கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஈராக், ஆப்கான், கஷ்மீர் அடுத்த இலக்கு இலங்கையா?

இலங்கையில் 200 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் பயிற்சி?

பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற லஷ்கர் தீவிரவாதிகளின் சந்திப்பு தளமாக கொழும்பு இருப்பதாகவும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த 200 பேர் இலங்கையில் இருப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை அறிக்கைகள் தெரிவித்துள்ளதாக இலங்கைத் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவுக்குள் நுழைய லஷ்கர் தீவிரவாதிகள் தற்போது இலங்கையை பயன்படுத்துவதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, புணே குண்டுவெடிப்புச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவர் கொழும்பில் பயிற்சி பெற்றதாக தெரிவித்தனர் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், இலங்கை பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபட்ச இதை மறுத்தார். இந்நிலையில், இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் வனப் பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மாகாண பகுதிகளில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் பயிற்சிப் பெற்று வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதை எமது நாட்டின் பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா மறுத்திருந்தார்.

5 comments:

Anonymous said...

புலமைப் பரீட்சை முடிவுகள்: 179 புள்ளிகள் பெற்று அஷ்ஃபாக் சாதனை!
2010 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சை முடிவுகள் இன்று (23.09.2010) வெளியாகியுள்ளன. இம்முறை, அல் பத்ரியா பாடசாலையில் 5 மாணவர்களும், பாலிகா பாடசாலையில் 6 மாணவிகளும், வெளிப் பாடசாலைகளில் கற்கும் 1 மாணவனுமாக மொத்தம் எமது ஊரைச் சேர்ந்த 12 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கஹட்டோவிட்ட மாணவர் ஒருவர் இம்முறை பெற்ற அதி கூடிய புள்ளி 179. இது கம்பஹா மாவட்டத்தில் மூன்றாம் நிலையிலுள்ள புள்ளியாகும். திஹாரிய அல் அஸ்ஹர் பாடசாலயில் கல்வி பயிலும் அஷ்ஃபாக் என்ற மாணவனால் பெறப்பட்ட இந்த பெறுபேறு, கஹட்டோவிட்ட வரலாற்றில் பெறப்பட்ட அதி கூடிய புள்ளியாகும்.

அல் பத்ரியா பாடசாலையில் தானிஷ் (164) என்ற மாணவனும், பாலிகா பாடசாலையில் இஷ்கா (171) என்ற மாணவியும் தத்தமது பாடசாலை சார்பாக அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

அதே வேளை, அகில இலங்கை ரீதியில் அதி கூடிய புள்ளியாக, சிங்கள மொழியில் 196 உம், தமிழ் மொழியில் 193 உம் பெறப்பட்டுள்ளன. பரீட்சையில் சித்தி பெறுவதற்கு, மேல் மாகாணத்தில் இம்முறை நிர்ணயிக்கப்பட்ட அதி குறைந்த

al haya fil eemaan said...

வெட்கமில்லை உங்களுக்கு?..!.... பப்ளிஷரையும் கொமண்ட் அடிப்பவரையும் சேர்த்து விளிக்கிறேன். உங்கள் தளத்துக்கு செய்தி கிடைக்கவில்லை என்பதற்காக கொமண்ட் என்ற பெயரில் அடுத்த தளங்களில் வெளியான செய்தியை அப்படியே காப்பியடித்து விடுகிறீர்களே....? வெட்கமாயில்லை...? இது பத்திரிகை தர்மத்துக்கு மட்டுமல்ல, மனித உரிமைகளுக்கும் முரணானது என்பதை பப்ளிஷர் தெரியாதிருக்க முடியாது. பொருத்தமில்லாத கொமண்ட் என்று பல கொமண்டுகளை ஸென்ஸர் செய்த பப்ளிஷரே, நீங்கள் எந்த பொருத்தத்தில் இந்த கொமண்டுகளை (ஏனைய தளத்து செய்திகளை) வெளியிட்டீர்கள்...? உங்கள் 'பக்க சார்பற்ற தன்மை' (?) எவ்வளவு தூரம் சுயனலமானது என்பது இப்போது புரிகிறது. தொடரட்டும் இந்த பக்க சார்பற்ற (?) பணி!

Rikaza said...

வெட்கமில்லை உங்களுக்கு?..!.... பப்ளிஷரையும் கொமண்ட்.....
என்று ஒரு சகோதரர் மனம் குழம்பி பிதற்றியிருக்கிறார். பாவம் அவர். இந்தத் தளத்தில் வரும்; கொமென்கள் எந்தவொரு பிரபலமான இணையத்தளத்திலும் வந்ததாக நான் கண்டதில்லை. பல பிரபலமான தளங்களுடன் தொடர்புடையவன் என்ற வகையில் இதனை நான் குறிப்பிடுகிறேன். எனினும் இப்போதுதான் மூளை முடுக்குகளிலெ;லாம் புளக்போஸ்ட் வர ஆரம்பிச்சாச்சே. இது போன்று முளைத்த ஒரு புளொக்கில் இவ்வாறான செய்திகள் வந்ததோ தெரியாது. எனினும் பப்ளிசர்ஸ் சற்று விளிப்பாக இருந்து இதனை கவனித்தல் வேண்டும். இப்படி பிரபலமற்ற தளங்களில் யாரும் பார்க்காத செய்திகளை பிறரும் அறிந்து கொள்ளட்டும் என்று பிரபலமான தளத்தினூடாக ஒரு நலன் விரும்பி கொமென்டாக அடித்தாரோ தெரியாது. இத அவரவர் பார்வையைப் பொருத்தது. இத்தவறை சுட்டிக்காட்டிய நபர் விவரமாக இந்த இணையத்தில் செய்தியாக வந்தது இத்தளத்தில் கொமென்டாக வந்துள்ளது என்று தெளிவாக சொல்லியிருக்கலாம்…..!

BlogEditor said...

அல் ஹயா பில் ஈமான் என்ற அன்பரின் கருத்துக்கு எமது புலொகர் ஆசிரியர் குழு சார்பான பதில்....
......................
உங்கள் ஆதங்கத்திலும் ஆத்திரத்திலும் அர்த்தங்கள் பல நிறைந்துள்ளன. நீங்கள் ஒரு சுட்டிப் பையன் என்பதால் குசும்பல்களை அவ்வப்போது அவதானித்து உங்களுக்கு வழிகாட்டுவது எமது பொறுப்பென்ற வகையில் இதை எழுதுகிறோம். பல கணணிகளிலிருந்தும் தகவல்களை பரிமாறுவதற்குத்தான் இணையமே பிறந்தது என்ற அடிப்படைகள் அகர அறிவு கூட உங்களுக்கு தெரியாது என்பதால் அக்குவேறு ஆணிவேறாக உங்களுக்கு இணையத்பைப்டிபற்றிக் கற்றுத்தரவேண்டும போலுள்ளது. copy paste என்ற சொற்கள் இல்லையானால் உலகில் இன்று எத்தனையோ புலக்கர்களைக் காணமுடியாது போயிருக்கும்.என்று யாரோ சொன்னதை நினைவுகூர்வது பொருத்தமென நினைக்கிறோம். பெருமதியான ஆக்கங்கள் ஒரு வலைதளத்தில் வருகின்றபோது அதை ஏனையவர்களும் பரிமாறிக்கொள்வது மிகச் சாதாரணமானதொன்று அறிமுகமே இல்லாத உங்களைப்போன்ற சுட்டிப்பையன்களுக்கு இது தெரியாமலிருப்பதில் ஆச்சரியமில்லை. CIA வுடைய புலனாய்வுத் தகவல்கள் இன்றைக்கு இணையத்தில் வளம் வரும் போது வெறும் 15 வரிக்குள் சுருங்கிய உங்கள் மெத்தப்பெரிய ஆக்கத்தை யாரோ கொமன்டில் போட்டதற்கு சீரிப்பாயும் உங்கள் சினத்தை மதிக்கிரோம். ஏனெனில் நீங்கள் இத்துறையில் ஒரு விடலைப்பையன் என்பதால் உங்களைப்போன்று commentsகளுக்குத் தவம்கிடப்பவர்களல்லர் நாங்கள். ஆயிரம் Commentகள் வரும்போது அதில் யாரோ உங்கள் மெத்தப் பெரிய ஆக்கத்தை பிரதிபன்னியனுப்பியிருக்கிறார்கள். இவ்வாக்கம் உங்கள் மெகா புலக்கரில் வந்ததா என்பது எமக்குத் தெரியாது. ஏனென்றால் அறிமுகமில்லாத உங்கள் புலக்கரைப்பார்க்கவா எங்களுக்கு நேரமிருக்குது? பெரும் பெரும் இணையதளங்களோடே நேரம் போவதனால் உங்கள் மைனர் தளத்தைப்பார்க்க நேரம் கிட்டாமைக்கு வருந்துகிறோம்.

குறிப்பு எமது தளத்திற்கு கருத்து எழுதும் வாசகர்கள் தமது சொந்தக் கருத்தை எழுதுமாறு வேண்டுகிறோம். பிர இணையத்தளங்களில் இருந்து கருத்துக்களை எடுத்தால் அவ்விணையத் தளத்தின் முகவரியை குறிப்பிடவும்.

யதார்த்தி said...

மடமைத்தனமான comments வரும்போது blog editor
என்ற வகையில் பதில் கூறவேண்டியது உங்கள் கடமைதான்.
ஆனால் உங்கள் பதிலில் கொஞ்சம் ஆணவம் கலந்திருப்பதை
அந்த வரிகளில் காணமுடிகிறது.
வாசகர்களின் எண்ணிக்கை பத்தைத்தாண்டியவுடன்,
facebook, twitter தள தரத்திற்கு சென்று விட்டோம் என்ற
நினைப்புதான் பிழைப்பைக் கெடுத்துவிடும்.

Post a Comment