கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிளை 10 முட்கம்பி வேலிகள்

நீண்ட இடைவேளைக்குப்பின் கிளை விரித்திருக்கிறது நமது இலக்கிய விருட்சம்.........

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....

கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக் கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

முட்கம்பி வேலிகள்
ரம்பையும் கறிவேப்பிலையும் வேகும் வாசம் மூக்கைத்துளைக்க அதை எடு இதை பிடி என்று தலைமை சமயற்காரர் கர்ச்சிக்கிறார் நெருப்பின் அனலில் வியர்த்து விருவிருத்துப்போன அவரின் அனலில் அயலவரும்வியர்த்து விட்டனர்

அரிசைக்கழுவ வாழைக்காய் பொறிக்க வெங்காயம் வெட்ட ………தடதடவென சமயலேற்பாடுகள் அட்டகாசமாய் இருக்க வீடோ திருவிழாக்கண்டது போல மங்களகரமாய் பிரகாசிக்கிறது.என்ன இங்கு ஒரே கூட்டமா இருக்கிறது ஏதோ கல்யாணக் காட்சி போல என்று யாரோ கிசுகிசுப்பது சமயற்காரர் காதிலும்

விழுந்தது போலும் அக்கம் பக்கம் கேட்டுப்பார்த்தா

ல் அடுத்த நாள் கல்யாணமாம் கல்யாணத்துக்கொருநாள் இடைவெளி இருக்க அதுவென்ன இன்றைக்கு இவ் ஏற்பாடாம் என்றதும் கல்யாணத்திற்கு முன்னாலிரவில் குடலும் பறுப்பும் சேர்த்தொரு விருந்து படைக்கும் வழமையுண்டாம் இதுதான் அதுவாம் என்று விளக்கம் சொன்னார்.சடங்காம் சம்பிரதாயமாம் திருமணத்தைச்சுற்றி எத்தனையோ முற்கம்பி வேலிகள் வாழ்வோரை வாழவிடாது யாரோ போட்ட பழங்காலத்து வழமைகளை இவர்கள் துக்கிப்பிடிக்கிறார்கள் ஆயிரம் ஆண்மாக்களை சாகடித்த இந்த சம்பிரதாயங்களை வாழவைக்கிறார்கள். பாவம் அந்த இளைர்கள் திருமணச்செலவுகளை நினைத்த மாத்திரத்திலே நரைத்துவிட்டார்கள் திருமணமலர்களை சம்பிரதாய வேலிகளைப்போட்டு நசுக்கிவிடாதீர்கள் . சாந்திமார்க்கமாம்

இஸ்லாம் கூறும் நன்நெறிகளால் நறுமனம் கமழ விடுங்கள். ஊருக்கெல்லாம் பந்தி வைக்கும் செலவுகளைச்சேர்த்து இத்தம்பதிகளுக்கு கொடுத்துவிடுங்கள் வாழ்கையெனும் வானில் சிறகடிக்கப் போகும் அவர்களின் பயணக்கட்டுச்சாதனங்களுக்காவது அது உதவட்டும்.

0 comments:

Post a Comment