பொதுபல சேனாவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்பு...... (கஹட்டோவிட்டா வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டத்தில் )

நாட்டில் முஸ்லிம் எதிர்ப்பு இயக்கமான பொதுபல சேனாவுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான தொடர்பு ரமழான...் மாதத்தில் ஷைத்தானைக் கட்டி விட்டு அவிழ்த்து விடுவதைப் போன்றது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கஹட்டோவிட்டாவில் நேற்று நள்ளிரவு 12.20 மணியளவில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். பல நூற்றுக் கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் நள்ளிரவு என்றும் கூட பார்க்காமல் இறுதி வரை கலந்துகொண்டனர். இதில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,
மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தைக் கருத்தில் கொண்டு நாட்டில் அண்மைக் காலமாக செயற்பட்ட பெரும்பான்மை இனவாத சக்திகள் முடக்கப்பட்டுள்ளன. எந்தளவுக்கென்றால், அந்த அமைப்பைச் சேர்ந்த பொதுச் செயலாளரே நாம் ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டோம். ஊர்வலங்களில் கலந்துகொள்ள மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பேரினவாத அமைப்புகளினால் அரசாங்கத்துக்குத் தான் ஆபத்து என்பதை நான் பல முறை எடுத்துக் கூறியும் அரசாங்கம் செவிசாய்க்கத் தயாராக இருக்கவில்லை. தற்போது, ஜெனீவாவில் அது வெளிப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்க முடியாது. உயிரோட்டமுள்ள கட்சி என்றவகையில், கட்சிக்குள் பல்வேறு உணர்வுகள் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அவர்களது நியாயமான உணர்வுகளை தடுத்து நிறுத்துவது பொருத்தமானது அல்ல எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
Srilankamuslims
0 comments:
Post a Comment