கஹடோவிடவின் அன்றாட நிகழ்வுகளை எமது இணையத்தளத்துடன் நீங்களும் பகிர்ந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ள வேண்டிய ஈமெயில் முகவரி kahatow@gmail.com தொடர்புகளுக்கு: kahatow@gmail.com

நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலயத்தின் அதிபர் கைது

நிட்டம்புவ சங்க போதி வித்தியாலயத்தின் அதிபர் லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பாடாலைக்கு மாணவர் ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக லஞ்சம் பெற முற்பட்டுள்ளார்.

50 ஆயிரம் ரூபாவை லஞ்சம் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளதாக, லஞ்ச ஊழல் குற்றத்தடுப்பு பிரிவினரின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு; பெட்ரோல் உருவான வரலாறு

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயம் செய்வதில் கச்சா எண்ணெய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் எவர்க்கும் மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகிறேன். ஏனெனில் ஒவ்வொரு முறை கச்சா எண்ணெயின் விலை உயரும்போதும் அது உலகளவில் அனைத்து நாடுகளின் பொருளாதாரத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது. உலகநாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் அதி முக்கிய காரணியான இந்த கச்சா எண்ணெய்யை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் யார் தெரியுமா நண்பர்களே?. தற்போது ஈராக்கியர்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் பண்டைய பாபிலோனியர்கள் தான் கச்சா எண்ணையை உலகில் முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் ஆவர்.
அதைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பு முதலில் கச்சா எண்ணெய் எப்படி உருவாகிறது என்று பார்ப்போம் வாருங்கள். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை பேரிடர் காரணமாக மண்ணில் புதையுண்டு இறந்த மனிதர்கள் மற்றும் விலங்கினங்களின் உடல்கள் அழுகி (decompose) பாக்டீரியாக்களால் நொதிக்கப்பட்டு, பின்பு மண்ணில் உள்ள உப்புக்களுடன் சேர்ந்து வேதிவினைபுரிந்து., நிலத்திற்கு அடியில் நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பம் காரணமாக அருகிலுள்ள பாறை வெடிப்புகளுக்குள் பாய்ந்து அடர் கருப்பு நிறத்தை கொண்ட எண்ணெய் வளங்களாக உருமாறுகின்றது.
இந்த எண்ணெய் வளங்களை உலகில் முதன் முதலில் கண்டறிந்தவர்கள் ஈராக்கியர்கள் என்னும் பண்டைய பாபிலோனியர்கள் ஆவர். பண்டைய பாபிலோனியர்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தங்களது மண்ணில் வானுயர்ந்த கோபுரங்களை கட்டும்போது, கட்டிடத்தின் வலிமையை கருத்தில் கொண்டு கட்டிடத்தின் அஸ்திவாரச்சுவரை (Foundation Wall) நிலத்தில் சற்று ஆழத்திலிருந்து கட்டி எழுப்பினார்கள். அப்படி ஒரு சமயம் ஈராக்கிலுள்ள Andericca (Near Babylon Province) என்ற இடத்தில் ஒரு கட்டிடத்தின் கட்டுமானதிற்க்காக சற்று ஆழமாக குழி தோண்டியபோது கிடைத்ததுதான் இந்த கச்சா எண்ணெய் (Crude oil).
கச்சா எண்ணெய் சேர்த்து கட்டப்பட்ட சுவர்கள் கரையான்கள், எறும்புகள் மற்றும் பூச்சிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கொள்வதை தற்செயலாக ஒரு நாள் கண்டுபிடித்த பாபிலோனியர்கள் அதன் பின்னர் கச்சா எண்ணெய்யை வெகுநேரம் கொதிக்கவைத்து வற்றச்செய்து கிடைத்த கூழ்மத்தை (நிலக்கீல், Asphalt) நிலத்திற்குள் மறையும் கட்டிடத்தின் அஸ்திவாரச் சுவர்களின் மீது சாயமாக (paint) பூசினார்கள். அதோடு கச்சா எண்ணையின் எரியும் திறனை கருத்தில் கொண்டு வெளிச்சத்தை உண்டாக்க தீபந்ததிற்க்குரிய எண்ணெய்யாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதனை ஹீரோட்டஸ் (Herodus – கி.மு.484) மற்றும் டியோடோரஸ் (Diodorus – கி.மு. 60) என்ற இரு புகழ்பெற்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள் தங்களது ஆய்வுகட்டுரைகளில் ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்கள்.
எல்லோருக்கும் தெரிந்த உலகின் முதல் நவீன எண்ணெய் கிணறு கி.பி.347 ஆம் ஆண்டு சீனாவில் துளையிடப்பட்டது. மூங்கில் கம்புகளால் துளையிடப்பட்ட அந்த கிணறு கிட்டத்தட்ட 800 அடி ஆழம் கொண்டதாக இருந்தது. கி.பி. ஏழாம் நூற்றாண்டு வரை கச்சா எண்ணெய் விளக்கு எரிப்பதற்கு தேவைப்படும் விளக்கு எண்ணெயாகவும் கட்டிடகட்டுமான பணிகளில் நிலக்கீலாகவும் தான் பயன்படுத்தப்பட்டது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு வாக்கில் நிலக்கீலைக் கொண்டு ஈராக் தலைநகர் முழுவதும் அழகான சாலைகள் அமைக்கும் பணி துவங்கியது. உலகில் முதன் முதலாக நிலக்கீல் (asphalt) கொண்டு சாலைகள் போடப்பட்டது ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தான்.
இதனை தொடர்ந்து அரபுநாடுகள் முழுவதிலும் கச்சா எண்ணெய் கிடைக்கும் இடங்களை தேடும் பணி துவங்கியது கி.பி. பத்தாம் நூற்றாண்டுவாக்கில் அபு அல் ஹாசன் (Abu Al Hasan) என்ற முஸ்லிம் புவியியல் வல்லுநர் அஜர்பாஜன் (Azerbaijan) என்ற நாட்டிளிலுள்ள பாகு (baku) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பதை கண்டறிந்தார். இதைத்தொடர்ந்து பாகுவில் நூற்றுக்கும் அதிகமான எண்ணெய் கிணறு வெட்டப்பட்டது. உலகிலேயே முதன் முதலாய் அதிக எண்ணிக்கையில் ஒரே இடத்தில் எண்ணெய் கிணறு வெட்டப்பட்ட இடம் அஜர்பாஜன் நாட்டிளிலுள்ள பாகுவில்தான்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சில ரசவாதிகள் (alchemist)  கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தும்போது எரியும் தன்மை கொண்ட நீர் (kerosene) கிடைப்பதாக கூறினார்கள். இதைத்தொடர்ந்து முகம்மது இபின் ஷகாரியா அல்-ரஷி (Muhammed Ibn Zakariya Al-Razi, கி.பி.865-925) என்ற பெர்சியன் ரசவாதி (Persian alchemist) கச்சா எண்ணெய்யை வடிகட்டும் முயற்சியில் இறங்கினார். இதற்க்காக இவர் தானே தயாரித்த அலம்பிக் (alembic)  என்ற ஒரு வகை வடிகலனை பயன்படுத்தினார். முயற்சியின் விளைவாக வெடித்து எரியும் நீரைக் (petrol) கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு பெர்சிய ராணுவத்தினரால் எதிரி நாட்டு ராணுவத்தினரை தாக்க வெடிபொருளாக பயன்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கச்சா எண்ணையின் முக்கியத்துவம் உணரப்பட்டு உலகமெங்கும் எண்ணெய் வளங்கள் கிடைக்கும் இடங்களை கண்டறியும் சோதனை துவங்கியது. பனிரெண்டாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவிலும் பதிமூன்றாம் நூற்றாண்டில் ரோமானியாவிலும் எண்ணெய் கிடைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டது. பதினேழாம் நூற்றாண்டில் (1753-ஆம் ஆண்டு) முதன் முதலாக அமெரிக்காவின் பெனிசுலவேனியா (Pennsylvania) நகரிலும், பின்னர் பிரான்ஸிலுள்ள அல்சசே (Alsace) என்ற நகரிலும் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரஷ்யாவிலுள்ள உக்தா (ukhta) என்ற இடத்தில் அதிக அளவில் எண்ணெய் வளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து ரஷ்ய சக்கரவர்த்தினி (Empress) எலிசபெத் என்பவருடன் உதவியோடு உலகின் முதல் கச்சா எண்ணெய் வடிப்பு ஆலை உக்தாவில் நிறுவப்பட்டது. இந்த ஆலை கிட்டத்தட்ட இபின் ஷகாரியாவின் வடிகட்டுதல் முறையை அடிப்படையாக கொண்டிருந்தது. இதன் மூலம் வடிகட்டப்பட்ட எண்ணெய்., ரஷ்ய நாட்டு தேவாலயங்களிலும் (church), மடாலயங்களிலும் (monasteries) விளக்கு எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் 1846 ஆம் ஆண்டு ஆப்ரஹாம் ஜெஸ்னர் (Abraham Pineo Gesner) என்ற கனடா நாட்டை சேர்ந்த நிலவியல் வல்லுநர் உலகில் முதன் முதலாக நிலக்கரியிலிருந்து மண்ணெண்ணெய்யை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை கண்டறிந்தார். அதோடு மண்ணெண்ணெய்யில் எரியும் விளக்குகளையும் உருவாக்கி இருளில் மிதந்திருந்த உலகத்திற்கு ஒரு வெளிச்சத்தை காட்டினார். அதைத் தொடர்ந்து மண்ணெண்ணெய்யின் தேவை பன்மடங்கு அதிகரிக்க துவங்கியது. நிலக்கரியிலிருந்து பிரித்து எடுக்கப்பட்ட மிகக்குறைந்த மண்ணெண்ணெய் மனிதர்களின் மிகப்பெரிய தேவையை பூர்த்தி செய்ய இயலாததால் மாற்று வழி பற்றி யோசிக்கப்பட்டது..
கச்சா எண்ணெய்யை சூடுபடுத்தி கிட்டத்தட்ட மூன்றிக்கும் மேற்பட்ட எண்ணெய்களை பிரித்தெடுக்கலாம் என்கிற உண்மையை உலகில் முதன் முதலாக 1846 ஆம் ஆண்டு போலந்து நாட்டை சேர்ந்த Lgnacy Lukasiewicz என்ற வேதியியல் வல்லுநர் கண்டறிந்தார் இவர் தான் முதன் முதலில் கச்சா எண்ணெய்யிலிருந்து மண்ணெண்ணையை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பத்தினை கண்டுபிடித்தவர் ஆவர். இதை தொடர்ந்து மண்ணெண்ணெய் தயாரித்து விற்பதற்கென்று வணிக நோக்கிலான உலகின் முதல் எண்ணெய் கிணறு போலந்து (Poland) நாட்டில் 1853 ஆம் ஆண்டு வெட்டப்பட்டது. இதற்க்கிடையில் முக்கிய திருப்பமாக 1854 ஆம் ஆண்டு கச்சா எண்ணெயிலிருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில் பெட்ரோலை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தினை பெஞ்சமின் சில்லிமன் (Benjamin Silliman) என்ற அமெரிக்கர் கண்டறிந்தார். இவரது இந்த கண்டுபிடிப்பு காட்டுத்தீயைப் போல் மிகவேகமாக உலகமெங்கும் பரவத்தொடங்கியது.
உலகின் முதல் வணிக நோக்கிலான எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை போலந்து நாட்டிலுள்ள ஜாஸ்லோ (jaslo) என்ற நகரில் Lgnacy Lukasiewicz-யின் மேற்பார்வையின் கீழ் 1856 ஆம் அண்டு துவங்கப்பட்டது. அந்த ஆலையில் தான் முதன் முதலாக கச்சா எண்ணெயிலிருந்து ஒன்றிக்கும் மேற்பட்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்டன. பெட்ரோல் (Gasoline), மண்ணெண்ணெய் (Kerosene), டீசல் (Diesel), மசகு எண்ணெய் (lubricating Oil) மற்றும் நிலக்கீல் (Asphalt) ஆகிய ஐந்து பொருட்கள் குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்ச்சி வடித்து பிரித்தெடுக்கப்பட்டது.இதில் டீசலுக்கு மட்டும் டீசல் என்ற பெயரிடப்படாமல் ஆயில் என்றே பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் 1893 ஆம் ஆண்டு ருடால்ப் டீசல் (Rudolf Diesel) என்பவர் டீசலில் இயங்கும் வகையில் ஒரு என்ஜினை கண்டறிந்தார் அவரது கண்டுபிடிப்பை போற்றும் வகையில் டீசல் என்கிற அவரது பெயரையை அந்த எரிபொருளுக்கு சூட்டப்பட்டது.
உலகின் இரண்டாவது கச்சா எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலை 1857 ஆம் ஆண்டு ரோமானியா (Romania) நாட்டிலுள்ள Ploiesti என்ற நகரில் ஏற்படுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாடாக சுத்தீகரிப்பு ஆலைகள் கட்டப்பட்டது. இதில் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால் ரோமானியாதான் உலகில் முதன் முதலாக கச்சா எண்ணெய்யை வெளிச்சந்தையில் விற்பனை செய்த முதல் நாடு ஆகும். ரோமானியா மொத்தமாக 275 டன் கச்சா எண்ணெய்யை முதன் முதலாக வெளிச்சந்தையில் விற்பனை செய்தது.
நன்றி: வரலாற்று சுவடுகள்

தங்கத்திலான புத்தர் சிலையுடன் திஹாரியில் 4 பேர் கைது :


விலை மதிக்க முடியாத தங்கத்திலான புத்தர் சிலை ஒன்றை உருக்குவதற்கு தயாரான சந்தேக நபர்கள் நால்வர், அதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைந்த இரகசிய தகவலை தொடர்ந்து திஹாரிய மின்ஹாத் மாவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றை சுற்றி வளைத்த போதே குறித்த புத்தர் சிலை மற்றும் அதனை உருக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திஹாரியைச் சேர்ந்த இருவரும், உடுகொடை மற்றும் கல்-எலிய பிரதேசத்தை சேர்ந்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தங்கத்திலான புத்தர் சிலை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கப்பெறவில்லை எனவும், சந்தேக நபர்கள் பாவித்த கையடக்கத் தொலைபேசிகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகவும், புத்தர் சிலை எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபர்கள் இன்றைய தினம் (19) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
அத்தனகல்ல உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. (ஸ)

பரீட்(த) மாஸ்டர் அவர்கள் காலமானார்.

கஹடோவிடாவைச் சேர்ந்த  அல்ஹாஜ் பரீட் மாஸ்டர் அவர்கள் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அல்பத்ரியா ம.வி யத்தில் ஆசிரியராகவும், மினுவங்கொட முஸ்லிம் பாடசாலையின் முன்னால் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார். அந்நார் கஹடோவிடாவைச் சேர்ந்த சகோதரர் ரிஸ்வி, ஸருஸம் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று புதன்கிழமை (17.02.2016) மாலை 4.00 மணியளவில் முஹியத்தீன் ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.



 َللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مَدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ اْلأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّار  

இறைவா! இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள்புரிவாயாக! இவருக்கு சுகம் அளிப்பாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவரது தங்குமிடத்தை மதிப்புமிக்கதாக ஆக்குவாயாக! மேலும் விசாலமானதாக இவரது நுழைவிடத்தை ஆக்குவாயாக! வெண்மையான ஆடை அழுக்குகளிலிருந்து தூய்மைப்படுத்துவதுபோல் இவரை இவரது தவறுகளிலிருந்து தண்ணீராலும் ஆலங்கட்டி நீராலும் பனிக்கட்டியாலும் தூய்மையாக்குவாயாக! இவரது இல்லத்தை விட சிறந்த இல்லத்தை (மறுமையில்) அளிப்பாயாக! இவரது துணையைவிட சிறந்த துணையை இவருக்கு ஏற்படுத்துவாயாக! இவரைச் சுவனத்தில் நுழையச் செய்து கப்ருடைய வேதனை, நரகவேதனை ஆகியவற்றிலிருந்து காப்பாற்றுவாயாக!

கஹடோவிடாவிக்கு கரம்கிட்டியுள்ள அரச இலவச வைத்தியசாலை!


அல்ஹம்துலில்லாஹ்  அல்லாஹ்வின் அருளாலும் கஹடோவிட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேகல்லின் முயற்சியாலும் எமதுாருக்கு அரசாங்க கிராமிய வைத்தியசாலை யொன்று கிடைக்கப் பெற்றுள்ளது. இது கஹடோவிடாவுக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும்.
சிறு, சிறு நோய்களுக்கும் வதுபிடுவல வைத்தியசாலைக்கு அழைந்து திரிந்த காலம் இன்ஷாஅல்லாஹ் இனிவரும் நாட்களில் இல்லாமலாகும் தூரம் வெகுதொலைவிலில்லை. குறிப்பாக பெண்கள்,  தனியார் வைத்தியசாலையை நாடமுடியாத நடுத்தர வர்க்கத்தினருக்கு இவ்வைத்தியசாலை அத்தியவசியமான ஒன்றாகும்.

எமதூரின் வரலாற்றில் சமூக சேவையாளர்களின் முயற்சியினால் தபால் நிலையம், கூட்டுறவுக்கடை, வங்கி போன்ற இன்னோரன்ன அத்தியவசிய விடயங்களை எமது மக்கள் பெற்றுக்கொண்டுள்ளமை சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயமாகும். அந்தவரிசையில் தற்போது அரச வைத்தியசாலை எமக்கு கரம்கிட்டியுள்ளது.

இவ்வைத்திய சாலையை வெகுசீக்கிரமாக அமைத்துக்கொள்ள இதற்காக முயற்சிசெய்திகொண்டிருக்கும் கஹடோவிட லேடிஸ் ஸேகில் நிர்வாகிகளுக்கும் எம்மாலான புரண ஒத்துழைப்புக்களை வழங்குவோம்.

கஹடோவிட அல்பத்ரியாவின் புதிய அதிபரை மனமுவர்ந்து வரவேற்கிறோம்.!

கஹடோவிட அல்பத்ரியாவின் வரலாற்றில் மீண்டும் ஒருமுறை பாடசாலையின் நிர்வாகத்தை வெளியுரைச் சேர்ந்த ஒருவர் பொறுப்பேற்றுள்ளமை, எமது கல்வி வரலாற்றில் மீண்டுமொரு திருப்பு முனையாக அமையுமென நாம் எதிர்பார்கிறோம்.

நாபாவலையைச் சேர்ந்த ஜனாப் காதர் அவர்களின் வருகையைத் தொடர்ந்து, பாடசாலையின் கல்வி வளர்ச்சியில் முன்னேற்றம் ஏற்படவேண்டம் என எமது ஊர் மக்கள் ஆவலுடன் எதிர்பாா்கின்றனர்.

ஒழுக்கத்துடன் கூடிய சிறந்த கல்வியை மாணவர்கள் பெறவேண்டும் என்பதே எமது பெற்றோா்களின் எதிர்பார்ப்பாகும். சிறந்த மாணவ சமூகத்தைக் கட்டியெழுப்ப புதிய அதிபருக்கு ஊர்மக்களாகிய நாம் எமது புரண ஒத்துழைப்புக்களை வழங்குவது எமது கடமையாகும்.

மேலும் கடந்த சிலமாதங்களாக எமது பாடசாலை அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்காக பல வேலைப்பளுக்களுக்கு மத்தியில் அயராது ஈடுபட்ட எமது பாடசாலை நலன்புரி  சங்க உருப்பிணர்களுக்கும் எமது ஊர்மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

யார் இந்த ஷீஆக்கள்?

~தோற்றமும்  வளர்ச்சியும்~
"""""""""""""""""""""""""""""""""""""""""""
ஷீஆக்கள் எப்போது தோற்றம் பெற்றார்கள்? என்பதில் மூன்று விதமான கருத்துக்கள் உள்ளன

1) நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களுக்கு முன்பிருந்தே ஷீஆக்கள் இருக்கிறார்கள். இது தவறான கருத்து என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

2) நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம்) அவர்களின் வருகையுடன் ஷீஆக்களின் தோற்றமும் ஆரம்பிக்கிறது. இதுவும் தவறான கருத்தாகும். ஏனெனில் நபி(ஸல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்டார்களே தவிர ஆபாசங்களும், அசிங்கங்களும் நிறைந்த ஷீஆ மதத்தை அல்ல.
இந்த இரண்டு கருத்துக்களும் வரலாற்று அடிப்படையில் மற்றவர்களிடம் நற்பெயரை வளர்ப்பதற்காக ஷீஆக்கள் உருவாக்கிக் கொண்ட கருத்துக்களாகும்.

3) அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பிளவின்போது இப்பெயர் தோற்றம் பெற்றது.

இது ஒரு சாராரில் இருந்து மற்ற சாராரை இனங்காட்டுவதற்கான ஒரு அடையாளமாகவே இருந்தது. கொள்கை, சிந்தனை, வணக்கவழிபாடுகளில் எந்த வித்தியாசமும் அவர்களிடம் இருக்கவில்லை. எல்லோரும் மற்ற சாராரை சகோதரர்களாகவே கருதினர். சகோதரத்துவ வாஞ்சையுடன் தங்கள் தொடர்பாடல்களை அமைத்துக்கொண்டனர்.
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொலை செய்த கும்பலுக்கு உடனுக்குடன் பழி தீர்ப்பதா? இல்லையா? என்பதில்தான் கருத்து முரண்பாடு கண்டார்கள்.

மற்ற மார்க்க ரீதியான எந்த விடயங்களிலும் அவர்களிடம் கருத்து முரண்பாடு இருக்கவில்லை என்பது முக்கியமான ஒரு விடயமாகும். இதனால்தான், பிற்பட்ட காலத்தில் அவர்கள் பிரச்சினையை மறந்தார்கள். ஒருவருக்கொருவர் மற்ற தரப்பாருடன் திருமணம் செய்துகொண்டனர். ஒரு சாரார் மற்றவர்களை காபிர்கள் என்று நினைத்திருந்தால் இவ்வாறு திருமணம் செய்வது சாத்தியமாகி இருக்காது.
அதுபோலவே, அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் மரணத்தின் பின்பு முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஆட்சியில் உமைய்யாக்களின் தலைமையின் கீழ் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஓரணியாகினர். இவர்கள் அனைவருமாகச் சேர்ந்து இஸ்லாமிய உலகில் பல வெற்றிகளைக் கண்டனர். நிச்சயமாக கொள்கை அடிப்படையில் பிரிந்திருக்கும் இரு சாராரினால் இவ்வாறான வெற்றிகளை ஈட்டுவது கடினம்

உமைய்யாக்களுக்கும் நபியவர்களின் குடும்பத்தினருக்கும் இடையில் நெருக்கமான ஒரு தொடர்பு இருந்திருக்கிறது. நபியவர்களின் குடும்பத்திற்கு அதிகம் நன்கொடை வழங்குபவர் களாக உமைய்யாக்கள் இருந்திருக்கிறார்கள். இதை ஏற்றுக் கொள்பவர்களாக அஹ்லுல் பைத்தினர் இருந்தனர். நிச்சயமாக பெரும் பிளவுள்ள இரு சாரார் இவ்வாறு நடந்துகொள்வது கடினமானது.

நபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களைத் திட்டவில்லை. மாறாக அவர்களை திட்டுபவர்களுக்குத் தண்டனை வழங்குபவர்களாக இருந்தார்கள். ஸஹாபாக்களின் பெயர்களைத் தங்கள் செல்லக் குழந்தைகளுக்கு சூட்டுவதில் மகிழ்ச்சி கண்டனர்.
அலி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு அபூபக்கர், உமர், உஸ்மான் என்ற பெயரில் குழந்தைகள் இருந்திருக்கின்றனர். அதுபோல் ஹஸன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் தனது பிள்ளைகளில் இருவருக்கு அபூபக்கர்உமர் என்று பெயர் சூட்ட ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் தனது மக்களில் ஒருவருக்கு அபூபக்கர் என்று பெயர்  வைத்திருந்தார்கள்.

இது நபியவர்களின் குடும்பத்தின் பாரம்பரியங்களில் ஒன்றாக பின்வந்தோரால் பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. நிச்சயமாக நபியவர்களின் குடும்பத்தினர் ஸஹாபாக்களை நேசிக்காதிருந்தால் இவ்வாறு பெயர் வைத்திருக்க முடியாது.

தனியான சிந்தனைகளைக்கொண்ட பிரிவாக எப்படி மாற்றம் பெற்றது?
உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களைக் கொன்றவர்களைப் பழிதீர்ப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. பிறகு அது முடிவுற்று சுமூகமான நிலையில் பேணப்பட்ட இந்த உறவு முறை, பிற்பட்ட காலத்தில் எவ்வாறு தனியான கொள்கைகள் கோட்பாடுகளைக் கொண்ட பிரிவாகத் தோற்றம் பெற்றது? என்பது முக்கியமான ஒரு விடயமாகும்.
யூதர்கள் மற்றும் இஸ்லாத்திற்கு எதிரான சக்திகள் ஆயுத ரீதியாக முஸ்லிம்களை எதிர்க்க முடியாது என்று கண்டபோது, சிந்தனை ரீதியாக முஸ்லிம்களை பலவீனப்படுத்தவும், குர்ஆன், சுன்னாவை விட்டும் அவர்களைத் தூரமாக்கவும் முனைந்தனர்.

அத்தகைய முயற்சிகள் ஆரம்பகாலத்திலிருந்தே எடுக்கப்பட்டன. ஸஹாபாக்களின் காலத்தில் இவ்வாறானதொரு பிரிவு ஏற்பட்டபோது இஸ்லாத்தின் எதிரிகள் அதை நாசூக்காகப் பயன்படுத்திக்கொள்வதற்கான நீண்டகாலத் திட்டங்களை வகுத்தனர். இதன்படி அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும் முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) இருவரின் தரப்பிலும் நுழைந்தனர். இரண்டு சாராரையும் மூட்டி விடுவதற்கும், பரஸ்பரம் மோசமான கருத்துக்களை உருவாக்கவும் முனைந்தனர். முஆவியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இந்த எதிரிகளின் பிரச்சாரம் பெரிதாக எடுபடவில்லை. காரணம், அவர்கள் இஸ்லாத்தில் உறுதியுடையவர்களாகவும், தலைமைத்துவக் கட்டுப்பாடு மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றும் பண்பு போன்றவற்றைப் பெற்றவர்களாகவும் இருந்தனர்.

ஆனால் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் நிலைமை இதற்கு முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் தனது ஆட்சியின் தலைமையகமாக கூபாவை தேர்வு செய்திருந்தார்கள். இஸ்லாமிய வரலாற்றில் கூபா வாசிகள் உறுதியான ஒரு கொள்கை உடையவர்களாக இருந்ததில்லை. தலைமைத்துவக் கட்டுப்பாட்டை அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. "கூபாவாசி" என்றால் அவன் வாக்குறுதியை நிறைவேற்றமாட்டான் என்பது பிரபல்யமான ஒரு விடயம்.

அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் ஷீஆக்களின் ஸ்தாபகராகக் கருதப்படும் "அப்துல்லாஹ் பின் ஸபஃ" இருந்தான். இதனால் அவனது அணி பலம் பொருந்தியதாக இருந்தது. எனவே, இவ்வாறான நிலையில் இருக்கும் ஒரு கூட்டத்தில் மாற்றுத் தரப்பார் நுழைந்து வேலை செய்வதும் அவர்களின் இலட்சியங்களை அடைந்து கொள்வதும் இலகுவான ஒரு விடயம். இதன் காரணமாக அலி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் தரப்பில் இருந்தவர்களிடம் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்கள் படிப்படியாக திட்டமிட்ட அடிப்படையில் பரப்பப்பட்டன. இதன் விளைவாக அந்த சிந்தனைகள் காலப்போக்கில் தனியொரு மதமாகப் பரிணமித்தது.
ஷீஆக்களின் ஸ்தாபகராக ஷீஆ அறிஞர்கள், ஏனைய அறிஞர்களால் இனங்காட்டப்படுபவன் அப்துல்லாஹ் பின் ஸபஃ எனும் யூதனாவான். இவன் யெமன் பிரதேசத்தைச் சேர்ந்தவன். உஸ்மான் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் காலத்தில் தன்னை ஒரு முஸ்லிமாக இனங்காட்டிக்கொண்டான்.
இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக சதிசெய்வதை தனது முழுப்பணியாகக் கொண்டிருந்தான். இவனே இஸ்லாமிய வரலாற்றில் முதன் முதலாக
"அலி(ரலியல்லாஹு அன்ஹு) தான் எல்லோரைவிடவும் சிறந்தவர்அவரே ஆட்சிப்பதவிக்குத் தகுதியானவர்மற்றவர்கள் எல்லோரும் அவருக்கு அநியாயம் செய்துவிட்டனர்" என்ற கருத்தைச் சொன்னான்.
அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்
"கடவுள் தன்மை பொருந்தியவர்" என்று வாதிட்டான். மேலும், அவருக்கு முந்தைய கலீபாக்களை சபிப்பதையும், ஸஹாபாக்களுக்கு எதிரான  விரோதத்தையும் பிரச்சாரம் செய்தான் என ஷீஆக்களின் முக்கிய அறிஞர்களில் ஒருவரான கிஷ்ஷி என்பவர் தனது ரிஜால் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இதை அறிந்துகொண்ட அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவனுக்கும் அவனைப் பின்பற்றியவர்களுக்கும் தண்டனை வழங்கினார்கள். இவ்வாறு ஸஹாபாக்களின் காலத்தில் ஆரம்பித்த இக்குழுவே இஸ்லாமிய வரலாற்றில் முஸ்லிம்களுக்குள் உருவான முதல் பிரிவினையாகும்.
எனவே, அவனால் உருவாக்கப்பட்ட இந்த சிந்தனைகள் அவனது மரணத்தின் பின்பு ஏனைய இஸ்லாத்தின் எதிரிகளால் முன்னெடுக்கப்பட்டது. இஸ்லாத்திற்க்கு முரணான பல கொள்கைகளும் சிந்தனைகளும் அஹ்லுல் பைத்தின் பெயரில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
இதனால்தான் இமாம் ஜஃபர் சாதிக் (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:

"நாம் அஹ்லுல் பைத்தினர், எம் ஒவ்வொருவர் மீதும் பொய் சொல்லும் ஒருவர் இருந்துகொண்டே இருக்கிறார். அவர் எம்மீது பொய்யை   இட்டுக்கட்டுகிறார். இதனால் நாம் சொல்லும் உண்மையான செய்திகள் மக்களிடம் வீழ்த்தப்படுகின்றன. (ரிஜாலுள் கிஷ்ஷி)
இவ்வாறு தோற்றம் பெற்ற ஆரம்ப கால ஷீஆக்கள் "சபஇய்யா" என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். அனாலும் பல குழுக்களாக பிரிவதை தங்கள் வழமையாக்கிக் கொண்டனர். ஒவ்வொருவரும் தாங்கள் மதிப்பவர்களை இமாம் என்று வாதிட்டு பிரிந்தனர். ஒவ்வொரு இமாம் மரணித்த பின்பும் அடுத்த இமாமைத் தீர்மானிப்பதில் அவர்களுக்கு மத்தியில் முரண்பாடு தோன்றுவது வழமையாக இருந்தது. இவ்வாறு தோற்றம் பெரும் குழுக்கள் அடுத்த குழுவை கடுமையாக விமர்சிப்பவர்களாகவும் காபிர் என்று சொல்பவர்களாகவும் இருந்தன

அல்லாஹ் சொல்கிறான்:
அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (4:82)
இவ்வாறு பல குழுக்களாகப் பிரிந்த போதிலும் அஹ்லுல் பைத்தைக் கேடயமாக பயன்படுத்தி இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிப்பது என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இதை நிறைவேற்றுவற்கு அவர்கள் தயங்கவில்லை.
தற்போது ஈரானின் ஆட்சிக்குரிய மதமாக ஷீஆ காணப்படுவதுடன் சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தானின் ஆட்சியையும் அது கையகப்படுத்தியுள்ளது. பஹ்ரைனில் பெரும்பான்மையாக ஷீஆக்கள்  வாழ்ந்து வருவதுடன் மத்திய கிழக்கின் எல்லா நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான், இந்தியா, போன்ற ஏனைய நாடுகளிலும் தங்களின் இருப்பை ஸ்தீரப்படுத்துவதற்கான அதிகார ரீதியான முயற்சிகளும் பிரச்சாரங்களும் மேட்கொள்ளப்படுகின்றன.

இவ்வாறு எவ்வளவு பரவலாக்கம் மேற்கொள்ளப்பட்டாலும் இஸ்லாத்தை பாதுகாக்கும் பொறுப்பை அல்லா ஏற்றிருக்கிறான். யார் சூழ்ச்சிகள் செய்தாலும் அவனது மார்க்கத்தை   அவன் பாதுகாத்தே தீருவான். அல்ஹம்துலில்லாஹ்!

இன் ஷா அல்லாஹ்!
தொடர்ந்து,
"ஷீஆக்களின் சேவைகளும் சாதனைகளும்"
அடுத்த பதிவில் வாசிப்போம்.

அதிபர் சேவை 2015 வினைத்திறமைகாண் பரீட்சையில் சத்தியெய்திய எமது ஊர் ஆசிரியர்கள்.

2015ம் ஆண்டு அதிபா் சேவை தரம் 3 வினைத்திறமைகாண் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது கல்வி அமைச்சின் உத்தியோக பூர்வ இணைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  பெறுபேறுகளின் அடிப்படையில் கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட ஆகிய  பிரதேசங்களைச் சேர்ந்த 6 பேர் அளவில் தெரிவு செய்யப்பட்டிருப்பது, இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் ஒரு ஒளிக்கீற்றைப் பிரதிபலிக்கின்றது.
principals EB
எம்.பீ.எப். சலீஹா ஆசிரியை

ஐனுல் மர்ளியா ஆசிரியை

எம்.கே.ஆர். மொஹமட் ஆசிரியர்

எம்.ஆர்.எப்.பஹ்மிதா ஆசிரியை

எம்.ஏ.எம்.அஸாம் ஆசிரியர்

மொஹமட் இர்சாட் ஆசிரியர்

எமது இணையம் சார்பாக வாழ்த்துக்கள்.

எமது ஊர் வாலிபர்களின் மைதான கனவு நனவாகுமா??


எமது ஊருக்கு விளையாட்டு மைதானம் ஒன்றைப்  பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக கடந்த சனிக்கிழமை இரவு கஹடோவிட அல்பத்ரியா மஹாவித்தியாலயத்தில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது. விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞா்கள் சிலரின் முயற்சியால்  கூட்டப்பட்ட இக்கூட்டம் எம் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை பிரதிபலிப்பதோடு மாத்திரம் அல்லாது  அதற்காக அவர்கள் படும் இன்னல்களையும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் பகிர்ந்துகொண்டமையை கானக்கூடியதாக இருந்தது.

மைதானம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக  கூட்டப்பட்ட இக்கூட்டம் எமது ஊர் வரலாற்றில் 50 வருடங்களை கடந்திருப்பதை எமது ஊரின் வரலாற்றைப் பாா்த்தால் அறிந்துகொள்ளலாம்.  50 வருடங்களாக முயற்சித்தும் கிடைக்காத மைதானம் தற்போதும்  கிடைக்காமல் போனால் எதிர்வரும் காலங்களில் மைதானம் பெறுவதென்பது சாத்தியமான விடயமன்று. அப்படி பெற்றுக்கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டாலும் எமது ஊருக்குள் இடம் கிடைப்பதென்பது கடினமான விடயமே!
சபையோருடனான கலந்துரையாடிலில் போது பல ஆரோக்கியமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இளைஞர்களின் ஆர்வமிகுதியால் கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் எந்த வித வேலைதிட்டங்களும் முறையாக வைக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை ஊர் மக்களிடமும் காணக்கூடியதாக இருந்தது.  முறையான நெரிப்படுத்தலுடன் எமது ஊரின் சமூகசேவைகள், நலன்விரும்பிகளினால் ஒரு திட்டம் இவர்களிடம் வைக்கப்பட்டால், இந்தவிடயம் விரைவில் சத்தியமாகக் கூடிய வாய்ப்பிக்கள் இருக்கின்றன.


எனவே எமது இளைஞா்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இம்முயற்சிக்கு ஊரின் சகலரும் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கி, இவர்களின் முயற்சி வெற்றிபெற. எல்லாம் வள்ள இறைவனிடம் பிரார்த்திப்போம்.

சிரியா நாட்டு அகதிகளுக்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அன்பளிப்பு பொருட்கள் வழங்கி வைப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு துருக்கி நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு அன்பளிப்பு பொருட்களை வழங்கி வைத்தார்.
மேலும், துருக்கி நட்டில் வசிக்கும் சிரியா அகதிகளுக்கு வழங்குவதற்காக இலங்கை அரசாங்கம் சார்பில் 5000 மெற்றிக் டொன் அரிசி மற்றும் தேயிலையும் துருக்கி அரசாங்கத்திடம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் வழங்கி வைத்தார். இதில் துருக்கி நாட்டு சுற்றுச்சூழல் மற்றும் நகர திட்டமிடல் அமைச்சர் கௌரவ பத்திமா குல்ட்மெட் ஷரி அவர்களும் கலந்துகொண்டனர்.
Minister of City Planning and Water Supply and SLMC Leader, Rauff Hakeem visited a Syrian refugee camp in Turkey and distributed gifts to the children. This was a symbolic good will gesture, in addition to the donation of 5000MT of rice and a consignment of Sri Lankan tea handed over to the Turkish government as a goodwill gesture from the government of Sri Lanka.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையின் தலைவராக எமது ஊரைச் சேர்ந்த சகோதரர் உமைர் (ஈமானி) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையின் தலைவராக கஹட்டோவிட்டயைச் சேர்ந்த சகோதரர் எம்.ஜே.எம். உமைர் (ஈமானி) இன்று 08.02.2016 திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் மொஹிதீன் ஜிப்ரி மற்றும் மர்யம் ஆகியோரது புதல்வராவார். இவர் கொழும்பு ஹமீத் அல் - ஹுஸைனியா,கஹட்டோவிட்ட அல் பத்ரியா மற்றும் திஹாரிய ஈமானியாஅரபுக் கல்லூரியின் பழைய மாணவருமாவார்.
மேலும் இரண்டு வருடங்களின் பிற்பாடு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர் பேரவையின் தலைவராக முஸ்லிம் சகோதரர் ஒருவர் இந்த வருடம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவரின் எதிர்கால செயற்றிட்டங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துவதோடு இறைவனையும் பிரார்த்திக்கின்றோம்.
முஸ்லிம் மஜ்லிஸ்.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம்.
ஒலுவில்.
இலங்கை.

நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள, புதிய தேசிய அடையாள அட்டை

பன்னிரண்டு இலக்கங்களைக் கொண்ட புதிய தேசிய அடையாள அட்டை நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

16 வயதை பூர்த்தி செய்துள்ள இலங்கை பிரஜைகள் அனைவரும் ஆட்பதிவு திணைக்களத்தில் தம்மை பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

இதுவரையில் 9 இலக்கங்களும், ஆங்கில எழுத்தும் கொண்ட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வந்தன.

இந்த அடையாள அட்டைகளில் உள்ள 9 இலக்கங்கள், நான்கு பாகங்களாக பிரிக்கப்படும்.

இதன்படி முதல் பாகத்தில் உள்ள இரண்டு எண்கள், நபரின் பிறந்த ஆண்டை குறிக்கும்.

இரண்டாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபர் பிறந்த ஆண்டின் ஜனவரி மாதம் 1ம் திகதி முதல், அவரது பிறந்த தினம் வரையில் உள்ள நாட்களின் எண்ணிக்கையை குறிக்கும்.

அத்துடன் மூன்றாம் பாகத்தில் உள்ள 3 இலக்கங்கள் குறித்த நபரின் பால்நிலை குறித்த தகவலை கொண்டிருக்கும்.

எனினும் நேற்று முதல் 12 இலக்கங்களை கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்கு ஆங்கில எழுத்து சேர்க்கப்பட மாட்டாது.

பழைய 9 எண்களைக் கொண்ட நடைமுறை பின்பற்றப்படும் போது, 1916ம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும், 2016ம் ஆண்டு பிறந்த ஒருவருக்கும் ஒரே அடையாள அட்டை வழங்கப்படும் நிலை காணப்படுகிறது.

இதனை தவிர்ப்பதற்காகவே இந்த 12 இலக்கங்களை கொண்ட அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

எவ்வாறாயினும், புதிய எண்தொடர் கொண்ட அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளும் வரையில், தற்போதுள்ள அடையாள அட்டை செல்லுபடியாகும் என்றும் ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

jaffnamuslim

யார் இந்த ஷீஆக்கள்? - பகுதி 01

~பதவிளக்கம்~
"""""""""""""""""""""""""""""""
ஷீஆ என்ற பதம் அரபு மொழியில் பின்பற்றுபவர்கள், உதவி செய்வோர் எனும் கருத்தில் பயன்படுத்தப்படுகின்றது.  இவ்வாறு பயன்படுத்தப்பட்டாலும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) மற்றும்  அவர்கள் குடும்பத்தில் வந்த சிலரை பின்பற்றுவதாக கூறிக்கொண்ட பிரிவினருக்கு உரித்தான பெயராக இது மாறிவிட்டது என்று மொழித்துறை அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர்.

Picture

இப்பதம் அல்குர்ஆனில் 12 இடங்களில் வந்துள்ளது. இமாம் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள்,   "தப்ஸீர் கலை அறிஞர்கள் ஷீஆ என்ற பதம் அல்குர்ஆனில் 4 கருத்துக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது"  என்று குறிப்பிடுகின்றனர்.

1) பிரிவுகள் 
அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான்; அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை. <6:59>
(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் நாம் (தூதர்களை) அனுப்பிவைத்தோம். <15:10>
நிச்சயமாக ஃபிர்அவ்ன் இப்பூமியில் பெருமையடித்துக் கொண்டு, அந்த பூமியிலுள்ளவர்களைப் (பல) பிரிவினர்களாக்கி, அவர்களிலிருந்து ஒரு கூட்டத்தாரை பலஹீனப்படுத்தினான்; அவர்களுடைய ஆண் குழந்தைகளை அறுத்(துக் கொலை செய்)து பெண் குழந்தைகளை உயிருடன் விட்டும் வைத்தான்; நிச்சயமாக அவன் குழப்பம் செய்வோரில் ஒருவனாக இருந்தான். <28:4>
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். <30:32>

2) குடும்பம், பரம்பரை 
(ஒரு நாள் மூஸா) மக்கள் அயர்ந்து (தூக்கத்தில் பராமுகமாக) இருந்த போது, நகரத்தில் நுழைந்தார்; அங்கு இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டியிருந்ததைக் கண்டார்; ஒருவன் அவர் கூட்டத்தைச் சேர்ந்தவன்; மற்றொருவன் அவர் பகைவன் கூட்டத்தைச் சேர்ந்தவன்; பகைவனுக்கெதிராக உதவி செய்யுமாறு அவர் கூட்டத்தான் கோரினான் - மூஸா அ(ப் பகை)வனை ஒரு குத்துக் குத்தினார்; அவனை முடித்தார்; (இதைக் கண்ட மூஸா): “இது ஷைத்தானுடைய வேலை; நிச்சயமாக அவன் வழி கெடுக்கக்கூடிய பகிரங்கமான விரோதியாவான்” என்று கூறினார். <28:15>

3) ஒரு மதத்தை சார்ந்தவர்கள். 
பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவறையும் நிச்சயமாக வேறு பிரிப்போம். <19:69>
(நிராகரிப்போரே!) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? <54:51>
மேலும், அவர்களுடைய கூட்டத்தாருக்கு முன்னர் செய்யப்பட்டது போல் அவர்களுக்கும் அவர்கள் இச்சித்து வந்தவற்றுக்கும் இடையே திரை போடப்படும்; நிச்சயமாக அவர்கள் ஆழ்ந்த சந்தேகத்திலேயே இருந்தார்கள். <34:54>

4) பல்வேறுபட்ட யோசனைகள்.  
(நபியே!) நீர் கூறும்: “உங்கள் (தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படி செய்யவும்; அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான்.” அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக (நம்)வசனங்களை எவ்வாறு (பலவகைகளில் தெளிவாக்கி) விவரிக்கின்றோம் என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. <6:65>
(நுஸ்ஹதுந்நாழிர்)

ஷீஆ என்ற வாசகம் பெரும்பாலும் அல்குர்ஆனிலே இழிவான கருத்தின் அடிப்படையிலே பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இமாம் இப்னுல் கையிம் (ரஹ்மாஹுல்லாஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (பத்தாயிஉல் பவாயித்)
ஷீஆ என்ற பதத்திற்கு பரிபாசையில் பலரும் பலவிதமான வரைவிலக்கணங்களை வழங்கியுள்ளனர். இமாம் அஷ்அரி அவர்களின் கூற்று மிகவும் சுருக்கமானதாக உள்ளது. 
அவர்கள் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை  சார்ந்திருந்தாலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்)  அவர்களின் தோழர்கள் எல்லோரிலும் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை முற்படுத்தியதனாலுமே அவர்களுக்கு ஷீஆ என்று சொல்லப்பட்டது.
(மகாழாதுல் இஸ்லாமிய்யீன்)

இவ்வாறு சுருக்கமாக கூறப்பட்டாலும், ஷீஆக்களை பொருத்தவரை கொள்கை, வணக்கவழிபாடுகளில் முஸ்லிம்களுக்கு முற்றிலும் முரண்படுகின்ற பல கொள்கைகளை உருவாக்கிக் கொண்டனர்.  மேலும் எந்தவொரு சிறிய  விடயமாக இருப்பினும் பெரிய விடயமாக இருப்பினும் மற்றவர்களுக்கு முரண்படுவது அவர்களின் மதத்தின்படி கடமையாகும். இவற்றையெல்லாம் அலி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் பிள்ளைகள் சிலரின் பெயரால் செய்துவருகின்றனர். அவர்கள் இந்த ஷீஆக்களைவிட்டும் அவர்களின் கொள்கைகளை விட்டும் வானம் பூமியைவிட தூரமானவர்கள்.
தொடர்ந்து, "ஷீஆக்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்பதை அடுத்த பதிவில் வாசிப்போம்.

இன் ஷா அல்லாஹ்!

பவ்ஸான் இப்னு மீரான்.