கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

பாபர்மசூதி தொடர்பான வழக்கு: நீதிபதிகள் தரம்வீர் சர்மா, அகர்வால் மற்றும் எஸ் யூ கான் அகியோரின் தீர்ப்பை (summary)

 பாபர் உத்தரவால் மசூதி கட்டப்பட்டது: நீதிபதி எஸ்.யு. கான்
அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பளித்த 3 நீதிபதிகளில் ஒருவரான எஸ்.யு. கான் அளித்த தீர்ப்பின் முக்கிய சாரம்சம் வருமாறு:

1) சர்ச்சைக்குரிய இடம் பாபராலோ அல்லது அவரது உத்தரவாலோ மசூதியாக கட்டப்பட்டுள்ளது.

2 ) கட்டடம் இருந்த இடம் உள்பட சர்ச்சைக்குரிய இடம் பாபருக்குரியதா அல்லது அந்த மசூதியை கட்டியவருக்கு சொந்தமானதா அல்லது யாருடைய உத்தரவின் பேரில் அந்த மசூதி கட்டப்பட்டது என்பதற்கான நேரடி ஆதாரம் ஏதும் சமர்பிக்கப்படவில்லை.

3) மசூதி கட்டுவதற்காக எந்த ஒரு கோவிலும் இடிக்கப்படவில்லை.

4) மசூதி கட்டப்படுவதற்கு வெகு காலத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தில் இடிந்துபோன கோவிலின் சிதலங்கள் கிடந்தன.அந்த சிதலங்கள் மீதுதான் மசூதி கட்டப்பட்டது.அத்துடன் மசூதி கட்டுவதற்கு அந்த சிதல பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5) மசூதி கட்டப்படும் வரை, மிகப்பெரிய இடமான அதன் ஒரு சிறிய இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நீண்ட காலமாக கருதினார்கள்/ நம்பினார்கள். அதே சமயம் அவர்கள் நம்பியது அந்த பெரிய இடத்தில் உள்ள எந்த ஒரு குறிப்பிட்ட - சர்ச்சைக்குரிய - இடத்தையும் அல்ல.

6) மசூதி கட்டப்பட்ட பின்னர்தான், ராமர் பிறந்த இடமாக கருதும் இடத்தை இந்துக்கள் அடையாளம் காணத் தொடங்கினார்கள் அல்லது அங்குதான் ராமர் பிறந்த இடம் உள்ளதாக அடையாளம் காணத்தொடங்கினார்கள்.

7) 1855 ஆம் ஆண்டுக்கு வெகு காலம் முன்னரே ராமரும், சீதாவும் அங்கு வந்து தங்கியிருந்ததாக கருதும் இந்துக்கள் அந்த இடத்தை வழிபட ஆரம்பித்துவிட்டனர். மசூதியின் உட்புற சுவர் மற்றும் சுற்றுச்சுவர் எல்லையில் இந்து வழிபாட்டுத் தலங்கள் இருந்தது என்பதும், அவற்றையும் சேர்த்தே மசூதியில் தொழுகை நடத்தியவர்கள் வழிபட்டுள்ளனர் என்பது மிக மிக புதுமையானதாகவும், முற்றிலும் முன்னர் எப்போதும் நடந்திராததாகவும் இருந்துள்ளது.

8) மேற்கூறிய சாரம்த்தின் அடிப்படையில் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் ஆகிய இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இடத்தின் முழுப்பகுதிக்கும் கூட்டு உரிமையாளர்களாக உள்ளனர்.

9) இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் தங்களது வசதிக்காக சர்ச்சைக்குரிய இடத்தின் வெவ்வேறு பகுதிகளை ஆக்கிரமித்து வழிபட்ட போதிலும், இப்பவும் அது ஒரு முறையான பாகப்பிரிவினையாக இல்லை; இரு தரப்புக்குமே சர்ச்சைக்குரிய ஒட்டுமொத்த இடத்திலும் கூட்டு உரிமை உள்ளது.

10) 1949 ஆண்டுக்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் பகுதிதான் ராமர் பிறந்த இடம் என்று கருதி/நம்பி வழிபட தொடங்கிவிட்டனர்.

11) 23.12.1949 அன்று அதிகாலை மசூதியின் மைய கோபுரத்தின் கீழ் முதல் முறையாக ராமர் சிலை நிறுவப்பட்டது.

12) மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் இருதரப்புக்குமே சர்ச்சைக்குரிய இடம் பாத்தியப்பட்டது என்று அறிவிக்கப்படுகிறது.
*********************************
 
 அயோத்தி வழக்கு: நீதிபதி அகர்வால் வழங்கிய தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்
அயோத்தி வழக்கிலஇன்றமதியமதீர்ப்பவழங்கப்பட்டுள்ளது. இதிலசர்ச்சைக்குரிபாபரமசூதி பகுதி 3 பாகங்களாகபபிரிக்கப்பட்டஇஸ்லாமியர்கள், இந்துக்கள், மற்றுமஅறக்கட்டளையாநிர்மோஹி அகாரா ஆகியவற்றுக்குசசொந்தமானதஎன்றதீர்ப்பவழங்கப்பட்டுள்ளது.

இந்தத்ததீர்ப்பவழங்கிய 3 நீதிபதிகளிலஒருவராசுதிரஅகர்வாலஅவர்களினதீர்ப்பினமுக்கிஅம்சங்களிலசிவருமாறு:

1. சர்ச்சைக்குரிஇடத்திலமையககூரையினகீழஉள்பகுதி இந்துக்களினமதநம்பிக்கைகளினபடி ராமரபிறந்இடமே.

2. சர்ச்சைக்குரிபகுதி எப்போதுமமசூதி என்பதாகவஎடுத்துககொள்ளப்பட்டநம்பப்பட்டவருகிறது. இதனாலமொகமதியர்களஇங்கவழிபாடசெய்துவந்தனர். இருப்பினுமஅதபாபரால் 1528ஆமஆண்டுதானகட்டப்பட்டதஎன்பதநிரூபிக்கப்படவில்லை.

3. இதகுறித்மாற்றகோரிக்கைகளோ, வேறதடயங்களோஇல்லாபட்சத்திலசர்ச்சைக்குரிஅமைப்பஎப்போதயாராலகட்டப்பட்டதஎன்பதஉறுதி செய்முடியாது. ஆனாலஜோசபடைஃபென்தாலரஎன்பவரவருவதற்கமுன் 1766 - 1771 ஆமஆண்டுகளிலகட்டப்பட்டதஎன்பதவரதெளிவாஉள்ளது.

4. சர்ச்சையிலஉள்இந்கட்டிடம், அதற்கமுன்பஅங்கிருந்இஸ்லாமஅல்லாசமயககட்டிஅமைப்பைததகர்த்துககட்டப்பட்டுள்ளது. அதாவதஇந்துககோயில்.

5. சர்ச்சையிலஉள்கட்டிடந்த்தினமையக்கூரையினகீழ்ப்பகுதியிலவிக்ரகங்களடிசம்பர் 1949ஆமஆண்டு 22 மற்றும் 23ஆமதேதி இரவிலவைக்கப்பட்டது.
*******************************************
 
 அது இராமர் பிறந்த இடமே: நீதிபதி தரம் வீர் சர்மா தீர்ப்பு
அயோத்தியில் விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளால் இடித்துத் தள்ளப்பட்ட பாபர் மசூதி இருந்த இடமே இராமர் பிறந்த இடம்தான் என்று ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற அமர்வில் இடம் பெற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவரான நீதிபதி தரம் வீர் சர்மா தனது தனித்த தீர்ப்பில் கூறியுள்ளார்.

ராம் ஜன்ம பூமி - பாபர் மசூதி வழக்கில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதி தரம் வீர் சர்மாவின் தீர்ப்பு விவரம் வருமாறு:

1. தகராறுக்கு உட்பட்ட பகுதி பகவான் இராமர் பிறந்த இடமா?

தீர்ப்பு: தகராறுக்கு உடப்ட்ட பகுதி இராமர் கடவுள் பிறந்த இடமே. கடவுளாகவும் நியாயவானாகவும் இருந்த ஒருவர் பிறந்த இடமே அது. குழந்தையாக இருந்த இராமர் வளர்ந்த இந்த இடத்தில் இறை உணர்வாக இராமர் உள்ளார் என்று வணங்கப்பட்டு வந்துள்ளது.

இறை உணர்வு எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் வியாபித்துள்ளது. அது வடிவமற்றதாகவும், உருவமற்றதாகவும் இருக்கும் அதே நேரத்தில் வணங்குபவரின் பிரார்த்தனைக்கேற்ப உருவமாகவும் வரக்கூடியதாகும்.

2. தகராறுக்கு உட்பட்ட அந்த கட்டடம் ஒரு மசூதியா? அது எப்போது, யாரால் கட்டப்பட்டது?

தீர்ப்பு: தகராறுக்கு உட்பட்ட அந்தக் கட்டடம் பாபரால் கட்டப்படது. எந்த ஆண்டில் என்பது நிச்சயமற்றதாகவுள்ளது. ஆனால் அது இஸ்லாத்தின் நெறிகளுக்கு எதிராக கட்டப்பட்டுள்ளது. எனவே அது மசூதி என்பதற்குரிய தகுதியை பெற்றிருக்க முடியாது.

3. அங்கிருந்த ஒரு இந்துக் கோயிலை இடித்துவிட்டுத்தான் இந்த மசூதி கட்டப்பட்டதா?

தீர்ப்பு: ஏற்கனவே அங்கு இருந்த ஒரு கட்டுமானத்தை தகர்த்தப் பின்னரே தகராறுக்குட்பட்ட இந்தக் கட்டடம் (பாபர் மசூதி) கட்டப்பட்டுள்ளது. அந்த கட்டுமானம் ஒரு ஹிந்து மதம் தொடர்பானது என்று இந்திய தொல்லியல் துறை நிரூபித்துள்ளது.

4. அந்தக் கட்டத்திற்குள் இராமர் உள்ளிட்ட சிலைகள் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் வைக்கப்பட்டதா?

தீர்ப்பு: தகராறுக்குட்பட்ட அந்த கட்டடத்தின் நடுக் கூரைக்குக் கீழே 1949ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22, 23ஆம் தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

5. தகராறுக்குட்பட்ட அந்த இடத்தின் மீது சொந்தம் கொண்டாடும் மனுக்கள் ஏதேனும் அதற்குரிய கால வரையறையைத் தாண்டியவையா?

தீர்ப்பு: 1989ஆம் ஆண்டு உ.பி. மாநிலம், லக்னோ சுன்னி மத்திய வக்்ப் வாரியம் உள்ளிட்ட மற்றவர்களுக்கு எதிராக கோபால் சிங் விஷாரத் மற்றும் பலர் ஆகியோர் தொடர்ந்த மனு ஒ.எஸ்.எஸ். எண் 4,
1989ஆம் ஆண்டு நிர்மோஹி அஹாரா மற்றும் ஒருவருக்கு எதிராக ஜமுனா பிரசாத் சிங் மற்றும் பலர் தொடுத்த மனு ஓ.எஸ்.எஸ். எண் 3 ஆகியன காலம் கடந்தவை என்பதால் நிராகரிக்கப்படுகின்றன.

6. தகராறுக்கு உட்பட்ட கட்டடத்தின் உள் மற்றும் வெளிப்பகுதி தொடர்பான நிலை என்ன?

தீர்ப்பு: இந்த தகராறுக்கு உட்பட்ட இடத்தின் மீதான உரிமை தொடர்பான வழக்கில் இராம் சந்திர ஜி பிறந்த இடமும், சரண், சீதா ரசோய் ஆகியனவும், வழிப்படப்படும் மற்ற சிலைகளும், பொருட்களும் ஹிந்துக்களுக்கே உரியவை. நினைவிற்கு எட்டாத காலம் முதலே தகராறுக்குரிய அந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்று ஹிந்துக்கள் வழிப்பட்டு வருகின்றனர். அந்த இடத்தில் தகராறுக்குட்பட்ட கட்டடம் கட்டப்பட்டதற்குப் பின்னர் அந்த இடத்தில் 1949ஆம் ஆண்டு டிசம்பர் 22,23ஆம் தேதிகளுக்குட்பட்ட இரவில் சிலைகள் வைக்கப்பட்டது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, தகராறுக்குட்பட்ட இடத்தின் வெளிப்பகுதி ஹிந்துக்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது என்பதும். வெளியேயும், தகராறுக்கு உட்பட்ட உள்பகுதியிலும் அவர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தகராறுக்குட்பட்ட கட்டுமானம் (பாபர் மசூதி) இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை மசூதி என்று ஏற்க முடியாது.

இவ்வாறு நீதிபதி தரம் வீர் சர்மா தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
 
 
பாபர்மசூதி தொடர்பான வழக்கும், தீர்ப்பும் இரண்டு நீதிபதிகள் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த கருத்துடன் மூன்றாவது நீதிபதி உடன்படவில்லை.
 

அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு.

3 நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்கள்.


அயோத்தி நிலம் 3 தரப்பினுருக்கும் சொந்தம். 3தரப்புக்கும் பகிர்ந்து அளிக்பபடும்.

சர்ச்சைக்குஉரிய நிலத்துக்கு உரிமை கோரிய சன்னி வக்பு வாரிய மனு நிராகரிக்கபட்டது. தற்போது உள்ள ராமர் சிலை அகற்றப்படக்கூடாது. 

அந்த 2,50 ஏக்கர் நிலம் தடை செய்யபட்ட நிலம் வெள்ளைகாரர்கள் செய்தது போல் பிரித்து கொடுத்து இருக்கின்றார்கள்.

ஒரு பங்கை இந்து மகா சபைக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு பங்கை பாபர் மசூதி கமிட்டிக்கு கொடுக்க வேண்டும்.
ஒரு பங்கு நிர்மோகி அகாராவுக்கு கொடுக்க வேண்டும்.

சர்ச்சைக்கு உரிய இடத்தில் ராமர் பிறந்தது உண்மைதான் இரண்டு நீதிபதிகள் கருத்து.

மேல் முறையிடு செய்ய 3 மாத கால அவகாசம்.

கிளை 10 முட்கம்பி வேலிகள்

நீண்ட இடைவேளைக்குப்பின் கிளை விரித்திருக்கிறது நமது இலக்கிய விருட்சம்.........

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

முட்கம்பி வேலிகள்
ரம்பையும் கறிவேப்பிலையும் வேகும் வாசம் மூக்கைத்துளைக்க அதை எடு இதை பிடி என்று தலைமை சமயற்காரர் கர்ச்சிக்கிறார் நெருப்பின் அனலில் வியர்த்து விருவிருத்துப்போன அவரின் அனலில் அயலவரும்வியர்த்து விட்டனர்

அரிசைக்கழுவ வாழைக்காய் பொறிக்க வெங்காயம் வெட்ட ………தடதடவென சமயலேற்பாடுகள் அட்டகாசமாய் இருக்க வீடோ திருவிழாக்கண்டது போல மங்களகரமாய் பிரகாசிக்கிறது.என்ன இங்கு ஒரே கூட்டமா இருக்கிறது ஏதோ கல்யாணக் காட்சி போல என்று யாரோ கிசுகிசுப்பது சமயற்காரர் காதிலும்

விழுந்தது போலும் அக்கம் பக்கம் கேட்டுப்பார்த்தா

ல் அடுத்த நாள் கல்யாணமாம் கல்யாணத்துக்கொருநாள் இடைவெளி இருக்க அதுவென்ன இன்றைக்கு இவ் ஏற்பாடாம் என்றதும் கல்யாணத்திற்கு முன்னாலிரவில் குடலும் பறுப்பும் சேர்த்தொரு விருந்து படைக்கும் வழமையுண்டாம் இதுதான் அதுவாம் என்று விளக்கம் சொன்னார்.சடங்காம் சம்பிரதாயமாம் திருமணத்தைச்சுற்றி எத்தனையோ முற்கம்பி வேலிகள் வாழ்வோரை வாழவிடாது யாரோ போட்ட பழங்காலத்து வழமைகளை இவர்கள் துக்கிப்பிடிக்கிறார்கள் ஆயிரம் ஆண்மாக்களை சாகடித்த இந்த சம்பிரதாயங்களை வாழவைக்கிறார்கள். பாவம் அந்த இளைர்கள் திருமணச்செலவுகளை நினைத்த மாத்திரத்திலே நரைத்துவிட்டார்கள் திருமணமலர்களை சம்பிரதாய வேலிகளைப்போட்டு நசுக்கிவிடாதீர்கள் . சாந்திமார்க்கமாம்

இஸ்லாம் கூறும் நன்நெறிகளால் நறுமனம் கமழ விடுங்கள். ஊருக்கெல்லாம் பந்தி வைக்கும் செலவுகளைச்சேர்த்து இத்தம்பதிகளுக்கு கொடுத்துவிடுங்கள் வாழ்கையெனும் வானில் சிறகடிக்கப் போகும் அவர்களின் பயணக்கட்டுச்சாதனங்களுக்காவது அது உதவட்டும்.

ஜனாஸா அறிவித்தல்

கஹடோவிடாவைச் சேர்ந்த முஃமினா உம்மா அவர்கள் காலமானார். அன்னர் காலம் சென்ற ஹஸன் அவர்களின் அன்பு மனைவியும்  முஹம்மத் நிஸார், முஹம்மத் லாபிர், ஸம்சுல் இனாயா, ஹம்ஸூல் பரீதா ஆகியோரின் அன்புத் தாயாரும். முஹம்மத் ரியாஸ், முஹம்மத் ரிஸ்வான், ரிம்ஸானா ஆகியோரின் உம்மும்மாவும் ஆவார். அன்னாரின் ஜனாஸர் இன்றிரவு (27.09. 2010)  முஹியத்தீன் ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் 8.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து பர்ஸஹவுடைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!

வெடிகுண்டுகள் எந்த நேரமும் வெடிக்கலாம்: இலங்கை அரசுக்கு நிபுணர்கள் எச்சரிக்கை

கொழும்பு,செப்.26: கரடியனாறு காவல் நிலையத்தில் வெடிமருந்துகள் வெடித்து 27 பேரைப் பலி வாங்கியதைப் போன்ற சம்பவங்கள் மேலும் நடக்கலாம், அதற்குள் அரசு விழிப்படைந்து போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள வெடிமருந்துகளை அகற்றியே தீர வேண்டும் என்று வெடிமருந்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலும் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 2 லட்சம் கிலோ கிராம் அளவுக்கு சக்திவாய்ந்த வெடிமருந்துகளும் வெடித்திரிகளும் வைக்கப்பட்டுள்ளன. இவை விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்டவை அல்ல.

தமிழர் பகுதிகளில் சாலை அமைக்கவும் இதர அடித்தள கட்டுமானப் பணிகளுக்காகவும் சீனத்திலிருந்து தருவிக்கப்பட்டவையாகும். சாலை அமைக்கும் பணிக்காக சீனாவிலிருந்து சிறைக் கைதிகளை ஆயிரக்கணக்கில் அழைத்துவந்து தமிழர்களின் பகுதிகளில் தங்க வைத்திருக்கிறது அரசு என்ற செய்திகள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன.

அவர்களுடன் கொண்டுவரப்பட்ட வெடிமருந்துகளை வெளியில் வைத்தால் அது யாருடைய கையிலாவது சிக்கினால் ஆபத்து என்று போலீஸ் நிலையங்களில், வளாகங்களில், போலீஸ் நிலையங்களுக்கு அருகில் என்று வெடிமருந்துகளையும் வெடித்திரிகளையும் பெட்டி பெட்டியாக வைத்திருக்கின்றனர். சில இடங்களில் சரக்குப் பெட்டகங்களுடன் வைக்கப்பட்டுள்ளன.

வெடிமருந்துகளையும் வெடித்திரிகளையும் உரிய பாதுகாப்புடன் நல்ல பக்குவத்தில் வைத்திருக்க வேண்டும். அந்தப் பகுதியில் தீ விபத்து நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உரிய காலத்தில் அவற்றை ஆய்வு செய்ய வேண்டும். விரைவில் பயன்படுத்திவிட வேண்டும் அல்லது அப்புறப்படுத்திவிட வேண்டும். (போலீஸ்காரர்களுக்கு வெடிமருந்துகளைக் கையாள்வதில் பயிற்சியும் அனுபவமும் கிடையாது.)

இவை எதையும் செய்யாமல், திருடு போகாமல் இருந்தால் சரி என்று போலீஸ் நிலையங்களுக்கு அருகில் வைத்திருக்கின்றனர். தார்ச்சாலை போடுவது என்று தீர்மானித்தவுடன் ஜல்லியைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு மாதக்கணக்காக திரும்பிப் பார்க்காத அதிகார வர்க்கத்தின் மெத்தனம் இலங்கையிலும் காணப்படுகிறது. எனவே சாலை போடுவதற்காகக் கொண்டுவரப்பட்ட இந்த வெடிமருந்துகளும் இதர சாதனங்களும் அதன் பிறகு ஏறெடுத்தும் பார்க்கப்படாமல் இருக்கின்றன.

இவை வெடித்தால் போலீஸ் நிலையத்தில் இருப்பவர்களுக்கும் அருகில் வசிப்பவர்களுக்கும் உயிரிழப்பை ஏற்படுத்திவிடும் என்பதை கரடியனாறு சம்பவமே உணர்த்துகிறது.

அங்கே வைத்திருந்தது மிகக்குறைந்த அளவுதான். அதுவே இந்த அளவுக்கு உயிர்ப்பலி வாங்கியது என்றால் அதைப்போல பல மடங்கு வைத்திருக்கும் போலீஸ் நிலையங்களும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்களும் தப்புமா என்ற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காத்தான்குடி, கல்குடா மற்றும் அம்பாறை மாவட்டத்தில் உஹானா, தமானா, இங்கினியாகலா, அக்கரைப்பட்டு, பொட்டுவில், அம்பாறை ஆகிய ஊர்களில் போலீஸ் நிலையங்களுக்கு அருகில் இப்படி வெடிமருந்துகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

கிளை - 09 ஒரு கைதியின் புலம்பல்

நீண்ட இடைவேளைக்குப்பின் கிளை விரித்திருக்கிறது நமது இலக்கிய விருட்சம்.........

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....



கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக்  கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

........................................................................................................................................................
ஒரு கைதியின் புலம்பல்

பருவம் வரைந்த சித்திரங்கள் அவனில் அங்குமிங்குமாய் தெரிகின்றது. அரும்பு மீசையுடன் அவன் கணாக்களும் தளிர்கின்றன. எதிர்காலத்தை விட நிகழ்காலத்தையே அவன் நேசிக்கின்றான். கற்பனைகளுக்கு அவன் நாயகன். நிஜங்களுக்கு அவன் கைதி. முறுக்கேறிய அவன் கால்கள் சில போது இந்த பூமிப் பந்தையே உதைக்கப் பார்க்கின்றான. சினங்களும் சினேகங்களும் அவனை வாட்டி வதைக்கின்றன.

அன்றொரு மாலை வேளை பொன் மஞ்சல் வெயிலின் மெல்லிய கீற்றுகள் ரகசியமாய் பரவி மறைய மெல்ல மெல்ல இருளும் சூழ அவன் வீடு செல்கின்றான். அங்கொரு புலன் விசாரணை அவனைக் காத்திருக்கின்றது. அதை எண்ணி அவன் உணர்வுகளும் வியர்த்துவிட்டன. அவன் மேல் உயிரையே வைத்திருக்கும் அவன் தந்தையின் கேள்விக்கனைகள்தான் அவனுக்கு என்றென்றும் பாரமாயிருக்கின்றன. தன் தந்தையின் குமுறல்கள் அதிகாரத்திலானதா அன்பிலானாதா எதனாலானது? விடைகளைத் தேடியவனாய் வீட்டுள் நுழைகின்றான். விசாரனையும் துவங்கி விவாதம் தொடர்கிறது. முறைப்பும் கனைப்பும் அனலும் தனலும்  அத்துனையும் கலந்த அன்றைய யுத்தம் முடிவுக்கு வருகிறது. சப்தங்களெல்லாம் மௌனித்து விடுகின்றன. கையிரண்டும் தலையனையாக அவன் மெய் மறந்தவனாக சாய்கின்றான். அன்னார்ந்து பார்த்தான். ஆகாயமும் தெரியவில்லை. கண்ணயர்ந்து பார்த்தான் நித்திரையும் வரவில்லை. அவன் தவிப்பும் துடிப்பும் அந்த அந்த சுவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. கட்டிலும் அவனுக்கு கனத்து விட்டது. வார்த்தைகளால் வதைக்கப்பட்ட எத்தனையோ வாலிப நெஞ்சங்கள் இப்படித்தான் நொந்து போயிருக்கின்றன. சினங் கொண்டு சீரிப்பாயும் தந்தையர்களுக்கு இந்த வாலிப இதயங்களின் காயங்கள் என்றைக்குத்தான் தெரியப் போகுது? அன்பால் சாதிப்பதை ஆவேசத்தால் அழித்துவிட்டார்கள். உபதேசிப்பதாய்க் கூறி உணர்வுகளையெல்லாம் விலங்கிடப் பார்க்கிறார்கள். களைகளைக் கிள்ளுவதாய்க் கூறி முளைகளையே தோண்டிவிடுகிறார்கள். தந்தையர்களே உங்கள் சீற்றங்கள் பாசங்களாகட்டும். உங்கள் ஆவேசங்கள் ஆறுதல்களாகட்டும். இந்த நெஞ்சங்களின் காயங்கள் அதனால் ஆறட்டும்.

உள்ளுராட்சி திருத்த சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடல்


Subject: Fwd: Invitation: Workshop on Latest Local Govt. Law Reforms
Assalamu Alaikkum,
Dear Friends,
Please be informed that, there is a special workshop is organized by Muslim Council of Sri Lanka (MCSL) on the topic of latest Local Govt Law Reforms. A detail briefing about the latest Local Govt. Law Reforms and a constructive discussion on the impact of the particular law reforms on Muslim community is to take place. The findings and the decision of the session will be presented to the Minister, Hon. Dinesh Gunewardena on a fresh appointment on early October 2010.  The intellectuals, Ulamas, civil society representatives and the interested individuals of our community are invited for the session to contribute with their valuable inputs and suggestions.
Date: 28th of September 2010
Time: 4.00pm - 7.00 pm
Venue: Ranmuthu, Colombo - 03.
For further details and confirmation, please contact us: 0777 572935.
May Almighty Allah accept our deeds and guide us in the righteous path.
Regards
Asker Khan
on behalf of the Chairman - MCSL
--
Asker Khan S.A.
Executive Director
Caring Hands
Tel: + 94 114 899 829
Fax: + 94 112 715 988
Mob: + 94 777 572 935

நியூயார்க் தாக்குதலுக்கு அமெரிக்கா தான் காரணம்

iran prasident
ஐக்கிய நாடுகள் சபையில்  ஈரான் அதிபர் அகமதிநிஜாத்
ஐ.நா. சபை: நியூயார்க் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதலுக்கு அமெரிக்க அரசு தான் காரணம் என்று கூறி ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் ஈரான் அதிபர் மெஹ்மூத் அகமதிநிஜாத். அவரது பேச்சைக் கண்டித்து அமெரிக்க குழுவினர் ஐ.நா.விலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பேசிய அவர், 2001ம் ஆண்டு அமெரிக்காவின் மாபெரும் உளவுப் பிரிவையும், பாதுகாப்பு வளையத்தை எல்லாம் மீறி நியூயார்க்கில் செப்டம்பர் 11 இரட்டைக் கோபுர தாக்குதலை அல்-கொய்தா தீவிரவாதிகள் நடத்தியதாகக் கூறுகின்றனர்.

ஆனால், அந்தத் தாக்குதலை நடத்தியதே அமெரிக்கா தான் என்று தான் உலகின் பெரும்பாலான மக்கள் நினைக்கி்ன்றனர். உலகளவில் சரிந்து வரும் தனது செல்வாக்கை நிலை நிறுத்தவும், சரிந்து விட்ட தனது பொருளாதாரத்தை சரி செய்யவும், வளைகுடாவில் தனது ஆதிக்கத்தை மீ்ண்டும் நிலைநாட்டி, இஸ்ரேலுக்கும் யூத சக்திகளுக்கும் உதவவும் அந்தத் தாக்குதலை திட்டமிட்டு அமெரிக்கா தான் நடத்தியது.

அமெரிக்க அரசில் உள்ள ஒரு சக்தி வாய்ந்த பிரிவினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தினர் என்று தான் பெரும்பாலான அமெரிக்க மக்களும், உலகின் பெரும்பாலான மக்களும், உலக அரசியல் தலைவர்களும் நினைக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

அல்லது அந்தத் தாக்குதலை உண்மையிலேயே தீவிரவாதிகள் தான் நடத்தினர். ஆனால், அந்தத் தாக்குதலை தனது சுய லாபத்துக்காக பயன்படுத்திக் கொண்டது அமெரிக்கா என்றும் சொல்லலாம்.

இந்த நியூயார்க் தாக்குதலை முன் வைத்துத் தான், தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு ஆப்கானிஸ்தான் மீதும் இராக் மீதும் அமெரிக்கா போர் தொடுத்தது.

தான் மட்டும் அணு ஆயுதங்களை குவித்து வைத்துக் கொண்டு, நாங்கள் (ஈரான்) அணு ஆயுதம் தயாரிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு எங்களையும் அமெரிக்கா வம்புக்கு இழுத்து வருகிறது என்றார்.

அகமதிநிஜாத் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போதே அமெரிக்க ஐ.நா. குழுவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து பல ஐரோப்பிய நாடுகளின் தூதர்களும் குழுவினரும் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து பேசிய அகமதிநிஜாத், இதனால் நியூயார்க் தாக்குதல் குறித்து ஐ.நா. முழுமையான விசாரணை நடத்தி உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

அணு ஆராய்ச்சி விஷயத்தில் நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயார். ஆனால், அது நேர்மையாகவும் மரியாதையுடனும் நடக்க வேண்டும்.

அடுத்த நாட்டுக்கு மரியாதை தராமல் செயல்பட்டால் பதிலுக்கு மரியாதை கிடைக்காது என்பதை அனைவரும் உணர வேண்டும். அதே போல ஈரான் மீது தொடர்ந்து பொருளாதாரத் தடைகளை விதித்து நமது வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நினைத்தால் அதன் மீது கொஞ்ச நஞ்சம் உள்ள நம்பிக்கையும் போய்விடும்.

சர்வதேச அணு ஆராய்ச்சி மையத்தின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டே ஈரானிய ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மற்றபடி யாருடைய நெருக்குதலுக்கும் ஈரான் பணிந்ததில்லை, இனியும் பணியாது என்றார்.

ஈராக், ஆப்கான், கஷ்மீர் அடுத்த இலக்கு இலங்கையா?

இலங்கையில் 200 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி?

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் தீவிரவாதிகளின் சந்திப்பு தளமாக கொழும்பு இருப்பதாகவும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 200 பேர் இலங்கையில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்குள் நுழைய லஷ்கர் தீவிரவாதிகள் தற்போது இலங்கையை பயன்படுத்துவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, புணே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் கொழும்பில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தனர் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்ச இதை மறுத்தார். இந்நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் வனப் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாண பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சிப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை எமது நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா மறுத்திருந்தார்.

பாதிபிய்யா மதில் இடிந்துவிழ்ந்ததில் முச்சக்கரவண்டிக்குக் கடும் சேதம் சாரதிக்கு காயம்.

கஹடோவிட பாதிபிய்யா தக்கியாவைச்சுற்றி அமைக்கப்பட்டடிருந்த மதிலின் ஒருபகுதி திடீரென இடிந்து வீழ்ந்ததன் காரணமாக பாதையில் சென்றுகொண்டிருந்த கள்ளெலியயைச்சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதியொருவர் கடுங்காயங்களுக்குள்ளாகி வதுபிடிவல தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டிக்கும் கடும்சேதம் ஏற்பட்டுள்ளது.

பலவருடங்கள் பழமைவாய்ந்த இம்மதில் தொடர்ச்சியாகப்பேய்த மழைகாரணமாக நிலத்தினூடாக நீர் மதிலுக்கு இறங்கி வெடிப்புக்கள் ஏற்பட்டு அது உடைந்திருக்கலாமெனவும் ஊர்மக்கள் கருத்துத்தெரிவிக்கின்றன. இச்சம்பவம் இன்றுகாலை சுமார் 11.30 மணியலவில நிகழ்துள்ளது.

பாதிப்பப்பட்ட முச்சக்கரவண்டியின் ஒருசில நிழற்படங்களை இங்கே காணலாம்.




கஹட்டோவிடாவில் டெங்கு அதிகாரிகளால் சுற்றுப்புற சூழல் மேற்பார்வை

இன்று கஹட்டோவிட கிராமத்தில் டெங்கு நோய்த் தடுப்பு அதிகாரிகளால் சுற்றுப்புற சூழல் டெங்கு நோயைப் பரப்பும் விதமாக உள்ளதா என்று மேற்பார்வை செய்யப்பட்ன. சுமார் 50 பேர்களடங்கிய இக்குழுவினர் பல சிறிய குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு வீடு விடாககச் சென்று வீட்டுச் சூழலைப் பரிசோதித்துள்ளனர். பல வீடுகளின் சூழல் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தலாகவும் டெங்கு நுளம்புகள் பரவக் கூடிய பொலிதீன் பைகள் மற்றும் யோகட் பாத்திரங்கள் உள்ளனவாகவும் காணப்பட்டதாக தகவல்கள் கிடைக்கின்றன. இவ்வாறான வீடுகளிற்கு வீட்டுச் சூழலை சுத்தமாக வைப்பதற்கான அறிவுறைகளை வழங்கியதுடன் அடுத்த முறை பரிசோதனையின் போது இவ்வாறான தவறை செய்தால் சட்ட நடவடிக்கை  எடுப்பதாகவும் வந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எது எப்படியிருப்பினும் முஸ்லிம் ஊர் என்ற வகையில் சுத்தமாக இருப்பது எமது மார்க்கக் கடமைகளில் ஒன்றாகும். ஏனெனில் சுத்தம் ஈமானின் பாதியாகும் என்பது ஹதீஸாகும். எனவே சுத்தமில்லாமலிருப்பது ஈமானின் அரைவாசியை இழந்த நிலைக்குச் சமனாகும். மார்க்க விடயத்தில் அதிக அக்கறை செலுத்தும் எமதூரின் பள்ளி வாசல்கள் இதுவிடயத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமது உரைகளை அமைத்துக் கொள்வது காலத்தின் தேவையாகும்.

ஜனாஸா அறிவித்தல்

ஓகடபொலையைச் சேர்ந்த அலவி ஹாஜியார் அவர்கள் காலமானார்.  இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸர் இன்றிரவு 10 மணயளவில் ஓகடபொல மஸ்ஜிதுல் பலாஹ்  ஜும்ஆப்பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து ”பர்ஸஹ்”டைய வாழ்வை சிறந்ததாக ஆக்கி வைப்பானாக!

காஷ்மீர்: இந்திய இராணுவமே வெளியேறு!


''இந்திய நாய்களே திரும்பிச் செல்லுங்கள்!", "இப்பொழுதே வேண்டும் விடுதலை!" என்ற முழக்கங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு எங்கும் மீண்டும் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன. "இது இந்திய மக்களைப் பற்றியதல்ல; இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீர் போலீசும் சாதாரண காஷ்மீர் மக்களுக்கு இழைத்த அநீதிகளைப் பற்றியது" என காஷ்மீரில் நடந்துவரும் தெருப் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார், இர்ஷத் என்ற இளைஞர்.  பெண்களும் தாய்மார்களும் இளைஞர்களும்தான் தற்பொழுது நடைபெற்றுவரும் போராட்டத்தில் முன்னணியாக நிற்கிறார்கள்.
காஷ்மீரில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி நடந்துவரும் அரசியல் ஆர்ப்பாட்டங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக இந்திய அரசு பழிபோட்டு வருகிறது.  இந்தப் போராட்டத்தை யார் தூண்டிவிடுகிறார்கள் என்பதை அலசி ஆராயும் முன், காஷ்மீர் மாநிலம் கடந்த இருபது ஆண்டுகளில் எப்படி ஒரு திறந்தவெளி இராணுவ முகாமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பார்ப்போம்.
டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில நாளிதழ் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரில் 3,00,000 இந்திய இராணுவச் சிப்பாய்களும், தேசியத் துப்பாக்கி படைப் பிரிவைச் சேர்ந்த 70,000 சிப்பாய்களும், மத்திய போலீசு படையைச் சேர்ந்த 1,30,000 சிப்பாய்களும் – ஆக மொத்தம் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.  அம்மாநிலப் போலீசுப் படை இந்த எண்ணிக்கையில் சேராது.
காஷ்மீரில் 'அமைதி'யை ஏற்படுத்த இத்தனை இலட்சம் துருப்புகள் தேவை என்றால், எத்தனை ஆயிரம் தீவிரவாதிகள் அம்மாநிலத்தில் இருக்கக்கூடும் என உங்கள் மனம் கணக்குப் போடலாம்.  அதிர்ச்சி அடைந்து விடாதீர்கள், அங்கே வெறும் 660 தீவிரவாதிகள்தான் இருப்பதாக சமீபத்தில் இந்திய இராணுவம் அறிக்கை அளித்துள்ளது.
''தற்பொழுது நடைபெற்று வரும் போராட்டத்தை முசுலீம் தீவிரவாத அமைப்புகள் எதுவும் தலைமை தாங்கி நடத்துவதாகத் தெரியவில்லை; இளைஞர்களும் தாய்மார்களும் தன்னெழுச்சியாகத் திரண்டு போராடுகிறார்கள்; போராடுபவர்கள் கைகளில் துப்பாக்கிகள் கிடையாது; மாறாக, தங்களைத் தற்காத்துக் கொள்ள கற்களைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர்; இப்போராட்டத்தை போலீசைக் கொண்டே கட்டுப்படுத்திவிட முடியும்; இராணுவம் தேவையில்லை" எனச் சில நடுநிலையான பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.  உண்மை இப்படியிருக்க, அம்மாநிலத் தலைநகர் சீறிநகரை இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டிய அவசியமென்ன?
ஈராக்கில் 166 பேருக்கு ஒரு சிப்பாய் என்ற எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவம் இறக்கிவிடப்பட்டிருக்கும்பொழுது, காஷ்மீரிலோ 20 காஷ்மீரிகளுக்கு ஒரு இந்தியச் சிப்பாய் என்ற எண்ணிக்கையில் இந்திய இராணுவம் இறக்கிவிடப்பட்டுள்ளது.  அதனை அமெரிக்க ஆக்கிரமிப்பு எனும்பொழுது, காஷ்மீர் நிலையை இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு எனக் குறிப்பிடாமல் வேறெப்படிக் கூற முடியும்?
****
தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரிலும், பாகிஸ்தான் தூண்டிவிடும் தீவிரவாதத்தை ஒடுக்குவது என்ற பெயரிலும் திணிக்கப்பட்டுள்ள இந்த ஆக்கிரமிப்பு, எப்படிபட்ட அநீதியை காஷ்மீர் மக்களுக்கு இழைத்து வருகிறது தெரியுமா?
1990-ஆம் ஆண்டு தொடங்கி 2007-ஆம் ஆண்டு முடியவுள்ள 17 ஆண்டுகளில் இந்திய இராணுவமும் துணை இராணுவப் படைகளும் அம்மாநில போலீசும் நடத்திய துப்பாக்கி சூடுகள், போலி மோதல்கள், இரகசியக் கொலைகள், கொட்டடிச் சித்திரவதைகளில் ஏறத்தாழ 70,000-க்கும் மேற்பட்ட காஷ்மீரிகள் கொல்லப்பட்டுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 8,000 காஷ்மீரிகள் சுவடே தெரியாமல் 'காணாமல்' போய்விட்டனர்.  அப்படைகள் நடத்தியிருக்கும் பாலியல் வல்லுறவுகள் இந்தக் கணக்கில் அடங்காது.
அம்மாநிலத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக அமலில் இருந்துவரும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவச் சிப்பாய்கள் மீது, இந்திய அரசின் அனுமதியின்றி அம்மாநில அரசு புகார்கூடச் செய்ய முடியாது என்ற பாதுகாப்பை வழங்கியிருக்கிறது. தேசிய நலன் என்ற பெயரில் இராணுவச் சிப்பாய்கள் நடத்தும் கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு பற்றி காஷ்மீரத்தைச் சேர்ந்த யாராவது ஒருவர் புகார் கொடுக்க வேண்டும் என்றால், அவர் முதலில் "தான் இந்திய தேசிய நலனுக்கு எதிராகச் செயல்பட்டதில்லை" என்று நிரூபித்தாக வேண்டும்.
காஷ்மீர் மக்கள் ஒவ்வொரு நாளும் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்களைச் சந்தித்து வரும்பொழுது, மைய அரசோ கடந்த பதினேழு ஆண்டுகளில் இராணுவச் சிப்பாய்களுக்கு எதிரான வெறும் 458 வழக்குகளைத்தான் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.  இதே காலத்தில் இந்திய இராணுவத்தின் மனித உரிமைப் பிரிவு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட 1,321 வழக்குகளில் 54 வழக்குகளைத் தவிர பிற வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
காஷ்மீர் மக்கள் பல போராட்டங்களை நடத்திய பிறகுதான்,  இவ்வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பதையும், இப்போராட்டங்களின்பொழுது நூற்றுக்கணக்கான காஷ்மீரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.  இப்படி காஷ்மீர் மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் இந்திய அரசையும் அதனின் இராணுவத்தையும் வெளியேறக் கோரி அம்மக்கள் போராடுவது தேச விரோதச் செயல் என்றால், கொலையும், கொள்ளையும், பாலியல் வன்புணர்ச்சியும்தான் தேச நலனின் பொருளாகிவிடுகிறது.
காஷ்மீர்
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 'காணாமல் போனவர்களின்' புகைப்படங்களைப் பார்ர்த்து விம்மியழும் காஷ்மீரத்துத் தாய்
இந்திய அரசுக்கு எதிராக காஷ்மீர் மக்கள் கடந்த இருபது ஆண்டுகளாக நடத்திவரும் போராட்டத்தில் பாகிஸ்தானின்  ஆதரவு பெற்ற முசுலீம் தீவிரவாத அமைப்புகளின் பங்கு இருப்பதை மறுக்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கும் இந்திய அரசின் இந்து தேசிய வெறிதான் இப்பிரச்சினையின் மூல காரணமாக இருக்கிறது என்பதும்.
இந்திய அரசு, ஐ.நா. மன்றத்தில் ஒப்புக்கொண்டபடி ஜம்மு-காஷ்மீரில் பொதுஜன வாக்கெடுப்பை நடத்தாமல் மறுத்தது; இந்திய அரசியல் சாசனத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சில தனியுரிமைகளை நீர்த்துப் போகச் செய்தது; காங்கிரசு கும்பல் தனது சுயநலனுக்காக அம்மாநிலத்தில் நடத்திய ஆட்சி கவிழ்ப்புகள், தேர்தல் மோசடிகள் – இவைதான் 1980-களின் இறுதியில் காஷ்மீரில் ஆயுதந்தாங்கிய போராட்டம் வெடிப்பதற்கு அடிப்படையாக அமைந்தன.
வரலாற்றை அவ்வளவு பின்னோக்கிப் பார்க்கத் தேவையில்லை.  இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துபோய்விட்டதாகச் சொல்லப்பட்ட பின்னும், கடந்த இரண்டு ஆண்டுகளாக காஷ்மீரில் அடுத்தடுத்து இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்கள் நடந்து வருகின்றன.  அதற்குக் காரணம் பாகிஸ்தானா, இல்லை இந்திய தேசியவாதிகளா?
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரசு-மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி அம்மாநிலத்தை ஆண்டு வந்தபொழுது, அமர்நாத் யாத்ரீகர்கள் தங்கிப் போவதற்காக 39.88 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்கப் போவதாக அக்கூட்டணி ஆட்சி அறிவித்தது.  அமர்நாத் யாத்திரை முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியைத் தூண்டிவிடும் வருடாந்திர நிகழ்ச்சி நிரலாக மாறிப் போனதால், காஷ்மீர் மக்கள் பக்தியின் பெயரால் திணிக்கப்பட்ட இந்த நில ஒதுக்கீடு நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.  உடனே, ஆர்.எஸ்.எஸ். கும்பல் வெளிமாநிலங்களில் இருந்து ஜம்முவிற்கு ஆட்களைத் திரட்டிவந்து எதிர் போரட்டத்தை நடத்தியதோடு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மீது ஒரு சட்டவிரோத பொருளாதார முற்றுகையைத் திணித்தது.  காஷ்மீர் மக்கள் இம்முற்றுகையை முறியடிக்கும் வண்ணம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடப்பது என்ற போராட்டத்தைத் தொடங்கினர்.  இப்போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் பலியான பின்னர், நில ஒதுக்கீடு தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.
இப்போராட்டத்திற்குப் பின் நடந்த தேர்தலில் எதிரெதிராகப் போட்டியிட்ட காங்கிரசும் தேசிய மாநாட்டுக் கட்சியும் தேர்தலுக்குப் பின் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றின.  இந்தச் சந்தர்ப்பவாத ஆட்சிக்கு மக்கள் ஆதரவைத் திரட்டிக் கொள்ளும் முகமாக, "காஷ்மீரில் உள்ள இந்திய இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்படும்; ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும்; அத்துமீறல்கள் குறித்த உண்மை கண்டறியும் குழு நிறுவப்படும்" என்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஒமர் அப்துல்லா.  கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட நிறைவேறவில்லை என்பது ஒருபுறமிருக்க, காஷ்மீர் மக்களின் மீதான இராணுவத்தின் பிடியும், அடக்குமுறையும் கொஞ்சம்கூடக் குறையவில்லை என்பதையும் மக்கள் கண்டனர்.
ஷோபியான் என்ற சிறுநகரைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டது; கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ஜஹித் ஃபாரூக் என்ற 16 வயது சிறுவன் நடுத்தெருவில் நாயைச் சுடுவது போல எல்லைப் பாதுகாப்புப் படையினரால்  சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; கடந்த ஏப்ரல் மாதம் தேசியத் துப்பாக்கிப் படைப் பிரிவினர், மூன்று தொழிலாளர்களை எல்லைப் பகுதிக்குக் கடத்திக்கொண்டு போய்ச் சுட்டுக் கொன்றுவிட்டு, அவர்களை எல்லை தாண்டி வரமுயன்ற தீவிரவாதிகளாக ஜோடனை செய்த சம்பவம் – இப்படி கடந்த இரண்டு ஆண்டுகளில் இராணுவத்தினரும், துணை இராணுவப் படைகளும், காஷ்மீர் போலீசாரும் நடத்திய பல பச்சைப் படுகொலைகள்தான் இப்போராட்டத்தின் தூண்டுகோலாக அமைந்தன.
''துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் ஒடுக்கப்பட்ட பிறகு, மக்களின் விடுதலை உணர்வும் செத்துவிடும்; அடுத்த தலைமுறை இளைஞர்கள் பாலிவுட் திரைப்படங்களிலும், பப் கலாச்சாரத்திலும் மூழ்கிப்போய் விடுவார்கள் என அவர்கள் நினைத்தார்கள்.  ஆனால், எங்களின் விடுதலை வேட்கை கொஞ்சம்கூடக் குறையாமல் இருப்பதைத்தான் இப்போராட்டம் காட்டுகிறது" என காஷ்மீர் மக்களின் மனோநிலையைப் படம் பிடித்துக் காட்டுகிறார், பள்ளத்தாக்கைச் சேர்ந்த புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவர் ஷாத் சலீம்.
காஷ்மீர் மக்களின் தேசிய இன விடுதலை உணர்வுதான் இப்போராட்டத்தின் அடிப்படையாக உள்ளது என்ற உண்மையை மூடிமறைக்க, இப்போராட்டம் பற்றிப் பலவித கட்டுக்கதைகளையும் அவதூறுகளையும் மைய அரசும் அதனை நத்திப் பிழைக்கும் தேசியப் பத்திரிகைகளும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு பரப்பி வருகின்றன. "விரக்தியடைந்த இளைஞர்களின் போராட்டம்" என ஒருபுறம் நையாண்டி செய்துவரும் அக்கும்பல், இன்னொருபுறமோ, "லஷ்கர்-இ-தொய்பாவிடம் 200 ரூபாய்யை வாங்கிக்கொண்டு நடத்தப்படும் கூலிப் போராட்டம்" என அவதூறு செய்து வருகிறது.
சோபுர் நகரில் கடந்த ஜுன் 29 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது மத்திய ரிசர்வ் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 வயது சிறுவன் கொல்லப்பட்டான். "அவன் அப்பாவி கிடையாது; கூலிக்காக வேலை செய்யும் போக்கிரி" என அச்சிறுவனைப் பற்றிக் கூறியிருக்கிறார், உள்துறை அமைச்சகச் செயலர்.  இப்படி வக்கிரமும், காலனியாதிக்க ஆணவமும் நிறைந்த இந்திய அரசை வெளியேறக் கோருவது எந்த விதத்தில் தவறாகிவிடும்?
பதாமாலூ என்ற ஊரைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தனது வீட்டை விட்டு வெளியே வருவதைப் பார்த்த இராணுவச் சிப்பாய்கள், துப்பாக்கியை நீட்டியபடியே அவனை நோக்கிப் பாய்ந்து வந்து, "உன்னைக் கொன்று விடுவோம்" என மிரட்டியுள்ளனர்.  அரண்டு போய் வீட்டுக்குள் ஓடிப்போன அந்தச் சிறுவன் பயத்தில் அடுத்த பத்து நிமிடங்களுக்கு ஒரு வார்த்தைகூடப் பேச முடியாத ஊமையாகிப் போனான்.  ஐந்து வயதுச் சிறுவனைக் கொன்றுவிடுவோம் என மிரட்டும் இந்திய இராணுவம் காஷ்மீரில் யாரைக் காப்பாற்ற நிற்கிறது?
இந்தக் கேள்வியை காஷ்மீருக்கு வெளியேயுள்ள பெரும்பாலான "இந்தியர்கள்" எழுப்ப மறுக்கிறார்கள். "அவர்கள் காஷ்மீர் பற்றி பொய் சொல்கிறார்கள்; தங்களின் சொந்தப் பொய்யைத்தான் அவர்கள் நம்புகிறார்கள்" என இத்தகைய இந்தியர்களைப் பற்றிக் கூறுகிறார், டெல்லியில் வாழும் காஷ்மீரைச் சேர்ந்த இளைஞர்.
காஷ்மீர்
காஷ்மீர் பற்றிய உண்மை நிலவரம் வெளியே தெரியக்கூடாது என்ற நோக்கில், இந்திய இராணுவம் உள்ளூர் செய்தி ஊடகங்கள் மீது விதித்துள்ள கட்டுப்பாட்டுகளைக் கண்டித்து பத்திரிக்கையாளகர் நடத்தும் ஆர்பாட்டம்
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடந்த ஜுன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் முதல் வாரத்திற்குள் 800-க்கும் மேற்பட்ட அரசியல் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் இசுரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தி வரும் இண்டிஃபதா போராட்டத்தைத்தான் இது நமக்கு நினைவூட்டுகிறது. சமூகம் தழுவிய ஆதரவோடு நடைபெற்று வரும் இப்போராட்டங்களை, இராணுவ அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்துவதன் மூலம் ஒடுக்கிவிட முடியும் என ஆளுங்கட்சி காங்கிரசும், எதிர்க்கட்சியான பா.ஜ.க.-வும் ஒரேவிதமாக எண்ணுகின்றன.
ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 60-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.  தங்களைத் தற்காத்துக் கொள்ள இராணுவம்-துணை இராணுவப் படைகள் மீது கற்களை வீசியெறியும் இளைஞர்கள், மரண தண்டனைகூட விதிக்கப்படும் சாத்தியமுள்ள, "அரசின் மீது போர் தொடுத்த" குற்றப்பிரிவின் கீழ் கைது செய்யப்படுகிறார்கள்.  இந்த அடக்குமுறையை எதிர்த்து நிற்கும் நெஞ்சுரத்தையும் தியாக உணர்வையும் 200 ரூபாய் கூலிப் பணத்தால் ஊட்டிவிட முடியுமா?  விடுதலை உணர்வால் உந்தித் தள்ளப்படும் அந்த இளைஞர்கள் தமது மனங்களிலிருந்து பயம் என்பதையே அகற்றி விட்டார்கள் என்கிறார், ஹுரியத் மாநாட்டு கூட்டணியைச் சேர்ந்த தலைவரான சையத் ஷா கீலானி.
காஷ்மீரில் ஒரு தற்காலிக அமைதியை ஏற்படுத்த வேண்டுமென்றால்கூட, "ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெறுவது; இராணுவத்தையும், துணை இராணுவப் படைகளையும் திரும்ப அழைத்துக் கொள்வதோடு, காஷ்மீர் போலீசு துறையில் உருவாக்கப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கை குழுவைக் கலைப்பது; மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளைத் தண்டிப்பது" ஆகிய குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற மைய அரசு முன்வர வேண்டும்.
ஆனால், மைய அரசோ, இந்த குறைந்தபட்ச அரசியல் கோரிக்கைகளைக்கூட நிறைவேற்ற மறுக்கிறது.  இதற்குப் பதிலாக, பொருளாதார சலுகை என்ற பெயரில் அஞ்சையும் பத்தையும் தூக்கியெறிந்து, இப்போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என இந்திய ஆட்சியாளர்கள் மனப்பால் குடிக்கின்றனர்.  விடுதலை உணர்வை பணத்தால் விலை பேசும் இந்திய அரசின் முட்டாள்தனமான ஆணவம் காஷ்மீரில் பலமுறை தோல்வி கண்டிருக்கிறது.
''காஷ்மீரில் ஒரு அடி மண்ணைக்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்" எனத் தேசிய வெறியூட்டும் ஓட்டுக்கட்சிகள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் இந்திய மண்ணைப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கத் தயங்குவதில்லை.  இதனை ஒப்பிட்டுப் பார்த்தாலே ஆளும் கும்பலின் தேசியம் என்பது மாபெரும் மோசடி என்பதைப் புரிந்து கொண்டுவிட முடியும்.
இந்து தேசியவெறி கொண்ட ஓட்டுக்கட்சிகள், அவர்களை நத்திப் பிழைக்கும் தேசிய மாநாட்டுக் கட்சி போன்ற துரோகிகள், போலி மோதல் கொலைகள் மூலம் பணத்தையும் பதவியையும் அள்ளிக் கொள்ளத் துடிக்கும் காக்கிச் சட்டை கிரிமினல்கள் – ஆகியோர்தான் காஷ்மீர் இந்திய அரசின் காலனியாக நீடிப்பதால் இலாபமடையப்போகும் பிரிவினர். போலி தேசியப் பெருமையில் மூழ்கிப் போயுள்ள பிற இந்தியர்களுக்கு ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை எந்தப் பலனையும் அளிக்காது. மாறாக, முசுலீம் தீவிரவாதம் வளர்வதற்கும், பாகிஸ்தான் அதனைத் தூண்டிவிடுவதற்கும், இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர்ந்து முறுகல் நிலை நீடிப்பதற்கும் ஆளும் கும்பலின் காஷ்மீர் கொள்கை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.

காவி பயங்கரவாதம்

இப்போது அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தை..

நமது இந்தியாவின் உள்துறை அமைச்சர் திரு சிதம்பரம் அவர்கள் உச்சரித்த இந்த உண்மையான வார்த்தையைக்கேட்டு, இங்குள்ள மதவெறி நாய்கள் குரைக்க ஆரம்பித்து விட்டன..ஆனாலும் திரு சிதம்பரம் தான் சொல்லிய "காவி பயங்கரவாதம்" என்கிற இந்த வார்த்தையை வாபஸ் பெற முடியாது என்று கூறியதுடன், அது ஆணித்தரமான உண்மைதான் என்றும் சொல்லிவிட்டார்..உண்மையில் சிதம்பரம் இந்த வார்த்தையை மிகவும் தாமதமாகத்தான் சொல்லி இருக்கிறார்..

1947 இல் இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு, வழிபாட்டுத்தலங்கள் அந்த அந்த இடத்திலேதான் இருக்கவேண்டும் என்ற சட்ட திட்டங்களை மீறி, இங்குள்ள மதவெறி நாய்கள் ஐம்பது ஆண்டுக்கும் மேலாக பாபரி மஸ்ஜிதை குறிவைத்து இடித்து தள்ளின.

அத்வானி, உமாபாரதி, பிரவீன் தொகாடியா, வாஜ்பாய், இன்னும் ஏராளமான மதவெறி மிருகங்கள் தலைமையில் பாபரி மஸ்ஜித் இடித்து தள்ளப்பட்டது..அப்போதைய கையாலாகாத காங்கிரஸ் அரசு அதை வேடிக்கைப் பார்த்தது..

அதற்க்கப்புறம் இந்தியாவில் நடைபெற்ற ஒவ்வொரு வன்முறை சம்பவங்களுக்கும், இங்குள்ள மத்திய மாநில அரசுகள்  இஸ்லாமிய தீவிரவாதம் என்று பெயர்சூட்டி மகிழ்ந்தன..அதற்க்கு பத்திரிகை வியாபாரிகளும் ஒத்தூதினார்கள்..

இல்லாத தீவிரவாத இயக்கங்களை இவர்களாக பெயர் வைத்தார்கள்..

ஆனால் ஒரிஜினல் பயங்கரவாத இயக்கமான ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் கிளைகளான பார"தீய" ஜனதா, பஜ்ரங்தல், சிவசேன போன்ற மதவெறி இயக்கங்கள் செய்த அட்டூழியங்களை வெளிக்கொண்டு வர இயலாத கோழைகளாக இநருந்த இங்குள்ள பத்திரிக்கைகள்.


சுதந்திரம் அடைந்த நான்கு மாதங்களுக்குள் இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியை கொன்று மகிழ்ந்த ஆர் எஸ் எஸ் மிருகங்கள்தான் பார"தீய" ஜனதா என்ற பெயரில் இந்தியாவை சில காலம் ஆண்ட அவலம் நடைபெற்றது.

குஜராத்தில் அப்பாவி மக்களை அந்த மாநிலத்தின் முதலமைச்சன் மோடி என்ற மிருகத்தின் உத்தரவின் பேரில் மிருகங்கள் அட்டூழியம் செய்தன..வாஜ்பாய் கைகட்டி நின்றான். அதவானி வாய் மூடி நின்றான்..உமா பாரதி ஒரு சாமியாருடன் காதலில் இருந்தாள்.,, தொகாடியா என்றொரு மிருகம் இங்கே தமிழ்நாட்டில் திருசூலம் வழங்கி, முஸ்லிம் கிறிஸ்துவன், மற்றும் நாத்திகம் பேசுபவனை கொல் என்று குரைத்துவிட்டு சென்றது..

அப்போதும் இங்குள்ள பத்திர்க்கை வியாபாரிகள் ..சினிமாக்காரனுக்கும், கூத்தாடிகளுக்கும் சாமரம் வீசிக்கொண்டு, வாய்மூடி நின்றன...

இதுவரை எந்த கோவில்களிலும் குண்டுகள் வெடிக்கவில்லை..மதுரை மீனாக்ஷி கோவிலில் குண்டு வெடித்தது..ஆபாசபத்திரிக்கைகள் அலறின..இஸ்லாமிய தீவிரவாதம் என்று.. ஆனால் காவல்துறை திறமையாக துப்பறிந்தது..கோவில் வளாகத்தில் கடை வைத்திருப்பவர்களுக்கு மத்தியில் நடைபெற்ற சொந்த காரணங்களுக்காக வைக்கப்பட்ட அந்த குண்டுவெடிப்பை கண்டுபிடித்து, இஸ்லாத்திருக்கும் இதற்கும் சம்மந்தமில்லை என்று அறிவித்தது..

அதேபோல, தென்காசி ஆர் எஸ் எஸ் மதவெறி அலுவலகலத்தில் வெடித்த குண்டு..அதுவும் அந்த ஆர் எஸ் எஸ் மத வெறியர்கள் தாமாகவே வைத்துகொண்டு முஸ்லிம்கள் மீது பழிபோட செய்த நாடகம் என்று கண்டறிந்த காவல்துறை, அந்த வெறிநாய்களை கைது செய்தது. இதையும் இங்குள்ள ஆபாச பத்திரிக்கைகள் கண்டுகொள்ளவில்லை...

அப்புறம் ஹைதேரபாத் மசூதி, மலேகன் மசூதி, அஜ்மீர் தர்கா போன்ற இடகங்களில் குண்டு வெடித்தபோதும், இங்குள்ள மூளை மழுங்கிய பத்திரிகைகள் அதையும் இஸ்லாமிய தீவிரவாதம் என்று அலறின..அந்த மடையர்களுக்கு தெரியாது..தனக்குத்தானே எவனாவது குண்டு வைத்து கொள்வானா என்று?

அப்போதுதான் மும்பையின் ஹேமந்த் கர்கரே, இந்த குண்டு வெடிப்புகளுக்கேல்லாம் காரணம் பிரக்ஞைய தாகூர் என்ற வெறிநாயின் தொடர்பை கண்டுபிடித்தபோதுதான் இந்த மிருகங்களின் முகத்திரை கிழிய ஆரம்பித்தது..ஆர் எஸ் எஸ், பார"தீய" ஜனதா, சிவசேன போன்ற மதவெறி இயக்கங்களைச் சேர்ந்த மிருகங்கள்தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவரது புலனாய்வு அறிக்கை விவரங்கள் வெளிவர ஆரம்பித்தது..மும்பை சம்பவம் நடைபெற்றது..மிருகங்கள் ஹேமந்த் கர்கரே என்ற நேர்மையான ஒரு அதிகாரியை பலி கொண்டன...இதில் சந்தேகம் எழுப்பிய காங்கிரஸ் அமைச்சரின் பதவியே ஆட்டம் கண்டது..

மோடி என்ற மிருகம் சம்மந்தம இல்லாமல் மகாராஷ்டிரா வந்து ஹேமந்த் கர்கரே குடும்பத்திற்கு ஒரு கோடி கொடுப்பேன் என்றது..ஆனால் தமது கணவரின் மரணத்துக்கு இந்த மிருகம் போன்றவர்கள்தான் காரணம் என்று அறிந்த திருமதி கவிதாகர்கரே அந்த அறிவிப்பை அவன் முகத்திலேயே தூக்கி எறிந்தார்..மோடி என்ற மிருகம் அவமானப்பட்டு ஓடியது..


குஜராத்தில் நடந்த பயங்கரவாதத்தை, நரேந்திர மோடி என்ற ஒரு மிருகத்தின் உத்தரவால்தான் அவனது அடிவருடி மிருகங்களும் அப்பாவி மக்களை கொன்றன என்ற உண்மையை வீடியோ ஆதாரமாக "தெகல்கா" இதழ் வெளியிட்டும்கூட அந்த மோடி என்ற மிருகம் இன்னும் குஜராத் முதல்வராக நீடிக்க முடிகிறது..

பாபரி மஸ்ஜிதை இடிப்பதை தூண்டிய அத்வானி, வாஜ்பாயி, உமாபாரதி, தொகாடிய, கல்யாண்சிங் போன்ற ஜந்துக்களும் இன்னும் இன்னும் இந்தியாவில் சுதந்திரமாக அரசு சலுகைகளை அனுபவித்து வர முடிகிறது..

இப்போது கொஞ்சம் கொஞ்சமாக காவி பயங்கரவாதம் வெளிப்பட்டு வருகிறது..

இப்போது மத்திய அமைச்சர் காவி பயங்கரவாதத்தின் உண்மை சொரூபத்தை எடுத்துக்காட்டி விட்டார்..

இன்னும் ஆபாச வியாபாரிகள் இதை கண்டு கொள்ளாமல் இருப்பதை "பத்திரிகை பயங்கரவாதம்" எனலாமா?

ஊர்வலத்தால் ஏற்பட்ட போலீஸ் வினை





பெருநாள் தினத்தை முன்னிட்டு மூனிஸ்டார் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்;ட கால்பந்தாட்டப்போட்டியில் உடுகொட “ஜின்னா” கழகத்தினர் வெற்றிக் கின்னத்தை கைப்பற்றினர். வெற்றியை பரைசாற்றுமுகமாக நேற்று மாலைவேளை ஜின்னாக் கழகத்தினர் எமது ஊரைச்சுற்றி ஊர்வலமாக செல்கின்றபோது கஹடோவிட வடக்கே (ஜிபிரி ஆசிரியர் அவர்களது வீட்டைத் தாண்டி) பாதையின் அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வண்டியொன்றை தள்ளிவிட, அங்கே நின்றுகொண்டிருந்த அதன் உரிமையாளருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சினையாக உருவெடுக்கவே அந்த உரிமையாளர் உடனடியாக 119க்கு அறிவிகத்துள்ளார் ஸ்தளத்திற்கு  போலிஸ் வந்ததுள்ளனர்.
மேலும் சைக்கிள் உரிமையாளர் இச்சம்பவம் சம்பந்தமாக நீதிபதி ஒருவரின் ஆலோசனையைப்ப  பெற்று பொலிஸாரின் வேண்டுகோளிற்கிணங்க நிட்டம்புவப் பொலிஸில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.  மேலும் மோதலிற்குக் காரணமானவர் தான் உடுகொடையைப் பிறப்பிடமாகக் கொண்டதாகவும் தான் யாருக்கும் பயமில்லை என்றும் கூறியிருக்கிறார்.

குரானை எரிக்க மாட்டோம்- பாதிரியார்

 
திட்டம் கைவிடப்பட்டது - பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ்
திட்டம் கைவிடப்பட்டது - பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ்

அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெற்று ஒன்பது ஆண்டுகள் இன்றோடு நிறைவடைந்துள்ள நிலையில், இரட்டை கோபுரங்கள் இருந்த இடமான கிரவுண்ட் ஜீரோ அருகே இஸ்லாமிய நிலையம் ஒன்று கட்டப்படும் என்று திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குரானை எரிக்கப் போவதாக கூறியிருந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அத்திட்டம் முற்றாக கைவிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஆனால் குறிப்பிடப்படும் அந்த இஸ்லாமிய நிலையத்தின் மத போதகரான அப்துல் ராஃப், அமைதி வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்களிடம் தான் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் பாதிரியார் டெர்ரி ஜோன்ஸை சந்திக்கும் திட்டம் எதுவும் தனக்கு இப்போது இல்லை என்றும் குறிப்பிட்டார்.

முன்னதாக குரானை எரிக்கப் போவதாக பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் கூறியதை தொடர்ந்து முஸ்லிம் நாடுகளில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அமெரிக்க பாதுகாப்புதுறை செயலர், அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ உள்ளிட்டவர்கள் திட்டத்தை கைவிடுமாறு டெர்ரி ஜோன்ஸை கேட்டு கொண்டிருந்தனர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்ற மதத்தவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

 

பெருநாள் தினத்தில் ஊரைப் பிரித்த பெருநாள் குத்பா உரை!

அல்லாஹ்வின் அருளால் புனித நோன்பை சிறப்பாகக்கழித்துவிட்டு ஈகைத் திருநாளை அனைவரும ஒரு நாளில் கொண்டாடும் சிறந்த சந்தர்ப்பத்தை நாம் இன்று பெற்றோம். இந்த மகிழ்ச்சியில் மண்ணை அள்ளிப்போடும் விதமாக கஹட்டோவிட முஹியத்தீன் மஸ்ஜிதில் இடம்பெற்ற பெருநாள் குத்பா அமைந்ததாக பலரும் கவலை தெரிவித்தனர். எமதூரின் தௌஹீத்வாதிகள் பெருநாளன்று சொல்லும் தக்பீரை சுருக்கி விட்டதாகவும் மார்க்க விடயங்களில் கஞ்சத்தனம் காட்டுவதாகவும் அவர் படுமோசமாக விமர்சித்தது மட்டுமின்றி தௌஹீத்வாதிகள் மடையர்கள் என்றும் பகிரங்கமாக மிம்பர் மேடையில் முழங்கினார். இவரின் இக்குத்பா உரையை கேட்காமல் நடுநிலையில் சிந்திக்கும் பலர் எழுந்து சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பெருநாள் தினத்தில் அடுத்தவர்களை விமர்சிப்பது முறையல்ல என்று அந்த நடுநிலைவாதிகள் கருத்துத் தெரிவித்தனர். எமதூர் மக்களிடையே கொள்கை ரீதியாக பல பிரிவினர்கள் இருந்தாலும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டிக்கொள்ளாமல் ஒற்றுமையாக அவரவர் பாட்டில் அவரவரது முறைப்படி அமல் செய்து கொண்டு வருகின்றனர். இந்த ஒற்றுமையில் விரிசலை ஏற்படுத்துவதாக அவரது உரை அமைந்தமை பலரும் கவலை தெரிவித்தனர். அவர் இவ்வாறு பேசுவதற்கான உள்நோக்கம் பள்ளி நிர்வாக சபையை திருப்திப்படுத்தவா? அல்லது இரு தரப்பினரையும் மோதவிட்டு அதில் இன்பம் காணவா?

களைகட்டும் கஹட்டோவிடாவின் ஈகைத் திருநாள்

“தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!”

புனித நோன்புப் பெருநாள் கொண்டாட்டங்கள் வழமை போன்று கஹட்டோவிடாவில் இம்முறையும் களை கட்டியுள்ளது என்றால் மிகையாகாது. சர்வதேசப் பிறை, உள்ளுர் பிறை என்ற எவ்விதச் சர்ச்சைகளுமின்றி அனைவரும் ஒன்றாக பெருநாள் கொண்டாடும் இந்நிகழ்வு பலரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.

வழமைபோன்று தஃவாப் பள்ளியில் பெருநாள் தொழுகை காலை 7 மணிக்கு அல் பத்ரியா மைதானத்தில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளன.
அதேபோன்று தரீக்காப் பள்ளி வாசல்களிலும் காலை 7.30இற்கு தொழுகை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.


இவ்வாறே கஹட்டோவிட சார்லங்காவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பள்ளி வாசலிலும் பெருநாள் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கப்பெற்றுள்ளது. மேலும் பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து பெருநாள் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கஹட்டோவிட தரீக்காப் பள்ளிவாசல்களில் 27ஆம் இரவுக் கொண்டாட்டம்

பாக்கியம் பெற்ற அந்த இரவினை நாம் எல்லோரும் அடைய வேண்டும் என்ற பேராவலுடன் நேற்றைய தினம் முஹியத்தீன் மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுன் நுர் பள்ளிவாசல்களில் விசேட 27ஆம் இரவுக் கொண்டாட்ட வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முஹியத்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் மாவனல்லையைச் சோ்ந்த மௌலவி மபாஸ் அவர்கள் விசேட உரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய உரையில் எமதூரில் அடங்கப் பெற்றிருக்கும் பாதிப் மௌலானாவின் சிறப்புக்களை எடுத்துக் கூறினார். பாதிப் மௌலானாவுடன் தொடர்பு பட்ட மாட்டுடனான கராமத்தையும் ஞாபகமூட்டினார். இவரின் உரையின் பின்னர் தவ்பா சொல்லிக் கொடுக்கப்பட்டு மக்களும் அதை மீளச் செப்பி பாவமீட்சி பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறே சாதுலிய்யாத் தரீக்காவின் பள்ளி வாசலான மஸ்ஜிதுன் நுரிலும் விசேட 27ஆம் இரவுக் கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் பிரதானமாக ஹழரா ஸிக்று மஜ்லிஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்கது.
பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் 27ஆம் இரவு நிகழ்வுகள் எவ்வித மாற்றங்களுமின்றி இவ்வருடமும் நடைபெற்றதாக இரு பள்ளி வாசல்களினதும் நிர்வாகமும் அறிவித்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உடுகொட அறபாவில் மாணவர்கண்காட்சி

நமது ஊரின் அயலூரான உடுகொட அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் எதிர்வரும் 14.09.2010 செவ்வாக்கிழமையன்று தரம் 10 மாணவர்களினால் ஏற்பாடு செய்துள்ள கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது. கணிதம், விஞ்ஞானம், தமிழ், வரலாறு, ஆங்கிலம், இஸ்லாம் போன்ற பாடப்பரபபுக்;களை உள்ளடக்கியதாக இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. பாடசாலையின் கற்றல்; நடவடிக்கைகளிற்குப் புறம்பாக இவ்வாறான விடயங்களும் மாணவர்களில் மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொணர்வதற்கான ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

Fwd: சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.

 
கடந்த 10 நாட்களாக பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டதாகும்.

குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி மாத்தரையில் கம்புருபிட்டிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவ குழு ஆரியவதியின் உடலில் கிட்டத்தட்ட 23 ஆணிகள் ஏற்றப் பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

23 ஆணிகளும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்ட சவுதியைச் சேர்ந்த தம்பதியினரை சவுதி அரசு கைது செய்துள்ளது.

இந்தச் செய்தி கடந்த சில தினங்களாக இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சிங்கள மக்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணத்தையும் உண்டு பண்ணியது.

ரூபா 75000ம் மருத்துவ உதவி வழங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.

கடந்த 01.02.2010 செவ்வாய் கிழமையன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிருவாகிகள் ஆரியவதியை சந்திப்பதற்காக அவருடைய சொந்த ஊருக்கே சென்றனர்.

அங்கு ஆரியவதியைச் சந்தித்த ஜமாத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆரியவதியின் மருத்துவ செலவுக்காக 75000 (எழுபத்தி ஐயாயிரம்) ரூபாவை அவரிடத்தில் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள்களுக்கு பேட்டியளித்த ஜமாத்தின் தலைவர் ரியால் அவர்கள்  சகோதரி ஆரியவதிக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை கடுமையாக கண்டிப்பதுடன் இஸ்லாத்திற்கும் குறிப்பிட்ட சவுதிய தம்பதின் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சிங்கள மொழியில் பேட்டியளித்த ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் இஸ்லாம் மனித நேயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கினார்.

பூனைக்கு தண்ணீர் கொடுத்ததின் மூலம் ஒரு பெண் சுவர்கம் சென்றதையும் உணவு கொடுக்காமல் சாகடித்ததின் மூலம் ஒரு பெண் நரகம் சென்றதையும் எடுத்துக் காட்டி நபியவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள் இஸ்லாம் மனித நேயத்தினை வலியுருத்தும் மார்க்கம் அதனால் இந்த செயலை நாம் நமது ஜமாத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சிரச நியுஸ் பெஸ்டின் செய்தியாளர் இஸ்லாத்தின் இந்தக் கொள்கை தாம் அதிகம் நேசிப்பதாகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மிக முக்கியமான பணியைத்தான் செய்திருப்பதாகவும் கூறி பாராட்டுத் தெரிவித்தார்.

 லங்கா தீப என்ற இலங்கையின்  பிரபல சிங்களப் பத்திரிக்கையின் செய்தியும் புகைப்படமும்.
முஸ்லீம்கள் சார்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆரியவதியை சந்திக்க வந்தது தனக்கு மிக சந்தோஷமாக இருப்பதாக லங்காதீப என்ற சிங்கள பத்திரிக்கையின் செய்தியாளர் குறிப்பிட்டார்.
தகவல் தௌஹீத் சகோதரர்
 
பிந்திய செய்திகள்

 ஆரியவதி ஆணிகளை தனது உடலில் தானே அடித்துக் கொண்டார்

சவூதி அரேபியாவில் வேலை செய்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி தாமாகவே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டுள்ளதாக மருத்துவரும் ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரித் மென்டிஸ் Dr.Susirith Mendis  தெரிவித்துள்ளார். இதன் மூலம் சவூதியில் ஆரியவதி சித்திரவதைகளை அனுபவிக்கவில்லை என்று நான் கூற வரவில்லை என்றும் சவூதி தம்பதிகளிடம் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஆரியவதி அப்படி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். மருத்துவ வரலாற்றில் ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக இம்மாதிரியான சம்பவங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆரியவதி உளப் பாதிப்புக் காரணமாகவும் இவ்வாறு நடந்திருக்கலாம் மருத்துவர்கள் ஆரியவதியை உள ரீதியாகக பரிசோதிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரப் நியூஸ் Arab News-பத்திரிகைற்கு வழங்கிய தொலைபேசி பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

தகவல் அராப் நியுஸ்