எகிப்தில் முபாறக்குக்கு எதிரான ஆர்ப்பாட்டம் போன்று தற்போதைய இராணுவ ஆட்சிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு..
எகிப்து முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாறக் அரசை கவிழ்க்க முன்னணியில் நின்று போராடிய ஏப்ரல் 6 இளைஞர் முன்னணி, தற்போதைய இராணுவ ஆதரவு இடைக்கால அரசுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
முபாறக் எதிர்ப்பு முன்னணி செயற்பாட்டாளர்கள் மூவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்தே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
“இந்த அரசு தனது திட்டத்திலிருந்து மாற அல்லது அதனை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து” எதிர்வரும் 2014 ஜனவரி 25 ஆம் திகதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மேற்படி முன்னணி கெய்ரோவில் நடத்திய ஊடக மாநாட்டில் அறிவித்துள்ளது.
முபாறக் அரசுக்கு எதிராகப் போராடிய ஜனவரி 25 செயற்பாட்டாளர்களிடம் இராணுவ ஆதரவு அரசு பழி தீர்க்கிறது என்றும் அந்த முன்னணி குற்றம் சுமத்தியது.
ஜூன் 30 இராணுவ சதிப் புரட்சிக்குப்பின் புதிய அரசும் தமக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக அது குற்றம் சாட்டியுள்ளது. கடந்த ஜுலையில் ஜனாதிபதி முஹம்மத் முர்சி இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் இஸ்லாமியவாதி அல்லாத ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய முதல் தீர்ப்பாக முபாரக் எதிர்ப்பாளர்கள் மீதான சிறை தண்டனை அமைந்தது.
ஏப்ரல் 6 இளைஞர் முன்னணி 2012 ஜனாதிபதித் தேர்தலில் முபாரக் அரசின் பிரதமர் அஹமத் ஷபீக் போட்டியிட்டதால் எதிர்த்து போட்டியிட்ட முஹம்மத் முர்சிக்கு ஆதரவளித்தது.
பின்னர் அது முர்சி வெளியேற கோரும் ஆர்ப்பாட்டத்திலும் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ceylonmuslim web
0 comments:
Post a Comment