கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

“I.S.I.S.“-ஐ அழிக்க நினைத்து கொடிய “ஷியா“ பிரிவை உள்ளே வர வழி வகுத்த அரபு தேசங்கள்.

முழு அராபிய தேசத்தின் தலைவர்களும் “அத் தவ்லா அல் இஸ்லாமியாவை (Islamic State (IS)” அழிப்பதற்கான அமெரிக்க வியூகங்களில் தங்களது பங்கு என்ன என்பது பற்றி சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்த சமயத்தில் யெமன் காவு கொள்ளப்பட்டுள்ளது. அதுவும் கடும்போக்கு ஷியாக்களால். ஸெய்தி பிரிவு ஷியாக்களால். இஸ்லாமிய அஷ்-ஷரீஆஃ முரண்பாடுகள் அன்றி இமாம் அலியையும் அவர்களது குடும்பத்தையும் உமையாக்கள் அழித்தார்கள். அவர்களை காலமுள்ள வரைக்கும் பழிவாங்குவோம் எனும் அரசியல் முரண்பாடுகளை கொண்டு முழங்கும் ஷியாப்பிரிவினரால். மக்காவையும் மதீனாவையும் கைப்பற்ற பூகோள மிலிட்டரி மற்றும் பொலிட்டிக்கள் அஜன்டாவை தயாரித்து அதனடிப்படையில் இயங்கும், இயக்கும் ஈரானிற்கு இது ஒரு பெரிய வெற்றி. 
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் அல்-குர்ஆனையும் அஸ்-ஸுன்னாவையும் கொண்டு ஆட்சி செய்ய முற்படும் இஸ்லாமிய அரசை அழிக்க முனைந்த அரபு தலைவர்கள் அதன் எதிரியான ஷியா கொள்கையை கொண்டு ஆட்சி செய்ய முனையும் இன்னொரு இஸ்ரேலை இப்போது அண்டை தேசமாக்கிக் கொண்டுள்ளனர். 

நேற்று முன்தினம் என்றும் இல்லாத அளவு குண்டு வெடிப்பு சத்தங்கள் சன்னாவின் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்த வண்ணம் இருந்தன. ஓயாத துப்பாக்கிச் சூடுகளுடன், ரொக்கெட் லோஞ்சர், ஆட்டிலறி, மோட்டார் குண்டுகளும் வந்து வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஸன்னாவின் புறநகர் பகுதிகளில் விரவி வந்த சண்டைகள் கடந்த சனிக்கிழமை நடுநிசியில் தலைநகரின் இதயப் பகுதியினுள் கேட்க ஆரம்பித்தது. மேற்கு ஆதரவுடன் இது வரை செயற்பட்டு வந்த யெமனிய அரசின் இராணுவம் பரவலாக பல முனைகளிலும் பின்வாங்கி வருகின்றன. Houthis ஷியா மிலீஷியா படையினர் ஞாயிறன்று யெமனிய தலை நகர் சன்னாவின் பல பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.

அந்நாட்டு பிரதமர் அலுவலகம், மத்திய வங்கி, தொலைக்காட்சி நிலையம், இராணுவ தலைமையகம், பாதுகாப்பு அமைச்சு கட்டிடம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பல நிலைகளினுள் Houthi ஆயுததாரிகள் நிலைபெற்றுள்ளனர். பல நூறு பிக்-அப் மற்றும் ஜீப்களில் அவர்கள் வீதிகளில் வலம் வந்த வண்ணமுள்ளனர். எல்லாமே ஒரு மாயம் போல ஓரிரு நாட்களினுள்ளேயே நடந்து முடிந்து விட்டது. 

ஒரு சாதாரண ஆயுதக்குழு சாதா கவர்னேட் பகுதியில் மட்டும் தமது வலுவான ஆதிக்கத்தை கொண்டிருந்த குழு திடீரென பெரும் எழுச்சி பெற்ற ஆயுத தாக்குதல் அணியாக மாறியதன் மர்மங்கள் இப்போது வெளியாகியுள்ளன. Houthis குழுவிற்கு முற்று முழுதாக ஆயுத, ஆலோசனை வசதிகளை வழங்குவது ஈரான். தென் யெமனில் அல்-காயிதாவிற்கு எதிராக சண்டையிடுவதிலும், அவர்களை மேற்குலகம் சொல்லும் நிகழ்ச்சி நிரலிற்கு ஏற்ப அழிக்க முற்படுவதிலுமே யெமனிய அரசு அதீத கவனம் செலுத்தி வந்தது. 

தம்மாஜில் தாருல் ஹதீஸை அழித்தொழிப்பதற்கு Houthis மிலீஷியாக்கள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் போதே யெமனிய அரசு விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. அதனை அவர்கள் தங்கள் இனமான ஷியாக்களின் வெற்றியாகவே எண்ணினர். மேற்கு ஆதரவு ஷியா அரசு என்பது ஈரானை பொருத்த வரை சுன்னிகளின் ஆட்சிக்கு ஒப்பானது. தருணம் பார்த்து Houthi களை ஏவி சன்னாவை தன் வசப்படு்த்தியுள்ளது ஈரான். ஐ.எஸ்.ஐ.எஸ். எப்படி நிலங்களை பிடிப்பதற்கு தாக்குதல் உக்திகளை மேற்கொண்டு தனது வீரர்களை நகர்த்தி பிரதேசங்களை தன் வசப்படுத்தியதோ அதே பாணியையொத்த தாக்குதலையே Houthi கள் இப்போது நடாத்தி முடித்துள்ளனர். 

2004-ல் அ்ன்றைய யெமனிய ஆட்சியாளர் ஹுதிகள் முற்று முழுதாக அழிக்ப்பட்டு விட்டனர். இனி அவர்கள் பற்றிய சவால்கள் எமக்கு இல்லை. அவர்கள் பற்றிய அச்சம் மக்களிற்கும் இல்லை என சன்னாவில் வைத்து முழங்கியிருந்தார். சரியாக பத்து வருடங்கள் கழித்து 2014-ல் அதே ஹுதிகள் சன்னாவினுள் நுழைந்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். 

இது திடீரென நிகழ்ந்த ஒரு மாற்றமல்ல. ஷியாக்களின் நீண்ட காலத் திட்டம். ஈரானினதும், கும்மினதும் நீண்ட காலக்கனவு. இப்போது சரியான தருணத்தில் நிறைவேறியுள்ளது. அடுத்தது பஹ்ரைன். அமெரிக்க ஆதரவிலான அரபு வசந்தம் நிகழ்ந்த போது யெமனிலும் பஹ்ரைனிலும் மக்கள் எழுச்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் அவை அடக்கப்பட்டன. சவுதி அரேபியா இந்த இரண்டு தேசங்களிற்கும் தன் இராணுவ ஆதரவை வழங்கி போராட்டத்தை அடக்க உதவியது. ஆனால் இப்போது சுன்னத் வல்-ஜமாத் முஸ்லிம்களை தம் கொடிய எதிரிகளாக, வைரிகளாக தினமும் எண்ணும் ஸெய்தி பிரிவு ஷியாக்களின் வசம் ஒரு தேசமே வந்துள்ளது. 

நாளை பஹ்ரைனிலும், சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணமான ஹிஜாஸிலும் அது நடக்காது என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. ஏனென்றால் இங்கு பல்லாயிரக்கணக்கான ஈரானின் சிலீப்பர் செல்கள் காத்திருக்கின்றனர் தங்களிற்கு வரவிருக்கும் உத்தரவிற்காக. அரபு தேசத்தலைவைர்களோ அருந்ததி வேட்டையில், மன்னிக்கவும் ஐ.எஸ். வேட்டையில் மட்டுமே குறியாக உள்ளனர். 
by:Abu Sayyaf

0 comments:

Post a Comment