கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

தாஹா அப்பா அவர்கள் காலமானார்.

ஓகடபொலயைச்  சேர்ந்த சகோதரா் தாஹா அப்பா அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னார் நயிம், ஹனீபா ஹாஜி,  அயின் மரலியா ஆசிரியை, வைத்தியர் ஹஸன் லரீப்  ஆகியோரின் அன்புத் தந்தையாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை (2016.04.30)  ஓகடபொல ஜும்ஆ மையவாடியில் நடைபெறும்.



   َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار   

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

வெற்றிகரமாக நிறைவுற்ற அல்பத்ரியா கிடுகு விநியோகம்.

எல்லோரும் ஒன்று பட்டு கிடுகு வேலைகளில் ஒத்துழைப்புப்புக்களை முழுமையாக வழங்கி இந்த வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர்.அனைவருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்வதுடன் இம்மையிலும் மறுமையிலும் யா அல்லாஹ் நிறைந்த நட்பாக்கியங்களை வழங்குவாயாக. அனைவருக்கும் பயங்கர நோய் நொடிகள் ,ஆபத்துக்கள் ,கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு இது போன்ற துன்பங்கள் வந்து சேராமல் காப்பாற்றுவாயாக.ஆமீன்
பாடசாலை அதிபர் திரு.காதர் அவர்களும் கிடுகு வேலைகளில் மும்முரமாக பொதுமக்களுடன் இணைந்து சாதாரண நபராக நின்று வேலை செய்தமை அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்ணுதாரணமாக இருக்கிறது பாராட்டுக்குரியது என அங்கிருந்தவர்களில் அநேகர் கருத்து தெரிவித்தனர் .
கிடுகுகள் யாவும் மதியம் 1 மணியளவில் விநியோகம் செய்து முடிக்கப்பட்டது அல் ஹம்துலில்லாஹ் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும் .
750 கிடுகுகளையும் எவ்வித காலதாமதமின்றி விநியோகம் செய்யவும் ,செய்து முடிக்கவும் உடலாள்,பொருளால்,வாகனத்தால்,அறிவுரைகளால்,பணத்தால் உதவி, ஒத்துழைப்புக்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். எதிர்காலத்திலும்இதுபோன்ற வேலைகளுக்கு இதேபோன்ற ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்குமாறு பாடசாலை சமூகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
via - Al Badriya Maha Vidyalaya - Old Boys Association

எமது பாடசாலையின் கல்வி முன்னேற்றத்திற்கான முயற்சிக்கு, ஒரு கிடுகு வாங்குவதன் மூலமாக உங்களது பங்களிப்பை வழங்குங்கள்.

அல்பத்ரியா ம.வி கல்வி மறுமலர்ச்சியை உயிரூட்டுவதற்காக, எமது பாடசாலையின்  SDS , OLD BOYS ,WELFARE அங்கத்தவர்கள் களத்தில்.  நிதி சேகரிக்கும் முகமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கிடுகு விற்பனைக்கு எமது ஊர்மக்கள் அமோக ஆதரவை வழங்கவேண்டும் என்று எமது இணையம் சார்பாக தாழ்மையாக வேண்டிக்கொள்கின்றோம்.

கொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..? (வீடியோ)

 17-04-2016 கொழும்பு மருதானை டெம்பள் ரோட் பள்ளிவாசலுக்கு நிகாஹ் பயான் ஒன்றுக்காக சென்றிருந்தேன்.

 அஸர் தொழுகையின் பின், நமது நிகாஹ் பயான் முடிந்ததும் விவாகப் பதிவாளர் மணமகனிடம் உங்களது மனைவிக்கு மஹராக என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்று கேட்டதும், உடனே மணமகன் எனக்கு மனைவியாக வரப்போகும் அந்த பெண் கேட்ட மஹரையும் மேலதிகமாக குறித்த தொகை பணமும் கொடுக்கிறேன் என்றார்.

 இதனைச் சொன்னதும் சபையிலுள்ளவர்களுக்கு அந்த மணமகள் என்ன கேட்டிருப்பாள் என்ற ஒரு ஏக்கம்

 உடனே மணமகன் அல் குர்ஆனின் சூரா பத்ஹ் 48 வது அத்தியாயத்தை மனப்பாடம் செய்து நீங்கள் தருவதையே எனக்கு நீங்கள் மஹராகத் தந்து என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற மனைவியின் வேண்டுதலை மணமகன் அந்த சபையில் உரைத்தார் அல் ஹம்துலில்லாஹ்.

 இவ்வாறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் நம்மால் அவ்வப்போது ஒரு கதையாகவோ சம்பவமாகவோ வாசிக்கக் கிடைத்தாலும், நான் நேரில் கண்ட முதல் அனுபவம் என்பதனால் இதனை நமது முஹிப்பீன்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

 முஃமின்களின் அன்னைகளான  ஆயிஷா, ஹப்ஸா, ஸைனப்,  (ரழி) உம்மு சுலைம் (ரழி) போன்ற கல்வியறிவுள்ள சிறந்த சாலிஹான ஈமானியப் பெண்களும் நம் சமூகத்தில் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
 மாஷா அல்லாஹ்..!

 அதிலும் ஆச்சரியம் என்னவென்றால் குறித்த அந்த மணப்பெண் பாகிஸ்தானில் கல்விகற்ற ஒரு டாக்டர் பெண் என்பதுவே.

 அல்லாஹ் அவர்களது குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கி வைப்பானாக..!"



Mufaris Rashadi-

திமிங்கிலத்தின் வாந்தியில் அதிசய பொருள் ; கிடைத்தால் நீங்களும் கோடீஸ்வரன்

பிரித்தானியாவில் திமிங்கிலம் வாந்தியில் கண் எடுத்த அதிசய பொருள் ஒன்றை,  கண்டுபிடித்த தம்பதியினர் 1 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய உள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள  லண்காஷிரே (Lancashire)  என்ற நகரை சேர்ந்த கேரி (Gary) மற்றும் அங்கெல வில்லியம்ஸ் ( Angela Williams ) என்ற தம்பதியினர் அடிக்கடி கடற்கரையை பார்க்க செல்வதை வழக்கமாக கொண்டுவர்கள் .இவர்களின் முக்கிய குறிக்கோளாக திமிங்கிலங்கள் வாந்தி எடுத்த பிறகு கடற்கரையில் ஒதுங்கும் அந்த அதிசய பொருளை கண்டுபிடிப்பது தான்.
நடுக்கடலில் வாழும் திமிங்கிலங்கள் மிகவும் அரிதான மீன்களை சாப்பிட்ட பிறகு சில மீன்கள் சரியாக சமிப்பாடு அடையாமல் திமிங்கிலத்தின் குடல் பகுதிலேயே தங்கி ஒரு பெரிய பந்து போல் உருவாகும் இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கிலம் வாந்தியாக வெளியே கக்கும் போது அது மெழுகு பந்துப் போல் இருக்கும் இதுபோன்ற ஒரு பொருளை தான் இந்த பிரித்தானிய தம்பதியினர்  மிட்டலேடன் சான்ட்ஸ் (Middleton Sands) கடற்கரை பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.
இப்பொருளானது அம்பேர்க்ரிஸ்  (Ambergris)  என்று விஞ்ஞானிகள்  அழைக்கின்றனர். இது வாசனை திரவியங்கள் தயாரிக்க மிகவும் முக்கியமானதாக தேவைப்படுவதால், இதன் விலையும் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு உயர்ந்து இருக்கும்.
இதே தம்பதி 3 வருடங்களுக்கு முன்னர் இந்த அதிசய பொருளை கண்டுபிடித்து  1,20,000 பவுண்ட்டுக்கு (2, 46, 60, 169 இலங்கை ரூபாய்) விற்பனை செய்து கோடீஸ்வரராக உயர்ந்துள்ளனர்.
தற்போதும் இதே வகையை சேர்ந்த பொருளை தான் இந்த தம்பதியினரே மீண்டும்  கண்டுபிடித்துள்ளனர். எனினும், முன்னர் கண்டுபிடித்ததை விட இதன் எடை குறைவாகவுள்ளமையால்  இது 50, 000 பவுண்டுக்கு (1 கோடி இலங்கை ரூபாய்) மட்டுமே விலை போகும் எனக் கூறியுள்ளனர்.
தற்போது அப்பொருளை நியூசிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வியாபாரிகளிடம் விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தம்பதியினர் உற்சாகமாக தெரிவித்தனர்.
virakesari

நெஸ்டமோல்ட் அனுசரணையுடன் நடைபெற்ற சைக்கிள் ஓட்டப்போட்டியில் எமது ஊா் மைந்தன் முதலிடம்.

நெஸ்டமோல்ட் அனுசரணையுடன் Kurawalana Young Society இனால் ஏற்பாடு செய்யப்பட்ட சைக்கிள் ஓட்டப்போட்டியில் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த இளம் சைக்கிள் ஓட்ட வீரர் சகோதரர் பஸ்மில் முஸம்மில் அவர்கள் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
இப்போட்டியில் 30 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

எமது இணையம்  சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். கிரிகட், புட்போல், போன்ற விளையாட்டுக்களுடன் ஒன்றியிருக்கும் எமது விளையாட்டு வீரர்களுக்கு, சகோதரர் பஸமில் அவர்களுடைய முன்மாதிறி, இதுபோன்ற இன்னும் பல விளையாட்டுகளோடு எமது விளையாட்டு வீரர்கள் ஈடுபடவேண்டும்,  வெற்றிகளைக் ஈட்டவேண்டும் என ஏக இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம்.


இரண்டு நிமிடம் செலவு செய்து படியுங்கள் பயனுள்ள தகவல்…!!!

நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும்.
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.
இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல.
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது.
கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.

அல்லாஹு அக்பர், இஸ்லாமிய நாடுகளின் அமைப்பின் 13ஆவது தலைவர்கள் மாநாட்டில் துர்க்கி ஜனாதிபதி அவர்கள் ஆற்றிய உரை..

ஆங்கிலம் புரியக்கூடியவர்கள் கண்டிப்பாக இந்த வீடியேவை பார்ப்பதற்கு சற்று நேரம் ஓதிக்கிங்கள். அவருடைய தாய்மொழி புரியாவிட்டாலும் சில இடங்களில் அவருடைய முகபாவனை அவருடைய ஆதங்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜமால்தீன் அவர்களின் இருதய சத்திர சிகிச்சைக்கான உதவி கோரல்

கஹட்டோவிட்ட இலக்கம் 33/B/1 இல் வசிக்கும்
ஓய்வு பெற்ற கணிதப்பாட ஆசிரியர் ஜனாப். ஜமால்தீன் அவர்கள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அண்மையில் தனது கண்பார்வை குறைபாடு காரணமாக ஒரு கண்ணில் சத்திர சிகிச்சை செய்த போது, வைத்தியரின் தவறு காரணமாக அக்கண்ணில் பார்வையை இழக்க வேண்டி ஏற்பட்டது. அதனைச் சரிசெய்வதற்காக கண்டி அரசாங்க பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மயக்கிச் செய்ய வேண்டிய கட்டத்தின் போது, பரிசீலனைகளில் அவருக்கு இதய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
jamaldeen sir
அதனை உறுதி செய்தவற்காக நவலோக்க தனியார் மருத்துவமனையில் டாக்டர்.நரேந்திரன், டாக்டர் வஜிர சேனாரத்ன போன்றோரால் பல பரீட்சைகள் மேற்கொள்ளப்பட்டு, இறுதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்  NGEO Gramme Test மூலம் இதயத்தில் 4 அடைப்புகள் இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டது. உடனடியாக அறுவைச் சிகிச்சை (By Pass) மேற்கொள்ள டாக்டர் மஹேந்திர முனசிங்க அவர்களால் ஆலோசனை வழங்கப்பட்ட நிலையில், தேசிய வைத்திய சாலையில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலையில் இதனை மேற்கொள்வதற்கு சுமார் 08 இலட்சம் ரூ.800,000 இற்கு மேற்பட்ட தொகை தேவைப்படுகின்றது. தனது ஓய்வூதியத்தை மாத்திரமே கொண்டு வாழும் எமது ஆசிரியர் அவர்கள், தனது இந்த இக்கட்டான நிலையில் எமது ஊர் மக்கள், மாணவர் சமூகத்தை அன்போடு வேண்டி நிற்கின்றார்.

1977.05.12 ஆம் திகதி தனது ஆசிரியர் சேவையை ஆரம்பித்த இவர், முதல் நியமனப் பாடசாலையாக மட்/நடுவோடை முஸ்லிம் வித்தியாலயத்திலும், அதனைத் தொடர்ந்து மட்/பெரிய புல்லு மலை றோமன் கத்தோலிக்கப் பாடசாலை, கம்/கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி, களு/முஸ்லிம் வித்தியாலயம், கம்/திஹாரிய அல் அஸ்ஹர் ம.ம.வி, கம்/குமாரிமுல்ல மு.வி, கம்/முஸ்லிம் பாலிகா வித்தியாலயம் ஆகியவற்றில் ஏறக்குறைய 38 ஆண்டுகள் கடமையாற்றிய பின் அண்மையில் தனது சுகயீனம் காரணமாக ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவரது சேவைக்காலத்தில் எமது ஊர்ப்பாடசாலையான கஹட்டோவிட்ட அல் பத்ரியா ம.வி. இல் மாத்திரம் சுமார் 25 வருடங்களும், முஸ்லிம் பாலிகா வித்தியாலயத்தில் சுமார் 3 ஆண்டுகளும் கடமையாற்றி, எமது பிரதேசத்தைச் சேர்ந்த பல கல்விமான்களையும், பல்துறைசார் அரச. தனியார் உத்தியோகத்தர்களையும், நல் ஒழுக்கப்பிரஜைகளையும் உருவாக்கியதில் தனக்கென்றொரு தனியான இடத்தை பலரின் அன்பு உள்ளங்களில் தக்கவைத்துக்கொண்ட ஒரு அருமை ஆசான் இவராவார்.

எமது சமூகத்தின் மேம்பாட்டுக்காக அரும்பாடுபட்ட ஆசிரியருக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்து மேலான ஒரு ‘ஸதகா’வின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்.

உங்களது உதவுதொகைகளை கீழ்வரும் வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்ய முடியும்.

Name: M.Jamaldeen
Acc. No: 8650056814
Commercial Bank – Nittambuwa Branch

Or

Name: M.Jamaldeen
Acc.No: 3157276
Branch: BOC – Nittambuwa

தொடர்புகொள்ளவேண்டி இருப்பின்
0772287377
0777032599

தங்களால் முடிந்த உதவியை கொடுத்து இறை திருப்தியைப் பெற்றுக் கொள்ளுமாறு எமது இணையம் சார்பாக வேண்டுகிறோம்.
கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்:

பேரீச்சப் பழத்தின் சிறு துண்டையேனும் (தர்மம் செய்து) நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

அதீ பின் ஹாத்திம் (ரலியல்லாஹு அன்ஹு) புகாரி 1417

12946954_1081978548515189_980806190_o
12948543_1081978575181853_1049431434_o
12953117_1081978615181849_1342683032_o
12959324_1081978571848520_846135417_o