சகோதரர் மிஹிலார் அவர்கள் காலமானார்.
உடுகொடையைச் சேர்ந்த காலம் சென்ற ஸகரியா மாஸ்டர் அவர்களின் புதல்வன் M.Z.M மிஹ்லார் அவர்கள்ஃ காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன்.
அன்னார் கஹடோவிடாவைச் சேர்ந்த சித்தி பௌஸியா அவர்களின் அன்புக் கணவரும், சப்ராஸ், ஷரீக், சஸ்னா ஆகியோரின் தந்தையும், முன்னால் அதிபர் அப்துல் ஹனி, உஸ்மான், ஸுகைர் ஆகியோரின் சகோதரரும், அல்ஹாஜ் அப்துல் ஸமீன் திஹாரியைச் சேர்ந்த அப்துல் பாரி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அனனாரின் ஜனாஸா நாளை ( 13.12.2013) 10.00 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار
இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!
0 comments:
Post a Comment