கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நான்கு மதத் தலங்கள் மீதும்தான் தாக்குதல் நடாத்தப் படுகிறது என்பதை கவனிக்கவும்

இலங்கையில் நூற்றாண்டு காலமாக நான்கு மதங்களும் ஒன்றுமையாக இணைத்து வாழ்வதாகவும் ஆனால் வருந்தும் வகையில் ஆங்காங்கே நிகழும் மதத் தலங்கள் மீதான தாக்குதல்களை வெறுப்பாகவும் , மதசகியாமையாகவும் (Video)காட்ட முயற்சிக்கப் படுவதாகவும் ஆனால் தாக்குதல்கள் அனைத்து மதத்தலங்கள் மீதும் இடம்பெறுவது கவனிக்கப் படவேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அரசாங்கம் ஏற்றுகொள்ள வில்லை எனவும் அரசாங்கம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 

அனைத்து சம்பவங்களும்தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும், கடந்த 2009 ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2013 ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 16 பெளத்த , 41 கிறித்தவ / கத்தோலிக , 20 முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது எனவும் இவற்றில் 62 வீதமான சம்பவங்கள் தொடர்பில் நீதி விசாரணை இடம்பெற்று வருவதாகவும் 22 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் குற்றங்களுக்கு ஆதரங்களுடன் கிடைக்க செய்யப்படும் போது அரசாங்கம் பொருத்தமான தாக்கமுள்ள நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத் தொடரில் இன்று (05) கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எவ்வித அடிப்படைகளும் இன்றி அரசியல் நோக்கங்களைக் கொண்டு சில நாடுகள் இலங்கை மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் என பீரிஸ் தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிந்து இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேசிய செயற்திட்டம் என்ற பெயரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பிரேரணையையும் ஐநா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையையும் இலங்கை நிராகரிப்பதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் வடக்கு பகுதியில் இனபாகுப்பாடு ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தத்திற்கு முன்னர் வடக்கில் 75,000 முஸ்லிம்களும் 35,000 சிங்களவர்களும் வாழ்ந்ததாகவும் தற்போது கொழும்பில் சிங்களவர்கள் அல்லாத 51% மக்கள் வாழ்வதாகவும் இலங்கையில் ஒரு இனத்திற்கென்று ஒரு பகுதியை ஒதுக்க அரசாங்கம் தயார் இல்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கில் சிவில் நிர்வாகத்தில் இராணுவம் தலையீடு செய்யவில்லை எனவும் முழு சிவில் நிர்வாகம் அங்கு நிலவுவதாகவும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்காததால் நல்லிணக்க முனைப்புகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கையில் நூற்றாண்டு காலமாக நான்கு மதங்களும் ஒன்றுமையாக இணைத்து வாழ்வதாகவும் ஆனால் வருந்தும் வகையில் ஆங்காங்கே நிகழும் மதத் தலங்கள் மீதான தாக்குதல்களை வெறுப்பாகவும் , மதசகியாமையாகவும் காட்டமுயற்சிக்கப் படுவதாகவும் ஆனால் தாக்குதல்கள் அனைத்து மதத்தலங்கள் மீதும் இடம்பெறுவது கவனிக்கப் படவேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் மத ஸ்தலங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதை அரசாங்கம் ஏற்றுகொள்ள வில்லை எனவும் அரசாங்கம் அதனை ஒருபோதும் அனுமதிக்கவில்லை எனவும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
அதாக்குதல்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடந்த 2009 ஆண்டு ஜூன் மாதம் தொடக்கம் 2013 ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 16 பெளத்த , 41 கிறித்தவ / கத்தோலிக , 20 முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது எனவும் இவற்றில் 62 வீதமான சம்பவங்கள் தொடர்பில் நீதி விசாரணை இடம்பெற்று வருவதாகவும் 22 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்குற்றங்களுக்கு ஆதரங்களுடன் கிடைக்க செய்யப்படும் போது அரசாங்கம் பொருத்தமான தாக்கமுள்ள நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
காணாமல் போனவர்கள் குறித்தும் இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் ஆணைக்குழு விசாரணை நடத்தி வருவதாகவும் கண்ணிவெடி அகற்றும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
 
எம்.அம்றித்:

1 comments:

Unknown said...

3 enbathaie 4 enru un solukiraar gl thakka padukiathu unmaie engiraar kilakku muslimgaluku puritavilaya ungal kanigal paripoyum payam prsdnt. thaana allahuku ilaya

Post a Comment