கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

அறிவுடையோர் மேடைகளில் பேசட்டும்

நேற்று நமது ஊரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஒரு சகோதரர் கோமாளித்தனமாக வாய்க்கு வந்தவாறு பேசியுள்ளார். பூகொடையிலிருந்து கஹட்டோவிடாவினூடாகச் செல்கின்ற குழாய் நீர் வினியோகத்திலிருந்து கஹட்டோவிடாவிற்கு நீர் வழங்க வேண்டும் என்றும் ஊருக்கு நீர் தேவையில்லாவிட்டாலும் சும்மாவேனும் ஓர் நீர் இணைப்பை ஏற்படுத்தி வைக்க வேண்டும் எனவும், ஊரை ஊடறுத்துச் செல்வதால் நமக்கு அதில் உரிமையுண்டு எனவும் அந்த சகோதரர் சற்று காரசாரமாக சத்தமிட்டிருக்கிறார். அவரின் இந்த வித்தியாசமான ஆதங்கத்திற்கு என்ன காரணம் என்பது புரியாத புதிராகவே உள்ளது. என்றாலும் இது போன்ற வார்த்தையாடல்கள் இனமுறுகல் போன்ற பேராபத்துக்களை ஏற்படுத்த வல்லது என்பதை அந்த சகோதரர் புரிந்து கொள்ளல் வேண்டும். அறிவு பூர்வமாக சிந்திக்காது உணர்ச்சி வசப்படுவதால் விளைந்த கேடுகள் ஏராளம். இந்தியாவில் தலைவிரித்தாடும் காவேரி நீர்ப்பிரச்சினைக்கு இன்றளவும் தீர்வு காண முடியாமைக்கு இது போன்ற பீரங்கிக் கூச்சல்களும் பெரும் பங்கு வகித்துள்ளது என்பதை அந்த சகோதரர் தெரிந்து கொள்ளல் வேண்டும். கஹட்டோவிடாவில் நீர் இணைப்பை ஏற்படுத்துமளவுக்குப் நீர்ப் பஞ்சமில்லை. ஊரிற்குள்ளும் முடியுமான அளவிற்கு நீர் வினியோகத் திட்டம் செயற்படுத்தப் படுகின்றது. எனவே மேடைகளில் பேசுபவர்கள் சிந்தனைத் தெளிவுடனும், அரசியற் புலமையுடனும், தூரநோக்குடனும் பேசக் கற்றுக் கொள்ளல் வேண்டும். முடியாது போனால் தகுதியானவர்களிற்கு பேச இடமளித்தல் வேண்டும். கஹட்டோவிடாவிற்கு வெளியிலிருந்து நீர் வநியோகம் வழங்கத் தேவையில்லை அல்லது கூடாது என்று நாம் கூறவில்லை. குறிப்பிட்ட சகோதரர் இவ்விவகாரத்தை முன்வைத்த விதம் தவறானது என்பதையே நாம் இத்தால் உணர்த்துகின்றோம்.

0 comments:

Post a Comment