காலி - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை 15ஆம் முதல் மக்கள் பாவனைக்கு

காலி - மாத்தறை அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் நிர்மலா கொதலாவல தெரிவித்தார்.
நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்
30.8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப்பாதையை திறந்து வைப்பதன் மூலம் காலியிலிருந்து மாத்தறைக்கு 20 நிமிடங்களில் பயணிக்கமுடியும் எனவும், இதற்காக 18 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடுவெல - கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, பெருந்தெருக்கள் அபிவிருத்த அமைச்சர் நிர்மலா கொத்தலாவல மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்
0 comments:
Post a Comment