கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தொழச்சென்ற இளைஞன் பள்ளியிலிருந்து விரட்டப்பட்டார்.



நேற்றைய முன்தினம் மாலை அஸர்; தொழுகைக்காக கஹடோவிட நூர் பள்ளிக்கு வழமைபோன்று இளைஞர் ஒருவர் சென்றிருக்கிறார். அப்போது பள்ளியிலிருந்த ஒரு நபர் குறித்த இளைஞரை தொப்பியணிந்து தொழுமாறு பலவந்தப்படுத்தியிருக்கிறார். அத்தோடு மிக முறைகேடாகவும் நடந்துள்ளார். ஆத்திரமடைந்த அவ்விளைஞரும் தன்னால் முடிந்தளவு போராடியிருக்கிறார் இருந்தாலும் அந்த நபர் விட்டபாடில்லை. ஈற்றில் குறித்த அவ்விளைஞர் தொழமுடியாமல் பள்ளியிலிருந்து திருப்பியிருக்கிறார். செல்வந்தர்கள், சமூக அங்கீகாரம் பெற்றவர்கள் அப்பள்ளியில் தொப்பி அணியாமல் தொழும்போது பார்த்துக்கொண்டிருக்கும் அந்த நபர் திடீர்ரென்று ஏன் அவ்விளைஞனுடன் மாத்திரம் இவ்வாறு நடந்துகொண்டார் என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. தடுக்கவேண்டும் பள்ளிவாசல்கள் பொது இடங்களாகும் அவை அல்லஹ்வுக்குரியவையாகும். அவற்றில் யாருக்கும் உரிமைகொண்டாட முடியாது. எத்தனையோ இளைஞர்கள் தொழுகையே இல்லாமல் வீதியளந்து திரியும் போது இந்த இளைஞர் பள்ளிக்கு தொழ வந்ததை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இத்தகைய செயற்பாடுகள் இளைஞர்கள் மனதி;ல் பலபாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அவை காலப்போக்கில் அவர்களை விரக்தி நிலைக்குக் கூட கொண்டு செல்லலாம். ஆகவே பள்ளிவாசல் நிருவாகங்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒருசில நபர்களின் அறிவீனமான செயல்கள் பள்ளிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக அமைந்துவிடுகின்றன. ஆகவே மக்களுடன் அன்பாக பன்பாக நடந்துகொள்ளும் பக்குவம் வளர்ந்தோரிடம் கட்டாயம் இருக்கவேண்டும்.

இந்த தகவலை உங்களது தளத்தில் பிரசுரிப்பீர்கள் என்று எதிர்பார்கின்றோம்.
ஊர்வாசி

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் _

  வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கான ஓய்வூதியத் திட்டமொன்றை விரைவில் அமுல்படுத்தவுள்ளதாக சமூக பாதுகாப்புச் சபை தெரிவித்தது.

சபையின் தலைவர் நிமல் அமரசிங்க இது தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்துக்குக் கருத்து தெரிவிக்கையில், "வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பிரஜைகளது நலன் கருதி இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது தொடர்பாக சவூதி அரேபிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளோம். அடுத்த வாரம் எமது குழு அங்கு செல்லவுள்ளது.

இவ் ஓய்வூதியத் திட்;டமானது 3 அம்சங்களை கொண்டமைந்தது. இதன் மூலம் 60 வயதின் பின் ஓய்வூதியத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக மாதாந்தம் வெளிநாட்டில் இருந்து வதிவற்றோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை வைப்பிலிடுவதன் மூலம் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளமுடியும்.

தற்போது 364 ஆயிரம் ஊழியர்கள் இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அனைத்து ஊழியர்களையும் இத்திட்டத்தில் உள்வாங்கவுள்ளோம். அத்துடன் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களையும் இதில் உள்வாங்கவுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

உலக அதிசயங்களுக்கு இலங்கையிலுள்ள இடங்கள் பிரேரணை _

  உலக அதிசயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கும்படி இலங்கையிலுள்ள மூன்று இடங்களின் பெயர்களை பிரேரிப்பதற்காக சுற்றாடல் துறை பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா உட்பட அதிகாரிகள் குழுவொன்று பிரஸல்ஸ் நகரில் நடைபெறுகின்ற உலக ஏழு அதிசயங்களை தெரிவு செய்யும் மாநாட்டுக்கு சென்றுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய மாகாணத்திலுள்ள நக்கில்ஸ் மலைத் தொடர், ஹோர்ட்டன் மலைத்தொடர், சிவனொலி பாதமலை என்பனவே அம்மூன்று இடங்களுமாகும்.

உலகில் ஏழு அதிசயங்களாக இதுவரை இடம் பிடித்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற இடங்களை மறுபரிசீலமைப்பதற்கு உலக அதிசயங்களை தெரிவு செய்யும் குழு தீர்மானித்துள்ளது.

பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்துக்கு புதிய நிர்வாகம் தெரிவு

Date: 2010/7/27
Subject: Please publish this with 4tosTo: kahatow@gmail.com

 கஹடோவிட முஸ்லிம் பாலிகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் பொதுக் கூட்டம் 25.07.2010 ஞாயிறு காலையில் அதிபர் புஹாரி உடயார் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்றது. 4 வருடங்களின் பின் இடம்பெற்ற  இந்தப் பொதுக்கூட்டத்தில் பெற்றோர் ஆர்வத்துடன் பங்குபற்றினர். 
 
பாடசாலை எதிர்நோக்குகின்ற சவால்கள்  பற்றியும் இச்சவால்களுக்கு மத்தியில் பாடசாலையை முன்னேற்றுவதற்காக பெற்றோரும் நலன்விரும்பிகளும் செய்து வரகின்ற பாரிய பங்களிப்பு பற்றியும் அதிபர் நினைவு படுத்திப் பேசினார்.
 
இங்கு அல் பத்ரியா நலன்புரிச் சங்கம் பற்றியும் அல் பத்ரியா நடைபவணி பற்றியும் எழுப்பப்பட்ட சர்ச்சைகளுக்கு ஜனாப் ஜவ்ஸி பதிலளித்துப் பேசியதோடு இந்த Cரில் யாருமே இருபாடசாரைலகளையும் பிரித்து நோக்க வேண்டாமென்றும் இனைவரும் இணைந்து இரு பாடசாலைகளுக்கும் தமது உதவி ஒத்தாசைகளை மேறகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
 
நிர்வாகக் குழுத் தெரிவின் போது பழைய நிர்வாகம் சிறப்பாக இயங்குவதால் அந்த நிர்வாகத்தையே மீண்டும் தெரிவு செய்வது சிறந்தது என சபையோர் கருத்துத் தெரிவித்தனர். ஆதன்படி புதியவர்கள் சிலரோடு பழைய நிர்வாகத்தில் அதிகமானோர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.


சமரசம் பத்திரிகையில் ஒரு தகவல்...

பராஅத் இரவு - ஓர் ஆய்வு

ஏக இறைவனின் திருப்பெயரால்

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன் திருமறையில்...

*தமது முகத்தை அல்லாஹ்வுக்கு பணியச் செய்து,நல்லறமும் செய்பவருக்கு கூலி அவரது

இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப் படவும்

மாட்டார்கள். (அல்குர்ஆன் 2: 112)*

* *

*நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்துள்ளார்கள்..

எனக்கு பின்னால் உருவாக்கப்பட்டவை அனைத்தும் வழிகேடாகும். வழிகேடுகள் அனைத்தும்

நரகில் கொண்டு சேர்க்கும். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்: நஸயீ 1560*

*

*மார்க்கம் என்ற பெயராலும் - நன்மைகள் என்ற பெயராலும் ஏதேதோ காரியங்களையும்,

வணக்கங்களையும் தம்மனம் போன போக்கில் தீர்மானித்துக் கொண்டு அவற்றை குறிப்பிட்ட

சில தினத்தில் - இரவில் செய்வதை சிறந்த அமல்களாக எண்ணி நம் சமுதாய மக்கள்

செய்து வருகின்றனர். அந்த செயல்கள்;யாவும் பாதுகாக்கப்பட்ட இறைவேதமாம்

அல்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது மாண்பு நிறைந்த மாநபி(ஸல்) அவர்களின்

வழிகாட்டுதலில் செயல்படுத்திக் காட்டப்பட்டுள்ளதா? என்பதையெல்லாம் ஆய்வு

செய்யாமல் கடமைகளாக சில காரியங்களை செய்து வருகின்றனர். அப்படிப்பட்ட

காரியங்களில் ஒன்றுதான் ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் கொண்டாடப்படும் ஷபே

பராத் (பராஅத் இரவு) ஆகும்.


ஒரு தினத்தை சிறப்பான தினம் அல்லது சிறப்பான இரவு என்று நாம் கூறவேண்டுமானால்

அதை கண்ணியமிக்க அல்லாஹ் நமக்கருளிய வேதத்தில் கூறியிருக்கவேண்டும். அல்லது

அவனது திருத்தூதர் நபி(ஸல்) அவர்கள் இனங்காட்டியிருக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில்...



*இரவை நீங்கள் அமைதி பெறுவதற்காகவும், பகலை வெளிச்சமுடையதாகவும் அவனே

அமைத்தான். செவிமடுக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 10: 67)*

*

*பகலையும், இரவையும் படைத்தவன் அல்லாஹ் மட்டுமே ஆவான். அந்த

படைப்பாளனுக்குத்தான் தெரியும் எந்த தினம் சிறந்தது, எந்த இரவு சிறந்தது என்று.

அப்படிப்பட்ட தினங்களையும், இரவுகளையும் வல்ல நாயன் நமக்கு அறிவித்துக்

கொடுத்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்! நபி(ஸல்) அவர்களும் செயல்படுத்திக்

காட்டியுள்ளார்கள்.



*• ஜும்ஆ தினத்தை சிறந்த தினமாக அல்லாஹ் அறிவித்துக் கொடுத்துள்ளான்!*

*

• ஹஜ்ஜுடைய தினங்களை கண்ணியமானதென அல்லாஹ் கூறுகின்றான்!

• இரு பெருநாட்களுடைய தினங்களை புனித நாட்களாக நபி(ஸல்) கூறுகின்றார்கள்!*

*

• ரமலான் மாதம் பற்றி அல்குர்ஆனில் விவரித்துக் கூறப்பட்டுள்ளது!*

*

• லைலத்துல் கத்ர் இரவை மகத்தான இரவாக அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்)

அவர்களும் கூறுகின்றார்கள். *

*

• குர்ஆன் அருளப்பட்ட மாதம் எது என்பது பற்றி அல்குர்ஆனில்

சொல்லப்பட்டுள்ளது! *

*

• ஷவ்வால் மாத ஆறு நோன்பு பற்றி மார்க்கம் சிலாகித்துச் சொல்கிறது.*

*

• ஆஷூரா தினம் பற்றி அறிவித்துக் கொடுக்கப்பட்டுள்ளது!*

*

• போர் செய்யக்கூடாத புனிதமாதங்கள் எவை என்பது வரையறுத்துச்

சொல்லப்பட்டிருக்கின்றது!*

*

• தவிர, ஒவ்வொரு நாளின் கடைசி இரவில் முதல் வானத்திற்கு அல்லாஹ் வந்து

நன்மாராயங்கள் கூறுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்!*

*

மேற்கூறப்பட்டுள்ள தினங்களில் எந்தெந்த மாதிரியான அமல்களை இஸ்லாமியர்கள்

செய்யவேண்டும்? அப்படி செய்வதால் எப்படிப்பட்ட நன்மைகள் அல்லாஹ்வின்

புறத்திலிருந்து கிடைக்கும் என்பதை எல்லாம் இஸ்லாம் தெளிவாக

எடுத்துச்சொல்லியுள்ளது.*



இப்படி அடையாளங் காட்டப்பட்டவைகள் எல்லாம் அல்லாஹ்வின் சின்னங்களாக, மார்க்க

அடையாளங்களாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அவைகளை கண்ணியப்படுத்துவது அல்லாஹ்வை

கண்ணியப் படுத்துபவையாக அமையும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அப்படி அல்லாஹ்வினாலும், அவனது தூதர்(ஸல்) அவர்களாலும் சிறப்புக்குரியது என்று

அடையாளங் காட்டப்பட்டுள்ள தினங்களிலும், இரவுகளிலும் இந்த பாரஅத் இரவு உள்ளதா?

அப்படி ஏதேனும் அறிவித்துக் கொடுக்கப்பட்டுள்ளதா? அதற்கென்று விசேஷ அமல்கள்

செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்வோமேயானால்,

அல்லாஹ்வின் வேதத்திலும் இல்லை! அண்ணலார்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலும் இல்லை

என்ற முடிவுக்குத்தான் வரமுடிகிறது.


இருப்பினும் பராஅத் இரவுக்கு ஆதாரங்கள் இதுவென்று சிலர் எடுத்து வைக்கும்

அனைத்து ஆதாரங்களும் இஸ்லாம் கூறும் அளவுகோல்களின்படி சரியான ஆதாரங்களாக இல்லை.

*முதல் ஆதாரம்!*


*தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம்

அருளினோம்.நாம் எச்சரிக்கை செய்வோராவோம்.அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும்

பிரிக்கப்படுகின்றன.(அல்குர்ஆன் 44:2-4) *

*

*திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்ட இரவைப் பற்றி இவ்வசனத்தில் அல்லாஹ்

கூறுகின்றான்.அதை பாக்கியமுள்ள இரவு என்றும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த

பாக்கியமுள்ள இரவு,பராஅத் இரவு தான் என்பது இவர்களின் வாதம்.திருக்குர்ஆனை

பொறுத்தமட்டில் ஒரு வசனத்தின் விளக்கத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ்

விளக்கும்.அந்த அடிப்படையில் இந்த வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு எது?என்பதை

தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும் வசனங்கள் அமைந்துள்ளன.


*மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)*


அது லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமலான்

மாதத்தில் தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகிறது.


*இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது)மனிதர்களுக்கு

நேர்வழி காட்டும்.நேர்வழியைத் தெளிவாகக் கூறும்.(பொய்யை விட்டு

உண்மையை)பிரித்துக் காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு

நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185) *

*

*இந்த மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமழான் மாதத்தில் உள்ள

லைலத்துல் கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவு அல்ல என்பது

மிகத் தெளிவாகத் தெரிகின்றது.எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள் காட்டும்

வசனத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.


*இரண்டாவது ஆதாரம்!*

*ஷஃபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று

வணங்குங்கள்.அந்தப் பகலில் நோன்பு பிடியுங்கள்.அந்த இரவில் இறைவன்

வானத்திலிருந்து இறங்கி வந்து பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின்

பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை

போக்குகிறேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு

உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்)

அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் அலீ (ரலி) நூல் :இப்னுமாஜா 1378*

*

*இது ஆதாரப்பூர்வமான ஹதீஸல்ல.இதன் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னு அபீ ஸப்ரா'

என்பவர் இடம் பெறுகிறார்.இவர் பலவீனமானவர் என்று இமாம் அஹ்மதும்,இப்னுல்

மயீனும் கூறியுள்ளார்கள்.


*மூன்றாவது ஆதாரம்!*


*அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு படுக்கையில் நபி(ஸல்)அவர்களை காணாமல்

வெளியே தேடி வந்தார்கள்.அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று

கொண்டிருந்தார்கள்.ஷஃபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி

கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை)

மன்னிக்கிறான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:ஆயிஷா (ரலி)

நூல் : திர்மிதி 670 இந்த ஹதீஸூம் ஆதாரப்பூர்வமானது அல்ல என்பதே

உண்மை.*

இதில் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் 'உர்வா'

விடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ் பின் அர்தாத் என்பவர் யஹ்யாபின்

அபீகஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம் புகாரி கூறிய கருத்தை பதிவு

செய்து இது பலவீனமான செய்தி என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம்

அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

*நான்காவது ஆதாரம்!*

நபி(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதை போன்று வேறு (எந்த

மாதத்திலும்) நோற்பவராக இருக்கவில்லை.ஏனெனில் (வரும்)வருடத்தில் மரணிக்கக்

கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும்

என்பதனால்தான். அறிவிப்பவர்: அதாஹ் பின் யஸார் நூல்: முஸன்னப் இப்னு

அபீஷைபா 9764,ஃபலாயிலுர் ரமலான் - இப்னு அபித்துன்யா

இத்தொடரில் வரும் அதாஹ் பின் யஸார் என்பவர் நபி (ஸல்)அவர்கள் காலத்தில்

வாழாதவர்.நபி(ஸல்) அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர்

விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.

*ஐந்தாவது ஆதாரம்!*

*ரமலான் மாதம் நடுப்பகுதி 15 ஆம் இரவிலும் ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15 ஆம்

இரவிலும் சூரத்துல் இஹ்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி யார் 100 ரக்அத்

தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தை கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர்

மரணிக்கமாட்டார். அறிவிப்பவர் : முஹம்மத் பின் அலீ நூல் : ஃபலாயிலுர் ரமலான் -

இப்னு அபித்துன்யா 9 *

* *

இத்தொடரில் வரும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி ஸல் அவர்கள் காலத்தில்

வாழாதவர்.நபி ஸல் அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர்

விடுபட்டுள்ளார். இச்செய்தி முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான

செய்தியாகும்.


மேலும் அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹஜ்ரத் அவர்கள் மூன்று யாஸீன்

ஓதுவார்கள். முதல் யாஸீன் பாவமன்னிப்பிற்காகவும், இரண்டாம் யாஸீன்

கப்ராளிகளுக்கு ஹதியாவாகவும், ஆயுள் நீடிப்பிற்காகவும், மூன்றாம் யாஸீன்

பரக்கத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதுவார்கள்.


அந்நாளில் 100 ரக்அத்கள் கொண்ட விசேஷத் தொழுகையும் நடைபெறும். வேறு சில

ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட தொழுகையும் உண்டு.

இப்படியாக பராஅத் இரவு அன்று வணக்கம் என்ற பெயரில் மேற்கூறப்பட்ட ஆதாரத்தின்

அடிப்படையில் நம் சமுதாய மக்கள் சில அமல்களை செய்து வருவதை பார்க்கின்றோம்.

ஆனால், வல்ல அல்லாஹ் வணக்கங்களை இலகுவானதாகவும் வழமையாக செயல்படுத்தும்

விதத்திலும் மனிதர்களுக்கு அருட்செய்துள்ளான். அவற்றின் நோக்கங்களையும்,

கூலிகளையும் உயர்ந்த தரத்தில் மனிதர்களுக்காக அமைத்துள்ளான்.


ஆனால் இந்த மனிதர்களோ வணக்கங்களை கடினமானதாகவும் என்றோ ஒருநாள் மட்டும்

மாய்த்துக் கொள்ளும் விதமாகவும் கண்ணியமிக்க அல்லாஹ்வின் பெயராலேயே

அரங்கேற்றுகின்றனர். இதுதான் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் முறையா?!

என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்!

*மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்...

ஷஃபானின் மத்திய நாள் வந்துவிட்டால் ரமலான் வரும் வரை நோன்பு வைக்காதீர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: அஹ்மத் 9330*

*

*பெருமானாரின் கட்டளை இவ்வாறிருக்க அதற்குமாறாக இவர்கள் ஷஃபானின் மத்திய நாளான

பிறை 15ல் நோன்பு நோற்க வேண்டுமாறு வலியுறுத்துகின்றனர். இது இறைத்தூதரை

பின்பற்றும் முறையாகுமா?!


*வல்ல இறைவன் தன் திருமறையில்...

'இந்த தூதர் (முஹம்மத்) உங்களுக்கு சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய

மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான்.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச்

சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு

முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்'. (அல்குர்ஆன் 22:78)*

*

*மார்க்கத்தில் புதிதாக நுழைந்தவைகள் பற்றி நபி(ஸல்) அவர்கள் கடுமையாக

எச்சரிக்கை செய்துள்ளார்கள்.


*'''செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில்

மிகவும் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது

(மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள்

அனைத்தும் பித்அத்துகளாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு

வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்' அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) நூல்:

நஸயீ 1560*

*

* பராஅத் இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை

அல்ல. எனவே இவர்கள் ஒரு புதுமையான காரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.எனவே

அல்லாஹ்வுக்கு பயந்து அவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டும். வல்ல அல்லாஹ் நம்

அனைவரையும் அவனது உண்மையான மார்க்கத்தின் வழி நடக்க நல்லருள் செய்வானாக!

thanks namakkul islam group

ஜனாஸா அறிவித்தல்

அல்பத்திரியா மகாவித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்ற திகாரியைச் சோந்த நயிம் ஆசிரியர் அவர்கள் காலமானார். ஆன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று (2010.07.26)  மாலை 5.00 மணிக்கு திகாரிய ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்லா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

தகவல் மௌலவி முஜீப்

ஒரு குத்துச்சண்டை வீரரின் அழுகை!

அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் உம்ரா பயணத்திற்காகக் கடந்த ஞாயிறன்று (04-07-2010) சவூதிக்குச் சென்றுள்ளார். இஸ்லாத்தை அவர் ஏற்றபின்பு தன் பெயரை, மாலிக் அப்துல் அஜீஸ் என்று மாற்றிக் கொண்டார்.
இதேபோன்று 20 ஆண்டுகளுக்கு முன்னர் மைக் டைசனின் முன்மாதிரி வீரராகத் திகழ்ந்த முஹம்மது அலீயும் இஸ்லாத்தை ஏற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. காஸியஸ் மார்ஸெலஸ் க்ளே என்ற பெயரை இஸ்லாத்தை ஏற்றவுடன் முஹம்மத் அலீ என்று மாற்றிக் கொண்டிருந்தார் அவர்.

உம்ரா பயணத்திற்கு வந்திருந்த மைக் டைஸன், மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக்கழகத்திற்கும் வருகை தந்தார். அவரது வருகையின்போது இஸ்லாமியப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத் தலைவர் டாக்டர் முஹம்மத் அல் ஒக்லா மற்றும் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் பயிலும் அமெரிக்க மாணவர்களைச் சந்தித்தார்.

நபி(ஸல்) அவர்களின் பள்ளிவாசல் அருகில் மைக் டைசன் தங்கியிருந்த இடத்திலும் அவரைக் காண்பதற்குப் பெருங்கூட்டம் அலைமோதியது.

"என்னுடைய ரசிகர்கள் சவூதியில் இத்தனை பேர் இருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது! என்றாலும், இறை இல்லத்தை தரிசிக்கவும் என்னுடைய இறைவழிபாடுகளை அமைதியான முறையில் நிறைவேற்றவும் இடையூறு செய்யாமல் என்னைத் தனித்து விடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார் டைசன்.

"இறை இல்லங்களை நேரில் தரிசிக்கையில் என்னால் கண்ணீரைக் கட்டுப் படுத்த முடியவில்லை" என்பதே அவரின் தொடர்ச்சியான கூற்றாக இருந்தது.

மைக் டைசனின் உம்ரா பயணத்திற்கான ஏற்பாடுகளை சவூதியில் உள்ள கனேடியன் தஃவா அஸோசியேஷன் அமைப்பின் தலைவரான ஷெஹஜாத் முஹம்மத் அவர்கள் செய்துள்ளார்கள்.
"ஓய்வு பெற்ற குத்துச் சண்டை வீரர் என்றாலும் இன்னும் பிரபலமான நட்சத்திரமாக மின்னிக் கொண்டிருக்கும் மைக் டைசன், எவ்வித ஆரவாரமும் இன்றி மிக எளிமையாக, மக்காவில் மற்ற உம்ராப் பயணிகளுடன் இரண்டறக் கலந்து பலமணி நேரம் தொடர்ச்சியாக தொழுதும், குர்ஆன் ஓதியும், பிரார்த்தித்தவாறும் அவரது உம்ராவை அமைதியாக நிறைவேற்றினார்" என்றார் ஷெஹஜாத்.

"மதீனாவில் நபி (ஸல்) அவர்கள் அடங்கப்பட்டிருக்கும் இடத்தின் அருகில் நின்று தன் கைகளை உயர்த்தி இறைவனிடம் பிரார்த்தித்தவாறு டைசன் அரை மணி நேரத்திற்கும் மேலாகக் கதறி அழுது துஆ கேட்டுக் கொண்டிருந்தது எங்களுக்கெல்லாம் மிகுந்த நெகிழ்ச்சியைத் தந்தது" என்கிறார் ஷெஹஜாத்.
மைக் டைசன் என்ற மாலிக் அப்துல் அஸீஸின் வாழ்க்கை, இந்தப் புனிதப் பயணத்திற்குப் பின்னர் இறைவழியில் புத்துணர்ச்சியுடன் பயணிக்க www.kahatovita.co.cc பிரார்த்திக்கிறது.


via சத்தியமார்க்கம்.காம்

கஹட்டோவிட அல்பத்ரியாவிலிருந்து 3 மாணவர்கள் மாத்திரமே பல்கலைக்கலகம் தெரிவு

கடந்த 2009ம் வருடம் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அல் பத்ரியா மஹாவித்தியாலயத்தின் கலைப்பிரிவில் தோற்றிய 22 மாணவர்களுள் 3 போ் பல்கலைக்குத் தெரிவாகியுள்ளனர். கடந்த 2008ம் வருடம் கலைப்பிரிவில் தோற்றிய 30 போ்களுள் 06 போ் பல்கல்கலைக்குத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பல வருடங்களாக ஆண் மாணவர்கள் எவரும் பல்கலைக்குத் தெரிவாகாமை கவலை தரும் ஒரு விடயமாகும். மேலும் பாடசாலையின் வர்த்தகப் பிரிவிலிருந்து பல்கலை தெரிவாகும் மாணவர்கள் எவரும் இல்லாமலிருப்பதும் பாரிய ஒரு பின்னடைவே. பாடசாலையின் கடந்தகால வரலாறுகளை பின்னோக்கிப் பார்க்கும்போது பாடசாலையின் தற்போதைய கல்வி நிலை மந்த கதியில் உள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.
எது எப்படியிருப்பினும் ஆசிரியர்களுடன் பெற்றாரும் கைகோர்த்து மாணவா்களின் கல்வி நிலையை தரமுயர்த்த ஒரு கூட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் சிறந்ததென கஹட்டோவிடாவின் கல்வியயலாளர்களின் வட்டம் கருத்துத் தெரிவித்துள்ளது.

பாலகுமாரன், யோகி பற்றித் தெரியாது

 
தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர் விபரங்களை வெளியிட அரசு மறுத்து வருகிறதுகடந்த சில தினங்களில் போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது.

இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் ட்யூ குணசேகரா அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

தெள்ளிப்பளையில் இடம் பெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிகளும் அவரை சந்தித்துள்ளனர்.

இச்சந்திப்பின் போது இவர்கள் தமது கணவர்கள் குறித்து தம்மிடம் ஏதும் பேசவில்லை என்றும், திருமதி பாலகுமார் மட்டும் தமது குழந்தைகள் குறித்து தம்மிடம் கேட்டதாகவும் அமைச்சர் ட்யூ குணசேகர தமிழோசையிடம் கூறியுள்ளார்.

அதே போல யோகியின் மனைவி தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படி கோரியதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

 பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது
 
அமைச்சர் ட்யூ குண்சேகர

போரின் இறுதியில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டது. ஆனால் அதில் பாலகுமார் மற்றும் யோகியின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இவர்களும் வேறு சில தலைவர்களும் அரச படையினரிடம் சரணடைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பும் இவர்கள் சரணடைந்ததாக கூறியிருந்தது.

எனினும் பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறும் ட்யூ குணசேகர அது தொடர்பான விவாதத்தில் இறங்கத் தான் தயாராக இல்லை எனவும் கூறுகிறார்.

அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பராமரிப்பது மட்டுமே தமது பொறுப்பு என்றும், அவர்களின் விசாரணை தொடர்பான விடயங்கள் தனது அதிகார வரம்புக்குள் வராது எனவும் அவர் கூறுகிறார்.

இலங்கை அரசு சுமார் 8000 போராளிகள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அது தொடர்ந்து மறுத்து வருகிறது.

ஜனாஸா அறிவித்தல்

ஓகடபொலையைச் சேர்ந்த ஆபிதா உம்மா அவர்கள் காலமானார். அன்னர் மர்ஹ_ம் முஹம்மட் மஹிடீன் அவர்களின் அன்பு மனைவியும் பாதிமா நிஹாரா, கமருன் நிஸா, சித்தி ஸரீனா, மொஹமட் பஹ்மி(ஜிம்), மொஹமட் நசார் ஆகியோரின் அன்புத் தாயாருமாவார். அன்னாரின் ஜனாஸர்; இன்றிரவு 10 மணயளவில் மஸ்ஜிதுன்நூர் ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹ{டைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!

அணிசேரா நாடுகளுக்குள் முரண்பாடு : இலங்கைக்கு முட்டுக்கட்டை

  இலங்கை பற்றியும் இலங்கையின் பொறுப்புச் சொல்லும் கடப்பாடு தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கென ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழு வுக்கு எதிராக அணிசேரா இயக்கத்தினால் வரையப்பட்ட கடிதம் பற்றியும் நேற்று முன்தினம் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு முன்பாக இடம்பெற்ற மதியநேர விளக்கவுரையின் போதும் பின்னர் மேல் மாடியில் நெல்ஸன் மண்டேலாவின் 92ஆவது ஜனன தின வைபவத்தின் போதும் சரமாரியாக கேள்விக் கணைகள் தொடுக்கப்பட்டன என்று ஐக்கியநாடுகள் வளாக ஊடகமான இன்னர் சிற்றி பிறெஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதன்முதல் இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் மெத்த்தியூ ரஸ்ஸல் லீயினால் பெறப்பட்டு பிரத்தியேகமாக பிரசுரிக்கப்பட்ட அணிசேரா இணக்கத்தின் நகல் கடிதம், அணிசேரா இயக்கத்தின் ஒரு அங்கத்துவ நாடான கௌதமாலாவின் எதிர்ப்பு காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐக்கியநாடுகள் ஸ்தாபனத்தின் விசாரணைகளுக்கு தடங்கல் விளைவிக்க கூடாது என்று கௌத்தமாலா தெரிவித்துள்ளது. இயக்கத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் இலங்கையை "பாதுகாப்பதற்கான பொறுப்பு' என்ற சொற்பதங்கள் அடிக்கடி கேட்டன என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் செய்தியாளர் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகள் ஏகமனதாக இல்லாவிட்டாலும் அநேகமான நாடுகள் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை ஏற்க மறுப்பு தெரிவிக்கின்றன. ஆனால் அணிசேரா இயக்கத்தின் தீர்மானங்களுக்கு சகல அங்கத்துவ நாடுகளினதும் இணக்கப்பாடு அவசியமாகும் என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

காஸாவுக்கான நிவாரணப் படகுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகள் குறித்து இஸ்லாமிய மாநாட்டு நிறுவனத்துடன் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளே இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பை கோரும் முயற்சிகள் தாமதமடையக் காரணம் என்று இலங்கையும் பல அணிசேரா நாடுகளும் கூறுகின்றன. ஆனால் இலங்கையை பாதுகாப்பதற்கான பொறுப்பு தற்போது அணிசேரா நாடுகளின் குழப்பநிலையில் சிக்கியுள்ளது என்றும் இன்னர் சிற்றி பிறெஸ் தெரிவிக்கிறது.

அணிசேரா இயக்கத்தை பொறுத்த வரையில், இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை எகிப்திற்கு அடுத்து ஈரான் ஏற்றுக் கொள்ளும் என்பது தற்போது உறுதியாக இல்லை என்று பிறெஸ் தெரிவித்துள்ளது. பாரசீக குடாவை சேர்ந்த மன்னராட்சி நாடுகள் கூட்டமைப்பும் ஆபிரிக்க ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத அரேபியாவின் மக்றெப் பிராந்திய நாடு ஒன்றும் ஈரானின் தலைமைத்துவத்தை எதிர்க்கின்றன. அணிசேரா நாடுகள் இயக்கத்திற்கு ஈரான் தலைமைதாங்க விரும்பிய போது வெனிசுவேலா 77 நாடுகள் குழுவுக்கு தலைமை தாங்க விரும்பியது.

செயலாளர் நாயகம் பான் கீமூனின் ஆலோசனைக்குழு தற்போது 8 அங்கத்தவர்களைக் கொண்ட குழுவாக விஸ்தரிக்கப்பட்டு நவநீதம்பிள்ளையின் நியூயோர்க் பிரதிநிதியாக சேவையாற்றி அண்மையில் விலகிய ஜெஸிகா நியூறித் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை இன்னர் சிற்றி பிறெஸ் வியாழக்கிழமை பிரத்தியேகமாக அறிவித்திருந்தது.

ஊழல் எதிர்ப்பு, குடும்ப ஆட்சி எதிர்ப்பு கொள்கையுடைய நியூறித்தின் நியமனம் ராஜபக்ஷாக்களின் ஆதரவாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்றும் பிறெஸ் தெரிவித்துள்ளது. இந்த ஆதரவாளர்கள் இப்பொழுது இன்னர் சிற்றி பிறெஸ் அசிக்கைகளுக்கம் அப்பால் சென்று நவநீதம்பிள்ளைக்கும் நியூறித்துக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். இந்த மாதிரியான அரசியலையே ராஜபக்ஷக்கள் நடத்துகிறார்கள் என்றும் பிறெஸ் தெரிவித்தது.

மற்றுமொரு விவாதம் அவர்கள் முன்வைத்தது என்னவெனில், நிபுணர்கள் குழுவுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட மர்சூகி தருஸ்மன் முன்னர் இலங்கை நியமித்த சர்வதேச குழுவில் கடமையாற்றிவிட்டு அவருக்கு சேரவேண்டிய கட்டணத்தை பெறுவதற்காக தேவையற்ற விடயங்களை முன்வைத்து இலங்கையுடன் முரண்பட்டுக் கொண்டார் என்றும் தெரிவித்தார்கள். மேலும், விசாரணைக்குழு பொறுப்பு சொல்லும் கடப்பாடு பற்றிய பிரச்சினையை எழுப்பாத பட்சத்தில் குடும்ப ஆட்சி, ஊழல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள தாம் விரும்புவதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் கைது

  ஆபாசப் படம் பார்த்த பாடசாலை மாணவர்கள் 20 பேர் குருநாகலைப் பொலிஸாரால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இணையத்தள முகவர் நிலையம் ஒன்றில் பாடசாலை மாணவர்கள் ஆபாசப் படக்காட்சிகளைக் பார்த்துக் கொண்டிருந்த போது குருநாகல் பொலிஸார் நிலையத்ததை முற்றுகையிட்ட வேளையில் பாடசாலை மாணவர்கள் 20 பேரையும் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் 12 கிலோ கிராம் கஞ்சாவையும் அங்கிருந்து கைப்பற்றியள்ளனர்.

2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்' பாவனையை விட்டு விலகுவதாக எச்சரிக்கை

அகற்றப்பட்ட 4 இஸ்லாமிய பக்கங்களை மீண்டும் கொண்டுவரப்படாதவிடத்து 2.5 மில்லியன் முஸ்லிம்கள் 'பேஸ்புக்'கிலிருந்து விலகிவிடுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பல 'பேஸ்புக்' பக்கங்களில் ஒரே மாதிரியான விளம்பரங்களை இவர்கள் விடுத்திருக்கிறார்கள். அவ்விளம்பரத்தில், 'பேஸ்புக்' நிறுவுனரான மார்க் ஸக்கர்பேக் மற்றும் 'பேஸ்புக்'கின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் ஆகியோர், 2.5 மில்லியன் முஸ்லிம்களின் உணர்வை உதாசீனம் செய்வதாக குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.

மிகப் பிரபலமான இஸ்லாமிய பக்கங்கள் நான்கு அகற்றப்பட்டதையிட்டு இஸ்லாமிய சமுதாயம் கோபமாக உள்ளது. இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாதவிடத்து பேஸ்புக்கினை பயன்படுத்தும் முஸ்லிம்கள், இஸ்லாமிய மாற்று வலையமைப்புகளுக்கு மாறிவிடுவர் எனவும் அவர்கள் மேலும் எச்சரிக்கின்றனர்.

இஸ்லாத்துக்கு எதிரான விமர்சனங்களை 'பேஸ்புக்'கில் பதிவிடுவது 'பேஸ்புக்' சட்டங்களுக்கு எதிரானது என விதிக்க வேண்டும் என்பதும் இக்கடிதத்தில் உள்ள இன்னொரு கோரிக்கையாகும்.

இலங்கையில் பேஸ்புக்கினை தடைசெய்யக்கோரி முறைப்பாடு

இன்சுலின் கண்டுபிடித்தது எப்படி?!

தற்போது உலகையே பயமுறுத்திக் கொண்டிருக்கும் நோய்களில் முக்கியமானது நீரிழிவு.


இன்சுலின் கண்டுபிடிப்புக்கு முன்பு, எந்த மருத்துவ ஆய்வும் நீரிழிவுக்கு தீர்வு சொல்ல முடியாத நிலையில், பிரெட்ரிக் கிராண்ட் பேண்டிங் மற்றும் ஜான் ஜேம்ஸ் ரிச்சர்ட் மேக்லியோட் ஆகிய இருவரும், தங்களது தீவிர முயற்சியால் இன்சுலினைக் கண்டுபிடித்தனர்.

இதில் ஒருவரான பேண்டிங்-ஐ சின்ன வயதிலேயே நீரிழிவு நோய் தாக்கியது. 1916-ம் ஆண்டில் இந்த நோய்க்கு எந்த தீர்வும் கண்டுபிடிக்காத நிலையில் பேண்டிங் திணறினார்.

உடலுக்குள் செலுத்தப்படும் புது கணைய நீரானது நோயாளியின் உடலிலேயே சுரந்து கொண்டிருக்கும் பழைய கணைய நீரோடு இணைந்து செயல் பட்டால் பிரச்சினை இல்லை என்ற தேடுதலோடு பல மருத்துவ ஏடுகளை புரட்டினார்.

பல விஞ்ஞானிகளோடு ஆலோசித்தார். அப்போது பேண்டிங்குக்கு வரப்பிரசாதமாய் ஒரு கட்டுரை கிடைத்தது.

அதில் சில புதிய விஷயங்கள் கிடைத்தன. மேலும் நீரிழிவு நோய் குறித்த ஆழ்ந்த ஆய்வுகளையும், கட்டுரை விளக்கங்களையும் அளித்து வந்த மேக்லியோட்டின் அறிமுகம் கிட்டியது.

இருவரும் இணைந்து தீவிரமான ஆராய்ச்சி மேற்கொண்டனர். பேண்டிங் தடுமாறும்போதெல்லாம் தூக்கிவிட்ட மேக்லியோட்டின் துணையோடு, 1922-ம் ஆண்டில் கற்பனைப் பொருளாக இல்லாது நிஜத்தில் உருவானது இன்சுலின்!

ஆரம்ப காலத்தில் கணைய சுரப்பிகளில் நார் கட்டி செய்யப்படும் சிகிச்சைக்குப் பிறகு வெளியிலிருந்து இன்சுலின் ஏற்றப்பட்டு நீரிழிவு நோய்க்கான சிகிச்சை மேற்கொள்ளப் பட்டாலும் பிற்காலத்தில் மருத்துவ உலகில் நடந்த பெரும் ஆராய்ச்சிகள் நார் கட்டும் சிக்கலிலிருந்து விடுதலை பெற்றுத் தந்துள்ளன.

ஆனால் அதற்கு பின் ஏற்பட்ட அத்தனை முன்னேற்றங்களும் இன்சுலீன் எனும் அஸ்திவாரத்தின் மீது தான் நின்று கொண்டிருக்கின்றன.

இன்சுலின் கண்டுபிடித்திருக்காவிட்டால் நீரிழிவு நோய்க்கான சிகிச்சை முன்னேற்றங்கள் நடந்திருக்காது. இத்தகைய அற்புத கண்டுபிடிப்புக்காக பேண்டிங் மற்றும் மேக்லியோட் இருவருக்கும் 1923-ம் ஆண்டு, மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பேருவளை முஸ்தபவிய்யா தரீக்காவின் 131ஆவது வருடாந்த கந்தூரி வைபவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க பேருவளை, மாளிகாச்சேனையிலுள்ள பைதுல் முபாரக் முஸ்தபவிய்யா புகாரி தரீக்காவின் 131ஆவது வருடாந்த புகாரி கந்தூரி தமாம் வைபவம் நாளை மறுதினம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.


மேற்படி மஜ்லிஸ் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி அதிகாலை ஸூபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 30 நாட்கள் தொடர்ந்து நடபெற்ற நிலையில் இம்மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.


இதனை, கத்ரியதுன் நபவிய்யா தரிக்காவின் ஆன்மிக்த் தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷக் அஹ்மத் இப்னு முஹம்மத் நாயகம் தலைமை தாங்கி நடத்தி வைக்கவுள்ளார்.
இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டுச் சக்திகள் எனது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன - அமைச்சர் விமல்

"வெளிநாட்டுச் சக்திகள் எனது அமைச்சுப் பதவியைப் பயன்படுத்தி ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கின்றன.
எனது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்கு எனது அமைச்சுப் பதவி தடையாக இருந்தால் நான் அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறேன்" என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

இரண்டாவது நாளாகவும் உண்ணாவிரதமிருந்துவரும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தனது இராஜினாமா குறித்து ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்ஸவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விமல் வீரவன்ஸ உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் இடத்தில் செய்தியாளார் சந்திப்பொன்றை நடத்திய தே.சு.மு. பேச்சாளர் எம். முஸம்மில், விமல் விமல் வீரவன்ஸவின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் இலங்கை தொடர்பான நிபுணர் குழுவை பான் கீ மூன் வாபஸ் பெறும்வரை விமல் வீரவன்ஸ உண்ணாவிரதத்தை தொடர்வார் எனக் கூறியுள்ளார்.

இலங்கையின் முதலாவது கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றி _

 

 

  இலங்கையின் வைத்திய வரலாற்றில் முதன் முறையாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை வெற்றியளித்துள்ளது.

 

இதன் மூலம் தேசிய வைத்தியசாலை மாபெரும் சாதனை படைத்திருக்கின்றது.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்தியர் மந்திக விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரே இந்த சத்திர சிகிச்சையினை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

 

40 வயதான ஒரு நோயாளிக்கு இந்த மாற்று கல்லீரல் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

 

மூளை செயலிழந்து வாழ முடியாத நிலையிலிருந்த நோயாளி ஒருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட கல்லீரல் ஒன்றே மேற்படி நபருக்குப் பொறுத்தப்பட்டுள்ளது.இவரிடமிருந்து சிறுநீரகமும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த சத்திர சிகிச்சைக்காக 24 மணி நேரம் செலவிடப்பட்டதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர கண்காணிப்புப் பிரிவின் பணிப்பாளர் டாக்டர் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

 

கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொள்ள இதுவரையில் சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கே பயணிக்க வேண்டிய நிலை இருந்தது. இதற்கு சுமார் 5 மில்லியன் ரூபா வரையில் செலவிட வேண்டியும் இருந்தது.

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அரிய சாதனை இந்நிலைமையை மாற்றியமைத்துள்ளது.

சார் லங்கா குடியேற்றத்திட்டப் பள்ளிவாசல் விஸ்தரிப்புப் பணி ஆரம்பம்

கஹட்டோவிட குரவலானப் பிரதேசத்தில் அமைந்துள்ள சார்லங்கா என அழைக்கப்படும் ”அஹ்மட் விலேஜ்” , வெள்ளவத்தை ரோஹினி வீதியில் அமைந்துள்ள CIS நிறுவனத்தினால் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்ற ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில் வசிக்கின்ற கஹட்டோவிடாவையும் ஏனைய பகுதிகளையும் சோ்ந்த மக்களின் நலன் கருதி CIS நிறுவனத்தின் வேண்டுகோளிற்கிணங்க கொழும்பு SFRD நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்று காலை (01.07.2010) விஸ்தரிப்புப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வைபவத்தில் CIS அஹ்மத் விலேஜிற்கான நிர்வாகி அஷ்ஷைக் நிஸாம் (நளீமி) , SFRD இன் பிரதிநிதி அஷ்ஷைக் பாயிஸ் (நளீமி), சார்லங்காப் பள்ளிவாசல் பேஷ் இமாம் மௌலவி M.S.A றிபாய் உட்பட இப்பகுதி சகோதரர்கள் கலந்து கொண்டனர். இப்பள்ளிவாசலின் நிர்வாகப் பணி ஒரு சிலரின் தனிப்பட்ட நலனிற்காக  நடைபெறுகிறது என எமதூரின் ஒரு சில இணையத்தளங்கள் விசமப் பிரசாரம் செய்துள்ள நிலையில் CIS நிறுவனம் இப்பணியை நேரில் அவதானித்து உத்தியோகபுர்வமாக இதற்கான  ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!

dogநாயொன்று மூன்று பூனைக்குட்டிகளை ஈன்றுள்ள சம்பவம் கம்பளை வெலிவேரிய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது .

தனது நாய் மூன்று பூனைக்குட்டிகளை பிரசவித்திருப்பதாக அதன் உரிமையாளரான ஜி.கே. சோமதாச தெரிவித்துள்ளார். இவ்வாறு பிறந்த மூன்று பூனை குட்டிகளில் ஒன்று பின்னர் இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த அதிசயப் பூனைக்குட்டிகளைப் பார்ப்பதற்காக மக்கள் வந்தவண்ணம் உள்ளனர். எஞ்சிய குட்டிகள் இரண்டும் ஆரோக்கியத்துடன் இருப்பதாக உரிமையாளர் குறிப்பிட்டார்.

எனினும் இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த விஞ்ஞானிகள், இது சாத்தியமற்ற ஒன்று என்றே கூறியுள்ளனர்.