கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹடோவிட பிரதான பாதை புனரமைப்பு


ஜனாதிபதியின் சகோதரரும் கம்பாஹா மாவட்டபாராளுமன்ற முதன்மை வேட்பாளருமான பஸில் ராஜபக்ச அவர்களின் வருகையை முன்னிட்டு கஹடோவிட பிரதான பாதை செப்பனிட்டு புனரமைக்கப்பட்டு வருகிறது. இக்கன்னி முயற்சிக்கு மூலகாரணகர்த்தாவாக எமது ஊரின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கஹடோவிட வடக்கு கிளையின் தலைவரும் கம்பஹா மாவட்ட முஸ்லீம் அமைப்பாளருமான சகோதரர் இக்கிரமுள்ளா அவர்கள் என்பது குறிப்படத்தக்கது.

தகவளுக்கு நன்றி

அறிவுடையோர் மேடைகளில் பேசட்டும்

நேற்று நமது ஊரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஒரு சகோதரர் கோமாளித்தனமாக வாய்க்கு வந்தவாறு பேசியுள்ளார். பூகொடையிலிருந்து கஹட்டோவிடாவினூடாகச் செல்கின்ற குழாய் நீர் வினியோகத்திலிருந்து கஹட்டோவிடாவிற்கு நீர் வழங்க வேண்டும் என்றும் ஊருக்கு நீர் தேவையில்லாவிட்டாலும் சும்மாவேனும் ஓர் நீர் இணைப்பை ஏற்படுத்தி வைக்க வேண்டும் எனவும், ஊரை ஊடறுத்துச் செல்வதால் நமக்கு அதில் உரிமையுண்டு எனவும் அந்த சகோதரர் சற்று காரசாரமாக சத்தமிட்டிருக்கிறார். அவரின் இந்த வித்தியாசமான ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகவே உள்ளது. என்றாலும் இது போன்ற வார்த்தையாடல்கள் இனமுறுகல் போன்ற பேராபத்துக்களை ஏற்படுத்த வல்லது என்பதை அந்த சகோதரர் புரிந்து கொள்ளல் வேண்டும். அறிவு பூர்வமாக சிந்திக்காது உணர்ச்சி வசப்படுவதால் விளைந்த கேடுகள் ஏராளம். இந்தியாவில் தலைவிரித்தாடும் காவேரி நீர்ப்பிரச்சினைக்கு இன்றளவும் தீர்வு காண முடியாமைக்கு இது போன்ற பீரங்கிக் கூச்சல்களும் பெரும் பங்கு வகித்துள்ளது என்பதை அந்த சகோதரர் தெரிந்து கொள்ளல் வேண்டும். கஹட்டோவிடாவில் நீர் இணைப்பை ஏற்படுத்துமளவுக்குப் நீர்ப் பஞ்சமில்லை. ஊரிற்குள்ளும் முடியுமான அளவிற்கு நீர் வினியோகத் திட்டம் செயற்படுத்தப் படுகின்றது. எனவே மேடைகளில் பேசுபவர்கள் சிந்தனைத் தெளிவுடனும், அரசியற் புலமையுடனும், தூரநோக்குடனும் பேசக் கற்றுக் கொள்ளல் வேண்டும். முடியாது போனால் தகுதியானவர்களிற்கு பேச இடமளித்தல் வேண்டும். கஹட்டோவிடாவிற்கு வெளியிலிருந்து நீர் வநியோகம் வழங்கத் தேவையில்லை அல்லது கூடாது என்று நாம் கூறவில்லை. குறிப்பிட்ட சகோதரர் இவ்விவகாரத்தை முன்வைத்த விதம் தவறானது என்பதையே நாம் இத்தால் உணர்த்துகின்றோம்.

ஆமினா அஸ்லிமி , மரணமானார்..........


DEAR MODERATOR,
PLEASE PUBLISH THIS ARTICLE IN YOUR BLOG......

ஆமினா அஸ்லிமி , மரணமானார்..........
...Inna lillahi wa inna ilayhi raji’oon.

International Union of Muslim Women , டைரக்டர்., DAAEE , சகோதரி ஆமினா அஸ்லிமி ,வயது, 65 . கடந்த 05 , மார்ச்அன்று, அதிகாலை, 03 மணியளவில் தன காரில், மகனுடன் நியூயார்க்கில், ஒரு சொற்பொளிவை முடித்து விட்டு, திரும்பிகொண்டிருந்த போது , விபத்தில், சிக்கி, ஸ்தலத்திலேயே, மரணமானார்.... மகன் HOPITALIL அனுமதிக்கப்பட்டுள்ளார்.....
எல்லை இல்லா கருணை கொண்ட , அழளாஹ் , இவரின் அழகிய நற்செயல்களை எல்லாம் ஏற்று, இவரின் பாவங்களை மன்னித்து , சுவர்க்கத்துக்கு உரித்தாக ஆக்குவானாக......... ஆமீன்..........
தகவள்தந்த சகோதரர் Mohamed Hassan Munavvar அவர்களுக்கு நன்றி & Jazakkallah
ஆமினா அஸ்லிமி
http://kahatoweta.blogspot.com/2010/03/aminah-assilmi.html

மத்ரஸா நிதி என்ற பேரில் கப்பம் கோரப்படுகிறதாம்?

வழமையாக கந்தூரிக் காலத்தில் ஓவ்வொரு வருடமும் கந்தூரிப் பெட்டிக்கடைகளிலிருந்து நிதி சேகரிக்கப்படுவது அனைவரும் அறிந்ததே. இம்முறை இவ்வாறு சேகரிக்கப்படும் நிதியை பாதிபிய்யா மத்ரஸாவுக்காக வழங்குவதாகக் கூறி நிதி சேகரிப்பிலீடுபவர்கள் அதிக நிதியைத் திரட்டுவதற்காக பெட்டிக்கடைக்காரர்களுக்கு இடங்களைப் பெற்றுக் கொடுப்பதில் கடுமையாகப்பாடுபடுகின்றார்களாம். இடம் வழங்குவதில் சர்ச்சையை உண்டுபண்ணும் இட உரிமையாளர்களுடன் தகராறிலும் ஈடுபடுகிறார்களாம். இவ்வாறு சேகரிக்கப்படுகின்ற நிதிகளுக்கு இதுவரை ஒழுங்கான கணக்கு, வழக்குகளுமில்லையாம். இதனால் பல கடைக்காரர்கள் நிதிகொடுக்கத் தயங்குவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு நிதி சேகரிப்பை மேற்கொள்வோர் பற்றியும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. எதுவாயினும், நம்பிக்கையானவர்களைத்தான் நிதி சேகரிக்கும் வேளைகளுக்கு அமர்த்த வேண்டும். இல்லாத விடத்து இதை விட மோசமான பின் விளைவுகள் ஏற்பட இடமுண்டு.

இஜ்லான் மௌலவியின் சீற்றம்


நேற்று நடைபெற்ற மனாகிப் வைபவத்தில் உரையாற்றிய இஜ்லான் மௌலவி, பாதிபிய்ய தக்கியாவில் இயங்கி வரும் மத்ரஸாவிற்கு போதுமான உதவிகள் கிடைக்காததால் அது அதள பாதளத்தை நோக்கிச் செல்வதாகவும், இதனால் தரீக்காக்களைக் கட்டிக்காக்கின்ற ஆலிம்சாஹிபுகள் இல்லாமற்போகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாகவும், இந்நிலை தொடருமானால் தரீக்காக்களே அழிந்து போகுமெனவும் ஆவேசமாகப் பேசியுள்ளார். ஏற்கனவே அந்த மத்ரஸாவிலிருந்து பல மாணவர்கள் விலகியிருக்கும் நிலையில் இஜ்லான் மௌலவியின் இந்த உரை பல யதார்த்தங்களைச் சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கின்றது. ஆக ஊர் மக்கள் இது விடயத்தில் பொறுப்புணர்ச்சியோடு செயல்படவேண்டும்.

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள் (Part 02)

விண்ணுயர அவ்லியாவின் கப்ருஸ்தான்!
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் உலகிலேயே ஒரு வித்தியாசமான கப்ருஉள்ளது. அது மேற்கூரையை முட்டும் வண்ணம் மிகஉயரமாகக் கட்டப்பட்டுள்ளது. ஏன் இந்த கப்ருமட்டும் இவ்வளவு உயரமாகக் கட்டப்பட்டுள்ளது என அதன் ஆதீன கர்;த்தாவான மக்காமு இலப்பையிடம் 1958-ம் ஆண்டு நாம் கேட்டபோது ‘இது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். இது வளர்ந்துகொண்டேஇருக்கும்.வளர்ந்து வளர்ந்து விண்ணை முட்டும் போது கியாமத் நாள்-மறுமை நாள்- வந்துவிடும் என்றார்.

அவர் காலமான பிறகு அவரது மகனார் தந்தையின் பதவிக்கு வந்தார். அவரிடம் இது பற்றி விசாரித்தபோது “அப்படி மக்கள் பேசிக் கொள்கிறார்கள். அதுபற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” எனக் கூறிவிட்டார். இப்போது அவரது பேரரைக் கேட்டால் “இதுவெல்லாம் போலியான செய்திகள்” என விளக்கமளித்தார். ஆதீன கர்த்தாக்களான அவரது குடும்பத்தாரே இந்தப் பொய்ச் செய்திகளை நம்பமுடியவில்லை. இருந்தும் பொய்களைப் பரப்பி மக்களை வழி கெடுத்து வருகின்றனர்.

வியாபாரி அவ்லியா
அவரே மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ். இவர் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்? என்பது தெரியவில்லை. வியாபாராத்திற்காக வந்தவர் அந்த ஊரிலே இறந்து விட்டார். நல்ல மனிதராகத் தெரிந்ததால் அவரை அடக்கம் செய்து பெரிதாக கப்ரும் கட்டிவிட்டார்கள். பின்னர் அவரை ஒரு மகானாகச் சித்தரித்து “மெய்நிலை கண்ட ஞானி மஹான் மாலிக் முஹம்மது ஒலியுல்லாஹ்வாக” விளம்பரப்படுத்தி இன்று ஆண்டு தோறும் விமரிசையாக விழா நடத்தி வருகிறார்கள் அந்த ஊர் மக்கள்.

மோதீனார் அவ்லியா
இவர் தான் மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்! திருவிதாங்கோடு அஞ்சு வன்னம் ஜும்மா பள்ளியில் அடக்கமாயிருக்கும் இவர் அந்தப்பள்ளி வாசலில் மோதீனாராக பணியாற்றி வந்தவர். அங்கே அவ்லியா இல்லாத குறையை போக்க வழி தேடிக்கொண்டிருந்த ஊர் மக்களுக்கு,”இது நமக்குக் கிடைத்த மிகப் பெரும் பேறு” எனக் கருதி சாதாரண நூருத்தீன் மோதீனாராக இருந்த இவரை “மஹான் நூருத்தீன் ஒலியுல்லாஹ்” என விளம்பரப்படுத்தி இன்று அவருக்கும் கோலாகலமாக ஆண்டு தோறும் விழா நடைபெற்று வருகிறது.

பாறையை தாங்கி நிற்கும் ராட்சஸ அவ்லியா
சிரியாவிலிருந்து படகேறி வந்த இவரும் இவரது சீடர்களும் திருச்சி வந்து அங்குள்ள மலைமீது தவம் செய்து வந்தனர்.அப்போது சில பூதங்கள் ஒன்று திரண்டு இவர்கள் மீது ஒரு பாறையைத்தள்ள இவர்கள் தம் தவவலிமையால் அது தம்மீது விழாது செய்தனர். அப்பாறை இப்போதும் சாய்ந்த நிலையிலேயே இருக்கிறது. அது தம்மீது விழாது இவர்கள் தம் பாதங்களை ஊன்றி நின்றபோது இவர்களின் பாதங்கள் பதிந்த அடையாளமும், பாறையின் மீது இவர்களின் கை பதிந்த அடையாளமும் இப்பொழுதும் இருக்கின்றன என அவர்களது பக்தர்கள் கூறி வருகின்றனர். திருச்சி நத்ஹர்ஷh வலியைப்பற்றிச் சொல்லப்படும் இந்த கதையை நம்ப முடிகிறதா ? அனுமான் கதை தான் இது!
புலியாக வந்து காப்பாற்றும் நடமாடும் அவ்லியா
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூருக்கு மேற்கே ஏழு கல் தொலைவில் 1800 அடி உயரத்தில் கோதரிசா மலை உள்ளது. இங்கு கோதரிசா என்ற அவ்லியா வாழ்ந்து மறைந்தார். அவரின் நடமாட்டம் இப்பொழுதும் இருக்கிறதென்றும் புலிமீது இவர் இவர்ந்து வருவதைச் சிலர் பார்த்திருப்பதாகவும், சிலர் அவருடன் உரையாடியிருப்பதாகவும், எவருக்கேனும் வன விலங்குகளால் ஆபத்து நேரும்போது இவர் காட்சி அளித்துக் காப்பாற்றுவதாகவும் கூறப்படுகிறது. கிள்று (அலை)மீது கட்டிவிடப்பட்ட கதை தான் இது.

ஐவேளையிலும் ஆடுபோல் கத்தும் அவ்லியா
துருக்கி நாட்டைச் சேர்ந்த கோயுன் பாபா என்ற அவ்லிய வாய்பேசுவது இல்லை. ஐந்து வேளை தொழுகைகளின் போது ஆடு கத்துவது போன்று கத்துவார். இதன் காரணமாக இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது எனக்கூறும் மக்கள், எப்படித்தான் வாய் பேசாமல் ஆட்டைப்போன்று கத்தும் ஊமையரை ஆன்மீக ஞானம் பெற்ற அவ்லியா என ஏற்க மனம் வந்ததோ ?

காடு மலைகளில் தாவி தவமிருந்த அவ்லியா
கருவிலே ஞானியான மோன குரு மஸ்தான் ஏழு வயதிலேயே வாயை மூடியதால்”ஊமைப்பிள்ளை” என்று அழைக்கப்பட்டார்.இளம் வயதிலேயே துறவறத்தை மேற் கொண்ட இவர் நாற்பது நாட்கள் கல்வத்தில் (தனித்திருந்து இறை தியானத்தில)ஈடு பட்டிருந்தனர். பின்னர் சிகக்ந்தர் மலையிலும், பீரான் மலையிலும், மலேயாவிலுள்ள கொடிமலையிலும், இலங்கையிலுள்ள ஆதம் மலையிலும், தஃப்தர் ஜெய்லானியிலும் தவமிருந்தார். பின்னர் சாமி நாதன் செட்டியாரும், சுப்ரமண்யம் செட்டியாரும் இவருக்கு தொண்டியின் கடற்கரை அருகில் கடடிக் கொடுத்த மடத்தில் அமர்ந்து அருளுரை வழங்கினார்.இவர் யாரிடமும் பேசுவதில்லை. எப்போதும் மௌனமாகவே இருப்பார். பின்னர் எப்படித்தான் அருளுரை வழங்கினாரோ? அவரைப்பற்றிய மோனகுரு மஸ்தான் சாகிபு பாடலில் இந்தச்செய்தி இடம் பெற்றிருக்கிறது.

பறக்கும் அவ்லியாக்கள்!
விமானங்களோ விண்கலங்களோ பறக்கும் தட்டுகளோ இல்லாமல் மனிதர்கள் பறக்கும் அதியத்தைப் பார்த்திருக்கிறீர்களா? பல்கு நாடு ஈன்ற மாபெரும் இறை நேசர் எனப்போற்றப்படும் அஹ்மது இப்னு கஸ்ரவிய்யா அவர்களுக்கு 1000 க்கு மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். இவர்களது வரலாறறில் இவர்கள் அத்தனை பேரும் ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குச் செல்லும் போது நடந்து செல்வதில்லையாம். பறந்தே செல்வார்களாம!

இதைப்போன்றே ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் தண்ணீரிலே தொழுகை விரிப்பை (முஸல்லாவை) விரித்து தொழுது கொண்டிருந்தார்களாம். இதைப்பார்த்துக் கொண்டிருந்த இறை நேசச்செல்வி ராபியா பஸரிய்யா அவர்கள், இதற்குப் போட்டியாக” இவ்வளவு தானா உங்களின் வல்லமை!” நான் விண்ணிலே தொழப்போகிறேன்’ என முஸல்லாவை வானத்தை நோக்கி வீசியெறிந்து விட்டு அதில் தாவிச்சென்று தொழுது கொண்டிருந்தார்களாம். இப்படியெல்லாம் சாகஸங்கள் செய்ய இந்த அவ்லியாக்களுக்கு என்ன அவசியம் வந்து விட்டது? விளம்பரமே இல்லாது இலைமறைகாயாக வாழ்ந்த இந்த இறையடியார்களை மார்க்கத்தின் பெயரால் இப்படித்தான் புகழவேண்டுமா? இவ்வாறு தான் பெருமைப் படுத்த வேண்டுமா? கப்ஸாக்களை அள்ளி வீசவேண்டுமா? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

மிதக்கும் மஹான்கள்!!!
மஹான் அஹ்மது கஸ்ரவிய்யாவின் மாணவர்கள் தண்ணீரிலே நடந்து செல்வார்களாம். இவ்வாறு பல அவ்லியாக்கள் தண்ணீரிலே நடந்ததாகவும் மிதந்ததாகவும் பலரைப்பற்றியும் பொய்க் கதைகளை வாய் கூசாமல் அள்ளி வீசுகிறார்கள்.எழுதுகிறார்கள். இதற்கெல்லாம் மறுமையில் விசாரணைகள் இல்லையா?

இலங்கையில ஒளிவீசும் அவ்லியா
இலங்கையில் தஃப்தர் ஜெய்லானி என்றொரு இடம் மலை முகட்டில் உள்ளது. அங்கே உள்ள துவாரத்தில் பார்த்தால் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜெய்லானின் ஒளி வீசிக்கொண்டு இருப்பதாக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்து வருகின்றனர். இந்த அதிசயத்தை 1978ல் நாமும் பார்த்து வர மாணவர் குழுவுடன் சென்றோம்.அந்த இடத்தை பார்வையிட்டபோது துவாரம் செல்லும் அடிவாரத்தில் சூரியனின் ஒளிபட்டு அங்கே வெளிச்சம் தெரிகிறது.இதை வைத்து அவ்லியாவின் ஒளி வீசுகிறது என கதை கட்டிவிட்டார்கள். இந்த ஒளி பகலில் மட்டும் தான் தெரியும். இரவில் தெரிவதில்லை.இதிலிருந்தே அவ்லியாவின் ஒளி இல்லை எனடபதை எந்த பாமரனும் புரிந்து கொள்ளலாம். முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி இலங்கைக்கு வந்ததாக வரலாறே கிடையாது. ஏன் இந்தியாவுக்கக் கூட அவர்கள் வந்ததில்லை.

இந்த கதையைப்பார்க்கும் போது கடலூர் வள்ளலாரின நினைவு தான் வருகிறது. கடலூரில் வள்ளலாரின் ஜோதி அதிகாலை 4.30 மணிக்குத் தெரியும் என்று மக்கள் திரளாகச் சென்று பார்த்துவருவார்கள். இதைப்பற்றி தீர விசாரித்தபோது அங்கே ரயில் நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நமது சகோததரர் சொன்ன செய்தி நம்மை சிரிக்க வைத்தது.

அங்கே ஒவ்வொரு நாளும் சிதம்பரத்திலிருந்து சென்னை நோக்கிப்போகும் இரயில் அதிகாலையில் கடலூர் வழியாகச் செல்லும்.கடலூரை கடந்து செல்லும் ரயில் அங்கே உள்ள வளைவில் திரும்பும்போது அதன் விளக்கொளி சிலநிமிடங்கள் ஊருக்குள் வீசும். அதைப்பார்த்து வள்ளலாரின் ஒளி வீசுவதாக வள்ளலார் பக்தர்கள் கட்டி விட்ட கதை இது என்று அவர் சொன்னபோது வாய்வெடிக்ச் சிரித்தோம்.

காலடியில் கஃபத்துல்லாஹ்!
பல்லாயிரம் மைல்களைத் தாண்டி கண நேரத்தில் மக்கா வந்து தொழும் அவ்லியாக்களைப் பார்த்திருக்கிறீர்களா ? ஒருமுறை ‘பீர் முஹம்மது ஒலியுல்லாஹ் அவர்கள் பள்ளிவாசல் வந்து தொழுவதில்லை’ என மக்கள் ஸதகத்துல்லாஹ் அப்பாவிடம் புகார் கூறினார்கள். அதை நேரிலேயே கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவர்களின் வீட்டைத்தேடி வந்த அப்பா அவர்கள், பீரப்பாவின் நலன் விசாரித்த பிறகு வந்த விசயத்தை கேட்டேவிட்டார்கள். அப்போது பீரப்பா அவர்கள் ‘நான் மக்கள் நடமாடும் பள்ளிவாசல்களில் தொழுவதில்லை.எப்போதும் மக்கா சென்று கஃபத்துல்லாஹ்வில் தொழுவது தான் வழக்கம் என்று கூறியதும், அது எவ்வாறு சாத்தியப்படும்? என்று ஆச்சரியத்தோடு கேட்டார்கள் ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள். அதைக் கேட்ட பீரப்பா அவர்கள் ‘இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? என்று கேட்டுவிட்டு ‘இதோ பாருங்கள்! என்று தாம் நெசவு நெய்துகொண்டிருந்த குழியிலிருந்து தமது காலை அகற்றினார்கள். அங்கே பாதம் இருந்த இடத்தில் கஃபத்துல்லாஹ் தெரிந்ததாம். அதில் பீரப்பா பக்தியோடு தொழுது கொண்டிருந்தார்களாம். இந்தப் பொய்க் கதையை அறிவுலகில் வாழும் உங்களால் நம்ப முடிகிறதா?

கஃபாவுக்குப் பறக்கும் அவ்லியா
காயல்பட்டணம் தைக்கா சாஹிப் வலியுல்லாஹ் ஒவ்வொரு வக்துக்கும் கஃபத்துல்லாஹ்வுக்குச் சென்று தொழுது வருவார்களாம். அதற்காக வைத்திருக்கும் ஒருமரப்பெட்டியில் ஏறி அமர்ந்ததும் அது கஃபாவுக்குப் பறந்து சென்று திரும்பி வந்து விடுமாம். அந்த மரப்பெட்டி இன்றும் அவர்கள் நினைவாக அங்கே தொங்கிக் கொண்டிருக்கும் வேடிக்கையைப் பார்க்கலாம்.

குடலைக்கழுவும் அவ்லியா!
ஒருமுறை ஸதகத்துல்லாஹ் அப்பா அவர்கள் காட்டுபாவா சாஹிப் மலை முகட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தார்களாம். அங்கே ஒரு நீரோடையில் பீரப்பா அவர்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் தமது குடலை காறி உமிழ்ந்து துவைத்துக் கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? எனக்கேட்டார்கள் அப்பா அவர்கள். உடனே பீரப்பா அதை மீண்டும் விழுங்கிவிட்டு ‘ துவைத்து சுத்தம் செய்து கொண்டிருக்கிறேன்’. என பதில் சொன்னார்களாம். இவையெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களா?

கயிறில்தொங்கும் அவ்லியா
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1950களில் மக்கட்டி இலப்பை என்று ஒரு மஹான் இருந்தார்.அவர் பல வேடிக்கைகளை செய்வதுண்டாம். ஒரு நாள் ஒரு கடைக்குச் சென்று வாழைப்பழம் கேட்டிருக்கிறார். கடைக்காரர் இல்லையென்று விரட்டிவிட்டார். மறுநாள் காலையில் கடையைத்திறந்தபோது இந்த அவ்லியா பழக்குலை கட்டியிருந்த கயிற்றில் கழுத்தைக்கட்டி தொங்கிக் கிடந்தாராம். திடுக்கிட்ட கடைக்காரர் உடனே காவல் துறைக்குத் தகவல் கொடுத்ததும் அவர்கள் விரைந்து வந்தனர். பிரேத விசாரணைக்காக உடலை பரிசோதனைக்குக் கொண்டு செல்ல கயிற்றை அறுத்தபோது ‘ இங்கேயும் தூங்க விடமாட்டீர்களா? தொல்லை தருகிறீர்களே! என்று சலித்துக்கொண்டு அங்கிருந்து மாயமாக மறைந்து விட்டாராம்.

புறா,வண்டு,ஈ,ஓலையிடம் பேசும் வித்தக அவ்லியா!
கி.பி 1268 ல் வாழ்ந்த கீழக்கரை பல்லாக்கு வலியுல்லாஹ்வைப்பற்றி ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. இவர் ஒரு மஜ்துர்ப். தன்னிலை மாறும் போது உணர்வற்று வாயில் வந்த படி உளறுவார். அப்போது இவர்களுக்கு தொழுகை கடமையில்லையாம்.

புறா,வண்டு, ஈ, ஓலை ஆகியவை பேசும் பேச்சை அறியும் ஆற்றலை இறைவன் இவர்களுக்கு வழங்கியிருந்தானாம். ஒரு தடவை இவர்கள் ஒரு புறாவைச் சுட்டிக்காட்டி ‘இது என்னை காத்தமுல் வலி (வலிமார்களுக்கெல்லாம் இறுதி வலி) என்று கூறுகின்றது என்றார்;. மற்றொரு தடைவ ஒரு வண்டைச் சுட்டிகாட்டி இது என்னை ‘ ஸையிதுல் ஆலிம்’ ( அறிஞர்களின் தலைவர்’ என்று கூறுகின்றது என்றார்.

வேறொரு தடவை தம் உடல் மீது வீற்றிருந்த இரு ஈக்களை சுட்டிக்காட்டி ‘ இதில் ஒன்று பல்லாக்குத் தம்பி ஒரு முஃமின்’ என்று கூறுகின்றது. முற்றொன்று பல்லாக்குத் தம்பி ஒரு வலியென்று கூறுகின்றது என்றாராம்.

நபி ஸுலைமான் (அலை) அவர்களுக்கு மட்டுமே பறவை இனங்களின் மொழியை அறியும் ஆற்றல் வழங்கப்பட்டிருப்தாக திருக்குர்ஆனின் 27:16 வசனம் கூறுகிறது.ஆனால் இந்த மகானோ தனக்கே எல்லாம் வழங்கப்டிருப்பதாகக் கூறுகிறார்.தன்னிலை மறந்து உளறும் இவரது கூற்றை எப்படி நம்புவது ? அதுவும் தொழுகையே இல்லாத இவர் எப்படி அல்லாஹ்வின் அருளைப்பெற்று பறவை,வண்டு,ஈ போன்றவற்றின் மொழிகளை அறிந்திருக்கும் ஆற்றலைப் பெற்றார். இது சாத்தியம் உண்டுமா என ஆராய்ந்தாலே இவரைப் பற்றிக் கூறப்படும் கதைகள் பொய்யானவை என்பது நமக்குப் புரிய வரும்.

40, 60, 80 அடி நீளத்தில் அவ்லியாக்கள்.
தஞ்சை மாவட்டம் முத்துப்பேட்டையில் அடங்கப்பெற்றிருக்கும் செய்கு தாவூது வலி யார் , எங்கிருந்து எப்பொழுது இங்கு அடக்கமானார் என்று எவருக்கும் தெரியாது.இவரின் அடக்கவிடம் 40 ழுழம் நீளமுள்ளதாக இருக்கிறது. இவர் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்து பல சித்து வேலைகள் செய்து அடங்கப்பெற்றார் என்றும் அது கால வெள்ளத்தால அழிந்து விட்டதென்றும் பின்னர் 200 ஆண்டுகளுக்குப்பின் கருப்பையாக் கோனார் தம் தரிசு நிலத்தை உழவே ஏரின் கொழுமுனை இவரின உடலைத் தாக்கி இரத்தம் பீருட்டு வந்ததென்றும், அவரும் கண்ணொளி இழந்தார் என்றும் அன்றிரவு, அவரின் கனவில் இவர் தோன்றி ‘ தம் பெயர் iஷகு தாவூத் என்பதாகவும் தாம் அங்கே அடங்கப் பெற்றிருப்பதாகவும் அண்மையிலுள்ள நாச்சி குளத்துக்குச் சென்று அங்குள்ள பீர்கான், ஹமீது கான் இருவரையும் அவ்விடம் அழைத்துவரின் அவர் கண்ணொளி மீளப்பெறுவார் என்று கூறியதாகவும் அவ்விரு பெரியார்களின் கனவிலும் இம்மகான் தோன்றி தம்மைப்பற்றியும் கோனார் வருவது பற்றியும் எடுத்துரைத்து மறைந்ததாகவும், அவ்வாறே கோனார் செய்யவே கண்ணொளி மீளப்பெற்றார். அந்த நன்றிகடனாகவே ஐந்தரை வேலி நிலத்தை மானியமாக வழங்கி அதன் மீதே 40 அடி தர்கா எழுப்பியதாகவும் கதை போகிறது.

மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள்,சித்த சுவாதீனமற்றவர்கள்,சூனியம் வைக்கப்பட்டவர்கள், மகப்பேறில்லாதவர்கள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.அவர்களின் கனவில் இம்மகான் தோன்றி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும்,கனவில் நோயாளர்களுக்கு அறுவை சிகிட்சை செய்வதாகவும் , அவர்களுக்குத்துணையாக ஒரு பர்லாங் தொலைவில காஷ்மீரிலிருந்து வந்து அடங்கப் பெற்றுள்ள ‘பாத்திமா நாச்சியார்’ நர்ஸாக நின்று உதவுவதாகவும் கதை கூறப்படுகிறது.

அவ்லியாவின் சித்து வித்தைகளும் அந்நிய மங்கையான ‘காஷ்மீர் கன்னி’ இரவிலே வந்து இவருக்கு உதவும் கற்பனைக் கதைகளையும் இன்னும் நம்பிக் கொண்டு ஈமானை அடகு வைக்கும் மக்களின் அறியாமையை என்னென்பது ?

இவருக்கு போட்டியாக கொடிக்கால் பாளையத்தில் ஜஹான்ஷா அவ்லியாவின் அடக்கவிடம் 60 அடி நீளமுள்ளது என்றும் அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

இன்னும் ஒரு படி மேல் சென்று ஓமான் நாட்டில் ஸலாலாவில் ஸாலிஹ் என்ற பெரியாரின் கப்றை 80 அடி நீளத்தில் கட்டி இவர் 80 அடி உயரமுள்ளவர் எனக்கூறி வருவது இதை விட வேடிக்கையாக இல்லையா ?

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி இப்றாஹீம் (அலை) அவர்களின் பாதம் பதிந்த (மகாமு இப்றாஹீம்) கல்லைப்பற்றி திருமறை திருக்குர்ஆன், ‘அல்லாஹ்வின அத்தாட்சியாக’ வர்ணிக்கும் தடயத்தை புனித ஹஜ்ஜுக்குச் செல்வோர் ஆண்டுதோறும் தம் கண்களாலேயே கண்டு வருகின்றனர். அந்தக் கல் அடையாளத்தைப் பார்க்கும் போது இப்றாஹீம் நபி சுமார் ஏழு அடி உயரமுடையோராகவே இருந்திருப்பார்கள் என நம்மால் கணிக்க முடிகிறது. இவ்வாறிருக்க 700 ஆண்டுகளுக்குள் வாழ்ந்த மனிதர்கள் 40,60,80 அடி உயரமுடையவர்களாக இருந்திருக்க முடியும் என்பதை நம்ப முடிகிறதா? கற்பனை செய்து பார்க்க முடிகிறதா ? இன்றைய அறிவுலகம் இதை ஏற்றுக் கொள்ளுமா ? இவ்வாறு பிதற்றுவோரைப் பைத்தியக்காரர்கள் என உலகம் நகைக்காதா ?

காற்றாடி அவ்லியா
1975 ஆம் ஆண்டுகளில் கன்னியா குமரி மாவட்டம் ஆளுரில் ஒரு அதிசயம் நடைபெற்றது. அங்கிருந்த கப்ரு ஒன்றில் கப்ரைப் போர்த்தியிருக்கும் துணி காற்றில் வேகமாக ஆடிக் கொண்டிருந்தது. இதைக் கண்ட சுற்று வட்டார மக்களும், பள்ளிவாசல் இமாம்களும், ஹஸ்ரத் மார்களும் கப்ரு ஆடிக் கொண்டிருக்கும் அதிசயத்தைக்காண படையெடுத்துச் சென்றனர்.
பின்னர் தான் வேடிக்கை காட்ட அந்த ஊரிலுள்ள விஷமம் நிறைந்த சில இளைஞர்கள் ‘ இதை வியாபாரமாக்க துணிக்குள்ளே சிறிய மின் விசிறி ஒன்றை பொருத்தி மூடிவிட்டனர். சற்றுத் தொலைவில் யாரும் பார்க்காத வண்ணம் மின்விசிறிக்கு மின்சார இணைப்பைக் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது.

மின்விசிறியினால் துணி ஆடிக்கொண்டிருந்ததால் ‘அவ்லியாவே ஆடிக்கொண்டிருப்பதாக’ வதந்திகள் பரவின. காற்றாடி அவ்லியாவைப் பார்க்க பக்தர்களும், பக்தைகளும் திரள ஆரம்பித்தனர். இந்த ஒரு மாத காலத்தில் நேர்ச்சைகளும், உண்டியல் பணங்களும் குவியத்தொடங்கின. திட்டமிட்ட வசூலைப் பெற்றதும் அந்தப் போலிகள் அங்கிருந்து தலை மறைவாகிவிட்டனர். மக்களை ஏமாற்ற எத்தனையோ வழிகள் ! வியாபார வித்தைகள் !! மக்கள் ஏமாற ஏமாற புதுப்புது அவ்லியாக்கள் திடீர் பிள்ளையாரைப் போல் திடீர் திடீரென முளைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஹயாத் அவ்லியாக்கள்
கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார், திட்டுவிளையில் இரு கப்றுகளை ‘ஹயாத் அவ்லியா’ என்று கூறுகின்றனர். இவர்களை மண் தோண்டிப் புதைத்தபிறகு மீண்டும் வேறு வழியாக வெளியேறிவிடுவதால் இவர்கள் ‘ஹயாத் அவ்லியா’ உயிருள்ள அவ்லியா என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டும் உயிரோடிருந்து மற்றவர்களெல்லாம் செத்த அவ்லியாக்கள் என சொல்ல வருகிறார்களா? இவையெல்லாம் சாத்தியப்படுமா? என்பதைக்கூட சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?

படகிலே மையித்தாக மிதந்து வந்த குளச்சல் அவ்லியா
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் முன்பொரு காலம் ஒரு படகு மிதந்து வந்ததாம். அதை கிறித்தவர்கள் பிடிப்பதற்காக சென்றபோது அது ஓடிவிட்டதாம். பின்னர் இந்துக்கள் பிடிப்பதற்காக ஓடினார்களாம். படகு பிடிதரவில்லை. இறுதியாக முஸ்லிம்கள் பிடிப்பதற்குச் சென்ற போது அது அருகே வந்ததாம். பின்னர் அந்த படகைத் திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு கடிதம் இருப்பது தெரியவந்தது. அதை படித்த போது ‘ நான் இன்னார்! என்னை குளச்சலில் இந்த கடற்கரை அருகில் அடக்கம் செய்யவேண்டும்’ என எழுதப்பட்டிருந்தது.

இதை 1974 ல் குளச்சல் வந்த பன்னூலாசிரியர் எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீம் அவர்களிடம் ஊர் தலைவர் சொன்ன தகவலை எழுதிக்கொடுத்தேன். பின்னர் சென்னை வந்தபோது கடற்கரை பகுதிகளான நாகப்பட்டினம்,அதிராம்பட்டணம் போன்ற நான்கு ஊர்களிலிருந்தும் இதைப்போன்ற செய்திகள் வந்திருந்தன. அப்போது தான் புரிந்தது இதில் எந்த உண்மையும் இல்லை.யாரோ கடற்கரை பகுதிகளில் பயானில் கப்ஸா விட்டிருக்கிறார்கள். நம்பவே முடியவில்லை.

‘மையித் படகு’ மக்களைத்தேடி ஓடி வருமா ? அதை நம்பவேண்டுமாம்! அவரது பெயர், முகவரி. எந்த ஊர்? எப்போது பிறந்தார்? எப்போது இறந்தார்? ஊருக்கு என்ன செய்தார்? என்ற எந்த விதமான நம்பகரமான தகவலுமில்லை. ஊர் மக்கள் முதலில் ‘வப்பூசன்’ எனப் பெயர் சொன்னார்கள்.பின்னர் ‘வாப்பு ஹுஸைன்’ என்று சொல்லத்தொடங்கினார்கள். அவ்லியாவுக்கு கூட்டம் சேரச் சேர இப்போது செய்கு பாபுல் ஹுஸைன் அவ்லியா (ரலி)’ என கிரேடு உயர்த்தி பெயர் பலகையும் தொங்க விட்டிருக்கிறார்கள். மக்கள் சாரை சாரையாக இப்போது படையெடுத்து வரத் தொடங்கிவிட்டார்கள்.

இவ்வளவு காலமாக இல்லாதிருந்த இந்த ஊரில் இப்போது மவ்லிது,கந்தூரி, நேர்ச்சை, விழா என திடீரென்று எப்படி முளைத்தது? இப்போது ஆண்டுதோறும் இங்கு பெரிய விழாவே நடத்தப்படுகிறது.மக்கள் மூட்டை மூட்டையாக அரிசி,மசாலா,பழவகைகளைக் கொண்டு கொட்டுகிறார்கள். ஆடு, கோழிகள் என இன்னொரு பக்கம் குவிகிறது. சில்லரையாக சிறிது விளம்பிவிட்டு மொத்தமாக வேறு பக்கம் பதுக்கப்படுகிறது.

இந்தப் போலித்தனங்கள் ஊர் மக்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் தெரிந்தும் அவ்லியாவின் மீது கொண்ட பக்தி இவர்களின் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது. இவர்களெல்லாம் கண்டுகொள்ளாமல் மறைமுகமாக ஆதரித்து வருகிறார்கள்.

சுனாமி வந்தபோது இன்னொரு புரளியையும் கிளப்பிவிட்டார்கள் இந்த கப்ரு ஆராதனைக்காரர்கள். சுனாமி வந்த போது கப்றைச் சுற்றிலும் வெள்ளம் புரண்டு வந்து அனைத்தையும் அழித்துவிட்டதாம். ஆனால் கப்றின் மீது விரிக்கப்பட்டிருந்த பட்டுத்துணி மட்டும் நனையவில்லையாம். எல்லாம் அழிந்த பின்னர் கப்ரின் மீது ஒரு புதிய பட்டுத்துணியை விரித்துவிட்டு அவ்லியாவின் பட்டுத்துணி மட்டும் நனையவில்லை. அது அப்படியே தான் இருந்தது என கிளப்பிவிட்டார்கள் புதிய புரளியை! பாருங்கள் அவ்லியாவின் கராமத்தை!

மறுபிறவி எடுத்த கமுதி அவ்லியா!
இப்போது ஆங்காங்கே சில கம்பங்களைக்கட்டி நாகூர் தர்ஹா கொடி, அஜ்மீர் நாதா கொடி! கவ்துல் அஃலம் கொடி என எழுதி சற்று உயரமான கொடிகளில் கம்பங்களை நாட்டி சென்னை மண்ணடி , புதுப்பேட்டை, அண்ணா சாலை போன்ற பகுதிகளில் காணிக்கை உண்டியல்களைக் காணலாம். அது போல சில ஊர்களில் நாகூர் தர்ஹா போன்ற ஒரு கப்ரைக்கட்டி இங்கும் நாகூர் அவ்லியா அடக்கமாயிருக்கிறார்கள் என்று கூறுவார்கள்.

இவ்வாறு போலியாக எழுப்பப்பட்ட ஒரு கட்டடம் கமுதியில் காணப்படுகிறது. நாகூர் நாயகம் எங்கள் ஊரிலும் வந்து மீண்டும் அடக்கமாகி இருக்கிறார்கள் என்று அந்த ஊர் மக்களே சொல்லும் போது தலையை முட்டிக்கொள்ளலாம் போலிறிருக்கிறது. இது போல் பொட்டல் புதூரிலும் முஹ்த்தீன அப்துல் காதிர் (ரஹ்) பெயரில் ஒரு கப்றை கட்டிவைத்திருக்கிறார்கள்.அவர்கள் இந்தியாவுக்கு வந்ததாகவே எந்த ஆதாரமுமில்லை. போலி சமாதிகள் எப்படி உருவாகிறது? மக்களின் கற்பனை வளத்தைப் பாருங்கள்.

இன்றும் நடமாடும் அவ்லியா
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த காயல் ஜலீல் மைதீன் என்னும் நடமாடும் அவ்லியா தம் சீடப்பெண்ணுக்கு ஆண்மகவு தான் பிறக்கும் என்று தமது ஞானக் கண்களால் அறிந்து ஆரூடம் கூறியிருக்கிறார். அதை நம்பியிருந்த அந்தப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதை ஏமாற்றத்தோடு தொலைபேசி மூலம் தெரிவித்திருக்கிறார். உடனே அந்த அவ்லியா அது பெண் குழந்தை இல்லை.ஆண்குழந்தை தான்! நான் வந்து நிரூபித்துக்காட்டுவதாகக் கூறி அந்த ஊருக்குப் பயணம் போயிருக்கிறார் நடமாடும் அந்த அவ்லியா. அங்கு சென்ற அவ்லியா சில மந்திரங்களை ஓதிவிட்டு ‘இப்போது பாருங்கள்! இது பெண்குழந்தையல்ல. ஆண்குழந்தை தான். உங்கள் கண்களுக்கு பெண் குழந்தையாகத் தெரிந்திருக்கிறது என்று கூறியதும் அந்தக் குடும்பமே வியந்து போனதாம். அவர்களின் கண்களையே நம்ப முடியவில்லையாம்’ என்று அந்த அவ்லியாவே ஒரு மேடையில் பேசியிருக்கிறார். இதை நம்புவதற்கும் ஒரு கூட்டமிருக்கிறது. பாருங்கள் இந்த அறியாமையை.
தொடரும்...

அவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள் (Part 01)

அவ்லியாக்களின் திரை கிழிகிறது. அறிவுலகம் வெட்கித் தலைகுனிகிறது.
அவ்லியாக்கள் பெயரால் அரங்கேறும் அவதாரங்கள் !
அவ்லியாக்களின் பெயரால் மக்கள் கண்மூடித்தனமான அனாச்சாரங்களை ஆங்காங்கே அரங்கேற்றி வரும் அவலங்களை நம்மைச்சுற்றிலும் பார்த்து வருகிறோம். குருட்டுத்தனமான பக்தியால் விவஸ்தையே இல்லாமல் அவ்லியாக்களின் இலக்கணம் தெரியாமல் யார் யாரையெல்லாம் அவ்லியாக்கள் (இறை நேசர்கள்) என கொண்டாடி வருகிறார்கள் தெரியுமா?

1. வாயில் போட்டு மென்ற வெற்றிலையால் பிள்ளை வரம் கொடுப்பவர் அவ்லியா !
2. எச்சிலைத் தண்ணீரில் துப்பி வேண்டியது நடக்க துப்பிக்கொடுப்பவர் அவ்லியா !
3. பச்சைத் தலைப்பாகை, நீண்ட அங்கி, ஜபமாலை சகிதம் உலா வருவோர் அவ்லியா!
4. மாந்திரீகம்,இஸ்மு,தகடு,தாவீஸ்,இலை,பீங்கான் என ஏமாற்றும் தங்ஙள்கள் அவ்லியா!
5. தர்காக்களின் ஆதீன கர்த்தா, அவ்லியாவின் வாரிசு என வசூலுக்கு வருவோர் அவ்லியா!
6. செய்கு முஹ்யித்தீன், நாகூர் நாயகம் பரம்பரை என தம்பட்டம் அடிப்போர் அவ்லியா!
7. குழி தோண்டி (துணி நெய்யும் குழியில்) கஃபாவை காண்பவர் அவ்லியா (பீரப்பா)
8. காமமோகம் கொண்டு பெண்களை தனிஅறையில் சந்தித்து முரீது கொடுப்பவர் அவ்லியா!
9. பெண்களையும் ஆண்களையும் தடவிக்கொடுத்து ஓதி ஊதுபவர் அவ்லியா!
10. நிர்வாண கோலமாக அலையும் சன்னியாச பரதேசிகள் அவ்லியாக்கள் !
11. கஞ்சா அபின் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் அவ்லியாக்கள்!
12. இரவெல்லாம் கேளிக்கைகளிலும், சல்லாபங்களிலும் ஈடுபட்டுப் பகலிலே பத்தினிகளாக நடிப்போர் அவ்லியாக்கள்!

இவர்கள் பெயரை உச்சரித்துக் கொண்டு சில போலிப்பேர்வழிகள் ஆங்காங்கே கடற்கரையில், வாய்க்கால் ஓரங்களில், காடுகளில், மேடுகளில், பாலைப் பெருவெளிகளில் கல்லறைகளைக் கட்டிக் கொண்டு உள்ளே இருப்பவர் ‘அவ்லியா’ எனக் கூறி கட்டுக்கதைகளையும், கனவுக் காட்சிகளையும் அரங்கேற்றி மக்களை நம்ப வைத்து போலிச்சாமியார்; களையும் மிஞ்சுமளவுக்கு போடும் ஆட்டங்கள் அப்பப்பா சொல்லவே வாய் கூசுகிறது.

மனிதப்புனிதர்கள், மகான்கள், மெய் நிலை கண்ட ஞானிகள் எனச் சித்தரிக்கப்படுவோரின் பெயர்களைப் பார்த்தாலே இவர்கள் யார்? இவர்களின் வண்டவாளங்கள் என்ன என்பது தெரிந்து விடும்.

அவ்லியாக்களின் பெயர்களைப் பாரீர்!
1. பீடி மஸ்தான் (பீமா பள்ளி)
2. கட்டி மஸ்தான் (பொறையார் )
3. சட்டி மஸ்தான் (பொதக்குடி)
4. சங்கிலி மஸ்தான் (கோயம்பத்தூர்)
5. மோனகுரு மஸ்தான் (ஊமைப்பிள்ளை அவ்லியா-தொண்டி)
6. குரங்கு மஸ்தான். தஞ்சை
7. அனுமான் அவ்லியா தஞ்சை
8. அணிப்பிள்ளை அவ்லியா தஞ்சை
9. பாஸ்போர்ட் அவ்லியா தஞ்சை
10. கப்ரடி அவ்லியா (திருவிதாங்கோடு)
11. காட்டு பாவா அவ்லியா (தக்கலை அருகில், பேட்டை )
12. வேப்ப மரத்து அவ்லியா (கோட்டார்)
13. மாமரத்து அவ்லியா (நீலவெள்ளி)
14. மரத்தடி அவ்லியா (கோட்டார் )
15. மரக்கட்டை அவ்லியா (சென்னை ராயபுரம்)
16. மோத்தி பாவா (சென்னை,அண்ணா சாலை)
17. மிஸ்கீன் அவ்லியா நெல்லை
18. பச்சை அவ்லியா நெல்லை
19. பக்கீர் மஸ்தான். நெல்லை
20. பிச்சை அவ்லியா (திலி பேட்டை)
21. அப்துர் ரஸ்ஸாக் மஸ்தான். (திருவனந்தபுரம்)
22. மலுக்கர்; மஸ்தான் (மஞ்சேரி, கேரளா)
23. மைதீன் பிச்சை அவ்லியா (பொட்டல் புதூர்)
24. ஆத்தங்கரை அவ்லியா (ஆத்தங்கரை)
25. அக்கரைப்பள்ளி அவ்லியா (குளச்சல்)
26. அம்பலத்து அவ்லியா (திருவிதாங்கோடு)
27. மக்கட்டி லெப்பை அவ்லியா (திருவிதாங்கோடு)
28. காத்தாடி அவ்லியா (ஆளூர்)
29. பல்லாக்கு அவ்லியா (கீழக்கரை)
30. ஸந்தூக் அவ்லியா திருவை)
31. கால்துட்டு அவ்லியா (காயல் பட்டணம்)
32. சாலை சாஹிப் அவ்லியா (புது ஆயங்குடி)
33. நிர்வாண அவ்லியா(மஜ்தூப் வலி)(காயல் பட்டணம்)
34. ஹயாத் அவ்லியா (கோட்டார்)
35. ஹயாத்தே அவலியா (திட்டு விளை,
36. பிரேக் ஷா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
37. ஹாஸ் பாவா அவ்லியா (கொடிக்கால பாளையம்)
38. கேத்தல் பாவா அவ்லியா (புதுப்பட்டினம்)
39. பட்டாணி சாஹிப் அவ்லியா (திலி பேட்டை)
40. கோட்டு மூஸா அவ்லியா (கூத்தா நல்லூர்)
41. மொட்டைப பக்கீர் அவ்லியா (சிவகங்கை)
42. கோதரிசா அவ்லியா (பொட்டல் புதூர் அருNயுள்ள மலை)
43. அப்பா ராவுத்தர் அவ்லியா (கூத்தா நல்லூர்)
44. படேஷா ஹஸ்ரத் அவ்லியா (மஞ்சக்குப்பம்)
45. வண்ணம் தீட்டும் அவ்லியா (நக்ஷபந்த் அவ்லியா)
46. கோயுன் பாபா அவ்லியா (ஆடுகளின் தந்தை, துருக்கி)
47. தக்கடி அப்பா அவ்லியா (பஸீர் வலி மேலப்பாளையம்) புலிகள் பாம்புகளிடையே வந்து காப்பாற்றியவர்)
48. ஜஹான்ஷா அவ்லியா (கொடிக்கால்பாளையம்)
49. ஒட்டகாஸ் அவ்லியா (உடன்குடி)
50. காட்டப்பா அவ்லியா ”
51. புளியடி அவ்லியா ”
52. காட்டானை அவ்லியா (வேதாளை)
53. கப்படா சாஹிப் அவ்லியா (காரைக்கால்)

அப்பப்பா அவ்லியாக்களில் தான் எத்தனை எத்தனை ரகங்கள்! எத்தனை எத்தனை வகைகள்!
இவர்களெல்லாம் எப்படி முளைத்தார்கள்? எங்கிருந்து வந்தார்கள்?
இவர்கள் யார் ? எந்த ஊர் ? எப்போது பிறந்தார்கள் ? எப்போது இறந்தார்கள் ?
இங்கே எதற்கு வந்தார்கள் ? இவர்கள் மக்களுக்காக செய்த சேவைகள் என்னென்ன?

மார்க்கத்திற்காக என்ன தியாகம் செய்தார்கள் ?சமுதாயம் அடைந்த பயன்கள் என்ன ?
இவர்கள் செய்த சாதனைகள் என்ன ?
இவர்கள் குர்ஆன் நபிவழியில் வாழ்ந்தவர்களா?
என மக்களைக் கேட்டால் மக்கள் திருதிரு என்று முழிக்கிறார்கள்.

இவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? இவர்களின் முகவரி என்ன? என்பதையெல்லாம் தெரியாமல் கூடு,கொடி, உரூஸ், சந்தனக்கூடு என கண்மூடித்தனமாக இந்த போலிகள் பெயரால் ஆண்டுதோறும் விழாக்கள் எடுத்து அமர்க்களப்படுத்துகிறார்கள்.

இந்த விஞ்ஞான யுகத்தில் வாழும் அறிவு ஜீவிகளான நாம் இந்தப் போலி மஸ்தான்கள், அவ்லியாக்களை நம்பலாமா? இநதப்போலிகளுக்கு நாம் பலியாகலாமா? நம்பி மோசம் போகலாமா ? உரூஸ்கள், கந்தூரிகள், யானை ஊர்வலங்கள் என நடத்தலாமா? என நாம் சற்று சிந்தித்தாலே இவையெல்லாம் போலியானவை., மார்க்கத்திற்கு எதிரானவை என நாம் உடனே ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

அப்படியானால் மக்களை ஏமாற்றும் சாய்பாபாக்கள், சந்திர பாபாக்கள், பிரேமானாந்தக்கள், ஜான்கள், ஆனந்த ராஜ்கள் பின்னால் செல்லும் மக்களுக்கும் நமக்கும் என்ன தான் வேற்றுமை? திருப்பதிக்கும்,திருச்செந்தூருக்கும், வேளாங் கண்ணிக்கும் செல்லும் பக்தர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்?

இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிம்களே! அறிவுக்கேற்ற மார்க்க்கமாக உலகே ஒப்புக்கொண்டிருக்கும் இஸ்லாத்தில் இப்படிப்பட்ட போலித்தனங்களை, பேதைத்தனங்களை அனுமதிக்கலாமா? பின்பற்றலாமா ? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

மதத்தின் பெயரால் ஏமாற்றும் கபோதிகளின் களியாட்டங்கள் நாளிதழ், வார இதழ், மாத இதழ், தொலைக்காட்சிகள்,இன்டெர்நெட் போன்றவற்றில் அம்பலப்படுத்தும் போலித்தனங்களை நாள் தோறும் கண்டு வருகிறோமே! இன்னுமா இந்த அறியாமை ? இந்த மாயையிலிருந்து விடுபடவேண்டாமா? என உங்கள் மனதைக் கேட்டுப்பாருங்கள்.

இதோ பாருங்கள் !
நம் மக்களின் அறியாமையை !

யானைக்கு ஒரு தர்ஹா!
குதிரைக்கு ஒரு தர்ஹா!!
கழுதைக்கு ஒரு தர்ஹா!!!
கழிப்பறைக்கு ஒரு தர்ஹா!!!!

வியப்பாக இருக்கிறதா ?

ஆம். இவையெல்லாம் உண்மை தான்!
நெல்லை மாவட்டம் பொட்டல் புதூரில் ‘மைதீன் பிச்சை’ யென்ற யானைக்கு தர்ஹாகட்டிவழி படுகிறார்கள். பாக்கியம் பெற்ற யானை!

கன்னியா குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் முஹ்யித்தீன் பள்ளிவாசல் எதிரிலுள்ள கப்ருஸ்தானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கப்ரடி அவ்லியாவின் பக்கத்து கப்ரு, அவர் பயணம் செய்த குதிரையின் சமாதி! இதற்கும் ஆண்டு தோறும் விழாக்கள் எடுக்கின்றனர். கொடுத்து வைத்த குதிரை!

திருநெல்வேலி பேட்டையிலிருந்து சேரன்மாதேவி செல்லும் வழியில் ஓரிடத்தில பெயர் தெரியாத அவ்லியா ஒருவர் கழுதையில் பயணம் செய்து வந்தார். திடீரென்று ஒருநாள் அது இறந்து விடவே அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள். இன்று அதற்கும் வழிபாடு நடக்கிறது. அதிர்ஷ்டக்காரக் கழுதை!

கேரளாவில் கொல்லம் முல்லக்கல் அருகே ஒருகழிப்பிடம் (டாய்லெட் கட்டிடம்) இருக்கிறது. அது இன்று ஒரு தர்ஹாவாக ஆராதனை செய்யப்பட்டுவருகிறது. அங்கே சென்ற கப்ரு பக்தரான ஆலிம் பேராசிரியர் ஒருவர் மக்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்த்து தானும் சென்று தமது பங்காக ஸியாரத்தை மிகவும் பயபக்தியோடு முடித்துக்கொண்டு திரும்பினார். பின்னர் அது பற்றி விசாரித்த போது தான் அது அவ்லியாவின் கப்ரல்ல. அது மக்கள் செல்லும் ஒரு பொதுக் கழிப்பறை எனத் தெரிய வந்தது. தரிசனத்துக்குரிய தர்ஹா!
என்னே மக்களின் மதியீனம்.

இதில் படித்தவர்களும் பலியாகிறார்களே! புரிதாபமாக இருக்கிறது. பக்திப்போதையில் எதையுமே விசாரிக்காமல் கண்மூடித்தனமாக செய்யும் வழிபாடுகளின் இலட்சணத்தைப் பார்த்தீர்களா?

முஸ்லிமாக மாறிய பெண் கைது

புத்த மதத்திலிருந்து விலகி இஸ்லாத்தைத் தழுவியிருந்த இலங்கைப் பெண்ணொருவர் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
வளைகுடா நாடான பஹ்ரெய்னை வதிவிடமாகக் கொண்ட இந்தப் பெண், தனது மத மாற்றம் பற்றி அண்மையில் இரண்டு நூல்களை சிங்களத்தில் எழுதியிருந்தார்.

சாரா மாலினி பெரேரா என்ற இந்தப் பெண், இஸ்லாம் மதத்தை மற்ற மதங்களுடன் ஒப்பிட்டு இரண்டு நூல்களை அண்மையில் வெளியிட்டதாகவும், அவற்றில் ஒன்றான ‘இருளிலிருந்து ஒளியை நோக்கி’ என்ற நூலில், தான் எதற்காக தனது மதநம்பிக்கையை மாற்றிக்கொண்டார் என்று அவர் விபரித்துள்ளதாகவும் அப்பெண்ணின் பஹ்ரெய்னில் உள்ள சகோதரி ஒருவரை மேற்கோள் காட்டி கல்ப் டெய்லி நாளேடு செய்திவெளியிட்டுள்ளது.

மூன்று மாத விடுமுறையில் தனது சொந்த நாடான இலங்கைக்கு சென்றிருந்த சாரா மாலினி அங்கிருந்து இந்த நூல்களில் சிலவற்றை வெளிநாடுகளுக்கு பார்சல் சேவை மூலமாக அனுப்புவதற்கு சென்றிருந்தபோது, அங்கு கடமையிலிருந்த பௌத்த தேசிய வாதக்கட்சியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் அந்நூலைப் பற்றி பொலிசாருக்கு அறிவித்துள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து சாரா மாலினி கைது செய்யப்பட்டதாகவும் அவரது சகோதரி கூறியுள்ளார்.

கொழும்பு புறநகர்ப் பகுதியொன்றின் பொலிஸ் நிலையத்தில் இந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தேசத்துக்கும் அரசாங்கத்துக்கும் எதிரான செயல்களில் இவர் ஈடுபட்டுவந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என பொலிஸ் பேச்சாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

80களின் நடுப்பகுதியிலிருந்து வளைகுடா நாட்டில் சாரா மாலினி பெரேரா வசித்து வருவதாகவும் 1999ம் ஆண்டில் இந்தப் பெண்ணும் அவரது பெற்றோரும் சகோதரிகளும் கூடவே இஸ்லாத்துக்கு மதம் மாறியுள்ளதாகவும் கல்ஃப் டெய்லி செய்தி கூறுகின்றது.

பெளத்த தேசியவாதம் தற்போது மேலோங்கியுள்ள சக்தியாக விளங்கும் இலங்கையில், பெளத்தவாதக்கட்சியொன்று அரசாங்கத்தின் பங்காளியாகவும் உள்ளது.

இலங்கையின் சனத்தொகையில் மூன்றாவது இனக் குழுவாக விளங்கும் முஸ்லிம்கள், அரசியல் பொருளாதார சமூகக் கட்டமைப்பில் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.

ஆனால் அங்கு புத்த மதத்தவர்கள் இஸ்லாத்தை தழுவுகின்ற சந்தர்ப்பங்கள் மிக அரிதாகவே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

உணர்ந்து திருந்திய நான்……?

அறுத்துப் பலியிட வேண்டுமென்று அண்மையில் வஹ்ஹாபிகள் சார்பாக கஹட்டோவிட வஹ்ஹாபிகள் சார்பாக முஜாஹித் மௌலவி பயான் பண்ணினார். தெளிவாகவே அதற்கு அவர் ஆதாரங்களை முன்வைத்தார். எனினும், முன்னோர்கள், மூதாதையர்களின் அரவணைப்பால் வளர்க்கப்பட்ட நான் மௌலவி முஜாஹித் அவர்களை ஒரு மார்க்க விரோதியாகவே பார்த்து வந்தேன். உங்களது இணையத்தளத்தில் நபிகளாரின் பிறந்த தினக் கொண்டாட்டம் பற்றிய நீண்டதொரு கட்டுரையையும் வாசித்தேன். ஆவேசத்துடன் வாசித்து அப்போ ஆத்திரமடைந்த நான் இப்போது பள்ளியில் நடைபெறுகின்ற பாட்டுக்கச்சேரியை நடுநிலையாக நின்று யோசித்தேன். அட……. இந்தப்பாட்டுக் கச்சேரி 12 நாட்கள் நடைபெறனுமா…? என்ன…… இபாதத் என்ற பெயரில் இப்படியொரு அனாச்சாரமா…..? இதன் விளைவு………? மாலை 7 மணியிலிருந்து இரவு 10 மணிவரை இந்தப்பள்ளிவாசலின் பக்கத்திலிருப்போர் நிலையென்ன? வயோதிபர், நோயாளிகள், ஏன் சிறு குழந்தைகள் அது போகடடும் வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் இவர்களுடன் எப்படிக்கதைப்ப …? அழைப்பு மணிக்கு எப்படிப் பதில் கொடுப்பது..? பெண்கள் வீட்டில் இஷாத் தொழுவது கூட சங்கடமான விடயமாகுமே! தனவந்தர்கள் கொடுக்கும் மனாகிப் என்ற வைபவம் அவரவர் தரத்திற்கேற்ப நடாத்தப்படுகிறது. பாட்டுக்களை நீட்டியும் கூட்டியும் பாடி இரவு 11 மணிவரை பாட்டுக் கச்சேரி நடைபெறும் நாட்களும் உள்ளன. பள்ளியிலிருந்து வெளியே வந்த நான் சிந்திக்கிறேன். ரஸ{ல் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் இப்படியொரு அமல் நடந்திருக்குமா? இது இபாதத் ஆகுமா?இதனால் நன்மை கிடைக்குமா? அல்குர்ஆனை ஒதினால் ஒரு எழுத்துக்களுக்கு 10 நன்மைகள் கிடைக்கும். குர்ஆன் ஓதுவதை செவி மடுத்தால் ஓதுபவருக்குக் கிடைக்கும் நன்மை கேட்பவருக்கும் கிடைக்கிறது. குர்ஆன் ஓதுவதைக் கேட்கின்ற பொழுது உள்ளத்திற்கு இதமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. இது நோயாளிகளையோ இன்னுமுள்ளவர்களையோ தொந்தரவும் செய்யாது. குர்ஆனை ஓதுவதால் அது எமக்கு மறுமையில் சிபாரிசும் செய்யும். இவையெல்லாம் விட்டு விட்டு …… என்று பலதையும் சிந்தித்துக் கொண்டு பள்ளியிலிருந்து வீடு வரை வந்தேன். உள்ளே சென்றவுடன் வாப்பா விரட்டினார். போடா தக்கியாவிற்கு. நான் முடியாது என்றேன். இஷாவரைக்கும் குர்ஆன் ஓதப்போகின்றேன். இதனால் நன்மையை சம்பாதிக்கலாம். இனிக் கந்தூரி ஓதப் போகமாட்டேன். பக்கத்திலுள்ளோரைத் தொந்தரவும் செய்ய மாட்டேன். அருள் மறை என் கையில் உள்ளது. அனுதினமும் அதை வாசிக்கப் போகிறேன். முடியுமென்றால் என்னை அடியுங்கள். பதிலுக்கு நான் அடிக்க மாட்டேன். பொருமையாய் இருப்பேன். பெற்றவருக்கு என் துஆ என்ன தெரியுமா..? யாஅல்லாஹ் எனக்குக் கிடைத்த ஹிதாயத்தை என் பெற்றோர்களுக்கும் கிடைக்கச் செய்து நல்லன செய்து நபி வழி நடந்து மறுமையில் வெற்றிபெறனும் என்பது தான்..! உங்களது இணையத் தளத்திற்கு நன்றிகள். அல்லாஹ் உங்களது சேவையை சமூகத்திற்கு பயனுள்ளதாக ஆக்குவானாக…!

இப்படிக்கு,
உண்மையை விளங்கிய ஒரு ஊரான்.
(தகவலுக்கு நன்றி- தங்களது வேண்டுகோளுக்கிணங்க மடலைப் பிரசுரித்துள்ளோம்.)

கஹடோவிட அரசியலில் புதிய திருப்புமுனை.


எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும், ஐக்கிய தேசிய முன்னணிக்கும் இடையே கடும் போட்டியாக மூன்றாவது அணியொன்று உருவாவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக ஏற்கனவே நாம் குறிப்பிட்டிருந்தோம் (இணைப்பு 01).

இதுவரைகாலமும் எமது ஊரின் அரசியல் நிலவரத்தைப் பொருத்தவரையில் முஸ்லிம் காங்கிரஸ_டன் இணைந்த கட்சிக்கே ஆதரவு மிகவும் பெரும்பான்மையாக இருந்தது. ஏற்கனவே நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்கூட ஜெனரல் சரத் பென்சேகா தலைமையிலான கூட்டமைப்பு இதனை நிருபணமாக்கியிருந்தது.

ஆனால் இம்முறை பாரளுமண்ற தேர்தல் களத்தைப் பார்க்கும்போது பொன்சேகா தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்புக்கான ஆதரவு மக்கள் மத்தியல் பெருகிக்கொண்டிருப்பதை அவர்களின் நடவடிக்கைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றன.

இதனை உறுதிப்படுத்துமுகமாக முன்னால் பாரளுமன்ற உருப்பிணர்; விஜித ஹேரத் அவர்களை எமது ஊர்மக்கள் சார்பாக குழு ஒன்று உத்தியோக பூர்வமாக சந்தித்திருப்பதாகவும் அவர்களது தலைமையில் கலமிரங்குகின்ற ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு அதரித்து மாபெறும் பிரச்சாரக் கூட்டமொன்றை ஏப்ரல் மாதம் 2ம் தகதி இரவு 8மணிக்கு கஹடோவிட ஹிசாம் ஹாஜியார் அவர்களின் கடைக்கு அருகாமையில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் உத்தியோகபூர்வமான தகவள்கல் கிடைக்கப்பெற்றுள்ளன.

எதுஎப்படியிருந்தாலும் கங்கிரஸின் கோட்டையாக இருந்த எமத ஊரின் மக்களின் நிலைப்பாடுகளில் திருப்பு முனைகளை எதிர்பார்க்கலாமா………..?

சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மன்: மோடியே பதவி விலகு பெருகும் எதிர்ப்பலை!


2002-ல் குஜராத்தில் நிகழ்ந்த இனப்படுகொலையை உலகம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 3000 முஸ்லிம்கள் துள்ளத்துடிக்க சங்பரிவார பயங்கரவாதிகளால் கண்டந்துண்டமாக வெட்டியும், நெருப்பிலிட்டு கொளுத்தியும் கொல்லப்பட்டனர்.

கோத்ராவில் நிகழ்ந்த ரயில் தீ விபத்தை ஒரு சதியாக மாற்றி முஸ்லிம்களின் மீது பழிபோட்டு சமூக விரோதிகள்¢இந்தக்காரியத்தை செய்து முடித்தனர். கோத்ரா விபத்தை முஸ்லிம்களின் சதி என நிரூபிக்க முடியாமல் கெடுமதி படைத்த சங்பரிவார் “சர்மதி எக்ஸ்பிரசை எரிக்க நான் தான் பெட்ரோல் சப்ளை செய்தேன்” என ஒரு முஸ்லிம் இளைஞரை மிரட்டி வாக்குமூலம் கொடுக்க வைத்தது, உள்ளிட்ட படுபயங்கர சதித்திட்டங்களை இரு ஆண்டுகளுக்கு முன் தெஹல்கா ஏடு அம்பலப்படுத்தியது.

அத்தோடு தீவிர ஹிந்துத்துவாதிகள் போல் வேடமிட்டு சட்டைபட்டன் அளவே உள்ள துல்லிய கேமராவோடு குஜராத் இனப்படுகொலையாளர்களை ரகசியமாக படம்பிடித்த தெஹல்கா செய்தியாளர்கள் வெளியிட்ட செய்திகள் உலகையே உலுக்கியது.

கோத்ரா ரயில் விபத்து, விபத்தாகவே அறியப்பட்ட சில மணி நேரத்தில் மோடி வந்து பார்வையிட்டபின் அது திட்டமிட்ட சதியாக மாற்றப்பட்டதும். உங்களுக்கு மூன்று நாள் மட்டும் தருகிறேன் இதற்குள் நினைத்ததை சாதித்துக் கொள்ளுங்கள் என மோடியே வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவை வழங்கியதும் விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள் அந்த கொடூரச்செயல் குறித்து சிறிதும் மன உறுத்தலின்றி வெறித்தனமாகக் கூறியதையும் இந்த உலகம் மறக்க முடியாதது.

ஏனென்று கேட்பார் யாருமற்ற நிலையில் முஸ்லிம்களின் அவலநிலை நீடித்தது.

முஸ்லிம் பெண்கள் பழங்கள் போல் இருந்தார்கள் அவர்களை நாங்கள் சளைக்காமல் ருசித்துப் பார்த்தோம் என்றான் ஒரு வெறிநாய்.

பள்ளிவாசல்களை பெட்ரோல் டாங்கர்களால் தரை மட்டமாக்கி னோம் என்றான் ஒரு மதவெறி மிருகம்.

நாங்கள் இங்கே ஆயுதத் தொழிற்சாலையே உருவாக்கி வைத்திருக்கிறோம் என்றான் ஒரு மனிதப்பதர்.

குறிப்பிட்ட நாளில் பயன்படுத் துவதற்காக பஞ்சாப்பிலிருந்து இரண்டு லாரிகள் நிறைய வாள்களை வரவழைத்தோம் என்றான் கோழை ரத்தம் ஓடும் ஓர் ஈனநாய்.

கடுமையாக தாக்கி படுகாயமடைந்ததோடு உயிருக்கு போராடிய அப்பாவிகளை உயிரோடு சாக்கடையில் போட்டு மூடிய கொடூரமும்.

கை கூப்பி என்னை கொன்று விடாதீர்கள் என கதறிய இளைஞர் அன்சாரியின் கோலமும் யார்தான் மறக்க முடியும்.

தங்களின் உயிர்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் இஹ்சான் ஜாஃப்ரியின் மாளிகைக்குள் தஞ்சமடைந்த ஏழை மக்கள் உள்ளிட்ட 72 பேரையும் இரக்கமின்றி காவல்துறை உதவியுடன் கொன்று குவித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையிலும் தன் வீட்டில் அடைக்கலம் தேடி வந்த அப்பாவிகளைக் காப்பாற்ற முதியவர் இஹ்சன் ஜாஃப்ரி ஒவ்வொருவரிடம் தொலை பேசியில் கெஞ்சினார். காவல்துறை அதிகாரிகள், நீதிபதிகள், ஏன் அரசியல் தலைவர்களைக் கூட தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உதவி கோரினார், கெஞ்சினார், கதறினார் முதலமைச்சர் மோடியை கூட தொடர்பு கொண்டு ஜாஃப்ரி உயிர்களைக்காப்பாற்றக் கோரி கெஞ்சியதாகவும் தற்போதைய செய்திகள் வெளிவந்துள்ளன.

எத்தனைக்கெஞ்சியும், கதறியும் ஒரு நன்மையும் விளையவில்லை. இஹ்சன் ஜாஃப்ரி உள்பட 72 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்டனர். முதியவர் ஜாஃப்ரி துண்டு துண்டாகக் வெட்டிக்கொல்லப்பட்டார். அவரது ஆணுறுப்பையும் வெட்டிச்சிதைத்து நெருப்பிலிட்டு கொளுத்தினர். இஹ் சான் ஜாஃப்ரி வாழ்ந்த குல்பர்க் சொஸைட்டி பங்களா மயான அமைதி குடிகொண்ட சாம்பல்மேடாக மாறி விட்டது.

குஜராத் இனப்படுகொலைகளில் குறிப்பாக இஹ்சான் ஜாஃப்ரி கொல்லப்பட்ட குல்பர்க் படுகொலை களில் மோடியின் நேரடிசதி இருப்பதாகவும் மோடியின் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் இஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்திய தண்டனைச்சட்டம் 120B 114r/w 302 IPC மற்றும் தவறாக தகவல் களை உருவாக்கி வழங்குதல் (177IPC) தவறான அறிக்கைகள், தவறான ஆதாரங்கள் கொடுத்தல் (199 IPC) குற்றம் இழைத்தவர்கள் குறித்த தவறான தகவல்களை வழங்குதல் (203 IPC), வழிபாட்டுத் தலங்களை சிதைத்தது தொடர்பான குற்றச் செயல் (295 IPC) உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் மோடி உள்ளிட்ட 62 பேர் மீதும் சுமத்தப்பட்டன.

2002 பிப்ரவரி 27 ஆம் தேதி தலைநகரில் மோடி தலைமையில் கூடிய உயர்மட்ட அதிகாரிகள் மட்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் படுகொலைகளுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உத்தரவிடப் பட்டதை முன்னாள் டிஜிபி ஸ்ரீகுமார் 2005&ஆம் ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி தனது பிரமாண வாக்குமூலத்தில் குறிப்பிட்டார். இந்த பிரமாண வாக்குமூலம் உள் ளிட்ட முக்கிய ஆவணங்களின் அடிப்படையில் ஜாகியா ஜாஃப்ரி தனது 100 பக்க குற்றச்சாட்டுக்களை சமர்ப்பித்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுப்பட்டியலில் ஜாகியா ஜாஃப்ரி விடுத்திருக்கும் வினாக்கள் அனைத்தும் எரிமலை ரகத்தைச் சேர்ந்தவை.

கோத்ரா ரெயில் விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலா னர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கள் அல்ல என்பது உண்மை. அது மட்டுமின்றி பலியானவர்களின் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில் இருந்தும் எல்லா பிணங்களையும் வைத்து அகம தாபாத்தில் வெறியூட்டும் ஊர்வலம் நடத்தியது ஏன்? உள்ளிட்ட முக்கிய வினாக்களை ஜாக்கியா ஜாஃப்ரி தனது குற்றச்சாட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் மோடி மீதான குற்றச்சாட்டுக்களை மோடியின் வீட்டுக்கு அருகில் உள்ள காவல்நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஜாகியா ஜாஃப்ரி கோரினார். ஆனால் மோடியின் மீது காவல்துறை முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய மறுத்தது.

மோடி, மீதான காவல்துறையின் புறக்கணிப்பைக் கண்டு சற்றும் அஞ்சாமல் ஜாகியா ஜாஃப்ரி உச்சநீதிமன்றம் சென்றார். தனது குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார்.

உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள், அரிஜித் பசாயத் மற்றும் ஏ.கே.கங்குலி இருவர் கொண்ட பெஞ்ச் ஜாகியாவின் கோரிக்கைகள் குறித்து விசாரணை செய்ய சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்தது. இக்குழு மூன்று மாதத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு (ஷிமிஜி) தனது விசாரணையின் முக்கியப் பகுதியாக குஜராத் முதல்வர் மோடியை விசாரிக்க அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு கொடுத்திருக்கும் அழைப்பாணையை ஏற்று மோடி சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையின் முன்பு நேர் நிற்பாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

குஜராத் இனப்படுகொலையின் சூத்ரதாரியே மோடி தான் என மனித உரிமை ஆர்வலர்கள் பல்வேறு மட்டங்களிலும் போராட்டக்குரல் எழுப்பியபடி இருப்பினும் மோடி நல்லவர்போல் வேடமிட்டு தருக்குடன் நடமாடினார்.

மோடி ரொம்ப நல்லவர் என ஊடகங்கள் பல (தமிழ் நாட்டின் சில பத்திரிக்கைகள் உள்பட) வலிந்து பொய்ப்பிரச்சாரத்தை பரப்பின.

இருப்பினும் மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கையினை ஏற்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் மோடியை தங்கள் நாட்டின் உள்ளே நுழைய அனுமதி மறுத்தன.

இந்நிலையில் உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு மோடியை நேரில் ஆஜராக அழைப்பாணை விடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மோடி சிறப்பு புலனாய்வுக்குழு முன்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அது ஆணையிட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவால் சம்மன் அனுப்பப்பட்ட மோடி உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.

இந்தியா விடுதலைப் பெற்று 62 ஆண்டுகளாகியும் வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு ஒரு முதலமைச்சருக்கு இனப்படுகொலைக் குற்றஞ்சாட்டி சம்மன் அனுப்பப்பட்ட நிகழ்வு இதுவே முதல் முறை. எனவே மோடி உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ்திவாரி தெரிவித்தார்.

மோடிக்கு சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து மோடி பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை நாடெங்கும் வலுத்து வருகிறது.

-அபூஸாலிஹ் TMMK web

அழிந்து போகும் கந்தூரிகளும் உயிர்ப்பிக்கத் துடிக்கும் மௌலவிகளும்

அல்லாஹ்வின் மார்க்கமாகிய புனித இஸ்லாத்தைக் கற்றவர்கள்தாம் ஸஹாபாக்கள், தாபியீன்கள், அவர்களின் வழித்தோன்றலில் வந்த இமாம்கள். இவர்கள் இஸ்லாத்தை சரியான அடிப்படையில் மக்கள் மன்றத்தில் முன்வைத்து அதற்காக பல இன்னல்களையும் அனுபவித்தார்கள். இவர்கள், ‘லாயிலாஹ’ இல்லல்லாஹ்’ என்ற சத்தியக்கலிமாவையும், அது வேண்டி நிற்கும் பொருளையும் சரிக்குச் சரியாக விளங்கி மக்களை அதன் பக்கம் அழைத்தவர்கள். அதற்காகவே தமது உயிர்களையும் நீத்தவர்கள்,
சத்தியத்தை அசத்தியமாக்கி, பித்அத் (மார்க்கத்தில் புதியவை) களை நபிவழியாக்கி, உண்மையை மறைத்து, அபூலஹப் கொள்கையை அஹ்லுஸ்ஸுன்னாவினறது கொள்கை எனப்பிரகடணப்படுத்தி, மண்ணறைகளில் மண்டியிட்டுப் பிரார்த்தித்து, வயிறு வளர்த்தவர்கள் அல்லர் அந்த உத்தமர்கள். இதற்கு அவர்கள் எழுதிய நூல்களும், போதித்த போதனைகளும் காலத்தால் அழியாச் சான்றுகளாகும்.

கந்தூரி என்பது என்ன? மரணித்தவர்களை கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று, பள்ளிவாயில்களை உட்சவம், திருவிழாக்கள் கொண்டாடி, பொதுமக்களை வருடத்தில் ஒரு முறை இஸ்லாத்தின் பெயரால் இவைக்கத் தூண்டும் செயலே கந்தூரி.

இதனை இஸ்லாமிய அறிஞர் பெருமக்கள் என்றும் ஆதரிக்கவில்லை. ஷீஆக்களில் வழித்தோன்றல்களே செத்துப்போகும் இந்த மூடப்பழக்கத்தை உயிர்ப்பிக்க களம் இறங்கி காப்பாற்றத் துடிக்கின்றனர்.

கந்தூரி பலவிதம்
இந்தக் கந்தூரி பலவிதம். புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களை அரபியில் குறிப்பிட்ட மாதங்கள் வாசித்து அதை விளங்காது, மக்களுக்கு விளக்காது தமாம் செய்து ஆடு, மாடுகளை அறுத்து மக்களை அழைத்து கந்தூரி கொடுத்தல், புர்தா, மௌலிது, ராதிபுகள் போன்ற அரபுப் பாடல்கள்பாடி, அதை தமாம் செய்து, அதற்காக கந்தூரி நடத்துதல், அல்லது குறிப்பிட்ட சில மகான்களின் புகழ் மலையைப்பாடி கொடிகள் ஏற்றி, அவர்கள் பேரில் கால்நடைகளை அறுத்துப்பலியிட்டு நார்ஸா விநியோகித்தல்,

இப்படி பல வடிவங்களில் அரங்கேற்றப்படும் இந்தக்கந்தூரிகள் மொத்தத்தில் அவை அனைத்தும் அல்லாஹ் அல்லாதவர்களைப் புகழ்ந்தும், பாடியும், அவனது தன்மைகைளை மரணித்து மண்ணோடு மண்ணாவிட்ட மகான்களுக்கு வழங்கியும்தான் அவை நடத்தேறுகின்றன.

சில வேளை கந்தூரி கொடுப்பவர் யார் பேரில், எதன் பேரில் கொடுக்கின்றாரோ அந்தக் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள நபிமொழிகள் அவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்காது என்பதை இவர்கள் அறியாதவர்களாக இருப்பதுதான் இவர்களின் அறிவின் உச்ச நிலை!

புகாரியையும், முஸ்லிமையும் அரபியில் வாசித்து தமாம் செய்வார்கள், அவற்றை ஓதிமுடித்து, கந்தூரி கொடுப்பவர்களிடம் மரணித்தவர் பெயரில் மண்ணறைகள் கட்டுவதையும், அவற்றில் விழாக்கல் நடாத்துவதையும் எச்சரிக்கின்ற, தடை செய்கின்ற பல நபிமொழிகள் வந்துள்ளனவே என்றால் மேலும், கீழுமாக விழிப்பார்கள்,

இது நமது பரம்பரையான பழக்கம், வழக்கம், இதை நாம் தொன்று தொட்டு செய்து வருகின்றோம், புதிதாக நீங்கள்தான் சொல்கின்றீர்கள் என்று மக்கா காபிர்களின் வழிநின்று உளரும் இந்தக் கூட்டம் 1400 வருடங்களுக்கு முன் நபி (ஸல்) அவர்களால் தடை செய்யப்பட்ட இது போன்ற ஷிர்க்கான காரியங்கைள தவ்ஹீத்வாதிகள்தான் உலகில் முதலாவது தடை செய்வது போல போர்கொடி தொடுப்பார்கள்.

சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் மகான்கள் என்று இவர்களாக எண்ணிக் கொண்டிருக்கும் சில மனிதர்களை அரபியில் புகழ்வதால் மழை வருமாம்! பலாய், முஸீபத்துக்கள்தான் நீங்குமாம் என்றெல்லாம் கதை அளக்கும் இந்தக் கும்பலுக்கும் அறியாமையால் தலதாவில் புத்தரின் பல்லை காட்சிப்படுத்துவதால் மழை பெய்யும், சுபீட்சம் பெறும் என்று நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கும், இடையில் என்ன வித்தியாசம் என்று யோசித்துப் பாருங்கள்.

ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் புத்த பெருமானின் பேரில் நேர்ச்சையை அனுமதிக்காத இந்த புத்தி ஜீவிகள் (?) மரணித்த மகான்கள் பெயரில் இந்த அனாச்சாரங்களை அரங்கேற்றி அதனால் பலாய், முஸீபத்துக்களும் நீங்கும் என மக்களுக்கு தத்துவமும் போதிக்கின்றனர்.

பிரித் ஓதும் மதகுருமார்களா ? அல்லது கூலிப்படைகளா?
இந்த அனாச்சாரங்களை அல்லாஹ்வின் மாளிகைகளில் அரங்கேற்றும் இவர்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை என்ற அமைப்பின் அடையாள அட்டைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளது என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!!!

ஏழு ஆண்டுகள் கம்யூனிஸத்தை அரபி மத்ரஸாவில் படிப்பவனுக்கும் உலமா சபை இனிவரும் காலங்களில் ஆள் அடையாள அட்டை வழங்கும் சிந்தனையை விஸ்தரித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனக் கூறும் அளவு அதன் அண்மைக்கால நடவடிக்கைகள் நமக்கு கட்டியம் கூறுகின்றன.

அவ்வாறான ஒரு நிலையை அ.இ.ஜ.உ. சபை அண்மைக்காலமாக எட்டி விட்டதாகவே அதன் ‘பகிரங்க அறிவித்தல்’ என்ற பழைய தமிழில் எழுதப்பட்டுள்ள அந்த அறிவித்தல் இதற்கு ஒரு சான்றாகும்.

அதில், யாமுஹ்யுத்தீன் எனக் கூறி அழைப்பவனுக்கும், யாஅல்லாஹ் என்று கூறி அழைப்பபவனுக்கும் சமத்துவமான அந்தஸ்தை வழங்கி கௌரவித்திருக்கின்றது. சபாஷ் பாரட்டப்பட வேண்டிய பரஸ்பரமான அணுகுமுறை, நம்மைப் பொறுத்தவரை அவ்வறிவித்தல் ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் பல்லின மக்களின் உரிமைகள் பற்றி விபரிக்கும் உறுப்புரிமை போன்றே தெரிகின்றது.

அல்குர்ஆனில் அல்லாஹ் கல்விமான்கள் பற்றி புகழ்ந்து கூறுகின்றான்.

إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ
அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுபவர்கள் ஆலிம்கள்தாம். (பாதிர்: வச: 28),

கற்றவர்களும், கல்லாதவர்களும் சமமாகுவார்களா ? (ஸுமர்: 09), என மற்றுமோர் இடத்தில் கேள்வி எழுப்புகின்றான். இது வெல்லாம் கற்றவர்கள் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவர்களாக இருப்பார்கள் என்பதற்காகே இவ்வாறு கூறியுள்ளான்.

உண்மையான அறிஞர்களின் தகைமை பற்றிக் குறிப்பிடுகின்ற போது ஒரு சட்டத்தை அகழ்ந்தெடுக்கும் திறைமை உடையவர்கள் என்று (பார்க்க: அந்நிஸா. வச: 82 ல் ) பிரஸ்தாபித்துள்ளான்.

உங்களுக்கு முன்சென்ற சமூகத்தவரில் அறிஞர்கள் இருந்து அவர்கள் (மக்களை) தீமையில் இருந்தும் தடுத்திருக்க வேண்டாமா? அவர்களில் நாம் காப்பாற்றிய ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் (அவ்வாறு செய்யவில்லை). (ஹுத்:116) என்று குறப்பிட்டு தீமைகளைத் தடுக்கின்றவர்களாக அறிஞர்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றான்.

இது போன்ற இன்னும் பல வசனங்கள் உண்மையான அறிஞர்களின் பண்புகள் பற்றிக் குறிப்பிடும் எதனையும் நமது நாட்டில் வாழும் மௌலவிகளில் (விதிவிலக்காக உள்ளவர்களைத் தவிர) ஏனெய ஒருவருக்குக் கூட எந்தக் காலத்திலும் பொருந்தும் எனக் கூற முடியாத அளவு இவர்களின் செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன.

இதனால் ஆலிம் என்ற வார்த்தைப் பிரயோகத்தை விட இவர்களுக்கு மௌலவி என்ற சொற்பிரயோகம் பொருத்தமின்றிப் பொருத்தமாகத் தெரிகின்றது.

இவர்கள் பலரின் நிலை யூத, கிரிஸ்தவ மதத்தில் உள்ள பாதிரிகளின் நிலையை ஒத்தே இருக்கின்றது. அவர்கள் என்ன அடிப்படையைக் கொண்டு மக்களை வழி கெடுத்தார்களோ அதே நிலைதான் நம்மைப் பொறுத்தவரை இவர்களிடமும் தெரிகின்றது.

சத்தியத்தைச் சொல்லாது மறைப்பது, மக்களின் சொத்துக்களை தவறான வழியில் உண்பது, மார்க்கத்தைத் திரித்துக் கூறுவது, பெரியார்கள் பெயரில் அளவு கடந்த பாசம் போன்ற இன்னோரென் பண்புகள்தான் யூத, கிரிஸ்தவர்களை வழி புரளச் செய்தது. அந்தக்காரணிகள் அனைத்தும் இவர்களிடமும் காணப்படுகின்றது.

சுருக்கமாகச் சொன்னால் மார்க்கம் பற்றி சாதாரண பொது மக்களிடம் காணப்படும் அடிப்படை அறிவு கூட இல்லாத இந்த மௌலவிகள் சில வேளை கியாமத் நாளின் அடையாளங்களாக கூட இருக்கவும் வாய்ப்பிருக்கின்றது.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் மறுமைக்கு முன்னர் நிகழவிருக்கும் பல நிகழ்வுகள் பற்றிக் குறிப்பிடுகின்றார்கள். ஒரு சந்தர்ப்பத்தில்,

وينطق فِيهَا ஃ الرويبضة . قيل : وَمَا الرويبضة ؟ قَالَ : الْمَرْء التافه يتَكَلَّم فِي أَمر الْعَامَّة
ابن ماجه، المعجم الطبراني، مسند أحمد
‘ருவைபிழா பேசும்’ என்று குறிப்பிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் ருவைபிழா என்றால் என்ன என்று கேட்டார்கள். ‘மார்க்க விபரம் பற்றி தெளிவான அறிவில்லாத ஒருவன் பாரிய விடயங்கள் பற்றிப் பேசுவது என விளக்கினார்கள். (நூல்: இப்னுமாஜா, முஃஜம் தபரானி, முஸ்னத் அஹ்மத்).

இது எவ்வளவு உண்மை என்று பாருங்கள். இமாம்களின் நூற்களைச் சரியாகப்படிக்காத, மார்க்கத்தில் ஆளமான அறிவில்லாத உலமா சபையின் அடையாள அட்டை மௌலவிகளால் சமூகம் எவ்வளவு பெரும் நெருக்கடியை எதிர்நோக்குகின்றது என்பதை சிந்தியுங்கள்.

இவர்கள் நல்லடியார்கள் பெயரில் அரங்கேற்றும் அநாச்சாரங்களுக்கு அளவுதான் உண்டுமா? இவர்கள் வார்த்தையில் சுன்னிக்களாக நம்பிக்கையிலும், நடத்தையிலும் ஷீஆக்களாகவும், அபூஜஹ்ல், உத்பாக்களாகவும் இருக்கின்றனர்.

மத்ஹபு, மத்ஹபு என்று கதறிக் கொண்டு, மக்களை வழிகெடுக்கின்ற இந்தக் கும்பல் இலங்கை நாட்டில் தாம் பெரும்பாலும் சாந்திருக்கின்ற ஷாபி மத்ஹபையாவது கொஞ்சம் அணுகி பத்வாக்களைப் படிக்கலாம் அல்லவா?

அதனையாவது ஒரு முன்னுதாரணமாக இவர்கள் எடுத்திருந்தால் நிச்சயம் விமோசனம் பெற்றிருப்பர், அதுதான் இல்லையே! அதில் கூறப்பட்டுள்ள பத்வாவைப் பாருங்கள்.

‘அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்துப் பலியிடுபவனை அல்லாஹ் சபிப்பானாக’ என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தி முஸ்லிம் என்ற கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விளக்கமளிக்கும் இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

وَأَمَّا الذَّبْح لِغَيْرِ اللَّه فَالْمُرَاد بِهِ أَنْ يَذْبَح بِاسْمِ غَيْر اللَّه تَعَالَى كَمَنْ ذَبَحَ لِلصَّنَمِ أَوْ الصَّلِيب أَوْ لِمُوسَى أَوْ لِعِيسَى صَلَّى اللَّه عَلَيْهِمَا أَوْ لِلْكَعْبَةِ وَنَحْو ذَلِكَ ، فَكُلّ هَذَا حَرَام ، وَلَا تَحِلّ هَذِهِ الذَّبِيحَة ، سَوَاء كَانَ الذَّابِح مُسْلِمًا أَوْ نَصْرَانِيًّا أَوْ يَهُودِيًّا ، نَصَّ عَلَيْهِ الشَّافِعِيّ ، وَاتَّفَقَ عَلَيْهِ أَصْحَابنَا ، فَإِنْ قَصَدَ مَعَ ذَلِكَ تَعْظِيم الْمَذْبُوح لَهُ غَيْر اللَّه تَعَالَى وَالْعِبَادَة لَهُ كَانَ ذَلِكَ كُفْرًا ، فَإِنْ كَانَ الذَّابِح مُسْلِمًا قَبْل ذَلِكَ صَارَ بِالذَّبْحِ مُرْتَدًّا
شرح النووي على مسلم
‘அல்லாஹ் அல்லாதோருக்காக அறுத்தல் என்பதன் நோக்கம் என்னவெனில் சிலைக்காக, அல்லது சிலுவைக்காக, அல்லது மூஸா (அலை), அல்லது ஈஸா (அலை) ஆகியோருக்காக, அல்லது கஃபாவிற்காக, அல்லது அதல்லாதவற்றிற்காக அறுத்துப்பலியிடுபவன் (செயல்) போன்றதாகும். இவை அனைத்தும் ஹராமாகும். அறுப்பவன் முஸ்லிமாகவோ, அல்லது கிரிஸ்தவனாகவோ, அல்லது யூதனாகவோ இருந்தாலும் அந்தப்பலிப்பிராணி ஹலாலாகாது. இதையே ஷாஃபி (ரஹ்) அவர்கள் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்கள், இக்கருத்திலேயே நமது தோழர்களும் ஏகமனதாக இருக்கின்றனர். அத்துடன் அல்லாஹ் அல்லாது யாருக்காக அறுக்கப்படுப்படுகின்றதோ அவரை கண்ணியப்படுத்துவதையும், அவருக்கு வழிப்படுவதையும் அவர் நோக்கமாகக் கொள்வாரானால் அது ‘குஃப்ர்’ எனும் நிராகரிப்பாகிவிடும், அறுப்பவன் முஸ்லிமாக இருப்பின் அறுத்த காரணத்தால் அவன் ‘முர்தத்’ எனும் மதம் மாறியவனாக மாறிவிடுகின்றான். (பார்க்க: ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்: பாகம் -6 பக்கம்: 475)

இவ்வளவு கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட தமது மத்ஹபின் தீர்ப்பை முதுகுக்குப்பின் தூக்கி எறிந்த ஷாஃபி மத்ஹப் ஆலிம்கள் என்ன நினைப்பில் பெரியார்கள், மற்றும் அவ்லியாக்கள் பேரில் இவ்வாறான அனாச்சாரங்களை அரங்கேற்றுகின்றனரோ தெரியவில்லை.

கனவின் வெளிப்பாடு மார்க்கமாகுமா?
பெரியார்கள், மகான்கள் என்போர் பேரில் கோவில்களில் நடை பெறும் எட்சவமும் தோற்றுவிடும் அளவு மங்களகரமான முறையில் கந்தூரி நடத்தும் இவர்கள் எல்லா கந்தூரிக்கும் கனவை ஒரு துரும்பாக வைக்கின்றார்கள். புர்தாக் கந்தூரியாகட்டும், மற்ற நிகழ்வுகளாகட்டும் கனவே முதலிடம் வகிக்கும் கனவைப் பிரதானப் படுத்தி மார்க்க சட்டம் பெறலாமா என்றால் முடியாது என்பதே மார்க்கத்தின் தீர்ப்பும், அவர்கள் சார்ந்து நிற்கின்ற மத்ஹபின் தீர்ப்பும்

பெரியார்கள் பேரில் கட்டப்பட்டுள்ள தர்ஹாக்கள் தீய கனவின் வெளிப்பாடாகவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்களை ஏமாற்றிப் பிழைப்பு நடத்த இது ஒரு சாத்வீக வழியிலான அணுமுறை என்றே கூற வேண்டும். இது திவாலாகிப் போன பணவைப்பு முறை போன்றதாகும். இதில் இடப்படும் பணத்திற்கு தர்ஹாக் காவலர்களே நிர்வாகிகளாகும்.

மரணித்த எங்கள் தந்தை கப்று, தர்ஹாக் கட்டச் சொன்னார், சந்தனக் கூடு எடுக்கச் சொன்னார், விழா கொண்டாடச் சொன்னார் என்றால் உடனே அதை நிறைவேற்றி தயாராகிவிடும் இவர்கள் இது தீய கனவு என முடிவு செய்வதில்லை.

எனது அத்தா அல்லது தந்தை என்னைக் கிணற்றில் விழச் சொன்னார் என்றால் அவர்கள் அதை நிறைவேற்றத் தயாராக இல்லை. ஏன் இது கெட்ட கனவு என்று முடிவு செய்யும் திறன் இருக்கின்றது.

நபி (ஸல்) அவர்களின் மரணத்தின் பின்னால் கனவில் கண்டோம் என்பதற்காக அதன் மூலம் மார்க்கத்தை உறுதி செய்ய முடியுமா என்றால் முடியாது என ஷாபி மத்ஹபின் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) அவர்கள் பின்வருமாறு தீர்ப்புக் கூறியுள்ளார்கள்.

قال النووي رحمه الله: …… لَا يَجُوز إِثْبَات حُكْم شَرْعِيّ بِهِ لِأَنَّ حَالَة النَّوْم لَيْسَتْ حَالَةَ ضَبْطٍ وَتَحْقِيقٍ لِمَا يَسْمَعُهُ الرَّائِي ، وَقَدْ اِتَّفَقُوا عَلَى أَنَّ مِنْ شَرْطِ مَنْ تُقْبَلُ رِوَايَتُهُ وَشَهَادَتُهُ أَنْ يَكُون مُتَيَقِّظًا لَا مُغَفَّلًا وَلَا سَيِّئَ الْحِفْظِ وَلَا كَثِيرَ الْخَطَأِ وَلَا مُخْتَلَّ الضَّبْطِ ، وَالنَّائِم لَيْسَ بِهَذِهِ الصِّفَة فَلَمْ تُقْبَلْ رِوَايَتُهُ لِاخْتِلَالِ ضَبْطِهِ
مقدمة شرح النووي على مسلم
உறக்கத்தின் நிலையில் கனவு காண்பவர் அதனை உறுதி செய்து, சரியான முறைப்படி கூறமுடியாததால் கனவால் மார்க்க சட்டத்தை நிலைப்படுத்த முடியாது. ஒருவரின் சாட்சியம் ஏற்கப்பட அவர், விழிப்புணர்வுள்ளவராகவும், அபார மறதிக்கு உட்படாதவராகவும், மனனத்தில் குறைவில்லாதவராகவும், அதிமதிகம் தவறிழைக்காதவராகவும், ஞாபகம் குன்றிடாதவராகவும் இருத்தல் வேண்டும். (அப்போதுதான் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும்) இதில் அறிஞர்கள் ஒருதித்தி கருத்தில் உள்ளனர். உறக்கத்தில் இருப்பவன் இந்த நிலையில் கிடையாது. அவனது ஞாகபத்தன்மையில் குறைவு இருக்கும். ஆகவே அவனது அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிடுகிறார்கள். (பார்க்க: ஷரஹ்முஸ்லிம்).

அப்படியானால் உத்பி என்ற விலாசமற்ற கிராமவாசி, நபி (ஸல்) அவர்களின் மண்ணறையில் மன்றாடியதற்காக தனது பாவம் மன்னிக்கப்பட்டதாகக் குறிப்பிடும் கனவை இந்த அடிப்படையிலாவது ஏற்றுக் கொள்ள முடியுமா என நீங்களே சிந்தியுங்கள். இந்த அடிப்படையை புர்தாவிற்கும் பொருந்தும் அது பற்றியும் கவனியுங்கள்.

புர்தா என்றால் என்ன?
‘புர்தா’ என்றால் மேல்போர்வை என்று பொருள்படும். பூஸரி என்ற எகிப்து நாட்டுக் கவிஞர் நோய்ப்பட்டிருந்த போது நபி (ஸல்) அவர்களைப் புகழ்ந்து பாடிய கவிதைகளைச் செவிமடுத்த நபி (ஸல்) அவர்கள், அதனை சரிகண்டதால் அவர்களின் மேனியில் இருந்து அவர்களது போர்வையை இவர்மீது போர்த்திவிட்டதாகவும், அதனால் அவரது தீராத பிணி நீங்கியதாகவும் பொய்யான சரித்திரத்தைப் பின்னணியாகக் கொண்டதே இந்த புர்தா.

அரபுப் பாடல்கள் குர்ஆனைப் போன்றதா?
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹாபாக்கள் ஒட்டகத்தை விரைந்தோடச் செய்ய, காபிர்களுக்கு மறுக்கூற, போர்களத்தில் உட்சாகத்துடன் செயல்பட திருமண நிகழ்வுகள் எனப் பல சந்தர்ப்பங்களில் பாடல்கள் பாடி மகிழந்திருக்கின்றார்கள். அதை பள்ளியில் அமர்ந்து, குறித்த நாளொன்றை ஏற்படுத்தி நபி (ஸல்) அவர்களின் காலத்தி பின் ஓதி பரகத் வேண்டியதில்லை.

மட்டுமின்றி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகில் இருபத்திமூன்று வருடங்கள் நபியாக இருந்து, தனது பணியில் எவ்வித குறைவும் செய்யாது மரணித்தார்கள், அவர்கள் கனவில் தோன்றி மார்க்கத்தைச் சொல்லிக்கொடுத்தார் என்றோ, அல்லது அவர்களின் போதiயில் இன்னும் மீதி இருக்கிறதோ நம்புபவன் முஸ்லிமாக இருக்கவே முடியாது.

தனது தோழர்களை அரபா வெளியில் ஒன்று சேர்த்த நபி (ஸல்) அவர்கள் ‘மறுமையில் என்னைப் பற்றி அல்லாஹ்வினால் வினப்படுவீர்கள். அதற்கு என்னபதில் அளிப்பீர்கள் எனக்கேட்டார்கள். அங்கு சமூகம்தந்த அனைத்து மக்களும் நீங்கள் தூதுத்துவத்தை சரியாக எடுத்துவைத்தீர்கள் எனக் கூறுவோம் எனக் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக்கும் முகமாக தனது ஆட்காட்டி விரலை நீட்டி, பின்னர் அதை மக்கள் பக்கமாகக்காட்டி ‘அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! ‘அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! ‘அல்லாஹ்வே நீ சாட்சியாக இரு! எனக் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). இதன் மூலம் எவ்வளவு பெரிய உண்மைகள் இருப்பதை

புர்தாவில் காணப்படுபவை என்ன?
நாகூர் ஹனீபா என்பவர் பாடி உள்ள தமிழில் பாடிய இஸ்லாமிய கீதங்களில் மார்க்கத்தில் ஹரமாக்கப்பட்ட இசையும், ஷிர்க்கும் இணைந்துள்ளது போன்று இதில் இணைவைப்பும், பொய்யும் கலந்திருக்கின்றது. மக்கள் இவற்றை பரகத் வேண்டி ஓதித் தமாம் செய்யும் வழக்கம் சவக்குழிக்குச் செல்லும் நிலையை எட்டியுள்ள நிலையில், அதை வலிந்து உயிர்ப்பிக்கும் ஊர்களும், வெட்கம் கெட்ட மௌலவிகளும், மக்களும் இல்லாமல் இல்லை.

ஷிர்க்குடன் தொடர்புடைய ஓரிரு வரிகளை அதிலிருந்து இங்கு மாதிரிக்காக எடுத்தெழுகின்றோம். எனவே பரவசம் கொள்ளாது படியுங்கள். சிந்தியுங்கள், திருந்துங்கள். சீர்பெறுங்கள். அதை ஓதுவதால் பரகத் அதிகரிக்கும் என குருட்டுத்தத்துவம் பேசி மக்களை வழிகெடுக்காதீர்கள்.

1- يا أكرم الخلق ما لي من ألوذ به
سواك عند حلول الحادث العَمِمِ

பொருள்: படைப்புக்களில் சங்கையானவரே! பெரும் துன்பமான நிகழ்வுகள் ஏற்படும் போது, பாதுகாப்புத் தேட உங்களைத் தவிர வேறு யாரிடமும் செல்ல எனக்கென்ன நேர்ந்ததது!

மறுப்பு: இருபத்தி மூன்று ஆண்டுகள் நபி (ஸல்) அவர்கள் போதித்த போதனையை அப்படியே தகர்த்தெறியும் வரிகளா இல்லையா என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.

நிர்க்கதியான நிலையில் இருப்பவன் தன்னை அழைக்கின்ற போது அவனுக்கு பதில் அளித்து, கஷ்டத்தை அகற்றி, உங்களை பூமியின் வழித்தோன்றல்களாக ஆக்குபவன் யார்? அல்லாஹ்வுடன் வேறு கடவுளர் உண்டா? நீங்கள் குறைவாகவே சிந்திக்கின்றீர்கள். (அத்:அந்நம்ல். வசனம்:62) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கும், இன்னும் பல அல்குர்ஆனிய வசனங்களுக்கும் இது நேர்முரணானதாக இல்லையா?

2- فإن من جودك الدنيا وضرتها + ومن علومك علم اللوح والقلم
(நபியே!) இந்த உலகும், மறுமையும் உமது கொடையில் உள்ளதாகும். லவ்ஹுல் மஹ்பூழினதும், எழுதுகோலான போனாவினதும் அறிவு உமது ஞானங்களில் இருந்தும் உள்ளதாகும்.

மறுப்பு: ‘லவ்ஹுல் மஹ்பூழ்’ என்றால் பாதுகாக்கப்பட்ட பலகை என்பது பொருள். இதில் உலகில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் அல்லாஹ் பதிவு செய்து வைத்துள்ளான். இது அவனது அபரிமிதமான அறிவின் வெளிப்பாட்டால் அவன் ஏற்படுத்தியாகும்.

இதற்கும் நபி (ஸல்) அவர்களின் அறிவு ஞானத்திற்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை என்பதை சிறுபிள்ளைக்கும் கூட தெரியும். இந்தப் பாடல்களை ஏதோ நபி (ஸல்) அவர்கள் கனவில் தோன்றி அங்கீரத்திதாக நினைத்துக் கொண்டு அவைகளைத் தமாமும் செய்து கந்தூரியும் நடத்தும் மார்க்க அறிவற்ற மௌலவிகள் இது பற்றி கொஞ்சம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
-அபூநதா இஸ்லாம் கல்வி

பேராசிரியரும் நடிகருமான டாக்டர்.பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக்கொள்கையில் உறுதியாகயிருந்தவர்.தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத்தரும் தாசன் என்றவார்த்தையை இணைத்துக்கொண்டவர். தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர்.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றிவருகிறார்.இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக்கொண்டார்.இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக்குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது:” இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக்கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச்செய்தேன்.அதில் இஸ்லாத்தைத்தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக்கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன்.இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்.” என்றார். டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார்.அல்லாஹ் அவருடைய நல்லச்செயல்களை பொருந்திக்கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

தகவல் மின்னஞ்சல் மூலம் அபூ முஸ்அப்

இலவச முதலுதவி சிகிச்சை முகாம்

மேல் மாகாண அமைச்சரும், கம்பஹா மாவட்ட வேட்பாளருமான ருவன் விஜயவர்தன அவர்களால் ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க கஹடோவிட தாய்மார் பராமரிப்பு நிலையத்தைச்சுற்றி அவரது சொந்த செலவில் சுற்றுமதில் அமைத்துத் தருவதாக வாக்குறுதியளிக்கப்பட்டது ஏற்கனவே நீங்கள் அறிந்தவிடயமாகும்.

அதன்போது அமைச்சருடன் வருகைதந்திருந்த வைத்தியர் துர்காவிடம் இலவசவைத்திய சேவையொன்று தாய்மார் பராமரிப்பு நிலையத்தில் செய்யுமாரறு வேண்டியதற்கிணங்க அதன் முதட்கட்டமாக இன்று 2010.03.14 ம் திகதி 11.00 மணிக்கு 50 பெண்களுக்கு இலவசமாக முதலுதவி சிகிச்சை பற்றிய விரிவுரையும், செயற்பாட்டு முறைரீதியான விளக்கமும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுதென்று அதன் ஏட்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிஸ்:மினாரா எதிர்ப்பு பிரச்சாரகர் இஸ்லாத்தை தழுவினார்




சுவிட்சர்லாந்து நாட்டில் முஸ்லிம் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கெதிரான பிரச்சாரத்திற்கு தலைமை வகித்ததாக கூறப்படும் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் இஸ்லாத்தை தழுவினார்.

மினாராக்கள் கட்டுவதை தடைச் செய்ய வேண்டுமென்றூம், மஸ்ஜிதுகளை பூட்டவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரத்தை துவக்கியவர்தான் ஸ்ட்ரீக். இவர் சுவிஸ் பீப்பிள்ஸ் பார்டியின் முக்கிய நபர்.

மினாராக்கள் கட்டுவதை எதிர்த்த அரசியல் தலைவர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியது சுவிஸ் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் ஸ்ட்ரீக் நடத்திய மினாராக்களுக்கெதிரான பிரச்சாரம் இஸ்லாத்திர்கெதிரான மக்களின் எதிர்ப்பை அதிகரித்தது.

தனது கடந்த கால நடவடிக்கைகளுக்காக வெட்கப்படுவதாகவும், ஐரோப்பாவிலேயே மிக உயர்ந்த மஸ்ஜித் கட்டுவதற்கு தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவித்தார்.

தற்ப்போது சுவிஸ் நாட்டில் 4 மஸ்ஜிதுகளே உள்ளன. ஐந்தாவது மஸ்ஜிதின் அடிக்கல் நாட்டுவது தானாக வேண்டுமென்பது ஸ்ட்ரீக்கின் விருப்பமாகும். மதரீதியான பொறுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பிரச்சாரகராக தான் விரும்புவதாகவும் ஸ்ட்ரீக் தெரிவிக்கிறார்.

ஐரோப்பியர்களுக்கு இஸ்லாத்தை குறித்து புரிந்துக்கொள்ள விருப்பமுண்டு என்று முஸ்லிம்களின் நலனுக்காக செயல்படும் அரசு சார்பற்ற அமைப்பான ஒ.பி.ஐயின் தலைவர் அப்துல் மஜீத் அல்தாயி தெரிவிக்கிறார்.

மேலும் அவர் கூறும்போது "சிலர் ஸ்ட்ரீக்கைப் போல் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலுள்ள தொடர்பைக் குறித்து அறிய முயற்சிக்கின்றனர். இஸ்லாத்தை எதிர்ப்பதற்காகவே ஸ்ட்ரீக் குர்ஆனை படித்தார். குர்ஆனை ஆழமாக சிந்தித்த போது முடிவு எதிர்மறையாக மாறியது".என்றார்.

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் மினாராக்களை தடைச்செய்வது குறித்து விருப்ப வாக்கெடுப்பில் சுவிஸ் நாட்டவர்கள் மினாராக்களை தடைச் செய்ய ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி:

தேஜஸ் மலையாள நாளிதழ்

ஆமினா அசில்மி (Aminah Assilmi




ஆமினா அசில்மி (Aminah Assilmi), மிகப் பிரபலமான இஸ்லாமிய மார்க்க அறிஞர். அமெரிக்காவைச் சார்ந்த சர்வதேச முஸ்லிம் பெண்கள் அமைப்பின் தலைவர் (International Union of Muslim Women ).

ஆமினா அசில்மி, இந்த பெயரை கேட்டாலே இவரைப்பற்றி தெரிந்தவர்களுக்கு ஒரு புது உற்சாகம் பிறக்கும். ஒரு முஸ்லிம் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்ட பிறகு கடந்த 33 ஆண்டுகளாக இவர் செய்து வரும் இஸ்லாமிய சேவைகள் அளப்பறியது. சொல்லி மாளாதது. பல முஸ்லிம்களுக்கு இவருடைய வாழ்கை பயணம் ஒரு பாடம். அதைத்தான் இங்கு காண இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.

"நான் முஸ்லிம் என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமை படுகிறேன். இஸ்லாம் என்னுடைய இதயத்துடிப்பு. இஸ்லாம் என்னுடைய பலம். இஸ்லாம் இல்லை என்றால் நான் ஒன்றுமில்லை. அல்லாஹ், அவனுடைய மகத்தான கிருபையை என்னிடம் காட்டாவிட்டால் என்னால் வாழ முடியாது"
----- ஆமினா அசில்மி

ஆமினா அசில்மி அவர்கள் கிறிஸ்துவ பின்னணியில் (Southern Baptist) இருந்து வந்தவர், தன் கல்லூரி காலங்களில் ஒரு மிகச்சிறந்த மாணவியாக திகழ்ந்தவர், பல விருதுகளை பெற்றவர்.

*ஒரு கணினி கோளாறு இவருடைய வாழ்க்கையை திருப்பி போட்டது.*

அது 1975ஆம் ஆண்டு. முதன் முதலாக ஒரு வகுப்புக்கு முன்பதிவு செய்ய கணினி பயன்படுத்திய நேரம். ஆமினா அவர்கள் தான் சேர வேண்டிய வகுப்புக்கு தன் பெயரை முன் பதிவு செய்து விட்டு தன் தொழிலை கவனிப்பதற்காக ஒக்ளஹோமா (Oklahoma) சென்று விட்டார். திரும்பி வர தாமதமாக, வகுப்பு துவங்கி இரண்டு வாரம் சென்ற பிறகேவந்து சேர்ந்தார். விட்டு போன வகுப்புகளை வெகு சீக்கிரமே கற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. ஏனென்றால், கணினி தவறுதலாக
வேறொரு வகுப்பில் அவரை முன்பதிவு செய்திருந்தது. அந்த வகுப்பு தியேட்டர் (Theatre) வகுப்பு என்று அழைக்கபட்டது, அந்த வகுப்பில் அடிக்கடி அனைத்து மாணவர்கள் முன்பு பேச வேண்டிருந்தது. இயல்பாகவே ஆமினா அவர்கள் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டிருந்ததால் இந்த வகுப்பில் சேர மிகவும் அஞ்சினார்.

மிகவும் தாமதம் என்பதால் இந்த வகுப்பை புறக்கணிக்க முடியாத நிலை. மேலும் இந்தவகுப்பை அவர் புறக்கணித்தால் அவர் பெரும் ஸ்காலர்ஷிப்பை இழக்க வேண்டிய நிலைவரலாம். ஆகவே இந்த வகுப்பில் சேருவதென முடிவெடுத்தார்.

அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற அவருக்கு மாபெரும் அதிர்ச்சி. அந்த வகுப்பு
முழுவதும் அரேபிய மாணவர்கள். அவ்வளவுதான். இனிமேல் வகுப்பிற்கு செல்ல கூடாதென முடிவெடுத்தார். அதற்கு அவர் சொன்ன காரணம்

"அந்த நாகரிகமற்ற அரேபியர்களுடன் படிக்க மாட்டேன்" ஆமினா அவர்களின் கணவர் அவருக்கு ஆறுதல் கூறினார், இறைவன் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்குமென்று. அமீனா அவர்கள் இரண்டு நாட்கள் வீட்டின் அறையில் அடைந்து இருந்தார். அறையை விட்டு வெளியே வந்த அவர் சொல்லியது

"நான் அவர்களுடன் சேர்ந்து படிப்பேன். மேலும் அவர்களை கிறிஸ்துவராக்குவேன்"

இறைவன் இந்த அரேபியர்களை மதம் மாற்றுவதற்காகவே தன்னை அவர்களுடன் சேர வைத்ததாக நம்பினார். அரேபியர்களுடன் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவர்களுக்கு கிருஸ்துவத்தை எடுத்துரைத்தார்.

" நான் அவர்களிடம் சொல்லுவேன், ஏசுவை மீட்பராக ஏற்காவிட்டால் எப்படி அவர்கள் நரகத்தில் வதைக்க படுவார்கள் என்று...நான் சொல்வதை அவர்கள் கவனமாக கேட்டுக்கொண்டார்கள். மிகுந்த கண்ணியம் காட்டினார்கள். ஆனால் மதம் மாறவில்லை. பிறகு நான் அவர்களிடம் ஏசு கிறிஸ்து எவ்வளவு ஆழமாக அவர்களை நேசிக்கிறார் என்று விளக்கினேன். அப்பொழுதும் அவர்கள் என் பேச்சை சட்டை செய்யவில்லை"

பிறகு ஆமினா அசில்மி அவர்கள் ஒரு முடிவெடுத்தார்கள்...

"நான் அவர்களுடைய புனித நூலை படிப்பதென முடிவெடுத்தேன், இஸ்லாம் ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான தூதர் என்று நிரூபிப்பதர்க்காக"

ஆமினா அசில்மி அவர்களின் வேண்டுதலின் பேரில் ஒரு மாணவர் குரானையும் மற்றுமொரு இஸ்லாமிய புத்தகத்தையும் கொடுத்தார். இந்த இரண்டு புத்தகங்களையும் அடிப்படையாக வைத்து தன் ஆராய்ச்சியை தொடங்கினார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் முடிவில் மேலும் பதினைந்து இஸ்லாமிய புத்தகங்களை படித்து முடித்திருந்தார். அப்பொழுதெல்லாம்
குரானில் தான் எது சர்ச்சைக்குரியதோ என்று நினைக்கிறாரோ அதையெல்லாம் குறிப்பெடுத்து கொள்வார், இஸ்லாம் பொய் என்று நிரூபிப்பதர்க்காக. ஆனால் குரானின் மூலம் தனக்குள் ஒரு மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

" நான் மாறி கொண்டிருந்தேன், சிறிது சிறிதாக, என் கணவர் சந்தேகம் படுமளவிற்கு. நாங்கள் ஒவ்வொரு வெள்ளியும் சனியும் பார் (BAR) மற்றும் பார்ட்டிகளுக்கு சென்று கொண்டிருந்தோம். ஆனால் நான் இனிமேலும் அங்கு செல்ல விரும்பவில்லை. அது போன்ற இடங்களில் இருந்து என்னை தனிமை படுத்தினேன்."

பன்றி இறைச்சி மற்றும் குடியை நிறுத்தி விட்டார். இது அவருடைய கணவரை சந்தேகம் கொள்ள செய்தது. தன்னை விட்டு செல்லும்படி சொல்லிவிட்டார். ஆமினா அசில்மி அவர்கள் தனி வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். இப்பொழுது மேலும் இஸ்லாத்தை பற்றி ஆராயச் செய்தார்கள்.

அப்பொழுது அவர்களுக்கு அப்துல் அஜீஸ் அல் ஷேய்க் என்பவரது அறிமுகம் கிடைத்தது.

"அவரை என்னால் மறக்க முடியாது. நான் இஸ்லாத்தை பற்றி கேட்ட ஒவ்வொரு கேள்விக்கும் மிக பொறுமையாக அறிவுப்பூர்வமாக பதிலளித்தார். அவர், என்னுடைய கேள்வி தவறானது என்றோ, முட்டாள்தனமானது என்றோ ஒரு பொழுதும் கூறியதில்லை. சிறிது சிறிதாக என்னுடைய சந்தேகங்கள் விலகின"

1977, மே 21இல், அப்துல் அஜீஸ் மற்றும் அவரது தோழர்கள் முன்னிலையில் இஸ்லாத்தை அமீனா அவர்கள் ஏற்றுக்கொண்டார்.

" இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதரென்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்"

"நான் முதன்முதலாக இஸ்லாத்தை படிக்க தொடங்கியபோது, எனக்கு இஸ்லாத்தினால் தேவை என்று ஒன்று இருந்ததாக நினைவில்லை. இஸ்லாமும் என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆனால் முன்பிருந்ததைவிட இப்பொழுதோ என் மனதில் சொல்லமுடியாத ஒரு வித அமைதி, மகிழ்ச்சி. இதற்க்கெல்லாம் காரணம்
இஸ்லாம் தான்"

இதன் பிறகு தான் நிலைமை மிக மோசமானது. ஆமினா அசில்மி அவர்களின் தாய் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். அவரது சகோதரியோ அவருக்கு மனநிலை சரி இல்லை என்று மனநல மருத்துவமனையில் சேர்க்கப் பார்த்தார். அவரது தந்தையோ ஆமினாவை கொலை செய்ய பார்த்தார். நண்பர்களோ அவரை வெறுத்து விட்டார்கள்.

குடும்பமும், நண்பர்களும் ஒருசேர புறக்கணித்து விட்டார்கள். கிட்டத்தட்ட அநாதை. இஸ்லாத்தை ஏற்று கொண்ட சில நாட்களிலேயே ஹிஜாப் அணிய தொடங்கிவிட்டார்கள். அதன் காரணமாக வேலையில் இருந்து நீட்கபட்டார்கள். இப்பொழுது குடும்பம், நண்பர்கள், வேலை அனைத்தும் சென்று விட்டது. காரணம் இஸ்லாம். ஆனால் அவருடைய ஈமான் மேம்மேலும் அதிகரித்தது. எல்லா புகழும் இறைவனுக்கே.

இப்பொழுது அவருடைய ஒரே ஆறுதல் பிரிந்து போன கணவர் மட்டுமே.

ஆமினா அவர்கள், அவருடைய கணவரை மிகவும் நேசித்தார்கள், அவரும்தான். ஆனால் ஆமினா அவர்களின் மாற்றத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் மீது தெரிவிக்கப்பட்ட பல்வேறு முறைகேடுகள் குறித்து விசாரணை மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆயுள் கால தடை முதல் பெரும் அபராதம் வரை பல்வேறு தண்டனைகளை வழங்கியுள்ளது.

அணியின் முன்னாள் தலைவர்களான யூசுப், யூனிஸ்கான் போன்றவர்களுக்கு விளையாட ஆயுள் கால தடையும், மாலிக் மற்றும் ராணா ஆகியோருக்கு ஓராண்டு தடையுடன் ரூ.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், அதிரடி வீரர் அப்ரிடி மற்றும் கம்ரான் அக்மல், உமர் அக்மல் ஆகிய மூவருக்கும் தலா 30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பந்தைச் சேதப்படுத்தியது, அணிக்கு எதிரான செயல்பாடு உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

"உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்" மாத்தளை விவாதத்தில் நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி


2010-03-07 அன்று மாத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற ஒருநாள் விவாதம் தௌஹீத் கொள்கைப்பிரச்சாரத்தில் ஒரு முக்கியம் வாய்ந்த நிகழ்வு எனலாம்.

இலங்கையின் தௌஹீத் பிரச்சாரம் 60 வருடங்களைத் கடந்துகொண்டிருக்கிறது.இந்தப் பிரச்சாரத்தின் வளர்ச்சியில் பல ஜமாஅத்துக்கள் பல உலமாக்கள் பங்காற்றியிருக்கிறார்கள்.பிரச்சாரத்தின் ஆரம்பந்தொடக்கம் தௌஹீதிலும் ஸ{ன்னாவைப் பின்பற்றுவதிலும் சிர்க் பித்அத்களை பிரச்சாரத்தால் எதிர்ப்பதிலும் காட்டிய உறுதியான நிலைப்பாடு சமரசம் செய்துகொள்ளாத்தன்மை இந்த கொள்கையின் பக்கம் பலரை ஈர்த்தது.பல இழப்புக்களை இந்தக் கொள்கையின் நகர்வு சந்தித்தது.உயிரிழப்பு ஊர் நீக்கம் வெட்டுக்காயங்கள் அவதூறுகள் என்று அராஜகத்தின் பட்டியல்கள் நீண்டது.ஆனால் அவைகளுக்கெதிராக உயிர்த்தியாகம் செய்வதற்குத் தயாராக பலர் இருந்தும் தௌஹீத் பிரச்சார அமைப்புகள் வன்முறைகளில் இறங்கவில்லை.மாறாக பிரச்சாரத்தை தீவிரப்படுத்திக் கொண்டே இருந்தனர்.1980களில் மௌலவி பீஜே அவர்களின் தவ்ஹீத் பிரவேசத்தோடு தமிழுலக தவ்ஹீத் அமைப்புக்களின் பிரச்சாரம் புது வேகம் அடையத்துவங்கியது.பலவிவாத மேடைகளை பல எதிர்ப்புக்களுக்கு மத்தியில் தௌஹீத் அமைப்புக்கள் சந்தித்தன.பலர் தவ்ஹீத் கொள்கையின் பால் ஈர்க்கப்பட ஆரம்பித்தனர்.

ஆனால் எதிர்ப்புக்கள் குறையவில்லை.கருத்தைக் கருத்தால் வெல்ல முடியாதவர்கள் அராஜகங்களைக் கட்டவிழ்த்துவிடும் முறைகளில் வளர்ச்சியடைந்தார்கள் பன்முகப்பட்டார்கள். அதன் விளைவாக தௌஹீத்வாதிகள் என்றுமே சந்தித்திராத இலங்கை வரலாறு என்றும் மறக்காத ஒரு கொடூர நிகழ்வை மஹகொடை தவ்ஹீத் சகோரர்கள் சந்தித்தார்கள்.இருளுக்குள் பல உடல்களின் சிவப்பு இரத்தம்; மஸ்ஜித் மண்ணிலே வழிந்தோடியது. பல உடல்கள் கதறக் கதற சிதைக்கப்பட்டன.அல்குர்ஆன் பிரதிகள் தீக்கிரையாக்கப்பட்டன. மஸ்ஜித் எரிக்கப்பட்டது. கொடூரம் கொடூரத்திலும் கொடூரம்.ஆனால் உரிய நீதி வழங்கப்படவில்லை.படுகொலைகளையெல்லாம் அரங்கேற்றிய பின் கொல்லப்பட்ட பிராபகரனுக்காக கவலைப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் கூட இதற்காகக் கவலைப்படவில்லை.நீதி பேச வேண்டிய பொது இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளக் கூடிய இயக்கங்கள் வேற்றுமையில் ஒற்றுமை என தௌஹீத் பிரச்சாரகர்களை எதிர்க்க ஒன்று திரண்டனர்.படுகொலையின் கொடுமை பற்றிப் பேச வேண்டிய உலமாக்கள் நாவடக்கம் பேச்சொழுக்கம் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

இதன் விளைவாய் நம் சகோதரர்களில் சிலர்; அச்சத்தாலும் சிலர் அவசரத்தாலும் சிலர் சமரசத்தாலும் கொள்கையிலும் அதன்பால் அழைப்பதிலும் அமைதிகாக்க ஆரம்பித்தனர்.இதன்பின் என்ன நிகழுமோ!!!தௌஹீத் பிரச்சாரம் செய்ய முடியாமல் போவது மட்டுமல்ல பின்பற்றக் கூட சாத்தியப்படாமல் போகுமோ!!!என்ற அச்சம் பரவ ஆரம்பித்தது.இளம் உலமாக்களின் அறிவும் ஆற்றலும் தைரியமும் அனுபவமின்மை என அடையாளப்படுத்தப்பட்டது.

அப்படியான ஒரு சூழலில்தான்

தமழுலக ஸ{பிகளின் தலைவரும் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான கைருல் பரீயா அரபிக் கல்லுரியின் முதல்வர் ஜமாஅதுல் உலமா சபைத் தலைவர் மெலவி அப்துல்லாஹ் ஜமாலியுடனான விவாதம் ஒன்றிற்காய் முனாலிரு ஸைலான் மாத்தளை நஜ்முல் உலமா நஜாஹியா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலவி முஹாஜிரீன் தலமையில் தௌஹீத் உலமாக்களுக்கான அழைப்பு விடப்பட்டது.இதில் அப்துல்லாஹ் ஜமாலியின் வருகை விவாத நாள்வரை எமது தரப்பிற்கு உறுதியில்லாமலேயே இருந்தது.

அச்சம் நிறைந்த இந்தச் சூழலில்.
கருத்துச்சுதந்திரம் வன்முறையால் எதிர்க்கப்படும் இக்;கட்டத்தில்..

இன்னொரு இரத்தக் களத்தை உருவாக்கவா இந்த நிகழ்வு?இது தேவைதானா?என்ற திகிலூட்டும் ஓசைகள் ஒரு புறமிருக்க வருவது அப்துல்லாஹ் ஜமாலி என்று அவரது பெயரை உரத்துச் சொன்னவர்கள் மறுபுறம். கலியக்காவிலையின் விவாதத்தில் அவர் காணாமல் போனதைக் கண்டபின்னும் இந்த ஓசைகள் நமக்குக் கேட்டதுதான் ஆச்சரியமாக இருந்தது.ஆனாலும் மாத்தளைத் தவ்ஹீத் ஜமாஅத்தும் அக்குறனைத் தவ்ஹீத் ஜமாஅத்தும் இந்த முயற்சியில் பல எதிர்ப்புக்கு மத்தியில் தளறாது களமிறங்கின.உண்மைக்ககே வெற்றி உலமாக்களுக்கல்ல என்று உறுதியாக நம்பினர்

கருத்துச் சுதந்திரமில்லாத ஒரு வாழ்வை விட மரணம் சிறந்தது.
குர்ஆனையும் சுன்னாவையும் வாதம் ஒருபோதும் மிகைக்காது
என்ற முடிவுடன் 8 இளம் உலமாக்கள் களமிறங்கினார்கள்.5 பேர் விவாதம் புரிவதற்கும் 3 பேர் நூல் மற்றும் கணனி உதவிகளுக்கும் தயாரானார்கள்.

1.மௌலவி முஜாஹித்
2.மௌலவி ஜாபிர்
3.மௌலவி ஸஹ்ரான்
4.மௌலவி அக்ரம் பாரி
5.மௌலவி முஹம்மத் நாஸர்
6;.மௌலவி ஸவ்ராஜ்
7.மௌலவி மஸ்ஊத்
8.மௌலவி ஸில்மி

அவர்கள் தரப்பில்

1.தமிழுலக ஸ{பிகளின் தலைவரும் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான கைருல் பரீயா அரபிக் கல்லுரியின் முதல்வர் ஜமாஅதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி

2.முனாலிரு ஸைலான் மாத்தளை நஜ்முல் உலமா நஜாஹியா அரபுக்கல்லூரியின் முதல்வர் மௌலவி முஹாஜிரீன்

மற்றும் இன்னும் மூன்று உலமாக்களும் விவாதத்தில் களந்துகொண்டனர்.

நமது தரப்பு வாதம்

1.கப்று ஸியாரத் என்ற பெயரில் சிர்க் மற்றும் பித்அத்துகள் நடக்கின்றன
2.இறந்தவர்களுக்கு கத்தம் கொடுப்பது இபாதத் கிடையாது அது பித்அத்தாகும்
3.தொழுகையின் பின்னர் கூட்டு துஆ இஸ்லாத்தில் உள்ளதல்ல.
4.சுபஹ் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் ஆகும்.

இவைகளில் முதலாவதாக கத்தம் பற்றிய தலைப்பே ஒப்பந்தத்தில் அவர்களால் முதன்மைப்படுத்தப்பட்டது.கடைசியில் அவர்களின் பயங்களந்த பிடிவாதத்தால் அந்த ஒரு தலைப்போடே விவாதம் முடிவுற்றது.

நமது சமூகம் 150 கோடிக்கு மேற்பட்டிருந்தும் பலவடிவங்களில் பல கோணங்களில் பிரிந்துபோய் சொந்த மண்ணையெல்லாம் அந்நியர்கள் ஆக்கரமித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையிலும் இவர்கள் இந்த இணைவப்புகளிலும் பி;அத்துகளிலும் இன்னும் பிடிவாதம் காட்டி உம்மத்தைக் கூறுபோடுகிறார்களே இவர்கள் உண்மையை உணரமாட்டார்களா? என்ற கவலையும் இந்தத் தலைப்பில் நாம் விவாதிப்பதற்கான இன்னொருகாரணமாக இருந்தது.

நிலைதடுமாறிய மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி

1. 3ம் 7ம் 40ம் மற்றும் வருடக்கத்தங்கள் அந்த நாட்களில் கொடுக்கவேண்டுமென்பதில்லை அந்த நாட்கள் நாமாக வசதிக்காக உருவாக்கிக் கொண்டவைகள்.
2. இருட்டுக்கத்தம் கிடையாது.
3. உயிருள்ளவர்களுக்கும் கத்தம் கொடுக்கலாம்.(மௌலவி முஹாஜிரீன் மரணிக்கும் முன்னரே அவருக்காக கத்தம் கொடுக்க வாய்ப்புண்டு.
4. கத்த வீட்டில் சிரித்தும் பெற்றோர்களுக்கு அந்த நன்மையை சேர்க்கலாம்
5. இல்லறத்தில் ஈடுபடுவதும் தர்மம் என்பதால் அதன் நன்மையையும் கத்தம் எனலாம்
6. நபிகளார் தன் பிள்ளைகளுக்கோ தோழர்களுக்கோ கத்தம்கொடுக்கவில்லை என்பது உண்மைதான்….
7. உங்களில் மரணிப்பவர்களுக்கு யாஸீன் ஓதுங்கள் என்ற ஹதீஸை இமாம் நவவீ லஈப் என்று சொல்லியிருப்பது உண்மைதான் அவர் அதற்கான காரணம் சொல்லியிருப்பதும் உண்மைதான் ஆனாலும் அதனையும் ஏற்;க மாட்டோம்.
8. பொதுவாகக்குர்ஆன் ஓதுவதன் சிறப்பு பற்றிய ஹதீஸ்கள் மற்றும் தர்மம் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இவைகளை இணைத்துத்தான் கத்தம் என்ற இபாதத்தை உருவாக்கியுள்ளோம்.நேரடியாக கத்தம் என்ற வணக்கத்திற்கு ஆதாரம் இல்லை.
9. நாம் கத்தத்திற்கு ஆதாரமாக வைக்கும் ஹதீஸ்களிலெல்லாம் குறைகள் உள்ளன.மனிதன் என்றால் குறைவரத்தானே செய்யும்.
10. உஸ{லுல் ஹதீஸ் பற்றிய அறியாமைகள்.தடுமாற்றங்கள்

என பல தடுமாற்றங்களால் நிலைகுழைந்துபோன மௌலவி அப்துல்லாஹ் ஜமாலியும் அவரது தரப்பினரும் பலவிதமாக விவாதத்pன் போக்கை திசை திருப்பப்பார்த்தனர்.குறிப்பாக மௌலவி முஹாஜிரீன் அவர்கள் திடீரென "இவர்கள் அல்லாஹ்விற்கு உருவம் கற்பிப்பவர்கள்" என தலைப்பிற்கு சம்பந்தமில்லாத ஒன்றை எறிந்தார்.மடக்கிப்பிடித்துக் கேட்டோம் அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும்? என இந்த விவாத முடிவில் ஒப்பந்தம்போட்டு அத்தலைப்பில் விவாதம் செய்யத்தயாரா?என்று கேட்டோம். விவாத முடிவுவரை எந்த பதிலையும் காணவில்லை.அவர்கள் தரப்பு விவாத்தை ஆரம்பித்து 20 சுற்றுக்கள் பேசியிருந்தனர் நாம் 19 சுற்றுக்களே பேசியிருந்தோம்.எனவே தொகுப்புரையை நாமே துவக்க வேண்டும்.இருந்தும் முடியாது நாம்தான் துவக்குவோம் என பிடிவாதம் பிடித்தனர்.எமது தரப்பின் எல்லா ஞாயங்களைச் சொல்லியும் மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி அவர்களே அதுதான் ஞாயமென அவர்களுக்கு மத்தியில் மெதுவாய்ச் சொல்லியும் முஹாஜரீன் மௌலவி மறுத்துவிட்டார்.அதன் பின்னால் உள்ள நோக்கத்தைப் புரிந்துகொண்ட நாம் அதனையும் விட்டுக் கொடுத்தோம்.

பெரிய பெரிய ஆதாரங்களையெல்லாம் வைப்பார்கள் என எதிர்பார்த்துவந்த மௌலவி ஜமாலி தரப்பினருக்கு மிகப்பெரும் ஏமாற்றமாய் போனதை அவர்களின் பெரும்பாலானவர்கள் முகத்தில் அவதானிக்க முடிந்தது.மௌலவி அப்துல்லாஹ் ஜமாலி எங்களைக் காப்பாற்றுவார் என்று நம்பி வந்தவர்கள் கத்தம் சிலரின் பணவறுமையை நிவர்த்தி செய்ய உருவாக்கப்பட்ட ஒரு பித்அத் என்ற உண்மையை உணர்ந்திருப்பார்கள்.அல்லாஹ் உண்மையைக் காப்பாற்றுவான்.நாம் தவறான கொள்கையில் இருந்தால் நாம் நிச்சயம் நிலைதடுமாறுவோம் தோல்வியுறுவோம் நாம் சரியான கொள்கையில் இருந்தால் வெற்றிபெறுவோம்.இரண்டும் நாம் பேசுவது சத்தியமா?அசத்தியமா? என்பதைப் பொருத்தே என்று நம்பி வந்த நாம் வெற்றிபேற்றோம் அல்ஹம்துலில்லாஹ்.
அதே நேரம் எமது உயிரே போனாலும் நாம் விவாதம் செய்தே தீருவோம் என்ற எமது உறுதியில் நாம் உறுதியாகவே இருந்தோம் ஆதலால் எந்த வதந்திகளாலும் எம்மை அசைக்க முடியாமல் போனது.அதே நேரம் மாத்தளை ஸ{ன்னத் வல்ஜமாஅத் சகோரர்கள் எம்மோடு நல்ல முறையிலும் மரியாதையுடனும் நடந்துகொண்டனர்.கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்த்தனர்.எந்தச் சலனமும் இல்லாமல் விவாதம் இனிதே நிறைவுற்றது. அல்லாஹ் அவர்களுக்கு அருள் செய்யவேண்டும்.

மேலதிக விவரங்களை விவாத சீடியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்

தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள்

எமது ஈமைய் (email) மூலமாக தொடர்புகொண்டு இந்த ஆக்கத்தை அனுப்பிவைத்த சகோதரருக்கு நன்றி.

மூன்றாம அணியொன்று உருவாகலாம்!


நடந்து முடிந்த தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா அணி அதிர்ச்சித் தோல்விக்குள்ளாகியதைத் தொடர்ந்து கஹட்டோவிட அரசியல் அரங்கில் பரவலான ஒரு சோர்வும், மக்களிடையே நம்பிக்கையின்மையும், ஆட்கொண்டிருக்கும் இத்தருணத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் என்ன செயவது என்ற வினாவை சிலர் வெளிப்படையாகவும், பலர் மௌனமாகவும் கேட்டுக் கொள்கின்றனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவைத்தான் மக்கள் இப்பொதுத் தேர்தலும் கைக்கொள்வார்கள் என்று கூறினாலும் இம்முறை அதிரடியான சில மாற்றங்கள் கஹட்டோவிட அரசியற் களத்தில் நிகழ வாய்;ப்புள்ளதாக எதிர்வு கூறப்படுகின்றது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் பொன்சேகாவின் புதிய அனியின் சின்னமான கிண்ணத்திற்கே இம்முறை வாக்களிக்க உள்ளதாகவும் அதற்காக சிரமேற்கொண்டு செயற்பட மூன்றாம் அணியொன்று தோற்றம் பெறவிருப்பதாகவும், இதன் முதற்படியாக இவ்வணியின் அங்குரார்பணத்தை முன்னிட்டு ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹெரத் எம்.பி யை கஹட்டோவிடாவிற்கு வரவழைக்கவுள்ளதாகவும் உத்தியோகப் பற்றற்ற சில தகவல்கள் தெரிவிக்கின்றன. எதுவாயினும் பெரும்பாண்மை வாக்குகள் முஸ்லிம் காங்கிரஸ{க்கே என்ற நிலையை முழுமையாக மாற்ற முடியாது. ஆனாலும் மேற்சொன்னது போன்ற சில மாற்றங்கள் ஏற்படும் என்பதை முழுமையாக நிராகரி;க்கவும் முடியாது.

பாலிகா அதிபரின் சேவை புகழ் பேசப்பட வேண்டும்.

இன்று நாட்டில் எந்தப்பாடசலையை எடுத்துக்கொண்டாலும் ஆசிரியர்கள் இல்லாத குறை எங்கும் பேசப்படுகின்றது.பாடசாலை விழாக்கள் நடைபெறுகின்ற போது அங்கு வருகின்ற பிரதம அதிதிகள் முன்னிலையில் தமது பாடசாலைகளில் ஆசிரியர்கள் போதவில்லை என்றும் குறிப்பாக கணித+விஞ்ஞான ஆசிரியர்களைப்பெற்றுதரவேண்டும் என்றும் அதிபர்களால் வேண்டப்படுவதை நாம் எந்த விழாக்களிலும் கேட்கக்கூடியதாக இருக்கின்றது.

அந்த வகையில் கம்பஹா மாவட்டத்தில் ஒரே ஒரு முஸ்லிம் பெண்கள் பாடசாலையாக கஹடோவிட ''முஸ்லிம் பாலிகா வித்தியாலயம்'' அமைந்திருப்பது இப்பகுதி வாழ் முஸ்லிம்களுக்கு பெருமை தரக்கூடியதொன்றகும்.இப்பாடசாலையின் ஆரம்ப வரலாற்றை படிக்கின்ற போது இங்கு S.S.C.O/L தரம்வரை அன்றைய பெண்பிள்ளைகள் கல்வி கற்று பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.

காலபோக்கில் அல்பத்ரியா வித்தியாலயமும் ஆரம்பிக்கப்பட்டவுடன் அங்கு வளங்கள் பெருகி மகாவித்யாலயமாக மாற்றப்பட்டது.பெண்கள் பாடசாலையில் கட்டடங்கள் போதாமல் போகவே அங்கு தரம் ஐந்து உடன் நிறுத்தி ஆறாம் வகுப்பினை அல்பத்ரியா மகாவிதியாலத்தில் தொடர நேரிட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் ஒன்றுமே அறியாத பட்சிலம் குழந்தைகலை பிரித்து படிப்பித்து வயது வந்த பெண்பிள்ளை கலை ஆண்களும் பெண்களுமாக சேர்த்து வைத்துப்படிப்பிப்பதுமாகும்.

இங்கு பெண்களுக்கென்று தனியான பாடசாலையொன்று இருக்கின்ற போது நாம் ஏன் அப்பாடசாலையை உயிர்ப்பித்து அதில் தனியாகப் பெண்கள் படிக்கவழி செய்யக்கூடாது?இன்றைய்ய காலத்தின் தேவையாக இப்பாடசாலையில் ஆறாம் வகுப்பையும் தொடரலாம்.பெண்கள் தனியாஹப்படிப்ப்பதால் சமூக ஷீர்கேடுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் வாய்ப்பளிக்கலாம் என்ற தன்னம்பிக்கையுடன் இப்பாடசாலையை மீண்டும் உயிர்பிக்க அரும்பாடு பட்டு உழைத்தனர் சில பெற்றோர்கள்.ஒரு சமூகத்தினர் எழுச்சியும் வீழ்ச்சியும் அவர்களின் ஒழுக்கத்தில் தான் தங்கியுள்ளது என்ற உண்மையை உணர்ந்து அதற்காக உழைத்த இவர்களின் முயற்சி வீண்போகவில்லை.

2010 இவ்வாண்டில் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை தொடர்ந்து கொண்டிருப்பதையும் காணக்கூடியதாய் உள்ளது.அல்ஹம்துலில்லாஹ்.

இப்பாடசாலையில் பெண்கள் மாத்திரம் கல்வி கற்க வேண்டுமென நல்லுள்ளக்கொண்ட பெற்றோர்கள் விரும்பின்னாலும் கல்வித்தரத்தில் எந்தக்குறையுமில்லாத அல்-பத்ரியா மகாவிதியாலத்தை இரண்டாம் தரமாய் மதிக்கவோ, போட்டி பொறாமைப்படவோ ஒருவருமே விரும்பவில்லை. இந்தபெற்றோர்களின் ஆண்குழந்தைகள் அப்பாடசாலையில் கட்கின்றபோது இரண்டையும் இருகங்கலாகவே பாதுகாத்து வருகின்றனர்.

பாலிகா வித்யாலய ஆசிரியர்களின் முயற்சியும் ஊக்கமும் இம்மானவிகளுக்கு கல்வி வளர்ச்சிக்கு உந்து சக்தியாய் அமைந்து விட்டது. ஏனெனில் மாணவிகளின் இறுதியாண்டு தேர்வு புள்ளிகளை பார்கின்ற போது வகுப்பில் மூன்றாம் நிலையிலுள்ள மாணவியின் மொத்தப் புள்ளிகள் 995இல் நிற்கிறது.

இங்கு கணித-விஞ்சான பாடத்திற்கு நிரந்தர ஆசிரியர் இல்லாவிடினும் பாடவிதானங்கள் உரிய காலத்தில் முடிக்கப்பட்டு பயிற்சிகள் நிறுத்தத்துடன் பாடங்கள் போதிக்கப்பட்டுள்ளன. மிக அண்மையில் தரம் வாய்ந்த ஓர் அதிபரை பெற்றுக்கொண்ட இந்த ''பாலிகா முஸ்லிம் வித்யாலயம்'' நிரந்தரமான கணித+விஞ்சான ஆசிரியரைப்பெராதது மக்கள் மத்தியில் குறைபோல் தென்பட்டாலும் பரீட்சை பெறுபேறுகள் நிறைவைத்தருகின்றன. தகைமையுடன் திறைமையும் கொண்டவராக வந்து சேர்ந்த அதிபர் ஆபீசுடன் தன்னை நிருதிக்கொல்லாது கணித விஞ்ஞான பாட ஆசிரியரின் வெற்றிடத்தை தன்னால் நிரப்பிட முடியும் என்ற துணிவோடு 7-8-9 ஆம்வகுப்புகளுக்கு சிறந்த முறையில் கற்பித்து வருகிறார்.

ஆம், அதிபர்கள் இப்படித்தான் இருக்கவேண்டுமா????

நம்மைத் தொடர்புகொண்டு இந்த ஆக்கத்தை அனுப்பிய சகோதரிக்கு நன்றி. மேலும் உங்களிடமிருந்து இதுபோன்ற ஆக்கங்களை எதிர்பார்க்கின்றோம்.

ஜனாஸா அறிவித்தல்

பூகொடயைச் சேர்ந்த S.L.M. ஸித்தீக் அவர்கள் காலமானார். அன்னார் கஹடோவிட மர்ஹூம் நஸார், ஹஸீனா, அப்துல் அலி, மற்றும் ஓகடபொள உவைஸ் ஆகியோரின் தந்தையும், கஹடோவிட ஹூதா, ஜெமீன், பாதிமா, ஓகடபொளவைச் சேர்ந்த சாமிலா ஆகியோரின் மாமனாருமமாவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று முற்பகல் 11.00 மணிக்கு பூகொடயில் நடைபெறும்.

தகவல் மருமகன் ஜெமீன்.