கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

மேல்மாகாண சபைத் தேர்தலில் கஹட்டோவிட முஸ்தாக்கிற்கு 4904 வாக்குகள்


Photo: Assalamu alaikum gampaha mavattam vaal en aanbu sahozara sahozarihale naan ungalil oruwan musthaq madhany inshallah naalai nadaiperawulla therzalil enakkaha pirarthithuwittu ungahalazu perumaziyana wakkuhalai maram sinnathukku vakkalthi enazu ilakkam 17 kkum alithu uazawumaru paniwanbudan kettukolhiran ungal azarawai endrum ezirparkkirean jezakallah

நடந்து முடிந்த மேல்மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட கஹட்டோவிடாவின் வேட்பாளர் சகோதரர் முஸ்தாக்கிற்கு 4904 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளது. கஹட்டோவிடாவின் வரலாற்றில் மாகாண சபைக்கு முதன்முதலாக போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சாதனை இவரையே சாரும். முஸலிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட சாபி ரஹிம் அவா்கள் மாகாண சபைக்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் பின்னா் வெளியிடப்படும்.

அத்தனகல்ல ஆசனத்தில் அரச கட்சி வெற்றி!



நடபெற்று முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில் ஆளம் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வெற்றி பெற்றிறுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. 

மேல் மாகாண சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி -1,363,675                                          ஆசனங்கள்- 56
ஐக்கிய தேசியக்கட்சி -679,682                                                                      ஆசனங்கள்- 28
ஜனநாயகக்கட்சி 203,767                                                                                ஆசனங்கள் -09
மக்கள் விடுதலை முன்னணி 156,208                                                        ஆசனங்கள்- 06
ஜனநாயக மக்கள் முன்னணி 51,000                                                           ஆசனங்கள் 02
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 49,515                                                         ஆசனங்கள் 02
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491                                                 ஓர் ஆசனம்

தென் மாகாண சபை

ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி 699,408                                                            ஆசனங்கள்- 33
ஐக்கிய தேசியக்கட்சி 310,431                                                                                  ஆசனங்கள்- 14
மக்கள் விடுதலைமுன்னணி 109,032                                                                    ஆசனங்கள்- 05

ஜனநாயகக்கட்சி 75,532                                                                                           ஆசனங்கள் -03 

விமானத்தை தேடிவரும் கப்பல்கள் நீரில் இருந்து பொருட்களை எடுத்தன

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சிதிலங்கள் கண்ணில் பட்டதாக தேடுதலில் ஈடுபட்ட விமானங்கள் கூறியதை அடுத்து அவை குறிப்பிட்ட கடல் பகுதிக்கு சென்றிருந்த சீன மற்றும் ஆஸ்திரேலியக் கப்பல்கள் முதல் தடவையாக தற்போது பல பொருட்களை நீரில் இருந்து எடுத்துள்ளன.
சீனக் கப்பல்கள் வலையைப் பயன்படுத்தி பொருட்களை தண்ணீரில் இருந்து அள்ளுவதை தொலைக்காட்சிப் படங்கள் காட்டியுள்ளன.

ஆனால் அவையெல்லாம் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய பொருட்கள் அல்ல என்று தெளிவாகத் தெரிந்தது.

கண்டெடுக்கப்பட்ட பொருளில் எதுவுமே காணாமல்போன MH370 விமானத்துடன் தொடர்புடையது என்று இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

சனிக்கிழமைக்கான தேடுதல் பணிகள் நிறைவடைந்துவிட்டன என்றாலும், தேடுதல் நடக்கும் பகுதியில் வேறுசில பொருட்கள் மிதப்பதையும் சீன மற்றும் ஆஸ்திரேலிய விமானப்படை விமானங்கள் கண்டதாக ஆஸ்திரேலிய கடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

thanks : Lankasri web

மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று காலை 7.00மணி முதல் வாக்கெடுப்பு




தென் மற்றும் மேல் மாகாகண சபைகளுக்கான தோ்தலுக்கான வாக்கெடுப்புகள் இன்று காலை 7.00 மணிமுதல் மாலை 4.00மணி வரை நடைபெறும் என தோ்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. இவ்விரு மாகாகணங்களுக்குமான வாக்கெடுப்பையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 25035 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது.  இவ்விரு மாகாணங்களிலும் உள்ள மாவட்டங்களின் வாக்காளா் தொகை விபரமாவது
கம்பஹா மாவட்டம்  16  இலட்சம், கொழும்பு மாவட்டம்  15  இலட்சம், களுத்துறை மாவட்டம்  9  இலட்சம், மாத்தறை மாவட்டம்  6  இலட்சம், காலி  மாவட்டம்  8 இலட்சம், ஹம்பாந்தோட்டை மாவட்டம்   4.5 இலட்சம் ஆகும். 102 உறுப்பினா்கள் தெரிவு செய்யப்படும் மேல் மாகாண சபைக்கு 2743 வேட்பாளர்களும், 53 போ் தெரிவு செய்யப்படும் தெண்மாகான சபைக்கு 1051 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். மேலும் இத்தேர்தலில் அரசியல் கட்சிகள் 25உம் சுயாதீனக்குழுக்கள் 15 உம் களமிறங்கியுள்ளது. 

முஸ்லி்ம்கள் வாக்குறிமையைத் தவரவிடக் கூடாது


மேல் மற்றும் தென் மாகாண சபைகளுக்காக நாளை நடைபெறவுள்ள தேர்தல்களின் போது முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிம்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 
இவ்வமைப்பின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: 
ஓர் அரசாங்கம் மக்கள் சார்ந்த தீர்மானங்களை எடுக்கும் போது அந்நாட்டில் வாழக் கூடிய ஒரு தனி நபரின் செல்வாக்கின் ஆளுமையை உறுதிப்படுத்தும் ஒரு சக்தியாகவே வாக்குரிமை காணப்படுகிறது. அத்துடன் மக்கள் அரசியல் நடவடிக்கைகளில் பங்குபற்றக் கிடைக்கும் ஒரே சந்தர்ப்பமும் இந்த வாக்களிப்பு முறையாகும். 
வாக்குரிமை என்பது மக்களின்  ஜனநாயக உரிமையாகக் கருதப்படுகின்றது. இந்த வாய்ப்பினை எமது சமூகத்தைச் சேர்ந்த அநேகர் பயன்படுத்தாது இருக்கின்றனர். அது மட்டுமின்றி சனிக்கிழமை இடம்பெறவுள்ள தென், மேல் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கடந்த காலத் தேர்தல்களில் காட்டிய ஆர்வம், அக்கறை போன்றல்லாது முஸ்லிம் சமூகத்தினரிடம் குறைந்தே காணப்படுவதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 
எனவே, இந்த மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் தங்களது வாக்குகளை தாம் விரும்பும் கட்சிக்கும் வேட்பாளர்களுக்கும் அளித்து தனது வாக்குரிமையின் பெறுமானத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்தி விரும்பிய உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் உரிய இடங்களுக்கு எமது பிரச்சினைகளை கொண்டு சென்று அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள அது உதவும் எனவும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

ரவுப் ஹகீமின் கூட்டத்திற்கு பொலிஸாரினால் தடை



ஶ்ரீ. ல. மு. கா. தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் புதன்கிழமை 26-03-2014 களுத்துறை மாவட்டத்தில் தர்காடவுன், கொழும்பு 2 ஸ்ருவர்ட்  வீதி மற்றும் இறுதியாக கொழும்பு 12 சென்ரல் ரோட் ஆகிய இடங்களில் இடம்பெற்ற கடைசிநாள் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இறுதியாக இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது பிந்திக்கிடைத்த தகவலொன்றின் படி இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள ஜெனீவா பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க பதின்நான்கு நாடுகள் மட்டுமே முன்வந்துள்ள்தாகவும் அவற்றில் அரைவாசிக்கதிகமானவை முஸ்லீம் நாடுகள் என்றும் குறிப்பிட்டார்.

அமைச்சர் ஹக்கீம் இறுதிக்கூட்டத்திற்கு வந்து சேர்வதற்கிடையில் இரவு பத்து மணியளவிலிருந்து பொலீசாரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது.
Thanks : Jaffnamuslim web

பொதுபல சேனாவை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிட்டு வாக்கு பறிக்க முயற்சி.- குரவலான கஹடோவிடாவில் அமைச்சா் விஜித ஹேரத்




பொதுபல சேனாவை முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக தூண்டிவிட்டு முஸ்லிம் காங்கிரஸூக்கு முஸ்லிம்களின் வாக்கை பரித்துக் கொடுக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். 
அத்தனகல்லை, குரவலான பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 
இது போன்ற நாடகங்கள் பல தேர்தல்களிலும் நாம் கண்டுள்ளோம். தேர்தல் முடிந்ததும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாதிபதியுடன் ஒட்டிக் கொள்வார். அரசாங்கத்துக்கு எதிராக அமைச்சர் ரவூப் ஹக்கீம் செயற்படுவதாக அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் பொய்யாக கூக்குரல் இடுகின்றார்கள். அப்படி அவர் உண்மையாகவே செயற்படுவதாக இருந்தால், ஏன் இன்னும் அமைச்சுப் பதவியில் வைத்திருக்கிறார்கள். 
பொதுபல சேனா முஸ்லிம்களின் பள்ளிவாயலுக்கு தாக்குதல் நடாத்தும் போது வெளிவராத ஹக்கீம், இப்;போது ஏன் அதனைப் பற்றி பெரிதாக கதைக்கின்றார். அறிக்கை விடுக்கின்றார். எல்லாம் தேர்தல் முடியும் வரைதான். 
இந்தத் தேர்தலில் அரசாங்கத்துக்கு எதிராக முஸ்லிம்களது வாக்குகள் குறையும் போது அரசாங்கம் சிந்திக்கும். ஞானசார தேரரின் வாயை அரசாங்கம் மூடிவிடுமாறு உத்தரவு பிறப்பிக்கும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  (மு) 

ஊடகவியலாளர் தாக்குதல் - கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் நேற்று  பொதுச் சந்தையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக இன்று செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதோடு அவரது வீடியோ கருவியும் சேதமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி பொதுச் சந்தையில் கடந்த 2013 ம் ஆண்டிற்கான மின் கட்டணம், வாடகைப் பணம், வரிப் பணம் ஆகியவற்றை செலுத்தாத 30 வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வகாப்தீன் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை உத்தரவிட்டிருந்தார் என கரைச்சி பிரதேச சபை செயலாளர் ந.கிருஷ்ணகுமார் தெரிவித்தார்.
இதனையடுத்து, இன்று புதன்கிழமை வர்த்தகர்களுக்கும் பிரதேச சபை நிர்வாகத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து செய்தி சேகரிப்பதற்காக அங்கு சென்ற செய்தியாளரை பிரதேச சபை பணியாளர் ஒருவர் தாக்கியுள்ளார் என பொலிஸார் கூறினர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அமைச்சா் ரிசாட் பதியுதீனிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன். - ஞான சார அறிவிப்பு



வில்பத்துவில் மீளக்குடிமர்த்தப்பட்ட முஸ்லிம் மக்கள் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பினால் தம்மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகள் போலியானது என்று கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். அவ்வாறான குற்றச்சாட்டுகளால் தமக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு நட்டஈடாக 500 மில்லியன் ரூபாவை கோரியுள்ளார். 

இரண்டு வார காலப்பகுதியினுள் தமக்கான நட்டஈடு வழங்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தம்மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், தாம் அமைச்சு பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இந்தவிடயம் தொடர்பாக Sfm செய்தி பிரிவு பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரிடம் வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், தமது அமைப்பு அமைச்சரிடம் மன்னிப்போ அல்லது நட்ட ஈடோ வழங்க போவதில்லை என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் Sfm செய்தி பிரிவு வினவியது.

அதற்கு பதிலளித்த அவர், தமது கண்காணிப்புக்கு அமைய தவறு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்
thanks : Jaffnamuslim web 

பெதுபல சேனாவுக்கு எதிராக வழக்குத்தாக்கல்!




பொதுபல சேனா அமைப்பிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய எண்ணியுள்ளதாக அமைச்சர் ரிசாத் பதியூதின் தெரிவித்துள்ளார்.

Sfm செய்தி சேவையுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் செயற்பாட்டில் இன்று பொதுபல சேனா செய்து வருகின்றது. வடமாகாண மக்கள் தொடர்பில் ஒன்றுமோ தெரியாத பொதுபல சேனா நான் முஸ்லிம் மக்களுக்கு வீடமைப்பு திட்டத்தை மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளது. அவ்வாறான பொய்யான பரப்புரையின் மூலம் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த அவர்கள் முனைகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார் .
நன்றி  ஜப்னா இணையம்

ஈரல் கரையும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள திஹாரிய சிறுமிக்கு உதவுங்கள்.


SADSS

திஹாரியை ஹிஜ்ரா மாவத்தை இல.464/1, வசிக்கும் சிறுமி பாதிமா அப்ரா ( 15 வயது) ஈரல் கரையும் நோயினால் (Liver Cirrhosis) கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
திஹாரிய ஹிஜ்ரா மாவத்தை A.R.M. இப்னு அவர்களின் அன்பு மகளாகிய இவருக்கு வெளிநாட்டில் உடனடியாக சத்திர சிகிச்சை செய்யவேண்டும் என இலங்கை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக 70 இலட்சம் ரூபாய்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சாதாரண முச்சக்கர வண்டி ஓட்டுனரான நோயாளியின் தந்தைக்கு சத்திர சிகிச்சைக்கு செலவாகும் பணத்தை திரட்டுவது கடினமாக காணப்படுகிறது.
ஆகவே தாரளமனம் படைத்தவர்கள் இந்த சிறுமியின் உயிரைக்காக்க தங்களால் முடிந்த உதவிகளை வழங்க முன்வருமாறு மிகவும் தாழ்மையுன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் உதவிகளை வழங்க
A.R.M. இப்னு (நோயாளியின் தந்தை)
464/1, ஹிஜ்ரா மாவத்தை, திஹாரிய.
மேலதிக விபரங்களுக்கு
தொலைபேசி 0777243546
வங்கி விபரம்:
Fathima Afra
Bank A/C No.75772313 
Bank of Ceylon, Bambalapitiya Branch.
குறிப்பு:
நோயாளியின் வைத்திய அறிக்கை, திஹாரிய பெரிய பள்ளிவாசலினால் விநியோகிக்கப்பட்ட உறுதிப்படுத்தும் கடிதம் என்பன இணைக்கப்பட்டள்ளது.
எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு இரு உலகிலும் உதவி புரிவானாக!
Dr Letter
JP LetterMasjid Letter

ஹகீம் மீது மீண்டும் குற்றச் சாட்டு.


 

சட்டக்கல்லூரிக்கு சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் விமல் வீரவன்ஸ மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
20-03-2014 நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களின் இந்த குற்றச்சாட்டை அடுத்து கூட்டத்தில் சூடான வாக்குவாதம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. சட்டக்கல்லூரிக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அநீதியான வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் இதேபோன்ற குற்றச்சாட்டை சுமத்தியதுடன் இது பாரிய அநீதி எனவும் இதன் பின்னணியில் சதித்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறியுள்ளார்.
போதுமான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாதுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் இதற்கு பதிலளித்துள்ளார். எனினும் நீதியமைச்சர் தலையிட்டு சட்டக் கல்லூரிக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரிக்கு முஸ்லிம் மாணவர்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிங்கள அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. மாணவர்கள் நுழைவு தேர்வு மூலமே சட்டக் கல்லூரிக்கு மாணவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

எனினும், நீதியமைச்சரின் தலையீட்டிலேயே அதிகளவில் முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக இந்த அமைப்புகள் குற்றம் சுமத்தி வருகின்றன. 

நன்றி  ஜப்னாமுஸ்லிம் இணையம்

மூன்று பாதைகளில் பஸ்நேர மாற்றம் - ஆணைக்குழுவின் தலைவா் தெரிவிப்பு



மூன்று பாதைகளில் அடுத்த ஏப்றல் மாதம் முதல் புதிய பஸ் போக்குவரத்து நேர அட்டவணை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்துகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
மாவனல்லை – கண்டி, கேகாலை – கண்டி, கெகாலை – கொழும்பு ஆகிய பாதைகளில் பயணிக்கின்ற தனியார் பஸ்களின் நேர அட்டவணைகள் மாற்றம் செய்யப்படவுள்ளன. 
இந்தப் பாதைகளில் போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பஸ்களின் நேர ஒழுக்கில் நீண்ட காலமாக நிலவும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலேயே இந்த மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரொஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

சிங்கள சமூகத்திடம் மன்னிப்புக் கோறவேண்டுமாம் ஹக்கீம்.


நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம், இலங்கை நிலைமைகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைக்காக ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா தெரிவித்துள்ளது.

மன்னிப்பு கோரவிட்டால் ஹக்கீமை தோலுரிக்கப் போவதாக பொதுபல சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. சிங்கள சமூகத்திடம் ஹக்கீம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். ஹக்கீமிற்கு நாட்டின் நீதி அமைச்சுப் பதவியை ஏன் ஜனாதிபதி வழங்கினார் என்பது புரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைச் சிறுபான்மை மதங்கள் மீது சிங்கள கடும்போக்கு அமைப்புக்கள் அடக்குமுறைகளை பிரயோகித்து வருவதாக குற்றம் சுமத்தி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையிடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கஹட்டோவிடாவில் நேற்றிரவு நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸின் தோ்தல் பிரச்சாரக் கூட்டம்




எதிா்வரும் மாகாண சபைத் தோ்தலில் கம்பஹா மாவட்டத்தின் முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களை ஆதரித்து நடாத்தப்பட்ட தோ்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்ட தேசியத் தலைவா் ரவுப் ஹகீமின் உரையை செவி மடுக்க வந்திருந்தோரை படத்தில் காணலாம். மறைந்த தலைவா் அஷ்ரப் அவா்களின் காலத்தில்போல் முஸ்லிம் காங்கிரஸின் கூட்டங்களுக்கு என்றும் பெருந்திரளான மக்கள் சமூகம் தருவது மக்களுக்கு அக்கட்சி மீதுள்ள ஆர்வத்தையே காட்டுகிறது.
இம்முறை மாகாசபைக்கு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து இரண்டு ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என்றும் அவ்வாறு இரண்டு ஆசனங்கள் வந்தால் ஒரு ஆசனம் கட்டாயமாக கஹட்டோவிடாவிலிருந்து போட்டியிடும் சகோதரர் முஷ்தாக்கிற்கு கட்டாயம் வழங்கப்படும் என்று நீதியமைச்சா் ரவுப் ஹகீம் தெரிவித்தார்.

இறைவா இவர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களை மன்னித்து அருள் புரிவாயாக ஆமீன்

https://www.facebook.com/photo.php?v=1421708841411232

எதிர்பாராத நேரத்தில் நடந்த எதிர்பாராத விபத்து. மரணத்துக்கு 100 கண்கள் 1000 விழிகள். மரண யாரையும் விட்டு வைப்பதில்லை. அது யாருக்காகவும் காத்திருக்காது. இது நிஜத்தின் நிழல். நிமிடத்தின் உண்மை. இறைவனை அஞ்சிக் கொள்ளுங்கள்.
இதயம் பலவீனமானவர்கள் இதை பார்க்க தவிர்க்கவும்... 
நாரம்மல பொலிஸ் பிரிவில் மெட்டியாகன பகுதியில் இன்று (18) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் வபாத்தாகியுள்ளனர். இந்த விபத்தில் மாத்தளை வரகாமுறையை சேர்ந்த நான்கு வாலிபர்களே (படங்கள்) வபாத்தாகியுள்ளனர். இவர்களில் இருவர் சகோதரர்களும் ஒருவர் அவர்களின் உறவினருமாவார்

நாரம்மல கோற விபத்து - பலியாகிய 4 முஸ்லிம் இளைஞா்கள்.


நாரம்மல வறக்கா குமுர பகுதியில் நேற்று 18.03.2014 இடம்பெற்ற விபத்தில் அக்குறனையைச் சோ்ந்த 4 இளைஞா்கள் ஸ்தலத்திலேயே பலியாகினா். மத்திய கிழக்கிலிருந்து திரும்பிவரும் சகோதரரை அழைத்துவர முச்சக்கர வண்டியில் விமான நிலையம் சென்று வீடு திரும்பும்வேளையே இக்கோற விபத்து நிகழந்துள்ளது.

விபத்து வீடியோ https://www.youtube.com/watch?v=K7y5EJ2Lusg

சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் எழுச்சிக் கூட்டம் - கஹட்டோவிடாவில்


எதிா்வரும் மேல்மாகாண சபைத் தோ்தலில் கம்பஹ மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து மாபெரும் பொதுக் கூட்டம் ஒன்று இன்று 19.03.2014 அன்று மாலை 7.00மணி தொடக்கம் கஹட்டோவிட“ பாம் சொப்” இற்கு அருகாமையில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான கொளரவ ரவுப் ஹகீம் அவா்கள் கலந்துகொள்ளவுள்ளார்.