கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மாஷா அல்லாஹ்.. சத்தமில்லாமல் முழு தாடியுடன் இன்னுமொரு புதுவரவு!!

சத்தமில்லாமல் முழு தாடியுடன் இன்னுமொரு புதுவரவு!!
படத்தை பார்த்ததும் ஹஷீம் அம்லா என்று ஏமாந்து விடாதீர்கள்!
இவர் மொயின் அலி (Moeen Ali)
இங்கிலாந்து கிரிக்கற் அணியின் புதிய சகல துறை விளையாட்டு வீரர்! நேற்றைய தினம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தனது அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்!
இந்த போட்டியில் இங்கிலாந்து 15 ஓட்டங்களால் தோல்வி அடைந்திருந்தாலும் அலி தனது முதல் போட்டியில் ஒரு விக்கற் மற்றும் 44 ஓட்டங்களை எடுத்து அசத்தியிருக்கிறார்!

ஹஷீம் அம்லாவிற்காக தென்னாபிரிக்க அணியை விரும்புபவர்கள் தற்போது மொயின் அலிக்காக இங்கிலாந்து அணியையும் விரும்புவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை! (நானும் தான் )

முழு தாடி, அழகிய நடத்தை, அபாரத்திறமை இவற்றால் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்து இஸ்லாம் தொடர்பான அழகிய தகவலை அடுத்த மதத்தவர்களுக்கும் வழங்கிக் கொண்டிருக்கும் ஹஷீம் அமலாவிற்கு துணையாக இவரும் இருக்க வேண்டும் என்பதுதான் எமது அவா!
26 வயதாகும் அலி இன்னும் இன்னும் தனது திறமைகளை வெளிக்கொணர்ந்து தனக்கென தனியிடத்தை இங்கிலாந்து அணியில் பிடிக்க வேண்டும்! இன் ஷா அல்லாஹ்!

அதற்காக அல்லாஹ் தா ஆலா துணை புரிய வேண்டும்!

கட்டுரையாக்கம் - Pannawa Sms-

'அல்லாஹ்' என்ற சொல் நீக்கப்பட்டது

 உலகலாவிய முஸ்லிம்களின் எதிர்ப்பின் காரணமாக, ஐக்கிய அமெரிக்க பொப் இசைப் பாடகியின் பாடல் ஆல்ப...த்தில் இருந்து ‘அல்லாஹ்’ என்ற சொல் தொழிணுட்ப ரீதியாக நீக்கப்பட்டுள்ளது.

KatyPerry எனும் பாடகியின் 'Dark Horse' என்ற பாடல் ஆல்பத்தின் ஒரு பாடல் காட்சியில், அவள் அணிந்திருக்கும் மாலையில் ‘அல்லாஹ்’ என்ற அரபுச் சொல் தொங்கவிடப்பட்டிருந்தது. இக் காட்சி அடங்கிய பாடல் யூடியுப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

இச் செயலைக் கண்டித்து ஐக்கிய ராச்சியத்தின் பிராட்போடு (Bradford, UK) வைச் சேர்ந்த ஷாசாத் இக்பால் Shazad Iqbal என்ற முஸ்லிம் வாலிபன், Change.org என்ற வலைத்தளத்தின் ஊடாக, மேற்படி வீடியோவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்றுக்காக ஆள்சேர்ப்புப் பணியில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் விளைவாக தற்பொழுது அப் பாடல் காட்சியில் ‘அல்லாஹ்’ என்ற சொல் நீக்கப்பட்டுள்ளது.

‘எல்லோருடைய ஒத்துழைப்பும் கிடைக்காமல் இருந்திருந்தால் இதனை சாத்தியப்படுத்தியிருக்க முடியாது. நான் அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன். நமது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அனைவருக்கும் அல்லாஹ்தஆலா நல்லருள் பாளிப்பானாக’ என்று ஷாசாத் கூறியுள்ளார். இவ் இணைய முறைப்பாட்டில் 65,000 பாவனையாளர்கள் ஒப்பமிட்டிருந்தனர்.

தகவல் மூலம்: OnIslam(Hisham Hussain, Puttalam)

தெஹிவளை ஷாபி பள்ளி மீது பொலிஸார் வழக்கு. (காரணம் சமாதானம்)

தெஹிவளை கடவத்தை வீதி தாருஷ் ஷாபியா பள்ளிவாசலினால் பிரதேசத்தின் சமாதானத்திற்குப் பங்கம் ஏற்படுவதாகக் கூறி கொஹுவளை பொலிஸார் கங்கொடவில மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணை எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது. கடந்த 20ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக கடவத்தை வீதியில் இயங்கிவரும் வக்பு சபையின் அங்கீகாரம் பெற்ற குறித்த பள்ளிவாசலின் சமாதானத்துக்கு பங்கம் ஏற்படுவதாகக் கூறி தண்டனைச் சட்டத்தின் 98/1 ஷரத்தின் கீழே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாயன்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கலந்துகொண்ட முஸ்லிம் பிரமுகர்களது கூட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எம். ஸுஹைர் இந்த விடயம் குறித்து பாதுகாப்புச் செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இதுகுறித்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுடன் தொடர்பு கொண்ட பாதுகாப்புச் செயலாளர் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பது பற்றி விபரங்களைக் கேட்டறிந்துள்ளார். மேலதிக நடவடிகைகள் தொடர்பில் பணிப்புரையை வழங்கினர். இது தொடர்பாக அங்கிருந்த சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி மற்றும் முன்னாள் எம்.பி. ஸுஹைர் ஆகியோருக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்புகொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேநேரம் கடந்த புதனன்று முன்னாள் எம்.பி ஸுஹைருடன் தொடர்ப கொண்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனநாயக்க குறித்த வழக்கினை வாபஸ் பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். பிரதேச வாசிகள் எட்டுப் பேர் பள்ளிவாசல் நடவடிக்கைகள் தமக்கு தொல்லைகள் தருவதாக முறைப்பாடு செய்துள்ளதனையடுத்தே பொலிஸார் இந்த வழக்கினைத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 3 மாத காலமாக இப்பள்ளி வாசலுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு கல்லெறிந்த சம்பவம் ஒன்றை அடுத்தே பாதுகாப்புப் போடப்பட்டது.
இதேநேரம் கடந்த செவ்வாயன்று பிரதேச உயர் பொலிஸ் அதிகாரிகள் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து வழக்குத் தாக்கல் செய்திருப்பது பற்றி அறிவித்துள்ளது. புதனன்று காலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர சரபிடிய மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கினிகே ஆகியோர் பள்ளிவாசலுக்கு விஜயம் செய்து பொலிஸாரைஇப்பள்ளிவாசலை மூடிவிடுமாறு கேட்டுள்ளார்களா என வினவியுள்ளார். இதுவரை பள்ளிவாசலை மூடிவிடுமாறு கேட்கப்படவில்லை எனத் தெரிவித்ததாக நிர்வாக சபையின் செயலாளர் பிஸ்ருல் ஹாஜி தெரிவித்தார்.

வழக்குப் போடப்பட்டதற்கான பின்னணியையும் இவர்கள் விளக்கியுள்ளார். இதேநேரம், இப்பள்ளிவாசலுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குத் தொடருமாயின் அதனை எதிர்கொள்வதற்கு தாம் தயாராக இருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நுர்தீன் தெரிவித்தார்.
வழக்கு தொடர்பாக நீதிமன்றம் இப்பத்திரிகை அச்சுக்குப் போகும்வரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் பள்ளிவாசல் செயலாளர் அல்ஹாஜ் பிஸ்ருல் ஹாஜி தெரிவித்தார்.

கடந்த செவ்வாயன்று கூடிய தெஹிவளை பள்ளிவாசல் சம்மேளன மாதாந்தக் கூட்டத்திலும் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது.

(நவமணி: 28.02.2014)
-NM Ameen-

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 33 பேர் காயம்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா பிரதேசத்தில் தனியார் பஸ் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் 33 பேர் படுகாயத்திற்குள்ளாகிய நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
ஓல்டனிலிருந்து அட்டன் நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும் அட்டனிலிருந்து டயகம நோக்கி சென்ற பஸ் ஒன்றும் டிக்கோயா பிரதேசத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 
 
இந்த இரு பஸ்களிலும் பயணித்த 33 பேர் படுங்காயத்திற்குள்ளான நிலையில் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இரு பஸ் சாரதிகளும் வேகமாக பஸ்சை செலுத்தியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 
 
இச்சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 
 

கஹடோவிட ஒகோடபுலயில் உள்ள இளைஞர்களுக்கு மைதானம் ஒன்று பெற்றுதறுவதாக உறுதியளித்தார்; ஷாபி ரஹீம்

கம்பஹா மாவட்டமுன்னால் மேல்மாகாண சபை உறுப்பினரும் தற்போது வேட்பாளர்கவும் கௌரவ ஷாபி ரஹீம் அவர்கள் அத்தனகல்ல பிரதேசத்தில் கஹடோவிட ஒகோடபுலயில் உள்ள இளைஞர்களுக்கு மைதானம் ஒன்று இல்லாதனால் சுற்றி காட்டப்பட்டு மைதானம் ஒன்று பெற்றுகொடுப்பதற்கு கலந்துறையாடி அதை தீர்த்து வைத்து மைதானம் ஒன்று பெற்றுத்தருவதாகவும் அதற்கு தேவையான பணத்தை பெற்றுதறுவதாக உறுதியளித்தார் (2014.02.23)

அதன்போது கம்பஹா மாவட்டமுன்னால் மேல்மாகாண சபை உறுப்பினரும் தற்போது வேட்பாளர்கவும் கௌரவ ஷாபி ரஹீம் அவர்கள் கலந்துதுரையடுவதையும் வேட்பாளரான முஸ்தாக் அவர்களும் ரிஷான்  அவர்களையும் படங்களில் காணலாம்.



இரவு நித்திரைக்குச் சென்ற இளம்யுவதி காலையில் நீலநிறமாகி சடலமாக மீட்பு


 இரவு நித்திரைக்குச் சென்ற மகள் மறுநாள் காலையில் எழும்பவில்லை. உடல் முழுவதும் நீல நிறமான நிலையில் உயிரிழந்து காணப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்தார். இச்சம்பவம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிளூரில் 27-02-2014 வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
 
புதன்கிழமை இரவு நித்திரைக்குச் சென்ற மாதுமி கங்காதரன் என்ற 22 வயது யுவதி அதிகாலை நான்கு மணியளவில் சிறுநீர் கழிப்பதற்காக வெளியில் சென்று மீண்டும் நித்திரை செய்துள்ளார். காலை ஏழு மணியாகியும் இவர் எழும்பாததால் அவரின் தாயார் அறைக்குச் சென்று பார்த்த போது அவரது உடம்பு முழுவதும் நீல நிறமாக எந்தவித உணர்வும் அற்ற நிலையில் காணப்பட்டது. உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதாரவைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போதும் மகள் இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சர் குணசிங்கம் சுகுணனிடம் கேட்டபோது ;

யுவதியைக் கொண்டு வரும் போதே அவர் உயிரிழந்து காணப்பட்டதாகவும் விசத்தினால் இம் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பிரேதப் பரிசோதனையின் பின்னே அதனை உறுதிப்படுத்திக் கூற முடியும் எனவும் தெரிவித்தார்.

இந்த யுவதிக்கு களனி பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் உயர் கல்வியைத் தொடர்வதற்காக தயாரான நிலையில் இருந்தவர் எனவும் குடும்பத்தவர் தெரிவித்தனர். சடலம் பிரேதப் பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
 
jaffnamuslim

நாட்டில் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்கட்டும் - மஹிந்த பகிரங்க சவால்


பள்ளிவாசல்களும், கத்தோலிக்க ஆலயங்களும் உடைக்கப்படுவதாக சில கட்சிகளும், சமய ரீதியான கட்சிகளும் பாரியளவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. எங்கே, எவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன..? இந்த போலி பிரச்சாரங்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்,


கம்பஹா மாவட்டத்தில் நடைபெற்ற பௌத்த சமய நிகழ்வில், பெரும் எண்ணிக்கையிலான பௌத்த பிக்குகள் பங்கேற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
 
சமயத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் இயங்கிவரும் கட்சிகள் எமது நாட்டுக்கு எதிராக சர்வதேசத்திற்கு தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளன. பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ எங்கும் உடைக்கப்படவில்லை. நாட்டில் பள்ளிவாசல்களோ அல்லது தேவாலயங்களோ உடைக்கப்பட்டிருந்தால் அதனை நிரூபிக்கட்டும்.

பள்ளிவாசலுக்கு சொந்தமில்லாத காணியில் பள்ளிவாசல் நிர்மாணிக்க முடியாது என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. வீடுகளில் பள்ளிவாசல்கள் இயங்கமுடியாது என்றும் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிவாசல்களை உடைத்தார்கள், மத ஸ்த்தலங்களை உடைத்தார்கள் என்று ஏன் பொய் சொல்கிறார்கள்..?

“இனி வாட்ஸப்ல பேசலாம்”- புதிய வசதி அறிமுகம்

நியூயார்க்: வாட்ஸ்ஆப்பில் புதிதாக பேசும் வசதி அடுத்த ஜூன் மாதம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
பிரபல மொபைல் தொழில்நுட்ப சேவையான வாட்ஸ்ஆப்பிற்கு 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் இந்தச் சேவையை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து ஏராளமான புதிய வசதிகளை வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி வருகின்றன

 அதன் ஒரு பகுதியாக வரும் ஜூன் மாதம் முதல் வாட்ஸ்ஆப் மூலம் பேசும் வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது. முதல் கட்டமாக ஆண்ட்ராய்ட், ஆப்பிள் ஐஓஎஸ் போன்களில் அறிமுகம் செய்யப்பட்டு படிப்படியாக பிளாக்பெர்ரி, நோக்கியா, மைக்ரோசாப்ட் போன்களில் அறிமுகம் செய்யப்படும்.
 
தற்போது வாட்ஸ்ஆப்பில் வாய்ஸ் மெசேஜ் வசதி உள்ளது. ஆனால், அந்த வசதி மூலம் ஒருவரின் தகவலைப் பெற்ற பின்னரே மற்றவர் தகவல் அனுப்ப முடியும். பேசிக்கொள்ள முடியாது.
 
வைபர் போன்ற தொழில்நுட்ப சேவைகள் மூலமாக பேசவும், தகவல்களை அனுப்பவும் முடியும் என்றாலும் வாட்ஸ்ஆப் சேவையே பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

அரசனைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம் அரசியல்வாதிகள்...!


வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் 'ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது மற்றொன்று' என்று கூறினார். அப்படியென்றால் பொய்யன் அல்லாது போனால் வேஷக்காரன் என்றுதானே அர்த்தப்படும் அல்லவா? விக்னேஸ்வரனுக்கு அரசியல் முதிர்ச்சி இல்லாவிட்டாலும் அநுபவ முதிர்ச்சி உண்டு. விக்னேஸ்வரன் ஜனாதிபதியை ஒரு போதும் நம்பப் போவதில்லை. இதே கடும்போக்கைக் கொண்டவர்தான் சம்பந்தனும். அவர்கள் ஜனாதிபதியை எடைபோட்ட அளவுக்கு நமது முஸ்லிம் தலைவர்கள் எடைபோடவில்லையென்பது மிகவும் கவலைக்குரிய விடயம். அதற்கு அண்மைய சம்பவம் ஒன்று கூறுகின்றேன். தெஹிவளையில் ஒரு பள்ளிவாசல் தாக்கப்பட்ட போது ஜனாதிபதியிடம் ஒரு முஸ்லிம் பிரதிநிதி முறையிட்டார். அதற்கு ஜனாதிபதி ' ஆ! அப்படியா! இது பற்றி எனக்குத் தெரியாதே! எப்போது? என்றாராம்.
 
முஸ்லிம்களின் புனிதஸ்தலம் இடிக்கப்படுகின்ற போது அல்லது தாக்கப்படும் போது அதைத் தடுக்கும் தலையாய பொறுப்பு எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளையுமே சாரும்.

இலங்கைத் தமிழர்களுக்காக தமிழ்நாடு கூக்குரல் இட்டுக்கொண்டிருக் கின்றது. 'போர்க்களத்தில் ஒரு பூ ' என்ற திரைப்படத்தை ஜெனிவாக்கும் அனுப்புவதோடு தமிழகம் மட்டுமல்லாது உலகம் பூராகவும் தோலுரித்துக் காட்டவுள்ளது.

இலங்கை முஸ்லிம்களுக்கு உள்ள கால அவகாசம் சொற்பம். எனவே ஜனாதிபதியின் பேச்சை நம்புவதா? வீதீப் போராட்டங்களில் ஈடுபடமாட் டோம் என்கின்ற பொதுப்பல சேனாவின் பொய்ப்பேச்சை நம்புவதா ? ஜெனீவா மாநாடு முடியுமட்டும் அடக்கி வாசிக்கும் சிங்கள ராவையை நம்புவதா ? நித்திரையில் ஆழ்ந்திருக்கும் ஹெல உறுமையை நம்புவதா என்ற முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
 
ஏனெனில் முஸ்லிம் நாடுகளை இலங்கைக்கு எதிராக? அல்லது சார்பாக வாக்களிக்குமாறு வற்புறுத்துவதற்காகவேயன்றி வேறெதற்கும் அல்ல. ஐ.நா ஆணையாளர் நவநீதம் பிள்ளையுடன் கை கோர்ப்பதா இல்லையா என்ற முடிவை எட்டுவதற்கும் முழு முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து தீவிர முடிவெடுங்கள்..!
 
(றிசானா பசீர்)

சிங்கள ராவைய அமைப்புக்கு எதிராக பொலிசில் முறைப்பாடு

கடும்போக்கு சிங்கள ராவைய அமைப்புக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எல்.எம் .ஹனீபா மதனி அவர்களினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது  .
அக்கரைப்பற்று போலிஸ்  நிலையத்தில் அவரினால் செய்யபட்டுள்ள முறைப்பாட்டில்  சிறுபான்மை முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராக சிங்கள ராவைய அமைப்பின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிசாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
சிங்கள ராவய அமைப்புக்கு எதிராக, ஹனீபா மதனி பதிவு செய்துள்ள முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவதுள,
கடந்த 17 மற்றும் 19 பெப்ரவரி 2014 ஆம் திகதிகளில் வெளியான தமிழ் தினசரி பத்திரிகையில் இரண்டு செய்திகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன.மேற்படி செய்திகளின்படி, நாட்டில் மாடறுப்பினை அரசாங்கம் உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்றும், அப்படி தடை செய்யாது விட்டால், சிங்கள ராவய எனும் அமைப்பிலுள்ளவர்கள் தமக்குத் தாமே தீவைத்து தற்கொலை செய்து கொள்வார்கள் எனவும் அந்த அமைப்பினர் தெரிவித்திருந்தனர். மேலும், இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்தினை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எனவும் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ண என்பவர் கூறியிருந்தார்.
இந்தச் செய்திகளிலுள்ள விபரங்களை உள்ளடக்கி, மேலும் பல தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
சிங்கள ராவய எனும் அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன என்பவர், குறித்த கூற்றினூடாக, நமது நாட்டின் நடைமுறையிலுள்ள இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகளான 291 (ஆ), 300, 301, 485 ஆகியவற்றின் படி குற்றங்களைப் புரிந்துள்ளார்.
இதேவேளை, சிங்கள ராவய அமைப்பினர் ஆர்ப்பாட்டங்கள் எவற்றிலும் ஈடுபடுதல் கூடாது என்று, கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் கௌரவ ஜிஹான் பலப்பிட்டிய கடந்த 30 ஜனவரி 2014 ஆம் திகதி உத்தரவொன்றினை வழங்கியிருந்தார். ஆயினும், மேற்படி நீதிமன்ற உத்தரவினையும் மீறி, சிங்கள ராவய அமைப்பினர் கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும், சத்தியாக்கிரக நடவடிக்கைகளிலும், மோதல்களிலும் ஈடுபட்டிருந்தனர்.
சிங்கள ராவய அமைப்பின் இந்த நடவடிக்கைகள், நமது நாட்டின் மதிப்புக்குரிய நீதித்துறையினை அவமதிக்கும் செயற்பாடுகளாகும்.
மேலும், அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், முஸ்லிம் சமூகத்தினரின் சமய உணர்வுகளை பாதிக்க வேண்டும் என்ற திட்டமான கெடு நோக்கத்தினையுடைய கருத்துடனும், சமய நம்பிக்கைகளை நிந்தனை செய்ய எத்தனிப்பதுடன், அச்சத்தையும் மனக் கிலேசத்தினையும் ஏற்படுத்தி, சர்வதேச சட்டமான வாழு – வாழ விடு என்பதையும் மீறும் வகையில் சிங்கள ராவய எனும் அமைப்பு அண்மைக் காலமாக நடந்து வருகிறது. இவையனைத்தும் சட்டத்தின்படி குற்றச் செயல்களாகும்.
எம்.அம்றித்: 

முஸ்லிம் காங்கிரஸ் கம்பஹாவில் வேட்பு மனு தாக்கல்



மேல் மாகாண சபை தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை முஸ்லிம் காங்கிரஸ் இன்று திங்கட்கிழமை தாக்கல் செய்தது.
முஸ்லிம் காங்கிரஸின் கம்பஹா மாவட்ட முதன்மை வேட்பாளரும் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஷாபி ரஹீம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். கம்பஹா மாவட்ட செயலகத்தில் வேட்பு மனு தமாக்கல் இடம்பெற்றது.

இதன் போது, நீர்கொழும்பு மாநகர சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினரும் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ஹீஸான் மற்றும் வேட்பாளர் ஸஹ்ரான் ஆகியோரும் உடன் சமூகமளித்தனர்.

Where is the Olympics’ 5th Ring? (ரஷ்யாவின் சோச்சியில் நிகழ்ந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில்)



ரஷ்யாவின் சோச்சியில் நிகழ்ந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் 5 ஒலிம்பிக் வளையங்களில் நான்கு மட்டுமே தென்பட்டது பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
ரஷ்யாவின் 22வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன்தினம் நிறைவிற்கு வந்தது.



இந்நிலையில் வானவேடிக்கைகளுடன் நடந்த நிறைவு விழாவின் போது, சுவிசின் பனிச்சறுக்கு வீராங்கனை பாட்ரிசியா கும்மர் தங்கள் நாட்டின் கொடியை ஏந்தியவாறு நடந்து வந்தார்.

அப்போது நேர்ந்த மின்னணு கோளாரின் காரணமாக 5 வளையங்களுடன் தோற்றமளிக்கும் ஒலிம்பிக் சின்னம் 4 வளையங்களை மட்டுமே கொண்டு தோன்றியது.
இதனை 40,000 பார்வையாளர்கள் கண்டதுடன் ”மற்றொரு வளையம் எங்கே” என மிக கிண்டாலாக விமர்சிக்க தொடங்கினர்.

மேலும் இச்சம்பவம் ரஷ்ய ஜனாதிபதி புட்டினையும் பெரும் சிரிப்பினில் ஆழ்த்தியது.

வானையைய்ச் சேர்ந்த முஹம்மத் உஸ்மான் நானா அவர்கள் காலமானார்.



கஹடோவிட வானையைச்  சேர்ந்த  முஹம்மத் உஸ்மான் நானா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ரஜிஊன். 

அன்னார் சகோதரி பாதினாச்சி, காலம் சென்ற தாஹா ஆகியோரின் அன்புப் புதல்வரும், நூமான், ஹுசைன், அல்ஹாஜ் அலவி, அல்ஹாஜ் இஸ்மாயல் (ஸஸி கோலட் ஹொவுஸ்) ஆகியோரின் சகோதரரும், ரிப்கான் (குவைட்), சியாம் (ஸஸி கோலட் ஹொவுஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவர். 

அனனாரின் ஜனாஸா நாளை ( 25.02.2014) காலை 9.00 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

அசைக்க முடியாத ‘வட்ஸ்அப்’: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய 5 அம்சங்கள்…!

-

லண்டன்: கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் கோடி அளவுக்கு பேஸ்புக்கால் விலைக்கு வாங்கப்பட்டுள்ள ‘வட்ஸ்அப்’ நிறுவனத்தின் சுவாரஸ்யமான பக்கங்கள் குறித்த செய்திகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. உலக மகா விற்பனை நடந்து சில நாட்களுக்குள்ளாகவே ‘வட்ஸ்அப்’ சேவை திடீரென உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு அந்த நிறுவனத்தை நெளிய வைத்த போதிலும் கூட ‘வட்ஸ்அப்’ இன்னும் ஸ்திரமாகத்தான் இருக்கிறது.
இங்கு ‘வட்ஸ்அப்’ நிறுவனத்தின் ஐந்து முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்…
’வட்ஸ்அப்’ நிறுவனத்தை இந்தக் கணக்கின் அடிப்படையில்தான் தற்போது பேஸ்புக் வாங்கியு்ளது. அதாவது ரொக்கமாக ரூ. 24 ஆயிரத்து 852 கோடி கொடுக்கிறது.

பங்குகளாக ரூ. 74 ஆயிரத்து 556 கோடியைக் கொடுக்கிறது. இது போக ஊழியர்களிடம் ரூ. 18,639 கோடி மதிப்பிலான பங்குகளைக் கொடுக்கிறது. இப்படித்தான் மொத்த வியாபாரத்தையும் அது முடித்துள்ளது.

’வட்ஸ்அப்’பை உலகம் முழுவதும் 450 மில்லியன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகிறார்கள். டிவிட்டரை 250 மில்லியன் பேர் பயன்படுத்துகிறார்கள். பேஸ்புக்கை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1.2 பில்லியன் பேர் ஆவர்.
450 மில்லியன் பேர் ’வட்ஸ்அப்’பை பயன்படுத்தினாலும் அதன் அலுவலக ஊழியர்களின் பலம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 55 பேர்தானாம். டிவிட்டரில் 2300 பேர் பணியாற்றுகிறார்கள். பேஸ்புக்கில் 6337 பேர் உள்ளனர்.
இதற்கு முன்பு பேஸ்புக் நிறுவனம் 2012ம் ஆண்டு இன்ஸ்டாகிராமை 1 பில்லியன் டொலருக்கு வாங்கியது. அதே போல மைக்ரோசாப்ட் நிறுவனம் ஸ்கைப்பை 8.5 பில்லியன் டொலருக்கு வாங்கியதே பெரிய வர்த்தகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

‘வட்ஸ்அப்’ மூலம் ஒரு நாளைக்கு 50 பில்லின் மெசேஜ்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றனவாம். அதேபோல 600 மில்லியன் போட்டோக்களை அனுப்புகிறார்கள். 100 மில்லியன் வீடியோக்ள் போய்க் கொண்டுள்ளன.
இது போக ஒரு நாளைக்கு தோராயமாக 10 லட்சம் பேர் இதில் இணைந்தபடி உள்ளனர் என்பதும் அசைக்க முடியாத உண்மை!
(விலை மதிப்பு இந்திய ரூபாய்களில்)

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை படத்துடன் சுருக்கமாகத் தருகிறேன்.

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை படத்துடன் சுருக்கமாகத் தருகிறேன். சகோஸ் எந்த கண்ணோட்டத்தில் இதனை நோக்குகிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாயுள்ளேன்.

செய்தி.

"இலங்கையில், முஸ்லிம்கள் மாடு அறுப்பதைத் தடுக்கக் கோரி, 'சிங்கள் ராவய' எனும் பௌத்த கடும் போக்கு அமைப்பினர் கடந்த 18.02.2014 செவ்வாய்க்க்ழமை, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்த பெறுமதியான வீடியோ கமரா மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் இன்று வரை யாரும் கைது செய்யப்படவில்லை."

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு நிகழ்வினை படத்துடன் சுருக்கமாகத் தருகிறேன்.

செய்தி.

"இலங்கையில், முஸ்லிம்கள் மாடு அறுப்பதைத் தடுக்கக் கோரி, 'சிங்கள் ராவய' எனும் பௌத்த கடும் போக்கு அமைப்பினர் கடந்த 18.02.2014 செவ்வாய்க்க்ழமை, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின் போது, செய்தி சேகரிக்கச் சென்ற இரண்டு முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதுடன், அவர்களிடமிருந்த பெறுமதியான வீடியோ கமரா மற்றும் கைத்தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த விடயம் தொடர்பில் இன்று வரை யாரும் கைது செய்யப்படவில்லை."

Rajab Sali

அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் பூரண விசுவாசமாக இருந்தும் முஸ்லிம்களின் 27 பள்ளிகளுக்கு மேல் தாக்கப்பட்டுள்ளன.





வெளிநாட்டு தலையீடு என்பது இனங்களுக்கிடையிலான விரிசலை மேலும் அதிகரிக்கும் என கூறிக்கொண்டே இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை தாமும் சர்வதேசத்தின் முன் வைப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கூறுவது முரண்பாடானதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

இதுவிடயமாக அவர் மேலும் தெரிவித்ததாவது,

அண்மையில் இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய தலைவியை சந்தித்த போது வெளிநாட்டு தலையீடு பிரச்சினையை அதிகரிக்கும் என ஹக்கீம் கூறியுள்ளார். அதே வேளை தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினரின் கருத்துக்கு பதில் தரும் போது முஸ்லிம் சமூகம் அண்மைக்காலமாக எதிர் நோக்கும் தாக்குதல்கள் பற்றிய விபரங்களை தமது கட்சியும் சர்வதேசத்திடம் முன்வைத்துள்ளதாக பகிரங்கமாக கூறியிருந்தார்.

    இத்தகைய இரண்டு முரண்பட்ட கருத்துக்கள் மூலம் ரஊப் ஹக்கீம், அரசாங்கத்தையும் முஸ்லிம்களையும் சமாளித்துக்கொண்டு தமது பதவியை காக்க முற்படுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
    இன்று தமிழ் மக்கள் தமக்கான தீர்வை இந்த நாட்டில் பெறமுடியாது என்பதை உணர்ந்த பின்னரே தமது பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன் கொண்டு வந்துள்ளனர். இந்த நிலையில் அரசாங்கத்துக்கு முஸ்லிம்கள் பூரண விசுவாசமாக இருந்தும் முஸ்லிம்களின் 27 பள்ளிகளுக்கு மேல் தாக்கப்பட்டுள்ளன. ஹலால் சான்றிதழ் நிறுத்தப்பட்டது. பள்ளிவாயல் கட்டுவதாயின் புத்த சாசன அமைச்சின் கால்களில் விழ வேண்டுமென்று சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அடையாள அட்டையில் முஸ்லிம்கள் தமது காலாசார ஆடைகளை அணிய முடியாது எனும் சட்டம் என பல அநியியாங்களை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் போது முஸ்லிம் கட்சித்தலைவர்களும், அவர்களின் உறுப்பினர்களும் இவை எதனையும் தடுத்து நிறுத்த முடியாத கையாலாகாதவர்களாய் இருந்து கொண்டு தமது பதவிகளை காப்பதற்காக சர்வதேசத்தை நாம் நாட முடியாது என புத்திமதி கூறிக்கொண்டிருப்பது அப்பட்டமான சுயநலனாகும்.

    ஒரு சமூகம் உள்நாட்டில் பிரச்சினைகளை எதிர் நோக்கும் போது உள்நாட்டில் அதற்கான தீர்வை தேடும். ஆனால் பிரச்சினையை ஏற்படுத்துபவர்களே ஆட்சியாளர்களாக இருந்தால் எங்கே போய் தீர்வைத் தேடுவது என்று கூட புரியாதவர்களாய் நமது முஸ்லிம் அமைச்சர்கள் ஜால்ரா அடித்துக்கொண்டிருப்பது இருப்பது சமூகத்தின் மிகக்கேவலமான நிலையாகும்.

    ஆகவே முஸ்லிம் அமைச்சர்களின் தலைமைகளிலான கட்சிகள் முஸ்லிம்கள் பிரச்சினைகளை தீர்க்க  சர்வதேசத்தை நாடாத போதும் தமிழ் மக்கள் தமக்கான வெளிநாட்டு தீர்வை எதிர் பார்ப்பதை தயவு செய்து அரச கடைக்கண் பார்வைக்காக கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

எஸ்.அஷ்ரப்கான்.

பொது பல சேனாவில் குழப்பம் - ஞானசார தேரர் பணத்திற்காக செயற்படுகிறார்..!



சிங்கள பௌத்த இயக்கமான பொதுபல சேனா இயக்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த இயக்கத்தைச் சேர்ந்த சிலரது உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இயக்கத்தின் நோக்கங்களுக்கு புறம்பான வகையில் செயற்பட்ட எட்டு பௌத்த பிக்குகள் இவ்வாறு உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


இவ்வாறு நீக்கப்பட்ட எட்டு பௌத்த பிக்குகளும் காவி உடையை துறக்கப் போவதாக எச்சரித்துள்ளனர். தமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால், காவி உடையை துறக்கப் போவதாக தெரிவித்துள்னர். மேலும், காவி உடையைத் துறந்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக குறித்த எட்டு பௌத்த பிக்குகளும் தெரிவித்துள்ளனர்.

இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர், தனிப்பட்ட குரோதம் காரணமாக தம்மை பழிவாங்கி வருவதாக உறுப்புரிமை நீக்கப்பட்ட பௌத்த பிக்குகள் குற்றம் சுமத்தியுள்ளனர். எந்தவொரு விஹாரையிலும் தமக்கு தங்க இடம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

கலபொடத்தே ஞானசார தேரர் பணத்திற்காக இவ்வாறன செயல்களில் ஈடுபடுகின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என பாதிக்கப்பட்டதாக மெலவ்வே கல்யானதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.

Jaffna Muslim

பூமியை தாக்க வரும் ராட்சத விண்கல்

விண்வெளியில் ஏராளமான விண்கற்கள் உள்ளன. புவி ஈர்ப்பு விசை இல்லாததால் விண்வெளியில் மிதக்கின்றன. அவற்றில் சில காற்று மண்டலத்துக்குள் புகுந்தவுடன் புவி ஈர்ப்பு விசை காரணமாக பூமியில் விழுகின்றன. இவ்வாறு விழும் பெரும்பாலானவை எரிந்து சாம்பலாகிவிடும். ஒரு சில கல் பூமியில் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இது போன்ற ஒரு பெரிய விண்கல் கடந்த ஆண்டு ரஷியாவில் விழுந்தது. அதில் 1200 பேர் காயம் அடைந்தனர்.

Asteroid as big as 3 soccer fields gives Earth a scare

இது போன்ற மற்றொரு ராட்சத கல் தற்போது பூமியை நோக்கி பாய்ந்து வருகிறது. இது 3 கால்பந்து மைதானம் அளவு பெரியது. அது மணிக்கு 43 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பறந்து வருகிறது. இதற்கு 2000 இ.எம்.26 என பெயரிட்டுள்ளனர். இது பூமிக்கு அருகே வந்து கொண்டிருக்கிறது. இந்த விண்கல் வருகிற திங்கட்கிழமை (24–ந் தேதி) பூமியை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘‘ரொபோடிக் டெலஸ்கோப்’’ மூலம் இந்த விண்கல்லை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர். இத்தகவல் ஸ்தூக் டாட் காம் என்ற இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

8 மாணவிகள் துஷ்பிரயோகம்: உப-ஆசிரியர் கைது



கஹட்டகஸ்திகிலிய பகுதியிலுள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளில் 8 பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் உப-ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பாடசாலையில் கற்பித்த உப- ஆசிரியர் கடந்த பல மாதங்களாக இந்த 8 மாணவிகளையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் என்று தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரான உப-ஆசிரியர் அந்த பிரதேசத்திலேயே வேறு ஒரு பாடசாலைக்கு மாற்றம் பெற்று சென்றிருந்த நிலையிலேயே அவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

500 ரூபா குறித்து அவதானமாக இருக்கவும்: பொலிஸ்



x/25 524376 என்ற இலக்கம் கொண்ட 500 ரூபா நாணயத்தாள்கள் குறித்து அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பு குற்றப்பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு தேடுதலின் போது 2 இலட்சத்து 65 ஆயிரம் பெறுமதியான 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 530 ஐ வைத்திருந்த ஒருவரை பியகம பிரதேசத்தில் வைத்து கைது செய்தததாக பொலிஸார் அறிவித்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது 500 ரூபா போலி நாணயத்தாள்கள் 1800 அச்சடிக்கப்பட்டுள்ளதாவும் அதன் பெறுமதி 9 இலட்சம் ரூபா என்றும் தெரியவந்துள்ளது.

அவ்வாறான நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டமையால் மக்கள் அவதானமாக இருக்குமாறு தங்களுடைய கைகளுக்கு வரும் 500 ரூபா தாள்கள் போலியானதாக இருப்பின் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

சேனாவின் அச்சுறுத்தலால் பிக்கு தலைமறைவு, அப்போது சிறுபான்மையினரின் நிலைமை என்ன?: அஸாத் சாலி

பொதுபலசேனாவின் அச்சுறுத்தல் காரணமாக மஹிங்கனை விகாரையின் பிரதம தேரர் வடரேக விஜித தேரர் இன்னமும் தலைமறைவான நிலையிலேயே காணப்படுகிறார். இந்நிலையில் பௌத்த நாட்டின் பிக்கு ஒருவருக்கு இந்நிலைமையென்றால் நாட்டின் சிறுப்பான்மையினத்தவரின் நிலைமை என்னவாக இருக்கும் என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி கேள்வியெழுப்பினார்.
இதேவேளை ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரை விடுதலை செய்து இந்தியா நீதியை நிலைநாட்டியதுடன் ஜனநாயகத்தை பாதுகாத்திருக்கும் அதேவேளை ஜனநாயக சோசலிச நாடு என்று கூறும் இலங்கையில் ஜனநாயகமும் இல்லை எனவும் அவர் தேசிய குற்றம் சுமத்தினார்.
அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
மஹியங்கனை மகாவலி மகா விகாரையின் பிரதம தேரரும் பிரதேச சபை உறுப்பினருமான வடரேக விஜித தேரர் தலை மறைவாகியுள்ளார். பொதுபலசேனாவின் நடவடிக்கை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடமே பொலிஸிலும் முறைப்பாடு செய்த போதும் பொதுபலசேனாவின் முறைப்பாடு என்பதினால் அம்முறைப்பாட்டினை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரட்னவிடம் எடுத்துரைத்த போது இது தொடர்பில் அமைச்சர் பொலிஸ் மா அதிபரிடம் கூறிய வேளையிலேயே குறித்த முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
ஆகவே ஆளும் கட்சியினரை சார்ந்தவர் மாத்திரமின்றி இப்பௌத்த நாட்டின் ஒரு பௌத்த பிக்குவின் நிலைமை இவ்வாறு காணப்படுகின்றது. அத்தோடு பொதுபலசேனாவின் அச்சுறுத்தல் காரணமாக குறித்த தேரரும் இன்னமும் தலை மறைவாகியுள்ள நிலையில் அவர் பிரதேச சபைக்கு செல்லவுமில்லை. எனவே ஒரு பிக்குவுக்கே இவ்வாறான நிலைமையெனில் இந்நாட்டின் சிறுபான்மையினரின் நிலைமை கேள்விக்குறியாகவே உள்ளது.
அத்துடன் குழந்தைகளுக்கு பால் மாவினை கூட உரிய விலையில் வழங்க முடியாத அரசாங்கம் பால்மா விலையேற்றம் மற்றும் தட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் அவதியுறுகின்றனர். இருப்பினும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ 21 கெண்டயினர் தம்மிடம் இருப்பதாக தம்பட்டம் அடிக்கின்றார்.
அது மாத்திரமின்றி 13 ஆம் திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் உதய கம்பன்பில கடந்த மேல் மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராக கடமையாற்றினார். அது போலவே இம்முறையும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடிய பின்பு தனது மனைவியை பிரத்தியேக செயலாளராக பதவியில் அமர்த்தவுள்ளார்.
இதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரை இந்தியா விடுதலை செய்து நீதியை நிலைநாட்டி ஜனநாயகத்தை பாதுகாத்துள்ளது. ஆனால் ஜனநாயக சோசலிஷ நாடு என்று கூறும் இலங்கையில் ஜனநாயகமுமில்லை சோசலிஷமுமில்லாத நிலையே காணப்படுகிறது.
அத்துடன் ஜனாதிபதி மஹிந்தவை மின் கதிரையில் அமர்த்த போவதாக கூறி வாக்கு வங்கிகளை அதிகரிப்பது முற்றிலும் தவறானது.
எனவே பைத்தியக்காரர்களை கொண்ட அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும் என்றார்.
 
Tamilmirror

'மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே' - ஹங்கேரி அரசியல்வாதி புகழாரம்


துருக்கி நாட்டில் பிரயாணம் செய்த ஹங்கேரியிலுள்ள ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதி கேபர் வோனா, "மனிதாபிமானத்தின் இறுதி நம்பிக்கை இஸ்லாம் மட்டுமே" என இஸ்லாமிய மதத்தைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஹங்கேரியின் பிரபரல அரசியல்வாதிகளுள் ஒருவர் கேபர் ஓனா. இவர் ஜோப்பிகா பகுதியின் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அரசுமுறை பயணமாக துருக்கி செல்ல நேர்ந்தது. இஸ்லாமிய மதத்தின்மீது வெறுப்புகொண்டிருந்த ஓனா, துருக்கி செல்வதற்கு விரும்பவில்லை. எனினும் அரசியல் நிர்பந்தம் காரணமாக வேண்டா வெறுப்பாக துருக்கி சென்றார்.

ஆனால், துருக்கி நாட்டையும் அங்குள்ள பல்கலை கழகங்களையும் சுற்றுப்பார்த்த வோனா அதுவரை தாம் கொண்டிருந்த நிலைபாடுகளுக்கு மாற்றமாக பத்திரிகையாளர்களிடம் முஸ்லிம்களைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

அவர் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, " நான் துருக்கியுடன் நட்புறவு வைக்கவோ அல்லது பொருளாதார ஒப்பந்தம் செய்யவோ இங்கு வரவில்லை. ஆனால் இங்கு வந்து இங்குள்ள மக்களைப் பார்த்த பிறகு, மேற்குலகம் இவர்களைப் பற்றி கூறிய அனைத்தும் பொய்யாக இருப்பதைக் கண்டுகொண்டேன். இனிமேல் துருக்கி மற்றும் துரானியன் மக்களான Azerbaijanis மக்களை பற்றி மேற்குலகம் அவதூறு பேசுவதை என்னால் ஏற்க முடியாது.

சகோதரத்துவம், குடும்ப அமைப்புகள், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் காக்கும் பண்பு, நாட்டுப் பற்று போன்ற பல அம்சங்களை அந்த மக்களிடம் நான் கண்டேன். துருக்கி மக்களை எடுத்துகாட்டாக எடுத்து கொண்டு ஹங்கேரி மக்கள் வாழ வேண்டும் என ஆசை படுகிறேன்."

என்று கூறினார்.

இது மட்டுமன்றி தன்னுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில்,

"உலகத்தில் இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆப்ரிக்காவிற்கு இன்றைய காலத்தில் அதிகாரம் இல்லை. ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்காவின் சூழ்ச்சிகளால் மிகவும் நெருக்கடியான நிலையில் இன்று அந்த மக்கள் தம் அடையாளங்களைத் தொலைத்து வருகிறார்கள்.

நான் கண்டவரை தனது கலாச்சாரத்தை, பண்பாட்டைத் தொலைக்காமல் கையில் ஏந்தி வரும் ஒரே சமூகம் இஸ்லாமிய சமூகம் மட்டும்தான். இனிமேல் எனது வாழ்வை இஸ்லாமின் வழிகாட்டலின் படி வாழும் முஸ்லிம்களைப் போல் அமைத்து கொள்ள ஆசைபடுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஓனாவின் இத்திடீர் மாற்றம் ஹங்கேரி அரசியலில் புயலைக் கிளப்பிவருகிறது.

- தானிஷ், சவூதி
Jaffnamuslim 

தீக்குளிக்க முற்பட பெளத்த பிக்குவுக்கு விளக்கமறியல் . வன்முறையில் ஈடுபடும் காட்சி

for
 
பெட்டாவில் மாடு அறுப்புக்கு எதிராக நேற்று சிங்கள ராவயவின் ஆர்ப்பாட்டத்தில் இடம்பெற்ற அசாதாரண நிலையில் பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளிக்க முற்பட்டபோது பொலிசாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் Video மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .
வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று நீதிமன்றில் ஆஜரான குறித்த பெளத்த பிக்குவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது .
 
கடும்போக்கு சிங்கள ராவய அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்தன தேரர் நேற்று தெரிவித்த கருத்துக்கள் :
 
அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் எம்மை ஏமாற்றிவிட்டது. எமது கோரிக்கைகள் ஜனாதிபதிக்கு நகைச்சுவையாக மாறிவிட்டது. நாம் குறிப்பிடுவது இந்த நாட்டின் பாரம்பரியத்தினை காப்பாற்றும் விடயம். இன்று நாட்டில் முஸ்லிம் தீவிரவாதிகள் பௌத்த கொள்கையினையும், நாட்டின் தொண்மையினையும் அளிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் கவனம் செலுத்தாதுள்ளது. நாட்டில் தமிழர் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும்போது சர்வதேச அளவில் குறள் கொடுக்கின்றனர். முஸ்லிம்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகள் குறள் கொடுக்கின்றது. ஆனால் சிங்களவர்களுக்கு ஒன்றென்றால் யாரும் வருவதில்லை. அரசாங்கம் கூட எமக்காக குறள் கொடுக்க முன்வரவில்லை.

இந்நாட்டு பௌத்தர்களை யார் காப்பாற்றுவது. எமக்காக யார் குறள் கொடுப்பது. எமத இனம் இன்று எவராலும் மதிக்கப்படாத இனமாக மாறிவிட்டது. சிங்கள அரசாங்கம் கூட சிங்களவர்களை கவனத்திற் கொள்ளவில்லை. இன்று நாம் விடுத்துள்ள கோரிக்கைக்கு காதல் கடிதம் எழுதுவதுபோல் அரசாங்கம் பதில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் பொருப்பில்லாது செயற்படுமாயின் உடனடியாக ஆட்சியினை விட்டுவிட்டு பௌத்தத்தினை நேசிக்கும் நபருக்கு ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும்.
இன்று எமக்கான தீர்வு கிடைக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது. எமக்கு இன்று ஒரு தீர்வு இல்லையேல் நாம் எமது உயிர்களை பௌத்தத்திற்காக தியகம் செய்வோம். இவ்விடத்திலே தீக்குளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்

lankamuslim.org

வைத்தியசாலையின் தொழுகை அறையை சிரேஸ்ட அமைச்சர் பௌசி திறக்கும்போது: படம்

 கடந்த வாரம் புதன்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 41ஆம் வார்டில் தேசிய வைத்தியசாலையின் முஸ்லிம் மஜ்லிசின் ஆதரவில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி திறந்து படம் வைத்த தொழுகை அறைக்கான பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்வதையும் அருகில் வைத்திய கலாநிதி றிஸ்வி சரிபையும் காணலாம்.
இவ் தொழுகை அறை அன்று இரவே தேசிய வைத்தியசாலைக்குள் இருக்கும் பௌத்த மதகுவாழும் அவரின் ஆதரவாளர்களினாலும் மூடப்பட்டுள்ளது. அதன் பின்னர் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி தொழுகை அறையை மீண்டும் திறக்க வைத்திய சாலையின் அதிகாரிகளுடன் பேசிய போதும் இன்று வரை மீண்டும் திறக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
fowzi open

'பேஸ்புக்கில் இணைந்ததால் சிரியாவில் பெண் கல்லால் அடித்துகொலை' என்பது சுத்தப் பொய்..!


மேற்படி தலைப்பில் ஒரு தகவல் பேஸ்புக்கிலும் இணையத்தளங்களிலும் மிக வேகமாக பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதனை சில இணையத்தளங்களும், முகநூல் குழுமங்களும் எவ்வித ஆதாரமும் இன்றி, கொஞ்சமும் ஆராயாமல் வெளியிட்டு வருகின்றன.

சிரியா இஸ்லாமிய முஜாஹிடீன்களையும், இஸ்லாமிய போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாக மேற்படி தகவல் ஷீஆ ஆதரவு ஊடகங்களால் உருவாக்கப் பட்டு பரப்பப் பட்டு வருகின்றது. அதன் உண்மை தன்மையை அறியாமல், ஆராயாமல் பல்வேறு தரப்புக்களாலும், தனிநபர்களாலும் மீண்டும் மீண்டும் பரப்பப்பட்டுக்கொண்டிருக்கிறது.

அந்தத்தகவல் முற்றிலும் பொய்யானதாகும்! எவ்வித ஆதாரமுமற்றதாகும்!!!

இன்று சிரியா நாடு இருக்கும் நிலையில், பெரும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கவே நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில், எவ்வித அரச நிறுவனங்களும் ஒழுங்காக செயல்படாத நிலையில், இது போன்ற விடயங்களை விசாரிக்க எவ்வித நீதிமன்றகளும் இல்லை. சிரியாவில் பாடசாலைகளே ஒழுங்காக செயல்படுவதில்லை.

மேலும், பேஸ்புக்கில் இணைவது என்பதற்கு எதிராக எவ்வித இஸ்லாமிய சட்டங்களும் இல்லை, அதற்காக தண்டனை வழங்கவும் முடியாது.

மேற்படி போலியான தகவலுக்காக இணைத்து வெளியிடப்பட்ட புகைப் படத்தினைக்கொண்டே அது எவ்வளவு தூரம் போலியானது என்பதனை புரிந்து கொள்ளலாம்.

உண்மையில் அந்தப் புகைப்படம், ஒரு பெண்ணை கல்லால் அடித்து கொல்வது போன்ற காட்சி ஆகும், இது ஒரு சினிமா படத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். அந்தப் படத்தின் பெயர் "The Stoning of Soraya M". அந்தக் காட்சியில் நடித்தவர் Mozhan Marno என்ற ஈரானிய நடிகை ஆவார்.

2010 ஆம் ஆண்டு சைரஸ் நவ்ரஸ்தேஹ் என்பவரால் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட அந்த திரைப் படத்தில் ஈரானில் உள்ள ஒரு கிராமத்தில் மேற்படி கதை நடப்பதாக ஒரு காட்சி அமைத்திருந்தார்கள். அப்போது அந்தப் படம் ஈரானில் தடை செய்யப்பட்டு இருந்தது.

மேற்படி திரைப்படம் குறித்த மேலதிக தகவல்களை இந்த இணைப்பில் சென்று விக்கிபீடியாவில் பார்வையிடலாம்.
http://en.wikipedia.org/wiki/The_Stoning_of_Soraya_M.

பொய்களை பரப்புவதனை தவிர்ப்பதுடன், மேற்படி செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுவோம். மேற்படி பிழையான செய்தியை பகிரும் இடங்களில், இதனை Copy & Paste செய்வோம்.

மீடியாக்களில் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் ஒரு இனப்படுகொலை

 
Central African Republic (CAR) என்று அழைக்கப்படும் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று. சூடான் மற்றும் சாட் ஆகியவற்றை எல்லைகளாக கொண்ட நாடு.பிரஞ்சு காலனி ஆதிக்கத...்தில் இருந்து 1960 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றது... கிடத்தட்ட 50 இலட்சம் மக்களை தொகையை கொண்ட நாடு.. இந்நாட்டில் 80% மக்கள் கிறிஸ்துவர்கள்.15% மக்கள் முஸ்லிம்கள்..

கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கிய முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலையை anti-Balaka என்ற கிறித்துவ பயங்கரவாத குழு துவங்கி இன்றுவரை லட்சக்கணக்கான மக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டுவிட்டு அகதிகளாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.. ஆயிரக்கணகான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்..

Amnesty International அறிக்கையின் படி முஸ்லிம்கள் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்..மேலும் முஸ்லிம்கள் தங்களின் இருப்பிடங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.. நூற்றுக்கனகான முஸ்லிம்களை வெளியேற விடாமல் கிறிஸ்துவ தீவிரவாத குழுக்கள் கொன்று குவித்துள்ளதாகவும் , தீயிட்டு கொளுத்துவதாகவும் , தன்னார்வு குழுக்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்யவிடாமல் தடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்..மேலும் இந்த படுகொலைகளை ஒடுக்க பிரஞ்சு ராணுவம் தங்களது 5000 படைகளை அனுப்பியுள்ளது..ஆனால் இந்த படைகளும் கூட வெறும் 50 மீட்டர் தூரத்தில் நடத்தப்பட்ட படுகொலைகளை கூட தடுப்பதாக இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் பல நாட்டு தன்னார்வு குழுக்கள் தங்களின் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன..மேலும் ஐநா சபை பிரஞ்சு அரசு மேலும் ராணுவத்தை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது ..

இந்த படுகொலை குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டின் பெண் அதிபர் Catherine Samba-Panza கிறித்துவ தீவிரவாத குழுக்களுக்கு எதிரான போர் துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.மேலும் இந்நாட்டின் பூர்வீக குடிமக்களான முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட இன அழிப்பை கிறிஸ்துவ தீவிரவாத குழுக்கள் அரங்கேற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்....மேலும் அவர் கூறுகையில் தன்னை ஒரு பெண் என்பதால் பலகீனமானவராக நினைத்து வருகின்றனர்..ஆனால் தற்பொழுது அவர்களாகவே தங்கள் அழிவை தேடுகின்றனர் என்று அறிவித்துள்ளார்..

இதில் வேடிக்கை என்னவெனில் பல மாதமாக தொடர்சியாக முஸ்லிம்களுக்கு எதிராக நடந்து வரும் இன அழிப்பை பற்றி எந்த ஒரு ஊடகமும் செய்திகளை வெளியிடாமல் திட்டமிட்டு மறைத்து வருகின்றன.. ஒரு வேலை பாதிக்கப்பட்டுக்கொண்டிருப்பது முஸ்லிம்கள் சமூகம் தானே என்ற எண்ணமாக கூட இருக்கலாம்..எப்படி பர்மா , செஞ்சியான் , செசன்யா , பாலஸ்தீன் , ஈராக் , சிரியா , ஆப்கன் , சோமாலியா , மாலி இன்னும் பல பகுதிகளில் முஸ்லிம்கள் பாதிக்கப்படும் போது கள்ள மவ்னத்தை மட்டும் பதிலாக கொண்டு செயல்படுவார்களோ அதை போன்ற நிலை தான் இன்று CAR யிலும்..ஆனால் அதே நேரத்தில் குண்டு வெடிப்புக்களின் மூலம் அப்பாவி மக்கள் இறந்து யார் காரணம் என்றே தெரியாவிட்டாலும் கூட அந்த செய்தியை கூட பல நாட்களுக்கு முஸ்லிம் தீவிரவாதிகள் வெறிச்செயல் என்று வெளியிட மட்டும் வெக்கப்படுவதில்லை.. கேடு கெட்ட ஊடகங்கள
 

மினரல் வாட்டர் நன்மையா? தீமையா?


குடி தண்ணீரைப் பணம் கொடுத்து வாங்க வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும் என்பதை நாம் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டோம்.

அந்த காலங்களில் ஊர் தோறும் நல்ல தண்ணீர் கிணறுகள். கு...ளங்கள், நீர் தேக்கங்கள் இப்படியாக சுத்தமான குடி நீரை மக்கள் அருந்தி வந்தனர்.

இன்றோ, வீடுகள் தோறும் மினரல் வாட்டர் கேன்கள், பாக்கெட் வாட்டர், பாட்டால் வாட்டர், என்று தண்ணீரை காசு கொடுத்து வாங்கி குடிக்க வேண்டிய அவல நிலை.

தண்ணீர் மனிதர்களின் அடிப்படை ‘உரிமை’ இதை பணம் கொடுத்தால் மட்டும் கிடைக்கும் பொருளாக்கி விட்டனர் இந்த கார்பரேட் கொள்ளையர்கள். உலகம் முழுவதும் தண்ணீர் இன்று ஒரு தலை சிறந்த பிசினெஸ்.

1992ல் நடைபெற்ற சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு நீருக்குப் பொருளாதார மதிப்பு உள்ளது. எனவே இதை ஒரு வணிகப்பண்டமாகப் பாவிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்

உலகின் பல பகுதிகளில் நல்ல தண்ணீர் அதாவது குடி தண்ணீர் பற்றாக்குறை, காணப்படுகிறது. இதற்க்கு காரணம் குடிதண்ணீர் வேகமாக மாசு அடைந்து வருவதே. தொழிற்சாலைக் கழிவுகள், காடுகள் அழிப்பு, சுற்று சூழல் மாசுபடுதல் இவற்றால் நல்ல தண்ணீர் வளங்கள் அழிந்து குடி தண்ணீருக்கு பெரும் தட்டுபாடு நிலவி வருகிறது.

கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பது போல் தண்ணீரை சுத்திகரிக்க தேவையில்லை. லைப் வாட்டர், அக்வாஃபினா, பிஸ்லரி, பெய்லி, நெஸ்ட்வேயின் பவர் லைஃப், பார்லே, கேரிகோ போன்ற நிறுவனங்களின் தண்ணீரில் ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் என்ற நச்சு பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்படுகிறது. அது மட்டுமல்லாது மினரல் வாட்டர் என்கிற பெயரில் விற்கப்படும் தண்ணீர்கள் முறைப்படி சுத்திகரிக்கப்பட்டதும் அல்ல.

மேலும் இந்த தண்ணீரை அருந்துவதன் மூலம் கேன்சர் போன்ற ஆள் கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. இதனால் மக்கள் இந்த மினரல் வாட்டரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்க்கு பதிலாக தரம் வாய்ந்த பில்ட்டர்களை வாங்கி நமது கார்பரேசன் வாட்டரை பில்ட்டர் செய்து குடித்தல் அதுவே போதுமானது. அல்லது தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகம் அல்லது பெரும் சீரகம் இட்டு அருந்தலாம். சுருங்க சொன்னால் மண்பானையில் துளசி இலைகளை போட்டு தண்ணீரை தேக்கி அருந்தி வருவது மிகவும் நன்மைபயக்க கூடியது.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் குறித்து டாக்டர் புகழேந்தி கூறுகையில், 'தண்ணீர் வியாபாரத்தில் அதிகப்படியான வருவாய் கிடைப்பதால் அது தனிநபர் சொத்தாக மாறிவிட்டது. தனியார் நிறுவனங்கள் பெருமளவில் நீரை உறிஞ்சி விற்பனை செய்கின்றன. தண்ணீரில் பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகள் இருக்கக் கூடாது. குறிப்பிட்ட அளவுக்கு தாது உப்புக்கள் இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, தண்ணீர் நிறுவனங்கள் பரிசோதனை செய்யும். இந்தப் பரிசோதனை எந்த அளவுக்கு உண்மையானது என்பது மக்களுக்கு எப்படித் தெரியும்? இதை அவ்வப்போது வெளிப்படையாக மக்கள் முன்னிலையில் செய்வதன் மூலம் தான் அது பாதுகாப்பான குடிநீரா என்பது தெரியவரும்.

உலகில் 23 சதவிகித நோய்கள் நீர் மூலம் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. வயிற்றுப்போக்கு ஆரம்பித்து, ஹெபாடைடிஸ் வரையிலும் பல நோய்கள் ஏற்படுகிறது. பாதுகாப்பாக ஸ்டோரேஜ் செய்யவில்லை எனில் எலிக் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. மேலும், பல நிறுவனங்கள் சுத்திகரிப்பு ஏதும் செய்யாமல் நேரடியாக கேன்களில் நீரைப் பிடித்து விற்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை' என்றார்.

எப்படி கண்டறிவது?

பாட்டில் தண்ணீர் பாதுகாப்பானதுதானா என்பதை ஆய்வகங்களில் மட்டுமே கண்டறிய முடியும். நீங்கள் வாங்கும் கேன் தண்ணீரின் நிறம் கலங்கலாக இருந்தாலோ, சுவையில் மாறுபாடு இருந்தாலோ அது சுத்திகரிக்கப்பட்ட நீராக இருக்காது. இதுபற்றி உடனே பி.ஐ.எஸ்.-ல் (Bureau of Indian Standards-BIS)புகார் தெரிவிக்கலாம்.

உலக அளவில் குடிநீர் விற்பனை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. விரைவில் 'இது முதல் இடத்துக்கு வந்துவிடும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 128-வது இடத்தில் உள்ளது.

சென்னை 'மெட்ரோ வாட்டர்’ நீரின் தரம்பற்றி ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேள்விகள் கேட்டது. இதற்கு சென்னை மாநகராட்சி அளித்த பதில், '2007-ம் ஆண்டு முதல் தோராயமாக மேற்கொள்ளப்பட்ட 440 பரிசோதனைகளிலும் அந்த நீர் 'குடிக்க தகுதியற்றது’ எனத் தெரியவந்தது' என்பதாகும்.

- பா.பிரவீன் குமார் @ டாக்டர் விகடன்

Sources : http://www.sinthikkavum.net/search/label/மருத்துவம்

தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை நிறுத்தினால் ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் - இம்ரான்கான் எச்சரிக்கை


தலிபான் இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் அரசு தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கிய கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் இருதரப்பினரும் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.
 
இந்த நிலையில், தலிபான் இயக்கத்துடனான அரசு பேச்சுவார்த்தையை நிறுத்தக்கூடாது என்றும், பேச்சுவார்த்தை தோல்வியடைவது என்பது ராணுவ நடவடிக்கைகளுக்கே வழி வகுக்கும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் இன்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 
முதலில் அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்கவேண்டும். அதன்பின்னரே ராணுவ நடவடிக்கை இறுதியாகத் தேர்வு செய்யப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் ராணுவத் தாக்குதலை மேற்கொண்டால் 40 சதவிகிதமே வெற்றிவாய்ப்பு கிட்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரிப் குறிப்பிட்டதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார்.
 
பெரும்பான்மையான பாகிஸ்தானிய மக்கள் அமைதிப் பேச்சுவார்த்தையையே விரும்புகின்றனர். மேலும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் மேம்பாட்டிற்காக அரசு பணம் செலவிடவேண்டும். ராணுவ நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வராது. வன்முறையில் இறப்பவர்களின் பிள்ளைகள் நாளை கத்தியைக் கையில் எடுப்பார்கள். இதனால் தீவிரவாதமே அதிகரித்து பின்னர் அமைதிப் பேச்சிற்கு வழிவகுக்கும் என்று இம்ரான் தெரிவித்துள்ளார்.
 
இதுமட்டுமின்றி பாகிஸ்தானின் எந்தப் பகுதியிலும் இதற்கு முன்னர் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகள் வெற்றி பெற்றதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
 
எனினும், இம்ரான்கான் முன்னிலையில், பிரதமர் ராணுவ நடவடிக்கையின் வெற்றி வாய்ப்பு குறித்து இராணுவப்படைத் தளபதியிடம் குறிப்பிட்டதாகக் கூறப்படுவதை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
 
Jaffnamuslim

அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது: 3700 விமானங்கள் ரத்து - அவசர நிலை பிரகடனம் (PHOTOS)

winter storm

கடந்த மாதம் அமெரிக்காவில் பனிப்புயல் வீசியது. இதனால் கடுமையாக பனி கொட்டியது. மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு பொது மக்கள் பாதிப்பு அடைந்தனர்.

அதே போன்று தற்போது மீண்டும் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கியது. இதனால் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜார்ஜியா மற்றும் கலிபோர்னியா மாகாணங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு கடுமையான பனி கொட்டுகிறது. இதனால் இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இதையடுத்து இங்கு 56 லட்சம் வீடுகளில் வாழும் மக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் வாஷிங்டனிலும் கடும்பனிப்புயல் வீசுகிறது. இதனால் இங்கு வந்து செல்லும் 3700 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கரோலினாவில் வீசும் பனிப்புயல் காரணமாக அங்கு கார் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகிறது.

அலபாமா–விர்ஜீனியாவிலும் பனிப்புயலின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிப் பொழிவுக்கு இதுவரை 10 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா மாகாணத்தில் அதிபர் ஒபாமா அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளார்.
 
Wrecked cars and trucks wait to be cleared off the eastern-bound section of the Pennsylvania Turnpike. The crash could have involved as many as 100 vehicles. Wrecked cars and trucks wait to be cleared off the eastern-bound section of the Pennsylvania Turnpike. The crash could have involved as many as 100 vehicles.
A small car is crushed underneath a tractor trailor in a pile-up that involved as many as 100 vehicles. 
A small car is crushed underneath a tractor trailor in a pile-up that involved as many as 100 vehicles.
Pedestrians walk on Main Street during a snow storm on February 5, 2014 in Rochester, New York (AFP Photo / Guy Solimano)
View image on Twitter
View image on Twitter

பேஸ்புக் தளத்தில் ஏமாறாதீர்கள்!

பேஸ்புக் தளம் தற்போது நமது அன்றாட வாழ்வில் ஒன்றாக மாறி வருகிறது. கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கும் பேஸ்புக் தளத்தில் பல ஏமாற்றுப் பேர்வழிகளும் சுற்றிக் கொண்டு தான் இருக்கின்றனர்.  அத்தகையவர்களில் ஒரு வகையினர் பற்றி தற்போது பார்ப்போம்.

பேஸ்புக் ஹேக்
 
இந்த ஏமாற்று பேர்வழிகள் செய்யும் மோசடி ஒரு சங்கிலித் தொடர் ஆகும்.
  1. உங்கள் நண்பர்கள் கணக்கை ஹேக் செய்ய, உங்கள் ப்ரொபைலை யார் பார்த்தார்கள் என்று அறிய, வித்தியாசமான பேஸ்புக் தீம் என்று பல்வேறுவிதமாக கூறி ஒரு புகைப்படத்தில் சுட்டி (Link)  கொடுத்து நிரல்களைக் கொடுப்பார்கள்.
  2. அதனை உங்கள் நண்பர்கள் பேஸ்புக் ப்ரொபைலுக்கு சென்றோ, அல்லது பேஸ்புக் முகப்பு பக்கத்திலோ பயன்படுத்துமாறு வழிமுறைகளை சொல்வார்கள்.
  3. அப்படி நீங்கள் செய்தால் உங்கள் பேஸ்புக் பக்கம் வித்தியாசமான தீமுக்கு மாறும். இது உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறி (உங்கள் நண்பர்கள் கணக்கு அல்ல!).
  4. பிறகு ஸ்டெப் ஒன்றில் சொன்ன புகைப்படத்தில் உங்கள் கணக்கு மூலம் உங்கள் நண்பர்கள் பெயர்கள் தானாக டேக் செய்யப்படும்.
  5. பிறகு உங்கள் நண்பர்கள் ஸ்டெப் ஒன்று முதல் செய்யத் தொடங்குவார்கள்.
இப்படி செய்வதினால் அவர்களுக்கு என்ன லாபம்? இருக்கிறது. இந்த பிரச்சனை இத்துடன் முடிந்துவிடவில்லை.
ஹேக் செய்யப்பட்ட உங்கள் கணக்கு மூலம் உங்களுக்கே தெரியாமல் பல்வேறு பேஸ்புக் பக்கங்கள் லைக் செய்யப்படும்.
நீங்கள் ஏமாற்றப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, உங்கள் பேஸ்புக் கடவுச்சொல்லை மாற்றுவது.
பிறகு உங்கள் ப்ரொபைலுக்கு சென்று Activity Log என்பதை க்ளிக் செய்யுங்கள்.
 
activity log
 
அங்கு உங்களுக்கு தெரியாமல் லைக் செய்யப்பட்டவைகள் இருக்கும். அதன் பக்கத்தில் உள்ள பென்சில் ஐகானை க்ளிக் செய்து Unlike செய்துவிடுங்கள்.
இப்படி லைக் செய்யப்படும் பேஸ்புக் பக்கங்கள் பணத்திற்காக விற்கப்படுகிறது. பேஸ்புக் தளத்தை பாதுகாப்பாக பயன்படுத்துங்கள், ஏமாற்று பேர்வழிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ளுங்கள்…!
 
தமிழ் நுட்பம்

இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்: பள்ளி சிறுவர்கள் உள்பட 16 பேர் மரணம்.

புவியியல் தன்மையில் எரிமலை வளையத்தைச் சேர்ந்த இந்தோனேசிய நாட்டில் 150 எரிமலைகள் உள்ளன.

அவற்றுள், இன்னும் 130 எரிமலைகள் செயல்படும் தன்மையுடன் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த எரிமலைகளுள் ஒன்றான 1,731 மீட்டர் உயரமுடைய கெலட் கடந்த சில வாரங்களாகவே குமுறிக் கொண்டிருந்துள்ளது.

இதன் காரணமாக அந்த எரிமலையிலிருந்து 10 கி.மீ சுற்றளவில் உள்ள 36 கிராமங்களில் வாழ்ந்துவரும் 2 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அந்த எரிமலை சீறியுள்ளது. அது வெடித்துச் சிதறிய சப்தம் 130 கி.மீ தொலைவில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான சுரபயாவிலும், அதற்கு அப்பால் உள்ள ஜோக்யகர்டாவிலும் கேட்டுள்ளது.

அந்த சீற்றத்தில் வெளியேறிய சாம்பல் படிவங்கள் இந்த நகரங்களின் தெருக்கள் முழுவதும் பரவியுள்ளன.
எரிமலையை ஒட்டியுள்ள பண்ணைகளில் இருக்கும் விலங்குகள் முழுவதும் சாம்பல் படிந்து காணப்படுவதை ஊடக நிகழ்ச்சிகள் வெளிப்படுத்தின.
இன்று காலை பரவிய சூரிய வெளிச்சத்தில் எரிமலை சீற்றத்தின் பாதிப்பு வெகுதூரம் வரை பரவியிருந்தது தெரிய வந்தது.

எரிமலை சாம்பலும், அதன் விளைவாக எழுந்துள்ள தூசு மண்டலமும் பார்வைத்தன்மையை வெகுவாகக் குறைத்துள்ளதாலும், விமான எஞ்சின்கள் பாதிப்படையும் என்பதினாலும் சுரபயா,சோலோ மற்றும் ஜோக்யகர்டா ஆகிய மூன்று நகரங்களிலும் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சக செய்தித் தொடர்பாளர் பம்பங் எர்வன் தெரிவித்துள்ளார்.



எரிமலை வெடிப்பு ஏற்பட்ட பகுதியிலிருந்து 2.7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுகமெரியா கிராமத்தின் சாலையோரத்தில் சாம்பல்களால் மூடப்பட்ட உடல்கள் கிடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 16 பேரின் உடல்களும் அடையாளம் காணப்பட்டன. சிறுவர்கள் 5 பேரும் எரிமலையை வேடிக்கை பார்க்கச் சென்றபோது அதில் சிக்கிக் கொண்டது தெரிய வந்துள்ளது.
விபத்தில் சிக்கிய 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

""இந்த எரிமலைச் சீற்றத்தில் மேலும் பலர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது. எரிமலைக்கு அருகில் உள்ள பாதைகளில் அதிக அளவு வெப்பம் கொண்ட சாம்பல்கள் பரவிக் கிடப்பதால் மீட்புப் பணி பாதிக்கப்பட்டுள்ளது'' என்று தேசிய பேரிடர் மீட்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நக்ரோஹோ தெரிவித்தார். இது, இந்தோனேசியாவில் சமீபத்தில் நிகழ்ந்த எரிமலைச் சீற்றங்களில் மிகவும் பயங்கரமானது என்று அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

A man wears a mask as he rides a rickshaw on a road covered with ash from Mount Kelud, in Yogyakarta, 14 February 2014

A man covered with ash from Mount Kelud is seen on his motorcycle in Yogyakarta, 14 February 2014
 

கொழும்பு பெரிய ஆஸ்பத்திரி தொழுகை அறை பெளத்த கடும்போக்கு சக்திகளால் இழுத்து மூடப்பட்டுள்ளது



கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் அமைச்சர் பௌசியினால்  புனர் நிர்மாணம் செய்யப்பட்ட பின்னர் திறந்து வைக்கப்பட்ட   தொழுகை அறை பெளத்த தேரர் தலைமையிலான இனவாத சக்திகளினால் உடனடியாக இழுத்து மூடப்பட்டுள்ளதுடன் அதன் முகப்பும் உடைக்கப் படுவதாக தகவல்கள் குறிப்பிடுகிறது . 1994  ஆம் ஆண்டில் முதல் தடைவையாக இயங்க தொடங்கியுள்ளது என்பது சுட்டிக்காட்டத் தக்கது .
 
கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் வைத்திய பேராசிரியர் றிஸ்வி சரிப் தலைமையில் 41ஆம் வார்ட்டில் தொழுகை அறையொன்று புனர்நிர்மாணம் செய்யப்பட்டு அமைச்சர் பௌசியினால் திறந்து வைக்கப்பட்டது.
 
அடுத்த நாள் இரவே வைத்தியசாலைக்குள் உள்ள விகாரையின் பௌத்த குருவினாலும் அவரது ஆதரவாளர்களினால்  அத் தொழுகை அறை உடனடியாக இழுத்துமுடப்பட்டுள்ளது. அத்துடன் வைத்தியசாலைப் பணிப்பாளர் அணில் ஜயசிங்கவை இப் பௌத்த குரு அவரது வைத்தியசாலையில் உள்ள வீட்டுக்குச் சென்று இதனை உடனடியாக முடுவிடும்படியும் உத்தரவிட்டுள்ளதாக வைத்தியசாலையின் கொழும்பு வைத்தியசாலையின் அபிவிருத்திச் சங்கத்தில் அங்கம் வகிக்கின்ற அஸ்ரப் ஹுசைன் தெரிவித்தார்.
 
இவ் வைத்தியசாலை 41ஆம் வார்ட்டில் டாக்டர் றிஸ்வி சரீபினால் 1994 இல்  வைத்தியசாலையின் அனுமதியுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட 10 அடி கொண்ட ஒரு அரையாகும்.
 
இவ் அறை  மீள புனர்நிர்மாணிக்கப்பட்டதால் கடந்த 10 ஆண்டுகளாக இங்கு தொழுகை  நடைபெறாது தடைப்பட்டிருந்தது . அதன்  பின் டாக்டர்  றிஸ்வி சரிப் தனது நிதியில் இந் அரையை மாபில் இட்டு வர்ணம் பூசி  முகப்பையும்  புனர் நிர்மாணம் செய்திருந்தார். இதற்காக வைத்திய அத்தியட்சகர் அணில் முனசிஙகவிடம் அனுமதியும் பெற்றிருந்தார்.
 
இது  சிரேஸ்ட அமைச்சர்   ஏ.எச்.எம் பௌசியைக் கொண்டு  கடந்த புதன்கிழமை திறந்து  வைக்கப்பட்டது. அத்துடன் அஸர் தொழுகையும் வருகைதந்த அதிதிகளினால் தொழுவிக்கப்பட்டது இவ் வைபவத்திற்கு வைத்திய பணிப்பாளர் அனில் முனசிஙக் கலந்து கொள்ளவில்லை.
திறந்து வைத்து வைக்கப் பட்ட அந்த தொழுகை அறை மீள மூடப்பட்டுள்ளதாக  வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தின் முஸ்லிம் உறுப்பினர்கள் அமைச்சர் பௌசிக்கும் தெரிவித்துள்ளனர்.
 
இது தொடர்பாக  பாதுகாப்பு அமைச்சின் கண்கானிப்பு பணிப்பாளருக்கும் அறிவுத்துள்ளோம். ஆனால் தற்போது வைத்தியசாலை பணிப்பாளரின் உத்தரவுக்கு அமைய பொறியியலாளர்களினால்  தொழுகை அறை முகப்புக்கள் உடைக்கப்பட்டு அவை மாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.என  டாக்டர் றிஸ்வி சரீப் தெரிவித்துள்ளார் .
 
கடந்த 40 வருடகாலமாக இவ் வைத்தியசாலைக்கே தமது உயிர் உடல் அர்ப்பணித்து மூவினங்களுக்கும் சேவை செய்து வருகின்றவரும் டாக்டர்  றிஸ்வி சரீப் நிர்வாகத்தில் இருந்த வந்த வார்ட்டில் தனது கடமை நேரங்களில் தொழுகையில் ஈடுபட முடியவில்லையே எனவும் இந்த நாட்டில் தனது மத கடமையை செய்ய இடமில்லையென அவர் மேலும்  அங்கலாயித்துக் கொண்டிருக்கின்றார்.
 
கொழும்பு  வைத்தியசாலைகளில் உள்ள வார்ட்டுகளுக்கு நாளாந்தம் முஸ்லிம் தனவந்தர்கள்,வர்த்தக நிறுவனங்கள் வார்ட்டுகளை நிர்வகிக்க வாரி வழங்கி வருகின்றனர். அண்மையில் கூட சவுதிஅரேபியா மற்றும் குவைத் நாடுகளின் அரசாங்க நிதியில்  5 மாடிகளைக் கொண்ட வார்ட்டும் ஒன்றும் நிர்மாணிதுக் கொடுக்கப்பட்டது. அதனை ஜனாதிபதி திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது. 50க்கும் மேற்பட்ட முஸ்லிம் எம்.பி.பி. எஸ் டாக்டர்கள் 75க்கும் உட்டபட்ட வைத்திய ஊழியர்களும்    இங்கு கடமையாற்றுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 40 வீதத்துக்கும் அதிகமான முஸ்லி ம்கள் வாழுகின்றனர். எனவும் அஸ்ரப் ஹீசைன் தெரிவித்தார்.
 
அஸ்ரப் எ சமத்:

திஹாரிய நகரை வந்தடைந்தத சிங்கள ராவயவின் ஆர்ப்பாட்ட பேரணி – Photos

மிருக வதையை உடனடியாக நிறுத்துமாறுகோரி சிங்கள ராவய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று மாலை திஹாரிய நகரை வந்தடைந்தது.

இதன் போது கொழும்பு கண்டி பிரதான வீதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த்ததை அவதானிக்க முடிந்தது.
கடந்த த 9ம் திகதி காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன்னாலிருந்து ஆரம்பமான இப்பேரணி எதிர்வரும் 16 ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி மாளிகையைச் சென்றடையவுள்ளது.

இன்னும் ஒரு வார காலத்தினுள் மாடறுப்பு நிறுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் இன்னும் பல உயிர்த் தியாகங்களை எதிர்க்கொள்ள வேண்டி வரும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கடும்போக்கு பெளத்த அமைப்புக்களில் ஒன்றான சிங்கள ராவய அமைப்புக்கு இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

IMG-20140213-WA0006 IMG-20140213-WA0007 IMG-20140213-WA0008 IMG-20140213-WA0003 IMG-20140213-WA0004 IMG-20140213-WA0005

திகாரிநியுஸ்.