கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

ஷி ஜின்பிங்..,கம்மிங் : 170 பேருடன் இலங்கை வந்தார் சீன ஜனாதிபதி !! ஆசியாவின் பொஸ்க்கு வரலாறு காணாத வரவேற்பு – “pu tong hua”

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், எயார் சைனா என்ற விசேட விமானத்தில் மூலமாக கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை முற்பகல்11.53க்கு வந்தைந்தார். விமான நிலையத்தில் வைத்து அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்துக்கு சென்று அவரை வரவேற்றார்.இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்த அவர், 20 ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவார்.
தனது பாரியாருடன் வருகைதந்த அவரை, விமான நிலையத்தில் விரிக்கப்பட்டிருந்த செங்கம்பளத்துக்கு இரு பக்கங்களிலும் நடனக்கலைஞர்கள் நடமாட, பாடசாலை மாணவர்கள் சீன,இலங்கை ஆகிய இருநாடுகளின் தேசிய கொடிகளையும் அசைத்து வரவேற்றனர்.
china boss arrives
விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வீதியின் ஒரு பக்கத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த யானைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அவரை வரவேற்கும் முகமாக விமான நிலையத்தை சுற்றி இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் கட்டுநாயக்க- கொழும்பு  அதிவேக நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கொழும்பில் அவர், பயணிக்கும் இடங்களிலும் இருநாட்டு கொடிகளும் பறக்கவிடப்பட்டுள்ளன.

“pu tong hua….”pu tong hua ( வாங்கோ..வாங்கோ ..என்று அர்த்தம் )

170 பேருடன் இலங்கை வந்தடைந்தார் சீன ஜனாதிபதி
சீனா ஜனாதிபதி ஷி ஜின்பிங் சற்று நேரத்திற்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போயிங் 747 என்ற விசேட விமானத்தின் மூலம் சீன ஜனாதிபதி இலங்கைக்கு வந்துள்ளார்.
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதியுடன் 170 பேர் கொண்ட குழுவும் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் சீன ஜனாதிபதி, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்திக்கவுள்ளதுடன் இலங்கையில் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கவுள்ளதோடு உடன்படிக்கைகள் பலவற்றிலும் கைச்சாத்திடவுள்ளார்.
சீன ஜனாதிபதி ஒருவர் சுமார் 28 வருடங்களுக்குப் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதால் அவருக்கு விசேட கௌரவம் அளிக்கப்பட்டு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
சீனா ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு கொழும்பில் சில முக்கிய வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
இன்று காலை 10.30 மணி முதல் பிறபகல் 1 மணிவரை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதி, பேஸ்லைன் வீதி, பௌத்தலோக மாவத்தை, பம்பலபிட்டி முதல் காலிமுகத்திடல் வரை போக்குவரத்து மட்டுபடுத்தப்படும்.
மாலை 4.30 மணிமுதல் 8 மணிவரை கொள்ளுப்பிட்டி சந்தி முதல் பழைய நாடாளுமன்றம் வரையும் போக்குவரத்து வரையறுக்கப்படும்.
நாளை காலை 8 மணி தொடக்கம் 11 மணிவரையும், நாளை முற்பகல் 9.30 தொடக்கம் 12.30 வரையும், கொள்ளுப்பிட்டி சந்தி, லிபர்ட்டி, தர்மபால மாவத்தை செஞ்சிலுவை சங்கம் அண்டிய பகுதி, பொது நூலக பகுதி ஹோட்டன் வீதி பேஸ்லைன் வீதி ஆகியவற்றிலும் போக்குவரத்து மட்டுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை,  இன்று மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரை காலிமுகத்திடலுக்கு பொது மக்கள் வருகை அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

0 comments:

Post a Comment