கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

Fwd: சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.

 
கடந்த 10 நாட்களாக பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டதாகும்.

குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி மாத்தரையில் கம்புருபிட்டிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவ குழு ஆரியவதியின் உடலில் கிட்டத்தட்ட 23 ஆணிகள் ஏற்றப் பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

23 ஆணிகளும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்ட சவுதியைச் சேர்ந்த தம்பதியினரை சவுதி அரசு கைது செய்துள்ளது.

இந்தச் செய்தி கடந்த சில தினங்களாக இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சிங்கள மக்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணத்தையும் உண்டு பண்ணியது.

ரூபா 75000ம் மருத்துவ உதவி வழங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.

கடந்த 01.02.2010 செவ்வாய் கிழமையன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிருவாகிகள் ஆரியவதியை சந்திப்பதற்காக அவருடைய சொந்த ஊருக்கே சென்றனர்.

அங்கு ஆரியவதியைச் சந்தித்த ஜமாத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆரியவதியின் மருத்துவ செலவுக்காக 75000 (எழுபத்தி ஐயாயிரம்) ரூபாவை அவரிடத்தில் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள்களுக்கு பேட்டியளித்த ஜமாத்தின் தலைவர் ரியால் அவர்கள்  சகோதரி ஆரியவதிக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை கடுமையாக கண்டிப்பதுடன் இஸ்லாத்திற்கும் குறிப்பிட்ட சவுதிய தம்பதின் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சிங்கள மொழியில் பேட்டியளித்த ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் இஸ்லாம் மனித நேயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கினார்.

பூனைக்கு தண்ணீர் கொடுத்ததின் மூலம் ஒரு பெண் சுவர்கம் சென்றதையும் உணவு கொடுக்காமல் சாகடித்ததின் மூலம் ஒரு பெண் நரகம் சென்றதையும் எடுத்துக் காட்டி நபியவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள் இஸ்லாம் மனித நேயத்தினை வலியுருத்தும் மார்க்கம் அதனால் இந்த செயலை நாம் நமது ஜமாத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சிரச நியுஸ் பெஸ்டின் செய்தியாளர் இஸ்லாத்தின் இந்தக் கொள்கை தாம் அதிகம் நேசிப்பதாகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மிக முக்கியமான பணியைத்தான் செய்திருப்பதாகவும் கூறி பாராட்டுத் தெரிவித்தார்.

 லங்கா தீப என்ற இலங்கையின்  பிரபல சிங்களப் பத்திரிக்கையின் செய்தியும் புகைப்படமும்.
முஸ்லீம்கள் சார்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆரியவதியை சந்திக்க வந்தது தனக்கு மிக சந்தோஷமாக இருப்பதாக லங்காதீப என்ற சிங்கள பத்திரிக்கையின் செய்தியாளர் குறிப்பிட்டார்.
தகவல் தௌஹீத் சகோதரர்
 
பிந்திய செய்திகள்

 ஆரியவதி ஆணிகளை தனது உடலில் தானே அடித்துக் கொண்டார்

சவூதி அரேபியாவில் வேலை செய்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி தாமாகவே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டுள்ளதாக மருத்துவரும் ருஹுனு பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரித் மென்டிஸ் Dr.Susirith Mendis  தெரிவித்துள்ளார். இதன் மூலம் சவூதியில் ஆரியவதி சித்திரவதைகளை அனுபவிக்கவில்லை என்று நான் கூற வரவில்லை என்றும் சவூதி தம்பதிகளிடம் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஆரியவதி அப்படி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். மருத்துவ வரலாற்றில் ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக இம்மாதிரியான சம்பவங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆரியவதி உளப் பாதிப்புக் காரணமாகவும் இவ்வாறு நடந்திருக்கலாம் மருத்துவர்கள் ஆரியவதியை உள ரீதியாகக பரிசோதிக்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அரப் நியூஸ் Arab News-பத்திரிகைற்கு வழங்கிய தொலைபேசி பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

தகவல் அராப் நியுஸ்



12 comments:

Anonymous said...

கஹோடோவிட நிர்வாகி ....
இந்த தவ்ஹீத் ஜமாத் முந்தி விட்டார்கள்.இதனால் சவுதி அரபிகள் கொடுமைக்கரனுகள் எண்ட ஒரு நானா நிலையை சிங்களவர்க ளிடம் ஏற்படுத்தி விட்டார்கள் . இந்த ஜாமாதுக்கு தெரியும், ஒருவன் ஒரு செய்தி கொண்டு வந்தால் உண்மையை அறிய அதை தீர விசாரிக்க வேண்டும் , இது இஸ்லாமிய கடமை என.
தெரிந்து கொண்டே முந்தி விட்டனர்.ஏன் நல்ல பெயர் எடுக்கவா ? நல்ல பெயர் இறைவனிடம் முதல் எகுக்க வேண்டும்..அப்போதுதான் வெற்றி வரும்..எப்படியோ,பரவாயில்லை கொடுத்துவிட்டார்கள்.அது தர்மமாக அவர்களுக்கு எழுதப்படும் இஹ்லாசுடன் கொடுத்து இருந்தால்
ஆனால், இந்த பெண் வாக்குமூலங் களை கவனமாக சிந்திக்க வேண்டு கின்றேன்..மேலும் வைத்தியர்கள் விசாரிக்கின்றார்கள். என அந்த ஜமாத்திடம் கூறுங்கள்.
நேற்றைய செய்தி தருகின்றேன் .இதை பிரசுரியுங்கள்.......

ஆரியவதி தானே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டார்
ஆரியவதி தானே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டார்

September 6, 2010 12:05 pm
Bookmark and Share
சவூதி அரேபியாவில் வேலை செய்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி தாமாகவே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த மருத்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

சவூதி எஜமானத் தம்பதிகளிடம் இருந்து தப்பிக் கொள்கின்றமைக்காக ஆரியவதி அப்படி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக இம்மாதிரியான சம்பவங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆரியவதி உளப் பாதிப்புக் காரணமாகவும் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய தொலைபேசி பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்


A senior Sri Lankan physician and university lecturer said in a telephone interview on Sunday that the maid found with nails and needles embedded in her body could have inflicted the damage to herself.

“I wish to make it clear that this is not to say that she has not been tormented or tortured by her employer in Saudi Arabia,” said Dr. Susirith Mendis from the University of Ruhuna. “It is possible that she self-embedded the nails (and needles) as a way to escape from her employer.”

Anonymous said...

கஹோடோவிட நிர்வாகி .......... இந்த தவ்ஹீத் ஜமாத் முந்தி விட்டார்கள்......இதனால் சவுதி அரபிகள் கொடுமைக்கரனுகள் எண்ட ஒரு நானா நிலையை சிங்களவர்களிடம் ஏற்ற்படுத்தி விட்டார்கள்........ இந்த ஜாமாதுக்கு தெரியும் ....... ஒருவன் ஒரு செய்தி கொண்டு வந்தால் உண்மையை அறிய அதை தீர விசாரிக்க வேண்டும் , என . இது இஸ்லாமிய கடமை ......... தெரிந்து கொண்டே முந்தி விட்டனர்..... ஏன் நல்ல பெயர் எடுக்கவா ? நல்ல பெயர் இறைவனிடம் முதல் எகுக்க வேண்டும்....... அப்போதுதான் வெற்றி வரும்.....எப்படியோ, .....
.. பரவாயில்லை ......கொடுத்துவிட்டார்கள்.........அது தர்மமாக அவர்களுக்கு எழுதப்படும்.....

ஆனால், இந்த பெண் வாக்குமூலங்களை கவனமாக சிந்திக்க வேண்டுகின்றேன்.......... மேலும் வைத்தியர்கள் விசாரிக்கின்றார்கள். என .... அந்த ஜமாத்திடம் கூறுங்கள்........ நேற்றைய செய்தி தருகின்றேன்......... இதை பிரசுரியுங்கள்.......
சவூதி அரேபியாவில் வேலை செய்த இலங்கைப் பணிப் பெண் ஆரியவதி தாமாகவே உடலில் ஆணிகளையும் ஊசிகளையும் அடித்துக் கொண்டுள்ளதாக இலங்கையைச் சேர்ந்த மருத்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளருமான சுசிரித் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

சவூதி எஜமானத் தம்பதிகளிடம் இருந்து தப்பிக் கொள்கின்றமைக்காக ஆரியவதி அப்படி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறி உள்ளார். ஏனையவர்களின் கவனத்தை ஈர்க்கின்றமைக்காக இம்மாதிரியான சம்பவங்கள் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

ஆரியவதி உளப் பாதிப்புக் காரணமாகவும் இவ்வாறு நடந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். சவூதி அரேபியாவின் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய தொலைபேசி பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
DOCTORE ARE INVESTIGATING THIS WOMAN..... WE WILL GET THE TRUE STORY SOON....

Anonymous said...

பாதையில் நடந்து சென்ற முதியவர் திடீரென மறைவு – அதிகாலையில் சம்பவம்

இன்று அதிகாலையில் கியாமல்லைல் தொழுகை முடிந்து வீட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த மௌலவி பைரூஸ் மௌலானா மாவத்தைப் பாதைக்கு அண்மையில்(சாவன்னா கடைக்கு முன்னால்) வெள்ளை நிற ஆடையணிந்த ஒரு முதியவர் நடந்து செல்வதை அவதானித்துள்ளார். தொழுகை முடிந்து செல்கின்ற ஒரவராயிருக்கலாம் என்ற நினைப்பில் தனது சைக்கிளில் அவரையும் ஏற்றிச் செல்வதற்காக சைக்கிளை நிறுத்திய உடனேயே இந்த நபர் மாயமாய் மறைந்துள்ளார். அவர் வலமாகவோ இடமாகவோ திரும்பிச் செல்லவில்லை என்பது உறுதியாகிய நிலையில் அதிர்ச்சிக்குள்ளாகிய மௌலவி பைரூஸ் அவர்கள் வேகமாக தனது மோட்டார் சைக்கிளை செலுத்தி வீடு போய்ச் சேர்ந்ததாகவும் அதன் பின்னரே தன்னைச் சுதாகரித்துக் கொண்டதாக கூறியதாக அறிய வருகின்றத. இதனிடையே இந்த சம்பவம் பற்றி மக்கள் இது ஜின்களின் நடமாட்டம் எனவம் பேய்களது நடமாட்டம் எனவும் பலவிதமாகப் பேசிக் கொள்கின்றனர்.

sheloo said...

மாஷா அல்லாஹ்! சிறந்ததொரு செயல்.
TNTJ இனைப்போன்றே SLTJ இனதும் (மார்க்க, பொது பணிகளில்)
இரட்டை வேடம் காட்டாத நிலை தொடர பிரார்த்திக்கிறேன்.

brother said...

அஸ்ஸலாமு அழைக்கும்,
இது என்ன அநியாயம் குரான், ஹதீஸை பின்பற்றுபவர்கள் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களா இவர்கள், எந்தவித சாட்சிகளும் விஷாரிக்கப்படாமல் இவர்ட பாட்டுக்கு சவூதி பிரஜைய்யினை திட்டுகிறார் இது எந்த குரான் ஹதீஸ் முறையிலான நடவடிக்கை என்று அந்த மடத்தனமான பேட்டியினை கொடுத்த ரியாஸ் மௌலவியிடம் சற்று கேட்டு விவரத்தை வெளியிடமுடியுமானால் மிகவும் நல்லதாக இருக்கும்.

அந்த பெண்ணுக்கு எதோ அனுதாபத்துக்காக கொடுத்து இருந்தால் அது பரவாஇல்லை, ஆனால் எந்த சாட்சிகளும் தீரவிஷாரிக்கப்படாத நிலையில் இவருக்கு கராமத்து வஹி வந்ததுபோல் தீர்ப்பு வழங்கி பேட்டி கொடுத்தது எப்படி என்றுதான் புரியவில்லை.

உண்மையிலேயே சவூதி பிரஜைகள் அவ்வாறு செய்து இருந்தாலும்கூட சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பின்னரே தண்டனை வழங்கவேண்டும். இதை விட்டு விட்டு இவருடையா பாட்டுக்கு தீர்ப்புவலன்கியிருப்பது தவறாகவே தெரிகிறது.

தௌஹீத் ஜமாத்தின் தலைவரே இவ்வாறு சட்டத்தை கையில் எடுத்தால் , அவருக்கு கீழுள்ள அடியாட்களின் நிலை பரிதாபமே.

Anonymous said...

அன்பி்ன் பிரதரிற்கு.... வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்று சொல்வார்கள். தாங்கள் தவ்ஹீத் ஜமாஅத்துடன் ஏதோவொரு கோபத்துடன் இருக்கிறீர்கள் என்று நினைக்கின்றேன். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முஸ்லிம் நிறுவனங்கள் சார்பாக இப்படியொரு உதவி செய்யப்பட்டது முழு முஸ்லிம்களினதும் மானத்தைக் காத்த ஒரு விடயம். வெறுமனே பள்ளி பள்ளியாகப் படுத்துத் திரியும் பல முப்திகளின் செயற்பாட்டை விட இது வொரு பாராட்டப்படவேண்டிய சிறந்த முன்மாதிரி. அதவிட்டுட்டு என்னவோ கொமென்ட் அடிக்கிறீங்கள்...

villager said...

Dear Anonymous,

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முஸ்லிம் நிறுவனங்கள் சார்பாக இப்படியொரு உதவி செய்யப்பட்டது முழு முஸ்லிம்களினதும் மானத்தைக் காத்த ஒரு விடயம்

the above lines may be your own consideration. who said that this action of SLTJ has saved the muslim community in our country? were there any public statement by any well known muslim soceity, other than by TJ supporters? don't make silly statements!

Anonymous said...

Dear Villager,

Any good deed what ever it is or who ever has done it should be appreciated and praised. The Action of SLTJ is one that should be highly appreciated. But the comment of brother insults it. It is not fare to allow such comments.

Anonymous said...

சவுதி பணத்தை ஏப்பம் விட நினைப்பவர்களுக்கு இந்த
மனிதாபிமான உதவி கூட புரியவில்லை என்பது ஒன்றும்
ஆச்சரியப்பட வேண்டிய விடயமில்லை.

brother said...

அஸ்ஸலாமு அழைக்கும் அணிமௌசு அவர்களே,
தௌஹீத் ஏகத்துவக் கொள்கை என்பது புனிதமானது அதை பின்பற்றுகின்றவர்கள் தனது செயற்பாடுகள் அனைத்தையும் குரான் ஹதீஸ் என்பவற்றுக்கமைவாகவே அமைத்துக்கொள்ளவேண்டும். அவருடையா பேச்சு, உடை, நடவடிக்கை அனைத்தும் குரான் , ஹடீசினை அடிப்படைய்யாகக்கொண்டே அமைய்யவேண்டும்.

இங்கு அந்த பெண்ணுக்கு அனுதாபம் காட்டி உதவிய செயலை நான் மதிக்கிறேன்., ஆனால் அந்த உதவியினை செய்தவர் அவர்ட பாட்டுக்கு சாட்சிகள் தீரவிசாரிக்கப்படாத நிலையிலேயே சவூதி பிரஜைய்யினை திட்டியுள்ளமைய்யினைய்யே நான் எனது முன்னைய கம்மேன்சில் தவறாகக் காண்கிறேன்.

யார் என்த குற்றத்தை செய்தாலும் ஒரு அமீர், அல்லது ஒரு குழுவின் தலைவன் என்ற வகையில் சாட்சிகள் தீரவிசாரித்தபின்னரே தீர்ப்புவலங்கவேண்டும் அது தான் இஸ்லாம் சொல்லும் முறைய்ய்ல்லவா அணிமௌசு அவர்களே.

குரான் , ஹதீஸ் அடிப்படையிலான வாழ்க்கையே வெற்றியின் வாழ்க்கை, ஆனால் நாம்தான் 1௦௦% குரான் ஹதீஸை பின்பற்றுபவர்கள் என்று சொல்லுகின்றவர்களே இவ்வாறு தனக்குதேவயானமாதிரி தீர்ப்பளித்து பேட்டி கொடுத்ததையே நான் இங்கு தவராகக்கண்டேன்.

அது அவ்வாறு இல்லாமல் சாட்சிகள் விஷாரிக்கத்தேவையில்லை தீர்ப்பு வழங்கமுடியும் என்று எங்காவது குரானிலோ , ஹதீஸிலோ கூறியிருந்தால் சொல்லுங்கள் எடுத்துக்காட்டுங்கள்,

மன்னிப்புக்கேட்க நான் வெட்கப்படமாட்டேன்.

அதோடு நீங்கள் யாரையோ பள்ளியில் படுத்துதிரியும் முப்திகள் என்று சொல்லி இருக்கின்றீர்களே ஏன் இவ்வளவு வெறித்தனம் நான் அடித்த கம்மேன்சுக்கு வீணாக அவர்களை திட்டி ஏன் வீணாக குரான் ஹதீசுக்கு முரணாக நடக்கிறீர்கள்.

அது அவ்வாறு இல்லாமல் சாட்சிகள் விஷாரிக்கத்தேவையில்லை தீர்ப்பு வழங்கமுடியும் என்று எங்காவது குரானிலோ , ஹதீஸிலோ கூறியிருந்தால் சொல்லுங்கள் எடுத்துக்காட்டுங்கள்,

BlogEditor said...

dear Anonymous and brother, நீங்கள் இருவரும் உங்களது கருத்துக்களை மீண்டு ஒருமுறை படித்திப்பாருங்கள். இருவருமே சம்பந்தமில்லாத விடயங்களை இங்கே தொடர்பு படித்தியிருக்கிரீர்கள்.

Anonymous said...

இங்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் மௌலவி ரியாஸ் விசாரிக்காமல் யாரையும் ஏசவில்லை. சவுதி அதிபரால் இவ்வாறான கொடுமை அவவுக்கு இழைக்கப்ப்ட்டிருந்தால் அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று தெளிவாக இஸ்லாத்தை கூறியிருக்கிறார். பிரதர் அமைதியாக கட்டுரையை வாசித்தால் இதனைப் புரிந்திருப்பீர்கள். எனவே பிரதர் தவ்ஹீத் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியைக் களைந்துவிட்டு நடுநிலமையோடு எதனையும் அனுகவும். ஈத்முபாறக்

Post a Comment