கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஏ.எச்.எம் நியாஸ் பாதை திறப்பு

1996ஆம் ஆண்டு நடை பெற்ற பிரதேச சபைத் தோ்தலில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு கஹட்டோவிட பிரதேசத்திலிருந்து  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று ஊருக்குப் பல சேவைகள் செய்தவா் தான் மர்ஹு நியாஸ் நானா என்பதை நாம் மறக்க முடியாது. 
தற்போது அவரின் தம்பியான சகோதரா் நஜீம் நாநா அவா்கள் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக அத்தனகல்லைப் பிரதேச சபைக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்று உறுப்பினராக இருந்து கொண்டு பல சேவைகளை எமதூருக்கு ஆறிற வருகின்றார். அவரின் பாதை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் கஹட்டோவிட தாஸீம் மௌலவி அவா்களின் வீட்டக்கு முன்னால் உள்ள பாதைக்கு கொங்றீட் இடப்பட்டு இன்று திறந்து வைக்கப்படவுள்ளதுடன் அப்பாதைக்கு மா்ஹும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நியாஸ் நாநாவின் பெயரும் இடப்படவுள்ளது. இப்பாதைக்கு இப்பெயரை இடுவதற்கான பிரதேச சபையின் அங்கீகாரமும் நஜீம் நாநாவின் முயற்சியால் கிடைக்கப்பெற்றுள்ளது. அத்துடன் எமதூரில் இயங்கிவரும் இரண்டு பாலர் பாடசாலைகளிற்கும் தளபாடங்கள் வழங்கும் நிகழ்வொன்றும் இன்று இடம்பெறவுள்ளதாக அவா் தெரிவித்தார். 

கஹட்டோவிடாவில் கண்டனப் பேரணி



நபிகள் நாயம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவா்களை அவமதிக்கும் விதமாகத் தயாரிக்கப்பட்ட திரைப்படத்திற்கு எதிராண கண்டனப் பேரணி கஹட்டோவிடாவின் அனைத்து ஜும்ஆப் பள்ளிகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று ஜும்ஆத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது. கஹட்டோவிட அல் பத்ரியா ம.வி இருந்து ஆரம்பிக்கப்பட்ட இப்பேரணியில் ஓகொடபொளை மற்றும் உடுகொடையைச் சோ்ந்த சகோதரர்களும் கலந்து ஆதரவினைத் தந்நதமை குறிப்பிடத் தக்கது.

வரப்போகும் மஹ்தி(அலை) நேர்வழியை மனித சமூகத்துக்கு காட்டுவார் ; ஐ நா வில் ஈரான் ஜனாதிபதி


 


ஜீவனுள்ள அரபு வசந்தத்தின் தென்றல் இமாம் மஹ்தி(அலை ) அவர்களின்வருகையுடனும் இஈஸா (நபி ) அவர்களின் வருகையுடனும்தான் பூரணமாகும் என்று ஐ நா வின் பொதுச்சபையில் உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நஜாத் உலகில் புதிய அதிகார அமைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டியது அவசியமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.


ஐ நாவின் 67 ஆவது மாநாடு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில்அஹ்மதி நஜாத்தின் எட்டாவதும் கடைசியுமான ஐ நா சபையின் இந்த உரைஅனைவராலும் ஆவலுடன் எதிர்பாரக்கப்பட்ட நிலையில் அவர் இன்று தனதுபிரத்தியேக பாணியில் உரையாற்றியுள்ளார் .

உலக அரசியல் இரட்டை நிலைப்பாடு கொண்டதாக நியாயம் அற்றதாக பாரபட்சம் வாய்ந்ததாக உள்ளது.இரட்டை நிலைப்பாட்டின் அடிப்படையில்தமது பொருளாதார மற்றும் தமது ஆதிக்கத்தை பரவாலாக்கும் நோக்கிலும்ஆக்கிரமிப்புக்கள் மற்றும் யுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உலகில் புதிய அதிகாரம் மாற்றப்படவேண்டிய அவசியம் எழுந்துள்ளது.ஏனெனில் சிறுபான்மையினரான சில நாடுகள் உலக அரசியலில் ஆதிக்கம்செலுத்தி அழிவுக்கு வழியமைத்து வருகின்றன . இப்போது உள்ள உலககட்டளையானது மனிதத்துக்கு எதிரான அடிமைத்துவத்தையும், ஊழலையும், புறக்கணிப்பையும் இஅடக்குமுறையையும் இபாரபட்சத்தையும் அடிப்படையாககொண்டுள்ளது .

தமது விஞ்ஞான இதொழிநுட்ப அனுகூலங்களுக்காக தற்போதுள்ள உலக கட்டளையின் படி நாடுகளுக்கிடையே மோதல்களை தோற்றுவித்து அவை மூலம் வல்லரசுகள் அனுகூலம் பெற்று வருகின்றன .ஐநா அனைவருக்கும் உரியது .ஆகவே அதில் உள்ள சில நாடுகள் மீது பாரபட்சம் காட்டப்படக்கூடாது .ஐ நாவின் கட்டமைப்பு மாற்றப்பட வேண்டும் . ஐ நாவின் பாதுகாப்பு சபையில் உள்ள ஐந்து நாடுகளுக்கு மட்டும் வீட்டோ அதிகாரம்உள்ளமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது .வல்லரசு நாடுகள் நவீன அழிவுதரும் ஆயுதங்களை பரிசோதிப்பது கண்டிக்கப்பட வேண்டியதொன்று.நாகரிகமற்ற சியோனிசம் இராணுவ நடவடிக்கை மூலம் ஏனைய நாடுகளைஅச்சுறுத்தி வருகின்றது . ஜீவனுள்ள அரபு வசந்தத்தின் தென்றல் இமாம்மஹ்தி(அலை ) அவர்களின் வருகையுடனும் இஈஸா (நபி ) அவர்களின் வருகையுடனும்தான் பூரணமாகும் . அவர் உலகில் அழகான இநேர்வழியைமனித சமூகத்துக்கு காட்டுவார் என்று அவர் உரையாற்றினார்.



அல் பத்ரியாவிற்கு புதிய அதிபராம்.

டாக்டர் ஸாகிர் நாயக் உரைக்கு மல்வானையில் இடையூறு



சர்வதேச இஸ்லாமிய பிரசாரகர் டாக்டர் ஸாகிர் நாயக் இன்று மல்வானையிற்கு விஜயம் செய்திருந்த போது அங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  தற்போது தனிப்பட்ட விஜயமொன்றை இலங்கைக்கு மேற்கொண்டுள்ள ஸாகிர் நாயக் மல்வானை அல்-முபாறக் தேசிய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் அப்பாடசாலையின் லாபிர் மண்டபத்தில் சொற்பொழிவு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

அங்கு ஸாகிர் நாயிக் சுமார் 15 நிமிடங்கள் அளவில் கல்வி சம்பந்தமாக உரையாற்றிக் கொண்டிருந்த போது கூட்டத்திலிருந்த கொழும்பு தெவட கஹ பள்ளியில் கடமையாற்றுகின்ற ஒர (மௌலவி) ஒருவர் அர்த்தமற்ற, குறித்த விடயமற்ற சில கேள்விகளைக் கேட்டதன் விளைவாகவே அங்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
 
அந்த மௌ ....வி ஸாகிர் நாயக் எந்த மதுஹப் என்று வினவியதாகவும், அதற்கான பதிலை அங்கே வருகைதந்திருந்த மக்களாளே (கைகளினால்) கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

தாஸீம் லெப்பை அவர்களுடைய வீட்டுப் பாதை கொன்கிரீட் இடப்படுள்ளது.


மேல்மாகாண சபை உறுப்பினரும் தொம்ப ஐ.தே.கட்சி அமைப்பாளருமான ஹர்ஷன ராஜகருனா அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் எம்.ஏ.எம் எ நஜீப்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க10,00000ரூபா ஒதுக்கப்பட்டு அத்தொகை ஏ ஜே எம் தாஸிம் அவர்களின் வீட்டுப்பாதைக்கு கொங்ரீட் இடுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 2012.09.09 அன்று செப்பனிடப்பட்டபாதை ஹர்ஷன ராஜகருனா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இப்பாதைக்கு இன்னும் ஒரு சில தினங்களில் கஹடோவிட சமுக சேவையாளரும் கம்பஹா மாவட்ட சமாதான நீதவானும் முன்னால் அத்தனகல்ல பிரதேச சபை முஸ்லிம் காங்ரஸ் உறுப்பினருமான காலம்சென்ற நியாஸ் நானா அவர்களின் பெயர் சூட்டப்படவுள்ளதாகவும்,  இப்பாதையின் உத்தியோகபுர்வ திறப்பு விழா இன்ஷாஅல்லாஹ் விரைவில் கோழாகலமாக நடைபெற இறுப்பதாகவும் தகவல்கள் அறியக்கிடைக்கின்றன.

நடிகையின் கோரிக்கையை நிராகரித்த லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிபதி.............!!

 
 
படத்தை நீக்குமாறு Google க்கு உத்தரவிட முடியாது - நடிகையின் கோரிக்கையை நிராகரித்த லாஸ் ஏன்ஜல்ஸ் நீதிபதி.............!!

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில் நடித்த நடிகை ஒருவர் படத்தயாரிப்பாளன் மீதும் Google மீதும் சமீபத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நேற்று வழக்கை விசாரித்த Superior Court நீதிபதி Luis Lavin என்பவர், வழக்கு தொடர்ந்தவரின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும், வீடியோவை நீக்...
குமாறு Google க்கு உத்தரவிடமுடியாது எனவும் கூறியுள்ளார்,
இதற்கு நீதிபதி காரணம் கூறுகையில் ” படத்தயாரிப்பாளருடன் தான் செய்து கொண்ட எந்த ஒப்பந்த நகலையும் அவரால் காட்டமுடியவில்லை, மேலும் இந்த படத்திற்கு பின்னால் உள்ள அந்த நபருக்கு (தயாரிப்பாளருக்கு) நடிகையின் புகார் காபி கொடுக்கப்படவில்லை” எனக் கூறியுள்ளார்.

---------------------

அந்த படத்தில் அவர் நடித்துள்ளார் என்பதற்கு படத்தின் 14 நிமிட வீடியோவே போதுமான ஆதாரம்.

அதில் Lee Garcia நடிகை நடத்துள்ளார் என்பது படத்தை பார்த்த உலகிற்கே தெரியும் ஆனால் இந்த நீதிபதி வேண்டுமென்றே டூபாகூர் காரணத்தை கூறி வழக்கை நிராகரித்துள்ளார்.
 
மேலும் படத்தை தயாரித்த Nakoula Basseley Nakoula குடும்பத்தோடு தலைமறைவாகி விட்டான் பிறகு எப்படி அவன் கிட்ட கொண்டு போய் புகார் நகல கொடுக்க முடியும்?

யார் மீது புகார் கொடுக்கப்படுகின்றதோ அவன் புகாரை பெறாவிட்டால் அந்த வழக்கை நிராகரிப்பது தான் அமெரிக்க சட்டமா ? குற்றவாளிகளுக்கு தகுந்த சட்டம்!

ஏற்க தகாத சாக்கு போக்குகளை சொல்ல தொடரப்பட்ட ஒரு வழக்கையும் அமெரிக்க நீதிமன்றம் நிராகத்துள்ளது முஸ்லிம்களிடையே பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த நடிகை இன்னும் மூன்று வாரத்திற்குள் எல்லாத விதமான ஆதாரங்களுடன் மீண்டும் கோர்ட்டை அனுகப் போவதாக தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது.

திஹாரியில் அமெரிக்க எதிர்ப்பு ஆா்ப்பாட்டம்

நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவா்களைக் கேவலப்படுத்தும் விதமாக வெளிவந்துள்ள படத்திற்கான எதிர்ப்பு ஆா்ப்பாட்டங்கள் உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று ஜும்ஆத் தொழுகையின் பின்னர் திஹாரியில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆா்ப்பாட்டத்தில் கஹட்டோவிட, எல்லலமுல்ல, நாம்புலுவ, கள்எலிய போன்ற பிரதேச மக்களுமக் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கவை.
படங்கள் ,http://www.thihariyanews.com/2012/09/blog-post_3093.html என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

தயாரிப்பாளர் தன்னை மோசடி செய்துவிட்டார் : Innocence of Muslims நடிகை வழக்குத்தாக்கல்

முஸ்லிம் உலகில் பெரும் கண்டன எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ள இஸ்லாமிய-விரோத வீடியோ படத்தில் தோன்றிய நடிகை ஒருவர், அந்தப் படத்தை இயக்கியவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.
 
தன்னை குறித்த படத்தில் நடிக்கச் செய்ததன்மூலம் அவதூறு மற்றும் மோசடியில் ஈடுபட்டதாக சின்டி லீ கார்ஸியா படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
இந்த வீடியோ காட்சி வெளியிடப் பட்டுள்ள யூடியுப் இணையதளத்திலிருந்து அதனை நீக்குமாறு உத்தரவிடவேண்டும் என்றும் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில நீதிபதி ஒருவரிடம் சின்டி மனுச் செய்திருக்கிறார்.
பண்டைக்கால எகிப்தில் நடக்கும் கதையொன்றை சித்தரிக்கும் சாகச திரைப்படமொன்றை படமாக்குவதாகக் கூறியே தானும் சக நடிகர்களும் நடிக்கவைக்கப்பட்டதாக அந்த நடிகை கூறுகிறார்.
 
திரைக்கதையில் முகம்மது நபி பற்றிய எந்தக் குறிப்புகளும் இருக்கவில்லை என்றும் படமாக்கப்பட்ட பின்னரே இஸ்லாமிய-விரோத கருத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
 
இந்தத் திரைப்படத்தின் எகிப்திய தயாரிப்பாளர் என்று நம்பப்படும் நக்கோலா பாஸ்லி நக்கோலா தலைமறைவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்லிம்கள் தயார் (இன்று ஆலோசனை கூட்டம்

INSHA ALLAH A MEETING IN REGARD TO FRIDAY 21ST PROTEST @ KOLLUPITYA JUMMAH MASJID AREA ON  "INNOCENE OF MUSLIMS"  WILL BE HELD ON @ 6.30PM ON 18TH TUESDAY @
# 65 1/2,
SAMPATH BANK BUILDING,
MALIGAWATTA ROAD,

COLOMBO - 10.

PLEASE BE KIND ENOUGH TO PARTICIPATE TIME. FOR FURTHER INFORMATION 0112335613 / 0773312010 (MUJIBUR RAHMAN)

JAZAKALLAHU KHAIRAH !

ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கொழும்பில் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து19.09.2012 புதன் கிழமை SLTJ தலைமையகத்திலிருந்து கோட்டை வரை ஆர்ப்பாட்டம் நடைபெரும். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்வார்கள்.

குழப்பம் தீருமா ஹஜ்ஜுப் பெருநாளில்?

கடந்த நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் பல்வேறு குழறுபடிகளாம் என ஒரு சில ஆலிம்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஜம்இய்யதுல் உலாமாவின் தலைவர் அஷ்ஷைக் ரிஸ்வி முப்தி அவா்கள் தன்னிச்சையாக பெருநாள் தினத்தை அறிவித்ததாக இவ்வாலிம்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பிட்ட அன்றைய தினம் பிறை தென்பட எவ்வித வாய்ப்பும் இல்லையென அறிந்த பின்னரும் அப்பிறையை ஏற்று சவுதி அரேபியாவின் சா்வதேச பிறைக்கு சார்பாக ரிஸ்வி முப்தி நடந்து கொள்கிறார் என்றும் இவ்வாலிம்கள் குற்றம் சுமத்தி ஒரு புத்தகத்தையே வெளியுட்டுள்ளார்களாம். இப்புத்தகத்தில் ஜம்இய்யாவின் தலைவர் ரிஸ்வி முப்தி அவா்களை குறை கூறியுள்ளார்களாம். அன்றைய பிறை மாநாட்டுக்கு தலைமை தாங்கியது மௌலவி றயாழ் என்றும் அவரையும் மீறி தன்னிச்சையாக ரிஸ்வி முப்தி பெருநாள் சம்பந்தமான முடிவெடுத்து வானொளியில் அறிவித்துவிட்டதாகவும் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. எது எப்படி இருப்பினும் உலமாக்கள் இவ்வாறு பிரிந்து செல்வது சமூகத்திற்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு சமூகத்தின் விடிவுக்குப் பாடுபடுவதே சிறந்தது என்பதே பலரினதும் அபிப்பிராயமாகும்.

சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கான உதவிகோரல்

129 , கஹடோவிட என்ற முகவரியில் வசிக்கும் ஜனாப் ஏ.ஆர்.எம் ஜூனைத் அவர்களின் மனைவியும், ஜெஸ்மின் அவர்களின்  தாயாருமாகிய சித்தி மதீனா  அவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக இவரை பரிசோதித்தும் வரும் வைத்தியர் சிறுநீரக மாற்று சிகிச்சை மூலம் இதனை நிவர்த்திக்க முடியும் என பரிந்துரைசெய்துள்ளார்.



இந்த சத்திர சிகிச்சையை செய்வதற்கு சுமார் 11 இலட்சம் ரூபா தேவைப்படுவதாகவும.  உங்களால் முடியுமான உதவிகளை செய்து தருமாறு வேண்டுகொள் விடுக்கப்படுகின்றன.

தகவல் ஈமைல்மூலம் JESMIN jesminlanka@yahoo.com


Contact Details:
Mohamed Junid Jesmin,
129, Kahatowita, Veyangoda.
Mobile: 0094777868411

Account Details:

Mohamed Junid M.J,
Commercial Bank,

Nittambuwa Branch,
SriLanka
A/C No:- 16 500 31000




ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடாவைச் சேர்ந்த எம்மோடு நீண்ட ஆயுளோடு வாழ்ந்துகொண்டிருந்த தாஹிர் அப்பா அவர்கள் காலமானார். அன்னார் நியாஸ், அக்ரம், ஜப்ரி, ரிஸ்மி  ஆகியொரின் தந்தையும், ருமைஸ், நிலூபா அகியோரின் அப்பாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று (13.09.2012) மாலை 5.00 மணியலவில் கஹடோவிட முஹியத்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

இஸ்லாமை விமர்சித்து திரைப்படம்: லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது தாக்குதல்

இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபி (ஸல்) அவர்களையும் மோசமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து லிபியா மற்றும் எகிப்து நாடுகளில் அமெரிக்கத் தூதரங்கள் மீது தாக்குதல்கள் நடந்தன.
இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் இந்த ”Innocence of Muslims” என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.
 
இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், எகிப்திலும் லிபியாவிலும் இந்தத் தாக்குதல் நடந்துள்ளன.
இந்த நாடுகளில் ஆட்சியில் இருந்த ஹோஸ்னி முபாரக், கடாபியை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய சமூக வலைத்தளங்கள் மூலம் தான் புரட்சியை தூண்டிவிட்டது அமெரிக்கா. இந் நிலையில் இந்த வலைத்தளங்களில் இருந்தே அமெரிக்க திரைப்படத்துக்கும், தூதரகங்கள் மீதான தாக்குதலுக்கும் பொறி கிளம்பியுள்ளது.
 
நேற்று காலையில் இருந்தே எகிப்து தலைநகர் கெய்ரோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும், லிபியாவின் பெங்சாய் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். பலர் துப்பாக்கிகளுடன் இருந்தனர்.
தூதரகத்தின் மீது ராக்கெட் குண்டுகளாலும் துப்பாக்கிகளாலும் தாக்குதல் நடத்தியபடி திடீரென உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் ஒரு அமெரிக்க அதிகாரி கொல்லப்பட்டார். மேலும் பலருக்கு கை, கால்கள் உடைந்தன. அமெரிக்கக் கொடியை கிழித்து வீசியதோடு, தூதரகத்தையும் சூறையாடி, தீ வைத்தனர்.
 
இதையடுத்து லிபிய ராணுவம் விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி மற்ற அமெரிக்கர்களை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றது. செப்டம்பர் 11 நியூயார்க் தாக்குதல் நினைவு நாளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
 
எகிப்திலும்…
அதே போல எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் அமெரிக்கத் தூதரகத்துக்குள் நுழைந்து அந் நாட்டின் கொடியை கிழித்து எறிந்து, கருப்புக் கொடியை ஏற்றினர்.
 
உடனடியாக போலீசார் விரைந்து வந்ததால் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது.





மு.கா தலைவர் மேல் வரலாறு பெரும் பாரத்தினை கையளித்துவிட்டுள்ளது!



hakeem







கிழக்கு மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் மக்கள் அபிப்பிராயங்களாக வெளிவந்துள்ளது.

தமிழ்,முஸ்லீம்மக்களிடையேயும், தமிழ், முஸ்லீம்பிரதேசங்களிலும் பெரும்பான்மை ஆதரவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லீம் காங்கிரசும் பெற்றுள்ளது.
அரசாங்கத்திற்கு இத் தேர்தல் பலத்த பின்னடைவையும் தோல்வியையுமே தந்துள்ளது.

ஒரே நாளில் நடைபெற்ற மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் , கிழக்கு மாகாணம் தவிர,ஏனைய இரு மாகாண சபைத் தேர்தல்களிலும் அரசாங்கம் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, கிழக்கில் தோல்வியும் சரிவும் கண்டிருப்பதானது, அரசாங்கத்தின் மீதும், அதன் செயட்பாடுகள் தொடர்பாகவும் தமிழ் முஸ்லீம் மக்களுக்குரிய அதிருப்தியினையும்,அரசியல் எதிர்ப்புணர்வினையும் இத் தேர்தல் முடிவு தெளிவாக காட்டியுள்ளது.

முஸ்லீம் மக்கள் அரசாங்கத்திற்கு எப்போதுமே ஆதாரவானவர்கள் என்கிற குறுந்தமிழ் தேசியவாதத்தின் பரப்புரை மிகத் தவறானது என்பது இத் தேர்தல் ஊடாக நிருபிக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம் மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், தனித்து தேர்தலை எதிர் கொண்ட முஸ்லீம் காங்கிரசுக்கு ஆதரவாககவுமே விழுந்துள்ளது.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலம்பொருந்திய மாவட்டமான திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின், சிங்கள வாக்காளர்கள் பெரும்பான்மையான அம்பாறை தேர்தல் தொகுதி தவிர்ந்த ,கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில் தொகுதிகளில் முஸ்லீம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மட்டக்களப்பு,திருமலை மாவட்டங்களிலும் கணிசமான முஸ்லீம் வாக்குகள் முஸ்லீம் காங்கிரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத் தேர்தலில் சிறுபான்மை இன மக்கள் -தமது அரசியல் ,கலாசார ,பொருளாதார, மற்றும் நிலம்,அதிகாரம், இருப்புத் தொடர்பாகவும் அரசியல் ரீதியான பாதுகாப்பினையும் உத்தரவாதத்தினையும் கோரும் அரசியல் பண்பிற்கு முக்கியத்துவமளித்துள்ளனர் என்பது தெளிவுபட நிருபிக்கப்பட்டுள்ளது.
முஸ்லீம் காங்கிரஸ் இத்தேர்தல் முடிவின் பிரகாரம், மாகாணத்தின் ஆட்சியை தீர்மானிக்கும் தீர்மானகரமான அரசியல் பலமாக நிற்கிறது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு சமமானதும் முக்கியத்துவமானதுமாக அதன் அரசியல் முடியும் அமையப்போகிறது. முஸ்லீம் காங்கிரசுக்கு முன் மூன்று தெரிவுகள் உள்ளன.

1. அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்தல்,இதன் ஊடாக பெயரளவிலான மாகாண அரசை ஸ்தாபித்தல்
2. தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து சிறுபான்மை மக்களின் அடையாள அரசியல் சார்ந்த கூட்டு மாகாண அரசை ஸ்தாபித்தல்

3. மாகாண சபையில் சுயாதீனமாகவும்,தனித்துவமாகவும் செயற்படுதல் முஸ்லீம் முதலமைச்சர் என்கிற ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டு அடிப்படையில் இணக்கம் காணப்பட வேண்டிய முக்கிய அரசியல் விடயங்களில் இணக்கம் காணாது, வெறுமனே முதலமைச்சர் பதவிக்காக ஆதரவு நிலைப்பாடு எடுக்கப்பட முடியாது.
முதலமைச்சர் பதவி என்பதே பெயரளவிலான அதிகாரமற்ற அலங்காரப் பதவிதான். இந்த முதலமைச்சர் என்கிற அரசியல் ஏமாற்று வித்தையைக் கடந்து,அரசானாலும் சரி,தமிழ் தேசியத் கூட்டமைப்பு ஆனாலும் சரி, முஸ்லீம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவு , இன்ன இன்ன நிலைப்பாடுகளின், கோரிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது என பகிரங்கப்படுத்துவது அவசியமானது.
ஏனெனில் முஸ்லீம் காங்கிரசின் அரசியல் முடிவின் முக்கியத்துவம், இதுவரையான அதன் அரசியல் முடிவுகளை விட,முக்கியத்துவமானதாக இருக்கப் போகிறது.
ஏனெனில் இம்முடிவின் ஊடாக முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துடன் மட்டுமன்றி, இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பலம்,இனத்துவ அடையாளம், காலாசார சமூக,பொருளாதார பாதுகாப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது.
* கடந்த தேர்தல் காலங்களில் முஸ்லீம் காங்கிரஸ் தலைமை கடைப்பிடித்து வந்த அரசியல் தரகர்களின் ஊடான இரகசிய பேச்சுவார்த்தை முறை கைவிடப்படல் வேண்டும்.
*பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக நடத்தப்படல் வேண்டும், ௦.இதற்கு முஸ்லீம் காங்கிரஸ் உடனடியாக, தமது கோரிக்கைகள், நிலைப்பாடுகள் தொடர்பாக எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை தயார் படுத்தி பொது தளத்திற்கு முன் வைக்க வேண்டும்.இதனை முஸ்லிம்களின் அரசியல் ஆவணமாக தீர்மானங்களாக முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் மயப் படுத்த வேண்டும்.
* முஸ்லீம் காங்கிரஸ் உடனடியாகவும்,அவசரப்பட்டும் முடிவிற்கு வருவதனை தள்ளிப் போட்டு,ஆறஅமர முடிவிற்கு வருதல் வேண்டும்.
சாதக பாதகங்கள் கட்சிக்குள்ளும் பொதுத்தளத்திலும்,துறைசார் ஆளுமைகளுடனும் விவாதிக்கப்படல் வேண்டும்.
மிக இக்கட்டான நிலைமை இது, மு.கா தலைவர் மேல் வரலாறு பெரும் பாரத்தினை கையளித்துவிட்டுள்ளது. “ஏறச் சொன்ன முடவனுக்கு கோபம்,இறங்க சொன்னா எருதுக்கு கோபம்” என்கிற நிலையில் முஸ்லீம் காங்கிரஸ் தலைமையை இக்கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது இன்றைய அரசியல்.
அரசியல் தெளிவுடனும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் வகையிலும், முஸ்லீம் மக்களின் அபிலாசைகளை பிரதிபலிக்கும் வகையிலும் மு.கா வின் முடிவுகள் அமையட்டும், ஏனெனில் ஒரு போதுமே முஸ்லீம் காங்கிரசின் உருவாக்கம் அமைச்சுப் பதவிகளுக்காக உருவாக்கப்பட்டது அன்று.
அதன் உருவாக்கமும் வளர்ச்சியும் தேவையும் முஸ்லிம்களின் அனைத்து உரிமைகளையும் பேணுகின்ற அரசியல் இயக்கமாக அது இருக்க வேண்டும் என்பதேயாகும்.

  -எம்.பௌசர்-




நன்றி நவில்கிறோம்



மதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

அல்லாஹ்வின் பேரருளால்,  1 வருடம் 11 மாதங்கள் வயதுடைய எனது அன்பு மகள் ரஃபாஹாவின் (COCHLEAR IMPLANTATION) சத்திர சிகிச்சை, கடந்த 04.09.2012 செவ்வாய்க்கிழமை, LADY RIDGEWAY வைத்தியசாலையில் வெற்றிகரமாக நிறைவுற்று, 06.09.2012 வியாழக்கிழமை விடுதலையாகி, தற்போது வீட்டில் எமது கவனிப்பில் உள்ளார்.

இந்த வெற்றியில், உங்களது உள்ளம் கனிந்த பிரார்த்தனைகளும், மனமுவந்து வழங்கிய நன்கொடைகளும் மற்றும் ஏனைய வழிகளில் வழங்கிய ஒத்தாசைகளும் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளன.

ஈடு, இணையற்ற இந்த உதவிகளுக்காக உங்கள் அனைவருக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம். பிரதியுபகாரங்களை வழங்க வல்ல நாயனே போதுமானவன்.

உங்கள் அனைவருக்கும் சிறந்த தேகாரோக்கியமும், செல்வத்தில் அபிவிருத்தியும், மறுமையில் உயர்தரமான சுவர்க்கமும் கிடைக்க மகத்துவம் மிக்க அல்லாஹ் பேரருள் புரிவானாக!

அத்துடன், பிரகாசமான ஒரு எதிகாலத்தையும் மகள் ரஃபாஹாவுக்கு அல்லாஹ் வழங்குவானாக!!

ஆமீன்!

இவ்வண்ணம்
MSM RAJAB
KAHATOWITA

மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பு வீதம்

இடம்பெற்று முடித்துள்ள மூன்று மாகாண சபைகளான கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் மாவட்ட ரீதியாக எல்லா மாவட்டங்களிலும் 50% மேற்பட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம்
அம்பாறை – 55%
திருகோணமலை – 55%-60%
மட்டக்களப்பு – 55%
 
வடமத்தி
அநுராதபுரம் – 53%
பொலன்னறுவை – 50%
 
சப்ரகமுவ
கேகாலை – 56%
 
அதேவேளை கிழக்கு மாகாணத்தில் பிரதேச ரீதியாக அம்பாறை மாவட்டம் கல்முனையில், கல்முனை தமிழ் பிரிவில் 65 வீதமும் , கல்முனை முஸ்லிம் பிரிவில் 63 வீதமும் , சாய்ந்தமருதில் 60 வீதமும் பதிவாகியுள்ளதாக பிரதேசசெயலாளர்கள் தெரிவித்ததாக எமது கல்முனை செய்தியாளர் தெரிவித்தார் .

கடற்படையினரின் அட்டகாசம் முஸ்லிம் தலைவர்கள் மௌனமாகவே உள்ளனர்

முஸ்லிம் இடதுசாரி முன்னணி: மன்னார் முசலிப் பகுதியில் மீள் குடியேறிய முஸ்லீம் மக்கள் கடற்படையினரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். அவர்களுடைய வீடுகள் தீக்கிரையாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அரசாங்கத்தின பாதுகாப்பு பிரிவினரே இதற்கு பொறுப்பாகும். முஸ்லிம்களின் நலன்களில் அக்கறை காட்டுவதுபோல் நடிக்கும் ஆட்சியாளர்களுடன் இருக்கும் முஸ்லிம் தலைவர்கள் மௌனமாகவே உள்ளனர். சாதாரணமாக ஏனைய பிரிவு மக்களுடன் முரண்பாடுகள் ஏற்படுகின்றபோது வீர வசனங்கள் பேசி போர்க்கொடி தூக்கும் ஆட்சியிலுள்ள முஸ்லிம் தலைவர்கள் அரசாங்காத்தரப்பினர் முஸ்லிம்களுக்கு எதிராக அணிதிரளும்போது மௌனத்தை கடைப்பிடிப்பதன் மௌனம் என்ன? இவர்கள் மகக்ளுக்குத் தெரிவு படுத்த வேண்டும்.

நடைபெற இருக்கும் மூன்று மாகாண சபைத்தேர்தலிலும் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக தமது வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும். இந் நாட்டில் வாழுகின்ற முஸ்லிம் தமிழ் மற்றும் சிறுபான்மை சக்திகளுக்கு எதிராக எண்ணற்ற அநியாயம் செய்த இந்த ஆட்சியை முஸ்லிம் மக்கள் ஒருபொழுதும் ஆதரிக்கவே கூடாது.
 
சந்தர்ப்பவாத அரசியல் எதிர்காலத்தில் முஸ்லிம் மக்கள் இடம் பெறமாட்டார்கள் என எண்ணுகிறோம். போலியான வாதங்களையும் சலுகைகளையும் தர முன்வருபவர்களை அடையாளம் காணுங்கள். நேர்மையான அரசியல் சக்திகளை அங்கீகரித்து பண பலம் அரசியல் பலம் என்பவற்றுடன் வருபவர்களை நிராகரியுங்கள் என்று முஸ்லிம் இடதுசாரி முன்னணி ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஜனாஸா அறிவித்தல்

கஹட்டோவிடாவைச் சேர்ந்த சகோதரர் பிஸ்தாமி (ஹாட்வெயர்) அவா்களின் தந்தை ஜனாப் ஹாரிஸ் அவர்கள் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (05.9.2012) இரவு 08.00 மணியளவில் கஹடோவிட நூர்மஸ்ஜித் ஜூம்ஆ பள்ளிவாசல் மையவாடியில் இடம் பெறும்.

அல்லாஹ் இச்சகோதரரின் பாவங்களை மன்னித்து பர்ஸகுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவானாக! மேலும் இவரின் குடும்பத்திற்கு ஆறுதலை வழங்குவானாக!

இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்த ஈரான் வீரர்



லண்டன் பாராலிம்பிக் போட்டியின்போது வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் மெஹராத் கரம் ஜடே, பதக்கத்தைக் கொடுத்த இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்தார். தங்களது நாட்டுக் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத பெண்ணைத் தொடக் கூடாது என்பதால் இவ்வாறு கை குலுக்க மறுத்ததாக பின்னர் ஈரானியர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேசமயம், ஈரானிய வீரர்கள் கை குலுக்க மாட்டார்கள், எனவே அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று முன்கூட்டியே போட்டி அமைப்பாளர்கள் கேட் மிடில்டனுக்கு அறிவுறுத்தியிருந்ததால் அவர் ஏமாற்றமடையவில்லையாம்.
லண்டனில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெட் டேவிஸ் தங்கத்தையும், ஈரான் வீரர் மெஹராத் வெள்ளியையும், சீன வீரர் லெஷாங் வாங் வெண்கலத்தையும் வென்றனர்.
 
பதக்கங்களை இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் வழங்கினார். முதலில் வெண்கலப் பதக்கத்தைக் கொடுத்த அவர் சீன வீரருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அடுத்து ஈரான் வீரரிடம் வந்தார். அப்போது கேட் மிடில்டனுக்கு ஈரான் வீரர் மெஹராத் கை குலுக்கவில்லை. மாறாக கைகளைத் தட்டியபடி நின்றார். மேலும் கைகளை தனது மார்புக்கு அருகே வைத்தபடி, இளவரசிக்கு மரியாதை செலுத்தும் வகையில் லேசாக குணிந்தபடி நின்றார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை சிரித்தபடி அணிவித்தார் கேட்.
 
ஈரான் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக தொட்டுக் கொல்லக் கூடாது என்பதால், கேட் மிடில்டனுக்கு மெஹராத் கை குலுக்கவில்லையாம். மேலும் இந்த பழக்க வழக்கம் குறித்து ஏற்கனவே கேட் மிடில்டனுக்கு கூறப்பட்டிருந்ததால் அவரும் கை கொடுக்கவில்லை.
மெஹராத் மட்டுமல்ல, போட்டிகளில் கலந்து கொண்டுள்ள பிற இஸ்லாமிய வீரர்களும் கூட தங்களுக்குப் பரிசு வழங்குவது பெண்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் கை குலுக்குவதில்லை. அதேபோல வெளியிடங்களிலும் கூட பெண்களிடம் சற்று டிஸ்டன்ஸ் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.