அப்துல் காதர் முல்லாஹ்வுக்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளது
பங்களாதேஷ் ஜமாதே இ இஸ்லாமியின் மூத்த தலைவரான அப்துல் காதர் முல்லா நேற்று தூக்கிலிடப்பட்டார்.
இவர் கடந்த செவ்வாய்க்கிழமையே தூக்கிலிடப்படவிருந்தார். ஆனால் நீதிமன்றத்தின் தலையீட்டின் பேரில் அவருக்கு வழங்கப்பட்ட மரணதண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட மரணதண்டனை சரியானதே என்று அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த பின்னணியில் இவர் நேற்று தூக்கிலிடப்பட்டதாக, பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அவர் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்னர், அவர் சமர்ப்பித்த மேல்முறையீட்டு மனு மீது நீதிபதிகள் விசாரணையை நடத்த உதவ, அவரது தூக்கு தண்டனை பரபரப்பான வகையில் நிறுத்திவைக்கப்பட்டது.
1979 ஆம் ஆண்டு பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறும் போராட்டத்தில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட அப்துல் காதர் முல்லாவுக்கு கடந்த பெப்ரவரியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஜமாதே இஸ்லாமி கட்சியின் துணை பொதுச் செயலாளரான முல்லா பொதுமக்களையும் புத்தி ஜீவிகளையும் கொன்றதாக குற்றம் சாட்டியே மரண தண்டனை விதிக்கப்பட்டது. பங்களாதேஷ் சுதந்திர போராட்டத்தில் ஜமாதே இஸ்லாமி பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment