உங்கள் அபிப்பிராயங்களை ஹக்கீமிடம் சொல்லுங்கள்
எம். அம்றித்: ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீமுக்கு சமூகம் தொடர்பான சமகால பிரச்சினைகள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை leaderforum@slmc.lk என்ற ஈமெயில் முகவரின் ஊடாக அனுப்பிவைக்க முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.slmc.lk தெரிவித்துள்ளது .
உங்கள் கருத்துக்களுக்கான மறுமொழிகள் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும் என்றும் பொது நலன் கருதிய கருத்துக்கள் slmc.lk இணையத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்றும் . தமிழ் , ஆங்கிலம் , சிங்களம் ஆகிய மொழிகளில் சமகால பிரச்சினைகள் பற்றி உங்கள் அபிப்பிராயங்களை ரவூப் ஹக்கீமுக்கு அனுப்பமுடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பு : சமூகத்தின் சமகால பிரச்சினைகள் தொடர்பான உங்கள் மேலான அபிப்பிராயங்களை இங்கு எமது Lankamuslim.org -Comments பகுதியில் உங்களை பற்றிய விபரங்களுடன் பதிவு செய்வதன் ஊடாகவும் அவற்றை அமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு எட்டச்செய்யவும் முடியும்.
0 comments:
Post a Comment