கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கிளை - 09 ஒரு கைதியின் புலம்பல்

நீண்ட இடைவேளைக்குப்பின் கிளை விரித்திருக்கிறது நமது இலக்கிய விருட்சம்.........

புகுமுன் சில வரிகள் உங்களுடன்.....



கஹட்டோவிட கிராமத்தின் அன்றாட சில நடப்புக்களைத் தொடர்பு படுத்தி இது எழுதப்படுகிறது. முழுக்க முழுக்க இதில் நிறைந்த கருத்தைத் தரும் குறைந்த சொற்பிரயோகங்களைப் பயன்படுத்தவே முனைந்தேன். அது எவ்வளவு தூரம் முடியுமாயிருக்கிறது என்பதைத் தீர்மானிப்பது நீங்கள்தான். ‘அவன் எழுதும் ஒரு கிராமத்துத் தரிசனம்;’ என்ற பிராதான தலைப்பின் கீழ் சிறு சிறு உப தலைப்புக்களைத் தாங்கியதாக இது அமைந்துள்ளது. இது பற்றிய உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் எனது இந்த முயற்சியில் இன்னும் பல முன்னேற்றங்களைக்  கொண்டு வரும் என்பது எனது கருத்தாகும்.

........................................................................................................................................................
ஒரு கைதியின் புலம்பல்

பருவம் வரைந்த சித்திரங்கள் அவனில் அங்குமிங்குமாய் தெரிகின்றது. அரும்பு மீசையுடன் அவன் கணாக்களும் தளிர்கின்றன. எதிர்காலத்தை விட நிகழ்காலத்தையே அவன் நேசிக்கின்றான். கற்பனைகளுக்கு அவன் நாயகன். நிஜங்களுக்கு அவன் கைதி. முறுக்கேறிய அவன் கால்கள் சில போது இந்த பூமிப் பந்தையே உதைக்கப் பார்க்கின்றான. சினங்களும் சினேகங்களும் அவனை வாட்டி வதைக்கின்றன.

அன்றொரு மாலை வேளை பொன் மஞ்சல் வெயிலின் மெல்லிய கீற்றுகள் ரகசியமாய் பரவி மறைய மெல்ல மெல்ல இருளும் சூழ அவன் வீடு செல்கின்றான். அங்கொரு புலன் விசாரணை அவனைக் காத்திருக்கின்றது. அதை எண்ணி அவன் உணர்வுகளும் வியர்த்துவிட்டன. அவன் மேல் உயிரையே வைத்திருக்கும் அவன் தந்தையின் கேள்விக்கனைகள்தான் அவனுக்கு என்றென்றும் பாரமாயிருக்கின்றன. தன் தந்தையின் குமுறல்கள் அதிகாரத்திலானதா அன்பிலானாதா எதனாலானது? விடைகளைத் தேடியவனாய் வீட்டுள் நுழைகின்றான். விசாரனையும் துவங்கி விவாதம் தொடர்கிறது. முறைப்பும் கனைப்பும் அனலும் தனலும்  அத்துனையும் கலந்த அன்றைய யுத்தம் முடிவுக்கு வருகிறது. சப்தங்களெல்லாம் மௌனித்து விடுகின்றன. கையிரண்டும் தலையனையாக அவன் மெய் மறந்தவனாக சாய்கின்றான். அன்னார்ந்து பார்த்தான். ஆகாயமும் தெரியவில்லை. கண்ணயர்ந்து பார்த்தான் நித்திரையும் வரவில்லை. அவன் தவிப்பும் துடிப்பும் அந்த அந்த சுவர்களுக்கு மட்டுமே தெரிந்தது. கட்டிலும் அவனுக்கு கனத்து விட்டது. வார்த்தைகளால் வதைக்கப்பட்ட எத்தனையோ வாலிப நெஞ்சங்கள் இப்படித்தான் நொந்து போயிருக்கின்றன. சினங் கொண்டு சீரிப்பாயும் தந்தையர்களுக்கு இந்த வாலிப இதயங்களின் காயங்கள் என்றைக்குத்தான் தெரியப் போகுது? அன்பால் சாதிப்பதை ஆவேசத்தால் அழித்துவிட்டார்கள். உபதேசிப்பதாய்க் கூறி உணர்வுகளையெல்லாம் விலங்கிடப் பார்க்கிறார்கள். களைகளைக் கிள்ளுவதாய்க் கூறி முளைகளையே தோண்டிவிடுகிறார்கள். தந்தையர்களே உங்கள் சீற்றங்கள் பாசங்களாகட்டும். உங்கள் ஆவேசங்கள் ஆறுதல்களாகட்டும். இந்த நெஞ்சங்களின் காயங்கள் அதனால் ஆறட்டும்.

12 comments:

Anonymous said...

"ஒரு கைதியின் டயரி" என்று தலைப்பிட்டிருக்கலாமே....

Anonymous said...

ஆம் ஒரு கைதியின டயரி இந்தத் தலைப்பு எப்படி இருக்குமென்றால்! கடந்த காலங்களில் மீள்பார்வை, எங்கள்தோசம் போன்ற பத்திரிகைகள் எவ்வாறு இஸ்லாமிய மாத இதழ் என்று சொல்லிக்கொண்டு அதிலே சினிமா விமர்சனத்தை விளம்பரப்படித்தினை அரங்கேற்றினவே... அதேபோன்றுதான் அந்தத் அலைப்பும் அமைந்திருந்திருக்கம். நிருவாகிகள் கவனத்தில் எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

Anonymous said...

ஆம் சரியாக சொன்னீர்கள். சினிமா, கவிதை, காப்பியம்....
இவற்றை ரசிக்கலாமே(?) ஒழிய இதன் மூலம் சமூக சீர்திருத்தங்களை மேற்கொள்ள
முடியாது எனத்தெரிந்திருந்தும், இவ்வாறான கிறுக்கல்கள் தொடர்வதானது
இத்தள நிர்வாகிகளும் முழு நேர கற்பணை மூழ்கிகள் என்பதை பிரதிபலிக்கிறது.

Anonymous said...

Engal thesham and Meel parvai are really islamic journal. Foolish can not understand this, and they underestimate it because of their lack of knowledge in particular field.

யதார்த்தி said...

கொஞ்சம் விட்டால் அமீர், ஏ. ஆர். ரஹ்மான் இவர்களையும்
இஸ்லாமிய சாதனையாளர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவாரோ
இந்த புலமை பித்தன்...?

Anonymous said...

எங்கள் தோசம் என்று ஒரு சஞ்சிகை இதுவரை வெளிவரவில்லை. எங்கள் தேசம் மீள்பார்வை அவைகளை இப்படி இஸ்லாமியப் பத்திரிகை என்று ஒதுக்குவது தவறு. மனிதன் என்ற வகையில் சில தவறுகள் நடக்கலாம். அதை அழகாக சுற்றிக்காட்டலாமேயன்றி அவற்றால் பெரும் நண்மைகளை ஒப்பிட்டுப்பார்த்து திருப்திப்படலாம்.

ரீதா said...

காப்பியம்,சினிமா, என்பன ரசனைக்குத்தான் உதவும் என்றும் அவற்றை பப்ளிஷ் பன்னுவது தள வடிவமைப்பாளர்கள் முழு நேரக் கற்பனையில் மூழ்கியிருப்பதாகவும் பெயரை வெளியிட முடியாத ஒரு கோளை கருத்துத் தெரிவித்தள்ளார். இவரின் கருத்து இவர் ஒரு ரசனையே இல்லாத ஒரு வரண்ட உள்ளம் கொண்டவர் என்பதைப் பிரதி பலிக்கிறது. தயவு செய்து இவ்வாறான கருத்துக்களை பப்ளிஷ் பண்ணுவதை தள ஆசிரியர்கள் தவிர்த்துக் கொள்ளவும்.

யதார்த்தி said...

கோழை என்று சரியான தமிழில் எழுதத்தெரியாமல் தடுமாறும்
தமிழ் ரசணை(?)யுள்ளவர் மேலுள்ள கமெண்ட் இனை இன்னொருமுறை
படித்தால் கொஞ்சம் விளங்கிக்கொள்ளலாம் என நினைக்கிறேன்.
"சினிமா, கவிதை, காப்பியம்.... இவற்றை ரசிக்கலாமே(?) ஒழிய"
என்பதன் மூலம் அவர் ரசணை உள்ளம் கொண்டவர்தான் என்றும், அங்கே
ஒரு (?) அடையாளம் மூலம் இந்த ரசணை நமது மார்கத்திற்கு
முரணானது என்பதையும் சோர்ட் அண்ட் ஸ்வீட் ஆகக்குறிப்பிடுவது
+1 படிக்கும் மாணவருக்கும் இலகுவாக விளங்க முடிகிறது.
இது புரியாமல் (சினிமா)ரசணையுள்ளம் கொண்ட ரீதா என்பவர் புலம்புகிறார்.
அடுத்து, ஒரு கருத்தை சொல்வதற்கு CV யை attach பண்ண வேண்டிய
அவசியம் இல்லை என நினைக்கிறேன். அதே நேரம் அக்கருத்து
சமூகத்தில் சர்ச்சை ஏற்படுத்துவதாகவோ அல்லது ஆதாரம்
காட்டவேண்டும் என கருதினாலோ தங்களது முகவரியை
குறிப்பிடுவது அவசியம்.
மேலும், ஒரு சகோதரர், "எங்கள் தேசம் மீள்பார்வை அவைகளை
இப்படி இஸ்லாமியப் பத்திரிகை என்று ஒதுக்குவது தவறு" என்று உளறி
வாசகர்களை குழப்புகிறார்.
சொல்வதை தெளிவாக சொல்ல வேண்டும். நாம் சொல்வதெல்லாம்
இஸ்லாமிய பத்திரிகை என்ற பெயரில் சினிமா விமர்சனம் செய்தது தவறு
என்பதைத்தான்.
கடைசியாக, வாசகர்கள் தங்கள் சொந்தப்பெயரில் கமெண்ட் எழுதும் போது
publish செய்வதில்லை என்றும் அதே சமயம் புனைப்பெயரில் எழுதும் போது
publish செய்யப்படுவதாகவும் ஒரு தகவல் நிலவுகிறது. இதனால்தான்
என்னவோ அச்சகோதரரும் பெயர் குறிப்பிடாமல் நியாயமானதொரு
கருத்தைத் தெரிவித்துள்ளார் போலும்.

mujahidsrilanki said...

ரசிப்பதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. எதை ரசிக்கிறோம். என்பதுவே கவனிக்கப்பட வேண்டியது. சிலர் புலனியல் மாற்றத்தையே மாற்றம் என்கின்றனர். ரசனையில் சிந்தனா ரீதியான மாற்றம் அதிகமாகவே உள்ளது.

யதார்த்தி said...

கருத்துக்கள் எளிய நடையில் எழுதப்படுவதே
சமுதாயத்திற்கு நல்லது.
எவருக்கும் புரியாத பாணியில் எழுதுபவர்கள்
இலங்கையில் நிறையத்தான் இருக்கிறார்கள் போலும்.
கடைசியாக எழுதிய சகோதரர் என்னதான் சொல்ல வர்றாரு?

மன்னின் மைந்தன் said...

இலக்கியம் என்பது பொதுவாகவே கருத்துச் செறிவுள்ள சொற்களைப் பயன்படுத்தி உருவாகுகிறது என்ற அடிப்படை அறிவு கூட இந்த யதார்த்திக்கு இல்லை போலும். இவர் ஒரு ரசனையே இல்லாத ஒரு வரண்ட உள்ளம் கொண்டவர் என்று மேலே ஒருவர் குறி்ப்பிட்டுள்ளது சாலப் பொருந்துகிறது இந்த யதார்த்திக்கு......

Anonymous said...

A bunch of fools make comments on literature as if they are shakespears . Blogger is a man of business and he is waiting for the big fish to come then the smell spreads all around. a very good way of media marketing just like CNN. I remember once Dr Zakir said this is the reason why I am not participating CNN TV talks. waw,,,,,,

Post a Comment