கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

குழந்தைகளின் மனதில் ஜாஹிலியத்தை புகுத்தும் பாலர்பாடசாலைகள் எமது சமூகத்தின் சாபக்கேடா?

கடந்த சில தினங்களாக வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சிருவர் பாலர்பாடசாலைகளின் விளையாட்டுப்போட்டிகள், பயிற்சி அரங்கேற்றங்கள் ஆங்காங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்த அரங்கேற்றங்களுடன் நைடைபெறுகின்ற எமது கலாச்சாரத்துக்கு முரணான பலவிடங்களை நாம் ஏலவே பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறோம். ஆனால் இந்த சீரழிவுகள் பற்றி இம்முறை சற்று வித்தியாசமாக ஆங்காங்கே சந்து பொந்துகளில் எல்லாம் பொதுமக்களின் குரல்கள் ஒலித்திக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.


“எவனைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறெவரும் இல்லையோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ‘வீணான செய்திகள்’ என்பது  இசை கலந்த பாடலையே குறிக்கிறது.” என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறுகிறார். (இப்னு அபீஷைபா-21130)  இப்படி இஸ்லாம் சொல்லியிரக்க எமது ஊரில் இஸ்லாமிய வழிகாட்டல்களை போதிக்க வந்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தின்  வழிகாட்டலில் இயங்கும் ஒரு பாலர்பாடசாலையின் நிலைமை (?) வாா்த்தைகளால் சொல்லமுடியாது. அப்படிப்பட்ட சினிமா விபச்சாரிகளின் பாட்டை ஒலிபரப்பிக்கொண்டிருந்தது. இதை எந்த வித கூச்ச சுபாவமும் இல்லாம் அனைவரும் ரசித்துக்கொண்டிருந்தார்கள். இது இஸ்லாத்தை வாழவைக்க வந்த ஒரு இஸ்லாமிய இயக்கத்தின் நிலை என்றால் மற்றவர்களின் நலை எப்படியிருக்கும்.

மனிதன் இறந்துவிட்டால் மூன்று விஷயங்களைத் தவிர அவனுடைய அனைத்து அமல்களும் அவனைவிட்டு துண்டிக்கப்பட்டு விடுகிறது. (அவை) நிரந்தர தர்மம், பயன்தரும் கல்வி, அவருக்காக துஆச் செய்யும் சாலிஹான குழந்தை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி); ஆதாரம் : முஸ்லிம்)
நபி (ஸல்) அவர்களின் எத்தனை அழகான ஒரு அறிவுரை! நாம் நம்முடைய குழந்தைகளை மார்க்க போதனைகளுடன் வளர்த்து இருந்தால், நாம் இறந்தபிறகு, நமக்காக நம் குழந்தைகள் கேட்கக்கூடிய துஆக்கள் மூலம், மறுமை நாள்வரை நமக்கு நன்மைகள் வந்துக்கொண்டே இருக்கும் என்பதில் ஏதாவது மாற்றுக் கருத்து உண்டா?

பெற்றோர்களின் பங்கு இப்படியிருக்க எமது பாலர்பாடசாலைகளில் கல்வி பயிலச் செல்லும் பிஞ்சு உள்ளங்களில் பதியவைப்பது இந்த ஜாஹிலிய சித்தார்ந்தங்கள்தான்.  நம்முடைய குழந்தைகளிடம் ‘சிறந்த’ (சுவர்க்கவாசிகள் என நபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் கூறப்பட்ட) சஹாபாக்களின் பெயர்கள் கேட்கப்பட்டால், பதில் கூறக்கூடியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்! ஆனால் ‘டொப் டென்’ சினமாவோ அல்லது பாடலோ கேட்கப்பட்டால் பதில் கூறாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்!  இந்த நிலைமைகள் தான் எமது சமூகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதைப் போல் தென்படுகிறது. இதற்காக பெருமைப் படக்கூடிய பெற்றோர்களும் நம்மிடையே இருக்கின்றனர் என்பதுதான் இதிலே வேதனையான விஷயம்! இதுபோன்ற தவறான செயல்களில் ஆர்வமூட்டுவதன் மூலம், நம்முடைய குழந்தைகளை நாமே படுகுழியில் தள்ளியவர்களாக ஆகிவிடுகிறோம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எனவே, குழந்தைகளை நல்ல முறையில், இஸ்லாமிய வழிமுறைகளில், வளர்க்க வேண்டிய பொறுப்பு கண்டிப்பாக ஒவ்வொரு பெற்றோருக்கும் அதேபோன்று ஆசிரியர்களுக்கும் இருக்கின்றது என்பதை மறந்து விடவேண்டாம். அவ்வாறு வளர்த்து விட்டால், நாம் நம்முடைய பொறுப்பு மற்றும் அமானிதத்தை நிறைவேற்றி விட்டதோடு அல்லாமல், நம்முடைய குழந்தைகள் நமக்கும் மற்றும் நம் சமுதாயத்திற்கும்
நம் குழந்தைகளுக்கு இஸ்லாமிய அடிப்படை விஷயங்களான பெற்றோர்களைப் பேணுதல், நேர்மை, உறவினர்களுடன் நடந்துக்கொள்ளும் முறை, அமானிதங்களைக் கடைப்பிடிப்பது, தொழுகையை ஜமாஅத்துடன் நிறைவேற்றுவதுடன் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த முறையில் குடித்தல், உண்ணுதல், பேசுதல், போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த அடிப்படையில் வளர்க்கப்பட்ட குழந்தைகள், பெரியவர்களான பிறகு அவர்களின் செயல்பாடுகள், அவர்களுக்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக அமைவதோடல்லாமல் இறைவன் தன் திருமறையில் கூறியிருப்பது போல நம்மையும் நம்முடைய குழந்தைகளையும் நரகநெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொண்டவர்களாக மாறிவிடலாம்.

அன்பான ஆசான்களே, பெற்றார்களே வளரும் பிஞ்சுகளிற்கு முதலில் இஸ்லாத்தைக் கற்றுக் கொடுங்கள். செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கோசையைப் போன்று இஸ்லாமிய போதனைகளை ஆக்கவேண்டாம். அது விடயத்தில் நீங்கள் முன்மாதிரிகளாகவும் இருங்கள். இன்ஷா அல்லாஹ் அறிவிற் சிறந்த நல்லெழுக்கமுள்ள மாணவச் செல்வங்களைக் கொண்ட ஊரைக் காண்பீர்கள். ஒரு சமூகத்திலுள்ளவற்றை அவர்களாக மாற்றிக் கொள்ள முயலாவிட்டால் அல்லாஹ்வும் மாற்ற மாட்டான் (அல் குர்ஆன்)

இம்தியாஸ் பாக்கீர்மாக்கார் உரையாற்றியபோது, எதிர்ப்பை வெளியிட்ட இலங்கைக்கான எகிப்திய துர்துவர்

இன்று கொழும்பு ஆவண நூலக கேட்போர் மண்டபத்தில் பலஸ்தீன் இலங்கை நற்புறவுச் சங்கத்தின் இணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் சட்டத்தரணி இம்தியாஸ் பாக்கீர் மார்கார் தலைமையில் ஜக்கிய நாடுகளில்  பலஸ்தீனுக்கு உலக ஒறுமைப்பாடு தினமான இன்றைய 29-11-2014 நிகழ்வை முன்ணிட்டு நிகழ்வு நடைபெற்றது. 

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த கலந்து கொண்டார். ஜ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பிணர் ருவான் விஜயவர்த்தன, ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்த கேரத், பலஸ்தீன் தூதுவர்  சுகையிர் ஹம்துல்லாஹ் சலாட் ஆகியோறும் உரையாற்றினார்கள். அரபுநாடுகளின் தூதுவர்களும்  இந் நிகழ்வில் கலந்து கொண்டணர். 

இந் நிகழ்வின்போது இம்தியாஸ் பாக்கீர்மாக்கார் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது எகிப்திய நாட்டின் இலங்கைத் துர்துவர் அவரது பேச்சை இடைமறித்து  தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து விவதத்தில் ஈடுபட்டார். இந் நிகழ்வில்  பலஸ்தீன முஸ்லீம்களுக்காக எகிப்து நாடு தமது எல்லையை அகதிகள் செல்ல முடியாமல் முடி வைத்துள்ளார்கள் என்ற பேச்சுக்கு தமது எதிர்ப்பை தெரிவித்தார். பலஸ்தீன காசா மக்கள்  பார்காப்புத்தேடி எகிப்து  செல்லும் மக்களுக்காக தமது பாதையை  முடிவைத்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டதையடுத்தே அவர் விவாதத்தில் ஈடுபட்டார். 

எகிப்தில் 6000 பலஸ்தீனியர்கள் தங்கி உள்ளனர். அடுத்த 1000பேர் இந்த எல்லையை ஊடக எகிப்துக்கு சென்றுள்ளனர். என எகிப்திய தூதுவர் வாதாடினாh. சிரேஸ்ட ஊடகவியாளார் லத்தீப்பாருக் பலஸ்தீனர்களுக்காக அரபு நாடுகள் என்ன செய்தது, இந்த இலங்கை மக்களுக்கு இருக்கின்ற அக்கரை அரபுநாடுகளுக்கு இல்லை.  என்ற கேள்விகளை கேட்டு விவாதத்தில் ஈடுபட்டதை காணக்கிடைத்தது.

ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பிணர் விஜித்த கேரத் - இந்த நாட்டின்  தலைவர் பொய்யளவில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை விட்டு  இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் பலஸ்தீன நாட்டுக்காகவும் அந்த மக்களுக்காகவும்  இலங்கை பாடுபட்டு அவர்களது விடிவுக்காக உலகிலும் உள்ளுரிலும் குரல் கொடுக்கும் ;தீர்மாணத்தை வெளிநாட்டுக் கொள்கையில் ஏற்படுத்த வேண்டும். வெறுமனமே பேச்சளவில் பலஸ்தீனத்துக்கு  நிதி வழங்கினோம். பாதை திறந்தோம் என்று செல்வதைவிட்டு இந்த நாட்டின் வெளிநாட்டுக் கொள்கையில் சகல கட்சிகள் மக்கள் பிரநிதிகள் ஊடகாக அதனை அமுல்படுத்தவேண்டும். வெளிநாட்டுக் கொள்கையில் இஸ்ரேவேல் நாடுக்கும் சகல செயற்பாட்டுக்கும் ;இந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது.  நாங்கள்  முஸ்லீம் நாடு  என்ற இனப்பாகுபாடு இல்லாமல் அநியாகமாக அழிக்கப்படும் அப்பாவி மக்களுக்கும் சிறுவர்களுக்கும் அந்த உயிர் இனங்களுக்காகவே நாம் பாடுபடுவதற்கு சகலரும் முன்வருதல் வேண்டும். ;அதற்காக ஜே.வி.பி குரல் கொடுக்கத் தயார் என உரையாற்றினார்.

(அஷ்ரப் ஏ சமத்)

மேலும் இரு அமைச்சர்கள் போகிறார்கள்..ஜீவன் – ஆறுமுகம் தொண்டமான் ? பரபரப்பில் கொழும்பு

அமைச்சரவை அந்தஸ்துள்ள இரு அமைச்சர்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர்கள் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களுடன் மிக பிரபலமான இரண்டு பெண் மாகாண சபை உறுப்பினர்களும் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க உள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் நேற்றிரவு தெரிவித்தன.
அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ள இரண்டு அமைச்சர்களில் ஒருவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவினால் 1994 ஆம் ஆண்டு கொழும்பு மாவட்டத்தின் ஊடாக அரசியலுக்கு அழைத்து வரப்பட்டவர். குறித்த அமைச்சர் குமாரதுங்க குடும்பத்தின் நெருங்கிய உறவினர் எனவும் கூறப்படுகிறது.
maithripala_sirise


மற்றைய அமைச்சர் மலையக அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் ஏற்கனவே ஆளும் கட்சியின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டு வருகிறார்.
கொழும்பு மாவட்ட அமைச்சர் பொது எதிர்க்கட்சியில் இணையும் போது அவருடன் இணைந்து இவரும் பொது எதிர்க்கட்சியில் இணைவர் என கூறப்படுகிறது.
அரசாங்கத்தில் இருக்கும் அதிருப்தியாளர்கள் படிப்படியாக பொது எதிர்க்கட்சியில் இணைவார்கள் என பொது எதிர்க்கட்சியின் பலமிக்க பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஜனாதிபதி அரசாங்கத்தில் இருந்து விலக உள்ளவர்களின் பட்டியலை எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கியிருந்தார். எனினும் அந்த பட்டியலில் உள்ளவர்களின் விபரங்கள் இறுதி நேரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கசிந்தது.
இதனையடுத்து பட்டியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித் தனியாக தொடர் கொண்டு அவர்களின் குறைகளை போக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உத்தரவாதம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
puttalamtoday

கஹட்டோவிட பிரதான பாதையில் தௌஹீத் மஸ்ஜிதை ஊடறுத்துச் செல்லும் பாதையின் ஒரு பகுதி செப்பனிடல் பணிகள் ஆரம்பம்.

கஹட்டோவிட பிரதான பாதையில்  தௌஹீத் மஸ்ஜிதை ஊடருத்துச்செல்லும் பகுதி தற்பொழுது திருத்தற் பணிகள்  ஆரம்பிக்கப்பட்டு கொன்கிரீட் இடப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஐ.தே.க பிரதேச சபை உறுப்பிணர் சகோதரர் நஜீம் நானாவின்  பண்முகப்படுத்தப்பட்ட நிதியின் உதவிடன் அவருடைய மேற்பார்வையில் இந்த செப்பனிடல் பணிகள் தற்போது (27.11.2014) நடந்துகொண்டிருக்கின்றன.

195X50  சதுர அடி நீள, அகல எல்லைகளைக்கொண்டதாக இப்பாதை கொன்கிரீட் இடப்பட இருப்பதாக தகவல்கல் தெரிவிக்கின்றது. சகோதரா் நஜீம் நானா அவர்களுக்கு ஊர்மக்கள் சார்பாக எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இதுபோன்ற இன்னும் பல சேவைகள் அவா்மூலம் நடைபெற எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆக் கேட்போம்.






அஸ்ஸலாமு அலைக்கும் என பேச்சை ஆரம்பித்த, மைத்திரியின் உருக்கமான வேண்டுகோள்..!

இருண்ட ஆட்சியில் இருந்து நாட்டை விடுவிக்கவே அரசை விட்டு வெளியேறியுள்ளேன். நெல்சன் மண்டேலா மகாத்மாகாந்தியின் கொள்கையினை பின்பற்றி இந்த நாட்டில் ஜனநாயகத்தினை வென்றெடுப்பேன் என உறுதியளித்துள்ள மைத்திரிபால சிறிசேனஜனாதிபதி மகிந்தவுடன் போட்டியிட அதிகார பலமோ பணபலமோ என்னிடம் இல்லை. மக்களின் பலத்தினை நம்பியே களத்தில் குதித்துள்ளேன். மக்கள் என்னை கைவிடவேண்டாம் எனவும் தெரிவித்தார்.

பொது வேட்பாளராக களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று ஐக்கிய தேசிய கட்சியின் காரியாலயத்தில் அக்கட்சியின் மாவட்ட மாகாண அமைப்பாளர்களை சந்தித்திருந்தார். இதன் போதே ஐக்கிய தேசிய கட்சியின் மேடையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோல் தனது உரையினை ஆரம்பிக்கும்போது வணக்கம், ஆயுபோவன், அஸ்ஸலாமுஅலைக்கும் என மூவின மக்களையும் பிரதி நிதித்துவப்படுத்தி தனது பேச்சை ஆரம்பித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்;

நான் நீண்ட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்துள்ளேன். நான் பண பலத்திலும் அரசியல் செல்வாக்கிலும் அரசாங்கத்திற்கு வரவில்லை. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். மக்களின் பசி, வறுமை, துன்பம் அனைத்தையும் உணர்ந்தவன். இன்று வரையில் நான் அவ்வாறே வாழ்ந்துக் கொண்டிருக்கின்றேன். இன்று நான் பொது வேட்பாளராக களமிறங்கியவுடன் மக்கள் என்னை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காரனா அல்லது ஐக்கிய தேசியக்கட்சி காரனா எனப் பார்க்கின்றனர். இதில் மக்கள் சிந்திப்பதற்கு ஒன்றும் இல்லை. இப்போது உருவாக்கியிருப்பது ஜனநாயக்கூட்டணி. அதன் வேலைத்திட்டம் மிகவும் பரந்தது. கடந்த காலங்களில் அரசாங்கம் கொடுத்த பொய் வாக்குறுதிகளை தகர்த்தெறிய ஜனநாயகத்தினை வென்றெடுக்க உருவாக்கியுள்ள புதிய கூட்டணி.

இலங்கையில் இன்று இருண்ட யுகம் நிலவுகின்றது. அன்று இந்தியாவில் தென்னாபிரிக்காவில் இவ்வாறான இருண்ட யுகம் நிலவியது. அன்று நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசம் சென்று பின்னர் தென்னாபிரிக்காவை ஜனநாயக நாடாக மாற்றியிருந்தார். மகாத்மா காந்தி இந்தியாவில் அஹிம்சைப் போராட்டத்தின் மூலம் விடுவித்தார். நான் மகாத்மாவோ அல்லது நெல்சன் மண்டேலாவோ அல்ல. ஆனால் நான் அவர்களின் கொள்கையினை பின்பற்றி இலங்கையினை சூழ்ந்துள்ள அராஜக ஆட்சியில் இருந்து நாட்டிற்கு விடுதலையினை பெற்றுக்கொடுப்பேன்.

2015ம் ஆண்டு ஜனநாயக ஆட்சிக்கான ஆண்டாக அமைய வேண்டும். மக்கள் தமது உரிமைகளை வெற்று மூவின மக்களும் ஒற்றுமையுடன் வாழும் அரசாங்கமாக உருவாக வேண்டும். அதற்கு எமது கூட்டணி துணை நிற்கும். இன்று போராட்டம் ஏற்பட்டுள்ளது. மகிந்த ராஜபக் ஷ என்று சர்வாதிகளுக்கும் ஜனநாயக வாதிகளுக்குமே. எனவே இந்த ஆட்சியினை வென்றெடுக்க சகலரும் சகல கட்சிகளும் எம்முடன் இணைய வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த ஆட்சியினை மாற்றியமைக்க வேண்டும். இதுவே தனித்தனி கொள்கைக்கொண்ட புதிய கூட்டணி. இதில் 100 நாட்கள் அனைவரும் ஒன்றிணைந்து பொது கொள்கையில் போராட வேண்டும். பின்னர் தத்தமது சுய கொள்கையில் செயற்பட முடியும்.

மகிந்த ராஜபக் ஷவை வீழ்த்த வேண்டிய பொது வேட்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சகலருக்கும் தெரிந்திருக்கும். மஹிந்தவின் பணப்பலம் அதிகாரப் பலம் அனைவரையும் அழித்துவிடும்.  அவரைப்போல் பணபலமோ ஆயுத அதிகார பலமோ என்னிடம் இல்லை. நான் பொது வேட்பாளராக களமிறங்கியது எனது குடும்பத்தின் உயிரை பணயம் வைத்தே. எனவே இன்று நான் என்னை பொது மக்களிடம் ஒப்படைத்துள்ளேன். எனக்கான பாதுகாப்பினை இனிமேல் பொது மக்கள் தான் வழங்க வேண்டும். இம்முறை என்னை ஆதரிக்க வேண்டியது நீங்கள் தான். எனவே என்னையும் எனது மனச்சாட்சியினையும் நம்பி எனக்கு வாக்களியுங்கள்.

இம்முறை நாம் தவறவிடக்கூடாது. ஜனநாயகத்தையும் உரிமைகளையும் வென்றெடுக்க சகல மக்களும் என்னுடன் கைகோர்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Jaffnamuslim

விண்டோஸ் Install செய்யும்போது windows Can't Not be Installed on dive 0 Partition 3. ( Show Details ) இவ்வாறு வருதா ?




ஹாய் Frds இன்று நாம் பார்க்க இருக்கு பதிவு இப்ப கொஞ்ச நாள எல்லோருக்கும் வரும் பிரச்சினை.

நீங்கள் விண்டோஸ் 7 அல்லது 8 Install செய்யும்போது  இவ்வாறு ஒரு Error Msg வரும் ( படத்தில் ) உங்களுடைய HDD Delete செய்துவிட்டு திரும்பவும் New கொடுத்து Creat செய்தால் அது Create ஆகாது எதசும் ஒரு Msg வரும் அதுக்கு இந்த வழிமுறையை பின்தொடருங்கள் நிச்சயம் வெற்றியளிக்கும் 


windows Can't Not be Installed on dive 0 Partition 3. ( Show Details) இது மற்றும் இல்லை இன்னும் இது போல சில பிரச்சினைகள் வரும் அதுக்கு இந்த வழிமுறை பின்தொடருங்கள் 

இது எவ்வாறு செய்வது என்று ஆரம்பம் முதல் முடிவு வரை சொல்லுறன் பார்த்து பயன்பெறுங்கள் 

இவ்வாறு வந்தால் முதலில் நீங்கள் Install செய்யும் இடம் அதன் CD போடு Boot பண்ணும் பொது முதலில் வருமே Instaal என்று அதன் 

அந்த இடத்தில வைத்து உங்களுடைய Laptop ல Fn + Shift + F10 இதனை கொடுத்தால் இவ்வாறு வரும்

 
இவ்வாறு வரும் அதில் இவ்வாறு Type செய்து கொள்ளுங்கள் 

X:\Sources>disckpart  ( Enter Pannungka )


அதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் அதில் இவ்வாறு Type பண்ணுங்கள் 

X:\Sources>list    ( Enter Pannungka ) 


அதுக்கு பிறக்கு கீழ பாருங்க 


அதுக்கு பிறக்கு Select Disk 0 Enter Pannungka 


அதுக்கு பிறக்கு Clean என்று அடிங்க அப்பரம் Enter பண்ணுங்க 


அவ்வளவுதான் இப்ப Poi New கொடுத்து Create பண்ணுங்க எந்த வித பிரசினையும் இருக்காது 

www.aayiramarivom.com/

அதிகாரத்தை கைப்பற்றியவுடன், ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம் - சந்திரிக்கா குமாரதுங்க

ராஜபக்ஷக்களின் பயில்களை வெளியில் எடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

இன்றைய 25-11-2014  தினம் மைத்திரிபால சிறிசேன ஹொரகொல்ல பண்டாரநாயக்க சமாதிக்குச் சென்றிருந்த வேளை சந்திரிக்காவும் அவர்களுடன் விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, அங்கிருந்த ஊடகவியலாளர்கள் ஜனாதிபதி கருத்து குறித்து கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்கையிலேயே சந்திரிக்கா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கட்சியை விட்டுச் செல்லும் நபர்களின் பயில் தாங்கள் வசம் இருப்பதாகவும் ஆனால் அதனைக் கொண்டு பழிவாங்கும் நோக்கம் தமக்கு இல்லை என்றும் அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க மேடையில் தெரிவித்தார்.

தான் ஆதரவு வழங்கும் குழு அதிகாரத்தை கைப்பற்றியவுடன் ராஜபக்ஷக்களின் பயில்களை இழுப்போம். இப்போதைக்கு அது போதும். இது குறித்து இனி கேள்வி கேட்க வேண்டாம்´ என தெரிவித்துள்ளார்.

Jaffnamuslim 

இஸ்லாம் தாய்மையை மிக உயர்வாக மதிக்கிறது, பெண்ணியவாதிகளுக்கு அது புரியாது - எர்துகான்

பெண்களை ஆண்களுக்கு நிகராக நடத்த முடியாது என்று துருக்கி பிரதமர் ரிசப் தய்யிப் எர்துகான் குறிப்பிட்டுள்ளார். பெண்ணியவாதிகள் தாய்மையை நிராகரிப்ப தாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ஸ்தன்பு+லில் மாநாடொன்றில் உரையாற்றிய எர்துகான், "பெண்களையும் ஆண்களையும் ஒரே நிலையில் வைக்க முடியாது. அது இயற்கைக்கு முரணானது" என்றார்.

இஸ்லாத்தில் தாய்மைக்கு அளிக்கும் மதிப்பை பெண்ணியவாதிகள் புரிந்துகொள்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். எர்துகானின் கருத்து அவரது ஆதரவாளர்களால் வரவேற்கப்படும்போதும் மிதவாதிகள் அவரின் கருத்துகளுக்கு தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர். இது நாட்டை அபாயகரமான இலக்கை நோக்கி இட்டுச் செல்வதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

முன்னதாக கருக்கலைப்பு மற்றும் மகப்பேற்று அறு வைச் சிகிச்சை முறைக்கு எதிர்ப்பு வெளி யிட்டிருந்த எர்துகான், பெண்கள் மூன்று குழந்தைகளை பெற்றெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

ஸ்தன்பு+ல் நகரில் நடந்த பெண்களின் மாநாடொன்றிலேயே அவர் இந்த புதிய கருத்தை வெளியிட்டுள்ளார்.

"தொழில் புரியும் இடத்தில் ஒரு ஆணையும் கர்ப்பமுற்ற ஒரு பெண்ணையும் ஒரே இடத்தில் வைத்து நடத்த முடியாது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஆண்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் பெண்களால் செய்ய முடியாது. ஏனென்றால் அது அவர்களது மென்மையான தன்மைக்கு எதிரானதாகும். எமது மதம் தாய்மையை மிக உயர்வாக மதிக்கிறது. பெண்ணியவாதிகளுக்கு அது புரியாது. அவர்கள் தாய்மையை நிராகரிக்கின்றனர்" என்றார் எர்துகான்.

சம இடம் என்பதை விட பெண்கள் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நீதிதான் இனவாதம், யு+த எதிர்ப்பு மற்றும் பெண்களின் பிரச்சினை உட்பட உலக பிரச்சினைகளுக்கு தீர்வாகவும் இருக்கும் என்று ஸ்தன்பு+ல் மாநாட்டில் எர்துகான் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய பின்னணி கொண்ட துருக்கி அரச தலை வரின் கருத்து அடிக்கடி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இம்மாத ஆரம்பத்தில் அவர் வெளி யிட்ட கருத்தில், கிரிஸ்டோபர் கொலம்பஸ{க்கு 300 ஆண்டு களுக்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவை கண்டு பிடித்ததாக குறிப்பிட்டார்.

எர்துகானின் 11 ஆண்டு ஆட்சியில் துருக்கி பிராந்தியத்தின் தீர்க்கமான சக்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சகோதரி சித்தி நஸீமா இன்று காலமானார்

கஹடோவிடாவைச் சோ்ந்த  மர்ஹும் ரிபாய் நானா அவா்களின் மனைவி சித்தி நஸீமா இன்று (24.11.2014) காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.  அன்னார் முஹம்மத் ஸமீர், பாதிமா ரிஸ்வானா ஆகியோரின் தந்தையும். திஹாரிய ஸலாஹிய்யா அரபுக் கல்லூரி அதிபா் அல்ஹாபிழ் மௌலவி இர்ஹாம் (ரஹ்மானி) அவர்களின் மாமியாரும் ஆவார். அனனாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று ( 24.11.2014) பிற்பகல் 4.30 மணியளவில் மஸ்ஜிதுன் நுாா் ஜும்ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்


. اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி - அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் மஹிந்த

ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் தருவாயில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கி எதிரணியில் இணைய அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்களவானோர் தயாராகி வருகின்றனர். மேலும் சிலரது ஒத்துழைப்புகளை பெறுதற்காக தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அரசாங்க பலத்தை இழக்கும் நிலைமையில் நாடாளுமன்றத்தை கலைக்கும் செயற்பாடுகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்து நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை தவிர்க்க தேவையான சகல திட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலைமையை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரும் அதேவேளை பெரும்பான்மை பலத்தில் பிரதமரை தெரிவு செய்யவும் எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளது.
அதேவேளை வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் முறை வசிப்பின் மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையில் வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற அரசாங்கம் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது.
வெளியேற போவது யார்?- அமைச்சர்களை நியமிப்பதில் சிக்கலை எதிர்நோக்கும் ஜனாதிபதி
எதிர்க்கட்சிகளுடன் இணைய போவது யார் என்பது அறிந்து கொள்ள முடியாத காரணத்தினால் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதில் ஜனாதிபதி சிக்கலை எதிர்நோக்கி வருவதாக அரசாங்கத்தின் உள்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
72 மணிநேரத்திற்குள் அமைச்சரவையில் மாற்றங்கள் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
முதல் கட்டமாக அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்படும். எனினும் அமைச்சு பதவிகளுக்கு நியமிக்கப்பட வேண்டியவர்களை தெரிவு செய்ய முடியாத சிக்கலை ஜனாதிபதி எதிர்நோக்கியுள்ளார்.
எதிரணியில் இணைய போவது யார் என்பதை அறிய முடியாததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
இந்த விடயம் சம்பந்தமாக புலனாய்வு பிரிவுகளின் பொறுப்பதிகாரிகளை அழைத்து ஜனாதிபதி கடுமையாக சாடியுள்ளார்.
அதேவேளை பிரதமர் பதவியில் இருந்து டி.எம். ஜயரத்னவை நீக்கி விட்டு வேறு ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதை சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருக்கும் நபர்கள் எதிர்த்துள்ளனர்.
அவரை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி விட்டு வேறு ஒருவரை நியமித்தால், ஜயரத்னவுக்கு ஆதரவானவர்கள், ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பிரதமரின் புதல்வராக அனுராத ஜயரத்னவும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் ஜனாதிபதிக்கு, ஜனாதிபதித் தேர்தல் நடக்கும் நாள் வரையில் அமைச்சரவையில் மாற்றங்களை செய்வதை தவிர வேறு வேலைகளை செய்ய நேரம் இருக்காது என எதிர்க்கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்காக வாரம் தோறும் அதிகளவானோர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற உள்ளதே இதற்கு காரணம் எனவும் எதிர்க்கட்சிகளின் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன
tamilwin

அரசியல் களத்தில் சமநிலை! முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்கு..

தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஜனாதிபதியின் அரசியல் அரங்கில் தற்போது நிலைமாற்றம் உருவாகியிருப்பது மாத்திரமன்றி பலவீனமாக இருந்த எதிர்க்கட்சியின் நிலையும் மாறி புதிய சமநிலை தோன்றியிருக்கிறது என்றால் மிகையாகாது.
Lanka minister defects to challenge president at polls
ஜனநாயக சோசலிச குடியரசில் பலவீனமான எதிர்க்கட்சியிருப்பதன் விளைவுகளை கடந்த காலத்தில் இலங்கையின் அனைத்து மக்களும், குறிப்பாக முஸ்லிம் சமூகம் அனுபவித்துவிட்டது. பாராளுமன்றில் அமையப்பெற்றிருக்கும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேர்தலில் வெற்றிபெற்றதனால் அமைந்ததன்று. விலைக்கு வாங்கப்பட்ட உறுப்பினர்களின் உதவியோடுதான் பாராளுமன்றப் பெரும்பான்மை ஆளுந்தரப்புக்கு அமைந்திருக்கிறது எனும் போது இந்த அரசினை பலவீனப்படுத்துவதற்கான அடிப்படை செயற்பாடு பாராளுமன்றப் பெரும்பான்மையை குறைப்பதாகும்.

கூட்டு சக்திகளின் பயனாக மிகச்சரியான முடிவின் அடிப்படையில் தற்போது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஒரு சில உறுப்பினர்கள் பிரிந்தும் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டிருப்பது போல் பார்த்தால் மொத்தமாக 60 பேர் வெளியேறவுள்ளனர்.
தேர்தல் பயமுறுத்தலாக அதைத் தள்ளி வைத்தாலும் கூட, மேலும் ஒரு சில உறுப்பினர்கள் அடுத்து வரும் சில நாட்களுக்குள் கட்சி தாவப்போவது உறுதியாகியிருக்கிறது. இது இரும்புக் கரங்கொண்டு ஆட்சி புரியும் தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்பார்க்காத மாற்றம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எனினும், சுதாரித்துக்கொண்டால் மேலும் மேலும் பணத்தை அள்ளிவீசி எதையாவது சாதிக்கமுடியும் என்றே அவர்களால் எண்ணத்தோன்றும்.

ஆயினும் ஏதோ ஒரு புறத்தில் ஜனநாயகம் தளிர்விடும் நிலையையும் காணக்கூடியதாக இருப்பதால் தற்போது வியாக்கியானங்களை விட விவேகமான சிந்தனையும் செயற்பாடும் அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் அவசியப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி எப்பாதும் முஸ்லிம்களுடன் நல்லுறவைப் பேணும் ஒரு கட்சியெனும் அடிப்படையில் சில நியாயபூர்வமான விடயங்களை எதிர்பார்க்கவும் அக்கட்சிக்குள் ஒன்றரக் கலந்திருக்கும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளின் வேகமான செயற்பாட்டு வடிவங்களைக் கொண்டு ஆகக்குறைந்தது தற்போது ஏற்பட்டிருக்கும் சமநிலையில் இனி வரும் காலங்களில் களமாற்றம் ஒன்றும் முஸ்லிம் சமூகத்தின் மீதான அடக்குமுறைக்கெதிரான பலமான குரல்களையும் நாம் எதிர்பார்க்கலாம்.
எது எவ்வாறாயினும், தற்போது ஏற்பட்டிருக்கும் சமநிலை எதிரணிக்கு சாதகமான நிலையாக மாறுமாக இருந்தால் ராஜபக்ச அரசாங்கம் ஆட்டம் காணும் நாள் வெகுதொலைவில் இல்லையெனலாம். ஏனெனில் இரு வருட பதவிக்காலம் எஞ்சியிருந்த போதும் எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி தோல்வி கண்டால் இங்கு பேசப்படும் சமநிலை மாறி எதிரணிக்கு சாதகமான நிலை உருவாவது தவிர்க்க முடியாது போகும்.

அவ்வாறான நிலை உருவாகுமிடத்து அது பொதுத் தேர்தலையும் பாதிப்பதோடு பாராளுமன்றில் வெற்றிபெற முடியுமான நிலை உருவாகும் போது ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கும் ஏதுவாக அமையும். இந்நிலை வருவதைத் தடுப்பதற்கு அரசாங்கம் முழு முயற்சி செய்து தம்மோடு தங்கியிருப்பவர்களைத் தக்க வைத்துக்கொள்ளும்.
ஆயினும் அதற்கு அதிக விலை கொடுக்க நேரிடும். உதாரணமாக முஸ்லிம் காங்கிரசை தக்க வைப்பதென்பது அரசின் பங்காளியாக இருந்து அக்கட்சி இதுவரை பட்ட அவமானங்களுக்கும் பின்னடைவுகளுக்குமான முதலும் வட்டியும் வழங்கப்படவேண்டிய நிலையாகும். இவ்வாறே விமல் வீரவன்சவை தக்க வைத்துக்கொள்வதும் அமையப் போகிறது.

எனவே, தற்போதைய சமநிலையை சமயோகிதமாக வாக்காளர்கள் பாவித்தால் அரசியல் சூழ்நிலை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுடன் மாற்றம் பெறலாம். ஆயினும் வாக்காளர்கள், குறிப்பாக கடந்த பத்து வருட அசைக்க முடியாத ஆட்சிபீடத்தின் வியாபனம் அதிக பலம் வாய்ந்ததாகவே சித்தரிக்கப்பட்டும் நம்பப்பட்டும் வருவதனால் எதைச் செய்தாலும் அவர் வெல்வார் எனும் பொடுபோக்கும் அலட்சியமும் எமது சமூகத்திலும் காணப்படுகிறது.

ஆனாலும் வாக்காளர்கள் ஒவ்வொருவரும் சேர்ந்து கட்டப்பட்ட பாதுகாப்பு அரண்தான் ஆட்சியாளர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது எனும் உண்மை உணரப்படுமேயானால் ஒவ்வொரு கல்லும் (வாக்காளரும்) தனது நிபந்தனையையும் அதிருப்தியையும் தெரிவிக்க தமது வாக்குரிமையைப் பாவிக்கலாம். எனினும், இதற்கான விழிப்புணர்வை எமது சமூகத்தில் ‘சலுகை’, ‘அச்சம்’ போன்ற விடயங்களும் நமது இன்றைய அரசியல் பிரதிநிதிகள் பழக்கி வைத்திருககும் அரசியல் அடிமை நிலைகளும் தடுத்து நிற்கின்றன.

ஒருவர் போனால் அந்த இடத்தை நிரப்புவதற்கு இன்னுமொருவர் தயாராக இருப்பதனால் அந்த இடத்தை விடுவதற்கு இவரும் விரும்புவதில்லை விட்டால் பிடிக்கக் காத்திருப்பதை அவரும் விடுவதில்லை எனும் நிலையே யதார்த்தம் என்பதால் அரசியல் கட்சிகளாலும் அதிரடியாகவும் நேர்மையாகவும் முடிவெடுக்க முடிவதில்லை.
ஆகவே இந்த ஜனநாயக விரோத அரசியல் போக்கினைக் கட்டுப்படுத்தவும் அதற்கு பதில் கொடுக்கவும் கூடிய சக்தி ஜனவரி மாதம் 8ம் திகதி நம்மிடம் வழங்கப்படும் போது சோரம் போனவர்களுக்கும் சேர்த்தே எச்சரிக்கை வழங்க வேண்டிய பொறுப்பும் மாற்றத்தைக் காணக்கூடிய வாய்ப்பும் சேர்ந்தே வருகிறது என்பதை சிந்தித்து வாக்களித்து நல்லதைத் தேடிக்கொள்ள வேண்டிய பொறுப்பு நம்மைச் சாருகிறது.

மீண்டும் எம் தலையெழுத்தை மாற்றியெழுதிக்கொண்டு அவன் அடிக்கிறான், இவன் இடிக்கிறான் என மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைக்கும் சமூகமாக தொடர்ந்தும் இருப்பதா இல்லையா என்பதை அறிந்து, தெரிந்து செயற்படும் தேவையும் கடமையும் இறைவன் நாட்டத்தால் நம் அனைவரையும் நாடி வருகிறது என்பதை நினைவிற் கொள்வோம்.

அ. நவாஸ்

வாயை மூடிக்கொண்டிருக்க மேலிடம் உத்தரவு! வாலைச்சுருட்டிக் கொண்ட ஞானசார

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார எதுவித அரசியல் கருத்துக்களையும் வெளியிடக் கூடாது என்று மேலிடத்தால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் உருவாக்கத்தினூடாக சிங்கள பௌத்த வாக்குகளை தொடர்ந்தும் தம்வசம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு கோத்தபாய உள்ளிட்ட ராஜபக்ஷவினருக்கு இருந்தது.

எனினும் அந்த எதிர்பார்ப்பில் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க கூட்டிணைவு மண்ணை அள்ளிப் போட்டுள்ளது. இதனை நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஞானசார தேரர் பகிரங்கமாவே ஏற்றுக் கொண்டிருந்தார்.

தற்போதுள்ள நிலையில் பொதுபல சேனா வெளியிடும் அரசியல் கருத்துக்கள் ஆளுங்கட்சியின் கொஞ்ச நஞ்ச செல்வாக்கையும் தகர்த்துவிடும் என்ற பயம் ஜனாதிபதி தரப்பினருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் எதுவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனமாக இருக்குமாறு ஞானசார தேரர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை தொடக்கம் ஞானசார தேரர் அல்லது திலந்த விதானகேவைத் தொடர்பு கொண்டு சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்துக்களை அறிய முயன்றபோதும் முயற்சி பலிக்கவில்லை. ஞானசார தேரர் தற்போது தனது மொபிடெல் இலக்கத்தை அணைத்து வைத்துள்ளார். திலந்த விதானகேவின் தொலைபேசி இலக்கத்தை பல தடவைகள் தொடர்பு கொண்டபோதும் அவர் பதிலளிக்கவில்லை.

இது தொடர்பாக ஞானசார தேரரின் உதவியாளர் ஒருவர் கருத்து வெளியிடும் போது, அரசியல் நிலைமைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், இன்னும் இரண்டொரு நாட்கள் வரை ஞானசார தேரர் தனது நடமாட்டங்களை மட்டுப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

tamilwin

இணையத்தள வாக்குப் பதிவு மகிந்தவா ? மைத்திரியா?

இணையத்தள வாக்குப் பதிவு இதோ 


https://polldaddy.com/poll/8466296/


சந்திரிகா, மைத்திரி, ராஜித இணைந்து பிரசன்னம். நானே பொது வேட்பாளர்: மைத்ரிபால சிறிசேன அறிவிப்பு

எதிரணியின் பொது வேட்பாளராக தன்னை நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். என்னை பொது வேட்பாளராகத் தெரிவு செய்தமைக்கு நன்றி என்றும் அவர் கூறினார். 
அ
  • நாட்டின் அதிகாரம் ஒரு குடும்பத்தின் கையில்...
  • ஊழல், மோசடி மற்றும் குற்றச்செயல்கள் அளவின்றி இடம்பெறுவது அபாயமானது...
  • சட்டம் சீர்குழைந்துள்ளது...
  • யுத்த வெற்றியின் பின்னர் இந்த அரசு பிழையான வழியில் சென்றது...
  • அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் பாரியதொரு தவறாகும்...
  • 2005இல் ஜனாதிபதி பதவிக்கு வந்தார்... ஒரு தசாப்தத்தில் முப்படையினர் மற்றும் பொலிஸார் யுத்தம் செய்ததில் முழு நாடே கடனாளியாகியுள்ளது...
  • 2004ஆம் ஆண்டில் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு கூட்டமைப்பு முயற்சித்தது...
  • 1994ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர சந்திரிகா அம்மையார் பாரிய முயற்சிகளை முன்னெடுத்தார்...
  • 1974 - 1994 வரை ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, கண்ணீர் சிந்தி கட்சியைப் பாதுகாத்தார்...
  • ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு கொள்கை மற்றும் தூரநோக்கு இருக்கிறது...
  • வரலாறு எனக்கு தந்த பரிசு...
  • ரணில், சந்திரிகா ஆகியோருக்கு நன்றிகள்...
  • சு.க.வை பலப்படுத்த வேண்டும்...
  • போதைப்பொருள் மற்றும் புகைத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இடையுறுகளைச் சந்தித்தேன்...
  • நாட்டுக்குள் சகலதும் மறைக்கப்பட்டு சுதந்திர ஊடகம் அடிபணியச் செய்யப்பட்டுள்ளது...
  • இந்த நாட்டில் சுதந்திர ஊடகத்துக்கு இடமில்லை...
  • பொலிஸ், நீதிமன்றம் ஆகியன பக்கச்சார்பின்றி செயற்படும் என்பதை உறுதிப்படுத்துவேன்...
  • சகலதையும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்புவேன்...
  • நாட்டின் நிர்வாகம் ஒரு குடும்பத்தின் கையில் உள்ளது...
  • அரசியலமைப்பின் 17ஆவது திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும்...
  • அரசியலமைப்பின் 18ஆவது திருத்தம் ஒழிக்கப்படும்...
  • இளைஞர் பிரச்சினைகளுக்கு தீர்வு...
  • சுதந்திர தேர்தல் உரிமையை உருவாக்குவேன்...
  • இது கூட்டமைப்பின் ஒரு முன்னணி...