கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

சீரற்ற காலநிலை, வெள்ளம், ஆகியவற்றினால் பாதிக்கப்ட்டுள்ள மக்களுக்கான நிவாரண உதவிகோரல்.

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

இலங்கையில் தற்போது பல பிரதேசங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக பல சகோதர சகோதரிகள் மிகுந்த அல்லற்படுவதை அனைவரும் அறிவீர்கள். இம்மழையினால் தினமும் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், நோயாளிகள், இளைஞர்கள், மாணவர்கள் என்று பலர் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பலர் பொது இடங்களில் தஞ்சம் பெருகின்றனர். இவர்களுக்கு உணவு, உடை, மருந்து பொருட்கள், குடி நீர் போத்தல் மற்றும் பல அத்தியவசிய பொருட்கள் மிக அவசியமாகவுள்ளன.

எனவே அவசரமாக உங்களால் முடிந்த உதவியை பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு வழங்குங்கள். அதற்கான ஒரு சந்தர்ப்பம் எமது ஊர்மக்களையும் நாடி வந்திருக்கிறது. இந்த ஏற்பாட்டை நல்லுள்ளம் கொண்ட எமது ஊா்சகோதர்களுல் ஒரு குழுவினர் ஏற்பாடுசெய்திருப்பதாக அறியக்கிடைக்கிறது. இவர்களின் வேண்டுகோள் இன்று பிரதான பள்ளிவாயல்களின் ஒலிபெரிக்கிகள் மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்ஷாஅல்லாஹ் இவர்கள் நாளை அஸர்தொழுகையின் பின்னர் இந்நிவாரன உதவிக்காக உங்களை நாடி வர ஏற்பாடுகள் தயார்செய்யப்பட்டுக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசேடமாக எமது மக்களிடம் நிவாரண உதவியாக எதிர்பார்க்கப்படும் உதவிப் பொருட்கள்  அரிசி, பால்மா, சீனி, அப்பிகாச கொபி போன்றவை இருப்பதாக இவர்கள் தெரிவிப்பதை காணக்கூடியதாக இருந்தது. மேலே குறிப்பிட்ட பொருள்கள் அல்லது பண உதவிகளை அன்மையில் உள்ள பள்ளிவாசல்களோடு தொடபுகொண்டு கையளிக்கலாம் என்பதையும் அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்கள்.

“பேரீத்தம் பழத்தின் ஒரு கீற்றை(தர்மம் செய்வதைக்)கொண்டாவது உன்னை நரக நெருப்பில் இருந்து பாதுகாத்துக்கொள்” என நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பாளர்: அதிய்யுப்னு ஹாதம்(ரலி); நூல்:புகாரி

சகோதரி சம்ஸுல் ஹிதாயா காலமானா்

கஹடோவிடாவைச் சோ்ந்த  சகோதரி சம்ஸுல் ஹிதாயா  நேற்று இரவு காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் பஜுலா அவர்களின் அன்புத்தாயும், அல்ஹாஜ் ஜவுஸி, மற்றும் ஜிபிரியா ஆகியோரின் சகோதரியும், சிராஸ், நாஸர், ஈனாஸ், பாரிக், ரவுபர் ஆகியோரின் சாச்சியும் ஆவார்.  அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 31.12.2014) முற்பகல் 11.00 மணியளவில் ஜாமிஉத் தௌகீத்  ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். 


. اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்

இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் இன்று காலை மாயமானது.
இந்தோனேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற ஏர் ஏசியா விமானம் 162 பயணிகளுடன் மாயம்
அந்நாட்டு போக்குவரத்து அமைச்சக அதிகாரியான ஹாதி முஸ்தபா கூறுகையில்;

இன்று அதிகாலை 5:20 மணிக்கு சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, காலை 6:17 மணியளவில் ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது என கூறியுள்ளார். இந்த விமானத்தில் 155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களும் இருந்ததாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

விமான கட்டுப்பாட்டு மையத்துடன் விமானத்தின் தொடர்பு விடுபடுவதற்கு முன், தனது வழக்கமான பாதையில் போவதை விட்டு, வேறு பாதையில் போக அனுமதி கோரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விமானம் தொடர்பை விட்டு விலகும் போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே பறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் வந்து சேர வேண்டிய இந்த விமானம் தனது இலக்கை இன்னும் சென்றடையாததால், விமானம் தாமதமாக வருவதாக சிங்கப்பூர் விமான நிலைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு பேருவளையில் சந்திரிகா, ஹிருனிகா மீது தாக்குதல் முயற்சி!

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் பொதுக் கூட்டம் ஒன்று நேற்று  இரவு பேருவளை கடற்கரை மைதானத்தில் நடைபெற்றது.
Beru Att 02
குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர ஆகியோரது வாகனங்கள் மீது சிலர் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவம் நேற்று இரவு 11:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. என்றாலும் தற்பொழுது நிலைமை சீரடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது;
கூட்டத்தில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அங்கிருந்து வெளியேறும் போது ஐக்கிய தேசிய கட்சியின் பேருவளை அமைப்பாளர் இப்திகார் ஜமாலின் வீட்டிற்கு முன்னால் ஆளுமை கட்சி ஆதரவாளர்கள் சிலர் சந்திரிகா மற்றும் ஹிருனிகா ஆகியோரது வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடாத்தியுள்ளார்.
குறித்த தாக்குதலில் இப்திகார் ஜமால் தாக்கப் பட்டுள்ளதுடன், முன்னாள் நகர சபை உறுப்பினர் டஹ்லான் மன்சூர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மற்றும் ஹிருனிகா ஆகியோருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை. (ஸ )
Beru Att 01

Beru Att 04
Beru Att 03
DailyCeylon

(வீடியோ இணைப்பு) பல்டி அடிப்பதாக கூறிவிட்டு, ஏமாற்றிய இளம் அரசியல்வாதி (வீடியோ இணைப்பு)

கட்சித் தாவல் ஒன்று தப்பாகி போன சம்பவம் ஒன்று இன்று நடந்துள்ளது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை சேர்ந்த தெகிவளை – கல்கிஸ்ஸ நகரசபை உறுப்பினர் சவித்ர டி சில்வா என்பவர் இன்று கொழும்பில் நடந்த பொது வேட்பாளர் ஆதரவு ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் , பொது வேட்பாளரை ஆதரிக்க வந்துள்ளதாக கூறி அறிவிப்பு மேசைக்கு வந்தவுடன் தான் ஒருபோதும் மகிந்த ராஜபக்ஸவிற்கு துரோகம் செய்ய மாட்டேன் என்னால் பொது வேட்பாளரை ஆதரிக்க முடியாது என்ற தொனியில் கூறியுள்ளார்.


ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க உட்பட ஐ.தே.க முக்கிய உறுப்பினர்கள், பலதரப்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்ட நிகழ்விலே அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

ஐ.தே.க கட்சி பலி வாங்கும் கட்சி, இங்கு ஜனநாயகம் இல்லாமல் உள்ளது, யுத்தத்தை வென்று நாட்டை காப்பற்றியவரை குழியில் தள்ள முயற்சிக்கின்றது. அரசின் அபிவிருத்திகளை விமர்சனம் செய்வதிலே குறியாக உள்ளது என ஏகபட்ட குற்றச்சாட்டுகளை முன் வைத்து விட்டு தான் உட்கார்ந்து இருந்த கதிரையையும் தள்ளி விட்டு எழுந்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு கருத்து தெரிவித்த சுஜீவ சேனசிங்க, ” நன்கு தயார் செய்து அனுப்பி உள்ளனர் என தெரிவித்தார்.”

இந்த சம்பவத்தின் முழு வீடியோ.


madawala news.

ரவூப் ஹக்கீமின் வீட்டுக்கு வந்த பசில் ராஜபக்ஸ, தற்போது அலரி மாளிகையில் ஹக்கீம்

ரவூப் ஹக்கீமுடைய இல்லத்தில் 22-12-2014 இரவு 9.45 மணியளவில் அதிரடியாக உட்புகுந்த அமைச்சர் பசில் ராஜபக்ஸ, ரவூப் ஹக்கீமுடன், ஜனாதிபதி மஹிந்த ரராஜபக்ஸ முக்கிய பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் பசில் ராஜபக்ஸவுடன், ஜனாதிபதி மஹிந்தவை சந்திப்பதற்காக உடனடியாக தனது வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.

தற்போது அலரி மாளிகையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும், ரவூப் ஹக்கீமுக்கும் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறுவதாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து கிடைக்கப்பெற்ற  மிகவும் நம்பத்தகுந்த தகவல்கள் மூலம் அறியவருகிறது.

இதேவேளை இதுகுறித்து மேலதிகமாக அறிந்து கொள்வதற்காக ஜப்னா முஸ்லிம் இணையம், தற்போது சில நிமிடங்களுக்கு முன் ரவூப் ஹக்கீமுடைய கையடக்க தொலைபேசிக்கு 3 முறை Call எடுத்தபோது, மறுபக்கம் மணி அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் விடை அளிக்கப்படவில்லை.

jaffnamuslim

அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டு பறந்தார் ,,,

அரசாங்கத்திற்குள் காணப்படும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கருத்து முரண்பாட்டு மோதல்கள் காரணமாக ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இன்னும் இரண்டு வார காலமே எஞ்சியிருக்கும் நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

இப்படியான சூழலில் ஏனைய அமைச்சர்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பிரசாரங்களில் கலந்து கொள்ளாதிருப்பதால், அவரது தேர்தல் பிரசாரம் ஸ்தம்பித்துள்ளது.

அரசாங்கத்தில் இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சை வழங்க வேண்டாம் என ஜனாதிபதிக்கு பசில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருந்தார்.

அதனை மீறி, ஜனாதிபதி, திஸ்ஸ அத்தநாயக்கவை சுகாதார அமைச்சராக நியமித்த பின்னர், பசில் ராஜபக்ஷ முழுமையான அமைதியாகியுள்ளார்.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு சுகாதார அமைச்சர் பதவியை வழங்கினால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் பாரிய அதிருப்தி ஏற்படக் கூடும் என பசில் ராஜபக்ஷ எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாடுகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இருந்தே ஈடுபட்டு வந்ததுடன் தேர்தல் பிரசார அலுவலகங்களை திறந்ததுடன் நடவடிக்கை காரியாலங்களையும் திறந்து நேரடியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

srilnkamuslim

தனது தாயின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவின் பிரபல பாடகி நிக்கோலா ரிச்சி தன்னை இஸ்லாத்தில் இணைத்து கொண்டார்t

காவிகளும் காலிகளும் தங்கள் மத த்திர்கு ஆள் பிடிக்க வெறிபிடித்து அலைந்து கொண்டுள்ளனர்

அவர்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இஸ்லாத்தை நன்கு அறிந்துள்ள ஒருவரை கூட இந்த மார்கத்தில் இருந்து மாற்றிவிட முடியாது

அதே சமயம் உலகில் உள்ள சிந்தனையாளர்களும் பிரபல்யமானவர்களும் இந்த இஸ்லாத்தை நோக்கி விரைந்து வந்து கொண்டள்ளனர்

அப்படி அண்மையில் இஸ்லாத்தை அகமனதோடு ஏற்று கொண்டவர்களில் ஒருவர் தான் அமெரிக்காவை சார்ந்த நிக்கோலா ரிச்சி என்ற பாடகி


பிரபல பாடாகியாக திகழ்ந்த அவர் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தார் இஸ்லாம் அன்பின் மார்க்கமாக அமைதியின் மார்க்கமாக உண்மையின் மார்க்கமாக இருப்பதை அவர் தனது ஆய்வின் போது உணர்கிறார்

இந்த மார்கம் பற்றிய உண்மைகளை மறைத்து அந்த மார்க்த்தை மீடியாக்கள் தவறாக சித்திரிப்பதை நினைத்து கவலை கொள்கிறார்


தாம் இஸ்லாத்தை ஆரயந்த தாகவும் அது உண்மை என்பதை அறிந்து கொண்டதாகவும் அதனால் அந்த மார்கத்தில் தன்னை இணைத்து கொள்ள போவதாகவும் தனது குடும்பத்திடம் தெரிவித்தார்

இதை அவரது தாய் கடுமையாக எதிர்த்தார் தாயின் எதிர்பையும் மீறி தன்னை அவர் இஸ்லாத்தில் இணைத்து கொண்டு தனது இசை தொழிலுக்கும் விடை கொடுத்து ஹிஜாபுடன் தன்னை ஒரு முஸ்லிம் பெண்ணாக மாற்றி கொண்டு விட்டார் நிக்கோலா ரிச்சி

தனது பெயரையும் ஆயிதா என்று மாற்றி கொண்டு விட்டார்
அமெரக்காவில் இருந்து வெளியேறி புனித தலமான மக்கா மதினாவை அடுத்திருக்கும் பகுதிகளில் தான் வாள விரும்புவதாகவும் அவர் கூறியிருக்கிறார்/

தீவிர வாத த்தை வேரறுக்கும் மார்க்கம் இஸ்லாம்!!
இஸ்லாத்தில் இணைந்த பிரபல அமெரிக்க பாடகி
நிக்கோலா ரிச்சி அதிரடி பேட்டி
=======================================
அறிவு ஜீவிகள் என்ற பெயரில் வலம்வரும் பல மூடர்கள் தீவிரவாத த்தோடு இஸ்லாத்தை இணைத்து பேசும் காட்சிகளை நாம் கண்டு வருகிறோம்


இந்த மூடர்களுக்கு மரண அடி தரும் வித த்தில் அமெரிக்க சகோதிரி நிக்கோலா ரிச்சி யின் பேட்டி அமைந்திருக்கிறது

நிக்கோலோ ரிச்சி அமெரிக்காவின் பிரபல பாடகியாவார் அண்மையில் இவர் இஸ்லாத்தில் இணைந்தார்

அவர் இஸ்லாத்தில் இணைந்த தர்கான காரணத்தை தனது பேட்டியில் விளக்கியுள்ளார்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தகப்பிர்கு பிறகு அமெரிக்க மீடியாக்கள் மட்டும் இன்றி உலக மீடியாக்கள் அனைத்துமே இஸ்லாத்தை தீவிரவாதமாகவும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும் சித்தரித்து

இதனை தொடர்ந்து தான் நான் இஸ்லாத்தை ஆரய தொடங்கினேன்

இஸ்லாத்தை ஆராய்ந்த போது தான் மீடியாக்களின் பொய்முகத்தை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது
மனித நேயத்தை அடிப்டையாக கொண்டு அமைந்துள்ள ஒரு மார்கத்தை எப்படி இந்த மீடியாக்களால் தீவிரவா தத்தோடு தொடர்ப்பு படுத்த முடிகிறது என எண்ணி வருந்தினேன்

மனிதாபிமானமும் சகிப்பு தன்மையும் சகோதரத்துவ உணர்வும் நிறைந்த மார்க்கமாக இஸ்லாத்தை நான் கண்டதால் என்னை நான் இஸ்லாத்தில் இணைத்து கொண்டேன் இவ்வாறு அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்
Thanks : உண்மைதமழன். & சையது அலி பைஜி 

நிட்டம்புவயில் கிளைமோர் குண்டுகள் மீட்பு, மைத்திரிபால சிறிசேன இலக்கு வைக்கப்பட்டாரா..?

நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள மாயானம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கிளைமோர் குண்டுகள், பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து மறைத்து வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எதிரணி அரசியல் தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொது வேட்பாளரின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று கம்பஹா நகரசபை மைதானத்தில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்படவிருந்தது.

அவரது மாமியாரின் இறுதிக் கிரியைகள் நேற்று வெலிவேரிய பிரதேசத்தில் நடைபெறவிருந்த காரணத்தினால், கூட்டம் பிற்போடப்பட்டது.

நிட்டம்புவ, தெபஹெர மாயானத்தில் மாலை நேரத்தில் மாடுகளை கட்ட சென்ற ஒருவர் வழங்கிய தகவலை அடுத்தே அங்கிருந்த கிளைமோர் குண்டுகள் மீட்கப்பட்டன.

குறித்த நபர் தினமும் அந்த மயானப் பகுதியில் மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். எவ்வாறாயினும் மீட்கப்பட்ட கிளைமோர் குண்டுகள் பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டன.

தீவைக்கபட்ட மேடையில் ஆரம்பமாகியது மைத்திரிபால ஆதரவு பிரச்சாரக் கூட்டம்

காலி – வதுரம்ப பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்த பொது வேட்பளர் மைத்திரிபால ஆதரவு பிரச்சாரக் கூட்டத்திற்காக அமைக்கபப்ட்டிருந்த மேடையை நேற்று இரவு ஒரு கும்பல் தீவைத்தது அறிந்ததே.

பிரச்சார மேடைக்கு இதனால் கடும் சேதம் ஏற்பட்டதுடன் பிரச்சார ஒலி அமைப்புக்காக ஏற்பாடு செய்யப்படிருந்த லொறியும் தீ வைக்கபட்டிருந்தது.
அதனால் இன்று பிரச்சாரக் கூட்டம் நடைபெறாது என எதிர்பார்த்திருந்த நிலையில், இன்று மாலை எராளமான பொதுமக்கள் வருகையுடன் குறிப்பிட்ட பிரசாரக்கூட்டம் அதே தீவைக்கபட்ட மேடையில் ஆரம்பமாகியுள்ளது.

madawalanews

பெஷாவர் பள்ளி கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம்

பாகிஸ்தானில் உள்ள பெஷாவர் பள்ளி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 132 குழந்தைகள் உட்பட 141 பேர் பலியான சம்பவத்திற்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம். | படம்: ராய்ட்டர்ஸ்.
பெஷாவர் பள்ளியில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான்கள் கண்டனம். | படம்: ராய்ட்டர்ஸ்.
அப்பாவிக் குழந்தைகளைக் கொல்வது இஸ்லாமுக்கு விரோதமானது என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.

வடக்கு வாஜிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதலுக்கு பதிலடியாகவே ராணுவப் பள்ளியில் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தாலிபான் அமைப்பு கூறியிருந்தது.

இதனையடுத்து ஆப்கான் தாலிபான்கள் தனது கண்டனத்தில் கூறும் போது, “ஆப்கான் இஸ்லாம் எமிரகம் அப்பாவி குழந்தைகள், மற்றும் மக்களைக் கொல்வதை எதிர்க்கிறது. 

அப்பாவி மக்கள், குழந்தைகளை வேண்டுமென்றே கொல்வது இஸ்லாமிய கொள்கைகளுக்கு விரோதமானது. ஒவ்வொரு இஸ்லாமிய அரசும், இயக்கமும் அடிப்படை சாராம்சத்தின் படி நடக்க வேண்டும். 

ஆப்கான் இஸ்லாமிய எமிரகம், இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு, குழந்தைகளை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திஹிந்து.

புதிய ஹலால் லிஸ்ட் இணைப்பு.. மஞ்சீ பிஸ்கட், கீல்ஸ் ஸொசேஜஸ், கொத்மலே ஐஸ்கிறீம், கிஸ்ட் ஜெலி எல்லாம் ஹலால் சான்றிதழுக்கு திரும்பியாச்சு.!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கொழுந்துவிட்டு எரிந்த இனவாதத்தின் ஒரு முக்கிய
கரும்புள்ளியாக உள்ள பல சம்பவங்களில் முக்கியம்
வாய்ந்த ஒன்று ஹலால் சான்றிதழுக்கு எதிரான
போராட்டமும். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா வசமிருந்த
ஹலால் சான்றிதழ் முறைமை ஒழிக்கப்பட்டதும் என்பது அறிந்ததே.
image
அதன் போது பல நிறுவனங்கள் தங்கள் ஹலால் சான்றிதலையும் தம் பொருட்களில் இருந்து நீக்கியதும் அறிந்ததே.

அதன் பின்னர் இலங்கையில் HALAL ACCREDITATION COUNCIL
நிறுவனம் ஹலால் சான்றிதழ் வழங்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள
அதேவேளை ஹலால் சான்றிதலையும் தம் பொருட்களில் இருந்து நீக்கிய பல நிறுவனங்கள் மீண்டும் ஹலால்
சான்றிதழ் பெற்றுள்ளது இந்த மாத புதிய ஹலால்
அட்டவணையில் இருந்து காணக்கூடியதாக உள்ளது.

பதிய டிசம்பர் மாத ஹலால் லிஸ்ட் இதோ. முழுப் பட்டியலை பார்க்க..
Click Here http://www.hac.lk/december2014

இந்தோனேசிய மண் சரிவு: உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் தொகை 26 ஆக உயர்ந்துள்ளதாகவும் 82 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள்  இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
மத்திய ஜாவாவில் ஜெம்லங்  கிராமத்தில் இடம்பெற்ற மேற்படி மண் சரிவில் புதையுண்டவர்களை தேடும் பணியில் மீட்புப்பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
அடை மழை காரணமாக தேடுதல் நடவடிக்கை தாமதமடைவதாக கூறப்படுகிறது.
கனரக மீட்பு வாகனங்கள் வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் மீட்பு பணியாளர்கள்  தமது வெற்றுக்கரங்களைப்பயன்படுத்தி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மீட்பு நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் படை வீரர்கள் உட்பட்ட  1000 க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசிய  ஜனாதிபதி யொகோவிடோடோ அனர்த்தம் இடம்பெற்ற இடத்தைஇன்று  ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார். 
இந்த மண் சரிவால் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன.  சுமார் 600 பிரதேச வாசிகள் தற்காலிக தங்குமிடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டின் தேசிய அனர்த்த முகவர் நிலையம் தெரிவித்தது. 
17000 தீவுகளை  உள்ளடக்கிய இந்தோனேசியாவில் வெள்ள அனர்த்தம் இடம்பெறும் மலைப்பிரேசங்களில் பெருந்தொகையான மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
அந்நாட்டின் சனத்தொகையில் அரைப்பங்கினர் மண்சரிவு அபாயமுள்ள இடங்களில் வாழ்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இரு இன அழிப்பாளர்களின் நடுவினில் ஒரு நீதியமைச்சர்!

இலங்கை ஆசியாவின் ஆச்சர்யம் என்பதைப் பல வகைகளில் நிரூபித்து வருகிறது. அதில் இறுதியாக இணைக்கப்பட வேண்டிய ஆச்சரியம் தான் இரு இன அழிப்பாளர்களின் நடுவினில் ஒரு நீதியமைச்சர் அரசியல் புரிவது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி கிடைக்கும், கரையோர மாவட்டம் பரிசீலிக்கப்படும் போன்ற மு.காவின் கனவுகளுக்கு இடம் தரப்போவதில்லையென்பதை கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் பின் வந்த காலங்களிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் தெளிவாக்கியிருந்த போதும் இல்லை கிடைக்கும் என்று இன்னும் நம்பும் அப்பாவித் தலைவன் தான் நன்கறிந்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்காத மனநிலையை வேறு பல காரணங்கள் கொண்டு விபரிக்கிறார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமது தற்போதைய நிலைப்பாட்டை அடிப்படையில் இரண்டு காரணிகள் கொண்டு நியாயப்படுத்த முனைகிறது.
முதலாவது: அவசரப்பட்டு முடிவெடுக்க தயாரில்லை என்பது. சரி, அப்படியானால் எதற்காக காத்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழ வேண்டும் அல்லவா? ஆம், அந்தக் கேள்விக்கான பதில் என்னவென்றால் கடந்த இரு தடவை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவும் வழங்கப்பட்டு நிறைவேற்றப்படாத, ஒருக்காலமும் நிறைவேற்றித்தரும் எண்ணமில்லாத தமது கரையோர மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதாகும்.

கண்துடைப்புக்காக உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்ட கருமலையூற்றுப் பள்ளிவாசலை மக்களுக்காகத் திறந்து விடுவதுதான் மு.காவுக்கு அரசு வழங்கும் மரியாதையாக இருக்குமாக இருப்பின் மு.கா நெருக்குதல் தரும் காலத்தில் துரும்பாகப் பயன்படுத்துவதற்குத்தான் இவ்வாறான பள்ளியுடைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன எனும் கோணமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகும்.

எனவே, மு.காவின் இன்று முடிவு நாளை முடிவு எனும் அறிவிப்புகளை அரசிடம் எதையோ சாதித்துக்கொள்ள எடுக்கும் முயற்சிகளாகப் பார்க்கலாமே தவிர இவற்றில் மக்கள் நலன் எங்கிருக்கின்றது என்பதை ஒவ்வொருவரும் சிந்தித்துக்கொள்ளலாம்.

இரண்டாவது: கட்சி உடைந்து விடும் எனவே அதைப் பாதுகாத்துக்கொள்ள சாணக்கியமாக தலைவர் ‘கேம் விளையாடுகிறார்’ எனும் ஒரு விளக்கம். நாட்டு மக்களின் நாடித்துடிப்பு தெரியாத பாரமரத் தலைவர்களால் தான் தன் சுற்று வட்டாரமே உலகம் என்று கருத முடியும். அவ்வகையில் தன்னைச் சுற்றியுள்ள பதவி வெறியர்களின் முகத்திரையைக் கிழித்து சமூகத்திடம் அவர்களை அடையாளம் காட்டக் கூடிய மிக அருமையான இச்சந்தர்ப்பத்தையும் தவற விடுவதில் சாணக்கியம் இருப்பதாக ரிசானா நபீக் எனும் அபலைப் பெண்ணின் தலை துண்டிக்கப்பட்டபோது சமூகத்துக்கு ஒரு ஆறுதல் வார்த்தையேனும் கூறாது சுப்பர் சிங்கரில் போய் ஒலி – ஒளி பார்த்த தலைவர் கூறுவதை சமூகம் நம்பாது.

எல்லோரும் நம்புவது போல பசீர் சேகுதாவுதுதான் கட்சியின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையென்றால் தேர்தலில் நின்று வாக்குகளைப் பெற்று வெல்லும் சக்தியில்லாத காலவதியாகிப்போன பசீர் சேகுதாவுதுக்குப் பயந்து முடிவெடுக்க ஒதுங்குவது என்பது சிறு பிள்ளைத்தனமானது மாத்திரமன்றி தற்போது திறந்து விடப்பட்டிருக்கும் கிழக்கு மாகாண களத்தில் அசாத் சாலி அள்ளிக்கொண்டு செல்லும் ஆதரவின் அளவை வைத்தே பசீர் சேகுதாவுதின் பங்காளிகளுக்கு மக்கள் எவ்வகை தீர்ப்பளிப்பார்கள் என்பதை கணித்துக்கொள்ளலாம். ஆனாலும் , இங்கு அரசியல் தலைவர்களுக்கு மக்கள் மீது நம்பிக்கை வருவதை விட எதையாவது காட்டி அல்லது கொடுத்து மக்களை மாக்களாக்கிவிடலாம் எனும் நம்பிக்கையே இருப்பதனால் தான் வெற்று வேட்டுக்களுக்கெல்லாம் பயப்படும் நிலையாக இருக்கிறது.

டாக்காவுக்கு அந்த நாள் , அந்த நேரம் போய் தான் சங்கக்காரவை கட்டிப்பிடிக்க வேண்டும் என்பது தெரிந்த தலைவர் இந்த நாட்களில் இன்னும் பேரம் பேசிக்கொண்டிருப்பதன் பின்னணியில் சமூக நலன் இருக்குமாக இருந்தால் அந்த சமூக நலனை இந்த நாள் வரை அரங்கேற்றியும் காட்டியிருக்க வேண்டும். அதற்காக திராணியுள்ள தலைமையாக இருந்திருந்தால் மாற்றம் எப்போதோ வந்திருக்கும்.

இப்போது மு.காவின் தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் எஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை எமக்குத் தெரியாத ஆயிரம் அங்கே இருக்கும். அந்த ஆயிரத்தையும் பார்த்துத் தானே தலைவர் முடிவெடுப்பார் எனும் ஒரு வகையான நம்பிக்கை. அப்பாவித் தொண்டர்கள் அவ்வாறு நினைப்பதில் எந்தத் தவறுமில்லை. ஏனெனில் அவர்கள் தலைமையை நம்பியிருக்கிறார்கள், மதிப்பு வைத்திருக்கிறார்கள். ஆனால் புத்திசாலித் தொண்டர்கள் ஒரு படி மேலே போய் தாம் நினைக்கும் அந்த ஆயிரத்தில் எது தனக்குக் கூட பயனில்லாத சமூக நலன் கொண்டது என்று சிந்திப்பான்.

அதை சிந்திக்கத் தெரிந்தவன் அந்த சமூக நலன்கொண்ட விடயங்களில் தேசிய முஸ்லிம் சமூகத்தைக் கருத்திற்கொண்டு இந்த ஜனாதிபதியின் கூட்டில் கடந்த ஒன்பது வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸ் எதைச் சாதித்திருக்கிறது? சாதிக்கவில்லை என்றும் ஒரு அளவீடு செய்து பார்ப்பான். இது இரண்டுக்கும் மேலாக ஒருவன் நாளை தொப்பியையம் செருப்பையும் அணிந்து கொண்டு தாடியையும் கொஞ்சம் அதிகமாக வளர்த்துக்கொண்டு அப்பாவியாக வந்து நாரே தக்பீர் என்று தலைவர் சொல்லட்டும் அல்லாஹு அக்பர் என்று சொல்வோம் எனக் காத்திருந்தால் அது அவன் தலைவிதி.

அவன் போன்றவர்களை ஆயிரம் ஞானசாரக்கள் வந்தாலும் திருத்தமுடியாது. எனவே, இப்போது உயிரோடிருக்கும் ஞானசாரவோடு தலைவர் கூட்டு சேர்ந்திருப்பதில் அந்த அடிமட்டத் தொண்டனுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால், ஏனைய முஸ்லிம் சமூகத்துக்கு பாதிப்பிருக்கிறது. ‘முஸ்லிம்’ என்ற பெயர் தாங்கிய கட்சியாக தேசிய ரீதியில் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தாதவகையில் இயங்கும் என்ற எதிர்பார்ப்பு, அற்ப சொற்ப ஆசையெல்லாம் இருக்கிறது.

காத்தான்குடிப் படுகொலையின் சூத்திரதாரி கருணா அம்மானோடு கூட்டு சேர்ந்த போது ஆச்சரியப்பட்ட இலங்கை முஸ்லிம் சமூகம், அந்தக் கூட்டில் கிழக்கு மாகாண முஸ்லிம்களே வாயடைத்துப் போயிருந்த நிலையில் செய்வதறியாது மௌனமாக இருந்தார்கள். ஆனால் ஞானசாரவின் கூட்டு அவ்வாறில்லை என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த இருப்பையும், உரிமைகளையும் கேள்விக்குறியாக்கி அளுத்கமயில் உயிர்களைப் பலியெடுத்த பாதகனை எதிர்க்க வலுவில்லாத முதுகெலும்பில்லாத நிலையை ஏற்கனவே ஊவா மக்கள் நிராகரித்து தக்க பாடம் புகட்டினார்கள். மேல் மாகாண மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்குப் பேராதரவு வழங்கி மூன்று முஸ்லிம்களை வெற்றிபெறச் செய்தார்கள்.

முஸ்லிம் காங்கிரசிலோ அகில இலங்கை மக்கள் காங்கிரசிலோ வென்றவர்கள் தமது தனிப்பட்ட செல்வாக்கு மூலம் வென்றவர்கள். கட்சிக்காக அவர்கள் வெல்ல வைக்கப்பட்டிருந்தால் பதுளையிலும் மு.கா கையைக் காட்டிய ஆட்டோ சாரதிகள் மற்றும் புது ரக அரசியல்வாதிகளை மக்கள் வெல்ல வைத்திருப்பார்களே?

இது புரிபவனுக்குப் புரியும். புரிந்தவனுக்கு மேல் மாகாண சபை தேர்தல் காலத்தில் அவ்வப்போது கதை – வசனம் எழுதப்பட்டு பரிமாறக்கொள்ளப்பட்ட ஞானசார – ஹகீம் கோழிச்சண்டையின் காட்சிகளும் நினைவுக்கு வரும். அன்று ஹகீம் சொன்னதெல்லாம் உண்மையென்றால் இன்று ஒரே தளத்தில் ஞானசாரவுடன் நிற்கத்தான் முடியுமா என சிந்திக்கத் தெரிந்தவனுக்குப் புரியும்.

இத்தனையையும் தடுப்பது அந்தப் பதவியும் அதன் சுகபோகமும் எனும் நிலையில் ஆசியாவின் ஆச்சர்யமாக இரு இன அழிப்பாளர்களின் நடுவில் ஒரு நீதியமைச்சர் நலமாக நீதியைக் காப்பாற்றுகிறார் எனும் கேவலமான வரலாறும் எழுதப்பட்டுக்கொண்டிருக்கிறது.

முடிவை நீங்கள் எடுங்கள் என்று இவர் தூக்கி வீச, இல்லை தலைவா நீங்களே எடுங்கள் என்று திருப்பி வீசிய உறுப்பினர்கள் புத்திசாலிகள். ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் இங்கு தலைவன் தான் தடையென்பது!

sonakar

பள்ளிவாசல் முற்றாக தகர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் முஸ்லிம்களிடம் கையளிப்பு

திருகோணமலை வெள்ளைமணல் பகுதியில் அமைந்திருக்கும் கருமலையூற்று பள்ளிவாசலை இராணுவத்தினர் பொது மக்களிடம் இன்று கையளித்துள்ளனர். இருப்பினும் சுமார் 400 வருடங்கள் பழைமை வாய்ந்த குறித்த பள்ளிவாசலின் கட்டிடமானது முற்றாக தகர்க்கப்பட்டுள்ளதாக இன்று அங்கு விஜயம் செய்த பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் எம்.ஐ.சுபைர் தெரிவித்தார். 



Breaking News: அதுருகிரி பகுதியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வீழ்ந்ததில் நால்வர் பலி

அதுருகிரி பகுதியில் இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான விமானமொன்று வீழ்ந்ததில் அப்பகுதியைச் சோந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்று அதிகாலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Plane crash in Athurugiriya
விமானப்படைக்குச் சொந்தமான என்32 ரக விமானமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நால்வர் உயிரிழந்துள்ளதாக பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் நடந்தது என்ன?

மு.காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நேற்றிரவு நடந்தது. இந்தக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் – மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற தொனியில் தமது கருத்துக்களை முன்வைத்திருக்கின்றனர்.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அன்வர் – மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பதை உரத்த குரலில் கூறியிருக்கின்றார். அதேபோன்றுதான் மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலும் அரசுக்கு சார்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீரின் கருத்தும் அரசுடன் கட்சி இணைய வேண்டும் என்பதாக இருந்தது. அதுமட்டுமல்ல கட்சியின் முக்கியஸ்தர்களை விலைகொடுத்து வாங்கும் முயற்சியிலும் இவர் ஈடுபட்டு வருவதாகக் கூறுகின்றார்கள்.

மாகாணசபை உறுப்பினர் தவமும் – மஹிந்தவுக்கு ஆரவு வழங்க வேண்டும் எனும் தொனியில் பேசியுள்ளார். இருந்தாலும், “கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவோம். ஆனால், மைதிரிக்கு ஆதரவு வழங்குவதாயின் அதற்குரிய பலமான காரணங்களை கட்சி முன்வைக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும், கட்சியின் பிரதிப் பொருளாளருமான ஜவாத் – நேற்றைய உயர்பீடக் கூட்டத்தில் மிகவும் உணர்சிவசப்பட்டு பேசியதாக அறிய முடிகிறது.

“குர்ஆன், ஹதீஸ் மற்றும் மக்களின் நியாயமான விருப்பத்துக்குக் கட்டுப்பட்டு முடிவுகளை எடுப்பதற்கு கட்சித் தலைமை முன்வரவேண்டும்.
மஹிந்தவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்கிற அழுத்தங்கள் ஏதாவது தலைவருக்கு இருந்தால் அதை இந்த இடத்தில் தலைவர் கூறுங்கள். உங்களோடு நாங்கள் இருப்போம்.

மக்களின் மனநிலைக்கு இணங்கவே நாம் செயற்பட வேண்டும். அந்தவகையில், நான் எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கே எனது ஆதரவை வழங்கவுள்ளேன்” என்றார் ஜவாத்.

இதன்போது குறுக்கிட்ட மாாணசபை உறுப்பினர் தவம்; “ஜவாத் இப்படி கூறியதற்காக – அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.
அப்போது தவத்தை பார்த்து ஜவாத் இப்படிக் கூறினார்.

“தலைவர் அஷ்ரப் அவர்களை சுடுவதற்கு ஒரு தோட்டா இல்லையா என்று கேட்டவர்களும், தலைவர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின்போது – பட்டாசு கொழுத்தி மகிழ்ந்தவர்களும், நோன்பு திறக்க வந்த தலைவரை ஊருக்குள் வராமல் தடுத்தவர்களும் கட்சிக்குள் துள்ளுவது எனக்கு மிகவும் கவலை தருகிறது”

தவம் கதைக்கக்கூடாது என்று சீறிப்பாய்ந்த ஜவாத் ஹாபிஸ் நஸீரும் கதைக்க முடியாது. இவர்கள் கட்சிக்கு செய்த துரோகங்களை மக்கள் மறக்கமாட்டார்கள் என்றார். அமைச்சர் மன்சூர் கதைக்கலாம். அவர் உண்மையான கட்சிக்காரன் மற்றவர்கள் எல்லாம் பதவிக்காக வந்து ஒட்டியுள்ள ஒட்டுன்னிகள்.

மாகாண சபை உறுப்பினர் தவம் ஆரம்பத்தில் அரசுக்கு சார்பாகவும் பிற்பகுதியில் அரசுக்கு எதிராகவும் கருத்துக்கூறியவர் இன்று மீண்டும் அரசுக்கு ஜால்ரா அடிப்பது இவர்களுக்கு அரச தரப்பில் ஏதோ கிடைத்தவிட்டது என்று மக்கள் பேசிக் கொள்வது உண்மையாகிவிட்டதாக கூட்டத்தில் கலந்து கொண்ட உயர்பீட உறுப்பினர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
இன்று தவம் அறிக்கைகளையும் விடுகின்றார். அதிலும் கதைகளைப் புரட்டிச் சொல்லுகின்றார்.

கிழக்கு மாகாண சபையின் வரவு – செலவுத் திட்டம் சபைக்கு வந்தபோது, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – தவத்தை தொலைபேசியில் அழைத்து, ‘இந்த வரவு – செலவுத் திட்டத்துக்கு மு.கா. உறுப்பினர்கள் ஆதரவு வழங்கக் கூடாது. உடனடியாக சபையிலிருந்து வெளியேறுங்கள்’ என்று உத்தரவிட்டார்.

அப்போது தவம்; ‘அப்படி வெளியேறினால், ஆளுநர் எதுவும் பிரச்சினைப்படுத்த மாட்டாரா சேர்..’ என்று மு.கா. தலைவரிடம் இழுத்திருக்கிறார்.

”நமது ‘ட்ரான்ஸ்பர்’ கடிதம் ஒன்றைக் கூட கணக்கில் எடுக்காத ஆளுநரைப்பற்றி நமக்கென்ன கவலை. உடனடியாக சபையிலிருந்து வெளியேறுங்கள்” என்று – கடுமையான குரலில் உத்தரவிட்டு விட்டு, தொலைபேசி அழைப்பை – ஹக்கீம் துண்டித்து விட்டார்.

இதன் பிறகும் தவம் விடுவதாக இல்லை. மு.கா. தலைவருக்கு தொலைபேசி அழைப்பெடுத்தார். ”லீடர், இதுதான் உங்கள் முடிவா? எதற்கும் உங்கள் முடிவை கொஞ்சம் மீள்பரிசீலனை செய்யுங்கள்” என்று கேட்டிருக்கிறார் தவம்.

தலைவருக்கு பத்திக் கொண்டுவர, ”முடிவில் மாற்றமில்லை. உடனடியாக கொழும்புக்கு வாருங்கள்” என, வெட்டொன்று துண்டிரண்டு பாணியில் சொல்லி விட்டு, மீண்டும் தொலைபேசியை அடித்து வைத்தார் ஹக்கீம்.
இதன்பிறகுதான், வேறு வழியில்லாமல் – கிழக்கு மாகாண சபையிலிருந்து வெளியேறும் முடிவை – நண்பர் தவம் எடுத்தார்!

- எம்.பாரீஸ் (நன்றி: மப்றூக்)
sonakar