நேற்று நடந்த மு.கா விசேட கூட்டத்தில் கௌரவ ரவுப் ஹகீம் நீதி (??) அமைச்சரினால் சொல்லப்பட்ட சில கருத்துக்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் பொதுக் கூட்டம் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்ஹாஜ் ரவுப் ஹகீம் மற்றும் மு.கா. கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், மேல் மாகாண சபை உறுப்பிணருமான கௌரவ சாபி ரஹீம் ஆகியோரின் வருகையுடன் நேற்று இரவு 10.15 மணியலவில் அல் அக்பர் பாலர்பாடசாலை முன்றலில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்விஜயத்தின் போது கஹடோவிட, ஓகடபொல, குரவலான, உடுகொட பகுதிகளைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள், அபிமானிகள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபை உறுப்பிணர் கௌரவ சாபி ரஹீம் அவர்களது உரையில், அவர் கடந்து வந்தபாதை, அவருடைய சேவைகள் பற்றி ஒரு சிலவார்த்தைகள் குறிப்பிட்ட அதேவேளை, முக்கியமாக கம்பஹா மாவட்டம் குறித்த சில தகவல்கள் அவருடைய அரசில் பயனத்தின் நகர்வுகளை எடுத்துக்காட்டக்கூடியதாக இருந்தது.
நீதி அமைச்சர் ரவுப் அவர்களது உரையில் தொட்டுக்காட்டப்பட்ட சிலவிடயங்கள்.
- தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்திருந்தால்தான் தான் கட்சியைப் பாதுகாக்க முடியும். கட்சியைப் பாதுகாத்தால் தான் சமூகத்தின் பிரச்சினைகளை நிதானமாக தட்டிக் கேட்க முடியும். அரசாங்கத்திலிருந்து வெளியேறினால் கட்சி மீண்டும் ஒரு உடைவை சந்திக்கும்.
- பொதுபல சேனாவைப் பற்றிய தெளிவான நோக்கு ஜனாதிபதிக்கு உண்டு. அவர் அதனை விட்டுப் பிடிப்பதற்குப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அரசாங்கத்தினுடன் ஆவேசப்பட்டுப் முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்துப் பேசும் நிலைமையில் முஸ்லிம் காங்கிரஸ் இல்லை.
- அரசியல் வாதிகள் ஒவ்வொருவரும் நடிகர்கள். அனைவரும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள். நாமும் அவர்களது நடிப்புக்கு எற்ப நடிக்கவேண்டியுள்ளது. இனவாதிகளினால் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அநீதிகளுக்கு நாம் நிதானமாக முகம்கொடுக்கவேண்டும்.
- முக்கியமாக கடந்தகால காலத்தில் ஹலால் சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சினைகளில் ஜமியத்உல் உலமாவின் நகர்வுகளையும், அவர்களுடன் முஸ்லிம் காங்கிரஸிக்கு எற்றபட்ட கருத்துமுரண்பாடுகளையும் மக்களிடம் முன்வைத்ததைக் காணக்கூடியதாக இருந்தது.
0 comments:
Post a Comment