கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

டாக்டர் சாஹிர் நாயீக் இலங்கையில்



இலங்கை வந்துள்ள இஸ்லாமிய மார்க்க பேச்சாளரான டாக்டர் சாஹிர் நாயீக் நாளை திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவுள்ளதுடன் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளுடனேயே டாக்டர் சாஹிர் நாயீக் கிழக்கு மாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

டாக்டர் சாஹிர் நாயீகை சந்தித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகள் வெள்ள அனர்த்தம் தொடர்பில் விளக்கியமை குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய மார்க்கப் பேச்சாளரான டாக்டர் சாஹிர் நாயீக் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

.......


அவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு விஜயம் செய்ததுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகளையும் கொழும்பில் வைத்து சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது இலங்கை முஸ்லிம்களின் சமகால நிலவரம் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போர பிரதிநிதிகளை இன்று சனிக்கிழமை இரவு சந்தித்து கிழக்கு மாகாண வெள்ள நிலைமை மற்றும் இலங்கை ஊடகங்களின் நிலை தொடர்பாகவும் கலந்துரையாடினர்.

டாக்டர் சாஹிர் நாயீக் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு முதற் தடவையாக இலங்கைக்கு வந்த போது சுகததாஸ வெளியரங்கில்பல்லாயிரக்கணக்கானோர் மத்தயில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மும்பாயை பிறப்பிடமாக கொண்ட டாக்டர் சாஹிர் நாயீக் உலக நாடுகள் பலவற்றில் விரிவுரையாற்றியுள்ளார்.

போராட்டத்தில் குதித்த எகிப்திய மக்கள் – அரபு நாடுகளில் பரபரப்பு


egypt_protest_04.jpg

துனிசிய மக்களின் துணிச்சலான போராட்டத்தின் பலனாக அந்த நாட்டு அதிபர், பிரான்சின் தளபதி என்று செல்லமாக அழைக்கப்பட்டவரும், மேற்கத்திய நாடுகளின் கைப்பிள்ளையாக விளங்கிய பின் அலி நாடு துரத்தப்பட்டு, கடைசியாக சவுதியில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்த பின் அலிக்கு தற்போது இன்டர்போல் கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்த துனிசிய மக்களின் துணிவின் எதிரொலி, எகிப்திய மக்களுக்கு நம்பிக்கை ஒளி ஊட்டியது. கடந்த செவ்வாய்க்கிழமை, 25/1/2011, காவலர் நாளாகும், அன்று அரசு விடுமுறை. துனிசிய மக்களின் துணிச்சலுக்குப் பின், எகிப்திய மக்களுக்கு நம்பிக்கை துளிர் ஒட்டியதன் விளைவால், 25/1/2011, அன்று போராட்டம் என மக்களாகவே அறிவித்தனர், பெரும்பாலானவர்கள் இளைஞர்களே.

முதல் நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி போராட்டத்தில் பங்கேற்றது, மற்றவர்களையும் ஊக்கப்படுத்தியது. அது நாளுக்கு நாள் கூட, வெள்ளிக்கிழமையான இன்று (28-1-11) ஏறக்குறைய ஒரு லட்சம் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரவு பகல் என்றில்லாமல் போராடி வருவதாக செய்திகள் அறிவிக்கின்றன. (படங்கள் இங்கே) இதுவரை 18 பேர் (இதை எழுதி முடிப்பதற்குள் 26) அரசின் காட்டுமிராண்டிதனத்தால் இறந்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

egypt_protest_01.jpg
மேலும் செய்திகளுக்கு செல்வதற்கு முன், இதன் முக்கிய காரணத்தை அறிந்து கொள்வது அவசியம். எகிப்தில், வறுமை தலை விரித்து ஆடுகிறது, லஞ்ச லாவநியங்களுக்கு பஞ்சமில்லை, காட்டுமிராண்டித்தனமான அரசு. எகிப்திய அதிபரான (இவரை மன்னர் என்று சொல்வதே சரியானது) ஹுஸ்னி முபாரக், கடந்த 30 வருடங்களாக மன்னராகவுள்ளார் (அதாவது, அதிபராகவுள்ளார்). இவரைப்பற்றி சொல்ல வேண்டுமானால் எகிப்து மக்களிடையே உள்ள ஒரு எகிப்தைய நகைச்சுவை ஒன்றை கேட்டால் தெரிந்து கொள்ளலாம்.

ஹுஸ்னி முபாரக் தனது ஆலோசகர் ஒருவரிடம் ஒரு கேள்வியைக்கேட்டார்:

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது முன்னாள் அதிபர் நாசர் சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: அதிபர் நாசர், சோவியத் யுனியனைக் கண்டு பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது முன்னாள் அதிபர் அன்வர் சாதத் சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: அதிபர் நாசர், அமெரிக்காவை கண்டு பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

முபாரக்: “நான் சிறந்தவனா அல்லது கலிபா உமர (ரலி) சிறந்தவரா?

ஆலோசகர்: “நீங்கள் தான் சிறந்தவர்”

முபாரக்: “காரணம் என்னவோ?”

ஆலோசகர்: உமர்(ரலி), அல்லாஹ்வைப் பயப்பட்டார், நீங்கள் பயப்படுவது இல்லை.

egypt_protest_08.jpgஎன்றாராம் அந்த ஆலோசகர், இது நகைச்சுவையாக எகிப்து மக்கள் சொல்வது என்றாலும், இதன் சாரம்சத்தை புரிந்து கொள்ளலாம்.

அடுத்ததாக இன்றைய எகிப்திய மக்களின் நிலை குறித்தும் ஒரு நகைச்சுவை உண்டு.அது என்னவென்றால்:

ஒருவர், உணவு உண்டாராம், அப்போது ஷைத்தான், அவரை அடித்து, பிஸ்மில்லாஹ் சொல்ல சொன்னானாம். இவர் குழம்பிப் போய் நின்றபோது, நானும் பாக்கிறன் நீ எப்பப்பாரு இந்த சாப்பட்டதான் சாப்பிடுற, பிஸ்மில்லாஹ் சொல்ல மறந்துருற, அதுனால நான் சாப்ட வேண்டியதா இருக்கு. என்னால இத சாப்ட முடியாது, அதனாலதான் பிஸ்மில்லாஹ் சொன்ன சொன்னேன் என்றானாம் ஷைத்தான்.

இப்போது இன்றைக்கு வருவோம், இன்றைய நிலைப்படி, அங்கு இணையதளங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, கைபேசிகள் முடக்கப்பட்டுள்ளன. போராட்ட படங்கள், மனதை நெகிழ வைக்கின்றன. இந்தப்போராட்டத்தில், படித்தவர்கள், படிக்காதவர்கள், நடுத்தர மக்கள், ஏழைகள், பெண்கள் உட்பட, அனைத்து தரப்பினரும் பங்கு கொண்டுள்ளனர்.
எகிப்திய மக்களை ஆயுதம் கொண்டு தாக்கி வருகிறது ஹுஸ்னி முபாரக் அரசு. எகிப்திய கொடுங்கோல் அடக்குமுறைக்கு அத்தாட்சிக்கு கீழ்வரும் இன்றைய கானோளியைப்பாருங்கள்:

http://www.youtube.com/watch?v=4XnhHzs91MY

அநியாயமாக ஒருவர் சுடப்படுகிறார்.

கீழே, காவலராக நிற்கும் தனது மகனை, போராளியாக நிற்கும் ஓர் பெண்மணி முத்தமிடுகிறார்.

http://media.sacbee.com/static/weblogs/photos/images/2011/jan11/egypt_protest_sm/egypt_protest_40.jpg

மேலும் படங்களுக்கு: http://blogs.sacbee.com/photos/2011/01/rioting-and-chaos-engulfs-egyp.html

இந்த போராட்டம், மற்ற அரபுலக மற்றும், வாடா ஆப்பிரிக்க நாடுகளையும் தொற்றிக்கொண்டுள்ளது. எமன், ஜோர்டன், அல்ஜீரிய போன்ற நாடுகளிலும் தற்போது போராட்டங்கள் வலுத்து வருவதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவில் ஆர்பாட்டம் நடைபெற்றுள்ளது.

அரேபிய நாடுகளின் மன்னர்கள் உறக்கமிலந்துள்ளதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த போராட்டம் தோற்க வேண்டும் என அரபுலக மன்னர்கள் விரும்புவதாகவும், வெற்றி பெற வேண்டுமென இளைஞர்கள் வேண்டுவதாகவும் செய்திகள் அறிவிக்கின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ், இந்த மக்களுக்ககும், நமக்கும், சிறந்த ஆட்சியையும் ஆட்சியாளரையும் தந்தருள இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

tntj.net இணையதளத்திற்காக சிறப்பு செய்தி – எஸ். ஜாஃபர் அலி (USA)

ஆசிரியரின் திருமணத்திற்காக பாடசாலை விடுமுறை



ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட கினிகத்தேனை சிங்கள மகா வித்தியாலயத்தில் கடமைப்புரியும் ஆசிரியர் ஒருவரின் திருமணத்தினை முன்னிட்டு அப் பாடசாலைக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டமைத்தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.




ஆசிரியரின் திருமணத்திற்காக இப்பாடசாலையை இன்று வெள்ளிக்கிழமை மூடுவதற்கு ஹட்டன் கல்வி வலயத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளர் ஒருவர் அனுமதி வழங்கியிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இவ்விடயம் தொடர்பாக ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.ரெங்கராஜியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ஆசிரியர் ஒருவரின் திருமணத்திற்காக பாடசாலைக்கு விடுமுறை வழங்கமுடியாது என்றும் குறிப்பிட்ட பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்ட நாளுக்குப் பதிலாக பிறிதொரு நாளில் பாடசாலையை நடத்துவதற்கு பாடசாலையின் அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கஹட்டோவிட அல்பத்ரியாவில் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பம்

2011இன் கல்வியாண்டிற்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சகல பாடசாலைகளிலும் இல்ல விளையாட்ட போட்டிகள் கலைகட்டிய வண்ணமுள்ளன. அந்த வகையில் கஹட்டோவிட அல்பந்ரியாவிலும் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதை காணக் கூடியதாக இருக்கிறது. சென்ற வருடம்போன்று இம்முறையும் ஷம்ஸ், கமர், நஜ்ம் ஆகிய இல்லங்கள் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொ்ள்ளவுள்ளன. இல்ல விளையாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ள மாணவர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுவருவதாகவும் அறியக் கிடைத்துள்ள அதேவேளை பழைய மாணவர்களும் தத்தமது முன்னைய இல்லம் வெற்றி பெற அவர்களது ஒத்துழைப்புக்களை நல்குவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

துனிஷியா : அரபு ஆட்சியாளர்களுக்கு ஓர் அபாய சங்கு


சிறு சிறு கோஷ்டி சண்டைகளையும், நடிகைகள் ஆடை அணியாததையும் எல்லாம் தலைப்பு செய்தியாக வெளியிடும் இந்திய, இலங்கை ஊடகங்கள் அதிலும் குறிப்பாக தமிழ் ஊடகங்கள் துனிஷியாவில் நடந்த மக்கள் எழுச்சியை குறித்து எவ்வித பரபரப்பும் காட்டாதது அதியசமில்லை. ஆனால் தமிழ் முஸ்லீம் குழுமங்களிலும் கூட இது அவ்வளவாக விவாதிக்கப்படாததும் அரபுலகில் நிகழவிருக்கும் மிகப் பெரும் மாற்றத்திற்கு கட்டியம் கூறவிருக்கும் இந்நிகழ்வு குறித்து இந்திய முஸ்லீம் தலைமைகளும் மெளனம் காப்பது தான் ஆச்சர்யமளிக்கிறது.


சரி, அப்படி என்ன தான் நடந்தது துனிஷியாவில் ? துனிஷியாவில் பிற அரபு நாடுகளை போல் சர்வதிகார ஆட்சியின் பிடியில் இருந்தது. 1987 அக்டோபரில் பிரதம மந்திரியாக அமர்த்தப்பட்டு பின் ரத்தமில்லா புரட்சியின் மூலம் நவம்பர் 1987ல் ஆட்சியை பிடித்த ஜைனுல் ஆபிதின் பின் அலி 23 ஆண்டு காலமாக தன் எதிர்ப்பாளர்களை துவம்சம் செய்து போலி தேர்தல்கள் மூலம் விடாப்பிடியாக ஆட்சி செய்து கொண்டிருந்த பின் அலி மக்களின் பேரெழுச்சியின் காரணமாக பதவி விலகி சவூதி அரேபியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

வேலை வாய்ப்பின்மையும் வறுமையும் மக்களை ஆட்டி படைத்தாலும் பின் அலி சுகவாசியாய் ராஜ வாழ்க்கை வாழ்ந்துள்ளார். எதிர்கட்சிகளை குறிப்பாக ஊழல்மய ஆட்சியை அகற்றி இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைத்த இஸ்லாமிய இயக்கத்தினரை சித்ரவதை செய்து சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தினார். மக்கள் மேல் தான் கட்டவிழ்த்து விட்ட கொடுமைகளுக்கெல்லாம் அமெரிக்கா பாணியில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை கட்டுபடுத்தவே செய்ததாக நாடகமாடினார்.

பின் அலியின் 23 ஆண்டு கால கொடூர சர்வதிகார ஆட்சியின் முடிவு இப்படி தான் ஆரம்பமானது. வேலை வாய்ப்பின்றி அவதிப்பட்ட ஏராளமான துனிஷியர்களில் ஒரு இளைஞன் வேலை தர கோரி அதிகார வர்க்கத்திடம் முறையிட்டு அங்கு அவமானப்படுத்தப்பட்டதால் மனமுடைந்து தன்னை நெருப்பில் பொசுக்கி கொண்டு இறந்து போனான். அவனின் மரணத்தை தியாகமாக சித்தரித்து ஓட்டு மொத்த துனிசியா மக்களும் தங்கள் 23 ஆண்டு கால கோபத்தை வெளிக்காட்ட கிடைத்த தருணமாக வீதியில் வந்து போராட, போராடிய மக்களை ராணுவம் சுட்டு தள்ள, கடைசியில் மக்கள் எதிர்ப்பை தாங்க இயலாமல் அதிபர் பின் அலி நாட்டை விட்டு ஓடி சவூதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார்.

இம்மக்கள் எழுச்சி துனிஷியாவை விட மத்திய கிழக்கு உள்ளிட்ட அரபு நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. துனிஷியாவை தூக்கி எறிந்த மக்கள் எழுச்சி தங்கள் நாட்டிலும் ஏற்பட்டு விடுமோ என்ற பயம் எல்லா நாட்டு தலைவர்களுக்கும் ஏற்பட்டு உள்ளது. இது வரை பின் அலியின் ஆட்சியை புகழ்ந்து வந்த அரபு நாடுகள் இம்மக்கள் எழுச்சிக்கு பிறகு மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல் இவ்வெழுச்சியை கண்டிக்காமலும் வரவேற்காமலும் பொதுவாக துனிஷியாவில் அமைதி திரும்ப வேண்டும் எனும் தொனியில் அறிக்கை விட்டுள்ளன.

பின் அலி நாட்டை விட்டு தப்பி ஓடியதுமே ஏற்கனவே ஏமனில் சர்வதிகார ஆட்சியை நடத்தி வரும் அலி அப்துல்லா சலேஹ்வுக்கு எதிராக பல்கலைகழக மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் “ கவிழ்க்கப்படும் முன் விலகி கொள்ளுங்கள்” எனும் பதாகையை தாங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் துனிஷியாவின் மக்கள் எழுச்சியை பார்த்து பிற அரபு மக்களும் ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஏமனை போலவே தற்போது சவூதியும் உள்நாட்டு குழப்பத்தில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. மன்னர் அப்துல்லாவின் உடல்நலக் குறைவால் அடுத்து யார் ஆட்சிக்கு வருவது என்ற வாரிசுரிமை போராட்டத்தால் சவூதி அரச குடும்பம் கலகலத்து கிடக்கிறது. இளவரசர் ஃபைசல் மன்னர் ஆவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் அவர் அமெரிக்காவுக்கு எதிர்ப்பானவர் என்பதால் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவிப்பதாக வந்துள்ள செய்திகள் ஒரு முஸ்லீம் நாட்டின் மன்னராக யார் வர வேண்டும் என்பதை கூட முடிவு செய்யும் பொறுப்பை எடுக்க லாயக்கற்ற நிலையை நிதர்சனமாய் காட்டுகிறது.

துனிஷியாவை தங்கள் நட்பு நாடாக பாவித்து வந்த அமெரிக்கா இப்போராட்டத்திற்கு பின் பட்டும் படாமல் காவல்துறையால் 40 நபர்கள் கொல்லப்பட்டது போன்ற அதிகார அத்துமீறல்கள் தவிர்த்து கொள்ளப்பட வேண்டியது என்றும் இனி மேலாவது ஜனநாயக பாதைக்கு துனிஷியா செல்லும் என்று எதிர்பார்ப்பதாக ஜனநாயக கோஷத்தை எழுப்பியுள்ளது. இஸ்லாமிய எழுச்சிக்கு பாடுபடுவோரை எல்லாம் நாட்டை விட்டு துரத்தும் அல்லது நாட்டுக்குள்ளே சிறை வைக்கும் சவூதி அரேபியா, முஸ்லீம் உம்மாவின் செல்வங்களை கொள்ளையடித்த ஒரு சர்வதிகாரிக்கு, இஸ்லாம் இம்மண்ணில் மேலோங்க பாடுபட்டோரை சித்ரவதை செய்தவருக்கு தஞ்சமடைய இடம் கொடுத்துள்ளது ஆச்சரியமான ஒன்றல்ல.

சிரியாவிலிருந்து வெளிவரும் அரசு ஆதரவு பத்திரிகையான அல்-வதான் தன் தலையங்கத்தில் “ அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் விலை போன அரசுகள் துனிஷியாவிலிருந்து பாடம் கற்க வேண்டும். மக்களின் பிரச்னைகளை புரிந்து கொள்ளாமல் தங்களுக்கு சாதகமாக முடிவு எடுக்காமல் தங்கள் புத்தியை அடகு வைத்து விட்டு மேற்குலகின் வசதிக்கேற்ப முடிவு எடுக்கும் நாடுகளுக்கு தங்களுக்கு பிரச்னை வந்தால் அவர்கள் கை விட்டு விடுவார்கள்” என்பதை உணர வேண்டும் என்று எழுதியுள்ளது.

துனிஷியா ஆட்சி கவிழ்ப்பு பற்றி கருத்து தெரிவித்த ஜோர்டானின் மிகப் பெரும் இஸ்லாமிய அமைப்பான இக்வானுல் முஸ்லீமின் இனி மேலாவது அரபு நாடுகள் இஸ்லாமின் அடிப்படையில் சரியான சீர்திருத்தத்தை மேற் கொள்ள வேண்டும் என்றும் சர்வதிகாரமே அரபு நாடுகளில் காணப்படும் அனைத்து தீமைகளுக்கும் ஆணி வேர் என்று வர்ணித்துள்ளது. துனிஷியாவை போலவே தாங்கள் இஸ்லாமிய மலர்ச்சிக்கு உழைப்பதால் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளது.

இன்னொரு மத்திய கிழக்கு நாடான குவைத்தின் எதிர்கட்சி இஸ்லாமிய உறுப்பினர் வலீத் அல் தபத்ததி துனிஷிய மக்களின் தைரியத்தை பாராட்டுவதாகவும் தங்கள் மக்களை ஒடுக்கி இஸ்லாமிய தனித்துவத்தை கைவிட்டு மேற்குலகின் பாதையில் அடியெடுத்து செல்ல முற்படும் எல்லா நாடுகளுக்கும் இதே நிலை ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

துனிஷியாவில் நிகழ்ந்துள்ள நிகழ்வுகளிலிருந்து இஸ்லாத்தின் பெயரால் ஆட்சி செய்து கொண்டு இஸ்லாத்தை ஆளும் கொள்கையாக இப்புவியில் நிலைநாட்ட பாடுபடுவோரை சித்ரவதை செய்யும் அரசுகள், முஸ்லீம் உம்மாவை சில சட்ட பிரச்னைகளில் மாத்திரம் காலம் முழுக்க உழல வைக்கும் அடிப்படையில் செயல்படும் முஸ்லீம் அரசுகள் பாடம் கற்க வேண்டும்.

இறைவன் தந்த கனிம வளங்களை கொண்டு கொழிக்கும் பொருளாதரத்தை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆடம்பர ஹோட்டல்கள், தீவுகள், விமானங்கள் என சொகுசாகவும், துப்பாக்கியே தூக்க தெரியாத ராணுவத்துக்காக பில்லியன் கணக்கில் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை கொள்முதல் செய்து அமெரிக்காவிற்கு அடிமை சேவகம் செய்யும் அரபு நாடுகள் அப்பணத்தை ஏழை முஸ்லீம் நாடுகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும். தங்களிடம் எஞ்சியுள்ள பணத்தை தானமாகவோ அல்லது வட்டியில்லா கடனாகனோ கொடுத்து அவர்களையும் வளப்படுத்த வேண்டும். மன்னராட்சியை ஒழித்து, அமெரிக்காவுக்கு கால் பிடிக்காமல் இஸ்லாத்தை முழுமையாய் நிலைநாட்ட முயன்றால் குறைந்த பட்சம் மத்திய கிழக்கு நாடுகள் ஓரே குடையின் கீழ் வரலாம். அவை விரிந்து 56 முஸ்லீம் நாடுகளும் ஓரே தலைமையின் கீழ் கிலாபத்தை புனர்நிர்மாணம் செய்ய அது அடித்தளமாய் விளங்கலாம். இஸ்லாத்திற்கு முரணாக செயல்படுவதை நிறுத்தா விட்டால், துனிஷியாவிலிருந்து பாடம் கற்காவிட்டால் துனிஷியா உங்கள் வீட்டு கதவையும் தட்டும். அடக்கி வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் உம்மாவின் எழுச்சி வெடித்து சிதறும் போது நிச்சயம் ஆட்சியாளர்கள் தூக்கி எறியப்படுவார்கள். முஸ்லீம் ஆட்சியாளர்களே துனிஷியா உங்களுக்கு ஓர் அபாய சங்கு, கிலாபத்திற்கு இது ஓர் எழுச்சி கீதம்.

விண்டோஸ் Safe Mode ஏன் ? எதற்காக?


மிக எளிதான திறனுடன் கூடிய கம்ப்யூட்டர் பயன்பாட்டினை வழங்குவதில் விண்டோஸ் இயக்கம் எப்போதும் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் சில வேளைகளில், இது ஏமாற்றத்தைத் தரும் சிஸ்டமாக அமைந்து விடுகிறது.


குறிப்பாக, சில புதிய சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்வதற்காகவும், ஹார்ட்வேர் சாதனங்களை இணைப்பதற்காகவும், புதிய ட்ரைவர்களை இணைத்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்தால், கம்ப்யூட்டர் தொடர்ந்து இயங்காமல் முரண்டு பிடிக்கும்; அல்லது கிராஷ் ஆகும். உடனே நாம் கம்ப்யூட்டரை மீண்டும் இயக்குவோம். ஆனால் திடீரென புதிய தோற்றத்தில் கம்ப்யூட்டர் திரை காட்சி அளிக்கும். நான்கு மூலைகளிலும் Safe Mode என்ற சொற்கள் காட்டப்படும். இது என்ன?

வழக்கமான முறையில் இயக்கத்தினைத் தொடங்க முடியாமல் விண்டோஸ் தத்தளிக்கையில், விண்டோஸ் தான் இயங்க ஒரு எளிய வழியைத் தேர்ந்தெடுக்கிறது. விண்டோஸ் இயக்கத் தொகுப்பில் அல்லது வேறு இடத்தில் எத்தகைய தவறு நேர்ந்துள்ளது எனக் கண்டறிய, விண்டோஸ் தானாக வழங்கும் ஒரு வழி இது. இந்த வழியைக் கண்டறிந்து சரி செய்த பின், இதனை மீண்டும் இயக்கினால், விண்டோஸ் வழக்கம்போல தனக்கு வேண்டிய வழியில் இயங்கத் தொடங்கும். விண்டோஸ் சேப் மோடில் இயங்குகையில், வழக்கமான இயக்கம் இல்லாமல், மாறுபாடான சில வழிகளைக் கையாள்கிறது. அவை என்னவெனப் பார்க்கலாம்.

1. சேப் மோடில் autoexec.bat அல்லது config.sys பைல் இயக்கப்பட மாட்டாது.

2.பிரிண்டர் மற்றும் ஸ்கேனர் போன்ற பல துணை சாதனங்களுக்கான டிரைவர்கள் இயக்கப்படாமல் இருக்கும். இந்த ட்ரைவர்கள் தான், அந்த துணை சாதனங்களுக்காக கம்ப்யூட்டருக்கு அவை குறித்து அறிவித்து, இயங்குவதற்குத் துணை புரிபவை.

3. வழக்கமான கிராபிக்ஸ் டிவைஸ் ட்ரைவருக்குப் பதிலாக, சேப் மோடில் ஸ்டாண்டர்ட் விஜிஏ கிராபிக்ஸ் மோட் பயன்படுத்தப்படும். இந்த வகை கிராபிக்ஸ், விண்டோஸுக்கு இணையாக இயங்குகின்ற அனைத்து வீடியோ கார்ட்களையும் சப்போர்ட் செய்திடும்.

4. config.sys script பைலின் ஒரு பகுதியாக லோட் செய்யப்படும் himem.sys என்னும் பைல், சேப் மோடில் testmem:on என்ற ஸ்விட்சுடன் இணைத்து தரப்படும். இந்த ஸ்விட்ச், கம்ப்யூட்டருக்கு, இயக்கத்தினைத் தொடரும் முன் அதன் மெமரியை சோதனையிடச் சொல்லி நினைவூட்டும்.

5. விண்டோஸின் மற்ற பைல்கள் எங்கு உள்ளன என்பதற்கான தகவல்களைக் கண்டறிய, சேப் மோட் msdos.sys என்ற பைலைச் சோதனையிடும். இந்த பைலைக் கண்டறிந்த பின்னரே, சேப் மோடில் விண்டோஸ் லோட் ஆகும். அப்போது win /d:m என்ற கட்டளையைப் பயன்படுத்தும். விண்டோஸ் பைல்களைக் கண்டறிய முடியவில்லை என்றால், command.com என்ற பைலை இயக்கும். இதன் மூலம் சி ட்ரைவில் கமாண்ட் ப்ராம்ப்ட் இயக்கப்படும்.

6. விண்டோஸ் வழக்கமாக system.ini என்ற பைலுக்குப் பதிலாக, system.cb என்ற தொகுப்பு ( batch ) பைல் ஒன்ற இயக்கும். இந்த பைல் அனைத்து விர்ச்சுவல் டிவைஸ் ட்ரைவர்கள் ( Virtual Device Drivers – VxDs ) என்று அழைக்கப்படும், சாதனங்களை இயக்குவதற்கான ட்ரைவர் பைல்களை லோட் செய்திடும். இதுவே கம்ப்யூட்டரின் முக்கிய பாகங்களுடன் தகவல் பரிமாற்றத்திற்கு உதவிடும்.

7. சேப் மோடில் வழக்கமான system.ini பைலுடன் win.ini மற்றும் Registry செட்டிங்ஸ் லோட் செய்திடும். அப்போது பூட் மற்றும் சார்ந்த வரிகளை விலக்கிச் சென்று செயல்படும். மேலும் win.ini பைலில் பட்டியலிடப்பட்டுள்ள எந்த புரோகிராமையும் இயக்காது.
8. விண்டோஸ் டெஸ்க் டாப் 16 வண்ணங்களில் லோட் ஆகும். இதன் ரெசல்யூசன் பிக்ஸல்கள் 640 x 480 என்ற வகையில் இருக்கும். “Safe Mode” என்ற சொற்கள் ஒவ்வொரு மூலையிலும் காட்டப்படும். தன் முதல் முயற்சியில் இயங்க முடியவில்லை என்றால், விண்டோஸ் தானாக, சேப் மோடில் இயக்கத்தைத் தொடங்குகிறது. நாமும் சேப் மோடில் கம்ப்யூட்டரை இயக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கத்திற்கான ஸ்விட்சை இயக்கியவுடன், தொடர்ந்து பூட் மெனுவின் போது F5 அல்லது F8 என்ற கீயை அழுத்தி சேப் மோடுக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வரலாம்.
சேப் மோடில் கம்ப்யூட்டர் இயங்கினால், நாம் என்ன செய்ய வேண்டும். முதலில், கம்ப்யூட்டரை வழக்கமாக பூட் செய்திட இயலாமல், எது தடுத்தது என்று கண்டறிய வேண்டும். ஏதேனும் புதியதாக, ஒரு ஹார்ட்வேர் சாதனத்தினை இணைத்திருந்தால், கண்ட்ரோல் பேனல் சென்று அதனை நீக்கவும். அதற்கான ட்ரைவர் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை முழுமையாக நீக்கவும். நீக்கிவிட்டு மீண்டும் கம்ப்யூட்டரை இயக்கிப் பார்க்கவும். விண்டோஸ் வழக்கம்போல இயங்கத் தொடங்கினால், அந்த சாதனத்தின் ட்ரைவர் பைலுக்கும், விண்டோஸ் இயக்க பைலுக்கும் பிரச்னை உள்ளது என்று அறிய கிடைக்கும். இதே போல ஏதேனும் கேம்ஸ் இன்ஸ்டால் செய்திருந்தாலும், நீக்கிப் பார்க்கவும். கண்ட்ரோல் பேனலில் Add/Remove Programs மூலம் நீக்கலாம். பிரச்னை புதிதாக இணைக்கப்பட்ட சாதனம் அல்லது சாப்ட்வேர் மூலம் இல்லை என்றால், உங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரி ஏதோ ஓர் இடத்தில் கெட்டுப் போயிருக்கலாம். ரீ பூட் செய்வதன் மூலம் ரெஜிஸ்ட்ரி தானே சரி செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. ரெஜிஸ்ட்ரி பைலை அண்மைக் காலத்தில் பேக் அப் செய்து வைத்திருந்தால், அதனை, இந்த ரெஜிஸ்ட்ரி பைல் உள்ள இடத்தில் காப்பி செய்து இயக்கலாம். இல்லையேல் விண்டோஸ் இயக்கத்தினை மீண்டும் இன்ஸ்டால் செய்வதனைத் தவிர வேறு வழியில்லை.

பிளேட்டோ

[Plato.jpg]

பிளேட்டோபிளேட்டோ (Plato, கிமு 427 - கிமு 347 ) பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானியாவார். இவர் சாக்கிரட்டீசின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு.

தத்துவம், கலை இலக்கியம், வீரம் ஆகியவற்றின் விளை நிலமாக இருந்தது கிரேக்கம் என்பதை நாம் அறிவோம். அம்மண்ணிலே தோன்றிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர் தான் பிளாட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவராவார்.

பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ், அவர் எழுதுவதற்காக ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி "பிளாட்டோ' என வைத்துக் கொண்டார். அனேகமாக புனைப்பெயரை வைத்துக் கொண்டு எழுதிய உலகின் முதல் எழுத்தாளர் அவராகத்தான் இருக்கும்.

"பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும் இச்சொல்லில் இருந்து தான் ஆங்கிலச் சொல்லான Flat வந்தது. பிளாட்டோவின் சொந்த ஊர் ஏதென்ஸ். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும் எளிமையையே விரும்பியவர். இவரின் தந்தை அரிஸ்டோன், தாய் பெரிக்டியோனி. இவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் கடைசிப் பிள்ளைதான் பிளாட்டோ.

கிரேகத்தின் வழக்கப்படி இராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது இருபதாவது வயதில் சாக்ரட்டீசிடம் மாணவராகச் சேர்ந்தார் பிளாட்டோ. இவருக்கு தத்துவத்துறையில் மட்டுமல்லாது இசை, கவிதை, ஓவியம் ஆகிய நுண்கலைகளின் மீதும் அளவற்ற ஈடுபாடு இருந்தது. சாக்ரட்டீசின் முதன்மை மாணவனாக இருந்த பிளாட்டோ, அவர் இறக்கும் காலம் வரை அவருடனேயே இருந்தார்.

சாக்ரட்டீஸ் இறந்த பிறகு பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பயணங்கள் அவருக்கு அனுபவ அறிவை சேர்க்கவும், சாக்ரட்டீசின் கருத்துக்களை பரப்பவும் உதவின.கிரேக்கம் திரும்பிய பிளாட்டோ ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். உலகின் முதல் பல்கலைக்கழகத்தில் அறிவியல் ஆய்வுகளும், பொதுக்கல்வி போதனையும், நுன்கலை பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பிளாட்டோ எழுதிய "குடியரசு' என்ற நூல் மிகச் சிறந்தது என போற்றப்படுகிறது.

பிளாட்டோவின் சிந்தனைகள் இன்றளவும் மிகச் சிறந்தவையாக மதிக்கப்படுகின்றன. பெண்களுக்கு தனி வாழ்விலும், அரசியலிலும் சம பங்கு தரவேண்டும் திறனை வளர்க்க கல்வி பயன்படவேண்டும். அன்பு, வீரம், பொறுமை, நேர்மை ஆகிய ஒழுக்கங்களை கடைபிடிக்க வேண்டும் என்று பிளாட்டோ வலியுறுத்தினார்."மனிதனிடம் அறிவு உறங்கும்போது, கீழான ஆசைகள் தோன்றி வாழ்வை சீர்குலைத்துவிடும். நல்லறிவு இல்லாததால் தான் தீமைகள் ஏற்படுகின்றன' என்றார் பிளாட்டோ.

நீதி என்பது மனிதப்பண்பு எனச்சொன்ன பிளாட்டோ, புத்தரைப் போலவே - அதிகப்படியான ஆசையே துன்பங்களுக்கு காரணம் - என்றார். வாழும்போதே மக்களின் பேராதரவினையும், மதிப்பையும் பெற்றவர் பிளாட்டோ, அவர் தனது என்பதாவது வயதில் இறந்தபோது ஏதென்சு நகரமே துக்கம் அனுசரித்ததாம். விரிந்த சிந்தனையும் பரந்த உள்ளமும் எப்போதுமே மக்களின் பாராட்டுக்களை பெறும். உலகம் அவர்களைப் போற்றும்.

ஜனாஸா அறிவித்தல்

உடுகொடையைச் சேர்ந்த பாத்திமா ரிம்ஸானா காலமானார். அன்னார் ஜனாப் ஸரூக்கின் மகளும் சகோதரர் ரிகாஸின் மனைவியுமாவார். . அன்னாரின் ஜனாஸா இன்று  (2011.01.16) காலை 10.00 மணியளவில் உடுகொடை மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அல்லாஹ் இச் சகோதரியின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமான போக்குவரத்து் குறுக்கு வழி 16ம் திகதி திறப்பு!



யாழ்ப்பாணத்துக்கும், கொழுமபுக்குமான போக்குவரத்துத் தூரத்தை 120 கிலோமீற்றரால் குறைக்கும் ஏ 32 வீதி ஊடான போக்குவரத்து எதிர்வரும் 16ம் திகதியுடன் சாத்தியப்படவுள்ளது.

ஏ 32 போக்குவரத்துப் பாதையில் காரைதீவையும், புநகரியையும் இணைக்கும் 288 மீற்றர் நீளமான கேரதீவு-சங்குப்பிட்டிப் பாலம் எதிர்வரும் 16ம் திகதி திறக்கப்பட்டதும், ஏ 32 வீதி ஊடான போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்கக்கூடிய நிலை ஏற்படும்.

இதன்மூலம், யாழ்ப்பாணத்திலிருந்து மன்னார், புத்தளம் ஊடாகக் கொழும்பை அடைய முடியும் என்பதால், போக்குவரத்துத் தூரம் 120 கிலோமீற்றரால் குறைவடைந்து, பயண நேரமும் 3 மணித்தியாலத்தால் குறையும்.
ஐக்கிய இராச்சியம் வழங்கிய 800 மில்லியன் ரூபா கடனுதவி மூலம், கடந்த 8 மாத காலமாக முன்னெடுக்கப்பட்டுவந்த 288 மீற்றர் நீளமான சங்குப்பட்டிப் பால நிர்மாணப் பணிகள் தற்சமயம் நிறைவடைந்து, எதிர்வரும் 16ம் திகதி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அதனைத் திறந்து வைக்கவுள்ளார்.
இது வட பகுதி மக்களுக்கான ஜனாதிபதியின் தைப்பொங்கல் பரிசு என்றும், தொடர்ந்து 17ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தைப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அவர் அறிவிப்பார் என்றும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

சாதனை மனிதர் (mini motor bike) கௌவ்ஸ் நானா அவர்கள் காலமானார்.

ஹொரொகொல்ல, நிட்டம்புவயைப் பிறப்பிடமாக்க் கொண்ட மொஹம்மட் கௌவ்ஸ் நானா அவர்கள் காலமானார். இவர் உலகில் அதிசிரிய மோடார் வாகனத்தை உருவாக்கி அவரது பெயரை உலக சாதனைப் வரலாற்றுப் புத்தகத்தில்  பதிவுசெய்துகொண்டவர்.

அன்னாரின் ஜனாஸா இன்று (2011.01.14) வெளிளிக் கிழமை  காலை 10.00 மணியளவில் கொரகொல்லயில்  நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!

உலகை உலுக்கிய வீர மரணம்-நான்கு ஆண்டுகளுக்கு பின்னால்

சரத் சந்திர ராஜகருணா இன்று திங்கட்கிழமை காலை காலமானார்.


முன்னாள் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் சந்திர ராஜகருணா இன்று திங்கட்கிழமை காலை காலமானார்.

1977ஆம் ஆண்டு முதன்முதலில் நாடாளுமன்றத்தில் பிரவேசித்த இவர், ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.

பட்டப்பகலில் மாலை அபகரிப்பு கஹட்டோவிட்டவில் சம்பவம்

கடந்த வெள்ளியன்று பகல் வேளை  மோட்டா சைக்கிலில் கஹட்டோவிட்ட வயல் சந்தி பாதையால் வந்த  இனந்தியாத இருவர் அவ்வழியால் சென்றுகொண்டிருந்த ஒரு பெண்ணிடம் ஏதோ பாதை பற்றி விசாரிப்பது போல நடித்து  அப்பெண்ணின் கழுத்திலிருந்த மாலையை அபகரித்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமையாகையால் ஆண்கள் யாரும் சம்பவ இடத்தில் இருக்கவில்லை. அதனால் கள்வர்களை அடையாளங்காண முடியவில்லை. இதுபற்றி  விசாரிக்கும் நிமித்தமாக இன்று நிட்டம்புவ பொலிஸ் உயரதிகாரி ஊருக்கு வந்த்தாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற குற்றச்செயல்கள் இனிமேலும் ஏற்படாமலிக்க தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

தத்துவ ஞானி சாக்ரடீஸ்

கிரேக்க நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் சாக்ரடீஸ்.(கிமு 470 – கிமு 399).

படிமம்:Socrates.png



கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். இவர் மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவர். இவருடைய சீடர் பிளேட்டோவும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்.

சாக்ரட்டீசிய முறை(Socratic method) அல்லது எலன்க்கோசு (elenchos) முறை என அறியப்படுகின்ற இவருடைய மெய்யியல் ஆராய்வு முறையே, மேற்கத்திய சிந்தனைகளுக்கு இவரது முக்கியமான பங்களிப்பாகும். இதற்காக, சாக்கிரட்டீசு, அறநூல் அல்லது நல்லொழுக்கத் தத்துவத்தினதும் அதனால் பொதுப்படையான தத்துவஞானத்தினதும் தந்தையும், ஊற்றுக்கண்ணுமாகக் கருதப்பட்டு வருகிறார்.

அப்போது உலகில் எந்த மதமும் தோன்றவில்லை . தன் சுய முயற்சியால் மனித அறிவின் தோற்றம் , தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றில் திறன் பெற்று விளங்கினார் . ஆனால் , அவர் எதையும் எழுதி வைத்துக்கொள்ளவில்லை . அவருடைய சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு அவரை சுற்றி எப்போதும் இளைஞர்கள் குழுமியிருந்தனர் . அதில் ஒருவரான பிளாட்டோ , சாக்ரடீஸ் பற்றிய சிந்தனைகளை பல புத்தகங்களாக எழுதினார் . இந்த புத்தகங்கள் மூலம்தான் சாக்ரடீஸ் பற்றி வெளி உலகத்துக்கு தெரியவந்தது .

சாக்ரடீஸின் சொற்பொழிவுகளும் மக்களைச் சிந்திக்க வைத்தது, செயல்களில் ஈடுபடவும் அவர்களைத் தூண்டியது. இதனால், ஏதென்ஸ் மக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்களுக்கெல்லாம் சாக்ரடீஸிடம் தெளிவு கிடைக்கும் என்று நம்பினர். அவர்களின் நம்பிக்கையும் வீண் போகவில்லை.

சாக்ரடீஸ் தினம்தோறும் இளைஞர்களிடம் உரையாடியது கிரேக்க ஆட்சியாளர்களை கோபப்படுத்தியது . அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்தன . இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது . அப்போது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும், லைகோன் என்ற மேடைப் பேச்சாளனும் சாக்ரடீஸ் மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்கள். இளைஞர்களைக் கெடுக்கிறார் , கிரேக்கர்கள் தொழுது வரும் கடவுள்களை தூற்றி , ஒரு புதுக்கடவுளைத் தானே உருவாக்குகிறார் , வானத்தைப் பற்றியும் நிலத்தைப் பற்றியும் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் , சந்திரனை மண் என்றும் , சூரியனைக் கல் என்றும் சொல்கிறார் , புதிய மதக் கோட்பாடுகளைப் புகுத்துகிறார் . சாக்ரடீஸ் மிகவும் தீயவர் . இவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று கூறினான் .

இதற்கு பதில் அளித்த சாக்ரடீஸ் , என்னை வழக்கு மன்றத்தில் நிறுத்திய என் எதிரிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி குறுக்குவிசாரணை செய்ய விரும்பவில்லை . என்னுடைய நியாயமான எதிரிகள் அநீதியும் அறிவின்மையும் தான் . நான் கல்லையும் மண்ணையும் ஆண்டவன் என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறேன் . ஆண்டவனைப் பற்றியும் அவனுடைய படைப்ப்பைப் பற்றியும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால் ஆண்டவனை ஒப்புக்கொள்ள எங்கே மறுத்துவிடுவார்களோ என்று பயப்படுவது அதைவிட நாத்திகம் என்றார் .

சாக்ரடீஸ் தமது செயல்களுக்கு மன்னிப்புக் கேட்பார் என்று நீதிபதிகள் எதிர்பார்த்தனர்.. அதற்கு மாறாக அவர் நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைத்தது நீதிபதிகளுக்கு எரிச்சலை ஊட்டியது. அதனால் சாக்ரடீஸை விஷம் கொடுத்துக் கொல்ல வேண்டும் என்று கி.மு. 339 ம் ஆண்டு பிப்ரவரி 15 -ம் தேதி நீதிபதி உத்தரவிட்டார் . அப்போது விழாக்காலம் என்பதால் 30 நாட்கள் கழித்து தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அதுவரை சாக்ரடீஸின் காலை சங்கிலியால் பிணைத்துவைக்கவேண்டும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது . சாக்ரடீஸை தப்ப வைக்க கிரீடோ என்பவர் ரகசியமாக சிறைக்கு சென்று சந்தித்தார் . ஆனால் சாக்ரடீஸ் தப்பிக்க விரும்பவில்லை .

சாக்ரடீஸூக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் நாள் வந்தது…

இறுதியாக சாக்ரடீஸைக் காண்பதற்கு அவருடைய நண்பர்களும், மனைவி தம் குழந்தைகளுடனும் வந்திருந்தனர். சாக்ரடீஸின் இறுதி முடிவைக் காணச் சகிக்காது அவருடைய மனைவி அழுது துடித்தாள்.

மனைவியையும், குழந்தையையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த பின், சாக்ரடீஸின் விலங்குகள் அகற்றப்பட்டன. மெதுவாகத் தம் கால்களை சாகரடீஸ் பிணைந்து கொண்டார்.

அப்போது தாம் நண்பர்களிடம் “உடல்தான் நமக்குக் கிடைத்த மிகப் பெரிய சிறைச்சாலை அந்த உடலிருந்து நமது உயிர் தாமாக தப்பிவிட முடியாது. உடம்பு என்ற சிறையிலிருந்து உயிர் விடுதலையாவது பேரானந்தம்!” என்று தத்துவார்த்தமாக சாக்ரடீஸ் பேசினார்.
“மரணத்திகுப் பின் உங்களை எப்படி சவ அடக்கம் செய்ய வேண்டும்?” என்று நண்பர்கள் சாக்ரடீஸிடம் கேட்டார்கள். அதற்கு, “நீங்கள் எப்படிச் செய்தாலும் எனக்கு மகிழ்ச்சியே!” என்றார் சாக்ரடீஸ்.

சிறை அதிகாரி ஒரு கோப்பை விஷத்தை சாக்ரடீஸீடம் நீட்டினார்.( hemlock poisoning.). நண்பர்கள் எல்லாம் கண்ணீர் சிந்தியபடி சாக்ரடீஸையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

விஷக் கோப்பையை வாங்கிய சாக்ரடீஸ், “இனி நான் செய்ய வேண்டியது என்ன?” என்றார்.

அதற்கு, “கோப்பையில் உள்ள விஷத்தை முழுவதுமாக நீங்கள் குடிக்க வேண்டும்… குடித்து முடித்ததும் சிறைக்குள்ளேயே நீங்கள் நடந்து கொண்டிருக்க வேண்டும்… உங்கள் கால்கள் செயல் இழக்கும்போது படுத்துக்கொள்ள வேண்டும்” என்றான் சிறைப்பணியாளன்

கவலை கொள்ளாது, கண் கலங்காமல், சிரித்த முகத்துடன் ஒரு கோப்பை விஷத்தையும் குடித்து முடித்தார் சாக்ரடீஸ். அதைக் கண்ட நண்பர்கள் அனைவரும் அழுது தீர்த்தனர்.

சிறிது நேரம் நடந்து முடிந்ததும், அவர் மல்லாந்து படுத்துக் கொண்டார்.

விஷம் கொடுத்த பணியாளன், சாக்ரடீஸின் கால்களை அமுக்கியபடி, “நான் உங்களை கால்களை அமுக்குவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்றான்.

“இல்லை” என்றார் சாக்ரடீஸ்.

சிறிது நேரத்தில் அவர் விழிகள் மூடின!  ஏதென்ஸ் நகரமே களையிழந்து போனதாக வரலாற்றின் பக்கங்களில் பதிவு இருககிறது!.
அவருடைய தத்துவங்களையும், போதனைகளையும் அவருடைய சீடரான பிளாட்டோ எழுதி வைத்தார். அதுதான இன்றும் சாகரடீஸை மக்கள் நெஞ்சில் வாழ வைத்துக்கொண்டிருக்கிறது!

பிரதேச சபைத் தேர்தலில் சகோதரர் நாஸர் மீண்டும் போட்டி

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிரதேச சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் நாஸர் மீண்டும் போட்டியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அத்தனகல்ல தொகுதிக்கான காரியாலயத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட கம்பஹ மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சரணகுணவர்தன அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அவர் மீண்டும் தேர்தல் களத்தில் களமிறங்கவுள்ளதாகவும் அறியக் கிடைக்கப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக்க கட்சி சார்பாக ஜனாப் நஜீம் J.P அவர்கள் களமிறங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந் இரு வருடங்களாக வேட்டபாளர்களை நிறுத்தி வெற்றியீட்டிய முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யாரும் களமிறங்கவுள்ளதாக இதுவரை தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. எது எப்படியிருப்பினும் ஊர் மக்கள் தமக்குச் சேவை செய்யக் கூடிய சிறந்த ஒரு உறுப்பினரை வென்றெடுக்க வேண்டும் என்பதே எமது ஆலோசனையாகும்.

எதிர்ப்பிக்கும் ஆதரவக்குமிடையில் தள்ளாடும் கஹடோவிட்டாவின் பிரதான வீதி விஸ்தரிப்பு!

கஹடோவிடாவின் பிரதான பாதையை விரிவுபடுத்துவதற்கான எத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு அது சர்ச்சையாகி பல்வேறுபட்ட வாதப்பிரதிவாதங்களைக் தோற்றுவித்திருக்கும் இவ்வேளையில் அது தொடர்பிலான நமது அவதானங்களையும் அன்பர்களோடு பகிர்ந்து கொள்ள விளைகின்றோம்.

பாதை விஸ்தரிப்பு முயற்சியின் தொடக்கம்.

கடந்த தொன்னூறுகளின் ஆரம்பப் பகுதியில் அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க. ஆட்ச்சிக்காலத்தில் அப்போதைய கஹடோவிட்டா ஐ.தே.க. தொண்டர்களால் ஊரின் பிரதான பாதையை விரிவாக்குவதற்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்படவிருந்த்தாகவும் ஊர்வாசிகளின் பலத்த எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏன் பாதையை விஸ்தரிக்க வேண்டும்?

மாறிவரும் சமூகப் பொருளாதார மாற்றங்களும் நாளுக்கு நாள் பெருகிவரும் சனநெரிசல்களும் பாதையின் விஸ்தரிப்பைக் கட்டியங்கூறுவதாகவுள்ளன. குறிப்பாக தற்போது ஊருக்குள் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளமையால் பெரிய வாகனங்களுக்கு மட்டுமல்லாமல் சிறிய வாகனங்களுக்கு கூட போக்குவரத்துச் செய்வதில் பாரிய இடநெருக்கடியெற்பட்டுள்ளதை அன்றாடம் அவதானிக்க முடிகின்றது. இவை போன்ற நியாயமான சில காரணங்களால் பாதைவிஸ்தரிப்பானது தவிர்க்க முடியாததாகவே தெரிகின்றது. கஹடோவிட்டா ஒரு சிறிய கிராம்மாகவிருந்தாலும் சூழவுள்ள கிராமங்களோடு ஒப்பிடும் போது சிறப்பான சில வர்த்தகப் பண்புகளைக் கொண்டதாக்க் காணப்படுகின்றது. இந்த சிறப்புத் தன்மையில் முன்னேற்றத்தையோ வளர்ச்சியையோ காண வேண்டுமாயின் பிரதான பாதையை விசாலப்படுத்த வேண்டுமென்பது அவசியமாகின்றது.


பாதை விஸ்தரிப்பால் பாதிப்புக்கள் ஏற்படுமா?

இவ்விடயம் இப்பணியின் இயக்கத்தில் முக்கிய புள்ளியெனலாம். என்னதான் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் அதனால் நமது பண்பாடு, கலாச்சாரம் ஆகிய சமூக விழுமியங்கள் சீர்குலைந்து போகுமாயின் அப்படியான ஒரு வளர்ச்சி எமக்குத் தேவையில்லை என்பதில் ஐயமில்லை. பாதையை விரிவாக்கி வாகனப் போக்கு வரத்து அதிகரிக்கும் போது பிற சமூகத்தவர்களின் வருகையும் கனிசமான அளவில் அதிகரிக்கலாம். அதனால் கலப்பற்ற நமது பண்பாட்டுத் தனித்துவத்தில் மாசுகள் ஏற்படலாம். பிற சமூகத்தவர்கள் கூடுதலான அளவில் வந்தாக வேண்டும் என்றளவுக்கு நகர் பானியிலான வர்த்தக மையமாக நமது கிராமம் மாறிடலாம் என்றவாரான முற்போக்குக் கருத்துக்களும் பரவலாக்க் காணப்படுகின்றன. இது ஆற அமர்ந்து ஆராயப்பட வேண்டிய ஒர் அம்சமாகும்.


இப்பணி எதற்காக எதிர்க்கப்படுகின்றது?

ஊரின் நெருக்கமான குடியிருப்புக்களை ஊடறுத்த்தாக பாதை அமைந்துள்ளதால் பாதையை விசாலப்படுத்தும் போது அருகிலுள்ள சிறு காணிகள், வீடுகள், கடைகள் போன்றன குறிப்பிடத்தக்களவில் பாதிப்புள்ளாகின்றன. இதனால் ஏற்படும் கஷ்ட, நஷ்டங்களை குறிப்பிட்ட அக்குடும்பங்களே சுமக்க வேண்டியுள்ளது. அன்றாடம் உழைத்துப் பிழைக்கும் இக்குடும்பங்களுக்கு பாதை விஸ்தரிப்பால் ஏற்படும் இழப்புக்களை தாங்கிக் கொள்ள முடியாது என்பது ஒரு புறமிருக்க சிதைவுக்குள்ளாகும் தமது கட்ட்டங்களை மீள் நிர்மாணிப்பதும் அவர்களால் முடியாத காரியமாகும். மேற்படி திட்டமானது பிரதேச சபையினால் மேற்கொள்ளப்படுவதால் பாதிப்புக்குள்ளானோருக்கு இழப்பீடு வழங்கப்படமாட்டாது என்றும் மாகாண சபையினால் மேற் கொள்ளப்பாடும் இவ்வாறான திட்டங்களால் ஏற்படும் பாதிப்புக்களுக்கே இழப்பீடு வழங்கப்படுமெனவும் அவ்வாறு மாகணசபை இத்திட்டத்தை முன்னெடுக்குமாயின் சாதாரணமாக 40 அடி அளவில் பாதை விரிவுபடுத்தப்படலாமெனவும் அப்போது பாதிப்ப இன்னும் பலமடங்காகலாமென்றும் சில தகவல்கள் கூறுகின்றன. பாதிப்புக்குள்ளாகவிருக்கும் சில நடுத்தரக் குடும்பங்கள் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கியிருக்கும் அதே சமயம் வசதி படைத்த சிலர் இத்திட்டத்தை முழுமையா எதிர்ப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்கிடையில் சில சந்தர்ப்பவாத கூட்டணிகள் இதைக் குழப்புவதற்கு ஆயத்தமாகும் அதேவேலை பாதிப்புக்குள்ளாகும் இன்னுமொறுகூட்டம் இரவு பகலாக்க் கூட்டம் போட்டு அயராது உழைப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

இதற்குத் தீர்வுதான் என்ன?

பாதையோரங்களிலுள்ளவர்களைத் தவிர ஏனையோர் பெரும்பாலும் இதை ஆதரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றன. பிரதேச சபையும், ஊர் பெரும்பான்மையும் ஒன்றினைந்து இத்திட்டத்தை அமுல்படுத்தினால் அதை எதிர்ப்பது அவ்வளவு சுலபமானதன்று. இந்நடவடிக்கையில் இறங்கியுள்ளவர்கள் தம்மால் முடியுமான அளவில் பாதிப்புக்களுக்கான நஷ்டஈடு தொடர்பிலும் கவனமெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எதுவாயினும் சம்பந்தப்பட்ட இரு வகுப்பாரும் விட்டுக்கொடுப்போடும்,கனிவோடும் கலந்தாலோசித்து சுமுகமானதும்,பொதுவானதுமான ஓருடன்பாட்டைக் காண்பதுவே இத்திட்டத்தை வெற்றிகரமாக் கொண்டு செல்லக்கூடியதாகும். அவருக்காய், இவருக்காய் அவரிடமும் ,இவரிடமும் பேசித்திரியாமல் நமக்காய் நாமே நம்முன் பேசித்தீர்த்துக்கொள்வோம்.

உங்களது கருத்துக்களையும் நீங்கள் இங்கே எழுதலாம்.....

நீரின் சுழற்சி

நீரின் சுழற்சி பற்றி நிகழ்கால மனிதன் அறிந்திருக்கும் கோட்பாட்டை Bernard Palissy என்பவர் தான் முதன் முறையாக கி.பி 1580ல் விளக்கிச் சொன்னார். சமுத்திரத்திலுள்ள நீர் எவ்வாறு கரு மேகங்களாக உருவெடுக்கின்றது என்பதை அவரே விளக்கிச் சொன்னார்.


உருண்டு திரண்ட வெண் மேகங்கள் நிலத்தை நோக்கி மெல்ல நகர்கின்றன. கடலிலிருந்து உயர எழுந்து குளிர்ந்து கெட்டியாகி நிலத்தில் மழைத்துளிகளாய் விழுகின்றன. இவ்வாறு விழுந்த மழைத்துளிகள் ஏரிகளாய், நதிகளாய் மாறி மீண்டும் சமுத்திரத்திற்கே திரும்பிச் செல்கின்றன. இவை தொடர் நிகழ்ச்சியாய் நிகழ்கின்றன.

கி.மு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த தேல்ஸ் (Thales of Miletus) என்பார் கடலின் மேற்பரப்பில் உள்ள நீர்த்திவலைகள் காற்றின் வாயிலாக எடுத்துச் செல்லப்பட்டு நிலம் நோக்கி மழைத்துளியாய் விழுகின்றது என நம்பினார். ஆரம்ப காலத்தில் நிலத்தடி நீரின் நிலை பற்றிய அறிவை மக்கள் அறிந்திருக்கவில்லை.

இந்நீரியல் கோட்பாட்டின்படி நீரானது குளிர்ந்த மலைப் பொதும்புகளில் உறைந்து நிலத்தடி நீர் நிறைந்த ஏரிகளாய் உருவாயின. அந்த ஏரிகளோ நீரூற்று பொங்கிப் பாய உதவின என்று கருதப்பட்டது. ஆனால், பூமியின் பிளவுகளில் கசிந்து உட்புகும் மழை நீரே ஏரிகளும், நீரூற்றுகளும் தோன்றக் காரணமாய் உள்ளது என்பதை நாம் இன்று அறிந்துள்ளோம். நீரின் சுழற்சி குறித்து திருக்குர்ஆனில் விளக்கப்பட்டுள்ளது.

أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ أَنزَلَ مِنَ السَّمَاء مَاء فَسَلَكَهُ يَنَابِيعَ فِي الْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِ زَرْعًا مُّخْتَلِفًا أَلْوَانُهُ

நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக்கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது. 39:21 سورة الزمر

وَيُنَزِّلُ مِنَ السَّمَاء مَاء فَيُحْيِي بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

அச்சமும், ஆசையும் ஏற்படும்படி அவன் உங்களுக்கு மின்னலைக் காட்டுவதும்; பிறகு வானத்திலிருந்து மழை பொழியச் செய்து, அதைக் கொண்டு பூமியை அது (வரண்டு) இறந்த பின்னர் உயிர்ப்பிப்பதும் அவன் அத்தாட்சிகளினின்றும் உள்ளன; நிச்சயமாக அதில் சிந்தித்துணரும் சமூகத்திற்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.30:24 سورة الروم

وَأَنزَلْنَا مِنَ السَّمَاء مَاء بِقَدَرٍ فَأَسْكَنَّاهُ فِي الْأَرْضِ وَإِنَّا عَلَى ذَهَابٍ بِهِ لَقَادِرُونَ

மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிடவும் நாம் சக்தியுடையோம். 23:18 سورةالمؤمنون
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் நாமறிந்த வகையில் எந்த ஒரு மூல நூலும் நீரின் சுழற்சி குறித்து இவ்வளவு துல்லியமாக வர்ணித்திடவில்லை.

- Ahamed Ismathullah