கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட பிரிமியா லீக் (KPL); மைதானம் திறப்பும்

எமது ஊரின் நீண்ட காலக் குறையாக இருந்த ஒரு மைதானம் தற்போது இளைஞர்களின் சிரமத்துக்கு மத்தியிலும், பிரதேச சபை உரிப்பினா் சரண லால் ஆகியோரின் உதவியாலும் தற்போது நிறைவேறியுள்ளது. இம்மைதானம் அல் பஹ்ஜதுல் இப்ராஹிமியா (ஸாவியா) வின் காணியிலும், சகோதரர் ரிஷான் ராஸிக் அவர்களின் காணியிலும் இம்மைதானம் அமைந்தள்ளது.

கஹடொவிட ஸ்பொட்ஸ் கிலப் இனால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரண்டாவது KPL வெகு விமர்சையாக இன்று (26.01.2013) ஆரம்பிக்கப்பட்டது. 8 அணிகள் பங்குகொள்ளும் இப்போட்டியில் கஹடோவிடாவின் அனைத்த அணிகளிலும் பங்குகொள்ளும் வீரர்கள், பழைய நாயகா்கள், பாடசாலை மாணவர்கள் என்று முத்தரப்பையும் மையப்படுத்தி அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சகோதரர் பிர்தௌஸ் ஹாஜி அவா்களின் அனுசரனையில் அனைத்த அணிகளுக்குமான Jercy வழங்கப்பட்டது.

இப்போட்டித் தொடரானது இம்மைதானத்தை திறந்து வைப்பதற்காக நடத்தப்படுகின்றது. 2012 இல் Klamath Kites வெற்றிவாகை சூடினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொச்சிவத்தையைச் சேர்ந்த முஹம்மத் பாஹிம் அவாகள் காலமானார்.

கொச்சிவத்தையைச் சேர்ந்த முஹம்மத் பாஹிம் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் அஹமத் பளீள், பாதிமா பீபி தம்பதியரின் புதல்வரும், ருவன்வெல்லையைச் சேர்ந்த  பர்ஸானியாவின் அன்புக் கணவரும், ஹப்ஸா, ருகையா, ஸஹ்ரா ஆகியோரின்  தந்தையும்,  பஹீமா, அன்வர், பௌஸ் ஆகியோரின் சகோதரரும், அல் ஹாஜ் கஸ்ஸாலி, அல்ஹாஜ் மக்புல், அல்ஹாஜ் சாஹுல் ஹமீத், பரீட்சை ஆணையாளர் முஹம்மத், அல்ஹாஜ் அஜ்வாத், ஹில்மி, அஹமத் ஆகியோரின் சகோதரியின் புதல்வரும் ஆவார்.  ஜனாஸா நல்லடக்கம் நாளை  (27.01.2013) கஹடோவிட ஜாமிஉத் தௌஹீத்  ஜூம்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
.
அல்லாஹ் சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

பன்றி உருவத்தில் அல்லாஹ்வின் பெயர்; குளியாப்பிட்டியவில் பதற்றம்

குருநாகல், குளியாப்பிட்டி நகரில் பதற்றமான சூழ்நிலையொன்று எற்பட்டுள்ளது என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். பௌத்த பிக்குகள் தலைமையிலான 150 பேர் கொண்ட குழுவினரின் ஆர்ப்பாட்டத்தினாலேயே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பாதுகாப்பு பிரிவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அல்லாஹ்வின் பெயர் ஏந்திய சுலோகங்களை பன்றி உருவத்தில் எழுதி இந்த ஆர்ப்பாட்டத்தில் கொண்டு செல்கின்றமையினாலேயே இந்த பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளர் அப்துல் சத்தார் தெரிவித்தார்.தகவல்

இ.அம்மார்:
 தமிழ் மிரர்

பொது பலசேனாவின் முஸ்லிம் விரோத கருத்துக்கள்

Photo: பொது பலசேனாவின் முஸ்லிம் விரோத கருத்துக்கள்

எம்.அம்றித் : இலங்கயில் , கிறிஸ்தவ , முஸ்லிம் , தமிழ் சமூகங்கள் தொடர்பில் ‘பொது பலசேனா’ என்ற பெளத்த கடும்போக்கு அமைப்பு விரோத கருத்துக்களை பிரசாரம் செய்து வருகிறது . அண்மையில் மவ்பிம சிங்கள பத்திரிகையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்களில் சில முக்கிய பகுதிகள்

கோனி பில்லே போன்று முகத்தை மூடுகிறார்கள் :
முஸ்லிம் பெண்கள் கண்களை மூடிக் கொண்டு பிள்ளைப் பிடிகாரனைப் போல் (கோனி பில்லே) போன்று உடையணிகிறார்கள். இது இந்த நாட்டு மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது . இது பாதுகாப்பு ரீதியான பிரச்சினையை தோற்றுவிக்கும். இந்த நாட்டில் 1706 முதல் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் . அவர்கள் சிங்கள கலாசாரத்தை அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள் .

அவர்கள் முஸ்லிம்களாக இருந்து சிங்கள கலாசாரத்துடன் கலந்து வாழ்ந்து வந்தார்கள். அப்படியிருக்கும் போது அக்காலம் முதல் 1இன்றுவரை ஹலால் பிரச்சினை இருக்கவில்லை அதேபோன்று மிக மோசமான இஸ்லாமியமயமாக்கள் இருக்கவில்லை .கண்களை மூடிக்கொண்டு ‘கோனிபில்லே’ போன்று ஆடை அணியவில்லை இன்று இது இன்று நாட்டு மக்களுக்கு பிரச்சினையாகவுள்ளது .

யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடக்கும் போது . இப்படி நடக்கிறது .இந்த கண்கள் இரண்டையும் திறந்துகொண்டு நாம் அவர்களை எப்படி அடையாளம் காண்பது . நாட்டில் யுத்தம் முடிந்ததாக கூறினாலும் எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம் என்ற இருள் சூழ்ந்த நிலை இன்றும் நாட்டில் பேயாட்டம் போடுகிறது . இந்த நிலையில் இவ்வாறு மூடிக் கொண்டு வருவோரை நம்பிக்கையுடன் எப்படி பார்ப்பது .

இலங்கையில் கடந்த காலங்களில் ஹலால் இல்லாமல் இந்த நாட்டில் சம்பிரதாயபூர்வமான் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் , ஹலாலை கொண்டுவந்து பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் பாரம்பரிய சிங்களவர்களுக்கும் மத்தியில் பெரும் சதியை உருவாக்கவே அராபியர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று நாம் துணிவாக கூறுவோம் .

நம் வாழ்கையில் காணாத முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் :

நாட்டின் சகல நகரங்களிலும் பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும் , புதிதாக நிர்மாணிக்கவும் முடிவு செய்துள்ளார்கள் . முன்னர் முஸ்லிம்கள் வெள்ளிகிழமையில் மட்டும் வந்தார்கள் இன்று அநேக பள்ளிகளில் ஐந்து நேரமும் கூடுகிறார்கள் . நம் வாழ்கையில் காணாத முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் .

முஸ்லிம் அதிகாரங்களை கைப்பற்றுகிறார்கள் ;

இன்று அரபியர் நாட்டில் குவிந்திருகிறார்கள் . இன்று முஸ்லிம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட சகல துறைகளிலும் அதிகாரத்தை கைபற்றிகொண்டு இருக்கிறார்கள் . இந்த நாட்டில் பாரம்பரிய முஸ்லிம் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவதையும் நாம் விரும்புகிறோம் .பாரம்பரிய தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவதையும் நாம் விரும்புகிறோம் ஆனால் ஒன்று இந்த நாட்டில் சிங்கள பெளத்த கலாசாரத்தை ஏற்றுகொண்டால் மட்டுமே அவ்வாரு நடக்கலாம் .

ஆயுத பயிற்சி பெற்ற குழுக்கள் :

இன்று மாளிகா கந்தை வீதிக்கு சென்று பாருங்கள் , ஆயுதங்கள் கொண்ட ஆயுத பயிற்சி பெற்ற வெளிநாட்டு குழுக்கள் பள்ளிவாசல் என்ற போர்வையில் பல மாடிகள் உயரத்திலான கட்டடம் ஒன்றை எடுத்துள்ளார்கள் . இந்த நாட்டை வேகமாக முஸ்லிம்மயப் படுத்துகிறார்கள்.

அல்லாஹ் என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள்:

ஹலாலை எம்மீது திணிக்கிரார்கள் . அல்லாஹ் என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள் .எனவே எமக்கு மூட நம்பிக்கை கடவுளுக்கு அர்பணித்த உணவை புத்தருக்கு பூஜை செய்ய முடியாது . நாம் நரகத்துக்கு செல்வோம் . புத்த பெருமானரும் ஹலால் உண்ண வேண்டுமா ? இது பாரதூரமான விடயம் . பௌத்தர்கள் என்ற வகையில் நாம் பொறுத்துகொண்டு இருக்கிறோம் . இந்த பலவந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் ஆயுதம் தாங்க வேண்டும் . எமது ஆன்மீகத்தை ஹலால் மூலம் சுரண்டுகிறார்கள் . எங்களுக்கு ஹலாலை திணிக்க வேண்டும் . இதன் பிறகு இந்த நாட்டு மக்களுக்கு ஹலால் உன்ன இடமளியோம் .இந்த நாட்டை ஹலாலாக்கவும் இடமளிக்கமாட்டோம் .

 எம்.அம்றித் :  இலங்கயில் , கிறிஸ்தவ , முஸ்லிம் , தமிழ் சமூகங்கள் தொடர்பில் ‘பொது பலசேனா’ என்ற பெளத்த கடும்போக்கு அமைப்பு விரோத கருத்துக்களை பிரசாரம் செய்து வருகிறது . அண்மையில் மவ்பிம சிங்கள பத்தி...ரிகையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்களில் சில முக்கிய பகுதிகள்

கோனி பில்லே போன்று முகத்தை மூடுகிறார்கள் :
முஸ்லிம் பெண்கள் கண்களை மூடிக் கொண்டு பிள்ளைப் பிடிகாரனைப் போல் (கோனி பில்லே) போன்று உடையணிகிறார்கள். இது இந்த நாட்டு மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது . இது பாதுகாப்பு ரீதியான பிரச்சினையை தோற்றுவிக்கும். இந்த நாட்டில் 1706 முதல் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் . அவர்கள் சிங்கள கலாசாரத்தை அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள் .

அவர்கள் முஸ்லிம்களாக இருந்து சிங்கள கலாசாரத்துடன் கலந்து வாழ்ந்து வந்தார்கள். அப்படியிருக்கும் போது அக்காலம் முதல் 1இன்றுவரை ஹலால் பிரச்சினை இருக்கவில்லை அதேபோன்று மிக மோசமான இஸ்லாமியமயமாக்கள் இருக்கவில்லை .கண்களை மூடிக்கொண்டு ‘கோனிபில்லே’ போன்று ஆடை அணியவில்லை இன்று இது இன்று நாட்டு மக்களுக்கு பிரச்சினையாகவுள்ளது .

யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடக்கும் போது . இப்படி நடக்கிறது .இந்த கண்கள் இரண்டையும் திறந்துகொண்டு நாம் அவர்களை எப்படி அடையாளம் காண்பது . நாட்டில் யுத்தம் முடிந்ததாக கூறினாலும் எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம் என்ற இருள் சூழ்ந்த நிலை இன்றும் நாட்டில் பேயாட்டம் போடுகிறது . இந்த நிலையில் இவ்வாறு மூடிக் கொண்டு வருவோரை நம்பிக்கையுடன் எப்படி பார்ப்பது .

இலங்கையில் கடந்த காலங்களில் ஹலால் இல்லாமல் இந்த நாட்டில் சம்பிரதாயபூர்வமான் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் , ஹலாலை கொண்டுவந்து பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் பாரம்பரிய சிங்களவர்களுக்கும் மத்தியில் பெரும் சதியை உருவாக்கவே அராபியர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று நாம் துணிவாக கூறுவோம் .

நம் வாழ்கையில் காணாத முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் :

நாட்டின் சகல நகரங்களிலும் பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும் , புதிதாக நிர்மாணிக்கவும் முடிவு செய்துள்ளார்கள் . முன்னர் முஸ்லிம்கள் வெள்ளிகிழமையில் மட்டும் வந்தார்கள் இன்று அநேக பள்ளிகளில் ஐந்து நேரமும் கூடுகிறார்கள் . நம் வாழ்கையில் காணாத முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் .

முஸ்லிம் அதிகாரங்களை கைப்பற்றுகிறார்கள் ;

இன்று அரபியர் நாட்டில் குவிந்திருகிறார்கள் . இன்று முஸ்லிம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட சகல துறைகளிலும் அதிகாரத்தை கைபற்றிகொண்டு இருக்கிறார்கள் . இந்த நாட்டில் பாரம்பரிய முஸ்லிம் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவதையும் நாம் விரும்புகிறோம் .பாரம்பரிய தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவதையும் நாம் விரும்புகிறோம் ஆனால் ஒன்று இந்த நாட்டில் சிங்கள பெளத்த கலாசாரத்தை ஏற்றுகொண்டால் மட்டுமே அவ்வாரு நடக்கலாம் .

ஆயுத பயிற்சி பெற்ற குழுக்கள் :

இன்று மாளிகா கந்தை வீதிக்கு சென்று பாருங்கள் , ஆயுதங்கள் கொண்ட ஆயுத பயிற்சி பெற்ற வெளிநாட்டு குழுக்கள் பள்ளிவாசல் என்ற போர்வையில் பல மாடிகள் உயரத்திலான கட்டடம் ஒன்றை எடுத்துள்ளார்கள் . இந்த நாட்டை வேகமாக முஸ்லிம்மயப் படுத்துகிறார்கள்.

அல்லாஹ் என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள்:

ஹலாலை எம்மீது திணிக்கிரார்கள் . அல்லாஹ் என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள் .எனவே எமக்கு மூட நம்பிக்கை கடவுளுக்கு அர்பணித்த உணவை புத்தருக்கு பூஜை செய்ய முடியாது . நாம் நரகத்துக்கு செல்வோம் . புத்த பெருமானரும் ஹலால் உண்ண வேண்டுமா ? இது பாரதூரமான விடயம் . பௌத்தர்கள் என்ற வகையில் நாம் பொறுத்துகொண்டு இருக்கிறோம் . இந்த பலவந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் ஆயுதம் தாங்க வேண்டும் . எமது ஆன்மீகத்தை ஹலால் மூலம் சுரண்டுகிறார்கள் . எங்களுக்கு ஹலாலை திணிக்க வேண்டும் . இதன் பிறகு இந்த நாட்டு மக்களுக்கு ஹலால் உன்ன இடமளியோம் .இந்த நாட்டை ஹலாலாக்கவும் இடமளிக்கமாட்டோம் .
See More
Photo: பொது பலசேனாவின் முஸ்லிம் விரோத கருத்துக்கள்

எம்.அம்றித் : இலங்கயில் , கிறிஸ்தவ , முஸ்லிம் , தமிழ் சமூகங்கள் தொடர்பில் ‘பொது பலசேனா’ என்ற பெளத்த கடும்போக்கு அமைப்பு விரோத கருத்துக்களை பிரசாரம் செய்து வருகிறது . அண்மையில் மவ்பிம சிங்கள பத்திரிகையில் பொது பலசேனா இயக்கத்தின் செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் அளித்த பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்த கருத்துக்களில் சில முக்கிய பகுதிகள்

கோனி பில்லே போன்று முகத்தை மூடுகிறார்கள் :
முஸ்லிம் பெண்கள் கண்களை மூடிக் கொண்டு பிள்ளைப் பிடிகாரனைப் போல் (கோனி பில்லே) போன்று உடையணிகிறார்கள். இது இந்த நாட்டு மக்களுக்கு பிரச்சினையாக உள்ளது . இது பாதுகாப்பு ரீதியான பிரச்சினையை தோற்றுவிக்கும். இந்த நாட்டில் 1706 முதல் முஸ்லிம்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்கள் . அவர்கள் சிங்கள கலாசாரத்தை அனுசரித்து வாழ்ந்து வந்தார்கள் .

அவர்கள் முஸ்லிம்களாக இருந்து சிங்கள கலாசாரத்துடன் கலந்து வாழ்ந்து வந்தார்கள். அப்படியிருக்கும் போது அக்காலம் முதல் 1இன்றுவரை ஹலால் பிரச்சினை இருக்கவில்லை அதேபோன்று மிக மோசமான இஸ்லாமியமயமாக்கள் இருக்கவில்லை .கண்களை மூடிக்கொண்டு ‘கோனிபில்லே’ போன்று ஆடை அணியவில்லை இன்று இது இன்று நாட்டு மக்களுக்கு பிரச்சினையாகவுள்ளது .

யுத்தம் முடிந்து மூன்று வருடங்கள் கடக்கும் போது . இப்படி நடக்கிறது .இந்த கண்கள் இரண்டையும் திறந்துகொண்டு நாம் அவர்களை எப்படி அடையாளம் காண்பது . நாட்டில் யுத்தம் முடிந்ததாக கூறினாலும் எந்த நேரமும் குண்டு வெடிக்கலாம் என்ற இருள் சூழ்ந்த நிலை இன்றும் நாட்டில் பேயாட்டம் போடுகிறது . இந்த நிலையில் இவ்வாறு மூடிக் கொண்டு வருவோரை நம்பிக்கையுடன் எப்படி பார்ப்பது .

இலங்கையில் கடந்த காலங்களில் ஹலால் இல்லாமல் இந்த நாட்டில் சம்பிரதாயபூர்வமான் முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் , ஹலாலை கொண்டுவந்து பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் பாரம்பரிய சிங்களவர்களுக்கும் மத்தியில் பெரும் சதியை உருவாக்கவே அராபியர்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று நாம் துணிவாக கூறுவோம் .

நம் வாழ்கையில் காணாத முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் :

நாட்டின் சகல நகரங்களிலும் பள்ளிகளை அபிவிருத்தி செய்யவும் , புதிதாக நிர்மாணிக்கவும் முடிவு செய்துள்ளார்கள் . முன்னர் முஸ்லிம்கள் வெள்ளிகிழமையில் மட்டும் வந்தார்கள் இன்று அநேக பள்ளிகளில் ஐந்து நேரமும் கூடுகிறார்கள் . நம் வாழ்கையில் காணாத முஸ்லிம்களை இப்போது காண்கிறோம் .

முஸ்லிம் அதிகாரங்களை கைப்பற்றுகிறார்கள் ;

இன்று அரபியர் நாட்டில் குவிந்திருகிறார்கள் . இன்று முஸ்லிம் இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் உட்பட சகல துறைகளிலும் அதிகாரத்தை கைபற்றிகொண்டு இருக்கிறார்கள் . இந்த நாட்டில் பாரம்பரிய முஸ்லிம் ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாக வருவதையும் நாம் விரும்புகிறோம் .பாரம்பரிய தமிழர் ஒருவர் ஜனாதிபதியாக வருவதையும் நாம் விரும்புகிறோம் ஆனால் ஒன்று இந்த நாட்டில் சிங்கள பெளத்த கலாசாரத்தை ஏற்றுகொண்டால் மட்டுமே அவ்வாரு நடக்கலாம் .

ஆயுத பயிற்சி பெற்ற குழுக்கள் :

இன்று மாளிகா கந்தை வீதிக்கு சென்று பாருங்கள் , ஆயுதங்கள் கொண்ட ஆயுத பயிற்சி பெற்ற வெளிநாட்டு குழுக்கள் பள்ளிவாசல் என்ற போர்வையில் பல மாடிகள் உயரத்திலான கட்டடம் ஒன்றை எடுத்துள்ளார்கள் . இந்த நாட்டை வேகமாக முஸ்லிம்மயப் படுத்துகிறார்கள்.

அல்லாஹ் என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள்:

ஹலாலை எம்மீது திணிக்கிரார்கள் . அல்லாஹ் என்பது பெளத்த சமயப்படி மூடநம்பிக்கை கடவுள் .எனவே எமக்கு மூட நம்பிக்கை கடவுளுக்கு அர்பணித்த உணவை புத்தருக்கு பூஜை செய்ய முடியாது . நாம் நரகத்துக்கு செல்வோம் . புத்த பெருமானரும் ஹலால் உண்ண வேண்டுமா ? இது பாரதூரமான விடயம் . பௌத்தர்கள் என்ற வகையில் நாம் பொறுத்துகொண்டு இருக்கிறோம் . இந்த பலவந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் ஆயுதம் தாங்க வேண்டும் . எமது ஆன்மீகத்தை ஹலால் மூலம் சுரண்டுகிறார்கள் . எங்களுக்கு ஹலாலை திணிக்க வேண்டும் . இதன் பிறகு இந்த நாட்டு மக்களுக்கு ஹலால் உன்ன இடமளியோம் .இந்த நாட்டை ஹலாலாக்கவும் இடமளிக்கமாட்டோம் .

ரிஸானா நனைந்தாள் உலகம் அழுதது. ஏன்?

'ரிஸானா நபீக்' உலகம் முழுவதும் உச்சரிக்கப்பட்ட பெயர்... நீதி சரிந்ததா?﹐ நிமிர்ந்ததா? என்று நீதியே இல்லாத உலகம் பேசிய பேசுபொருளின் கரு... இந்தச் சிறிய வயதில் முழு உலகையும் தன் பக்கம் ஈர்த்த சாதனையின் சொந்தம்.

ஏன் ரிஸானா இவ்வளவு பிரபல்யமானாள்? இலங்கையின் ஒரு மூலையில் வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்த அந்த சின்னவளை உலகம் ஏன் இவ்வளவு தூரம் தலைநிமிர்ந்து நோக்கியது. அந்த அதிசயம் நிகழ்ந்ததற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது. ஆம்﹐ ரிஸானாவின் விடயத்தில் ஷரீஆ நீதி சம்பந்தப்பட்டிருக்கிறது﹐ அவ்வளவுதான்.

இவளைப் போன்ற எத்தனையோ ரிஸானாக்களை அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகள் ஆப்கானிலும் ஈராக்கிலும் பலஸ்தீனிலும் கொன்று குவித்திருக்கின்றன. செச்னியா விடயத்தில் ரஷ்யாவின் நீதி﹐காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் நீதி﹐ முஸ்லிம்கள் விடயத்தில் மியன்மாரின் நீதி﹐ சிரியா விடயத்தில் ஈரானின் நீதி என்பன யாவும் அமெரிக்க﹐ இஸ்ரேல் நீதிகளை விடக் குறைந்ததல்ல.

உலகம் இந்த நீதிகளை அலட்டிக் கொள்ளவில்லை. பேசுபொருளாக அவற்றை எடுத்துக் கொள்ளவுமில்லை. எனினும்﹐ ஷரீஆ நீதியை பேசுபொருளாக மாற்றி அதற்கு எல்லையில்லாத முக்கியத்துவத்தை உலகம் கொடுத்திருக்கிறது கொடுக்கத்தான் வேண்டும்.

ஷரீஆ நீதியை உலகின் பேசுபொருளாக ஆக்கிய ரிஸானாவுக்கு எமது பிரார்த்தனைகள். ரிஸானாவின் உயிர் மீண்டும் உலகத்துக்குத் திரும்பி வராது. ஆனால்﹐ பல ஆயிரம் ரிஸானாக்களுக்கு உயிர் கொடுக்க ஷரீஆ நீதி உலகை நோக்கி மீண்டு வரும். அப்போது உயிர் கொடுத்த ரிஸானா வாழ்ந்துக் கொண்டிருப்பாள்.

ரிஸானாவின் உயிருக்காக நல்லெண்ணத்தோடு அழுத முஸ்லிம்﹐ முஸ்லிமல்லாத அனைத்து உள்ளங்களையும் வாழ்த்திவிட்டு ரிஸானா நபீக்கின் விடயத்துக்கு வருகிறேன். ரிஸானாவின் மரண தண்டனை குறித்து இதுவரை ஊடகங்களில் வெளியான செய்திகள் அனைத்தையும் தொகுத்து வகுத்தால் ரிஸானா நபீக் விடயத்தில் இரண்டு விதமான அலசல்கள் நடைபெற்றுள்ளன. அந்த அலசல்கள் இரண்டில் எதை உலகம் சரி கண்டாலும் ஷரீஆ நீதியை எவரும் குறை கூற முடியாது. ஷரீஆ நீதி அந்த இரண்டு அலசல்களின்போதும் முன்வைக்கப்பட்ட கீழ்த்தரமான விமர்சனங்கள்﹐கண்டனங்கள் என்பவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கின்றது.

அலசல் 01: இந்த அலசலில் நீதி﹐ விசாரணை குறித்து பல வகையான விமர்சனங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன. ரிஸானா குற்றவாளியல்ல. ஒரு சதிமோசக் கொலையை அவள் செய்யவில்லை. செய்ய வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. ரிஸானாவின் கையிலிருந்த குழந்தை இறந்ததற்கான காரணங்கள் விஞ்ஞானபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. அது இயற்கை மரணமாகவும் இருக்கலாம். அல்லது பால்புரையேறி மூச்சுத் திணறி குழந்தை இறந்திருக்கலாம். குழந்தை இப்படித்தான் இறந்தது என்பதைக் கண்ட சாட்சிகளும் இல்லை.

இந்த நிலையில் ரிஸானா குற்றவாளி என்பதை உறுதி செய்வதற்கான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை. தீர்ப்பு அவசரமாக வழங்கப்பட்டிருக்கிறது. இது நீதியல்ல. தனது பக்க நியாயங்களை முன்வைத்து வாதிடுமளவு அறிவுத் திறமைகள் இல்லாத ஒரு சின்னப் பெண் மொழி தெரியாத புதியதொரு சூழலில் நீதி விசாரணையொன்றுக்கு முகம் கொடுக்கும்போது அச்சத்துக்குட்படுவது இயல்பு. அவளது நியாயங்களை முன்வைத்து வாதிடுவதற்கு சட்டத்தின் உதவியை அவள் பெற்றாளா? அல்லது பெற வேண்டும் என்ற அறிவு அவளுக்கு இருக்கவில்லையா?

இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில் அவள் குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளாள். இது நீதியின் நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டது. அதனால்தான் ரிஸானா நபீக் வீணாக உயிரிழக்க வேண்டியேற்பட்டுள்ளது.

இவ்வாறு ஊடகங்கள் ரிஸானா நபீக்கிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை பல்வேறு கோணங்களில் விமர்சிக்கின்றன.

இந்த விமர்சனங்கள் உண்மையானால் (இந்த விமர்சனங்களின் உண்மைத் தன்மைகள் ஆராயப்பட வேண்டும்) குற்றம் யாரைச் சாரும்? ஷரீஆ நீதியையா? அல்லது நீதி விசாரணை செய்து ரிஸானாவைக் குற்றவாளியெனத் தீர்ப்பு வழங்கியவர்களையா? இந்த விமர்சனங்கள் உண்மையானால் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ரிஸானாவை விசாரணை செய்து குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியவர்களுக்கே உரியன.

ஷரீஆ நீதி எந்த வகையிலும் ரிஸானா விடயத்தில் அநீதியிழைத்ததாகக் கூற முடியாது. இலங்கையில் பிரதம நீதியரசரை விசாரித்த முறை பிழையானது என ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஏன் ஊடகங்கள் நீதி பிழையானது என விமர்சிக்காமல் விசாரித்த முறை பிழையானது என விமர்சிக்க வேண்டும்? இலங்கையின் நீதி விடயத்தில் ஊடகங்களின் முகம் வேறு ஷரீஆ நீதி விடயத்தில் ஊடகங்களுக்கு மற்றொரு முகமா?

நீதியை விமர்சிப்பவர்களிடமே நீதியில்லாததை இங்கு பார்க்கிறோம். இங்கு மட்டுமல்ல﹐ உலகம் முழுவதிலும் இன்று இப்படியான இரட்டை வேடம்தான் தாண்டவம் ஆடுகின்றது. அமெரிக்கா﹐இஸ்ரேல் போன்ற வல்லரசுகளின் வேடத்தை எல்லோரும் தரித்திருக்கிறார்கள். தங்களது சுயத்தை இழந்து வேடம் பூண்டவர்களால் நீதியை எப்படி நிலை நாட்ட முடியும்.

அலசல் 02: இது ஊடகங்களில் தனியாக அலசப்பட்ட விடயமல்ல. முன்னையதோடு இரண்டறக் கலந்து வந்த அலசல்தான் இது. எனினும்﹐ அலசியவர்களுக்கு விளங்காத ஒன்றை விளக்குவதற்காக அவர்களது அலசல்களை நான் இரண்டாகப் பிரித்துக் காட்டுகிறேன். அலச முன்பு இதனை அவர்கள் பிரித்துப்பார்த்திருக்க வேண்டும். எனினும்﹐ பிரித்துப் பார்க்குமளவு நிதானம் அவர்களிடமில்லை. ஷரீஆ என்றவுடனேயே நிதானத்தை இழந்து விடுகிறார்கள் ஒரு பூதத்தைக் கண்டது போல்.

இரண்டாவது அலசல்: விசாரணை சட்டபூர்வமாக நடந்தேறியுள்ளது. கொலை என்பதற்கான ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சந்தேகங்களுக்கிடமின்றி ரிஸானா கொலையாளிதான் என்பது நிரூபணமாகி விட்டது என்று வைத்துக் கொள்வோம். இந்த நிரூபணம் உறுதியானதன் பின்பு தண்டனை வழங்கப்படுகிறது. தண்டனை ஷரீஆ நீதியின்படிதானே வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஷரீஆ நீதி காட்டுமிராண்டித்தனமானதே என கூக்குரலிட்டன ஊடகங்கள். இதுதான் ஊடகங்களில் அலசலுக்குட்பட்ட இரண்டாவது விடயம்.

உண்மையில் ஷரீஆ நீதி கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு கொலையாளிக்கான தீர்ப்பு கொலை என்றுதான் வரையறை செய்கிறது. இது காட்டுமிராண்டித்தனமா?

இது காட்டுமிராண்டித்தனம் என உலகமே வாதிட்டாலும்﹐ ஒருவர் மாத்திரம் இதனைக் காட்டுமிராண்டித்தனம் எனக் கூற ஒருபோதும் முனைய மாட்டார். அவர்தான் கொலை செய்யப்பட்டவரின் சொந்தங்கள்﹐ தாய்﹐ தந்தையர்கள் அல்லது பிள்ளைகள்﹐ சகோதரர்கள் என்போர். இவர்களது உணர்வைத்தான் ஷரீஆ நீதியின் கர்த்தாவாகிய அல்லாஹ் கருத்தில் எடுத்திருக்கிறான். கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தவர்கள்தான் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள்.

நீதி அவர்களுக்குத்தான் வேண்டும். காட்டுமிராண்டித்தனம் எனக் கூக்குரலிடுபவர்களுக்கு இங்கு நீதி தேவையில்லை. அவர்கள் கொக்கரித்துக் கொண்டிருக்கட்டும். நீதி தேவையானவர்களுக்கு நான் நீதி வழங்குகிறேன் என மனிதனைப் படைத்தவன் எடுத்த முடிவுதான் ஷரீஆ நீதி.

உலகில் நடைபெறுகின்ற எத்தனையோ குற்றச் செயல்களுக்கெதிராக வீதியிலிரங்கி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் அந்தக் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக 'மரண தண்டனையை' அறிமுகம் செய்﹐அமுல்படுத்து என்று கோஷமிடுகின்றனர். அங்கெல்லாம் பாதிக்கப்படட்டவர்களுக்காகக் குரல் கொடுத்து மரண தண்டனைக்கு வந்தனம் கூறுபவர்கள் ஷரீஆ நீதி என்றவுடனேயே மரண தண்டனையைக் காட்டுமிராண்டித்தனம் என எப்படி வர்ணிக்கிறார்கள்.

அவர்கள் கோஷமிடும் அல்லது வாழ்த்துக் கூறும் மரண தண்டனை ஈவிரக்கமற்றது. ஷரீஆ நீதி விதிக்கும் மரண தண்டனை கருணையுடன் கலந்தது. கொலைக்கு கொலை என்று தீர்ப்பு வழங்கும்'ஷரீஆ நீதி' மற்றுமொன்றையும் வலியுறுத்துகிறது என்பதை நிதானமிழந்த விமர்சகர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி விடுகிறார்கள். அல்லது வேண்டுமென்றே புறக்கணிக்கிறார்கள்.

கொலை செய்யப்பட்டவரின் குடும்பம்தான் ஷரீஆ நீதியின்படி தனது இறுதி முடிவை வழங்க வேண்டும். ஷரீஆ நீதிமன்றம் விசாரணைகளின் பின் நடைபெற்றுள்ளது கொலைதான் என்பதை ஆதாரங்களோடு உறுதி செய்த பின்னர் குடும்பமே தீர்ப்பு வழங்க வேண்டும். ஷரீஆ நீதியின் மூலகர்த்தாவான அல்லாஹ் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் கையில் நீதி வழங்கும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இருந்துவிடவில்லை. மாறாக﹐ அந்தக் குடும்பத்தினரின் உணர்ச்சிகளைத் தடவிக் கொடுத்து நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உயிர் நட்டத்தை விளைவித்தது போல் கொலையாளிக்கும் உயிர் நட்டத்தை விளைவிக்கலாம். அல்லது கொலையாளியிடமிருந்து நீங்கள் விரும்பும் ஒரு நட்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது பெருமனதோடு மன்னித்தே விடலாம். என பல தரப்பட்ட தெரிவுகளை அவர்கள் முன் வைக்கிறான் ஷரீஆவின் மூலகர்த்தா.

அது மட்டுமல்ல மன்னிப்பதை ஊக்குவித்து அதற்கு நன்மை தருவதாகவும் கூறுகின்றான். ஷரீஆ நீதி எத்துனை அற்புமானது மனித உணர்வுகளுக்கும் மதிப்பளித்து மனிதனின் மானுசீகத்தையும் உயர்த்துகின்றது. இதுவா காட்டுமிராண்டித்தனம்?

ரிஸானா நபீக் விடயத்திலும் இந்த நடைமுறையே கைக்கொள்ளப்பட்டது. ஷரீஆ நீதிமன்றம் கொலை எனத் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் நாம் முன்னர் பார்த்ததுபோல்﹐ அவர்கள் தவறு செய்திருந்தால் அது அவர்களின் குற்றமே ஷரீஆ நீதியின் குற்றம் அல்ல. பின்னர் தண்டனைத் தீர்ப்பு குடும்பத்திற்கே விடப்பட்டது. மன்னர் குடும்பம் முதல் அனைவரும் ரிஸானாவை மன்னிக்குமாறு இறந்த அல்லது கொலை செய்யப்பட்ட குழந்தையின் குடும்பத்தை வேண்டினர். குற்றம் நடைபெற்று ஏழு ஆண்டுகள் ஆகியும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரிஸானாவை மன்னிக்கும் மனநிலையில் இருக்கவில்லை. இறுதி நேரத்திலும் அவர்களது விருப்பம் கேட்கப்பட்டபோது அவர்கள் மன்னிக்கத் தயாராக இருக்கவில்லை.

அவ்வளவு கள்நெஞ்சமா அவர்களுக்கு? என்று யாராவது இந்த இடத்தில் வினவலாம். எனினும் முஸ்லிம்களாகிய நாம் அப்படிக் கேட்க மாட்டோம்﹐ 'மன்னித்திருக்கலாம்' அல்லது'மன்னித்திருந்தால் நன்றாக இருக்குமே' அல்லது 'மன்னித்திருக்க வேண்டுமே' என்றுதான் நாம் கூறுவோம். காரணம்﹐ ஷரீஆ நீதி மன்னிப்பை ஊக்குவித்தாலும் தண்டிக்கும் உரிமையைப் பறிக்கவில்லை. அதனால் அந்த உரிமையை முஸ்லிம்களாகிய நாமும் பறிக்க முடியாது. முஸ்லிமல்லாதவர்கள் மன்னிக்காத அந்தத் தாய் தந்தையைக் குறை காண்பது அவர்களைப் பொறுத்தது. எனினும்﹐ ஷரீஆ நீதியை அவர்கள் குறை காண்பது எந்த வகையிலும் நீதியானது அல்ல. குறை காணும் ஒவ்வொருவரும் பிறறொருவரால் தனது குழந்தை கொலை செய்யப்பட்டால் எந்த மனநிலையில் இருப்பார் என்பதை ஒரு முறை பரிசீலனை செய்து கொள்ளட்டும்.

இதனை எழுதும் நான்﹐ ரிஸானா சம்பவத்தை விமர்சிப்பவர்கள் எப்படியான நோக்கில் தங்களது விமர்சனத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டலையே வழங்கியுள்ளேன். ரிஸானா சம்பவத்தின் பின்னணிகள் எவை? உண்மைகள் என்ன? என்பதை விமர்சனங்கள் செய்யும் ஊடகங்கள் வாயிலாகவன்றி நேரடியாக ஆராய்ந்து அறிந்தவனல்ல.

எனினும்﹐ ஒரு மனிதன் என்ற வகையில் எனதுள்ளம் ரிஸானாவுக்காக அழுகிறது. ஒரு முஸ்லிம் என்ற வகையில் எனதுள்ளம் பின்வரும் விடயத்தில் ஆறுதலடைகிறது.
அல்லாஹ் ஒரு ரிஸானாவை வைத்து உலகத்தை ஒரு முறை உசுப்பியுள்ளான். அந்த உசுப்பலில் இஸ்லாம் எல்லையற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது பெற்றுக் கொண்டிருக்கிறது. எனினும்﹐ அந்த உசுப்பலில் பலியானவள் ரிஸானா அல்லவா? அதனால் ஷரீஆ நீதியை விமர்சித்தவர்கள் கூட நாளை மறுமையில் நான் அந்த ரிஸானாவாக இருந்திருக்கக் கூடாதா என்று நினைக்குமளவு ரிஸானாவைத் தனது அருளால் அல்லாஹ் பரவசப்படுத்துவான் போலும் என எனது மனம் கூறுகின்றது. யா அல்லாஹ்! ரிஸானாவின் பாவங்களை மன்னித்து உனது அருள் சுவனத்தில் அவளை சேர்த்தருள்வாயாக!
(2013-01-16 “எங்கள் தேசம்” பத்திரிகையில் வெளியான சிறப்புக்கட்டுரை)
உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
அமீர், இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

ரிஷானா நபீக்கின் தாய் என்ன செல்கிறார்

1

 எனது மகள் றிஸானாவை அல்லாஹ்தான் தந்தான். இப்போது அவன்தான் எடுத்துள்ளான். இதுதான் என் உறுதியான நம்பிக்கை என றிஸானா நபீக்கின் தயார் றிஸினா நபீக் தெரிவித்தார். றிஸானா நபீக் மரண தண்டனைக்கு உள்ளானதன் பின்பு முதன் முதலாக நேற்று வெள்ளிக் கிழமையன்று ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் கூறியதாவது,,
 
ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை நான் முழுயாக மதிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ளுகின்றேன். ஷரீஆ சட்டப்படி வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினால் அது எத்தகையதாக இருந்தபோதும் மறுமையில் றிஸானாவிற்கு உயர்ந்த பேறு கிடைக்கும். அவர் இப்போது சுவனத்திற்குச் சென்றுள்ளதாகவே உணர்கின்றேன்.
 
வெள்ளிக்கிழமையான இன்று உலகெங்கும் உள்ள முஸ்லிம் சகோதரர்கள் எனது மகளை அவர்களது சொந்தச்; சகோதரியாகக் கருதி ‘துஆ’ பிரார்த்தனையில் ஈடுபட்டதானது இதனையே மேலும் உறுதிப்படுத்துகின்றது.
இதனால்; றிஸானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புப்பற்றி வேறு எதுவும் என்னால் கூறமுடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்வே போதுமானவன்.
 
இதேவேளை றிஸானாவுக்கு மன்னிப்பை பெற்றுக் கொடுப்பதற்கு பல்வேறு வழிகளிலும் இறுதிவரை முயற்சித்து வந்த அனைத்து உள்ளங்களுக்கும் ஊடகங்களுக்கும் மனித உரிமை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் மொத்தத்தில் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அல்லாஹுதஆலா அனைவருக்கும் பேரருள் புரியவேண்மென பிரார்த்திக்கின்றேன் என்றார்.

அன்புள்ள இஸ்லாமியச் சகோதரர்களுக்கு ஒரு அவசர மடல்.

ரிஸானா நபீக்குக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது என்ற செய்தி கேட்டு நான் உணர்விழந்து போனேன். செய்தி பொய்யாக இருக்க வேண்டும் என்றுதான் முதலில் பிராத்தித்தேன். ஆனால் என் நம்பிக்கைதான் பொய்யானது. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் என்று சொல்வத...ைத்தவிர வேறு வழி தெரியவில்லை எனக்கு.

அல்லாஹ், இச்சகோதரியின் பாவங்களை மன்னித்து அவருக்கு உயர்ந்த சொர்க்கத்தை வழங்குவானாக, அவரின் பெற்றவர்கள், உற்றவர்கள் அனைவருக்கும் உள்ளத்தில் உறுதியை கொடுத்து அவர்களின் கவலைகளைப் போக்கிவிடுவானாக !!!

என்ற பிராத்தனைகளுடன் விடயத்துக்கு வருகின்றேன்.

இம்மரணச் செய்தியைக் கேட்டவுடன் ஊடகங்களில் எம் இஸ்லாமியச் சகோதரர்களும் ஏனையவர்களும் நிதானமிழந்து தன் ஆத்திரத்தை வார்த்தைகளில் கொட்டிக் கொண்டிருப்பதைக் கண்டுதான் இவ்வவசர மடலை எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

இந்த மரணச் செய்தி எல்லோருக்கும் மிகவும் கவலையான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. அதில் நானும் உங்களுடன். ஆனால் கவலை, கஸ்ட்டங்கள் வரும்போதும் அது பற்றிய செய்திகள் வரும்போதும் மிகவும் பொறுமையும், நிதானமும் தேவை.

அதனால் தான் இப்படியான சந்தர்ப்பங்களில் “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்” (நாம் இறைவன் புறத்தே இருந்து வந்தவர்கள் அவன்பாலே மீள உள்ளவர்கள்) என்று கூறுமாறு நபியவர்கள் கற்றுத்தந்தார்கள். இது நிதானத்தையும், மன அமைதியையும் போதிக்கும் வார்த்தைகளாகும்.

ஆனால் சிலர் சவூதி அரசை மிகவும் காரசாரமாக விமர்சிக்கின்றனர், பலர், முஸ்லிம் சகோதரர்கள் உட்பட, சவூதிச் சட்டத்தை விமர்சிப்பதாக நினைத்து இஸ்லாமிய ஷரிஆச் சட்டத்தை விமர்சிக்கின்றனர். சிலர் மன்னிக்க மறுத்த பெற்றோரை வஞ்சிக்கின்றனர்.

இந்த விடயத்தில் ஒரு இஸ்லாமியனினதும், ஒரு நியாயவாதியினதும் பார்வை இப்படிதான் இருக்க வேண்டும்;

ஷரிஆ சட்டம், பாதிக்கப்பட்டவன் தரப்பில் இருந்தே குற்றத்தைப் பார்க்கின்றது. அது பாதிக்கப்பட்டவனுக்கு நீதியையும், குற்றவாளிக்கு வழங்கும் தண்டனை மூலம் பார்த்திருப்பவர்களுக்கு படிப்பினையையும், குற்றம் செய்யும் பயத்தினையும் வழங்குகின்றது.

வாதத் திறமையும், சந்தர்ப்ப சாட்சியங்களும்தான் ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை தீர்மானிக்கும் விடயமாகும். குறிப்பாக மரண தண்டனைத் தீர்ப்பானது கண்மூடித்தனமாக எடுத்த எடுப்பில் எடுக்கப்படும் தீர்மானம் கிடையாது, இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ரிசானா விடயம் ஏழு ஆண்டுகள் நீண்ட ஒரு வழக்காகும்.

உலக நீதியை, மறுமை நாளில் அல்லாஹ்வின் நீதி நியாயத்தை நினைவில் கொண்டு நீதி பெற முயற்சிக்குமாறு நீதி வாதிகளுக்கும் (LAWYERS) நீதிவழங்கும் நீதிபதிகளுக்கும் (JUDGES) இஸ்லாம் உத்தரவிடுகின்றது.
ஷரியா சட்டத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ரிசானா விடயத்தில் சந்தர்ப்பங்களும் சாட்சியங்களும் அவரைக் குற்றவாளியாகியுள்ளது. அதனால் அவருக்கு எதிராகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

1. ஒரு குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிஸானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்ப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்துள்ளார். அவரின் எண்ணத்தின் அடிப்படையில் அவர் நிச்சயமாக உயர்ந்த சுவர்க்கத்தை அடைவார்.
2. அவர் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்படிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாஹ்விடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வார்.
3. அறிந்து கொண்டே அவருக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.
4. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லாஹ் வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?
5. 18 வயதை அடைந்த ஒருவர்தான் குற்றவாளியாகக் கருதப்படுவார் என்பது இஸ்லாமியச் சட்டம் கிடையாது. அது உலகச் சட்டம். பருவ வயதுதான் இஸ்லாத்தின் அளவுகோல், அது ஆளுக்காள் வித்தியாசப்படும். 18 என்று உலக வழக்குப்படி எடுத்துக்கொண்டாலும் கூட, ரிஸானா 18 வயதைத் தாண்டாதவர் என்று எமது நாட்டு நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்ட உண்மை சரியான முறைப்படி கடைசிவரை சஊதி நிதிமன்றதைச் சென்றடையவில்லையே, இது யார் குற்றம் தீர்ப்பு வழங்கிய சஊதி அரசின் குற்றமா. அவர்களின் ஆவணப்படி ரிஸானா 18 வயதைத் தாண்டியவர்.

இது இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாகும். எனவே முஸ்லிம்கள் அல்லாஹ்வைப் பயந்து பேச வேண்டும். எந்த ஆதாரங்களும் இல்லாமல், எதார்த்தம் என்னவென்று தெரியாமல், கேள்விப் பட்டவைகளை வைத்துக் கொண்டு சட்டம் பேசக்கூடாது. வார்த்தைகளை அள்ளி வீசக்கூடாது.

அதேபோல் காட்டுச் சட்டங்கள் ஆளும் நாடுகளில் வாழ்த்துகொண்டு முஸ்லிம் அல்லாதவர்கள் இதுதான் சந்தர்ப்பம் என்று இஸ்லாமிய ஷரியா சட்டத்தை விமர்சிக்க முற்படக்கூடாது. உலகிலேயே பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை, அனாச்சாரங்கள், கீழ்சாதிக் கலாச்சாரங்கள் குறைந்த நாடுகள் அரபு நாடுகளாகும். இதை நான் கூறவில்லை, அமெரிக்க அண்மைய ஆய்வுகள் கூறுகின்றன.

தண்டனை வழங்கப்பட்ட ஒரு ரிசானாவைப் பற்றி இன்று பலர் பேசுகின்றனர். பரிதாவப்படுகின்றனர். ஆனால் ஆயிரமாயிரம் ரிசானாக்கள் இன்னும் அரபுலகிலும் உள்நாடுகளிலும் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

வேதனையும் வெட்கமும் என்னவென்றால் பரிதாவப்படும் பலர் இப்படியான ரிசானாக்களை உருவாக்கியவர்களாகவும், கொலைக்களம் ஏற்றியவர்களாகவும் உள்ளனர்.

நீதியாகவும் நியாயமாகவும் சிந்தித்தால் இந்த ரிசானாவும் இப்படியான ரிசானாக்களும் உருவாக பல காரணங்களும், பல காரணகர்த்தாக்களும் உள்ளனர். இந்தப் பாவத்தில் அனைவரும் பங்காளிகளே.

1. மஹ்ரம் (தக்க துணை) இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்றது ரிஸானாக்களின் குற்றம்.

2. தக்க துணை இன்றி வறுமைக்குப் பயந்து அல்லாஹுக்குப் பயம் இல்லாமல் தனிமையில் தன் மக்களை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்தது பெற்றோர்கள் செய்த குற்றம்.

3. வறுமையில் வாடும் சமூகத்துக்கு கைகொடுக்காமல், அவர்களுக்குச் சேர வேண்டிய ஸகாத் (ஏழை வரிப்) பணத்தைக் கொடுக்காமல் மறுக்கும் பணக்காரக் கொள்ளையர்கள் செய்த குற்றம்.
4. திருமணமுடிக்க வீடு, பணம் வேண்டும் என்று பெண்களை மாடாய்ப் படுத்தும் சீதனம் கேட்கும் மானங்கெட்ட ஆண்கள் செய்த குற்றம்.
5. பணத்திற்காக பெண்களை வெளிநாட்டுக்கு ஏற்றி கூட்டிக்கொடுக்கும் முகவர்கள் செய்த குற்றம்.
6. வெளிநாட்டு வருவாய்காக தன் நாட்டுப் பெண்களை வெளிநாட்டுக்கு கூலி வெளைக்கனுப்பிய கூறு கெட்ட அரசுகள் செய்த குற்றம்.
7. இஸ்லாமிய சட்டத்துக்கு மாற்றமாக அந்நிய பெண்களை தன் நாட்டில், வீட்டில் வெளிக்கமர்த்திய ஸஊதி அரசு செய்த குற்றம்.

பாவிகளும் நாங்களே, அப்பாவிகளும் நாங்களே, பரிதவிக்கச் செய்பவர்களும் நாங்களே, பரிதாவப்படுபவர்களும் நாங்களே. எல்லாம் நாங்களே.

இனியும் இந்தக் கொடுமைகள் நடக்கக்கூடாது என்றால், எந்த ரிஸானாவுக்கும் இப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டும் என்றால் உடன் எடுக்க வேண்டிய நடவடிக்கை இதுதான்.
1. பணிப்பெண்ணாய் வெளிநாட்டுக்கு பெண்களை அனுப்புவதை அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும்.

2. தற்போது தனிமையில் வெளிநாட்டுக்கு சென்று வேலைசெய்யும் பணிப்பெண்கள் அனைவரையும் உடன் திருப்பி அழைக்க வேண்டும்.
3. சீதனத்தை சட்டம் போட்டுத் தடுக்க வேண்டும்.

4. உலமா சபை பணக்காரர்களிடமிருந்து சகாத்தைப் பிடுங்கி ஏழைகளிடம் கொடுக்க வேண்டும்.
5. பெண்கள் சமூகப் பாதுகாப்புக்கு அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் எல்லோரும் மனம் வைத்து முயற்சிக்க வேண்டும், வெற்றிபெற அல்லாஹ்விடம் பிராத்திக்க வேண்டும்.
மீண்டும் ஒருமுறை ரிஸானாவுக்காய் பிராத்தித்தவனாய் விடைபெறுகின்றேன்.
வேதனைகளுடன் இவன்
அபூ இமான் இத்ரீஸ் ஹஸன் ஸஹ்வி

உங்கள் அபிப்பிராயங்களை ஹக்கீமிடம் சொல்லுங்கள்

எம். அம்றித்:  ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு சமூகம் தொடர்பான சமகால பிரச்சினைகள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை leaderforum@slmc.lk  என்ற ஈமெயில் முகவரின் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.slmc.lk தெரிவித்துள்ளது .

உங்கள் கருத்துக்களுக்கான மறுமொழிகள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் என்றும் பொது நலன் கருதிய கருத்துக்கள் slmc.lk இணையத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் . தமிழ் , ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகளில் சமகால பிரச்சினைகள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பு : சமூகத்தின் சமகால பிரச்சினைகள் தொடர்பான உங்கள் மேலான அபிப்பிராயங்களை இங்கு எமது Lankamuslim.org -Comments பகுதியில் உங்களை பற்றிய விபரங்களுடன் பதிவு செய்வதன் ஊடாகவும் அவற்றை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எட்டச்செய்யவும் முடியும்.

சாரதி அனுமதிப்பத்திர புள்ளி வழங்கும் முறைமை இன்று முதல் அமுல்

சாரதி அனுமதிப் பத்திரத்துக்கு புள்ளி வழங்கும் முறைமை நாளை முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படும்... என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் எச்.எஸ்.ஹரிச்சந்திர தெரிவித்தார்.சாரதிகள் வாகனம் செலுத்தும் போது விடும் தவறுகளுக்காக அவற்றுக்கு ஏற்றவாறு புள்ளிகள் வழங்கப்படவுள்ளன. மொத்தப்புள்ளிகள் 22 எனக்கொண்டே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.இதனைத் தொடர்ந்து புள்ளிகளை இழக்கும் சாரதிகளின் அனுமதிப்பத்திரம் ஒருவருடத்துக்கோ அல்லது அதற்கும் அதிகமான காலத்துக்கோ ரத்துச்செய்யப்படவுள்ளன. முதல்கட்டமாக இப்புள்ளி வழங்கும் முறைமைக்காக பாரிய வாகன விபத்துக்கள் மற்றும் குடிபோதையுடன் வாகனம் செலுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.