கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கரையோர மாவட்டக் கோரிக்கையும் முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பி.எம். நிசாமின் கடிதமும்

சென்ற 23.01.2015 ஆம் திகதி sonakar-com இல் கரையோர மாவட்டம் சம்மந்தமாக "முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின்" தேசிய அமைப்பாளர் "பி.எம். நிசாமின்" கடிதம் பிரசுரமாகியிருந்தது. முதலில் இந்த முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பு என்றால் என்ன அமைப்பு, அதன் பின்னனிகள் யார், என்ற ஒரு விடயமும் விழங்கவில்லை, ஆனால் இந்தக் கடிதம் ஒரு பிரதேச அல்லது சில நபர்களின் அரசியல் சுயநலத்திற்காக அல்லது அரசியல் தூர நோக்கற்ற சிந்தனையில் எழுதப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவாக விளங்கியது.

அம்பாரை முஸ்லீம்களுக்கு கரையோர மாவட்டம் அல்லது ஒரு தனியான நிர்வாக அலகு தேவை என்பதில் யாருக்குமே இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஆனால் கரையோர மாவட்டக் கோரிக்கையை தூக்கிப் பிடிக்கும் கால கட்டங்களினதும், அதற்குக் கொடுக்கப்படும் அசாதாரண முன்னிருமைகளிலுமே பாரிய சந்தேகங்கள் நிலவுகின்றன.
முதலாவது இதை தூக்கிப் பிடிக்கும் அனைவருமே இது மறைந்த பெரும் தலைவர் அஸ்ரபின் கனவு என்று சொல்கின்றனர். நாம் ஒன்றை நன்றாக விளங்கிக்கொள்ள வேண்டும், மறைந்த பெரும் தலைவர் அஸ்ரபின் கனவை நினைவாக்குவது ஒன்றும் பர்ளு கிபாயாவும் இல்லை, ஒரு வேளை அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்றைய சூழ் நிலையில் இதனை தூக்கிப் பிடிப்பது தேவையற்றது என்று அவரே சொல்லியிருக்கவும் கூடும்.
இந்தக் காலத்தில் இதைத் தூக்கிப் பிடிப்பது பட்டுப் போய்கொண்டு இருக்கின்ற BBS எனும் மரத்திற்கு நீர் பாய்ச்சுவது போல் ஒன்று என்பதை பாவம் முஸ்லீம் இளைஞர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் பி.எம். நிசாம் அறியவில்லை போலும். கடந்த இரண்டு வருடங்களாக எமது இருப்பே கேள்விக் குறியாக இருந்து இப்பொழுதுதான் சிறிது ஆறுதலாக மூச்சு விடத் தொடங்கி உள்ளோம். இப்போது இதைக் கேற்பது வேலியில் போகும் ஓணாணை வேட்டியில் விட்ட கதையாகவே போகும்.
எவ்வளவுதான் எமது பக்கம் நியாயம் இருந்தாலும் இனவாதிகள் அதை அவர்களது துவேச வியாபாரத்திற்கு மூலதனமாக பாவிப்பது எமது ஹலால் பிரச்சினை தொடக்கம் சாதாரண வில்பத்து வீடமைப்பு திட்டம் வரை நாம் கற்றுக்கொண்ட பாடமாக இருந்தும் இப்பொழுது இதையும் அவர்களுக்கு துரும்பு சீட்டாகக் கொடுத்தால் நம்மை விட தூர நோக்கற்றவர்கள் வேறு யார்தான் இருக்க முடியும்.
முஸ்லிம் காங்கிரசுடைய கோட்டை அம்பாரை மாவட்டம்தான் ஆனால் அங்கு வாழும் முஸ்லிம்களோ வெரும் முழு இலங்கை முஸ்லிம்களின் கிட்டத்தட்ட 15% தான். பெரும்பாலான முஸ்லிம்கள் சிங்கள இனத்தவருடன் பிசகியே வாழ்கின்றனர். ஏற்கனவே முஸ்லிம் அமைச்சர்கள் நேரத்துக்கு நேரம் கட்சி மாறுவதால் இவர்கள் துரோகிகள், கொள்கையற்றவர்கள் என்றும், "வாசிய பெத்தட யன கட்டிய" என்பதுதான் அவர்களது கனிப்பு. ஒரு வேளை இக்கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் அதனால் முழு முஸ்லிம்களின் வெரும் 15% தான் நன்மை அடையும், அதுவே துவேசத்தின் பக்கம் திரிபு படுத்தப்பட்டால் 85% முஸ்லிம்கள் அதன் நட்டத்தை அனுபவிக்க வேண்டி வரும். தேர்தலின் தோல்வியிற்குப் பின்னால் முன்னைய ஜனாதிபதியும், விமல் வீரவன்ச போன்ற பிரபல பேச்சாளர்களும் துவேசம் பாடுவதையும், இன்னும் இந்தக் கரையோர மாவட்டக் கோரிக்கையையும் வருகின்ற பொதுத்தேர்தலுக்கான துரும்பு சீட்டாக பாவிக்க ஏற்கனவே தொடங்கி விட்டார்கள் என்பதும் ஊடகங்களின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இன்னும் நீதி மன்றத்தினால் ஒளிபரப்ப தடைசெய்யப்பட்ட "ஜன ஹமுவ" என்ற மகிந்த ராஜபக்‌ஷயின் நிகழ்ச்சியில் இது எவ்வாறு திரிபு படுத்தப்பட்டுள்ளது என்பதை நாம் நன்கு அவதானிக்கலாம். முன்னால் ஆழும் கட்சியினரை செத்த பாம்பாகக் கருதி அவ்வளவு எளிதில் நாம் புரக்கனிக்க முடியாது ஏனனில் சிங்கள மக்களின் கிட்டத்தட்ட 59% ஆனவர்கள் அவருக்கே வாக்களித்து உள்ளனர்.
இன்னும் சகோ. பி.எம் நிசாமின் கடிதத்தில் கவலைக்குறிய கீழ் காணும் ஒரு வரி இருந்தது. "SLMC மஹிந்த ராஜபக்ஸ அரசிலிருந்து வெளியேறுவதற்கான முக்கியமான காரணமாக கல்முனை கரையோர மாவட்டக் கோரிக்கைதான் இருந்தது. அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்த அவர்கள் பின்னடித்ததால் மாற்றுத் தரப்பிற்கு மாறி மைத்திபாலவிற்கு ஆதரவு வழங்கினார்கள்" இவ்வார்த்தைகளின் பார தூரத்தை சகோ. நிசாம் அறிய வில்லை போலும். மைதிரியிற்கு ஆதரவு வழங்கியது எவ்வளவு பெரிய ஜனநாயக வெற்றி என்றும், நல்லாட்சிக்கான அத்திவாரம் என்றும் பலராலும் புகழப்படும் இந்நேரத்தில் அதை சுய இலாபத்திற்காக ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்காதீர்கள். தனி மனித நலத்தை விட கட்சியின் நலத்தையும், கட்சியின் நலத்தை விட சமூகத்தின் நலத்தையும், சமூகத்தின் நலத்தை விட முழு நாட்டின் நலத்தையும் முற்படுத்துவதே ஒரு நல்ல முஸ்லிம் அரசியல் தார்மீகமாகும். ஆனால் துரதிஷ்ட வசமாக இது அடுத்த பக்கத்துக்கு மாறியுள்ளது மிகவும் கவலைக்குறியது.
இறுதியாகவும், சாரம்சமாகவும் ஒரு விடையத்தைக் குறிப்பிடுகின்றேன். கரையோர மாவட்டம் அம்பாரை வாழ் முஸ்லிம்களுக்கு மிகவும் அத்திய அவசியமானதே, ஆனால் அதைக் கேட்டு அடம்பிடிக்கும் நேரம் இதுவல்ல, சகோ. நிசாம் சொன்னது போல் இதுதான் எமக்குத் தேவையான அரசியல் யாப்பு சீர் திருத்தங்களைச் செய்ய நல்ல தருணம். ஆனால் கரையோர மாவட்டத்தைப் பெற நாம் ஒன்றும் அரசியல் யாப்பில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை ஏனனில் அந்த அதிகாரம் ஏற்கனவே பாரளுமன்றத்திற்கு உள்ளது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் இந்த இனவாத குளுக்களெல்லாம் ஓய்ந்த பின் (இன்ஷா அல்லாஹ் இன்னும் ஓரிரு வருடத்தில் ஓய்த விடும்) நாசுக்காகவும் பெரிய ஊடக ஆரவாரம் இல்லாமலும் இதைப் பெற்றுக்கொள்வதுதான். இல்லை எமது உரிமையை நாம் தட்டித்தான் கேட்போம் என்றால் அதனால் வரக்கூடிய எதிர் வினைகளை முழு நாட்டு முஸ்லிம்களும் சுமக்க வேண்டிவரும்.

Abdul Careem

0 comments:

Post a Comment