கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சகோதரி உம்மு ஸபீலா காலமானார்

கஹட்டோவிடாவைச் சோ்ந்த காலம் சென்ற ரசீத் ஆலிமின் மனைவி உம்மு ஸபீலா(வயது 93) அவா்கள் இன்று (29.09.2015) காலமானார். அன்னாா் காலம் சென்ற அரச அதிகாரி கோதரா் தஹ்லான் சகோதரா் ஸாபித், சகோதரா் ஜாபிா் ஆகியோரின் அன்புத் தாயாரும் , ஓய்வுபெற்ற கிராம அதிகாரி ஜனாப் ஜௌபா் அவா்களின் மாமனாருமாவாா். கையடக்கத் தொலைபேசி திருத்துனா் நளீம், சகோதரா் சினான், சகோதரா் சப்னி, சகோதரா் ரஸான், சகோதரா் ரினாஸ், சகோதரா் ருமைஸ் ஆகியோரின் வாப்பும்மாவார். அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 3.30 மணியளவில் கஹட்டோவிட முஹியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 

”எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பா்ஸகுடைய வாழ்வை சிறப்பனதாக ஆக்கி வைப்பானாக!. அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் நல்குவானாக!” 

சகோதரர் பஷீர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடயைச் சோ்ந்த சகோதரர் பஷீர் நானா அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அன்னார் இலியாஸ் மாஸ்டர் அவர்களின் சகோதரரும். சகோதரர் இம்தியாஸ் அவர்களின் தந்தையும், அல்பத்ரியா ம.வி முன்னால் அதிபர் ரிஸான் அவர்களின் பெரியப்பாவும் ஆவார்.  ஜனாஸா நல்லடக்கம் நாளை (26.09.2015)  முகியத்தீன் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

திருத்தம்
ஜனாஸா நல்லடக்கம் நாளை 26.09.2015 காலை 11.30 மணியலவில் மஸ்ஜிதுன் நூர் மையவாடியில் நடைபெறும்.


  َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத் நபி வழிப் பெருநாள் தொழுகை

வழமைபோன்று புனித ஈதுல் அழ்ஹா பெருநாள் தொழுகை நபி வழியில் கஹடோவிட அல்பத்ரியா ம.வித்தியாலய மைதானத்தில் பள்ளிவாசலின் இமாம் மௌலவி மஸ்ஊத் (ஸலபி) தலைமையில் நடைபெற்றது.

மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய மௌலவி மஸ்ஊத் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து இரண்டு படிப்பினைகளை எடுத்துக்காட்டினார்.
அதில் வாலிபர்கள் தமது ஆயுளை மார்க்கத்துக்காக அர்ப்பணிக்க வேண்டிய படிப்பினையை விரிவாக விளக்கினார். அத்துடன் குழந்தை வளர்ப்புக்கு முன்னுதாரணமாக எப்படி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் திகழ்தார் என்பதையும் எடுத்துக்காட்டினார். வழமைபோல் பெரும்திரளான ஊர்மக்கள் திரண்டிருந்ததனனை காணக்கூடியதாக இருந்தது.

கௌரவ அரஜுன ரணதுங்க அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து.

කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලයේ තෙමහල් ගොඩනැගිල්ලට අමාත්‍ය අර්ජුන රණතුංග මහතා මුල්ගල තැබීමේ උත්සවය- 2015/09/16


ජාත්‍යන්තරය හා සැසඳෙන අධ්‍යාපන ක්‍රමවේදයක් අපේ රටට අවශ්‍ය බව ගරු වරාය සහ නාවික අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා පවසයි. ඒ සඳහා අධ්‍යාපන ක්‍රමවේදයේ පවතින අඬුලුහුඩුකම්වලට වහා පිළියම් යෙදිය යුතු බවද අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා කියා සිටී. එතුමා මේ බව අද (19) ප්‍රකාශ කළේ කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලයේ නව තෙමහල් ගොඩනැගිල්ලට මුල්ගල තැබීමේ උත්සවයට එක්වෙමිනි.

“මෛත්‍රීපාල සිරිසේන ජනාධිපතිතුමාගේත්, රනිල් වික්‍රමසිංහ අගමැතිතුමාගේත් පැහැදිලි දර්ශනයක් තියෙනවා මේ රටේ අධ්‍යාපනය දියුණු කරන්න. පසුගියකාලේ දේශපාලනීකරණය වී තිබුණු අධ්‍යාපනය වෙනස් කරලා ජාත්‍යන්තරයේ ඕනම තැනකට යා හැකි අධ්‍යාපන ක්‍රමයක් ඇති කරන්න මේ දෙපළ එකතු වෙලා ඉන්නවා. පසුගිය කාලේ අධ්‍යාපනයට ඉතාම සුළු මුදලක් වෙන්කරලා තිබුණේ. නමුත් අපි ආණ්ඩුව භාරගත්තට පස්සේ තීරණයක් අරන් තියෙනවා අධ්‍යාපනය වෙනුවෙන් වියදම් කරන මුදල රජයෙන් වැඩි කරලා අවශ්‍ය පහසුකම් ගමේ සිටින දරුවන් වෙනුවෙන් ලබාදෙන්න. දැන් වනවිට අධ්‍යාපන ක්‍රමවේදය වෙනස් වියයුතු කාලයක් ඇවිත් තියෙනවා. අද ජාත්‍යන්තරයට යා හැකි ජාත්‍යන්තරය හා එකට ගැටෙමින් ඉදිරියට මහුණ දිය හැකි ක්‍රමවේදයක් මේ රට තුළ ඇති විය යුතුයි. ඒ සඳහා දැන් පවතින අධ්‍යාපන ක්‍රමය වෙනස් කරන්නට අලුත් ආණ්ඩුව බලාපොරොත්තු වෙනවා.....” යැයිද මෙම උත්සවයේදී අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමා පැවසීය.
කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලය ආරම්භ කළේ 1954 වර්ෂයේදී එස්.ඩබ්.ආර්.ඩී බණ්ඩාරනායක ශ්‍රීමතාණන්ගේ අනුග්‍රහයෙනි. සාමාන්‍යපෙළ දක්වා ඉගෙනුම් කටයුතු සිදු කෙරෙන මෙම පාසලේ දැනට ශිෂ්‍යාවෝ 1000කට ආසන්න සංඛ්‍යාවක් අධ්‍යාපනය හදාරති. ඉදිරියේදී උසස් පෙළ සඳහා වූ පහසුකම් මෙම පාසලට ලබා දීමටද අමාත්‍ය අර්ජුන රණතුංග මැතිතුමාගේ අවාධානය යොමු වී තිබේ. අර්ජුන රණතුංග අමාත්‍යතුමා අවධාරණය කරන්නේ ගමේ පාසල් දියුණු කිරීමෙන් නගරයේ පාසල්වල තදබදය අවම කර ගත හැකි බවයි. කහටෝවිට මුස්ලිම් බාලිකා විද්‍යාලය නව තෙමහල් ගොඩනැගිල්ලට මුල්ගල තැබීමේ උත්සවයට කුවේට් රාජ්‍යයේ තානාපති යෙකූබ් යුසෙෆ් අල් අතීක් මහතාද එක්විය







இன்று பாலிகா மகளிா் பாடசாலையில் மூன்று மாடிகளாக அமையவுள்ள கட்டிடத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில நிழல்படங்கள்.

பல பிரமுகர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வில் விசேட அதிதிகளாக குவைட் மற்றும் கதார் பிரதிநிதிகளும். இவர்களுடன் கப்பல் துறைமுகங்கள் அமைச்சர் அரஜுன ரணதுங்கவும் கலந்து சிறப்பித்திருந்தனர்.





கஹட்டோவிட்ட மகளிர் கல்லூரி மாடிக்கட்டிட அடிக்கல் நாட்டு விழா

கஹட்டோவிட்ட முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தின் நீண்ட நாள் குறையாக விளங்கும் மாடிக் கட்டிடமொன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு குவைத் தூதரகம் முன்வந்துள்ளது. மூன்று மாடிகளாக அமையவுள்ள இக்கட்டிட நிர்மாணத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு 19ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக குவைத் நாட்டின் தூதுவர் யாகூப் ய+சுப் அல் அகீகியும், கௌரவ அதிதிகளாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரசாயக்க குமாரதுங்க, அமைச்சர்களான அகில விராஜ் காரியவஸம், அர்ஜுன ரணதுங்க, கபீர் ஹாசிம் உட்பட மாகாண, பிரதேச சபை உறுப்பினர்களும், புத்திஜீவிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

தகவல்- எம். ஸஜஹான்.

இது jvp நியூஸ் எனும் விபச்சார ஊடகத்தில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி. இஸ்லாத்தின் மீதுள்ள காழ்புணர்வை எப்படியெல்லாம் இவர்கள் தீர்க்க முற்படுகிறார்கள் என்பதற்கு சிறந்த உ.ம்

இது jvp நியூஸ் எனும் விபச்சார ஊடகத்தில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி இந்த கட்டுரையை எழுதின பொறம்போக்குக்கு இஸ்லாத்தின் மேல் எவ்வளவு காழ்புணர்வு என்பதை இந்த கட்டுரையை வாசித்தால் புரிந்துகொள்ளலாம். குரானின் ஒரு வசனத்தை முழுமையாக பதியாமல் ஒரு பகுதியை மட்டும் பதிந்தும் குரானின் ஒரு வசனத்தை இழிவான வசனம் என்று கூறி தன்னுடைய இஸ்லாமிய அரிப்பை தீர்துள்ளான்.
உன்னுடைய வீட்டு பெண்கள் உனக்கு கட்டுப்படாமல் ஊர் ஊராக மேய்வதைபோல் ஒழுக்கமான இஸ்லாமிய பெண்களிடம் எதிர்பார்ப்பது உன் முட்டாள் தனம். பெண்களுக்கு அத்தனை உரிமைகளையும் அழகிய முறையில் வகுத்துகொடுத்துள்ள இஸ்லாமிய மார்க்கத்தை பற்றி பேச உன்னை போன்ற ஊடக விபச்சாரம் நடத்தி வயிறு வளர்பவனுக்கு எந்த தகுதியும் இல்லை
இவன் பதிந்த குரான் வசனத்தின் முழுமையான வரிகள் இதுவே இதை முழுமையாக படிப்பவர்களுக்கு புரியும் இந்த வசனத்தின் யதார்த்தம்
4:34. (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

ஜதாகுமுல்லாஹ் சகோதரர் இர்ஷாத் (முகநூல்) 

குர்ஆனை வியந்து போற்றிய இந்தி நடிகர் நானா படேகர்!

மகாராஷ்ட்ராவில் வறுமையினால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இந்த விவசாயிகளுக்கு உதவும் முகமாக மகாராஷ்ட்ராவில் உள்ள மராத்வாடா மாவட்டத்தில் லாட்டூர் மற்றும் உஸ்மானாபாத்தில் உதவி தொகை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த உதவியை இந்தி குணசித்திர நடிகர் நானா படேகர் தனது சொந்த செலவில் வழங்குகிறார். சென்ற ஆகஸ்ட் 10 ந் தேதி 62 ஏழை விவசாயிகளுக்கு தலா 15000 வீதம் ஏழை விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 113 ஏழை விவசாயிகளுக்கு தலா 15000 ரூபாயை நன்கொடையாக அளித்தார் நானா படேகர்.
அந்த விழாவில் அவர் பேசும் போது ....
'விவசாயிகளே! தற்கொலை செய்து கொள்ளாதீர்கள்! வாழ்க்கையில் போராட பழகிக் கொள்ளுங்கள். இஸ்லாமிய விவசாயிகளையும் பாருங்கள். அவர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உங்களைப் போல் தற்கொலை செய்து கொள்வதில்லை. ஏனெனில் புனித குர்ஆன் தற்கொலை செய்து கொள்வதை பாவம் என்று அவர்களுக்கு போதிக்கிறது. இந்த அறிவுரையானது எனது மனதை மிகவும் தொட்ட ஒன்று.
சரத் பவார், நாராயண் ரானே போன்ற தலைவர்கள் அரசியல் பாகுபாடுகளை தூரமாக்கி ஏழை விவசாயிகளின் துயர் துடைக்க முன் வருவார்களாக! அவர்களின் விளைந்த பொருட்களின் விலையை ஸ்திரப்படுத்த முயற்சிக்க வேண்டும்' என்று தனது உரையில் கேட்டுக் கொண்டார்.
தகவல் உதவி
பிஸினஸ் ஸ்டேண்டர்ட்
06-09-2015
எதற்கெடுத்தலும் குர்ஆனையே பிடித்து ஏன் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்கு நானே படேகரின் இந்த விளக்கம் சிறந்த பதிலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. குர்ஆனின் மகிமையை அதனை வாழ்வில் நடைமுறைப்படுத்தி வாழும் முஸ்லிம்கள் நன்கு உணர்ந்ததாலேயே அதனை இந்த அளவு மதிக்கின்றனர். குர்ஆனின் அருமையும் பெருமையும் அதனை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.
On the percentage of suicide of Muslim farmers being negligible, Patekar said, "This is because Holy Quran terms suicide as a sin and the betrayal of God's will. This teaching of Quran touches my heart," the actor added.
Posted by சுவனப் பிரியன்

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?

ரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு இஞ்சினிலும் "WDM2", "WAP4" போன்று ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்!...! அப்படி என்றால் என்ன அர்த்தம்?


WDP 3A
முதல் எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை (Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை (Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை (Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)

WDM 2
இரண்டாம் எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம் (DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால், அது நீராவி இஞ்சின்.
YG
மூன்றாம் எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும் மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும். அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து!)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று சொன்னேன் அல்லவா? அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது!!
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை (A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பது தான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக, WDM 3E இஞ்சினின் சக்தி = 3*1000+ 5*100 = 3500 hp ஆகும்.
அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால் அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில் தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்!! அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.

உலகமே எதிர்பார்த்திருக்க, உதயமான ஐபோன் 6-எஸ், மற்றும் 6 எஸ்-ப்ளஸ்: சிறப்பு அம்சங்கள்

அகில உலகிலும் நேற்று முக்கியமாக கருதப்பட்ட விஷயம் ஒன்றே ஒன்றுதான். அது சான் பிரான்சிஸ்கோவில் நடந்த ஆப்பிள் நிகழ்ச்சியில், புதிய ஐபோன் பற்றிய அறிவிப்பு வருமா? அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்பதுதான்.
இத்தகைய எதிர்பார்ப்புகளுடன் மேடையேறிய குக், ஆப்பிள் வாட்ச், ஐபேட் ப்ரோ, ஆப்பிள் டிவி என்று அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டார். ஆனால் அங்கு கூடியிருந்தவர்களோ ஐ போன் அறிவிப்பிற்காகவே தவம் கிடந்தனர். அந்த அறிவிப்பு வெளியாகும் தருணமும் வந்தது.
உலகின் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் என்று பார்வையாளர்களின் பலத்த கைதட்டலுடன் ஐ போன் அறிமுகத்தை தொடங்கிய குக், “உலகில் பலரால் காதலிக்கப்படும், வாடிக்கையாளர்களுக்கு திருப்தி தரும், ஐபோன் வரலாற்றிலேயே அதிநவீன போனை இன்று வெளியிடப் போகிறோம் இதற்காக நான் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்” என்றார்.
ஐபோன் 6 எஸ்-ன் சிறப்பம்சங்கள்:
* 4.7 இஞ்ச் திரைஅளவு
* 8 மெகா பிக்சல் ஐசைட் கேமரா
* 3டி டச் தொடு திரை வசதி கொண்டது.
* 150 Mbps வேகம் கொண்ட LTE தொழில்நுட்பம்
* 10 மணி நேர பேட்டரி பவர்
* ஐ.ஓ.எஸ். 9 வசதி இதில் உள்ளது.
* வலிமையான கவர் கிளாஸ்
ஐ போன் 6 எஸ் ப்ளஸ் மாடலின் சிறப்பம்சங்கள்:
* 5.5 இஞ்ச் திரை
* 3டி டச் தொடு திரை வசதி கொண்டது.
* ஐ.ஓ.எஸ். 9 வசதி இதில் உள்ளது.
* இதில் செயல்படுவது A 9, 64 பிட் சிப்பாகும்.
* புதிய ஐ சைட் கேமரா 12 மெகா பிக்சல் துல்லியம் கொண்டது.
* 4 K அளவு குவாலிட்டி கொண்ட வீடியோவை இதில் பார்க்கலாம்
* புகைப்படத்தைக் கூட சில நொடி வீடியோவாக பதிவு செய்யும் Live Photos வசதி
* அதி நவீன LTE தொழில்நுட்பம், மற்றும் அதி வேக வை-பை வசதி
* 5 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமரா, ரெட்டினா ப்ளாஷூடன்
இரண்டுமே, ஐஓஸ் 9 இயங்குதளத்திலும், (Soft ware) A9 processor மற்றும் M9 co-processor இலும் இயங்கக் கூடியது. இந்த A9 processor இதற்கு முந்தைய processor விட 70 மடங்கு வேகமானது. இரண்டு புதிய ஐ போன்களையுமே வருகிற செப்டம்பர் 12-ம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். செப்டம்பர் 25 முதல் இவை கடைகளில் கிடைக்கும். இதற்காக ஆப்பிள் நிறுவனம் 2 வருட திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. மேலும் மாதம் 27 மற்றும் 31 டாலர் செலுத்தி, முறையே ஐபோன் 6 எஸ் மற்றும் 6 எஸ் ப்ளஸ் மாடலை இன்ஸ்டால்மென்டில் வாங்கும் திட்டத்தையும் ஆப்பிள் அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் ஆப்பிள் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படும் புதிய மென்பொருளான ஐஓஎஸ் 9 நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மென்பொருளை எதிர்வரும் செப்டம்பர் 16 முதல் பயனர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நன்றி

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடை முறைபடுத்துவது காலத்தின் கட்டயாம் G20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மாநாட்டில் ஜெர்மன் நிதி அமைச்சர் வேண்டு கோள்!!

இஸ்லாமிய பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம் : G 20 மாநாட்டில் ஜெர்மன் நிதி அமைச்சர் பேச்சு....!!
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளாக திகழக்கூடிய 20 நாடுகளின் சங்கமமே G 20 நாடுகளாகும்.
G 20 யில் அமெரிக்கா, பிரிட்டன், சவூதி அரேபியா, இந்தியா, சீனா, துருக்கி, இந்தோனேசியா, ஜப்பான், ரஷ்யா, ஜெர்மனி, இத்தாலி, மெக்ஸிகோ, ஆஸ்திரேலியா, அர்ஜெண்டினா, கனடா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, பிரேசில், பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகிய நாடுகள் அடங்கியுள்ளன.

G 20 நாடுகளின் நிதி அமைச்சர்களின் மாநாடு துருக்கியில் இந்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
உலகளாவிய பொருளாதாரம் குறித்து முக்கியத்துவம் கொண்ட இந்த மாநாட்டில் ஜெர்மனி நிதி அமைச்சர் பேசுகையில்...
உலக பொருளாதாரத்தோடு இஸ்லாமிய பொருளாதாரத்தையும் இணைத்து செயலாற்ற வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
இஸ்லாமிய பொருளாதாரம் உலகின் முக்கிய இடத்தை பிடித்திருப்பதை தற்போதைய சூழலில் நாம் மறுத்து விடமுடியாது.
உலக வங்கிக்கு இணையாக சவூதி அரேபியாவின் முழு ஒத்துழைப்புடன் செயல்படும் இஸ்லாமிய வங்கி செயலாற்றி வருவதை நாம் அறிவோம்.

மத்திய கிழக்கிலும் கிழக்கு ஆசியாவின் தென் பகுதியிலும் ஆப்பிரிக்காவின் பல நாடுகளிலும் இஸ்லாமியர்களின் ஷரீஅத் சட்டத்தின் அடிப்பைடையில் வட்டி இல்லாத வங்கிமுறைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த செயல் திட்டத்தை மற்ற நாடுகளிலும் நடைமுறைப்படுத்துவது பற்றி நாம் ஆராய வேண்டும், இது காலத்தின் கட்டாயம் என்று பேசினார்.
இந்த மாநாட்டில் இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி : Tamil Muslim Media

சாரதிகளின் கவனத்திற்கு: புதிய போக்குவரத்துச் சட்டம்: சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிக்கு வழக்கு தொடர அதிகாரம்


சீருடை அணிந்துள்ள எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் போக்குவரத்து தொடர்பாக வழக்கொன்றை கோரமுடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் விளக்கமளித்த அவர், போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் பணியில் ஈடுபடாத காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், அவர் சீருடை அணிந்திருப்பாராயின், முறையற்ற வகையில் செல்லும் வாகனங்களை நிறுத்தும் அதிகாரத்தை கொண்டுள்ளார் என தெரிவித்தார்.

குறித்த காவல்துறை அதிகாரி வாகனத்தை நிறுத்தி விசாரிக்க முற்படும் போது சாரதி நிறுத்தாமல் சென்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகும்.

அவ்வாறான சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தொடர காவல்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது.

அத்துடன், சாரதியின் உறுதிப்பத்திரம், வாகனத்தின் சகல ஆவணங்களையும் பரிசோதனை செய்வதற்கும் சீருடை அணிந்த காவல்துறையினருக்கு அனுமதி உள்ளது.

இதுதவிர, வாகனத்தில் பயணம் செய்யும் அனைத்து பயணிகள் தொடர்பாகவும், அவர்களின் அடையாளத்தை உறுதி செய்வதற்கும் அதிகாரம் உள்ளது.

அதேவேளை, சாரதியின் அனுமதி பத்திரத்தை காவல்துறை அதிகாரி கைப்பற்றுவாராயின் 14 நாட்களுக்கு அமுலில் உள்ள வகையில் தற்காலிக அனுமதி பத்திரத்தை வழங்க வேண்டும் எனவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தா 

உலகிலேயே அதிகமான அகதிகளை தங்க வைத்துள்ள நாடுகள் - UNHCR அதிர்ச்சி தகவல்!



உலகிலேயே அதிகமான அகதிகளை தங்க வைத்துள்ள நாடுகள்... அமெரிக்காவா, பிரிட்டனா  அல்லது ஐரோப்பிய நாடுகளா? உண்மை என்ன?

ஏதோ, ஐரோப்பிய கிறித்துவ நாடுகள் மட்டுமே, மற்ற நாட்டு மக்களின் மீது அக்கறை கொண்டுள்ளது போல் செய்திகள் ஊடகங்கள் மூலம் பரப்ப்பட்டு வருகின்றன. உண்மையை அறிய முற்பட்டபோது, ஊடகங்களின் மாயாஜால் வித்தை நன்றாக தெரிகின்றது.

ஒரு சில சம்பவங்களின் மூலம், மக்களின் கவனம் திருப்பபட்டாலும், உண்மையான விபரங்களை தேடியபோது கிடைத்த தகவல்களை  இங்கே பதிவு செய்கின்றோம்.


"கடந்த பல வருடங்களாக, உலகிலேயே அதிகமான அகதிகளை தங்கவைத்துள்ள நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முன்னணியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது..".

1000 குடிமக்களுக்கு, எத்தனை அகதிகள்? இங்கே லெபனான் தான், தங்களின் 
குடிமக்களில் 1000 பேருக்கு, 240 அகதிகள் என்ற கணக்கில் அதிகமான மக்களை தங்க வைத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்கது.



  •  80% அகதிகள், உலகளிலேயே  வளரும் நாடுகளில் மிகவும் கீழ் நிலையில் உள்ள நாடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் (*2)
  • உலகின் பணக்கார நாடுகளான ஆஸ்திரேலிய, அமெரிக்க போன்ற நாடுகள், அகதிகளை வரவேற்பதில் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன  (*2)  
  • அகதிகளின் எண்ணிக்கையில், 48% பெண்கள் (*4)
  • 18 வயதிற்கு கீழே உள்ள குழந்தைகள், 46% (*4)
  • ஆப்கானிஸ்தான், ஈராக், மற்றும் சோமாலிய நாடுகளை சார்ந்தவர்கள் தான், அகதிகளின் எண்ணிக்கையில் 46% உள்ளனர் (*4)
  • உலகிலேயே அதிகமான அகதிகள் தங்க விருப்பமுள்ள நாடு அமெரிக்கா..ஜெர்மனி, தென் ஆப்ரிக்கா மற்றும் பிரான்ஸ் அடுத்த நிலையில் உள்ளன (*4)
  • 2012 ல் 72 நாடுகளின் புள்ளி விபரங்களோடு  எடுக்கப்பட்ட ஒரு கணிப்பின்
    படி, மேலை நாடுகள்  தங்களின் வசதி வாய்ப்பின் சதவீதத்திற்கு மிகவும் குறைந்த அளவிலேயே அகதிகளை அனுமதிக்கின்றன. (*3)







இந்த பட்டியலில் உள்ள நாடுகளில், செல்வ செழிப்புள்ள அரபு நாடுகளின் பெயர்கள் இல்லாதது ஏனோ? மற்ற நாடுகளில் உள்ள அகதிகளுக்கு உதவி செய்தாலும்,  அவர்களை தங்களின் நாடுகளில் ஏற்றுக்கொள்ளாதது  மிகவும் வெறுக்கத்தக்க செயலாகும்.

-Nadodi Tamilan -

சிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்துள்ள நாடுகள் எவை எவை?

கடந்த நான்காண்டுகளாக தொடரும் உள்ளாட்டு போர், சுமார் 90 இலட்சம் சிரிய மக்களை இடம் பெயர செய்துள்ளது. இதில் சுமார் 65% மக்கள் சிரியாவிற்குள்ளாகவே பல்வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
படம்: அகதிகள் முகாம்களில் ஒன்று
துருக்கி, லெபனான், ஜோர்டான் ஆகிய நாடுகள், சுமார் 30 லட்சம் அகதிகளை அரவணைத்துக் கொண்டுள்ளன. அதிகப்படியான முகாம்கள் அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள், குடிமக்களின் உதவியோடு அகதிகளுக்கான அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. பல பள்ளிவாசல்கள் இம்மக்களுக்கான வசிப்பிடங்களாக திகழ்கின்றன. இதுவரை ஒரு லட்சம் வரைக்குமான அகதிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளது ஜோர்டான்.
எகிப்து, இராக் போன்ற நாடுகள் சுமார் 1-5 லட்சம் அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளன. 130 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே அளவுள்ள காசா, சில ஆயிரம் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
தங்களின் அகதிகள் கொள்கை காரணமாக இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் மக்களை ஏற்றுக்கொள்வதில் தயக்கம் காட்டுகின்றன. இருப்பினும், அந்த விதிமுறைகளை மீறி, ஆயிரக்கணக்கான மக்களுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது ஜெர்மனி (சுமார் 20,000). ஐரோப்பிய யூனியன் நாடுகளில், 85% அகதிகளுக்கு அடைக்கலம் தந்த நாடாக ஜெர்மனி திகழ்கின்றது. 'இம்மாதிரியான சமயங்களில் உதவில்லை என்றால் ஒரு தோல்வியடைந்த சமூகமாகவே நாம் எதிர்காலத்தில் கருதப்படுவோம்' என்ற ஜெர்மனி அதிபரின் கருத்து கவனிக்கத்தக்கது.
மேலே காணும் தகவல்களுக்கான ஆதாரங்கள்:
ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் இது தொடர்பில் நடத்திய ஆய்வு மற்றும் Syrian Refugees இணையதளம்.
Aashiq Ahamed

தேசிய அரசாங்கத்தின், புதிய அமைச்சர்கள் விபரம்

தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் (04) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றுக் கொண்டது.

அதன்படி, அமைச்சரவையில் 48 பேர் அடங்குகின்றனர்.

அமைச்சரவை முழு விபரம் வருமாறு,

01.ரணில் விக்கிரமசிங்க – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர்

02.ஜோன் அமரதுங்க - சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்

03.காமினி ஜயவிக்ரம பெரேரா - வலுவாதார அபிவிருத்தி மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சர்

04.நிமல் சிறிபாலடி சில்வா - போக்குவரத்து அமைச்சர்

05.எஸ்.பி.திஸாநாயக்க - சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர்

06.டபிள்யு.டி.ஜே. செனவிரட்ன - தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

07.லக்ஷமன் கிரியெல்ல - பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

08.அநுர பிரியதர்ஷன யாப்பா - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

09.சுசில் பிரேமஜயந்த - தொழிநுட்ப, தொழிநுட்ப கல்வி மற்றும் தொழில்வாய்ப்பு அமைச்சர்

10.திலக் மாரப்பன - சட்டமும் ஒழுங்கும் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

11.ராஜித சேனாரத்ன - சுகாதாரம், போஷனம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்

12. ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சர்

13. மஹிந்த சமரசிங்க - திறன்கள் அபிவிருத்தி மற்றும் தொழில்பயிற்சி அமைச்சர்

14.வஜிர அபேவர்த்தன - உள்நாட்டலுவல்கள் அமைச்சர்

15.எஸ்.பி.நாவின்ன - உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

16.பாட்டளி சம்பிக்க ரணவக்க - மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்

17.மஹிந்த அமரவீர - கடற்தொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர்

18.நவீன் திஸாநாயக்க - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

19.ரஞ்சித் சியம்பலாபிட்டிய - மின்வலு மற்றும் வலுசக்தி அமைச்சர்

20. துமிந்த திஸாநாயக்க - கமத்தொழில் அமைச்சர்

21.விஜயதாஸ ராஜபக்ஷ - நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்

22.பி.ஹெரிசன் - கிராமிய பொருளாதார அமைச்சர்

23.ரஞ்சித் மத்துமபண்டார - அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர்

24.கயந்த கருணாதிலக - பாராளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்

25.சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர்

26.அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அலுவல்கள் அமைச்சர்

27.எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்த்தன - காணி அமைச்சர்

28.பழனி திகாம்பரம் - மலைநாட்டு புதிய கிராம், தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்

29.சந்திராணி பண்டார - மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சர்

30.தலதா அத்துகொரல - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

31.அக்கிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்

32.டி.எம்.சுவாமிநாதன் - புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர்

33.சந்திம வீரக்கொடி - பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர்

34.தயாசிறி ஜயசேகர - விளையாட்டுத்துறை அமைச்சர்

35.சாகல ரத்நாயக்க - தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

36.ஹரேன் பெனாண்டோ - தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர்

37.மனோ கணேசன் - தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர்

38.தயா கமகே - ஆரம்ப கைத்தொழில் அமைச்சர்

39.ரிசாத் பதியூதின் - கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர்

40.கபீர் ஹசிம் - அரச தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர்

41.ரவூப் ஹக்கிம் - நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கள்அமைச்சர்

இஸ்லாம் பாட நூல் விவகாரமும் தேரரின் புரளியும்!

குறித்த தேரரைப் பற்றி நன்கு தெரிந்திருந்தும் அவரது கருத்துக்கு (?) முக்கியத்துவம் கொடுத்து முஸ்லிம் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டமை மிகப் பெரும் வரலாற்றுத் தவறாகும்.
குறித்த தேரரின் அறியாமைக்கு ஒரே ஓர் உதாரணம்:
திருத்திய பதிப்புக்கு முன்னைய பதிப்பில், மகாவம்சத்தை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த வில்லியம் கைகர் என்பவரின் தகவலொன்றை ஆதாரம் காட்டி, விஜயனின் வருகைக்கு முன்பிருந்தே முஸ்லிம்களின் மூதாதையரான அரபுகள் இலங்கைக்கு வந்து குடியேறத் தொடங்கினர் என்ற விடயம் பதியப்பட்டிருந்தது.
இதில் வருகின்ற வில்லியம் கைகர் என்பவர் மகாவம்சத்தை மொழிபெயர்க்கவில்லை என்றும் இப்படித்தான் முஸ்லிம்கள் பொய்யான தகவல்களைத் தந்து வரலாற்றை மாற்றியமைக்கிறார்கள் என்றும் ஊடகங்கள் சிலவற்றினூடாக கொக்கரித்து இஸ்லாம் பாட நூலை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கினார்.
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட முஸ்லிம் அதிகாரிகள் கலந்துரையாடி அலசி ஆராய்ந்தபோதுதான் அவரது அறிவீனம் மேலும் உறுதியாகியது. பாட நூலில் காணப்பட்ட தகவலைத் தந்திருந்தவரின் விடயத்தில் தவறேதும் இருக்கவில்லை; மாற்றமாக அவரது பெயரில் மட்டுமே அந்தத் தவறு இடம்பெற்றிருந்தது. வில்ஹெல்ம் கைகர் என்பதற்குப் பதிலாக வில்லியம் கைகர் என எழுதப்பட்டிருந்ததே எமது தரப்பில் காணப்பட்ட தவறாகும்.
இந்தச் சிறு விடயத்துக்காக எவ்வளவு பெரிய ஆட்டம் ஆடினார் தெரியுமா? ஆனால் அவரால் ஓட்ட எண்ணக்கையைப் பெற முடியவில்லை. ஓட்டுக்களையும் பெற முடியவில்லை.
எனவே இந்த மாதிரியான செய்திகளை வெளியிடும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடும் கலந்துரையாடிச் செய்திகளை வெளியிட முயற்சி செய்வது நல்லது. இதுவே ஊடக தர்மமாகும்.
அபூ ஷௌகீ