கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிடாவில் சூடு பிடித்து வரும் மாகாண சபைத் தோ்தல்.



நடைபெறவுள்ள மாகாண சபைத் தோ்தல் நடவடிக்கைகள் படிப்படியாக சூடு பிடித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த காலங்கள் போலல்லாது இம்முறை முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளா் பட்டியலில் கஹட்டோவிட சார்பாக இரண்டு புது முகங்கள் அரசியல் களத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சகோதரா் ரிசான் மற்றும் சகோதரர் முஷ்தாக் ஆகிய இருவருமே இப்புது முகங்கள். விகிதாசார முறைப்படியிலான தேர்தல் நடைபெறுவதால் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளா் BALANCE VOTE முறையில் ஒரு பிரதி நிதித்துவத்தை பெற்று வந்தது. இரண்டு பெரும் கட்சிகளுடன் மூன்றாவது பலமாக முஸ்லிம் காங்கிரஸ் காணப்பட்டாலே இப்பரதிநிதித்துவம் சாத்தியமாகின்றது. எனினும் இம்முறை தோ்தல் களத்தில் முன்னால் ஜனாதிபதி வேட்பாளா் சரத் பொன்சேகாவின் கட்சியும் போட்டியிடுவதால் கடந்த முறை பெற்ற வாக்குகளிலும் அதிகமான வாக்கை பெற்றாலே இம்முறை பிரதிநிதித்துவம் சாத்தியப்படும் நிலை காணப்படுகின்றது.

கஹட்டோவிடாவைப் போல் திஹாரிய, மினுவங்கொட, நீர்கொழும்புப் பகுதிகளிலும் அதிகமான புது முகங்களை அறிமுகப்படுத்தி தனது வாக்கு வேட்டையை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துச் செல்கின்றது. முடிவுகள் எப்படி அமையும் என பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

0 comments:

Post a Comment