கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட தரீக்காப் பள்ளிவாசல்களில் 27ஆம் இரவுக் கொண்டாட்டம்

பாக்கியம் பெற்ற அந்த இரவினை நாம் எல்லோரும் அடைய வேண்டும் என்ற பேராவலுடன் நேற்றைய தினம் முஹியத்தீன் மஸ்ஜித் மற்றும் மஸ்ஜிதுன் நுர் பள்ளிவாசல்களில் விசேட 27ஆம் இரவுக் கொண்டாட்ட வைபவங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. முஹியத்தீன் பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவத்தில் மாவனல்லையைச் சோ்ந்த மௌலவி மபாஸ் அவர்கள் விசேட உரை நிகழ்த்தினார். அவர் நிகழ்த்திய உரையில் எமதூரில் அடங்கப் பெற்றிருக்கும் பாதிப் மௌலானாவின் சிறப்புக்களை எடுத்துக் கூறினார். பாதிப் மௌலானாவுடன் தொடர்பு பட்ட மாட்டுடனான கராமத்தையும் ஞாபகமூட்டினார். இவரின் உரையின் பின்னர் தவ்பா சொல்லிக் கொடுக்கப்பட்டு மக்களும் அதை மீளச் செப்பி பாவமீட்சி பெற்றுக் கொண்டனர்.

இவ்வாறே சாதுலிய்யாத் தரீக்காவின் பள்ளி வாசலான மஸ்ஜிதுன் நுரிலும் விசேட 27ஆம் இரவுக் கொண்டாட்டங்கள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் பிரதானமாக ஹழரா ஸிக்று மஜ்லிஸ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தகக்கது.
பரம்பரை பரம்பரையாக தொடர்ந்து வரும் 27ஆம் இரவு நிகழ்வுகள் எவ்வித மாற்றங்களுமின்றி இவ்வருடமும் நடைபெற்றதாக இரு பள்ளி வாசல்களினதும் நிர்வாகமும் அறிவித்துள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

6 comments:

Anonymous said...

assalamu alaikum
enakku mowlavi mujahid edam oru kelvi kettu theliwu pera wendum azakku ungalazu inayaththalam idam alikkuma ?

BlogEditor said...

சகோதரரே உங்களுக்கு முஜாஹித் மௌலவியிடம் ஏதேனும் கேள்விகள் கேட்க விரும்பமிருந்தால் அவருடைய வெப்தளத்தினுடாக அவரை அனுகலாம். இந்தத் தளத்தை அவர்தொடர்ந்து வாசிக்கிறாரா இல்லையாவென்று எங்களுக்கு உறுதியாகக் கூறமுடியாது.

ஊரான் said...

இன்று முஹியத்தீன் பள்ளியில் பெண்களுக்கான ஒரு இப்தார் ஏற்பாடு செய்திருந்தார்கள். மேலும் இம்முறை நடு இரவில் கியாமுல்லைலும் தொழுவித்தார்கள். சென்ற வருடங்களில் இப்பள்ளியில் இப்படியிருக்கவில்லை. தஃவாப் பள்ளியுடன் ஏட்டிக்குப்போட்டியாகவாவது செய்து முன்னேற்றங்கண்டால் பரவாயில்லை

Anonymous said...

நபியவர்களிற்குக் கூட புனித லைலதுல் கத்ர் இரவு எப்போதென்று அறிவிக்கப்படவில்லை. ஆனால் இந்த எமதூர் மௌலவிமார்களிற்கு யார்தான் 27ஆம் இரவில் கத்ர் இரவு என்று வஹி அறிவித்தார்களோ தெரியாது. எல்லாம் வயித்துப் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்டுள்ள சம்பிரதாயங்கள்

zafran said...

27ம் இரவுக் கொண்டாட்டம் அது சரி அந்த இரவில் மபாஸ் மௌலவி அவர்களது உரையையும் சற்று விரிவாக கொடுத்திருந்தாள் நீங்களும் லைலதுல் கத்ர் இரவை சிறப்பித்தவர்களின் பட்டியலில் இடம்பெற்றிருப்பீர்கள். முடியுமென்றால் மபாஸ் மௌலவி அவர்கள் குர்ஆன் ஸூன்னாவைப் படித்து மௌலவி யானாரா? அல்லது பாதிப் மௌலானாவின் சரித்திரத்தில் விசேட பட்டம் பெற்றாறா? அவருக்கு பக்கவாத்தியம் பாடியிருந்தார் குலாம் மௌலவி தாடிக்கேத்த மூடியென்பது இதுதானோ?

Anonymous said...

அடே அது தாடி இல்லடா. ஜாடி

Post a Comment