கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்திற்கு தளபாட அன்பளிப்பு!






"எத்தனையோ தடவை கல்வி அமைச்சில் முறையிட்டும் கிடைக்கப்பெறாத, 6 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு மிக, மிக அவசியத் தேவையாக இருந்த 40 கதிரை-மேசை தொகுதியை, ஒரு பரோபகாரி வழங்க முன் வந்ததானது, எமது பாடசாலைக்கு அல்லாஹ்வின் விசேட அருள் கிடைத்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது" என கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலய அதிபர் ஷானாஸ் நவாஸ் தெரிவித்துள்ளார்.

இந்த தளபாட தொகுதியை உத்தியோக பூர்வமாக வழங்கி வைப்பதற்காக கடந்த 06.03.2014 நடைபெற்ற சிறு வைபவத்தின் வரவேற்பு உரையின் போதே இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், 6 ஆம் வகுப்பு மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன், இந்த உதவியைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னின்ற சகோதரர் உட்பட மேலும் சில பாடசாலை அபிமானிகளும் கலந்து கொண்டனர்.

இந்த தளபாடத் தொகுதிக்காக ரூ. 70 000.00 செலவிடப்பட்டுள்ளதுடன், இந்தத் தொகையை, பெயர் குறிப்பிட விரும்பாத, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் பொறுப்பேற்றிருந்தனர்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அந்த சகோதரர்களின் ஈருலக வெற்றிக்கும் அருள் செய்வானாக!

0 comments:

Post a Comment