கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

கஹட்டோவிட சகோதரி பவாஸா காலமானார்.

கஹட்டோவிடாவைச் சோ்ந்த சகோதரா் பாரூக் அவா்களின் அன்புப் புதல்வி சகோதரி பாதிமா பவாஸா அவா்கள் இன்று அதிகாலை (30.09.2014) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். இச்சகோதரியின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான உதவி கோறளை நாம் எமது தளத்தில் வெளியிட்டிருந்தோம். இவரின் சிகிச்சைக்காக பலரும் தமது ஸதகாக்களை வழங்கியிருந்தனா். அல்லாஹ் இவா்களது ஸதகாக்களைப் பொருந்திக் கொள்வானாக!. 
சகோதரி பவாஸா அவா்களின் நல்லடக்கம் இன்று மாலை கஹட்டோவிட மஸ்ஜிதுன் நூா் பள்ளி வாசலில் நடைபெறவுள்ளது. 
”யா அல்லா இந்த ஜனாஸாவின் பாவங்களை மன்னித்து, கப்றை விசாலமாக்கி, நிம்மதியான பா்ஸகுடைய வாழ்வை நல்குவாயாக! அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பாயாக!”

தம்புள்ளை பள்ளி நிருவாகியை விசாரிக்க வந்த போலி C I D

தம்புள்ளை பள்ளிவாயல் மீது குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருவாரங்கள் கடந்த நிலையில் குறித்த தக்குதல் சம்பவ சீ சீ டீவி ஆதரம் இருந்தும் சம்பவத்துடன் தொடர்புடய குற்றவாளிகள் எவறும் கைது செய்யப்படவில்லை.

கடந்த சில வாரம் தம்புள்ளை பள்ளிவாயலுக்கு இனம்தெரியாத நபர் ஒருவர் ஜும்மாதொழுகைக்கு வந்த சம்பவம் இடம்பெற்றது பின்னர் குறித்த எப்பாவல பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் என பொலிஸார் விசாரணைகளின் பின்னர் தெரிவித்திருந்தனர்.

குறித்த பள்ளிவாயல் விவகார சர்ச்சை தொடரும் நிலையில் குறித்த தம்புள்ளை பள்ளிவாயல் விவகாரத்தில் துணிச்சலாக செயற்படுபவரும்  முன்னதாக தம்புள்ளை ரஜமஹா விகாரை விகாராதிபதியுடன் நேரடியாக தர்கத்தில் ஈடுபட்டவரும் நகர அபிவிருத்தி அதிகார சபை தம்புள்ளை  பள்ளிவாயல் மற்றும் பிரதேச மக்களை அப்புறபடுத்த முயற்ச்சி செய்த போது 10 நாட்கள் உண்னாவிரதம் இருந்தவருமான பள்ளிநிருவாக சபை ஊறுப்பினர் எஸ் வை எம் சலீம்டீன் அவர்களை பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இருவர் சீ ஐ டீ யில் இருந்து வந்திருப்பதாக அவர் ஊரில் இல்லாத சந்தர்பத்தில் விசாரித்து சென்றுள்ளனர்.

இது தொடர்பாக தம்புள்ளை பொலிஸாரிடம் முறையிட்டபோது அங்கிருந்து எவரையும் அனுப்பவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்ய  நன்பகல் 2.15 சென்ற அவரின் முறைப்பாடு 5.30 மணிக்கு பொலிஸாருடன் சிறு வாய்தர்க்கம் செய்ய பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரே சென்றாலும் பள்ளிவாயலை அகற்றவிடமாட்டேன் என தம்புள்ள பள்ளிவாயலை அகற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கும் தம்புள்ளை பள்ளிவாயல் நிருவாக சபை உறுப்பினர் சலீம் டீன் அவர்களுக்கு பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது.

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்- 15 மாணவ, மாணவிகள் சித்தி

அன்மையில் வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கஹடோவிட அல்பத்ரியா ம.வி இல் பரீட்சை எழுதிய நுாற்றக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருல் 11 மாணவர்களும், பாலிகா மகளிர் வித்தியாலயத்தில் பரீட்சை எழுதிய 20 மாணவிகளுல் 4 மாணவிகளும் அடங்கலாக 14 மாணவ மாணவிகள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கின்றன.

இவர்களின் இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அதிபர், பாடசாலை நிறுவாகம் மற்றும் அசிரியர்கள் அனைவருக்கும் பெற்றோர்கள் சார்பாக எமது வாழ்த்துக்கள். ஜதாகுமுல்லாஹ்

5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவு - வெனுஜா நிம்சத் 199 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் முதலாமிடம்

ஐந்தம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று (28) வெளியாகியுள்ள நிலையில் எம்பிலிபிட்டிய முன்பள்ளி மாணவி டபில்யூ.ஏ.வெனுஜா நிம்சத் 199 மதிப்பெண்களை பெற்று தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(28) வெளியாகியுள்ளன.

கிராமப்புர பாடசாலைகளுக்கான முடிவுகள் தபால் மூலம் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் www.doenets.lk எனும் இணையத்தள முகவரியினூடாக பரீட்சை முடிவுகளை பார்வையிட முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதேவேளை, கொழும்பிலுள்ள பாடசாலைகள் மற்றும் ஸ்ரீஜயவர்தனபுர வலயத்தில் அமைந்துள்ள பாடசாலை அதிபர்கள், இன்று காலை பரீட்சைகள் திணைக்களத்தில்; பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும என திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் ஐந்தாம் தரம் புலமைப்பரிசிலுக்கான வெட்டிப்புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.   இதன்பிரகாரம், இதன்படி யாழ்ப்பாணம் 158, மட்டக்களப்பு 158, கிளிநொச்சி 147, முல்லைத்தீவு 147, நுவரெலிய 157, கொழும்பு 159, கம்பஹா 159, களுத்துறை 159, கண்டி 159, மாத்தளை 159, காலி 159, மாத்தறை 159, ஹம்பாந்தோட்டை 155, மன்னார் 157, வவுனியா 158, அம்பாறை 158, திருகோணமலை 158, குருநாகல் 159, புத்தளம் 156, அநுரதபுரம் 155, பொலநறுவை 157, பதுளை 156, மொனராகலை 158, இரத்தினபுரி 157,கேகாலை 159 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா குற்றவாளி; அதிரடி தீர்ப்பு

இதனையடுத்து தனக்கு உடல் நலம் சரியில்லாததால் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நீதிபதி குன்ஹாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் குற்றவாளிகள் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் ஜெயலலிதா, இந்த வழக்கு என்னை அரசியலில் இருந்தே ஒழித்துக் கட்ட செய்யப்பட்ட கூட்டு சதி. மேலும் எனக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் எனக்கு குறைந்தபட்ச தண்டனை அளியுங்கள் என்று நீதிபதியிடம் கூறியுள்ளார். 

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடன் ஜெயலலிதாவை பெங்களூர் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர். இதனால் ஜெயலலிதா முதல்வர் பதவியை இழப்பதுடன் அவர் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
.......................
Breaking News
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் இந்திய ரூபாய் 100 கோடி அபராதமும் விதித்து பெங்களூர் நீதிமன்றம் தீரப்பளித்துள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று சனிக்கிழமை(27) தீர்ப்பளித்துள்ளது.

நியூயோர்க்கில் ஜனாதிபதி முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க …. இங்கை வந்துள்ள அஸின் விராது (படங்கள்)

மியன்மாரில் பல்லாயிரக்காணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்களை கொன்று குவித்த இனமதவாத பயங்கரவாத தாக்குதல்கள் ஒடுக்குமுறைகளுக்கு பின்னால் இருந்தவர் என சர்வதேச சமூகம் இனம் கண்டுள்ள அஸின் விராது எனும் 
பௌத்த துறவி பொதுபல சேனாவின் ஏற்பாட்டில் இடம்பெறும் சங்க மாநாட்டிற்கு பிரதம விருந்தினராக அழைக்கப் பட்டு வருகை தந்துள்ளார் ..
முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் அஸின் விராது இலங்கை வருவதற்கு விசா  வழங்க வேண்டாம் என கோரியுள்ள நிலையில் இவரின் வருகைக்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளதுடன் நாளை 28 ஆம் திகதி  பாரிய சங்க மாநாடு ஒன்றுக்கும் பொது பல சேனா ஏற்பாடுகளை செய்துள்ளது .
இங்கையில்  முஸ்லிம்களுக்கு எதிரான  எந்த நடவடிக்கைகளை தடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்   என நியூ யோர்க்கில் இஸ்லாமிய மாநாட்டு அமைப்பினரிடம் உத்தரவாதமளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவினுடைய வார்த்தைகளை உடனடியாகவே பொய்ப்பிக்கும் நடவடிக்கையாகவே இது அமைத்துள்ளது  என ஆர்வலர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்கட்டியுள்ளனர்.
bo4bo1bo2bo3

''அசின் விராதுவின் இலங்கை விஜயம், முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகளை தூண்டலாம்''

மியன்மாரின் சர்ச்சைக்குரிய மதகுருவான விராதுவிற்க்கு ஞாயிற்றுக்கிழமை, நடைபெறவுள்ள பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்துகொள்வதற்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் குறித்து முஸ்லீம் கவுன்சில் கவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிaற்க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

மியன்மாரில் முஸ்லீம்களுக்கு பெரும் வன்முறைகளை தூண்டிவிட்ட குறிப்பிட்ட மதகுரு இலங்கை வருவது இலங்கையின் சமாதான சகவாழ்விற்க்கு ஆபத்தாக அமையும் என குறிப்பிட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமின் வளர்ச்சி பௌத்தத்திற்க்கும் மியன்மார் கலாச்சாரத்திற்க்கும் ஆபத்தான விடயம் என்ற தீவிர பிரச்சாரம் மூலமாக அந்த நாட்டின் முஸ்லீம் சிறுபான்மையினரின் மீது வன்முறைகளை தூண்டிவிட்டவர் விராது என சர்வதேச அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் அவரது பிரசன்னம் முஸ்லீம்களுக்கு எதிராக மேலும் வன்முறைகளை தூண்டலாம், அளுத்தகமவில் ஞானசாராதேரரின் உரை ஏற்படுத்திய விளைவுகளை இது ஏற்படுத்தலாம்.

குறிப்பிட்ட தேரரிற்க்கு விசா வழங்கப்பட்டால் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்புணர்வு பிரச்சாரத்திற்க்கு இலங்கை அரசாங்கத்திற்க்கு தொடர்பிருப்பதாக மேலும் குற்றச்சாட்டு எழலாம் என அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதற்கு முஸ்லிம் அமைப்புக்கள் எதிர்ப்பு

மியன்மாரின் கடும்போக்கு பௌத்த அமைப்பின் தலைவராக கருதப்படும் அசின் விராது பௌத்த தேரர் இலங்கை விஜயம் செய்வதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை முஸ்லிம் பேரவை தெரிவித்துள்ளது. 969 என்ற பௌத்த கடும்போக்கு அமைப்பின் தலைவரான விராது தேரரை டைம்ஸ் சஞ்சிகை பௌத்த பயங்கரவாதி என அடையாளப்படுத்தி அட்டைப்படத்தில் புகைப்படமொன்றை வெளியிட்டிருந்தது.

எதிர்வரும் 28ம் திகதி பொதுபல சேனா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டில் விராது தேரர் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா அமைப்பின் அழைப்பிற்குஅமைய இவ்வாறு விராது தேரர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

எனினும், விராது தேரரின் இலங்கை விஜயம் நாட்டின் இன நல்லிணக்கம் மற்றும் மத சகாவாழ்வினை பாதிக்கும் எனத் தெரிவித்து முஸ்லிம் பேரவை, ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது.

மியன்மாரில் அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு எதிராக பௌத்த மக்களை தூண்டி பாரியளவில் வன்முறைகள் இடம்பெறுவதற்கும் முஸ்லிம்கள் இழப்புக்களை எதிhநோக்கவும் விராது தேரர் பின்புலத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. விராது தேரரின் இலங்கை விஜயமும் மாநாட்டில் ஆற்றவுள்ள உரையும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டக் கூடிய வகையில் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விராது தேரரின் விஜயத்திற்கு அரசாங்கம் அனுமதியளித்தால் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும் கடும்போக்குவாத அமைப்பிற்கு ஆதரவாகவும் அரசாங்கம் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழக் கூடிய சாத்தியங்கள் காணப்படுகின்றன.

சில மாதங்களுக்கு முன்னதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் மியன்மாருக்கு விஜயம்செய்தது முதல், விராது தேரரின் 969 அமைப்பிற்கும் பொதுபல சேனாவிற்கும் இடையிலான உறவுகள் வலுப்பெற்றுள்ளன.

மியன்மாரி விராது தேரர் நாட்டுக்குள் பிரவேசிக்க வீசா வழங்குவதனை ஜனாதிபதி தடுத்து நிறுத்த வேண்டுமென இலங்கை முஸ்லிம் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

jaffnamuslim 

என்னிடம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா மாத்திரமே இருந்தது - ஹரின் பெர்ணான்டோ

சஷீந்திர ராஜபக்ஷ ஊவா மாகாணத்தின் வெற்று முதலமைச்சர் எனவும் மக்களின் உண்மையான முதலமைச்சர் தான் எனவும் தேர்தலில் அதிகக் கூடிய வாக்கு விதத்தை பெற்ற  தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று  24-09-2014 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ருவான் விஜேவர்தன தேசிய இளைஞர் முன்னணியின் தலைவர பதவியில் இருந்து விலகி அந்த பொறுப்பை என்னை ஏற்றுக்கொள்ள சொன்ன போதிலும் நான் அதனை ஏற்க போவதில்லை.

மீண்டும் அந்த பதவியில் ருவான் விஜேவர்தனவை நியமிக்குமாறு நான் யோசனை முன்வைக்கின்றேன்.

இதனை விட மிகப் பெரிய பொறுப்பை ஊவா மக்கள் எனக்கு வழங்கியுள்ளனர்.

நான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகி வெளியில் வரும் போது என்னிடம் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபா மாத்திரமே இருந்தது.

இதனை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் எனக்கருகில் இருந்தவர்களுக்கு இது தெரியும்.

எங்கள் வீட்டில் 6 வாகனங்கள் இருந்தன. எனினும் நான் பஸ்ஸிலேயே பாடசாலைக்கு சென்று வருவேன்.

இம்முறை நான் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதை எனது தந்தை விரும்பவில்லை.

இதனால், தேர்தலில் அவரின் உதவி கிடைக்கவில்லை. தனியாக தேர்தலில் நின்று வெல்ல முடியும் என்று தந்தைக்கு காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.

தேர்தலில் முற்றாக நான் செலவிடவில்லை. எனது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நான் அறியாத பலர் எனக்கு உதவிகளை செய்தனர்.

எனக்கு உதவி செய்த பலர் நான் அறியாதவர்கள். நான் சோற்று பொதிகளையோ, சாராய போத்தல்களையோ விநியோகிக்கவில்லை.

அவ்வாறு நான் செய்தேன் என்பதை நிரூபித்தால், மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.

jaffnamuslim

“I.S.I.S.“-ஐ அழிக்க நினைத்து கொடிய “ஷியா“ பிரிவை உள்ளே வர வழி வகுத்த அரபு தேசங்கள்.

முழு அராபிய தேசத்தின் தலைவர்களும் “அத் தவ்லா அல் இஸ்லாமியாவை (Islamic State (IS)” அழிப்பதற்கான அமெரிக்க வியூகங்களில் தங்களது பங்கு என்ன என்பது பற்றி சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் யெமன் காவு கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் கடும்போக்கு ஷியாக்களால். ஸெய்தி பிரிவு ஷியாக்களால். இஸ்லாமிய அஷ்-ஷரீஆஃ முரண்பாடுகள் அன்றி இமாம் அலியையும் அவர்களது குடும்பத்தையும் உமையாக்கள் அழித்தார்கள். அவர்களை காலமுள்ள வரைக்கும் பழிவாங்குவோம் எனும் அரசியல் முரண்பாடுகளை கொண்டு முழங்கும் ஷியாப்பிரிவினரால். மக்காவையும் மதீனாவையும் கைப்பற்ற பூகோள மிலிட்டரி மற்றும் பொலிட்டிக்கள் அஜன்டாவை தயாரித்து அதனடிப்படையில் இயங்கும், இயக்கும் ஈரானிற்கு இது ஒரு பெரிய வெற்றி. 
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் கொண்டு ஆட்சி செய்ய முற்படும் இஸ்லாமிய அரசை அழிக்க முனைந்த அரபு தலைவர்கள் அதன் எதிரியான ஷியா கொள்கையை கொண்டு ஆட்சி செய்ய முனையும் இன்னொரு இஸ்ரேலை இப்போது அண்டை தேசமாக்கிக் கொண்டுள்ளனர். 

நேற்று முன்தினம் என்றும் இல்லாத அளவு குண்டு வெடிப்பு சத்தங்கள் சன்னாவின் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்த வண்ணம் இருந்தன. ஓயாத துப்பாக்கிச் சூடுகளுடன், ரொக்கெட் லோஞ்சர், ஆட்டிலறி, மோட்டார் குண்டுகளும் வந்து வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஸன்னாவின் புறநகர் பகுதிகளில் விரவி வந்த சண்டைகள் கடந்த சனிக்கிழமை நடுநிசியில் தலைநகரின் இதயப் பகுதியினுள் கேட்க ஆரம்பித்தது. மேற்கு ஆதரவுடன் இது வரை செயற்பட்டு வந்த யெமனிய அரசின் இராணுவம் பரவலாக பல முனைகளிலும் பின்வாங்கி வருகின்றன. Houthis ஷியா மிலீஷியா படையினர் ஞாயிறன்று யெமனிய தலை நகர் சன்னாவின் பல பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி, தொலைக்காட்சி நிலையம், இராணுவ தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு கட்டிடம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பல நிலைகளினுள் Houthi ஆயுததாரிகள் நிலைபெற்றுள்ளனர். பல நூறு பிக்-அப் மற்றும் ஜீப்களில் அவர்கள் வீதிகளில் வலம் வந்த வண்ணமுள்ளனர். எல்லாமே ஒரு மாயம் போல ஓரிரு நாட்களினுள்ளேயே நடந்து முடிந்து விட்டது. 

ஒரு சாதாரண ஆயுதக்குழு சாதா கவர்னேட் பகுதியில் மட்டும் தமது வலுவான ஆதிக்கத்தை கொண்டிருந்த குழு திடீரென பெரும் எழுச்சி பெற்ற ஆயுத தாக்குதல் அணியாக மாறியதன் மர்மங்கள் இப்போது வெளியாகியுள்ளன. Houthis குழுவிற்கு முற்று முழுதாக ஆயுத, ஆலோசனை வசதிகளை வழங்குவது ஈரான். தென் யெமனில் அல்-காயிதாவிற்கு எதிராக சண்டையிடுவதிலும், அவர்களை மேற்குலகம் சொல்லும் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப அழிக்க முற்படுவதிலுமே யெமனிய அரசு அதீத கவனம் செலுத்தி வந்தது. 

தம்மாஜில் தாருல் ஹதீஸை அழித்தொழிப்பதற்கு Houthis மிலீஷியாக்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போதே யெமனிய அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அதனை அவர்கள் தங்கள் இனமான ஷியாக்களின் வெற்றியாகவே எண்ணினர். மேற்கு ஆதரவு ஷியா அரசு என்பது ஈரானை பொருத்த வரை சுன்னிகளின் ஆட்சிக்கு ஒப்பானது. தருணம் பார்த்து Houthi களை ஏவி சன்னாவை தன் வசப்படு்த்தியுள்ளது ஈரான். ஐ.எஸ்.ஐ.எஸ். எப்படி நிலங்களை பிடிப்பதற்கு தாக்குதல் உக்திகளை மேற்கொண்டு தனது வீரர்களை நகர்த்தி பிரதேசங்களை தன் வசப்படுத்தியதோ அதே பாணியையொத்த தாக்குதலையே Houthi கள் இப்போது நடாத்தி முடித்துள்ளனர். 

2004-ல் அ்ன்றைய யெமனிய ஆட்சியாளர் ஹுதிகள் முற்று முழுதாக அழிக்ப்பட்டு விட்டனர். இனி அவர்கள் பற்றிய சவால்கள் எமக்கு இல்லை. அவர்கள் பற்றிய அச்சம் மக்களிற்கும் இல்லை என சன்னாவில் வைத்து முழங்கியிருந்தார். சரியாக பத்து வருடங்கள் கழித்து 2014-ல் அதே ஹுதிகள் சன்னாவினுள் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். 

இது திடீரென நிகழ்ந்த ஒரு மாற்றமல்ல. ஷியாக்களின் நீண்ட காலத் திட்டம். ஈரானினதும், கும்மினதும் நீண்ட காலக்கனவு. இப்போது சரியான தருணத்தில் நிறைவேறியுள்ளது. அடுத்தது பஹ்ரைன். அமெரிக்க ஆதரவிலான அரபு வசந்தம் நிகழ்ந்த போது யெமனிலும் பஹ்ரைனிலும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் அவை அடக்கப்பட்டன. சவுதி அரேபியா இந்த இரண்டு தேசங்களிற்கும் தன் இராணுவ ஆதரவை வழங்கி போராட்டத்தை அடக்க உதவியது. ஆனால் இப்போது சுன்னத் வல்-ஜமாத் முஸ்லிம்களை தம் கொடிய எதிரிகளாக, வைரிகளாக தினமும் எண்ணும் ஸெய்தி பிரிவு ஷியாக்களின் வசம் ஒரு தேசமே வந்துள்ளது. 

நாளை பஹ்ரைனிலும், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான ஹிஜாஸிலும் அது நடக்காது என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. ஏனென்றால் இங்கு பல்லாயிரக்கணக்கான ஈரானின் சிலீப்பர் செல்கள் காத்திருக்கின்றனர் தங்களிற்கு வரவிருக்கும் உத்தரவிற்காக. அரபு தேசத்தலைவைர்களோ அருந்ததி வேட்டையில், மன்னிக்கவும் ஐ.எஸ். வேட்டையில் மட்டுமே குறியாக உள்ளனர். 
by:Abu Sayyaf

பதுளை மாவட்டத்தில் ஐ.தே.க. யில் போட்டியிட்ட முஸ்லிம்கள் பெற்ற விருப்பு வாக்குகள்

ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து இம் முறை நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இ, தொ. கா. சார்பில் அ. செந்தில் தொண்டமான் 31858, ஆறுமுகம் கணேஷமூர்த்தி 19,262, பெருந்தோட்ட தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் வடிவேல் சுரேஸ் 21,967 வாக்குகளைப்பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஐ. தே. க. சார்பில் வேலாயுதம் ருத்திரதீபன் 30,457 தெரிவாகியுள்ளனர்.
இதற்கு முன்பிருந்த கடந்த ஐந்தாவது ஊவா மாகாண சபையில் மூன்று தமிழ் பிரதிநிதித்துவம் மாத்திரமே இருந்தது.

கடந்த மாகாண சபையில் இருந்த அ. அரவிந்தகுமார் 12721, இ.தொ.கா. ஆ. சிவலிங்கம் 18,695 எஸ். இராஜமாணிக்கம் 6333 வாக்குகளையும் ஐ. தே. கட்சியில் போட்டியிட்ட பொன்னுசாமி பூமிநாதன் 5899 எம். சச்சிதானந்தன் 16808, ஐ. தே. கட்சியில் போட்டியிட்ட இப்றாகீம் மொஹமட் நkர் 15686 அப்துல் கபூர் அமீர் 15003ம் வாக்குகளையும் பெற்று தோல்வியடைந்துள்ளனர்.

தயாசிறி ஜயசேகரவை முறியடித்து, ஹரீன் பெர்னான்டோ படைத்த சாதனை (படங்கள் இணைப்பு)

விருப்பு வாக்கு பட்டியலில்  ஐக்கிய தேசிய கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர்  ஹரின் பெர்னாண்டோ 173,993 வாக்குகள் பெற்று  பதுளை மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதோடு 88 சதவீத வாக்குகளை பெற்று சாதனை பதித்துள்ளார். 
Harin F
இதனை அவர்களது ஆதரவாளர்கள் கொண்டாடினர். மாலை அணிவித்து ஹரின் பெர்னாண்டோவை வரவேற்கும் படம் ஒன்றை எம்.பி தனது முகநூலில் வெளியிட்டிருந்தார். 

வடமேல் மாகாணசபை தேர்தலில் அதிகபடியான விருப்பு வாக்குகளை பெற்றவர் தயாசிறி ஜயசேகர 62.22% என்ற விருப்பு வாக்கே இதற்கு முதல் வேட்பாளர் பெற்ற விருப்புவாக்காக இருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. 



jaffnamuslim

பள்ளியை மூடாவிட்டால் முஸ்லிம்களை வெளியேற்றுவோம்; வியாபாரத்தையும் முடக்குவோம்!




மாத்தறை இஸ்ஸதீன் நகரிலுள்ள பள்ளிவாசலை உடனடியாக மூடாவிட்டால் அங்கு வாழ்ந்து வருகின்ற முஸ்லிம்களை அங்கிருந்து இரவோடு இரவாக வெளியேற்றுவோம் என அப்பகுதி பௌத்த தேரர்கள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
a (2)

அத்துடன் இஸ்ஸதீன் நகரிலுள்ள முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரித்து அவற்றையும் அங்கிருந்து அகற்றுவோம் என எச்சரித்துள்ளனர்.
இஸ்ஸதீன் நகர பள்ளிவாசல் சர்ச்சை தொடர்பிலான கூட்டமொன்று மாத்தறை மாவட்ட செயலகத்தில் புத்தசாசன, சமய விவகார அமைச்சின் செயலாளர் எம்.கே.டி.எஸ்.திசாநாயக்க தலைமையில் இடம்பெற்ற போத தேரர்கள் மிகவும் சூடாக கீழ்த்தரமான வார்த்தைகளுடன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

குறித்த பகுதியில் 13 முஸ்லிம் குடும்பங்களே வாழ்ந்து வருவதால அங்கு பள்ளிவாசலொன்று தேவைதானா என்றும் தேரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பள்ளிவாசலை உடனடியாக மூடாவிட்டால் அங்கிருக்கும் முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றுவோம். அதன் பிறகு அப்பள்ளிவாசல் செயலிழந்து விடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பள்ளிவாசல் 2008ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட அதேவேளை 2012ஆம் ஆண்டு வக்பு சபையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனினும் தேரர்களின் வற்புறுத்தலின் பேரில் இப்பள்ளிவாசலை மூடு விடுமாறு அண்மையில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் உத்தரவிட்டிருந்தார்.

இக்கட்டளையை மேலும் தாமதிக்காமல் உடனடியாக அமுல்படுத்துமாறு தேரர்கள் போர்ர்கொடி தூக்கியுள்ளனர். இல்லையேல் முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவோம் என்று அக்கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது பெரும் வாக்குவாதம் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் மாத்தறை மாவட்ட செயலாளர், முஸ்லிம் சமய விவகார திணைக்கள பணிப்பாளர், இஸ்ஸதீன் நகர விகாராதிபதி, பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பெரும் தொகையான தேரர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது தேரர்கள் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மீது கண்டனங்களையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்ததுடன் தூஷண வார்த்தைகளையும் பிரயோகித்தனர். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் தரப்பினர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஊவா மாகாணத்தின் தேர்தல் இறுதி முடிவுகள்


ஊவா மாகாணத்தின் மொனராகலை  மாவட்ட இறுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 140,850-  ( 8 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 77,065 ( 5 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 15,955( 1 ஆசனம்)

2009 ஆம் ஆண்டு மொனராகலை மாவட்டம் இறுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 159,837 (9 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 30,509 ( 2 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 5,632 ( ஆசனத்தை வெல்லவில்லை)

ஊவா மாகாணத்தின் பதுளை  மாவட்ட இறுதி முடிவுகள்  

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 209,056- ( 9 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 197,708 ( 8 ஆசனங்கள்)
மக்கள் விடுதலை முன்னணி - 20,625( 1 ஆசனம்)

2009 ஆம் ஆண்டு பதுளை மாவட்டம் இறுதி முடிவுகள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி - 259,069 (14 ஆசனங்கள்)
ஐக்கிய தேசிய கட்சி - 98,635 ( 5 ஆசனங்கள்)
மலையக மக்கள் முன்னணி 9,227(1 ஆசனம்)
மக்கள் விடுதலை முன்னணி - 9இ007(1 ஆசனம்)

தனிநாடாக சுதந்திரமடைவதை நிராகரித்தது ஸ்கொட்லாந்து : பெருமூச்சுவிடும் பிரித்தானியா!



பிரித்தானியாவிலிருந்து பிரிந்து தனிநாடாக சுதந்திரமடைவதை ஸ்கொட்லாந்து மக்கள் நிராகரித்துள்ளனர்.
நேற்று இதற்காக நடைபெற்ற வரலாற்று வாக்கெடுப்பு முடிவுகள் இன்று காலை தொடக்கம் வெளியாகி வருகின்றன. இதுவரை வெளியாகியுள்ள 26 கவுன்சில்களுக்கான முடிவில்  54% வீதமான மக்கள் பிரித்தானியாவுடன் இணைந்திருப்பதே ஸ்காட்லாந்தின் வளர்ச்சிக்கு நல்லது என ஆமோதித்துள்ளனர்.



ஆம், இல்லை இரு பதில்களுக்கும் இடையிலான வித்தியாச விகிதம் எதிர்பார்த்ததை விட மூன்று புள்ளிகள் அதிகமாக உள்ளன. ஸ்கொட்லாந்தின் இயங்கு நிலை முதன்மை அமைச்சரும், ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரிவதற்கான பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்தவருமான நிகோலா ஸ்டார்ஜியொன், இம்முஇடிவுகள் தமக்கு ஆழ்ந்த தனிப்பட்ட மற்றும் அரசியல் ஏமாற்றத்தை தந்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளார்.

ஸ்கொட்லாந்து தனிநாடாக பிரிந்து சுதந்திரமடைவதை ஏன் அந்நாட்டு மக்களே நிராகரித்துள்ளனர். 

பள்ளிவாசலுக்கு அருகில் நாயின் உடல், 7 கடைகள் சேதம், முஸ்லிம்களை அமைதிகாக்க கோரிக்கை

பதுளை பதுலுப்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் முடிவில் இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் காரணமாக பிரதேசத்தில் உள்ள கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. 

இந்த சம்பவம் காரணம் பதுளை முஸ்லிம் பள்ளிவாசலில் கூட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே கூட்டம் நடைபெற்ற பள்ளிவாசலுக்கு எதிரில் கொலை செய்யப்பட்ட நாயின் உடலை சிலர் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.

அத்துடன் பாடசாலை ஒன்றின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலைமை அடிப்படையாக கொண்டு இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் இப்படியான சம்பவம் பற்றி தமக்கு தெரியவரவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்தது.

முஸ்லிம்கள் அமைதி காக்க வேண்டும் - பதுளை பள்ளிவாசல் கோரிக்கை

பதுளை பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பதற்ற நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து 24 மணி நேரத்திற்குள் அந்த சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கைது செய்யும் வரை அமைதியாக இருக்குமாறு பதுளை முஸ்லிம் பள்ளிவாசல் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பதுளையில் நேற்று நடந்த சம்பவம் ஒன்றை அடுத்து முஸ்லிம்களுக்கு சொந்தமான 7 கடைகள், பள்ளிவாசல் மற்றும் ஒரு பாடசாலைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் ரிசாத் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஏனைய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதேசத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தில் அமைதி நிலவுவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனிலிருந்து ஸ்காட்லாந்து தனி நாடாக பிரியுமா...? : வாக்கெடுப்பு முடிந்தது முடிவுகள் விரைவில்!

பிரிட்டனில் இருந்து ஸ்கொட்லாந்து பிரியுமா என்பதை தீர்மானிக்கும் கருத்து வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. 

இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றை இணைத்து 1707ல் (கிரேட்) பிரிட்டன் அமைக்கப்பட்டது. அதிலிருந்து கடந்த 1922ல் அயர்லாந்து பிரிந்து, தனி நாடானது.
 அதேபோன்று, ஸ்கொட்லாந்தையும் தனி நாடாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுந்து வந்தது. இது குறித்து கருத்து வாக்கெடுப்பு நடத்த கடந்த டிசம்பர் 2013ல் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், ஒப்புதல் வழங்கினார். 

இதையடுத்து, கருத்து வாக்கெடுப்பு தொடர்பாக பிரசாரங்கள் செய்யப்பட்டன. ஸ்காட்லாந்தை பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். 

இப்போது பிரிந்தால், இனி எப்போதும் இணைய முடியாது என ஸ்கொட்லாந்து மக்களுக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் வேண்டுகோள் விடுத்தார். மற்றொரு பக்கம், ஸ்கொட்லாந்தை பிரிப்பதற்கு ஆதரவளிக்கக் கோரி, பிரமாண்ட பேரணிகளும், பிரச்சாரங்களும் நடத்தப்பட்டன. 

இந்நிலையில், வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. சுமார் 42 லட்சம் மக்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணியிலிருந்து இரவு 10 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும். 

முடிவுகள் குறித்து நாளை காலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். கருத்து வாக்கெடுப்பில் ஆம் அல்லது இல்லை என்ற இரண்டில், ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். ஆம் என்பது ஸ்கொட்லாந்தை பிரிப்பதற்கு ஆதரவு என்று பொருள்.

 இல்லை என்பது, ஸ்கொட்லாந்தை பிரிக்க ஆதரவு இல்லை என்று பொருள்படும். பிரிக்க முடிவு செய்யப்பட்டால்...

 * கருத்து வாக்கெடுப்புக்கு சட்ட அதிகாரம் கிடையாது. எனவே மார்ச் 2016க்கு பின்னர்தான் ஸ்கொட்லாந்தை பிரிப்பதற்கான பணிகள் தொடங்கும். 

* யூரோ நாணயத்தை ஸ்கொட்லாந்து பயன்படுத்த முடியாது. 

* பவுண்ட் ஸ்டெர்லிங் நாணயத்தை, இங்கிலாந்து வங்கியின் உதவியுடன் ஸ்கொட்லாந்து பயன்படுத்த விரும்புகிறது. இதனை பிரிட்டன் எதிர்க்கிறது. 

* இராணுவத்தை பங்கீடு செய்வது, எல்லை விவகாரங்களில் சிக்கல்கள் ஏற்படும். 

* பொருளாதார ரீதியிலும் பல்வேறு நெருக்கடிகளை ஸ்கொட்லாந்து எதிர்கொள்ளலாம்.

ஜம் ஜம் நீர் குறித்து விக்கிப்பீடியா பின்வரும் தகவலை தெரிவிக்கின்றது..

சோதனைக்காக, ஜம் ஜம் நீர், நொடிக்கு 8000 லிட்டர்கள் விதம், 24 மணி நேரத்திற்கும் மேலாக பம்ப் செய்யப்பட்டது. ஆரம்பத்தில், நிலமட்டத்தில் இருந்து 3.23 மீட்டர் கீழிருந்த தண்ணீரின் அளவு 24 மணி நேர சோதனைக்கு பிறகு 13.39 மீட்டராக குறைந்தது. தொடர்ந்து பம்ப் செய்த போது (ஆச்சர்யப்படுத்தும் விதமாக) தண்ணீரின் அளவு மேற்கொண்டு குறையாமல் 13.39-மீட்டரிலேயே நீடித்தது.
பம்ப் செய்யப்படுவது நிறுத்தப்பட்ட பிறகு, (வியப்பேற்படுத்தும் விதமாக) தண்ணீரின் அளவு, 11 நிமிடத்தில், மறுபடியும் மூன்று மீட்டருக்கு வந்துவிட்டது !!!!

'பெற்றோல், மண்ணெண்ணெய், டீசல், மின்சார விலை குறைப்பு'

பெற்றோல் லீற்றருக்கு 5ரூபாவாலும் டீசல் லீற்றருக்கு 3ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றருக்கு 20 ரூபாவாலும் மின்சார கட்டணம் 25 சதவீதத்தினாலும் குறையும் என்றும் இது இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் தெரிவித்தார்.

ஷி ஜின்பிங்..,கம்மிங் : 170 பேருடன் இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி !! ஆசியாவின் பொஸ்க்கு வரலாறு காணாத வரவேற்பு – “pu tong hua”

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல்11.53க்கு வந்தைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த அவர், 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார்.
தனது பாரியாருடன் வருகைதந்த அவரை, விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்துக்கு இரு பக்கங்களிலும் நடனக்கலைஞர்கள் நடமாட, பாடசாலை மாணவர்கள் சீன,இலங்கை ஆகிய இருநாடுகளின் தேசிய கொடிகளையும் அசைத்து வரவேற்றனர்.
china boss arrives
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வீதியின் ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அவரை வரவேற்கும் முகமாக விமான நிலையத்தை சுற்றி இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுநாயக்க- கொழும்பு  அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கொழும்பில் அவர், பயணிக்கும் இடங்களிலும் இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

“pu tong hua….”pu tong hua ( வாங்கோ..வாங்கோ ..என்று அர்த்தம் )

170 பேருடன் இலங்கை வந்தடைந்தார் சீன ஜனாதிபதி
சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போயிங் 747 என்ற விசேட விமானத்தின் மூலம் சீன ஜனாதிபதி இலங்கைக்கு வந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியுடன் 170 பேர் கொண்ட குழுவும் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளதுடன் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கவுள்ளதோடு உடன்படிக்கைகள் பலவற்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஒருவர் சுமார் 28 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதால் அவருக்கு விசேட கௌரவம் அளிக்கப்பட்டு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீனா ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் சில முக்கிய வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இன்று காலை 10.30 மணி முதல் பிறபகல் 1 மணிவரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி, பேஸ்லைன் வீதி, பௌத்தலோக மாவத்தை, பம்பலபிட்டி முதல் காலிமுகத்திடல் வரை போக்குவரத்து மட்டுபடுத்தப்படும்.
மாலை 4.30 மணிமுதல் 8 மணிவரை கொள்ளுப்பிட்டி சந்தி முதல் பழைய நாடாளுமன்றம் வரையும் போக்குவரத்து வரையறுக்கப்படும்.
நாளை காலை 8 மணி தொடக்கம் 11 மணிவரையும், நாளை முற்பகல் 9.30 தொடக்கம் 12.30 வரையும், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி, தர்மபால மாவத்தை செஞ்சிலுவை சங்கம் அண்டிய பகுதி, பொது நூலக பகுதி ஹோட்டன் வீதி பேஸ்லைன் வீதி ஆகியவற்றிலும் போக்குவரத்து மட்டுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,  இன்று மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரை காலிமுகத்திடலுக்கு பொது மக்கள் வருகை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

விபத்தில் உயிர் தப்பினார் உபேக்ஷா சுவர்ணமாலி எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஷா சுவர்ணமாலி பயணித்த வாகனம் மீரிகம வியாங்கொடை பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

போகொல்லாகம சந்தியில் வைத்து முச்சக்கரவண்டி ஒன்றுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை, உபேக்ஷா சுவர்ணமாலி பயணித்த ஜீப் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் உயிர்தப்பியதுடன் விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, வத்துபிட்டிவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜீப் வண்டியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

வெலிமடையில் கூட்டம் வரவில்லை..!! மேடையில் இருந்து வெளியேறிய ஜனாதிபதி

பதுளை வெலிமடை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று முற்பகல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட கூட்டத்தில் மக்கள் குறைவாக கலந்து கொண்டிருந்ததால், ஜனாதிபதி அங்கு சிறிது நேரம் இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Election_MG_3455-415x260
கூட்டத்தில் 200 பேருக்கும் குறைவான மக்களும் சுமார் 500 பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஊவா மாகாண சபைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், ஆளும் கட்சியின் ஆட்சி தொடர்பில் ஊவா மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமையை மாற்ற ஜனாதிபதி கூட்டங்களில் கலந்து கொண்டு வருகின்ற போதிலும் கூட்டங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்து 

சாதா USB இன்டர்நெட் டாங்கிலை wifi டாங்கிலாக மாற்றி மற்றவர்களுடன் இன்டர்நெட்டை பகிர்வது எப்படி ?

நமது கணிணியில் நாம் ஏதாவது ஒரு இன்டர்நெட் இணைப்பு பயன்படுத்திக் கொண்டிருப்போம். அதே நேரத்தில் நமது மோபைலில் அல்லது டேப்லட்டில் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதற்காக நாம் தனியாக காசு செலவழித்து மொபைலில் இன்டர்நெட் pack ஐ Activate செய்வோம்.
SUMEDHE5DMS_HUAWEI-718795
இது போன்று நாம் செய்யத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கணிணியில் பயன்படுத்தும் இன்டர்நெட்டையே உங்கள் மொபைலிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் மொலை மட்டும் அல்ல, tablet மற்ற கணிணி என எல்லா wifi enabled டிவைசிலும் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
நீங்கள் உங்களது கணினியில் Internet இணைப்பை பயன்படுத்த Wifi, LAN, Cable Modem, Dial-up, Cellular,USB Dongle போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்துவீர்கள் இதனை எந்தவொரு Router-உம் இல்லாமல் உங்கள் கணினியில் இருந்தவாறே Wireless பயன்படுத்தக்கூடிய Laptop, Smart Phone, iPod Touch, iPhone, Android Phone, Netbook, போன்றவற்றுக்கு Wireless மூலம் உங்கள் இன்டர்நெட்டை பகிர்ந்து கொள்ளலாம்.
இதை எவ்வாறு செய்வது என்பதை காண்போம்
Virtual Router எனும் சிறந்த மென்பொருளின் மூலம் நீங்கள் பயன்டுத்தும் இன்டர்நெட்டை wifi மூலம் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
1. முதலில் இங்கு சென்று Virtual Router என்ற மென்பொருளை டவுன்லோட் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
2. Install செய்த Virtual Router மென்பொருளை Open செய்து கொள்ளவும் பின்பு கீழே படத்தில் உள்ளவாறு வரும்
hvjv
அதில் Network Name (SSID) என்பதில் உங்களுக்கு விரும்பிய ஒரு பெயரை கொடுக்கவும். Password என்பதிலும் உங்களுக்கு விரும்பிய ஒரு Password -ஐ கொடுத்து Start Virtual Router என்பதை கிளிக் செய்யவும். மேலும் தாங்கள் எந்த இன்டர்நெட் இணைப்பை பகிர விரும்புகின்றீர்கள் என்பதையும் தேர்வு செய்து கொள்ளவும்.
3. இப்பொழுது உங்கள் கணினியில் இருந்து நீங்கள் கொடுத்த Network பெயரில் Wireless இணைப்பு பகிரப்படும். இதனை வேறு கணினி அல்லது Mobile Phone -களுக்கு பயன்படுத்தவேண்டும்மென்றால் நீங்கள் கொடுத்த Password ஐ கொடுத்து இணைப்பை இணைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் பயன்படுத்தும் இன்டர்நெட்டை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உங்கள் கணிணியில் wifi enable ஆக இருக்க வேண்டியது அவசியம்.

நன்றி:- newstig.com