கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சென்ற முறை தடுக்கப்பட்ட கண்காட்சி அதே இடத்தில் இம்முறை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கஹடோவிட வாழ் பெண்களின் சுய திறமையை விருத்தி செய்து சுய தொழிலுக்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கத்தோடு கடந்த சில வருடங்களாக பல பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவ்வாறான ஒரு தையல் பயிற்சி நெறி கடந்த 3 மாதங்களாக நடாத்தப்பட்டு, பயிற்சி நெறியின் நிறைவாக தமது ஆக்கங்களைக் கொண்டு  ஒரு கண்காட்சி 31.01.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கஹடோவிட மாதர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பயிற்சி நெறியின் வகுப்புக்கள் சில அரசியல் காரணங்களுக்கா சகோதரர் அஷபா (சியாட் ஹமீத்) அவர்களுடைய வீட்டில் நடைபெற்றுள்ளது.


இதேபோன்று சென்ற முறை கஹடோவிட பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்று வந்த தையல் பயிற்சிநெறியின் இறுதியில் நடாத்தப்படவிருந்த கண்காட்சியும் பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும்,  அரசியல் தலையீடுகாரணமாக இக்கண்காட்சி இறுதிநேரத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது. இவ்விழாவை  நடாத்துவதற்கு ஊரிலுள்ள சில அரசியல் காமுகர்களால் தடைகள் ஏற்படுத்தப்பட்டது மட்டுமின்றி இச்சான்றிதல் வழங்கும் வைபவம் பாடசாலையில் நடந்தால் கல்லுாரி அதிபரை இடமாற்றம் செய்வதாகவும்,  அத்தோடு இந்த இலவச தையல் வகுப்பை முன்னின்று நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளித் தலைவருக்கும்  மிரட்டலும் விடுக்கப்பட்டுருந்தது ஊா் அறிந்த விடயம். எனவே ஊருக்கு ஒரு நலவு நடக்கும் போது அதை அரசியல் ரீதியாக   தொடர்புபடுத்தி செய்யவிடாமல்   தடுப்பது மிகவும் முட்டாள்தனமானதும்  வெறுக்கத்தக்கதுமான ஒரு செயலாகும்.

நேற்று நடந்த கண்காட்சியில் பயிற்சி நெறியில் பங்குபற்றிய பலரின் ஆக்கங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும (Hon. Ajith Mannapperuma) அவர்கள் இப்பயிற்சி நெறிக்கான நிதியை ஒதுக்கியமை மாத்திரம் அல்லாமல் கண்காட்சியை பார்வையிடுவதற்காகவும் வருகை தந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





பழைய நினைவுகளில் ஒன்று - S.W.R.D பண்டாரநாயக்கவுக்கு எமது ஊரோடு உள்ள தொடர்பு

எமது ஊரின் இரு கண்களாகத் திகழும் இரு பாடசாலைகளும் பல்வேறு சாவால்களை எதிர்நோக்கி, தற்போது ஊரிற்கு பல கல்விமான்களை வழங்கி மிகப்பெரும் சேவைகளைச் செய்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் எமது ஊரின் பெண்கள் பாடசாலையான பாலிகா வித்தியாலயத்தின் வரலாற்றுப் பக்கத்திலிருந்து ஒரு நிகழ்வை எமது வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.


பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக தற்காலிகக் கட்டடம் ஒன்றில்  ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 1945ம் ஆண்டு அரசினால் பொறுப்பேற்கப்பட்டது. 1954ம் ஆண்டு வீசிய பெரும் புயல் காற்றொன்றினால் இதன் தற்காலிகக் கட்டடம் சரிந்து விழவே புதிய நிரந்தரக் கட்டிடம் ஒன்றை அரசின் மூலமாக பெற்றுக்கொள்ள ஊரார் பெரும் முயற்சிசெய்தனர்.

இந்தவிடயம் பண்டாரநாயக்காவின் காதுகளுக்கு எட்டவே, புதிய கட்டடம் ஒன்றுக்கு அத்திவாரம் இடப்பட்டு 1957ம் ஆண்டு அன்றைய பிரதமா் S.W.R.D பண்டாரநாயக்காவினால் திறந்து வைக்கப்பட்டது.  திறப்பு விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்கள, முஸ்லிம் மக்கள் சமூகமளித்திருந்ததாகவும், இதில் சிறப்பு விருந்தினர்களாக அன்றைய கல்வி அமைச்சராக இருந்த W. தகநாயக்க, W.W. கண்ணங்கர, சேர் ராசிக் பரீத், J.B. ஒபசேகர போன்று இன்னம் பல பிரமுகர்கள்  கழந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.



உலக அழிவு நெருங்குகின்றது! ஒரு முஸ்லிம் இளைஞன் , அதுவும் தன் மனைவியுடனான அந்தரங்க வீடியோவை பெரும் விலைக்கு விற்றிருக்கிறான்

ஆக்கம் நீக்கப்பட்டுள்ளது.

இதில் இருவருமே குற்றவாளிகள் என்பதால், ஒருவரை மட்டும் குறிவைத்து தாக்குதல் நடத்துவதுடன், மற்றவர் மீது அனுதாபம் காட்டுவது, இஸ்லாம் கற்றுத் தந்த நீதியல்ல.
உமர் (ரலி) அவர்கள் சொன்னார்கள், "தனது ஒரு கண் பிடுங்கப்பட்ட நிலையில் ஒருவன் இரத்தம் வடிய வடிய வந்து நீதி கேட்டாலும், அவனது எதிரி வரும் வரை நீ அவனுக்கு நீதி வழங்கிவிடாதே, ஏனெனில் அவனது எதிரி ஒருவேளை இரண்டு கண்களும் பிடுங்கப்பட்ட நிலையில் வரக்கூடும்".

பிரதம நீதியரசர் மொஹான் பீரிசுக்கு சட்டம் புகட்டப்பட்ட விதம்

புதிய அரசு ஆட்சியமைத்ததிலிருந்து நேற்று இரவு வரை கௌரவமாக பதவி விலகிச்செல்லும்படி ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்துப் பிரிவினரும் முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்த நிலையில் தொடர்ந்தும் பதவியில் நீடிப்பதற்கு மொஹான் பீரிஸ் எடுத்த முயற்சியை சட்டத்தில் உள்ள ஓட்டையைக் கொண்டே முறியடித்துள்ளது புதிய அரசாங்கம்.


இதனடிப்படையில், 2013ம் ஆண்டு பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவின் பதவி பறிக்கப்பட்டதன் பின்னணியில் சட்டத்தை விட அதிகார துஷ்பிரயோகமும் ஆட்சியாளர்களின் அச்சுறுத்தலும் தலைவிரித்தாடியிருப்பதை அறிந்து கொள்ளலாம்.

சட்டவல்லுனர்களின் கருத்துப்படி 2013ம் ஆண்டு பாராளுமன்றத்திடமிருந்து உத்தியோகபூர்வ கோரிக்கை எதுவுமின்றியே சிராணி பண்டாரநாயக்கவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்த பிரேரணையில் எந்த இடத்திலும் அவரது பதவி பறிக்கப்பட வேண்டும் என்ற விடயம் அடங்கியிருக்கவில்லையெனவும் இவ்விடயத்திற்கு அப்போதே பாராளுமன்றில் எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டிருந்தமையையும் சுட்டிக்காட்டியுள்ள சட்ட வல்லுனர்கள், குறிப்பிட்ட கோரிக்கையில்லாது பிரதம நீதியரசரின் பதவி பறிக்கப்பட்டமை செல்லுபடியாகது என ஜனாதிபதி மைத்ரியிடம் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி இன்று மொஹான் பீரிசை நியமித்தமை சட்டவிரோதமானது என்பதால் சிராணி பண்டாரநாயக்கவே இப்போதும் பிரதம நீதியரசர் என ஏற்றுக்கொண்டு அதற்கான உத்தரவை வழங்கியுள்ளார்.
இதற்கிடையில் கடந்த பல மாதங்களாக பிரதம நீதியரசராகக் கடமையாற்றிய மொஹான் பீரிசின் தீர்ப்புகள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ள சட்டத்தரணிகள் சங்கம், இலங்கை அரசியல் சட்டம் 119(2)க்கமைய பிரதம நீதியரசர் விவகாரம் சர்ச்சைக்குள்ளாகியிருந்த நிலையில் அவர் ஒரு சட்டபூர்வமாக நியமிக்கப்படா இடைக்கால பிரதம நீதியரசர் என்பதால் அவரது தீர்ப்புகள் செல்லுபடியாகும் எனவும் ஆனாலும் சட்டபூர்வமான முiறியல் நீதியரசர் நியமிக்கப்படுகையில் அவர் அந்தப் பதவியை இழக்கிறார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்நிலையிலேயே இன்று மீண்டும் பிரதம நீதியரசராகத் தன் கடமையைத் தொடரும் சிராணி பண்டாரநாயக்க நாளைய தினம் சம்பிரதாயபூர்வமாக தனது இராஜினாமாவைக் கையளித்து ஓய்வு பெறுவார் எனவும் இதன் மூம் முன்னாள் நீதியரசர் எனும் நிலையில் ஓய்வூதியம் உட்பட அவருக்கான அனைத்து சலுகைகளும் கௌரவமும் மீளக் கிடைக்கும என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நல்லாட்சிக்கான வாக்குறுதியின் ஒரு கட்டமாக கடந்த அரசின் அநீதியான செயற்பாடுகளுக்கு எதிராக நீதி நிலை நாட்டல் எனும் அத்தியாயத்திலும் புதிய அரசாங்கம் மக்கள் நம்பிக்கையை வென்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

sonakar

Post Paid வாடிக்கையாளர்களுக்கான பனிவான வேண்டுகோள் (வட்டியில் இருந்து தவிர்ந்துகொள்வதற்காக)


''வட்டியை உண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் நினைவிழந்தவன் எழும்பு வது போலன்றி (மறுமையில்) வேறு விதமாக எழமாட்டார்கள். அந்த நிலைக்கு அவர்கள் ஆளானது, நிச்சயமாக ,வியாபாரம் வட்டியைப் போன்றதுதான் என அவர்கள் கூறியதால்தான். மேலும் அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி வட்டியை ஹராமாக்கியுள்ளான். ஆகவே, எவருக்கு தனது இறைவனிடமிருந்து (வட்டியைக் கண்டித்து) உபதேசம் வந்து அவர் அதனை விட்டும் விலகிக் கொண்டாரோ (அவர் அதற்கு) முன் (வாங்கிச்) சென்று போனது அவருக்குரியதே. அவரின் விடயம் அல்லாஹ்வின்பாற்பட்டதாகும். (இக்கட்டளை கிடைத்த பின்) எவர்கள் (வட்டியின்பால்) திரும்பி விடுகின்றார்களோ அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிலையாகத் தங்;கியிருப்பார்கள்.''



Dialog நிறுவனம் அதன் Post Paid வாடிக்கையாளர்களின் கணக்கு மீதி 25 நாட்களைத் தாண்டினால் அதற்காக ஒரு வட்டித் தொகையை "Late payment interest" என்ற முறையில் அறவிடுகிறது. உதாரணமாக உங்களுடைய billing circle 5ஆம் திகதியிலிருந்து அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை என்றால் நீங்கள் அந்த மாதத்திற்கான முழுக் கட்டணத்தை 4ஆம் திகதியிலிருந்து 25 நாட்களுக்குள் அதாவது 29ஆம் திகதியிற்குள் செலுத்த வில்லையென்றால் உங்களிடம் மேலதிகமாக ஒரு வட்டித் தொகை அறவிடப்படும்.
இன்னும் உங்களுடைய bill ஐத் தயாரித்து தபால் மூலம் உங்களுடைய வீடுகளுக்கு வந்து சேர (bill processing period) சுமார் 20 தொடக்கம் 25 நாட்கள் எடுக்கின்றது. அப்படியாயின் உங்களுக்கு உங்களுடைய bill கிடைத்ததிலிருந்து ஆகக் கூடியது வெரும் ஐந்தே ஐந்து நாட்கள்தான் உள்ளது வட்டி இல்லாமல் உங்கள் கட்டணத்தை செலுத்த.
யாரெல்லாம் வட்டியை விட்டு பாதுகாக்கப்பட நினைக்கின்றனரோ அவர்கள் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றை பின்பற்றலாம்.
1. Dialog இல் இருந்து தமது தொலைபேசி இலக்கத்தை வேர ஒரு வலைத்தளத்திற்கு மாற்றுவது.
2. தமது bill வரும்வரை பார்த்துக்கொண்டு இருக்காமல் billing period இல் இருந்து 25 நாட்களுக்குள் அந்த மாதத்திற்கான முழுத் தொகையையும் செலுத்துவது.
இன்னும் எமது முறைப்பாடுகளையும், ஆலோசனைகளையும் பின்வரும் இ-மெய்ல் முகவரிகளினுடாக dialog இற்கு நாம் தெரிவிக்கலாம். ( bill@dialog.lk , service@dialog.lk )
ஆகையால் நம்மில் அதிகமானவர்கள் இந்த வட்டி முறையை நீக்க சொல்லி அல்லது Late payment interest என்ற முறையிலிருந்து Late payment penalty என்ற முறைக்கு மாற்ற சொல்லி அல்லது இந்த 25 நாள் காலக்கெடுவை அதிகரிக்கச் சொல்லி அவர்களது இ-மெய்ல் இற்கு எமது ஆலோசனைகளை அனுப்பினால் சில நேரம் dialog நிறுவனம் இதை கவனத்தில் எடுக்கக் கூடும்.
ஆகையால் தயவு செய்து ஒவ்வொருவரும் மேற் காணும் email இற்கு உங்களுடைய ஆலோசனைகளை அனுப்பும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Abdul Careem

மஹிந்த ராஜபக்ஸவிடம் அடிவாங்கிய, மேர்வின் சில்வாவின் பரபரப்பு வாக்குமூலம்..!

 மஹிந்த பெலியத்தையில் இருந்த மதம்பிடித்தவர். ஜனாதிபதி பதவி போன்று உன்னத பதவி மதம்பிடித்தவருக்கு கிடைத்தால் அதனை செய்ய முடியாது. ரணில் - சந்திரிக்கா போன்றவர்கள் பக்கத்தில்கூட மஹிந்தவை வைத்திருக்க முடியுமா? குடித்தால் வெறியன். நாம் இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டிருந்தது உலக வெட்கம் என்று முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேர்வின் சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,

உங்களுக்கு நினைவிருக்கும் நான் களனியில் விடுதி ஒன்றை இழுத்து மூடியவிதம். விடுதி உரிமையாளர்கள் இதுகுறித்து பஷில் திருடனுக்கு அறிவித்துள்ளனர். பஷில் அதுபற்றி ஜனாதிபதியிடம் ஒன்றுக்கு இரண்டாக தொலைபேசியில் போட்டுக் கொடுத்துள்ளார். திடீரென என்னை அலரி மாளிகைக்கு வரும்படி தொலைபேசி அழைப்பு வந்தது. நான் உடனே அங்கு சென்றேன். 

என்னைக் கண்டதும் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அறைக்குள் சென்றார். நான் எதும் இரகசியம் சொல்லவோ என நினைத்தேன். திடீரென என்னை தாக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் நான் ஒருபொழுதும் கைநீட்டவில்லை. பின் வெளியே வா என்று தோளில் கைபோட்டு அழைத்துச் சென்றார்.

நான் அதன்பின் அங்கு இருக்கவில்லை. உடனே ஜீப்பில் ஏறினேன். என் நிலையை பார்த்து 'ஏன் சேர்?' என்று எனது பாதுகாப்பு தரப்பினர் கேட்டனர். அப்போது நான் அழுதேன். அதன்பின் நான் எனது மனைவிக்கு (லுசிடாவுக்கு) அழைப்பெடுத்து நடந்ததை கூறி அழுதேன். அதனை பாதுகாப்பு பிரிவினர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒரு பாதுகாப்பு அதிகாரி கூறினார். 'தற்போது போகும் நிலையை பார்த்தால் ஜனாதிபதிக்கு இறுதி காலம் நெருங்கிவிட்டது சேர்' என்றார். நான் பொய் சொன்னால் அவரையே கேளுங்கள். இதோ உள்ளார் அவர் என்று மேர்வின் கூற குறித்த செய்தியாளர் அவரை பார்த்தபோது அவர் தலை அசைத்து உண்மை என்று கூறியதாக செய்தியாளர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து மேலும் விவரித்த மேர்வின்; எனக்கு முன்னர் இவ்வாறு பலரை மஹிந்த தாக்கியுள்ளார். பஸ் கெமுனு, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய, முன்னாள் புலனாய்வு பிரிவு தலைவர் வாகிஸ்ட போன்றோர். அனைத்து பெயர் விபரங்களையும் மஹிந்தவின் பி.எஸ்.ஓ. மேஜர் நெவில் சில்வா அறிவார். காரணம் பிடிக்கச்சென்று அவரும் நிறைய அடி வாங்கியுள்ளார்.

எனக்கு கடவுள் கொள்கை உள்ளது. என்மீது கைவைத்த எவரும் சிறந்து வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. என்னை அலரிமாளிகையில் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று தாக்குதல் நடத்தினார்கள். அன்றுதான் நினைத்தேன் மஹிந்தவிற்கு வீடுசெல்ல காலம் தொலைவில் இல்லை என்று. என்னை அடித்து இரண்டு பௌர்ணமிகள் முடிவதற்கு முன்னர் மஹிந்த இல்லாமல் போய்விட்டார். ஆனால், இந்த மேர்வின் அன்று இன்றும் ஒன்றுதான் என மேர்வின் மேலும் தெரிவித்துள்ளார்.

jaffnamuslim

கரையோர மாவட்டக் கோரிக்கையும் முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பி.எம். நிசாமின் கடிதமும்

சென்ற 23.01.2015 ஆம் திகதி sonakar-com இல் கரையோர மாவட்டம் சம்மந்தமாக "முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின்" தேசிய அமைப்பாளர் "பி.எம். நிசாமின்" கடிதம் பிரசுரமாகியிருந்தது. முதலில் இந்த முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பு என்றால் என்ன அமைப்பு, அதன் பின்னனிகள் யார், என்ற ஒரு விடயமும் விழங்கவில்லை, ஆனால் இந்தக் கடிதம் ஒரு பிரதேச அல்லது சில நபர்களின் அரசியல் சுயநலத்திற்காக அல்லது அரசியல் தூர நோக்கற்ற சிந்தனையில் எழுதப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாக விளங்கியது.

அம்பாரை முஸ்லீம்களுக்கு கரையோர மாவட்டம் அல்லது ஒரு தனியான நிர்வாக அலகு தேவை என்பதில் யாருக்குமே இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஆனால் கரையோர மாவட்டக் கோரிக்கையை தூக்கிப் பிடிக்கும் கால கட்டங்களினதும், அதற்குக் கொடுக்கப்படும் அசாதாரண முன்னிருமைகளிலுமே பாரிய சந்தேகங்கள் நிலவுகின்றன.
முதலாவது இதை தூக்கிப் பிடிக்கும் அனைவருமே இது மறைந்த பெரும் தலைவர் அஸ்ரபின் கனவு என்று சொல்கின்றனர். நாம் ஒன்றை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும், மறைந்த பெரும் தலைவர் அஸ்ரபின் கனவை நினைவாக்குவது ஒன்றும் பர்ளு கிபாயாவும் இல்லை, ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய சூழ் நிலையில் இதனை தூக்கிப் பிடிப்பது தேவையற்றது என்று அவரே சொல்லியிருக்கவும் கூடும்.
இந்தக் காலத்தில் இதைத் தூக்கிப் பிடிப்பது பட்டுப் போய்கொண்டு இருக்கின்ற BBS எனும் மரத்திற்கு நீர் பாய்ச்சுவது போல் ஒன்று என்பதை பாவம் முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பி.எம். நிசாம் அறியவில்லை போலும். கடந்த இரண்டு வருடங்களாக எமது இருப்பே கேள்விக் குறியாக இருந்து இப்பொழுதுதான் சிறிது ஆறுதலாக மூச்சு விடத் தொடங்கி உள்ளோம். இப்போது இதைக் கேற்பது வேலியில் போகும் ஓணாணை வேட்டியில் விட்ட கதையாகவே போகும்.
எவ்வளவுதான் எமது பக்கம் நியாயம் இருந்தாலும் இனவாதிகள் அதை அவர்களது துவேச வியாபாரத்திற்கு மூலதனமாக பாவிப்பது எமது ஹலால் பிரச்சினை தொடக்கம் சாதாரண வில்பத்து வீடமைப்பு திட்டம் வரை நாம் கற்றுக்கொண்ட பாடமாக இருந்தும் இப்பொழுது இதையும் அவர்களுக்கு துரும்பு சீட்டாகக் கொடுத்தால் நம்மை விட தூர நோக்கற்றவர்கள் வேறு யார்தான் இருக்க முடியும்.
முஸ்லிம் காங்கிரசுடைய கோட்டை அம்பாரை மாவட்டம்தான் ஆனால் அங்கு வாழும் முஸ்லிம்களோ வெரும் முழு இலங்கை முஸ்லிம்களின் கிட்டத்தட்ட 15% தான். பெரும்பாலான முஸ்லிம்கள் சிங்கள இனத்தவருடன் பிசகியே வாழ்கின்றனர். ஏற்கனவே முஸ்லிம் அமைச்சர்கள் நேரத்துக்கு நேரம் கட்சி மாறுவதால் இவர்கள் துரோகிகள், கொள்கையற்றவர்கள் என்றும், "வாசிய பெத்தட யன கட்டிய" என்பதுதான் அவர்களது கனிப்பு. ஒரு வேளை இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதனால் முழு முஸ்லிம்களின் வெரும் 15% தான் நன்மை அடையும், அதுவே துவேசத்தின் பக்கம் திரிபு படுத்தப்பட்டால் 85% முஸ்லிம்கள் அதன் நட்டத்தை அனுபவிக்க வேண்டி வரும். தேர்தலின் தோல்வியிற்குப் பின்னால் முன்னைய ஜனாதிபதியும், விமல் வீரவன்ச போன்ற பிரபல பேச்சாளர்களும் துவேசம் பாடுவதையும், இன்னும் இந்தக் கரையோர மாவட்டக் கோரிக்கையையும் வருகின்ற பொதுத்தேர்தலுக்கான துரும்பு சீட்டாக பாவிக்க ஏற்கனவே தொடங்கி விட்டார்கள் என்பதும் ஊடகங்களின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இன்னும் நீதி மன்றத்தினால் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்ட "ஜன ஹமுவ" என்ற மகிந்த ராஜபக்‌ஷயின் நிகழ்ச்சியில் இது எவ்வாறு திரிபு படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் நன்கு அவதானிக்கலாம். முன்னால் ஆழும் கட்சியினரை செத்த பாம்பாகக் கருதி அவ்வளவு எளிதில் நாம் புரக்கனிக்க முடியாது ஏனனில் சிங்கள மக்களின் கிட்டத்தட்ட 59% ஆனவர்கள் அவருக்கே வாக்களித்து உள்ளனர்.
இன்னும் சகோ. பி.எம் நிசாமின் கடிதத்தில் கவலைக்குறிய கீழ் காணும் ஒரு வரி இருந்தது. "SLMC மஹிந்த ராஜபக்ஸ அரசிலிருந்து வெளியேறுவதற்கான முக்கியமான காரணமாக கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கைதான் இருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் பின்னடித்ததால் மாற்றுத் தரப்பிற்கு மாறி மைத்திபாலவிற்கு ஆதரவு வழங்கினார்கள்" இவ்வார்த்தைகளின் பார தூரத்தை சகோ. நிசாம் அறிய வில்லை போலும். மைதிரியிற்கு ஆதரவு வழங்கியது எவ்வளவு பெரிய ஜனநாயக வெற்றி என்றும், நல்லாட்சிக்கான அத்திவாரம் என்றும் பலராலும் புகழப்படும் இந்நேரத்தில் அதை சுய இலாபத்திற்காக ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்காதீர்கள். தனி மனித நலத்தை விட கட்சியின் நலத்தையும், கட்சியின் நலத்தை விட சமூகத்தின் நலத்தையும், சமூகத்தின் நலத்தை விட முழு நாட்டின் நலத்தையும் முற்படுத்துவதே ஒரு நல்ல முஸ்லிம் அரசியல் தார்மீகமாகும். ஆனால் துரதிஷ்ட வசமாக இது அடுத்த பக்கத்துக்கு மாறியுள்ளது மிகவும் கவலைக்குறியது.
இறுதியாகவும், சாரம்சமாகவும் ஒரு விடையத்தைக் குறிப்பிடுகின்றேன். கரையோர மாவட்டம் அம்பாரை வாழ் முஸ்லிம்களுக்கு மிகவும் அத்திய அவசியமானதே, ஆனால் அதைக் கேட்டு அடம்பிடிக்கும் நேரம் இதுவல்ல, சகோ. நிசாம் சொன்னது போல் இதுதான் எமக்குத் தேவையான அரசியல் யாப்பு சீர் திருத்தங்களைச் செய்ய நல்ல தருணம். ஆனால் கரையோர மாவட்டத்தைப் பெற நாம் ஒன்றும் அரசியல் யாப்பில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனனில் அந்த அதிகாரம் ஏற்கனவே பாரளுமன்றத்திற்கு உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இனவாத குளுக்களெல்லாம் ஓய்ந்த பின் (இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு வருடத்தில் ஓய்த விடும்) நாசுக்காகவும் பெரிய ஊடக ஆரவாரம் இல்லாமலும் இதைப் பெற்றுக்கொள்வதுதான். இல்லை எமது உரிமையை நாம் தட்டித்தான் கேட்போம் என்றால் அதனால் வரக்கூடிய எதிர் வினைகளை முழு நாட்டு முஸ்லிம்களும் சுமக்க வேண்டிவரும்.

Abdul Careem

1889 முதல் இன்றுவரை புனித “மக்கா”!! (புகைப் படங்கள்)




1889 முதல் இன்றுவரை (சுமார் 125 வருடங்களாக புனித காபாவில் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கும் சில படங்களை நீங்கள் பார்க்கலாம் :



இது 1889 ஜூலை மாதம் 18ம் திகதி எடுக்கப்பட்ட புகைப்படம்



1920 ஆம் ஆண்டு



1922ம் ஆண்டு



1933 ஆம் ஆண்டு (ஹிஜ்று இஸ்மாஈல் மற்றும் காபாவின் சுவர் தென்படுகிறது)



1935ம் ஆண்டு



1954ம் ஆண்டு



1967ம் ஆண்டு



1977ம் ஆண்டு



1988ம் ஆண்டு



2000ம் ஆண்டு



2012ம் ஆண்டு

நன்றி : Sarayanews

இடிந்துபோன ராஜபக்ஷ கோட்டைக்குள், குவிந்திருந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள்

சுதந்திர இலங்கையின் வரலாற்றில் பல தகவல்களைப் படித்துத் தெரிந்து கொண்ட எமக்கு நிகழ்கால நடப்புக்கள் தொடர்பான காட்சிகளை நேரடியாகப் பார்க்க வாய்த்திருக்கின்றது. இலங்கையில் மிகப் பாரிய மஹவலி அபிவிருத்தித் திட்டத்தை அன்று துவக்கி வைத்த போது, நாட்டை ஆசியாவின் தானியக் களஞ்சியமாக மாற்றப்போவதாகவும் இந்தியாவுக்கே மின்சாரத்தை ஏற்றுமதி செய்யப்போவதாகவும் அப்போதய பிரதமர் ட்டலி சேனநாயக்க அன்றைய துவக்க விழாவின் போது குறிப்பிட்டிருந்தார். 1978 அரசியல் யாப்பைத் தோற்றுவித்த ஜே.ஆர். ஜெயவர்தன நாட்டை ஒரு சிங்கப்பூராக கட்டியெழுப்பப் போவதாக சூளுரைத்திருந்தார். இவை கடந்த கால வரலாறு. 

இந்தக் கதைகளுடன் மக்களுக்கு ஒரு புதுக்கதை விட்டு ஆட்சியை தொடர முனைந்தார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இந்த நாட்டைத் தான் ஆசியாவின் ஆச்சர்யமான ஒரு நாடக மாற்றிக் காட்டப் போவதாக் அவர் கூறி மக்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். அப்படியானால் சீனா, யப்பான், மலேசியா, சிங்கப்பூர் என்பவற்றை விஞ்சிய முன்னேற்றம் போலும்.! ஆனால் நாடு ஆசியாவின் ஆச்சர்யமாகியதோ இல்லையோ நாட்டில் பல ஆச்சர்யங்கள் அவர் காலத்தில் இங்கு நடந்திருக்கின்றது என்பதனை இப்போது நாடும் உலகமும் பார்த்துக் கொண்டிருக்கின்றது. 

கடந்த வாரம் மக்கள் ஆணைக்கு எதிராக ராஜபக்ஷ கோட்டைக்குள் நடந்த இராணுவச்சதி பற்றிய தகவல்களைச் சொல்லி இருந்தோம். இந்த வாரம் இடிந்து போன ராஜபக்ஷ கோட்டைக்குள் குவிந்து கிடந்த ஆசியாவின் ஆச்சர்யங்கள் பற்றிப் பார்க்கலாம் என்று தோன்றுகின்றது. நாட்டை ஆசியாவின் ஆச்சர்யமாக மாற்றிக் காட்டுக்கின்றேன் பார் என்று மக்களுக்கு சொன்ன முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோட்டை இடிந்து போன நிலையில் இன்று அந்தக் கோட்டைக்குள் நடந்த ஆச்சர்யங்கள் பற்றி நாடே பேசிக் கொண்டிருக்கின்றது. இப்போது அது பற்றிப் பார்ப்போம்.

காலி கடற் பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் இருந்த கொள்களன்களில் பெருந் தொகையான ஆயுதங்கள் பற்றி ஊடகங்களில் பேசப்பட்டது அந்த ஊடகங்கள் அனைத்தும் சட்டரீயானதுதான் என்று புதிய பாதுகாப்புச் செயலாளரும் சான்றிதழ் கொடுத்திருக்கின்றார். என்றாலும் ராஜபக்ஷாக்களின் காலத்தின் துவக்கப்பட்ட இந்த கடற் பிராயாணங்களின் போது கப்பல்கள் கொள்ளையிடுவதற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு என உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற இந்த ஆயுதப் பிரிவில் இந்தளவு ஆயுதங்கள் எதற்கு என்ற கேள்விகள் இன்னும் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆயுதங்களுக்குப் புறம்பாக அங்கு 12 இலட்சம் பல்வேறு வகையான தோடகள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே புதிய பாதுகாப்புச் செயலாளர் இது சட்டரீயானது என்று கூறினாலும் இந்த ஆயுதங்கள் தொடர்பான விவகாரம் இன்னும் தீர்ந்து விட்டடதாகத் தெரிய வில்லை. மேலும் இன்னும் மூன்று இடங்களில் இது போன்று தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்ற ஆயுகங்கள் பதுக்கிவைத்திருக்கின்ற இடங்கள் தொடர்பான தகவல் கிடைத்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருக்கின்றார். மேலும் பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்திலும் பெருந் தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டிருக்கின்றது.

ரத்தன லங்கா என்ற தனியார் ஆயுத நிறுவனத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் யார் யாருக்க விநியோகிக்கப்பட்டது என்று விபரங்கள் பற்றி தற்போது தேடப்ட்டுக்
கொண்டிருக்கின்றது. இதில் 151 ஆயுதங்கள் மட்டுமே தற்போது இருப்பதாகக் கூறபப்டுகின்றது. ஏனையவற்றிற்கு என்ன நடந்தது என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. மேலும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் தனியான பாதுக்காப்புப் பிரிவொன்றை வழி நடாத்தி வந்திருக்கின்றார் என்று கூறப்படுகின்ற நிலையில், முன்னாள் ஜனாதிபதியின் கையாள் என்று முழு நாடுமே அறிந்த அமைச்சர் மேர்வின் சில்வா நாட்டில் நடந்த முக்கியமான படுகொலைகளுக்கு குறிப்பாக ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்ஹவின் படுகொலை, பாரத லக்ஸ்மன் படுகொலை போன்றவற்றிற்கு நேரடியாக கோட்டபே ராஜபக்ஷதான் காரணம் என்று அவர் கூறியது மட்டுமல்லாமல், அந்த தகவல்கள் தொடர்பான முறைப்பாட்டையும் எழுத்து மூலமாக சட்டத்தரணிகள் ஊடக குற்ற பிரிவுக்கு கையளித்து, ராஜபக்ஷக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. இதுவும் ஆசியாவின் ஒரு ஆச்சர்யமாகத் தான் மக்கள் தற்போது பார்க்கின்றார்கள். 

தேர்தல் காலங்களில் விநியோகிப்பதற்காக சீனாவிலிருந்து கொண்டவரப்பட்ட ஆயிரக் கணக்கான ராஜபக்ஷவினதும் நாமலிதும் உருவங்கள் பெறித்த சுவர் கடிகாரங்கள் பல இடங்களில் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றது இவற்றின் பெறுமதி கோடிக் கணக்கான ரூபாய்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கின்றது. இதற்கு மேலாக தேர்தல் காலங்களில் சட்டத்திற்கு முறனான வகையில் விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கபட்டடிருந்த பொருந் தொகையான பொருட்கள் நாட்டில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. 

ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருக்கின்ற தனியார் வைத்திய கல்லூரியை நிறுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ  அரச வங்கிகளில் இருந்து பல நூறு கோடி பணத்தை கடனாக எடுத்திருக்கின்றார். இந்தக் கடனைத் திருப்பிக் கட்டுகின்ற பொறுப்பை அவர் இலங்கை மின்சார சபையிடம் ஒப்படைத்திருக்கின்றார். எனவே அவர்பெற்ற கடனைக் கட்டுவதற்கு இன்று மக்களிடமிருந்து அந்த நிறுவனங்கள் அதிகமான கட்டணங்களை மின்சாரத்திற்காக அறவிட்டுக் கொண்டிருக்கின்றது என்று அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சாட்டுகின்றார். எனவே இதுவும் ஆசியாவின ஓர் ஆச்சர்யம்தான் என்று கூற வேண்டும்.

மேலும் கோட்டபே ராஜபக்ஷ பெயரில் 800 கோடி வங்கியில் இருக்கின்றது என்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றது என்று ஒரு தகவல் வெளி வந்தது. பின்னர் அந்த வங்கிக் கணக்கு பாதுகாப்பு தொடர்பான சட்ட ரீதியான கணக்குகள் என்று அதிகாரிகள் குறிப்பிட்டாலும் அப்படி ஒரு கணக்கை கோட்டாபே தனது பெயரில் வைத்திருக்க முடியாது அது இலங்கை அரசின் நிதி நிறுவனங்களின் நடைமுறைக்கு முறனானது ஒழுங்கு முறை. இது பற்றிய விசாரணைகள தொடரும் என்று தற்போதய அரசின் ஊடகப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனரத்ன அடித்துக் கூறுகின்றார். மேலும் அரசின் நிதி நிருவாக நடைமுறை தெரியாத இராணுவ அதிகாரிகள் இது பற்றி கருத்துக் கூறக் கூடாது என்றும் அவர் சொல்லி இருக்கின்றார்.

பாதுகாப்பு அமைச்சில் நடிகை ஒருவருக்கு பதவி வழங்கி அவருக்கு இலட்சக் கணக்கான ரூபாய்களை கோட்டபே ராஜபக்ஷ சம்பளமாக வழங்கி இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது. இந்த நடிகை பாதுகாப்பு அமைச்சில் பார்த்த வேலை என்ன என்று அங்குள்ள அதிகாரிகளுக்கே  இது வரை புதிராக இருக்கின்றது.

மதுகமை தேயிலைத் தோட்டமொன்றில் 513 புதிய முச்சக்கர வண்டிகள் தற்போது கண்டு பிடிக்கப் பட்டிருக்கின்றது இது தேர்தல் காலங்களில் தமது அடியாட்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்ககாக கொண்டு வரப்பட்டவை என்று நம்பப்படுகின்றது.

தேர்தல் காலங்களில் கடைசி நாட்களில் ராஜபக்ஷவின் தம்பி பசில் ராஜபக்ஷ சமுர்தி நிதியத்திலிருந்து  160 கோடியை சுருட்டி இருக்கின்றார். என்று அந்த நிறுவனத்தில் குற்றம் சாட்டப்படுகின்றது. இன்று பசில் நாட்டிலிருந்து தப்பி ஓடி இருக்கின்றார். அதுவும் முக்கிய பிரமுகர்கள் நுழையும் - விஐபி சிறப்புப் வாயில் ஊடாக. இது பற்றியும் தற்போது அதிகாரிகள் விசாரிக்கப்பட இருக்கின்றார்கள்.

தேர்தல் கூட்டங்களுக்கு ஆட்களை அழைத்து வருவதாக இலங்கை போக்கு வரத்து சபையிலிருந்து பெறப்பட்ட பஸ் வண்டிகளுக்கு 18 கோடி ரூபாய்களை மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் இன்னும் இ.போ.சபைக்கு வழங்க வேண்டி இருக்கின்றது என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றது. ஏற்கெனவே இந்த சபை கடமையாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே இந்த நிறுவனம் திண்டாடிக் கொண்டிருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விவகாரம். அரச ஊடகங்களில் ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு இதே போன்று பெரும் தொகையான பணம் இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றது என்று தெரிகின்றது. இதற்கு அதற்குப் பொறுப்பான  அதிகாரியிடம் கேள்வி கேட்கலாம் என்று தேடிப் பார்த்தால் ஆள் நாட்டிலிருந்து தற்போது தப்பியோடி இருக்கின்றார் என்று கூறப்படுகின்றது.    

ராஜபக்ஷக்களுக்கு சட்ட விரோதமான முறையில் உதவி பண்ணிக் கொண்டிருந்த  அதிகாரிகள் அரசியல்வாதிகள் என்று இதுவரை 80க்கும் மேற்பட்டவர்கள் வெளி நாடுகளுக்குத் தப்பியோடி இருக்கின்றார்கள் அல்லது தலைமறைவாகி இருக்கின்றார்கள். ராஜபக்ஷ அமைச்சரவையில் ஊழல் பண்ணிய 20 அமைச்சர்கள் மற்றும், அவர்கள் புரிந்த ஊழல்கள் தொடர்பான  தகவல்கள் தற்போது நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருக்கின்றது. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் மைத்திரி அமைச்சரவையில் உள்ள இருவரது பெயர்களும் இதில் அடங்கி இருக்கின்றது என்று ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

ராஜபக்ஷவின் புகழ்பாடிக் கொண்டிருந்த அரச ஊடகங்களே இன்று ராஜபக்ஷ கோட்டைக்குள் நடந்த அட்டகசங்கள் பற்றிய பட்டியல்களைத் தப்போது வாசித்துக் கொண்டிருக்கின்றது. புகழ் பாடிய ஊடகங்களே அவரை இன்று தூற்றித் தள்ளுகின்றது.

ராஜபக்ஷ புதல்வர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களை இணையத் தளங்கள் அட்டகாசமாக காட்சிப் படுத்திக் கொண்டிருக்கின்றது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக பாராளுமன்ற உறுப்பினரும் ராஜபக்ஷவின் சிரேஸ்ட புதல்வருமான நாமல் ராஜபக்ஷவின் சிபார்சின் பேரில் மாணவி ஒருவருக்குப் பல்கலைக் கழகப் பிரவேசம் வழங்கப்பட்டிருப்பது இலங்கை பல்கலைக் கழகங்கள் வரலாற்றில் ஒரு கரைபடிந்த சம்பவமாக இருந்து வருகின்றது. இது பற்றியும் தற்போது கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது இதுவும் ஆசியாவின் ஒரு ஆச்சர்யம்தான்.

ராஜபக்ஷவின் புதல்வர்கள் பாவித்த விமானங்கள், கார்கள், குதிரைகள், போனிகள் என்று தற்போது கண்டு பிடிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றது. ஓரிடத்தில் புதிதாக நான்கு போனிக்கள் இருப்பது தொடர்பான தகவல் கிடைத்து. அது எப்படி அங்கு வந்து சேர்ந்தது என்று தேடிப் பார்த்த போது ஜனாதிபதி மாளிகையில் வேலை பார்க்கின்ற ஒருவர் தனக்கு இதனைக் கொண்டு வந்து கொடுத்ததாகவும் தான் அதனை வெறும் 80000 ரூபாய்கள் கொடுத்து கொள்வனவு செய்ததாகவும் அதனை வைத்திருந்தவர் குறிப்பிடுகின்றார். ஒரு முஸ்லிம் ரகர் விளையாட்டு வீரரின் கொலை தொடர்பாகவும் ராஜபக்ஷவின்  புதல்வர் ஒருவர் மீது கை நீட்டப்படுகின்றது. அலரி மாளிகையில் 500 கோடி ரூபாய்கள் வரை பெறுமதியான உள்நாட்டு வெளி நாட்டு நாணயங்கள் விட்டுச் செல்லப்பட்டிருந்தது என்று முன்பு செய்திகள் வெளி வந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதற்குப் புறம்பாகவும் ராஜபக்ஷ கேட்டையின் பாதுகாவலர்களாக இருந்தவர்ககள் தமது பட்டம் பதவிகளைப் பாவித்து சட்ட விரோத நடவடிக்கைகளில் நிறையவே ஈடுபட்டிருக்கின்றார்கள். இதற்கு நல்லதொரு உதாரணம் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சசி வீரவன்ச தனது பிறந்த திகதியை மாற்றி கடவுச்சீட்டைப் பெற்றிருக்கின்றார். ஒரு கடவுச் சீட்டில் அவரது பிறந்த திகதி 1967 பெப்பரவாரி 01 என்று குறிப்பிடப்படுகின்றது. இன்னென்றில் இது 1971 பெப்பரவாரி 01 மாற்றப்பட்டு கடவுச் சீட்டுப் பெறப்பட்டிருக்கின்றது. இதே போன்று பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதல்களிலும் மனைவியின் பெயரைத் திட்மிட்டு முன்னுக்குப் பின் முறனாக பதிந்து காரியம் பார்த்திருக்கின்றார்கள் தேசப்பற்றாளர் விமல் வீரவன்ச. 

இந்த மோசடி ஒருவர் சிறைவாசம் செல்வதற்குறிய குற்றமாக இருக்கின்றது. இந்த விடயம் தொடர்பாகவும் தற்போது புலனாய்வுத் துறைக்கு முறைப்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இப்படி ஏன் நடந்திருக்கின்றது என்று தேடிப்பார்த்தால் விமல் வீரவன்சவைவிட அவரது மனைவி வயதில் மூத்தவராக (விமல் வீரவங்ச பிறப்பு 1970 மார்ச் ஏழு. மனைவி சசி 1967 பெப்ரவாரி 01) இருப்பதனால் அதனை மூடி மறைக்கவே இந்த சட்டவிரோ தில்லுல்லை அவர்கள் செய்திருக்கின்றார்கள் என்று தெரிய வருகின்றது. ராஜபக கோட்டைக்குள் இது போன்று இன்னும் எத்தனை ஆச்சர்யங்கள் நடந்திருக்கின்றதோ என்பதனைப் பொறுத்திருந்து பார்ப்போம். 

-நஜீப் பின் கபூர்-

இன்ஷா அல்லாஹ், காட்டு மிராண்டித்தன காட்டுதர்பார் அடிதடி எடுபிடி அரசியல் செய்ய விளையும் முகவர்கள் கைசேதப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை

நேற்று மாலை சாய்ந்தமருதில் "நல்லாட்சி முன்னணி" சந்திப்பில் குளறுபடி செய்தவர்கள் கைசேதப்படுவார்கள்!
நல்லாட்சி விழுமியங்களை ஜனாநயக அரசியல் கட்டமைப்புக்குள் உள்வாங்கச் செய்து தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரலோடு முஸ்லிம் அரசியலை முரண்பட்டுக் கொள்ளாது நகர்த்துகின்ற வேலைத்திட்டத்தினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பாரிய அர்ப்பணிப்புக்களோடு முன்னெடுத்துச் செல்கின்றது.
சகல முஸ்லிம் அரசியல் கட்சிகளும் பிரமுகர்களும் ஆளும் கட்சியில் அடங்கிப் போயிருந்த நிலையில் எதிர்க் கட்சி பொதுக் கூட்டணியில் இணைந்து தேசிய அரசியலில் கால்பதித்து மிகவும் காத்திரமான பங்களிப்புக்களை அவர்கள் செய்து வந்தார்கள்.
சர்வாதிகாரத்தின் உச்சத்தில், அரசியலிலும்,ஆள்பலத்திலும், அதிகார மையத்திலும், இராணுவ பலத்திலும் உச்சத்தில் இருந்த அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூட செய்யாத அளவு கேவலமான ஜனநயாக விரோத காட்டு மிராண்டித் தனங்கள் முஸ்லிம் பிரதேசங்களில் இடம் பெறுவது சந்தர்ப்பவாத சராணகதி முஸ்லிம் அரசியலின் வங்குரோத்து நிலையினை எடுத்துக் காட்டுகிறது.
தென்னிலங்கை சிங்கள மக்கள், யுத்த காலத்திலும் சரி, சமாதான காலத்திலும் சரி இவ்வாறான கேவலமான அரசியலை செய்ய வில்லை என்றே சொல்லவேண்டும், அவ்வாறு செய்ய முனைந்தவர்களை ஜனநாயக வரம்புகளுக்குள் நின்று எவ்வாறு தூக்கி வீசியுள்ளார்கள் என்பதுவும் இன்று வரலாறு ஆகியிருக்கின்றது.
முஸ்லிம் பிரதேசங்களில் இடம்பெறும் பாரம்பரிய அடிதடி எடுபிடி அரசியலுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்குமாறும், அடியாட்களுக்கு கடிவாளமிடுமாறும் முஸ்லிம் அரசியல் குழுக்களின் தலைவர்களை வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.
தமது கருத்துக்களை வெளியிடவும், கூட்டங்கள் நடத்தவும் நல்லாட்சி மக்கள் முன்னணி முன்னோடிகளுக்குரிய உரிமையும், அவர்கள் கருத்துக்களை செவிமடுக்க மக்களுக்கு உள்ள உரிமையும் மதிக்கப்படல் வேண்டும்.
சாய்ந்தமருது, அக்கரைப்பற்று,மூதூர் போன்ற இடங்களில் இடம் பெற்ற அடாவடித்தனங்கள் கவலைக்கும் கண்டனத்திற்கும் உரியவை, அதேவேளை சம்பந்தபபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும், எதிர்காலத்தில் அவ்வறான காடைத் தனங்கள் இடம் பெறாதிருப்பதனை உறுதி செய்யவும் உரிய தரப்புக்களிடம் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளன.
எமது கடந்த கால சோரம் போன, சூதாட்ட அரசியலின் உச்ச கட்ட சராணாகதி வங்குரோத்து அரசியலின் விளைவுகளையே கடந்த காலங்களில் சமூகம் அறுவடை செய்தது என்பதனையும், அவற்றிற்கு மஹிந்தவின் பக்கம் விரல் நீட்டுவதிலோ, மைத்ரிஇடம் விமோசனம் தேடுவதிலோ அர்த்தமில்லை என்பதில் முஸ்லிம் சமூகம் தெளிவாகவே இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ், காட்டு மிராண்டித்தன காட்டுதர்பார் அடிதடி எடுபிடி அரசியல் செய்ய விளையும் முகவர்கள் கைசேதப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதனை அவர்கள் அறிந்து செயற்படல் வேண்டும்!
Inamullah Masihudeen

கொச்சிவத்தையைச் சோ்ந்த சகோதரர் A.S.M ஹில்மி அவர்கள் காலமானார்.

கொச்சிவத்தையைச் சோ்ந்த  சகோதரர் ஹில்மி அவர்கள்  இன்று இரவு காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் ஹஸ்புல்லா, ஹஸ்னா, ஹஸ்ஸான், ஹனா ஆகியோரின் தந்தையும்,  மக்புல், கஸ்ஸாலி, ஷாஹுல் ஹமீத் மௌலவி, முகம்மத் (பிரதிக் கல்விப் பணிப்பாளர்), அஜ்வாத் (மாகான்), அஹமத், பீபி, ஸித்தினிஸா, கைருபாதிமா ஆசிரியை ஆகியோரின் சகோதரருமாவார்.
அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை ( 25.1.2015)  ஜாமிஉத் தௌகீத்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

  . اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار 

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

உயிர்த்துடிப்புள்ள மரணம்: சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் நல்லடக்கம் மிக எளிமையாக நடைபெற்றது.

நேற்று வரை அரசாண்ட மன்னர்...
இன்று ஆறடி மண்ணுக்குள்...
சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உடல் நல்லடக்கம்
மிக எளிமையாக நடைபெற்றது.
ரியாதில் உள்ள இமாம் துர்க்கி பின்
அப்துல்லாஹ் ஜும்ஆ பள்ளிவாசலில்
ஜனாசா தொழுகை நடைபெற்றது.
அதற்குப் பிறகு அல்ஈத் மண்ணறையில்
மன்னர் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
நம்ம ஊரில் ஒரு சாதாரண முனிசிபாலிடி
உறுப்பினர் இறந்து போனால்கூட..
எத்தனை வகைப் பூக்கள்...என்னென்ன அலங்காரம்..
எத்தனை எத்தனை கொட்டுமேளம்...தாரை...தப்பட்டை..

வேட்டுச் சத்தம்...லுங்கியை மடித்துக்
கட்டிக்கொண்டு குத்தாட்டம்...
ஒரு நாட்டையே ஆண்ட மன்னரின் மரணம்...
எந்த ஆரவாரமும் இல்லை...
அன்றாட வாழ்வில் உண்பது போல்..
உறங்குவது போல்.. உழைப்பதுபோல்..
மரணமும் இயல்பான ஒன்றுதான் என்னும்
இஸ்லாமிய வழிமுறையை அந்த நாட்டு
அரசும் மக்களும் பின்பற்றி உலகிற்கே
ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளனர்.
அடக்கத்தலத்தைப் பாருங்கள்..எத்துணை எளிமை...
அடடா....இறப்பு கூட
எத்துணை உயிர்த்துடிப்போடு விளங்குகிறது..!
இந்திய மக்களுக்கு இதில் ஏராளமான
படிப்பினைகள் உண்டு.

-சிராஜுல்ஹஸன்

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக, அரசியல்வாதிகளுக்கான விசேட ஒழுக்கக் கோவை

புதிய அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கக் கோவை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி இந்த ஒழுக்கக் கோவை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் இந்த ஒழுக்கக் கோவையில் உள்ளடக்கப்பட உள்ளது.

நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு அரசியல்வாதிகளுக்கான விசேட ஒழுக்கக் கோவையொன்று அறிமுகம் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தேசிய நிறைவேற்றுப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய இந்த ஒழுக்கக் கோவை அமுல்படுத்தப்பட உள்ளது. நேற்று முன்தினம் தேசிய நிறைவேற்றுப் பேரவை கூடிய போது இந்த ஒழுக்கக் கோவை குறித்த சட்ட வரைவினை உருவாக்கும் பொறுப்பு ஜே.வி.பி தலைவர் அனுரகுமாரவிடம் ஒப்படைக்கப்பட்டது.

மந்திரி என அழைக்கப்படும் நபர் இந்த ஒழுக்கக் கோவை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் முற்று முழுதாக மக்கள் சேவகனாக மாற்றமடைந்துவிடுவார்.

கட்சிகளில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் போது ஒரு தடவைக்கு பத்து தடவை சிந்தித்து சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஒழுக்கக் கோவை அமையும் என ராஜித சேனராட்ன  தெரிவித்துள்ளார்.

jaffnamuslim