தெஹிவளையில் மூன்று பள்ளிகளில் தொழுகைகளுக்கு பொலிஸார் தடை : மறுக்கின்றார் பேச்சாளர்
தெஹிவளை -- கல்கிசை மாநகரசபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் அமைந்திருக்கும் மூன்று பள்ளிவாசல்களில் தொழுகைகளை மேற்கொள்ள வேண்டாமென நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு வாழ் முஸ்லிம்கள் மத்தியில் சற்று பதற்றமான சூழல் தென்பட்டது.
தொழுகைகள் நடத்தப்படும் பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாமென்ற அச்சத்தின் காரணத்தினாலேயே அத்திடிய மஸ்ஜித்துல் ஹிபா, களுபோவில மஸ்ஜித்துல் தாரூல் சாபீய், தெஹிவளை தாரூல் அர்க்கம் ஆகிய மூன்று பள்ளிவாசல்களிலும் தொழுகைகளை நடத்த வேண்டா மென பொலிஸ் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
குறித்த பள்ளிவாசல்கள் அமைந்திருக்கும் பிரதேசங்களில் உள்ள சில பெளத்த மத குருமாரும்இ பெளத்தர்களும் இணைந்து மேற்படி பள்ளிவாசல்கள் மூன்றும் சட்டவிரோதமானவை என பொலிஸாரிடம் முறையிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் இன்று புதன்கிழமை சம்பந்தப்பட்டோருடன் பேச்சுவார்த்தையொன்று மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் தேவைப்படும் பட்சத்தில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவர விருப்பதாகவும் அமை ச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள் ளார்.
பொலிஸார் மறுப்பு
இதேவேளை, தெஹிவளை பிரதேச பள்ளிவாசல்களில் தொழுகைகளை மேற்கொள்ளவேண்டாமென பொலிஸா ரால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை மறுத்துள்ள பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோகண, பள்ளிவாசல்களில் தொழுகைகளை மேற்கொள்ள வேண்டாமென கூறுவதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் கிடையாது. அல்லது தொழுகைகளை தடை செவதற்கான அதிகாரமும் இல்லை என்று குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
எந்த பளிளவாசலிலும் பொலிஸார் தொழுகையை தடை செய்யவில்லை. தெஹிவளை பிரதேசத்தில் அவ்வாறு எந்த சம்பவமும் இடம்பெறவில்லை. எனினும் கொஹுவல பிரதேசத்தில்இ குர் ஆன் மத்ரஸாவாக நடத்தி வரப்பட்ட இடம் ஒன்று தற்போது தொழுகைக்காக பயன்படுத்தப்பட்டுவருவதாக பெளத்த பிக்கு ஒருவர் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். அந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செ ய்ய பெளத்த, முஸ்லிம் தரப்புப் பிரதி நிதிகளை இன்று புத்தசான மற்றும் மதவிவகார அமைச்சுக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். இதனை தவிர எந்த சம்பவமும் அங்கு இடம்பெறவில்லை.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பொலிஸார் பள்ளி வாசலில் தொழுகைக்கு தடை விதிக் கவில்லை என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment