கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சென்ற முறை தடுக்கப்பட்ட கண்காட்சி அதே இடத்தில் இம்முறை சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கஹடோவிட வாழ் பெண்களின் சுய திறமையை விருத்தி செய்து சுய தொழிலுக்கான வழிகாட்டல்களை வழங்கும் நோக்கத்தோடு கடந்த சில வருடங்களாக பல பயிற்சி நெறிகள் நடத்தப்பட்டுவருகின்றன. அவ்வாறான ஒரு தையல் பயிற்சி நெறி கடந்த 3 மாதங்களாக நடாத்தப்பட்டு, பயிற்சி நெறியின் நிறைவாக தமது ஆக்கங்களைக் கொண்டு  ஒரு கண்காட்சி 31.01.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கஹடோவிட மாதர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப் பயிற்சி நெறியின் வகுப்புக்கள் சில அரசியல் காரணங்களுக்கா சகோதரர் அஷபா (சியாட் ஹமீத்) அவர்களுடைய வீட்டில் நடைபெற்றுள்ளது.


இதேபோன்று சென்ற முறை கஹடோவிட பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற்று வந்த தையல் பயிற்சிநெறியின் இறுதியில் நடாத்தப்படவிருந்த கண்காட்சியும் பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும்,  அரசியல் தலையீடுகாரணமாக இக்கண்காட்சி இறுதிநேரத்தில் இடம் மாற்றப்பட்டுள்ளது. இவ்விழாவை  நடாத்துவதற்கு ஊரிலுள்ள சில அரசியல் காமுகர்களால் தடைகள் ஏற்படுத்தப்பட்டது மட்டுமின்றி இச்சான்றிதல் வழங்கும் வைபவம் பாடசாலையில் நடந்தால் கல்லுாரி அதிபரை இடமாற்றம் செய்வதாகவும்,  அத்தோடு இந்த இலவச தையல் வகுப்பை முன்னின்று நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளித் தலைவருக்கும்  மிரட்டலும் விடுக்கப்பட்டுருந்தது ஊா் அறிந்த விடயம். எனவே ஊருக்கு ஒரு நலவு நடக்கும் போது அதை அரசியல் ரீதியாக   தொடர்புபடுத்தி செய்யவிடாமல்   தடுப்பது மிகவும் முட்டாள்தனமானதும்  வெறுக்கத்தக்கதுமான ஒரு செயலாகும்.

நேற்று நடந்த கண்காட்சியில் பயிற்சி நெறியில் பங்குபற்றிய பலரின் ஆக்கங்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும (Hon. Ajith Mannapperuma) அவர்கள் இப்பயிற்சி நெறிக்கான நிதியை ஒதுக்கியமை மாத்திரம் அல்லாமல் கண்காட்சியை பார்வையிடுவதற்காகவும் வருகை தந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment