகின்றார்.
யாழ்ப்பாணம் சொனகதேருவில் 1979 ஆம் ஆண்டு, ஒரு கற்ற குடும்பத்தில் பிறந்த அன்சீர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியிலும், உயர்கல்வியை நீர்கொழும்பு விஜயரட்னம் இந்துக் கல்லூரியிலும் பெற்றுக் கொண்டார்.
தினக்குரல் பத்திரிகையில் காரியாலய உதவியாளராக தனது ஊடகத்துறை வாழ்க்கையை ஆரம்பித்த அன்சீர் அவர்கள், அதே பத்திரிகையின் பாராளுமன்ற செய்தியாளராகவும் கடமையாற்றினார். நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக குடும்பத்துடன் சுவிட்சர்லாந்தில் குடியேறிய அன்சீர் அவர்கள், பல்வேறு வழிகளிலும் தனது ஊடக முயற்சிகளை, தொடர்புகளைப் பேணி வந்தார்.
தனது ஊடக வாழ்க்கையின் முக்கிய மைல்கல்லாக 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி யாழ் முஸ்லிம் இணையத்தளத்தை ஆரம்பித்த அன்சீர் அவர்கள், அன்று முதல் அவ்விணையத்தளத்தை தனி நபராக, கண்ணும் கருத்துமாக, தனது குழந்தையைப் போன்று கருதி இயக்கி வந்தார்.
செய்திகளை சிறப்பாக தர வேண்டும் என்கின்ற இயல்பான ஆர்வம் காரணமாக ஊண் உறக்கத்தைக் கூட மறந்து மணிக்கணக்கில், ஏன் நாட்கணக்கில் கூட தனது மடிக் கணனியுடன் மெய் மறந்து லயித்து விடுபவராக அவர் காணப்பட்டார். அதிகமான நாட்களில் அவர் காலை உணவை உட்கொள்ளும் பொழுது, நேரம் இரவு 8.00 மணியையும் தாண்டியிருக்கும், அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு யாழ் முஸ்லிம் மீதும், ஊடகத்துறை மீதும் காணப்பட்டது.
தொடர்ந்தும் இவ்வாறு தனிநபராக ஓய்வின்றி செயற்பட்டு வந்ததன் காரணமாகவும், பல்வேறு பட்ட விதத்திலும் அவரை நோக்கி முன்வைக்கப் பட்ட நேர்மையற்ற விமர்சனங்கள் சவால்கள் காரணமாகவும், உடல், உள உளைச்சலுக்கு உள்ளான நிலையில், மருத்துவர்களின் ஆலோசனைப் படி கட்டாயமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார்.
கடந்த மாதம் சிகிச்சை பெற்று மருத்துவ மனையிலிருந்து வெளியேறிய நிலையிலும் தொடர்ச்சியாக அவர் சுகவீனமுற்று வந்த நிலையில். கடந்த டிசம்பர் 12 ஆம் திகதி ஜெனீவாவில் அமைந்துள்ள University Hospital இல் அனுமதிக்கப் பட்டு, அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். உடகவியலாளர் ஜனாப் முஹம்மத் அன்சீர் அவர்களின் உடல், உள ஆரோக்கியத்திற்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
நன்றி
காஞ்சனா சிவராம்
(காஞ்சனா அன்சீர்)

மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது சற்றுமுன்னர் தாக்குதல் (Photos)

நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் இல.38 கடவத்தை வீதி தெஹிவளையில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் தாருஸ் ஸாபி மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு சில சில நிமிடங்களில் ஸ்தலத்திற்கு உடனடி விஜயம் செய்த கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் இது தொடர்பாக பள்ளிநிர்வாகத்தினரிடம் கலந்துரையாடிவிட்டு இத்தாக்குதல் சம்பவத்தை நடத்தியவர்களை உடனடி கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸ்மா அதிபரிடம் பணிப்புரை விடுத்ததுடன் சம்பவம் தொடர்பாக ஜனாதிபதியின் விஷேட கவனத்திற்கும் கொண்டுவந்துள்ளார்.


2 3


 

தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்

தெஹி­வளை -- கல்­கிசை மாந­க­ர­ச­பைக்கு உட்­பட்ட பிர­தே­சங்­களில் அமைந்­தி­ருக்கும் மூன்று பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்ள வேண்­டா­மென நேற்று செவ்­வாய்க்­கி­ழமை பொலி­ஸாரால் அறி­விக்­கப்­பட்­டதையடுத்து அங்கு வாழ் முஸ்­லிம்கள் மத்­தியில் சற்று பதற்­ற­மான சூழல் தென்­பட்­டது.
 
தொழு­கைகள் நடத்­தப்­படும் பட்­சத்தில் தேவை­யற்ற பிரச்­சி­னைகள் உரு­வா­க­லா­மென்ற அச்­சத்தின் கார­ணத்­தி­னா­லேயே அத்­தி­டிய மஸ்­ஜித்துல் ஹிபா, களு­போ­வில மஸ்­ஜித்துல் தாரூல் சாபீய், தெஹி­வளை தாரூல் அர்க்கம் ஆகிய மூன்று பள்­ளி­வா­சல்­க­ளிலும் தொழு­கை­களை நடத்த வேண்டா மென பொலிஸ் தரப்­பி­லி­ருந்து அறி­விக்­கப்­பட்­ட­தாக அமைச்சர் றிஷாட் பதி­யுதீன் தெரி­வித்­துள்ளார்.
 
குறித்த பள்­ளி­வா­சல்கள் அமைந்­தி­ருக்கும் பிர­தே­சங்­களில் உள்ள சில பெளத்த மத குருமாரும்இ பெளத்­தர்­களும் இணைந்து மேற்­படி பள்­ளி­வா­சல்கள் மூன்றும் சட்­ட­வி­ரோ­த­மா­னவை என பொலி­ஸா­ரிடம் முறை­யிட்­டி­ருப்­ப­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இதே­வேளை, இவ்­வி­வ­காரம் தொடர்பில் இன்று புதன்­கி­ழமை சம்­பந்­தப்­பட்­டோ­ருடன் பேச்­சு­வார்த்­தை­யொன்று மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருப்­ப­தா­கவும் தேவைப்­படும் பட்­சத்தில் ஜனா­தி­பதி மற்றும் பாது­காப்பு செயலர் ஆகி­யோரின் கவ­னத்­துக்கு கொண்­டு­வர விருப்­ப­தா­கவும் அமை ச்சர் றிஷாத் பதி­யுதீன் தெரி­வித்­துள் ளார்.
 
பொலிஸார் மறுப்பு
 
இதே­வேளை, தெஹி­வளை பிர­தேச பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டா­மென பொலிஸா ரால் விடுக்­கப்­பட்­டுள்ள அறி­விப்­பினை மறுத்­துள்ள பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் அஜித் ரோகண, பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை மேற்­கொள்ள வேண்­டா­மென கூறு­வ­தற்கு பொலி­ஸா­ருக்கு அதி­காரம் கிடை­யாது. அல்­லது தொழு­கை­களை தடை செவ­தற்­கான அதி­கா­ரமும் இல்லை என்று குறிப்­பிட்டார்.
அவர் மேலும் கூறு­கையில்,
 
எந்த பளி­ள­வா­ச­லிலும் பொலிஸார் தொழு­கையை தடை செய்­ய­வில்லை. தெஹி­வளை பிர­தே­சத்தில் அவ்­வாறு எந்த சம்­ப­வமும் இடம்­பெ­ற­வில்லை. எனினும் கொஹு­வல பிர­தே­சத்தில்இ குர் ஆன் மத்­ர­ஸா­வாக நடத்தி வரப்­பட்ட இடம் ஒன்று தற்­போது தொழு­கைக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்­டு­வ­ரு­வ­தாக பெளத்த பிக்கு ஒருவர் பொலிஸில் முறைப்­பாடு அளித்­துள்ளார். அந்த முறைப்­பாடு தொடர்பில் விசா­ரணை செ ய்ய பெளத்த, முஸ்லிம் தரப்புப் பிரதி நிதிகளை இன்று புத்தசான மற்றும் மதவிவகார அமைச்சுக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை தவிர எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை.
 
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸார் பள்ளி வாசலில் தொழுகைக்கு தடை விதிக் கவில்லை என தெரிவித்தார்.

தெஹிவளை மஸ்ஜிதை மூடிவிட பொலிசார் ‘உத்தரவு’



 தெஹிவளை கடவத்தை வீதியில் கடந்த மூன்று வருடங்களாக அதிகாரபூர்வமாக  இயங்கி வரும் தாருல் ஷாபியா மஸ்ஜித்தை தெஹிவளை பொலிசார் உத்தரவிட்டுள்ளனர் .மஸ்ஜித்தாகவும், மதரஸாவாகவும் இயங்கி வரும் மஸ்ஜித்   முஸ்லிம் சமய கலாசாரா திணைக்களம் ,வக்பு சபை ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் பெளத்த சாசன அமைச்சின் அனுமதி வேண்டும் அந்த அனுமதியை பெரும் வரை குறித்த மஸ்ஜித்தை  மூடிவிடுமாறு பொலிசார் ”உத்தரவு ‘ பிறப்பித்ததாக நிர்வாகம் கூறுகிறது .

நாட்டில் மஸ்ஜித் ஒன்று அதிகாரபூர்வமாக இயங்குவதற்கு முஸ்லிம் சமய கலாசாரா திணைக்களம் ,வக்பு சபை ஆகிவற்றின் பதிவுகளை மேற்கொள்வதுதான் சட்ட அதிகாரத்தை வழங்கும் நடைமுறையாக இதுவரை பின்பற்றப் பட்டு வரும் நிலையில் அண்மையில் கல்கிசை  போலிஸ் நிலையத்தில் குறித்த மஸ்ஜித் நிர்வாகம் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் கல்கிசை பொலிஸ் அதியட்சகர் குறித்த மஸ்ஜிதுக்கு பெளத்த சாசன அமைச்சின் அனுமதி பெறும்வரை நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார் .
 
 அதேவேளை இது தொடர்பில் ஆராயும் கூட்டம் ஒன்று நேற்று மலை தெஹிவளை பிரதான  மஸ்ஜித்தில் இடம்பெற்றுள்ளது இதற்கு முஸ்லிம் நிறுவங்களில் பிரதிநிதிகள் அழைக்கப் பட்டிருந்தனர் .
 
சஹீத் அஹமட் : லங்காமுஸ்லிம் இணையம்.

“ஒரு சத்தியப் போராளியின் இலட்சிய உரை” - மரணித்த வங்கத்தின் ஜமாத் -ஏ- இஸ்லாமியின் தலைவரின் வைர வரிகள்!!

 
“ஷஹீத் என்பவன் யார் தெரியுமா?. இறைவனின் சட்டங்கள் தனது வாழ்வினை விட பெறுமதியான என்பதனை தனது மரணத்தின் மூலம் நிரூபணம் செய்பவன்” - செய்யது குதுப்

ரண்டு முறை பிற்போடப்பட்ட மரண தண்டனைக்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை வழங்கியது. வெள்ளிக்கிழமை டாக்கா மத்திய சிறைச்சாலையில் அப்துல் காதிர் முல்லா தூக்கிலிடப்பட்டார். 1971-ல் நிகழ்ந்த போர் குற்றங்களிற்கு காரணாமாக இருந்தவர்களின் ஒருவர் என்பதே, இவர் மீதான மரணதண்டனைக்காக நியாயப்படுத்தப்பட்ட அரசு தரப்பு காரணம். அவரது பிறப்பிடமான பரீத்பூரில் வைத்து அவரின் சகோதரரிடம் முல்லா அப்துல் காதிரின் உடலம் கையளிக்கப்பட்டு பின்பு நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். அரச உளவாளிகள் உட்பட.

 பெப்ரவரியில் ஆயுட் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மனிதரை மீண்டும் நீதி மன்றத்திற்கு அழைத்து மரண தண்டனை வழங்கிய விசித்திரம் வங்க தேசத்தில் நிகழ்ந்துள்ளது. அவரது சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் காரணம் கூறப்படாமலே நிராகரிக்கப்பட்டன. அப்பீலும் மறுக்கப்பட்டது. எல்லாமே அவசர அவசரமாக ட்றயல் முறையில் நடாத்தி முடிக்கப்பட்டன. ஒரு இராணுவ ஜுண்டா அரசு செயற்படும் விதத்தில் பங்களாதேஷ் அரசு செயற்பட்டு தீர்ப்பை எழுத வைத்து நிறைவேற்றியும் உள்ளது. வங்க அரசின் பின் எந்த ஏகாதிபத்தியம் உள்ளது. அது எதனை செய்ய நினைக்கிறது என்பது பற்றிய பதிவை இன்ஷாஅல்லாஹ் வரும் காலத்தில் பதிவிடுவோம்.

தனது மரணத்திற்கு முன்னர் அவர் எழுதிய செய்தியொன்றை islam21c.com  வெளியிட்டுள்ளது. அதில் அவர்....

நான் அநியாயமாக கொல்லப்பட்டால் இறைவனிடத்தில் அவனது மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணித்த தியாகியாக ஏற்றுக்கொள்ளப்படுவேன். இதில் கவலைகொள்ள எந்தவொரு காரணமும் இல்லை. நான் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர்கள் என்னை அநியாயமாக கொலை செய்யவுள்ளனர். எனது கொலைக்கு காரணம், நான் இஸ்லாமிய இயக்க செயற்பாடுகளில் முனைப்பாக இருந்ததும், எனது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தை நோக்கி திரும்பியதுமாகும். இது தான் நான் செய்த குற்றம். இது குற்றம் என்றால் இந்த குற்றத்தை நான் எனது சுவாசம் இருக்கும் வரை திரும்ப திரும்ப செய்வேன். ”

”எனது உடலில் இருந்து சிந்தப்படும் ஒவ்வொரு துளி இரத்தமும் இஸ்லாமிய இயக்கத்திற்கு உரம் ஊட்டுவதாக அமைய வேண்டும் என நான் விரும்புகிறேன். அது நிச்சயம் நடக்கும். நான் எனது வாழ்நாள் முழுவதையும் பங்களாதேஷ் இஸ்லாமிய இயக்கத்தின் செயல் நடவடிக்கைகளிற்காகவே அர்ப்பணித்தேன். நான் தவறான ஆட்சியாளர்களின் இஸ்லாமியவிரோத அரசியல் முடிவுகளிற்கு ஆதரவாக பேசவில்லை. அதனை கடுமையாக எதிர்த்தேன். விமர்சித்தேன். 1971-ல் நான் எதை செய்தேனோ அதனைத்தான் 2013-இலும் செய்து கொண்டிருக்கின்றேன். இஸ்லாத்திற்கு எதிரான எந்த ஜனநாயகத்தையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தான் ஆட்சியாளர்களிற்கு என் மேல் கோபம் ஏற்படவும், என் கருத்துக்களின் மேல் அச்சம் ஏற்படவும் காரணமாக அமைந்தது. எனது மரணம் எனது சிந்தனையின், எனது செயலின், எனது பிரச்சாரத்தின் சத்தியத்தன்மைக்கு சான்று பகர்வதாக அமைவதையிட்டு நான் திருப்தி அடைந்தவனாகவே உள்ளேனன். இதனை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.” 

என அவர் தெரிவித்திருந்தார். 

ஒரு இஸ்லாமிய ஊழியன் தனது கடைசி நிமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்வான் என்பதற்கான சான்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இறைவனின் பாதையில் அவனது மார்க்கத்திற்காக உழைத்த ஒரு இறைவனின் அடிமை தனது வாழ்வை அவர் சுமந்த கொள்கைக்காக அர்ப்பணம் செய்துள்ளார். எகிப்தில் அன்று அப்துல் காதர் அவ்தாவும், செய்யது குதுபும் காட்டிய தியாகத்தின் பாதை புற்களும் பற்றைகளும் மண்டி தடம் தெரியாமல் போயிருந்த வேளை நேற்று அந்த பாதையின் வெளிச்சத்தை ஒரு உன்னத மனிதன் தன் உயிரின் மூலம் துப்பரவு செய்து எமக்கு காண்பித்துள்ளான். 

 “ஜனநாயகம் என்ற பெயரில் ஆளும் தாகூத்திய சக்திகளின் கொள்கைகளிற்கு அடிபணியாமல் இஸ்லாத்தை ஆட்சியின் தலைமையில் கொண்டு வர உழைத்த ஒரு மனிதனின் கதை முடிவிற்கு வந்துள்ளது. இதில் நாம் என்ன படிப்பினையை கண்டு கொண்டுள்ளோம் சகோதரா?...”
அன்னாரின் பர்சக்குடைய வாழ்க்கைக்கும் மறுமை வாழ்க்கைக்கும் இறைவனிடத்தில் நாம் நாம் பிரார்த்தனை செய்வோமாக. 

கைபர்தளம்.

அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா கஹடோவிட கிளையின் வேண்டுகோள்.


அகில இலங்கை ஜம்இயத்துல் உலமாவின் அனுசரணையுடன் கம்பஹா மாவட்ட உலமா சபை, இப்பிராந்தியத்தின் அனைத்து ஊர்களிலுமுள்ள உலமாக்களுக்குமான கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது. இதில் சட்ட வல்லுனர்களும், புத்தி ஜீவிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இக்கருத்தரங்கில் சகல உலமாக்களும் கலந்து பயன்பெறுமாறு கஹடோவிட ஜம்இயத்துல் உலமாக் கிளை அன்பாக வேண்டிக்கொள்கிறது.

இடம்- மல்வான அல்முஸ்தபவிய்யாப் பாடசாலை
காலம்- 2013.12.21 சனிக்கிழமை 9.00 மணி முதல்.

இதில் கலந்துகொள்ளச் செல்பவர்களுக்கு வாகன ஏற்பாடுகள் செய்து தர கஹடோவிட ஜம்இயா தயாராவவுள்ளதாக அறிவிப்பப்பட்டுள்ளது.

தொடர்புகளுக்கு

மௌலவி அப்துஸ் ஸலாம்
மௌலவி அபுபக்கர்
மௌலவி அஹமத் ரிபாய் (ஓகடபொல)

அப்துல் காதர் முல்லாஹ்வுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது



பங்களாதேஷ் ஜமாதே இ இஸ்லாமியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா நேற்று தூக்கிலிடப்பட்டார்.

இவர் கடந்த செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் நேற்று தூக்கிலிடப்பட்டதாக, பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது.

1979 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறும் போராட்டத்தில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அப்துல் காதர் முல்லாவுக்கு கடந்த பெப்ரவரியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜமாதே இஸ்லாமி கட்சியின் துணை பொதுச் செயலாளரான முல்லா பொதுமக்களையும் புத்தி ஜீவிகளையும் கொன்றதாக குற்றம் சாட்டியே மரண தண்டனை விதிக்கப்பட்டது. பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் ஜமாதே இஸ்லாமி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவிக்காக பலபேர் 'கோட்சூட்டுடன்' தயார் நிலையில் இருக்கின்றனர் - அஸாத் சாலி



அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் என்ற அமைப்பினால் கொழும்பில் இன்று (11.12.13) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய ஐக்கிய முன்னணி தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்த கருத்துக்கள்

முதலில் மறைந்த மாமனிதர் தென் அபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மறைவை முன்னிட்டு அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப் படுத்துவோம் என்ற அமைப்பின் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.அவரது மறைவுக்காக இலங்கை அரசு இரண்டு நாள் துக்கதினத்தை பிரகடனம் செய்துள்ளது. இது நல்ல விடயம். இருந்தாலும் போதாது.அவரின் தலைமைத்துவப் பண்புகளை நமது அரசியல் தலைவர்களும் கடைப்பிடிக்க வேண்டும் என எதிர்ப்பார்க்கின்றோம். தென் ஆபிரிக்காவில் அவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்கச் சென்றுள்ள நமது ஜனாதிபதி அங்கிருந்து திரும்பி வருகின்ற போதாவது அந்த மாமனிதரின் நற் சிந்தனைகளை நன்கு புரிந்து கொண்ட ஒருவராக நாடு திரும்ப வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

இந்த நாட்டில் இந்த அரசின் கீழ்தான் பிரதமர் ஒருவர் இதுவரை எதிர்நோக்காத சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ளார்.நாட்டின் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும் பிரதமருக்கும் தொடர்பு உள்ளதாக இதுவரை எந்தவொரு எதிர்க்கட்சியும் குற்றம் சாட்டவில்லை.அவரைக் கைது செய்ய வேண்டும் பதவி விலக்க வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் கோரவில்லை. மாறாக அரசின் பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும்,அரசின் தீவிர ஆதரவாளர்களுமான பொது பல சேனாவும் தான் இந்தக் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.இது அரசாங்கத்துக்குள் பிரதமர் பதவிக்கு ஏற்பட்டுள்ள அதிகாரப் போட்டியையே பிரதி பலிக்கின்றது. பலபேர் அந்தப் பதவிக்கான 'கோட்சூட்டுடன்' தயார் நிலையில் இருக்கின்றனர் போல் தெரிகின்றது. பாவம் எம்மைப பொறுத்தமட்டில் அவர் நல்ல மனிதராகத்தான் இருந்தார். ஆனால் கள்வர் குகைக்குள் சிக்கி தற்போது அவரும் தடம் மாறி விட்டாரா? என்பது தெரியவில்லை. இந்த அரசாங்கம் ஒருவரை அவமானப்படுத்த நினைத்தால் எந்த எல்லை வரையும் செல்லும் என்பதையும் நாம் அறிவோம்.

CHOGM  மாநாட்டுக்கு தருவிக்கப்பட்ட கார்கள் விற்பனை செய்யப்பட்டு அந்தப் பணம் மாநாட்டு செலவுகளை ஈடு செய்ய பயன்படுத்தப்படும் என்று ஜனாதிபதி தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் அந்த வாகனங்கள் அமைச்சர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று பாராளுமன்றத்தில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பொருளாதார இக்கட்டில் அமச்சர்களுக்கு மேலும் ஒரு ஆடம்பர வாகனம் தேiயா?இந்த சுமையும் மக்கள் மீதல்லவா சுமத்தப்படுகின்றது.

புறக்கோட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் எரிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களும், ஊழியர்களும் இன்று நடு வீதிக்கு கொண்டு வரப்பட்டடுள்ளனர்.இது எப்படி நடந்தது என்பது மர்மமாக உள்ளது.எந்த விதமான விசாரணைகளையும் ஆரம்பிப்தற்கு முன்பதாகவே பொலிஸார் முந்தியடித்துக் கொண்டு சதி வேலைகள் எதுவும் இடம்பெறவில்லை என்று கூறுகின்றனர். இந்த அவசரக் கூற்றுதான் அங்கு நிச்சயம் சதி வேலை இட்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் பாதிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். இது சதி வேலையாக இருப்பின் அதனோடு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து உரிய தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த நாட்டின் கடன் சுமை முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு தனிநபரும் மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபா கடனாளிகளாக உள்ளனர். அரசாங்கத்தின் மோசமான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகவே இந்த தனிநபர் கடன் தொகை இன்று அதிகரித்துள்ளது. ஆனால் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதற்கு புது விளக்கமளித்துள்ளார். அரசாங்கம் ஒரு தனி மனிதனுக்காக மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாவை முதலீடு செய்துள்ளது என்று எடுத்துக் கொள்ளுமாறு அவர் கூறியுள்ளார். அவர் எங்கு தான் தனது கணித பாடத்தை கற்றாரோ எனக்குத் தெரியாது. மக்களை ஏமாற்றுவதை மட்டுமே நோக்காகக் கொண்டு இப்போது எல்லோருமே உளரத் தொடங்கிவிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு நாம் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.அவர் இன்று மிக முக்கியமான தனிநபர் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார்.உச்ச நீதிமன்ற நிதியரசர்கள் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கின்ற போது பொது நலவாய அமைப்பு நாடுகளில் பின்பற்றப்படுகின்ற பொதுவான நடைமுறையே இலங்கையிலும் பின்பற்றப்பட வேண்டும் எனக் கோரும் வகையிலேயே இந்த பிரேரணை அமைந்துள்ளது. இந்தப் பிரேரணையை தட்டிக் கழிக்க முடியாத ஒரு இக்கட்டான நிலைக்கு அரசு தள்ளப்பட்டுள்ளது.அப்படி தட்டிக் கழித்தால் அது பொது நல வாயத்தின் பொதுவான கொள்கைகளை அதற்கு தலைமை தாங்கும் நாடே மீறுவது போல் ஆகிவிடும்.ஜனாதிபதி பொது நல வாயத்தின் தலைவராக வரும் வரை காத்திருந்து விஜேதாஸ ராஜபக்ஷ இந்த தீhமானத்தைக் கொண்டு வந்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

Jaffna Muslim

சகோதரர் மிஹிலார் அவர்கள் காலமானார்.



உடுகொடையைச் சேர்ந்த காலம் சென்ற ஸகரியா மாஸ்டர் அவர்களின் புதல்வன் M.Z.M மிஹ்லார் அவர்கள்ஃ  காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்.
அன்னார் கஹடோவிடாவைச் சேர்ந்த சித்தி பௌஸியா அவர்களின் அன்புக் கணவரும், சப்ராஸ், ஷரீக், சஸ்னா ஆகியோரின் தந்தையும், முன்னால் அதிபர் அப்துல் ஹனி, உஸ்மான், ஸுகைர் ஆகியோரின் சகோதரரும், அல்ஹாஜ் அப்துல் ஸமீன் திஹாரியைச் சேர்ந்த அப்துல் பாரி ஆகியோரின் மைத்துனரும்  ஆவார்.
அனனாரின் ஜனாஸா  நாளை  ( 13.12.2013) 10.00 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
 
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!
 

அவசர உதவிகோரல் (முஹம்மத் முஆத் 3 மாதங்களே ஆன இந்தபாலகனுக்கு உங்களது உதவிகள் தேவைப்படுகின்றன)

 

அஸ்ஸலாமு அலைக்கும் அன்புள்ள சகோதர, சகோதரிகளே..


கொச்சிவத்த, கஹட்டோவிட என்ற முகவரியில் வசிக்கும் அகமட் முனவர் என்பவரின் பேரக் குழந்தையும், சகோதரர் சப்ராஸ்(தாருல் ஹஸனாத்) இனுடைய, சகோதரியின் மகனுமாகிய முஹம்மத் முஆத் என்ற மூன்று மாதங்களே ஆன பச்சிலம் குழந்தைக்கு மிக அவசரமாக சத்திர சிகிச்சை ஒன்று செய்யப்படவேண்டும் ஆலோசணை கூறப்பட்டுள்ளது.
இச்சிறுவனுக்கு சிகிச்சையளித்துவரும் கொழும்பு Lady Ridgeway வைத்தியசாலையின் வைத்தியர் தேவன் மென்டிஸ் என்பவர், குழந்தைக்கு அவசரமாக சத்திர சிகிச்சை செய்ய வேண்டும் என்று சிபாரிசு செய்துள்ளார். இச்சத்திர சிகிச்சைக்காக சுமார் 20 இலட்சம் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை இந்த சத்திரசிகிச்சை செய்வதற்கு எமது நாட்டில் சாத்தியங்கள் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! "இறைவா! (இன்னும் கொஞ்சம்) குறைந்த காலலமாவது எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே" என்று அப்போது (மனிதன்) கூறுவான். (அல்குர்ஆன் 63:10)
ஆதமுடைய மகனே நீ (கொடு) செலவிடு! உனக்கு நான் செலவிடுகிறேன் (கொடுக்கிறேன்)என்று அல்லாஹ் சொல்வதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி); நூல்:புகாரி
அத்துடன், இந்த சத்திரசிகிச்சை இற்கான உதவிகள் குறித்த காலத்துக்குள் கிடைக்கப் பெறவும், அது வெற்றியளித்து குழந்தைக்கு பூரண சுகம் கிடைக்கவும், அதன் எதிர்காலம் சிறக்கவும் எல்லாம் வல்ல இறைவனிடம் அடிக்கடி பிரார்த்திக்குமாறும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
உதவிக் கரம் நீட்ட விரும்புவா்கள் முஹம்மத் சப்ராஸ் (0777303430) அவர்களை தொடர்புகொள்ளலாம். தங்களால் முடிந்த உதவியை கொடுத்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம்.
Bank Details of Father
M.M.M. Rismy
Bank of Ceylon
Beruwala Branch
Sri Lanka.

Ac.No: 5066367

Contact Telephones
0776519444
0777391003

ஜதாகுமல்லாஹ்.



 
 
 

நேற்று நடந்த மு.கா விசேட கூட்டத்தில் கௌரவ ரவுப் ஹகீம் நீதி (??) அமைச்சரினால் சொல்லப்பட்ட சில கருத்துக்கள்.



 


முஸ்லிம் காங்கிரஸ் பொதுக் கூட்டம் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ் ரவுப் ஹகீம் மற்றும் மு.கா. கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பிணருமான கௌரவ சாபி ரஹீம்  ஆகியோரின் வருகையுடன் நேற்று இரவு 10.15 மணியலவில் அல் அக்பர் பாலர்பாடசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது கஹடோவிட, ஓகடபொல, குரவலான, உடுகொட பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அபிமானிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 மாகாண சபை உறுப்பிணர் கௌரவ சாபி ரஹீம்  அவர்களது உரையில், அவர் கடந்து வந்தபாதை, அவருடைய சேவைகள் பற்றி ஒரு சிலவார்த்தைகள் குறிப்பிட்ட அதேவேளை, முக்கியமாக கம்பஹா மாவட்டம் குறித்த சில தகவல்கள் அவருடைய அரசில் பயனத்தின் நகர்வுகளை எடுத்துக்காட்டக்கூடியதாக இருந்தது.

நீதி அமைச்சர் ரவுப் அவர்களது உரையில் தொட்டுக்காட்டப்பட்ட சிலவிடயங்கள்.
  • தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்திருந்தால்தான் தான் கட்சியைப் பாதுகாக்க முடியும். கட்சியைப் பாதுகாத்தால் தான் சமூகத்தின் பிரச்சினைகளை நிதானமாக தட்டிக் கேட்க முடியும். அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் கட்சி மீண்டும் ஒரு உடைவை சந்திக்கும்.
  • பொதுபல சேனாவைப் பற்றிய தெளிவான நோக்கு ஜனாதிபதிக்கு உண்டு. அவர் அதனை விட்டுப் பிடிப்பதற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.  அரசாங்கத்தினுடன் ஆவேசப்பட்டுப் முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்துப் பேசும் நிலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை.
  • அரசியல் வாதிகள் ஒவ்வொருவரும் நடிகர்கள். அனைவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் அவர்களது நடிப்புக்கு எற்ப நடிக்கவேண்டியுள்ளது. இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகளுக்கு நாம் நிதானமாக முகம்கொடுக்கவேண்டும்.
  • முக்கியமாக கடந்தகால காலத்தில் ஹலால் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினைகளில் ஜமியத்உல் உலமாவின் நகர்வுகளையும், அவர்களுடன் முஸ்லிம் காங்கிரஸிக்கு எற்றபட்ட கருத்துமுரண்பாடுகளையும் மக்களிடம் முன்வைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது. 
 

முன்னணி சிங்கள பத்திரிகை தந்த அதிர்ச்சி..!



நேற்று வெள்ளிக் கிழமை முன்னணி சிங்கள நாளிதழான லங்காதீப பத்திரிகையைப் பார்த்து சற்று அதிர்ச்சியாக இருந்தது. ஒரு வேளை இன்று ஏப்ரல் பூல் அதாவது ஏப்ரல் முட்டால்  தினமோ என்று எண்ணத் தோன்றியது. மீண்டுமொரு முறை அந்த செய்தியை வாசித்து உறுதிப்படுத்திக் கொண்டு லாங்காதீப பத்திரிகை ஆசிரிய பீடத்துடன் 0112448321 தொடர்பு கொண்டு இந்த செய்திகள் பற்றி விசாரித்துப் பார்த்தால் அப்படி தவறு நடக்க வாய்ப்பில்லை நாம் இந்தியாவிலிருந்து கிடைத்த செய்தியைத்தான் பிரசுரித்தோம் என்று சம்பந்தப்பட்டவர்கள் குறிப்பிடுகின்றார்கள். எனவே இந்த செய்தியின் நம்பகத்தன்மை தொடர்பாக வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவரலாம் என்று தோன்றுகின்றது.

'காங்கிரஸ் கட்சிக்குப் பின்னடைவு பாரதிய ஜனத்தாவுக்கு வெற்றி  கச்ரில்வாலின் புதிய கட்சி முன்னணயில்' என்று தலைப்பிடப்பட்டிருந்த செய்தியில் நடந்து முடிந்த மனிலங்கள் அவைத் தேர்தலில் கட்சிகள் பெற்ற ஆசனங்கள் பற்றியும் சொல்லப்பட்டிருந்தது அதில் உதாரணத்திற்கு ஒன்றை இங்கு தருகின்றோம். டில்லி மானிலங்கள் அவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு 34 ஆசனங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 17 ஆசனங்களும் அரவிந்த் கச்ரில்வாலிலின் புதிய ஆம் ஆத்மி கட்சிக்கு 17 ஆசனங்களும் கிடைத்திருக்கின்றன. என்று அந்த செய்தயில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதே பத்திரிகையில் தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்த கச்ரில்வால்  கிடைத்த வெற்றி தம்முடையது அல்ல அது மக்களுடையது என்றும் தமது வெற்றி தொடர்பாக ஊடங்கள் முன்னே பேசியதாகவும் அந்தப் பத்திரிகை மேலும் செய்திகளை வெளியிட்டது.

வேடிக்கை என்னவென்றால் இன்னும் தேர்தல் வாக்குகள் எண்ணுகின்ற பணியே அங்கு ஆரம்பமாக வில்லை நாளை ஞாயிறு 8ம் திகதிதான் வாக்கு எண்ணும் பணி ஆரம்பமாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. செய்தியை முன்கூட்டிச் சொல்ல வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு கற்பனையா? அல்லது காங்கிரஸ் தோற்றுப்போக வேண்டும் என்ற ஆசையில் சொல்லப்பட்ட செய்தியா என்று லங்காதீபவிடம் கேட்கத் தோன்றுகின்றது. எனவே தேர்தல் முடிவு எப்படி முன்கூட்டி வெளிவந்தது என்பதனை வாசகர்கள் தேடிப்பாருங்கள்.   

(நஜீப் பின் கபூர்) 

கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய தீ விபத்து

கொழும்பு கோட்டை அரசாங்க பஸ் நிலையத்தை அண்டிய (போதிராஜ மாவத்தை) பகுதியில் உள்ள கடைத்தொகுகள் தற்போது எரிந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

சுமார் 100 க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்துக்கொண்டிருப்பதாகவும் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்துவதில் தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இதனால் பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் நாளை இரவு கஹடோவிடா விஜயம்.





முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ் ரவுப் ஹகீம் மற்றும் மு.கா. கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பிணருமான கௌரவ சாபி ரஹீம் அவர்களும் நாளை இரவு எமது கிராமத்திற்கு வருகை தரவிருப்பதாகவும். இவ்விஜயத்தின் போது கஹடோவிட, ஓகடபொல, குரவலான பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

அண்மைக்காலமாக  இலங்கை வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கிகின்ற முக்கியமாக  பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட இருக்கறதாம்.

இன்னிகழ்வு மு.கா. கஹடோவிட கிளை செயளாலர் அல்ஹாஜ ஜவுஸி அவர்களின் இல்லத்தில் நாளை 2013.12.07 இரவு 9.00 மணிக்கு நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா காலமானார்

மண்டேலா மருத்துவமனையில் இருந்து செப்டம்பர் மாதம் வீடு திரும்பியதிலிருந்து ,அவரது இல்லத்திலேயே மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Tamil-Daily-News-Paper_2182
 
மண்டேலாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், நெல்சன் மண்டேலாவின் நெருங்கிய உறவினர்கள் அனைவரும் பூர்வீக வீட்டிற்கு அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8:50 மணியளவில் மண்டேலாவின் உயிர் பிரிந்துள்ளது.

///////////////////
உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற கறுப்பு மனிதனாக நெல்சன் மண்டேலா பார்க்கப்படுகிறார்.  ''எனது வாழ்நாள் முழுவதும், நான் ஆபிரிக்க மக்களின் போராட்டத்திற்காக என்னை அர்ப்பணித்துக் கொள்கிறேன். வெள்ளை ஆதிக்கத்திற்கு எதிராக மட்டுமல்ல, கறுப்பு ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடுகிறேன். அனைத்து இன மக்களும் சம உரிமையுடனும், நல்லிணக்கத்துடனும் ஒன்றாக வாழும் ஓர் சுதந்திரத்தை, ஜனநாயகத்தை நான் கனவு காண்கிறேன்.  இந்தக் கனவை நிறைவேற்றவேண்டும் என்பதற்காகத் தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். தேவைப்பட்டால் இதற்காக சாகவும் தயாராக இருக்கிறேன்" - 1962ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நெல்சன் மண்டேலா கூறிய வார்த்தைகள் இவை.
தென் ஆபிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர், நிறவெறிக்கு எதிராக போராடி வெற்றி கண்ட உலகின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவர், மிக நீண்டகாலம் சிறைவாசம் (27 வருடங்கள்) இருந்த அரிதான அரசியல் தலைவர்களில் ஒருவர் என பல பெருமைகள் மண்டேலாவுக்கு உண்டு.

தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற போதும், அவர்களிடம் எந்த ஆட்சி அதிகாரமும் இல்லாத காலப்பகுதி அது. 1939 ஆண்டில் தனது 21 வது வயதில் கறுப்பின இளைஞர்களை ஒன்றிணைத்து போராட்டத்தை தொடக்கினார். வாக்களிக்கும் உரிமை மறுப்பு, சொந்த நாட்டுக்குள் பிரயாணம் செய்வதற்கு கூட விசேட அனுமதி பெறும் நிலமை, நில உடமையாளர்களாக இருக்க முடியாத நிலைமை போன்ற இனப்பாகுபாட்டினை சுட்டிக்காட்டி கறுப்பின மக்களை விழிப்படைய செய்வதில் மண்டேலாவும், அவரது பல்கலைக் கழகத் தோழனாகிய ஒலிவர் ரம்போவும் சிறுது வெற்றி கண்டனர்.  அதே காலப்பகுதியில் தனது சட்டப்படிப்பை மேற்கொண்டதால் கறுப்பின மக்களுக்கான சட்ட ஆலோசனைகளையும் வழங்கினர்.

எனினும்  1948ம் ஆண்டு தென் ஆபிரிக்காவில் ஆட்சிப் பொறுப்பேற்ற அரசின் ஆதரவுடன் இனவாதமும், ஒடுக்குமுறையும் தொடர்ந்து அரங்கேறுவதை அறிந்து சீற்றம் கொண்ட மண்டேலா நேரடியாக அரசியலில் குதித்தார். கறுப்பினத்தவர்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவான 'ஆபிரிக்க தேசிய காங்கிரஸ்' என்ற கட்சியின் முதன்மை பொறுப்புக்கு வந்தார். பின்பற்றி வன்முறையற்ற அறப்போரிலேயே மண்டேலா முதலில் நம்பிக்கை கொண்டிருந்தார். இவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதை கண்ட வெள்ளை இனத்தவர்களின் அரசு 1956ம் ஆண்டு மண்டேலாவை முதன்முறையாக கைது செய்தது.  பின்னர் விடுதலையான போது, ஷர்பெவில் நகரில் மண்டேலா முன்னின்று நடத்திய அமைதியான கண்டனப் பேரணி ஒன்றை பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு கலைத்ததில் 69 பேர் கொல்லப்பட்டனர். அதோடு தேசத் துரோகம் குற்றச்சாட்டுக்களுக்காக மண்டேலாவும் அவரது 150 வரையிலான தோழர்களும் மீண்டும் கைது செய்யப்பட்டனர்.  நீண்டதொரு சட்டப் போராட்டத்தின் பின்னர் விடுதலையான மண்டேலா, இனி வன்முறையற்ற ரீதியில் போராடிப் பயனில்லை எனக் கூறி ஆயுத வழிமுறையை நாடினார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கி மரபுசாரா கெரில்லா போர்முறை தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினார்.  இதன் போது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், அமெரிக்காவும் மண்டேலாவை எதிர்த்து பயங்கரவாத முத்திரை குத்தியது. அமெரிக்காவுக்குள் நுழைவதற்குள் ஜூலை 2008 வரை மண்டேலாவுக்கு தடை நீடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

1962 ஆகஸ்ட் 05 ஆம் நாள் இவர் தங்கியிருந்த பகுதிக்குள் மாறு வேடமணிந்து புகுந்த காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டு கைதாகினார். திட்டமிட்டபடி மண்டேலா உட்பட 10 முக்கிய ஆப்பிரிக்கத் தேசியக் காங்கிரஸ் (African National Congress ] தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது வெள்ளை அரசு.  தென்னாபிரிக்க அரசைக் கவிழ்க்க முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மண்டேலாவுக்கு 1964-ஆம் ஆண்டு ஜுன் 12-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது அவருக்கு 46 வயது. அன்று ஆரம்பித்த அவரின் சிறை வாசம் 27 ஆண்டுகளாகத் தொடர்ந்தது. அந்த 27 ஆண்டுகால சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. 1990ம் ஆண்டு அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென் ஆபிரிக்க குடியரசு மலர்ந்தது.

 மண்டேலா விடுதலை செய்யப்பட்டதை உலக தலைவர்கள் பலர் வரவேற்றார்கள். கேப்டவுன் நகருக்கு திரும்பிய மண்டேலா அங்கு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசினார். அவர் கூறியதாவது:-

"இனவெறி ஆட்சியை தனிமைப்படுத்த சர்வதேச சமுதாயம் தொடர்ந்து பிரசாரம் செய்ய வேண்டும். என்னுடைய விடுதலை மட்டும் பேச்சுவார்த்தைக்குத் தேவையான அடித்தளம் ஆகாது. நிற வேறுபாடு இல்லாமல் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்புதான் நம் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டும். அரசியல் அதிகாரத்தின் மீது வெள்ளையர்களின் ஏகாதிபத்தியத்துக்கு முடிவு காண வேண்டும். கறுப்பர்களுக்குச் சம உரிமை கிடைக்க வேண்டும். அதுவரை போராடுவோம்".

1993 இல் அமைதிக்கான நோபல் பரிசை வென்ற அவர், 1994 இல் தென் ஆபிரிக்காவின் முதல் ஜனநாயக ரீதியிலான குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து ஐந்துவருடங்கள் அரசியல் பயணத்தில் நீடித்த அவர் 2008 ஜூன் மாதம் பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மண்டேலா பிறந்த நாளான ஜூலை 18ம் திகதியை சர்வதேச நெல்சன் மண்டேலா தினமாக அறிவித்துள்ளது ஐ.நா.

பொதுவாழ்க்கையிலிருந்து விலகியதும், தென் ஆபிரிக்காவின் மிக உயரிய தூதுவர்களில் ஒருவரானார் மண்டேலா. எச்.ஐ.வி எயிட்ஸ் நோய்க்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் பெரிதும் ஈடுபட்டார். அதோடு 2010ம் ஆண்டுக்கான உலக கோப்பை போட்டியை தென் ஆபிரிக்கா நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக்க் கொடுத்தார். கொங்கோ, புருண்டி மற்றும் ஏனைய ஆபிரிக்க நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தார்.

முன்னாள் பாக்ஸிங் வீரர், சட்டத் தரணி, சிறைக்கைதி 46664 என மண்டேலாவுக்கு பல முகங்கள் உண்டு. இவற்றையெல்லாம் விட 'நான் வெள்ளையனே வெளியேறு எனக் கூறவில்லை. அவர்களுக்கும் சம உரிமையுடன் வாழ அனுமதியுண்டு. அதே போன்று கறுப்பர்களுக்கும் உண்டு. அனைவரும் ஒன்றாக, சம உரிமைகளுடன் மனிதம் போற்றும் மகத்தான விட்டுக்கொடுப்பு பண்புகளுடன் வாழ்வோம் என்று தான் ஆசைப்படுகிறேன்' என வெள்ளையர்களையும் உருக வைத்தவர் மண்டேலா.

 தன்னை சிறைக்கு அனுப்ப வாதாடிய அதே வழக்கறிஞரின் வீட்டு நிகழ்வுத் தொடக்க விழா ஒன்றில் கலந்து கொண்டு, நிறவெறிக்கு எதிரான ஆபிரிக்க அந்தெம் பாடியவர் மண்டேலா.

தான் சிறையில் இருந்த காலப்பகுதியில் தென் ஆபிரிக்காவின் அதிபராக நீடித்து, தனது விடுதலை பற்றி கவனமே எடுக்காத இருந்த ஹெண்ட்ரிக் வெர்வோர்ட் அம்மையார் பின்னாளில் கணவனை இழந்து தனித்துப் போனப் போன போது பல நூறு மைல்கள் கடந்து, அவரது வீட்டுக்கு சென்று தேனீர் அருந்தினார்.

மண்டேலா  தனது நண்பர்களுடன் 18 வருட காலம் சிறைவாசமிருந்த ரோபன் தீவில் சுண்ணாம்புக் கல் உடைக்கும் பணியை கட்டாயமாக செய்யும் நிலமைக்கு ஆளானதாலேயே அவருக்கு முதன்முறையாக நுரையீரல் நோய்த் தொற்று ஏற்பட்டது.

"ஒருவனின் தோலுக்காகவோ அல்லது அவனது பின்னணிக்காகவோ அல்லது அவனது சமயத்திற்காகவோ எவரும் அவன் மீது வெறுப்பை உமிழ்வதற்காக அவன் பிறக்கவில்லை.
மனிதர்கள் வெறுப்பதற்கு கற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் வெறுப்பதற்கு கற்றுக் கொள்ள முடியுமென்றால், அன்பை கற்றுக் கொள்வதற்கும் முடியுமானபவர்களாக இருப்பார்கள். காரணம் எப்போதும் வெறுப்பை விட அன்பு என்பது மனித இதயத்தில் அதிக இயல்பாக வரக்கூடியது'" எனக் கூறிய மண்டேலா இன்று உலகில் எம்முடன் இல்லை.

ஆனால் உலகில் இனவெறி, நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்கள் பற்றிய காலத்தால் அழியாத வரலாற்று அத்தியாயங்களில் மண்டேலா மாத்திரமே எப்போதும் முதல் பக்கத்தில் நீடிப்பார் என்பது மட்டும் உண்மை.

அமைதிப் புரட்சியின் அடலேறே! சென்று மறுபடியும் வா! என்றுதான் இன்று ஒட்டுமொத்த உலகமும் அவரை அழைக்கிறது!

- தகவல் உதவி : விக்கிபீடியா  

Radioactive material was stolen in Mexico (சில மணி நேரமாக இதுதான் சூடான உலக செய்தி..!)


மெக்சிகோவில் ஆபத்தான கதிரியக்க கழிவு ஏற்றப்பட்ட ஒரு ட்ரக் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டு விட்டது..!

மெக்சிகோவின் வடக்குப்பகுதியில் உள்ள டிஜூவானா நகரில் இயங்கிவரும் மருத்துவமனை ஒன்றிலிருந்து ரேடியேஷன் தெராபி மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப் பொருட்கள் ஒரு டிரக்கில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு நவம்பர் 28 அன்று இரவு கதிரியக்க கழிவு சேமிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
...

அது, 'கோபால்ட்-60' எனப்படும் மிகவும் ஆபத்தான விளைவுகளைக் கொண்ட கதிரியக்க பொருள் என்று
The International Atomic Energy Agency - Vianna கூறுகிறது.

அந்த வெள்ளை நிற வோல்ஸ்வேகன் ட்ரக் ட்ரைவர் வாலண்டைன் எஸ்காமில்லா ஒர்டிஸ் வாக்குமூலத்தின் படி...

டிசம்பர் 2 ஆம் தேதி இரவு தலைநகர் மெக்சிகோ சிட்டி அருகே உள்ள டேபோஜாகோ இடத்தில் ட்ரக்கை நிறுத்தி விட்டு தூங்கிக்கொண்டு இருந்த சமயம்... 3 தேதி நள்ளிரவு-அதிகாலை 1:30 மணிக்கு துப்பாக்கி ஏந்திய இருவர் வந்து அவரை கீழே இறங்க செய்து, கைகளை கட்டி தூரமான ஒரு இடத்தில் தூக்கி போட்டுவிட்டு, ட்ரக்கை ஓட்டி சென்று விட்டனர். ஒரு நாளாக முயன்று கை கட்டை தானே கஷ்டப்பட்டு அவிழ்த்து, இன்று 4 ந்தேதி காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, இந்த டிரக் கடத்தப்பட்டுள்ளதாக வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி மையம் இன்று தகவல் வெளியிட்டுள்ளது.

திருடப்பட்ட டிரக்கில் உள்ள கதிரியக்கப்பொருட்கள் மிகவும் பாதுகாப்பாக சீல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளன
என்றபோதிலும் அது திறக்கப்பட்டால்... மிகவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று அம்மையம் எச்சரித்துள்ளது.
இந்த மூலப்பொருளை வழக்கமான அணு ஆயுதங்களில் பயன்படுத்த முடியாது. எனினும், வெடிகுண்டுகள் மூலம் இவை வெளிப்படுத்தப்பட முடியும். அப்போது மிகவும் பெரிய அளவிலான பாதிப்புகளை இது ஏற்படுத்தக்கூடும். மெக்சிகோவின் அணு பாதுகாப்பு அதிகாரிகள் இதுகுறித்த
தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் எச்சரிக்கை செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர் என்றும் வியன்னா அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
 
Mohamed Ashik
http://88likes.blogspot.com/2013/12/truck-carrying-extremely-dangerous.html

தெவனகல பிரதேசத்தில் பதற்ற நிலை? பொதுமக்களின் பலத்த எதிர்ப்பினால் அதிகாரிகள் வெளியேற்றம்.

315388_242828159094313_1188596_n

கடந்த வியாழக்கிழமை 28ம் திகதி மாவனெல்லை நகர மத்தியில் பிக்குகள் 8 பேர் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற தினம் (28) மாலை மாவனல்லை பிரதேச செயலாளர் பிரியங்கனி நெதன்கொட அவர்கள் மற்றும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்களும் உண்ணாவிரதம் நடைபெறும் இடத்திகு வருகை தந்து பிக்குகளின் கோரிக்கையை இரண்டு கிழமையிட்குல் தீர்வை பெற்றுத்தாருவதாக உறுதியளித்தனர். மேலும் இப் பிரதேசத்தினை அளக்கும் வேளையை உடனடியாக அரம்பிப்பதற்கு கேகாலை நில அளவைத் திணைகளத்திற்கு 54400 ரூபாய் பணத்தினை ஒரு கிழமையிகுல் தொல்பொருளியல் திணைகளத்தினால் வழங்குவதாகவும் சப்ரகமுவ மாகாண தொல்பொருளியல் திணைகளத்தின் துணை பணிப்பாளர் திஸ்ஸ மடுரப்பெரும அவர்கள் உறுதியளித்தானர்.

இதற்கு அமையவே இன்று (03) பிரதேசத்தினை அளக்கும் வேளையை கேகாலை நில அளவைத் திணைகளம் மேற்கொள்ளவுள்ள முயற்ச்சி எடுத்துள்ளதாகவும். தெவனகல குன்றை சுற்றயுள்ள பிரதேசத்தினை தொல்பொருள் ஆய்வுக்கு உட்படுத்த நில அளவைத் திணைகள அதிகாரிகள் வருகைத் தந்துள்ளதாகவும், அளக்கும் வேளையை ஆரம்பித்துள்ளதாககவும் அப்பிரதேசத்தை இவ்வாறு அடையாளப்படுத்துவதனூடாக அங்கிருக்கும் முஸ்லிம்களது காணிகள் அபகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தற்பொழுது தெவனகல பிரதேசத்தில் பதற்ற நிலை நிலவுவதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பொது மக்களின் பலத்த எதிர்ப்பினால் நில அளவைத் திணைகள அதிகாரிகள் தற்பொழுது அந்த இடத்திள்ளிருந்து சென்றுள்ளனர். இதே வேளை கடுகஹவத்த பிரதேசத்தில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்வாதிகளினால் திட்டமிட்டு முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க முற்படுகின்றனர். இப்பிரதேசங்களில் முஸ்லிம்கள் மூன்று தலைமுறைகளுகு மேலாக வருகின்றனர். இப்பிரச்சினைகு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.

அனைத்துலக குர்ஆன் போட்டியில், முதல் பரிசு வென்ற வங்கதேச சிறுவன் நஜ்முல் ஹஸன்.

சவூதி அரேபியாவில் நடைபெற்ற, அனைத்துலக குர்ஆன் போட்டியில்,  முதல் பரிசு வென்ற வங்கதேச சிறுவன் நஜ்முல் ஹஸன்க்கு 80, 000 சவூதி ரியால் (சுமார் 30 லட்சம்  ரூபாய்) பரிசை கஃபா இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ் வழங்குகிறார் .

மாஷாஅல்லாஹ். பரிசு வென்றவருக்கு வாழ்த்துகள்.
இவரின் கல்வி ஞானத்தை இவருக்கும் சமூகத்துக்கும்
பயனுள்ளதாக்கி வைக்க இறைவனிடம் வேண்டுகிறேன்.

 
வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் நஜ்முல் ஹஸன் அனைத்துலக திருக்குர்ஆன் போட்டியில் முதல் பரிசு வென்றான் . 
80, 000 சவூதி ரியால் பரிசை
கஃபா இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ்
வழங்குகிறார் . 
வங்க தேசத்திலிருந்து 
குர்ஆனின் ஒலி.
வங்கதேசத்தை சேர்ந்த சிறுவன் நஜ்முல் ஹஸன் அனைத்துலக திருக்குர்ஆன் போட்டியில் முதல் பரிசு வென்றான் . 80, 000 சவூதி ரியால் பரிசை கஃபா இமாம் அப்துர்ரஹ்மான் சுதைஸ் வழங்குகிறார் . வங்க தேசத்திலிருந்து குர்ஆனின் ஒலி.

 
 
 

குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்ற குடிசையில் வாழும் ஏழைபெண்.

குரோர்பதி நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்ற குடிசையில் வாழும் ஏழைபெண்.       

ஸ்டார் பிளஸ் மற்றும் சோனி ப்ளஸ் டிவியில் கோடீஸ்வரர் ஆகும் நிகழ்ச்சியான கெளன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி கடந்த சிலவருடங்களாக நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை அமிதாப் பச்சன் உள்பட பல பிரபலங்கள் நடத்தினர்.

சென்ற வாரம் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த குரோர்பதி நிகழ்ச்சியில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாயை வென்று சாதனை படைத்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் Saharanpur, என்ற நகரத்தின் அருகில் உள்ள Sansarpur என்ற கிராமத்தை சேர்ந்தவர் Firoz என்ற 22 வயது இளம்பெண், சென்ற ஞாயிறு அன்று நடந்த குரோர்பதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் மிகச்சரியான பதிலை கூறி இறுதியில் ஒரு கோடி ரூபாயை வென்றார். இவர் தனது சகோதர சகோதரிகளுக்காக படிப்பை பாதியில் விட்டு தியாகம் படைத்தவர்.

இந்த பரிசு பணத்தை வைத்து 12 லட்ச ரூபாய் செலவில் தனது தந்தைக்கு இருதய ஆபரேஷன் செய்யப்போவதாகவும், உடன் பிறந்த தம்பி, தங்கைகளை படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டுவரப்போவதாகவும் அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுவரை அந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் இந்த பெண்ணை ஏழ்மை காரணமாக இழிவாக நடத்தி வந்தனர் என்றும் ஒரு கோடி பணத்தை வென்றவுடன் தன்னை எல்லோரும் மேடம் என்று மரியாதையுடன் அழைப்பதாகவும் அவர் மேலும் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

மேலும் தனக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை ஒன்றை இதுவரை நினைத்துப்பார்க்கவில்லை என்றும் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களை நல்ல நிலையில் வைத்து காப்பாற்றுவது ஒன்றுதான் தனது லட்சியம் என்றும் கூறியுள்ளார்.

பரீட்சையில் சித்தியடைந்த மாணவிக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான காரை பரிசாக வழங்கிய ஆசிரியர்

க. பொ. த உயர் தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை தட்டிக் கொண்ட கொழும்பு தேவி பாலிகா வித்தியாலய சாதனை மாணவி செஷானி குணதிலகவுக்கு இவரது ரியூசன் ஆசிரியர் குமுது லியனகே 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய Honda Hybrid motor car ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார்.

 
மேற்படி ஆசியரியர் வர்தகம் பாடம் தொடர்பில் தனியார் வகுப்பொன்றை நடாத்தி வருகின்றார். இந்நிலையில் கடந்த க. பொ. த உயர் தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற குறித்த மாணவிக்கு ஆசிரியர் காரை பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார்.
 
இப்பரிசளிப்பு விழா மிக பிரமாண்டமாக கொழும்பில் கடந்த நாட்களில் இடம்பெற்றதோடு இலங்கை வரலாற்றில் ஆசிரியர் ஒருவர் மாணவருக்கு வழங்கிய மிகப் பெரிய பரிசாகவும் இது பதிவானது.

முஸ்லீம் உலகை ஆக்கிரமித்துள்ள ஆபத்தான 'பத்வா' மெசின்கள்!



           1924 ஆம் ஆண்டு மார்ச் மூன்றாம் திகதி முஸ்லீம் உம்மத்தின் கேடயமான கிலாபா அரசு திட்டமிட்டு வீழ்த்தப்பட்டது . குப்ரிய ஏகாதிபத்திய எதிரிகள் இஸ்லாத்தின் பூமிகளை சூறையாடவும் ,முஸ்லீம்களை வஞ்சம் தீர்க்கவும் திட்டமிட்டபோது ,தகர்க்கப் படவேண்டிய முதல் இலக்காக இந்த கிலாபா அரசே அவர்களுக்கு தெரிந்தது .அதை வீழ்த்த சிந்தனை வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த முஸ்லீம் உம்மாவில் இருந்த சிலரே கோடரிக் காம்புகளாக பயன் பட்டனர் .

 
        இவ்வாறு முஸ்லீம் உம்மத் அரசியல் அநாதைகளாக்கப்பட்டு 90 வருடங்கள் நெருங்கி விட்டது . அவலங்கள் ,அநீதிகள் ,அத்துமீறல்கள் என தொடரான பல கசப்பான அனுபவங்களை அது சுமந்துள்ளது .எதிரிகளின் சதிகள் ஒருபுறம் , தனது சுய பலவீனங்கள் மறுபுறம் என பல சவால்களை அது எதிர்நோக்கிக் கொண்டுள்ளது . இந்த நிலையை காரணம் காட்டியே இஸ்லாமிய இயக்கங்களின் பருவ காலம் ஆரம்பிக்கின்றது .

         இகாமதுத் தீன் என்ற பொதுப் பதாகையின் கீழ் இவர்களது தோற்றம் அமையப் பெற்றாலும் ,அதற்காக தேர்ந்த பாதைகள் பலவாக இருந்தன .இருந்தும் அதில் இருந்த வேடிக்கை என்னவென்றால் இந்த ஓவ்வொரு இயக்கமும் தனது பாதையை சுன்னாவில் இருந்தே பெற்றுக் கொண்டதாக நியாயப்படுத்தின ! இவர்கள் முஸ்லீம் உம்மத் மத்தியில் தமக்கான அங்கீகாரத்தை வேண்டிய உழைப்பையே முதல் நிலைப்படுத்தின ! இந்த இடத்தில்  இருந்தே 'பிடாரிகள் பேயாட்டம் ஆடும்' இயக்க மோதல் வரலாறு அத்திவாரம் இடப்படுகின்றது .

        சிந்தனை வீழ்ச்சியிலும் குப்பார்களின் அதிகாரப் பிடியிலும் சிக்கித் தவித்த முஸ்லீம் உம்மத் இவர்களால் பல வேடிக்கையான பொழுதுகளையும் , ஆபத்தான விளைவுகளையும் சந்தித்தது . மறுமலர்ச்சிப் பாதையின் திசையை ஆளுக்கொன்றாக இந்த இயக்கங்கள் காட்டி நின்றதில் முஸ்லீம் உம்மத் மீண்டும் ,மீண்டும் பிரிந்து சிதைந்து இந்த 90 வருடங்களில் மிகவும் களைத்துப் போனதுதான் மிச்சமாகும் . 

          இயக்கம் என்ற பெயரில் வரும் புதுவரவுகள் ஏராளமாகிப் போக முஸ்லீம் உம்மத்தும் இதற்கு பழக்கப் பட்டுப் போனது . காலப்போக்கில் இதுவே ஒரு சுவையான அம்சமாக மாறி "இதோ வந்துட்டான்யா வந்துட்டான் !! சரி இவன் என்ன சொல்லப் போகிறான் !? யார் யாரை பிழையாக்கி தன்னை சரிப்படுத்தப் போகிறான் !? " என்ற பட்டிமன்ற பார்வையோடு 'அலர்ஜியான ' இந்த வேதனையிலும் ஒரு நகைச்சுவை சுகத்தையும் அனுபவித்து போக முடிவு செய்தது . 

       சராசரி மதரசா ,குல்லியா முதல் கோட் சூட் போட்ட ஜாமியா வரை இந்த வீன்வேலையை தீன் வேலையாக கற்றுத் தரும் பயிற்சி மன்றங்களாக பதாகைகளை ஏந்தின. இது அந்த இயக்கத்தின் மதரசா அது அந்த அமைப்பின் ஜாமியா என குதறப்பட்ட ஆலிம் உற்பத்திக் கூடங்களில் இருந்து ஆட் பிடிக்கும் வேட்டைக்கு 'பாஸ்ட் அவுட்டுகள் ''வேஸ்ட் அவுட்டுகளாக' வெளிவந்தன . தான் சார்ந்த இயக்கத்தின் கருத்தை இஸ்லாத்தின் சிந்தனையாக பேசி நிற்கும் புரோகிதர்களும் ,அவர்களின் பின்னால் விசுவாசம் மிக்க ஒரு 'முரீத்' கூட்டமும் என ஒரு பிரிவினைப் பயங்கரம் முஸ்லீம் சமூக மயமாக்கப் பட்டது .


     எதிலே முரண்பட்டால் ஒருவன் இஸ்லாமிய வட்டத்தை விட்டும் வெளியேறுவான் ?என்ற நிலையில் தமக்கென ஒரு முடிவெடுத்துக் கொண்டு இயக்க இலாபம் கருதிய 'பத்துவா மெசின்கள் ' பரவலாகின ! முஸ்லீம் என்ற பதத்தின் மீதான இஸ்லாத்தின் அடிப்படை நிபந்தனை இயக்க வெறிக்கு முன் நாறடிக்கப்பட! ஒவ்வொரு முஸ்லீமும் பகுதி தொகுதி வாரியாக பிரிக்கப் பட்டான் .இவர்கள் இஸ்லாம் அங்கீகரித்த 'இஜ்திஹாதின் 'வாயில்களை இழுத்து மூடி அதை தீண்டத் தகாததாக காட்டுவார்கள் !ஆனால் மறுபக்கம் குப்ரிய மேலாதிக்க ஆதரவிலும் அதன் நிழலிலும் தஞ்சம் புகுந்திருப்பார்கள் .
குப்பார்களின் உள்ளம் குளிர சகோதரத்துவத்தை பார்த்து சந்தி சிரித்தது . முஸ்லீம் உம்மத்தின் நிலை மரத்தில் இருந்து விழுந்தவனை மாடு மிதித்த கதையானது !

         குப்ரியத்தின் மேலாதிக்க சூழல் , அதன் கவர்ச்சிகளால் ஈர்க்கப்பட்ட வாழ்வு என இஸ்லாமிய கண்கள் கட்டப்பட்ட முஸ்லீம் உம்மத்தை ஆளுக்கொரு திசையாக இழுத்து  இதுதான் கிழக்கு இங்கிருந்துதான் சூரியன் உதிக்கும் என்ற கருத்தியல் பலாத் காரத்தை சில இஸ்லாமிய இயக்கங்கள் தொடுத்தார்கள் . அதன் நோக்கம் 1.ஆட்சேர்ப்பு 2. வருமானம் என்பனவே ஆனால் வெளிச் சொல்வது கொள்கை வளர்ப்பு !!

         அடுத்தவன் சரக்கை 'கொண்டம்' பண்ணியாவது தனது சரக்கை விற்கவேண்டும் என்ற முதலாளித்துவ 'அஜெண்டாவின்' கீழ் மாற்று இயக்கங்களை எதிரியாக ,துரோகியாக ,வழிகேடர்களாக ,காபிர்களாக சில இயக்கங்கள் காட்டத் தொடங்கின .அதற்காக அடுத்த இயக்கங்களை பற்றி ஒரு பூரண 'ஸ்கேர்ன் ' தேவைப்படவில்லை ! கொஞ்சம் வரலாறு அந்த இயக்கத்தின் பதிவுகளில் இருந்து தமது கருத்துக்கு 'ஹைலைட்' ஆகும் சில நடப்புகள் போதும் ! இந்த பஞ்சாயத்து வக்கீல்கள் பட்டையை கிளப்பி விடுவார்கள் .கருத்து வேறுபாட்டுக்கு உள்ளான விடயங்களிலும் 'நெகடிவ் போர்மட்' காட்டி சமூக பார்வையில் மாற்று இயக்கத்தை கொச்சையாக காட்டும் சில்லறைத் தனங்கள் 'தவ்வா' என்ற பெயரில் அறிமுகமானது .

       மொத்தத்தில் இவ்வாறான இயக்கங்களின் வருகை இஸ்லாமிய இயக்கத்தின் தேவைப்பாட்டை கேள்விக்குறி ஆக்கியுள்ளதோடு ,முஸ்லீம் உம்மத்தை அதன் இயல்பான எழுச்சி கரமான சிந்தனைப் போக்கை நோக்கி நகர்வதை விட்டும் தடுத்து விட்டது . நேற்றுவரை வாதம் விவாதம் அதன் பின் ஒரு 'பத்துவா'!? என இருந்த இந்த 'ஸ்டைல்' இப்போது 'பத்துவா' பின் முடிந்தால் வாதத்துக்கு வா !? எனும் புதிய 'பேஷனாக' மாறியுள்ளது ! இந்த மனோ வியாதிப்படி இவர்கள் ஆதாரம் கேட்பது தெளிவடைய அல்ல ,மாறாக தமது கோணத்தில் இன்னும் சிதைவடையச் செய்யவே ஆகும் . சமூகம் உம்மி மக்தூம் (ரலி ) போன்ற தரத்தில் இருக்கும் நிலையில் இந்த அப்துல்லாஹ் பின் உபை களின் ஆட்டம் மிக ஆபத்தானது .

BMICH இல் சம்பிக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சி கூடத்தில் 15 நிமிடத்தில் தீவிபத்து

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஏற்பாடு 
செய்யப்பட்டிருந்த ஆக்கத்திறன்  கண்காட்சி கூடத்தில் சற்றுமுன்னர் ஏற்பட்ட தீ விபத்தில் கண்காட்சி கூடம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
 
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மூன்று நாள் கொண்ட ஆக்கத்திறன் கண்காட்சியின் ஆரம்ப நாளான இன்று, அமைச்சர் சம்பிக்கவினால் கண்காட்சி கூடம் ஆரம்பித்து வைக்கப்பட்டு 15 நிமித்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Photo by: Thayalan Balasuntharam
இதனால் காட்சி கூடம் முற்றாக எரிந்துள்ளதுடன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து வருதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
 
இதேவேளை தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நேற்று நள்ளிரவு சூரியனை நோக்கி பாயந்த ஐசான்(ISON) வால்நட்சத்திரம்..

உலகெங்கும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் விரித்த கண்களுடன் வானை நோக்கி காத்திருந்தனர். உலகத்தில் உள்ள அத்தனை தொலைநோக்கிகளும், விண்ணியல் ஆர்வலர்களின் கண்களும் ஐசான் வால்நட்சத்திரத்தை நோக்கி திரும்பியிருந்தன.
 

ஐசான் என்னாகப் போகிறது, சூரியனுக்கு அருகே அது போகும்போது என்ன நடக்கும் என்ற  ஆராய்சிசியாளர்களின் அத்தனை பேர் மனதிலும் இருந்த கேள்வி. அது தப்பிப் பிழைக்க வாய்ப்பில்லை, அழிந்து போய் விடும் என்று பொதுவான கருத்து இருந்தாலும் தப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் சிலர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

மிக வேகமாக சூரியனை நோக்கி போய்க் கொண்டிருந்த ஐசான் வால்நட்சத்திரம் இன்று நள்ளிரவு பிரகாசமாக சூரியனை மிக மிக அருகே சுமார் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில்  நெருங்கியது. வீடியோவைப் பாருங்கள், இதற்கு அடுத்த நிமிடங்கள் என்ன நடந்தது என்பது படைத்த இறைவினடம்தான் கேற்கவேண்டும்..



 வானங்களிலும், பூமியிலும் உள்ள (உயிரினங்கள்) அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே முற்றிலும் (வலஹூ அஸ்லம) சரணடைந்து முஸ்லிமாக இருக்கின்றன. (ஆல இம்ரான்:3:83)

மனித அறிவுக்கும், சிந்தனைக்கும் எட்டாத இதுபோன்று அரிய, அற்புத தகவலை அனைத்து அறிவுகளின் ஒரே உரிமையாளனான அல்லாஹ் மானுட சிந்தனைக்கும், ஆய்வுக்கும் உட்படுத்தியுள்ளான்.  ஏன்? மனிதர்கள் ஆழ்ந்து சிந்தித்து ஆய்வு செய்து அறிவுரை பெறுவதற்காக.


ஐசான் வால்நட்சத்திரம்  புவியைத்தான்டி சூரியனை நெருங்குகின்ற பாதை.
விணணில் நிலை கொண்டுள்ள சோஹோ என்று அழைக்கப்படும் சோலார் அன்ட் ஹீலியோஸ்பெரிக் அப்சர்வேட்டரி என்ற விண்வெளி தொலைநோக்கி மூலமும், ஐசான் சூரியனை நெருங்கும் காட்சியை நேரடியாக காட்ட நாசா ஏற்பாடு செய்திருந்தது.
http://sohowww.nascom.nasa.gov/home.html

சோஹாவில் பல்வேறு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அத்தனையும் சூரியனை ஆய்வு செய்வதற்காக பொருத்தப்பட்டவையாகும். இந்த சோஹா, 1995ம் ஆண்டு ஏவப்பட்டதாகும். இன்னும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
 

திஹாரியைச் சோ்ந்த தாஹா ஆசிரியரவர்கள் இன்று காலமாகியுள்ளார்.



இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..

எனது பாடசாலை வாழ்வில் மறவாத ஆசான்களில் ஒருவா்தான் திஹாரியைச் சோ்ந்த தாஹா ஆசிரியா். நாம் ஆண்டு 3, 4 இல் கல்வி கற்ற காலத்தில் எமது வகுப்பாசிரியராக இருந்த ஒருவா். தாஹா ஆசிரியா் என்றாலே எமக்கு மிக்க மகிழ்ச்சி. ஏன் தெரியுமா ஒரு நாளைக்கு ஒரு கதை கூறுவார். அவா் கூறும் கதைகளைக் கேட்பதற்காகவே நாம் பாடசாலைக்கு கட் அடிப்பதில்லை. சித்திரம் வரைவதில் மகா கெட்டிக்காரர். தமிழ் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளையும் சரளமாகப் பேசக் கூடியவா். இப்படி எத்தனையோ விடயங்கள் எம் மனதில் அவா் பற்றிய பதிவுகள். பலரின் மனதில் நீங்கா இடம் பிடித்த அவா் இன்று மாலை தனது மறுமை வாழ்வை ஆரம்பித்துள்ளார். அல்லாஹ் அவரைப் பொருந்திக் கொண்டு நற்பாக்கியங்களை வழங்குவானாக! அவரின் மறுமை வாழ்வை சிறந்ததாக ஆக்குவானாக! அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலை அளிப்பானாக!

اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

தகவல்
இஜாஸ் - ஜதாகுமுல்லாஹு ஹைரா